இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கடந்த கால வரலாறு ஓர் அலசல்(போலி இயக்கத் தூய்மை பேசுவோர்களுக்கோர் மறுப்பு).3

Post by mujahidsrilanki 13 June 2011 கட்டுரைகள்

ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கையிலிருந்து தடம்புரண்டு ஜமாஅதே இஸ்லாமியை எதிர்த்து ‘தீனுல் இஸ்லாம்’ என்ற புது இயக்கம் உருவாக்கிய ஜமாஅதே இஸ்லாமியின் 2வது தலைவர் தாஸிம் அஸ்ஹரி

 

இலங்கையின் கல்விமான்களில் தாஸிம் அஸ்ஹரியும் ஒருவர் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஜமாஅத்தின் இரண்டாவது தலைவராக அவர் இருந்த நேரத்தில் இன்றுள்ள  அளவில் தவ்ஹீத் பிரச்சாரத்தில் ஈடுபாடுகாட்டாது விட்டாலும் தவ்ஹீத் பிரச்சாரமே அவரது மூச்சாக இருந்தது என்பதற்கு ஸாஹிரா கொலஜிலே அவர் நடத்தி வந்த குர்ஆன் வகுப்புக்கள் சாட்சி. இவர் பிற்காலத்தில் 1960 தொடக்கம் 1980 வரை இயங்கிய பலகத்துறையின் அன்றைய தவ்ஹீத் பிரச்சார அமைப்பான இக்வதுல் இஸ்லாமில் மிகப்பெரிய பங்களிப்புக்களைச் செய்தார். இவர் மீது அளப்பெரிய மரியாதை வைத்திருந்தாலும் தவ்ஹீத்வாதி என்பதைத் தெளிவாக தெரிந்த பலகத்துறை பெரியபள்ளி நிர்வாகம் ஒரு முறை இவரது பயானைத் தடை செய்து ஒரு அறிவிப்பை நோடிஸ்போடில் போட்டது. அன்று பள்ளிக்கு வந்த அவர் இந்த அறிவிப்பை வாசித்தார். இன்றைய ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர்கள் போல் அஞ்சாமல் ஜும்ஆவிற்குப் பின் எந்த அனுமதியும் இன்றி மக்கள் மத்தியில் எழுந்து பின்வருமாறு உரையாற்றியனார்:

“இது எனது ஊர். இது எனது பள்ளிவாயல். இவர்கள் எனது மக்கள். இது எனது நிர்வாகம். இவர்கள் எனது சகோதரர்கள். இது எனது……இது எனது……. இது எனது…..அப்படியிருக்க எனது ஊரில் எனது சகோதரர்களிடத்தில் எனது நிர்வாகத்தில் நான் பேசாமல் இருப்பது ஞாயமா? எனக்குரிமை உண்டு’ என்ற கருத்துப்படி அவர் பேசிய போது எந்த பதிலும் யாருக்கும் சொல்ல முடியவில்லை. இந்தத் திறமையும் ஆளுமையும் தைரியமும் இன்றைய தலைவர்களிடத்தில் காணமுடிவதில்லை.

இவ்வளவு ஆளுமைகளைக் கொண்ட தாஸிம் அஸ்ஹரி அவர்கள். அந்த ஜமாஅத்தின் தலைமையிலிருந்து சில நிர்வாகச் சிக்கல்களின் காரமணமாய் விலக வேண்டி ஏற்பட்டது. ஒரு திறமையான நிர்வாகமும் தெளிவான இயக்கக் கோட்பாடும் அந்த ஜமாஅத்திற்கு இருக்கவில்லை என்பதையே இது உணர்த்தி நிற்கிறது. இல்லையாயின் தலைவரோடு  எப்படி ஜமாஅத் சஞ்சிகையும் வெளியேற முடியும்.!!

ஜமாஅத்திலிருந்து விலகிய தாஸிம் அஸ்ஹரி அவர்கள் ‘தீனுல் இஸ்லாம்’ என்ற ஒரு புது இயக்கத்தை ஆரம்பித்தார். பிரிந்தவுடன் தனியாக இயக்கம் காணுவது அன்றைய ஜமாஅதே இஸ்லாமியின் குண இயல்பாக இருந்ததைக் காணலாம். அங்கிருந்து விலகிய பின்னரே தாஸிம் அஸ்ஹரி அவர்கள் தன் வகுப்புக்களை ஸாஹிரா  கொலஜில் நடாத்த ஆரம்பித்தார். இவரது வரலாறு பற்றியும் ஜமாஅதே இஸ்லாமியினூடான அவரது பிரச்சாரங்கள் பற்றியும் தனியாக எழுதவுள்ளேன் இன்ஷா அல்லாஹ்.

இவருக்குப் பின் கொழும்பு தெமடகொடயில் ஜமாஅத்தின் நூல் நிலையமான ‘இஸ்லாமிக் புக் ஸென்டரை’ இன்று நிர்வகிக்கும் ஸையித் அஹ்மத் அவர்கள் 3வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க்கத்தை அதன் மூல மொழியில் கற்காத ஆனால் மார்க்க உணர்வுள்ள தலைவராக இவர் இருந்த போது இவர் ஜமாஅத்தின் நிர்வாக விடயங்களில்தான் கூடுதல் கவனத்தை செலுத்தினார் எனலாம். இவரது காலத்தின் ஜமாஅத் சுருருப்பாக இயங்கியது என கேள்விப்பட்டுள்ளேன். இலங்கையில் அகில உலக இஜ்திமா ஒன்றை ஸாஹிராக் கல்லூரியில் இவர் ஒழுங்கு செய்ததாகச் சொல்வார்கள். குடும்பச் சிக்கல்களால் இவருக்கும் அமீர்ப் பதவி நிலைக்கவில்லை. அமீர்ப் பதவியிலிருந்து வழுக்கட்டாயமாக இவர் நீக்கப்பட்டதால் நீண்டகாலம் ஜமாஅத்தை விமரிசித்தும் ஜமாஅத்துடன் ஒட்டாமலும் இருந்தார். ஜமாஅத்தே இஸ்லாமி நிர்வாகத்திறமை பற்றி பேசவோ தூய்மை பற்றிப் பேசவோ இந்த வரலாறு எங்கனம் துணை நிற்கும் சிந்தியுங்கள் ஜமாஅதே இஸ்லாமி சகோதரர்களே.

இவருக்கப் பின் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராக யூஸுப் ஸாஹிப் வந்தார். இவர் மார்க்கத் தெளிவற்றவராகவும் மார்க்க விடயங்களை விடவும் ஒரு இயக்கத்தை எப்படியாவது நடாத்த வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் இருந்தார். இவரது காலத்திலே ஜமாஅதே இஸ்லாமி மிக பலஹீனப்பட்டது மாத்திரமல்லாமல்ல மார்க்க சட்டப்பிரச்சனை விடயங்களில் நழுவல் போக்கை கடைபிடித்தார்.

ஜமாஅதே இஸ்லாமியிலிருந்து தடம் புரண்டு ஈரானிய சீயாஇஸப் புரட்சியை இலங்கையில் பரப்ப அமைக்கப்பட்ட இயக்கத்தின் தலைவராக மாறி ஜமாஅதே இஸ்லாமியை எதிர்த்த ஜமாஅத்தே இஸ்லாமியின் 4காவது தலைவர் யூஸுப் ஸாஹிப்

(வளரும் இன்சா அல்லாஹ்)

10 Responses to “இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கடந்த கால வரலாறு ஓர் அலசல்(போலி இயக்கத் தூய்மை பேசுவோர்களுக்கோர் மறுப்பு).3”

 1. Ibnu says:

  Good Commence May Allah Accept u here and here after. waiting for next

 2. srilankan says:

  there are tens of thousands of supporters of jamathe islami worlwide,, but no one likes to reply to you on this article, becouse avoiding answer to a JAHIL is an strong answer.

  • mujahidsrilanki says:

   but no one likes to reply to me no one couldnt???????

   • Mr. Mujahid! don’t waste your time on washing dirty linen. try to write something useful for your followers. Remember! you will not be accountable for others short comes. You are accountable for your time and knowledge. 

  • Ataullah says:

   Brother, Don’t be pride of our numbers. Our leaders will answer him in appropriate time. They are waiting for it. So Avoid the word Jahil.

 3. Ifjfdnszj says:

  br mujahid unkal thawa kaladuku porundadu unkal nerathai dont wast ummathil yathanayo pirachinaikal nalandam ummath kollai seyyapadukiradu unkalu ora wimasanam dan i pray allah to give u hidayath

 4. yoonus says:

  அஸ்ஸலாமு அலைக்கும் அம்புக்குரிய முஜாஹித் மவ்லவிக்கு ஒரு வேன்டுக்கோள். உங்கள் இந்த இனிய தலத்தில் தமிழில்மாத்திரம் பதிவு செய்யவும். ஏன் என்றாள் இவர்கள் ஏட்கனவே இவர்கள் சொல்வது மலுப்புக்கள் புலுக்கள் மரைத்தள் பெருத்தள் கலுவுதள். இவர்கலின் அனைத்தையும் வாசித்துசரிபார்பதட்கு வாசிக்கமுடியாதனிலை. ஆகவே வாசிக்கமுடியாததை உங்கள் தமிழ் இனியதலத்தில் ஆங்கிலத்தை பதிவு செய்யவேன்டாம்.அவர்கலுக்கு தேவைஎன்றால் தமிழில் பதிவு செய்யட்டும்.

 5. Mohamed Azeem says:

  நாய்களாய் குதரிக்கொல்வதா உங்கள் இயக்கங்களின் கொள்கை!

  அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் எனும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் கொள்கை எங்கே போய்விட்டது?

  சிங்களவர்களின் கால்கள் பள்ளிகளை வெரிக்கொண்டு மிதிக்க முற்பட்ட போது இல்லாத ரோசம், கோபம், இயக்க வெரி ஏன்,

  நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்
  பிறர் தவறு செய்யும்போது கன்டித்த விதம்ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும்.

  நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ”இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), நூல் : புகாரி 58

  இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் நம்முடைய சக கொள்கைவாதிக்கு நன்மையைக் கருத வேண்டும். அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். இதை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட முனைகின்ற போது அவரிடம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து விடக் கூடாது.

  தவறைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு முரட்டுத்தனம் வந்து விடக் கூடாது. தவறை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக சொல்லிக் காட்டுகின்றது. இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ள முன்னுதாரணத்தை வாழ்க்கையில் நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 6. A.L NALEEM says:

  சகோதரர் முஜாஹித் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக !அருமையான பணி தொடரட்டும் இந்த வலிகேடர்களின் வழிகேட்டில் இருந்து மக்களை காப்பாத்த இப்படியான பணி அவசியம்