இன்று ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு நடப்பது என்ன?- 1

இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கiயிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான் ‘அரபு நாடுகளைப் பாருங்கள்! கோழைகளாக இருக்கின்றன. அமெரிக்காவுக்குத் தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. அங்கு பன்றி இறைச்சி, விபச்சாரம், மதுபானங்கள் போன்ற அனைத்தும் மலிந்து விட்டனளூ அமெரிக்காவை எதிர்க்கத்திராணியற்று அரபு நாடுகள் கிடக்கின்றனளூ ஆனால் ஈரானைப்பாருங்கள்! அமெரிக்காவை எதிர்க்க கொமைனீ இருந்தார்… தற்போது நஜாதி வந்திருக்கின்றார்ளூ ஈரான் தற்போது அணுவாயுத பலத்தையும் பெற்று விட்டது……..இஸ்லாமியஆட்சியைப் பற்றி அடிக்கடி பேசுகின்றது…..’ என்று கூறுவதாகும். இஸ்லாமிய ஆட்சி பேசுவோர் மீது இவர்களுக்கிருந்த அபரிமிதமான அபிமானமானது, ‘யாராயினும் சரி, அவர் எக்கொள்கையாயினும் சரி, இஸ்லாமிய ஆட்சியைப் பேசினால் அவரை நாம் ஆதரிப்போம்’ என்ற நிலைக்கு இவர்களைத் தள்ளிவிட்டது எனலாம். அஹ்மத் நஜாதி ஈரானின் ஜனாதிபதியானதும் அல்ஹஸனாத் சஞ்சிகையானது அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து ‘இரும்பு மனிதர்’, ‘ஈரானில் அணுப்புரட்சி’, ‘இஸ்ரேலை உலகப்படத்திலிருந்து அகற்ற வேண்டும் என சூளுரைத்தவர்’ என்றெல்லாம் எழுதியது. அஹ்மத் நஜாதி யார்? அவரின் கொள்கை என்ன? பிடல் காஸ்ட்ரோவும் இப்படித்தானே சீறுகிறார்? இவ்வாறு ஒருவர் பேசினால் அது இஸ்லாமாகி விடுமா? என்பதையெல்லாம் இவர்கள் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்கவில்லை. ‘இமாம் கொமைனீ‘” என்று நாக்கூசாமல் பலரும் சர்வ சாதரனமாகப் பேசுவதை சமூகத்தில் காணலாம். இதுவும் அபரிமிதமான, தவறான இஸ்லாமிய ஆட்சி மோகத்தால் விளைந்த மிகப் பெரும் கேடுகளில் ஒன்றே.பொது மக்கள் கொமைனீயின் உரைகளையோ, புத்தகங்களையோ கேட்டிராது, படித்திராத போது எவ்வாறு இந்த கொமைனீ சமூகத்தில் ‘இமாம்’ கொமைனீயாக அறிமுகமானார்? அவரை நமக்கு அறிமுகஞ் செய்தது யார்? எந்த முஸ்லிம் நாட்டுத் தலைவர்களின் பெயர்களும் பரீட்சியமில்லாத பொது மக்களுக்கு இந்தப் பெயர் மாத்திரம் அறிமுகமானது எவ்வாறு?. ஈரானின் ஜனாதிபதி யார்? என்றால் ‘அஹ்மத் நஜாதி’ என்கிறோம். எனவே ஈரானில் ஆட்சி செய்த, செய்கின்ற இவர்களை இமாமாகவும், வீரமிகு ஜனாதிபதியாகவும் நமக்கு அறிமுகஞ் செய்தவர்கள் இஸ்லாமிய ஆட்சியை மொட்டைத்தனமாக விளங்கிய இவர்கள்தாம். அமெரிக்காவை எதிர்த்தார்கள் என்ற ஒரே காராணத்துக்காகத்தான் இவர்களை கதாபுருஷர்களாக நமக்கு அறிமுகப்படுத்தினார்கள். கழுகுப்புத்தியோடிருக்கும் ஷீஆக்கள், தம்மை ஆதரிக்கும் இது போன்ற குழுக்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மையாகும். இஸ்லாமியப் போர்வையிலிருக்கும் ஸியோனிஸ்டுகள் அல்லது யூதர்களே ஈரானிலிருக்கும் இந்த ஷீஆக்கள் என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க நாம் தயாராளளோம்.( இப்படிச் சொல்லும் போது ஈரானில் உள்ள அனைத்து சீயாப் பொது மக்களையும் நாம் இவ்வாறு சொல்வதாக கருதிவிடக் கூடாது. வழிகாட்டிகளையும் மேலிடத்தவர்களையுமே நாம் இவ்வாறு குறிப்பிடுகிறோம்) யூதர்களால் உருவாக்கப்பட்ட கூலிப்படைகளே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதற்கு அவர்களே சாட்சியாகவுமுள்ளனர்.

1980களில் ஈரானிலே ஷாஹ் மன்னரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. விபச்சாரம், கொல்லை என்ற பஞ்சமாபாதகங்கள் அனைத்தும் அப்போது தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன. அப்போதுதான் இவற்றுக்கெதிராக கொமைனீயின் தலைமையில் ஆன்மீக புரட்சியொன்று அங்கு அரங்கேறுகிறது. இதன்போது ‘ஷாஹ்வின் அராஜக ஆட்சியை ஒழிப்போம், இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவோம்’ என்ற கோஷங்கள் முழங்கின. இதைப்பார்த்த இவர்கள் ‘ஆஹா இஸ்லாமிய ஆட்சியொன்று ஏற்படப் போகுது’ என்று எகிப்திலே அப்துந்நாஸர், அஹ்மத் நஜீப் போன்றோரை நம்பி இஹ்வானுல் முஸ்லிமூன் ஏமாந்ததைப் போன்று குமைனியிடம் இவர்கள் ஏமாந்தார்கள்.

இஸ்லாமிய ஆட்சிய பேசியோர் மீது இவர்களுக்கிருந்த அதீத பற்றுதல் காரணமாக இதே இஸ்லாமிய ஆட்சிப் படலத்தைப் பாடிய ஷீஆக்களுக்கு சார்பாக இவர்கள் என்னென்ன அறிக்களையெல்லாம் விட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் இங்கு தருகிறோம்.

1- இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் கருத்தைத் தாங்கி குவைத்திலிருந்து வெளியாகும் ‘அல்முஜ்தமஃ’ (المجتمع) என்ற சஞ்சிகையில் 434வது இதழில் ஈரானியப் புரட்சி பற்றி 1979 களில் கீழுள்ளவாறு எழுதப்பட்டிருந்தது:

‘இஹ்வானுல் முஸ்லிமூன் பொதுவான அரிக்கையொன்றை வெளியிடுகின்றது…. கொமைனீயைச் சந்திக்க நாம் உத்தேசித்துள்ளோம். இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி, இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி, இந்தோனேஸிய மாஸூமி, மலேசிய ஷபாபுல் இஸ்லாம் போன்ற இயக்கங்களை அழைக்கின்றோம்…..’

   ஈரானுக்கு சென்ற இவர்களுக்கு மத்தியில் கொமைனீ பேசும் போது ‘இது ஈரானின் புரட்சியல்ல, இது லாஇலாஹ இல்லல்லாஹ் சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் புரட்சியாகும். இஸ்லாத்துக்கெதிராக அடக்கியாள்பவர்களுக்கெதிராக ஏற்பட்ட புரட்சியாகும். ஷாஹ்வுக்கு எதிராக வெற்றியைத்தந்த அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்த வெற்றயைத்தருவான்’ என்று சொல்கின்றார். உடனே இவர்கள் ‘நாம் எங்கள் உடல் ரீதியிலும், ஏனைய வழிகளிலும் உங்களுக்குதவ தயாராகவுள்ளோம்’ என்று சொல்கிறார்கள். பின்னர் புரட்சியின் போது கொல்லப்பட்டவர்களுக்காக ஸலாத்துல் காயிப் தொழுகை தொழுததாக அந்த குறிப்புச் சொல்கின்றது.

   பின்னர் இவர்களுக்கு கொமைனீயின் நிறம் விளங்கி விட்டது . ‘ஈரான் இத்னா அஸரிய்யா கோட்பாட்டில்தான் ஆளப்படும். இதை யாராலும் மாற்ற முடியாது’ என கொமைனீ எழுதிய யாப்பு பற்றி பின்னரே இவர்களுக்குத் தெரிந்தது . அதன் பின்புதான் கொஞ்சம் இவர்கள் அடக்கி வாசிக்கலானார்கள்.

2- 1985களில் ‘மஜல்லதுத்தஃவா’ எனும் சஞ்சிகையில் 105 வது இதழில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான உமர் அத்தில்மிஸானீ என்பவர் பின்வருமாறு எழுதுகின்றார்:

‘இன்றுள்ள மார்க்க அறிஞர்களில் பொறுப்புக்களில் ஒன்றுதான் ஷீஆக்களையும், ஸுன்னிகளையும் சேர்த்து வைப்பதாகும்…. இந்தப் புரட்சிக்குப் பின்னால் இஹ்வானுல் மஸ்லிமூனுக்கும், ஷீஆக்களுக்குமிடையே தொடர்புகள் குறையவில்லை. ஆயத்துல்லா காஸானியோடு நாம் தொடர்பிலுள்ளோம். நவாப் ஸபவீயை எகிப்துக்கு விருந்தாளியாக நாம் அழைத்துள்ளோம். அவருடைய மத்ஹபைவிட்டு இங்கே வரவேண்டும் என்பதற்காக நாம் அவரை விருந்துக்கழைக்கவில்லை. பரஸ்பரம் அன்பு பரிமாறிக் கொள்வதற்காகவே நாம் அவரையழைத்தோம். இஸ்லாமிய மத்ஹபுகள்(அகீதாவிலுள்ள மத்ஹபுகள்) அனைத்தும் ஒன்றித்து செல்லவேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறு செய்தோம்……ஷீஆ அறிஞர்களாயினும், ஸுன்னி அறிஞர்களாயினும் இந்த வேளையை அவர்கள் செய்யவில்லையென்றால் மார்க்கத்தை அவர்கள் சரியாக விளங்கவில்லை என்பதே அதன் அர்த்தமாகும்…….’ என்றவாறு அவருடை கருத்துக்கள் காணப்பட்டன.

அஹ்லுஸ்ஸுன்னாவினரைக் கொல்லுவதற்காக உருவாக்கப்பட்ட பிதாஇய்யா அல் இஸ்லாம் எனும் அமைப்பின் ஈராக்கைச் சேர்ந்த தலைவரே இந்த நவாப் ஸபவீ என்பவனாகும். அஹ்மத் கஸ்ரவீ எனும் ஷீஆ அறிஞர் ஷீஆ மத்ஹபை பிழையென்று விளங்கி அஹ்லுஸ்ஸுன்னாவின் பக்கம் வந்த போது அவரைக் கண்டம் துண்டமாக வெட்டிப் படுகொலை செய்தவனையா விருந்துக்கு அழைப்பது?

3- ஈரானியப் புரட்சி வெடித்த அதே காலப்பகுதியில் குவைத்திலிருந்து வெளியான மஜல்லதுல் இத்திஹாத் என்ற சஞ்கிகையில் ஓர் அரிக்கை வெளியாகியது. ‘ஈரானின் புரட்சிக்கு உதவுமாறு குவைத் அரசிடம் நாம் வேண்டுகிறோம். ஈரானுக்கு எதிராக என்ன தடைகள் வந்தாலும் அந்நாட்டுக்கு குவைத் அரசு உதவ வேண்டும். ஏனென்றால் ஈரானின் வெற்றியானது குவைத்தின் வெற்றியாகும். அதன் தோல்வியானது குவைத்தின் தோல்வியாகும்……’ என்றவாறு அவ்வறிக்கை அமைந்திருந்தது.

4- ‘மௌஸுஅத்துல் ஹரகிய்யா’ எனும் நூலில் 289ம் பக்கத்தில்  நவாப் ஸபவீ யைப் பற்றி அதன் ஆசிரியர் பின்வருமாறு எழுதுகின்றார். ‘ஈமானும், நல்லுணர்வும் கொண்ட 29வயதுடைய ஒரு வாலிபர். இவரைப் போன்றே எல்லோரும் இவ்வுலகிலிருக்க வேண்டும்…..’ அஹ்லுஸ்ஸுன்னாவினரைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறிபிடித்த ஷீஆவைப் பற்றி இவர் சொல்லும் பாராட்டு மழைதான் இது.

5- ஹஸனுல்பன்னாவுக்கு அடுத்த படியாக வந்தவரென்று இஹ்வான்கள் மதிக்கின்ற முஹம்மத் அல் கஸ்ஸாலி என்பவர் தனது ‘கைப நப்ஹமுல் இஸ்லாம்’ என்ற நூலில் 142ம் பக்கத்தில் அகீதா ரீதியாக இஸ்லாத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பற்றிச் சொல்லிவிட்டு ‘அல்லாஹ்வையும், நபியவர்களின் தூதுத்துவத்தையும் ஏற்றுள்ள நாம் ஏன் ஷீஆ, ஸுன்னி என்று சண்டை பிடித்துக் கொள்கிறோம். ஸுன்னிகளாகிய நமக்கும் ஷீஅக்களுக்கும் அகீதாவில் கருத்து வேறுபாடு ஏதுமில்லையே. அப்போது ஏன் நமக்குள் இந்த சச்சரவுகள்……..?’ என்று உலக விடயங்களெல்லாம் தெரிந்த இந்த கஸ்ஸாலி எழுதுகின்றார். ஷீஅக்களுக்கும் ஸுன்னிகளுக்கும் அகீதாவில் காணப்படும் முரண்பாடுகள் பற்றி இவருக்குத் தெரியாது போலும். அதே நூலில் 145ம் பக்கத்தில் தொடர்ந்தும் அவர் கூறும் போது ‘ஷீஅக்களுக்கும் ஸுன்னிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகள் எதைப்போன்றதென்றால் ஹனபீ, ஷாபிஈ, மாலிகீ மத்ஹபுகளுக்கிடையே பிக்ஹு ரீதியாகக் காணப்படும் வேறுபாடுகளைப் போன்றதே……’ என்று சொல்கிறார். அப்படியாயின் ஷீஅக்களை ஐந்தாம் மத்ஹபாகச் சொல்கின்றார்.

6- இதே முஹம்மத் அல் கஸ்ஸாலி ‘ழலாமுன் மினல் கர்ப்’ எனும் நூலில் 252ம் பக்கத்தில் ‘இத்னா அஷரிய்யா மத்ஹப் தொடர்பாக ஒரு பாடத்தை நமது மாணவர்களுக்கு ஏன் நாம் கற்பிக்கக் கூடாது? ‘ என்று கூறியுள்ளார்.

7- அபுல் அஃலா மொளானா மௌதூதி (ரஹ்) அவர்கள் 1979 ஓகஸ்டில் வெளியான தஃவா எனும் சஞ்சிகையின் 19வது இதழில் ‘கொமைனீயின் புரட்சி ஓர் இஸ்லாமிய புரட்சியாகும். இஸலாமிய ஜமாஅத்துக்களே அதைச் செய்கின்றன. ஆகவே பொதுவாக அனைத்து முஸ்லிம்களும், குறிப்பாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அதற்காகப் போராட வேண்டும்….’ என்று அறிக்கை விடுகின்றார்.

8- சூடானிலிருந்து இஹ்வான்களால் வெளியிடப்படும் ஸபாஹுன் ஜதீத் என்ற சஞ்சிகையில் ‘கொமைனீக்கெதிராக சவுதியிலிருந்து மார்க்கத்தீர்ப்புச் சொல்லப்பட்டுள்ளது…. அரபுத்தீபகற்பத்திலிருக்கும் இவர்கள் ஏன் மார்க்கத்தின் பேரால் இத்தகைய தீர்ப்புக்களைச் சொல்கிறார்கள். இஸ்லாத்துக்கெதிராக இஸ்லாமா? இல்லை. இது ஜிஹாதிய இஸ்லாத்திற்கு எதிரான ஐந்து தூன்களையுடைய இஸ்லாம். கன்னியமிகு மார்க்கத்துக்கெதிராக வந்துள்ள ரியாழுடைய இஸ்லாம் அல்லாஹ்வின் படைக்கெதிரன அநியாயக்காரர்களின் இஸ்லாம். பிரான்ஸிருந்து வருகின்ற கோழி இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டிருக்கின்றதா இல்லையா என்ற இஸ்லாம்தான் இவர்களுக்குத் தெரியும் உண்மையான இஸ்லாம் தெரியது…...’ என்று அவ்வாக்கம் சொல்கின்றது. இஸ்லாமிய ஆட்சி என்று சொன்ன ஒரே காரணுத்துக்காக அஹ்லுஸ்ஸுன்னாவை நக்கலடித்து எழுதும் இவர்களின் வாசகங்களைப் பாருங்களேன்!

கொமைனீயின் வருகையின் பின்னர் ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கெதிராக பல்வேறு அராஜகங்கள் இடம் பெற்றுள்ளன. தஹ்ரான், புலூஷிஸ்தான் போன்ற அஹ்லுஸ்ஸுன்னாவினர் செரிந்து வாழும் பகுதிகளில் கொமைனீயின் வருகையின் பின்னர் ஒரு பள்ளிவாயில் கூட கட்டப்படவில்லை. ஏற்கனவே இருந்தவைகள் உடைக்கப்பட்டன. இதைப்போன்று அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த பல அறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அவர்கள் பற்றிய விபரங்கள்  ஆதாரங்களுடன் உள்ளன. முஃதமீன் என்ற சிறையில் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்கெதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெறுகின்றன. ராபிதது அஹ்லிஸ்ஸுன்னா பில் ஈரான் என்ற அமைப்புத்தான் ஈரானில் நடைபெறும் இந்தக் கொடுமைகளை வெளியுலகுக்கு வெளியிடுகின்றது. இவ்வளவும் தெரிந்த பின்பும்தான் இஹ்வானுல் முஸ்லிமூனைச் சேர்ந்த யூஸுப் நதா என்பவர் அல்ஜெஸீராவுக்கு ‘ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கும் ஷீஅக்களுக்குமிடையில் எந்தப் பிரச்சிணையுமில்லை’ என்று பேட்டியளிக்கின்றார். ஈரானிய ஸுன்னாவைச் சேர்ந்த அறிஞர் அபூ முன்தஸர் அல் பலூஷி என்பவர் ‘ஈரானில் நடைபெறுவது தெரியாமலா? இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுகிறார்கள்?’ என்று எழுதுகின்றார். அஹ்மத் நஜாதிக்கு குண்டு வைத்தார்கள் என்ற பேரில் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த பலர் இன்றும் சிறையிலுள்ளார்கள். இலங்கையில் தமிழீம விடுதலைப் புலிகள் உரிமை கோரிப் போராடியதைப் போன்று ஈரானில் ஜுன்துல்லாஹ், ஹரகதுல் புர்கான், முனல்லமதுன் புலூஸிஸ்தானிய்யா போன்ற அஹ்லுஸ்ஸுன்னா அமைப்புக்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்ற உரிமைகள் கூட ஈரானில் வாழும் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்குக் கிடைப்பதில்லை. இந்த நாட்டைப்பார்த்து இவர்கள் இஸ்லாமி ஆட்சி நடைபெறுவதாய் சொல்கிறார்கள். அமெரிக்காவை எதிர்க்கின்றார் என்றும், அணுப்புரட்சி பண்ணப் போகின்றார் என்றும் இந்த நஜாதியை இவர்கள் மெச்சுகின்றனர். இவர் மட்டுமல்ல உலகிலிருக்கும் அரசியற் தலைவர்கள் பலர் தமது சுய அரசியல் இலாபத்துக்காகக் கையிலெடுத்ததுவே அமெரிக்காவை எதிர்ப்பதாகும்.எனவே இந்த ஆக்கத்தில் இன்றைய ஈரானின் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு எதிரான நடவடிக்கைகளை விபரபாக நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

யார் இந்தக் கொமைனீ

வளரும் இன்ஷா அல்லாஹ்

13 Responses to “இன்று ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு நடப்பது என்ன?- 1”

 1. osman yoonus says:

  அஸ்ஸலாமு அளைக்கும் மௌலவிக்கு,

  ஜசக்கல்லாஹு கஹிரன் உங்கள் அருமையான விளக்கத்துக்கு. உங்கள் கட்டுரையில் வரும் எழுத்துக்களை கொஞ்சம் பெரிய எழுத்துக்களாக எழுதினால் இன்னும் இலேசாக வாசிக்கலாம் என்று என் மனம் கூறுகிறது.

  ஆகவே உங்களால் இயன்றால் உங்கள் கட்டுரையில் வரும் எழுத்துக்களை பெரிதாக எழுதுவதற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் அல்லா பரகத் செய்வானாக.

  • mujahidsrilanki says:

   walaikumussalam

   அது பற்றிக் கவனம் எடுக்கிறேன். இன்சா அல்லாஹ் உங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி ஜஸாகல்லாஹுகைரா

 2. Mohamed Himas says:

  தெளிவான கட்டுரை.
  நாம் இஸ்லாமிய கிலாபத் மீண்டு வருவதற்கு ஆசைப்படக் கூடாதா ?

 3. yasir says:

  ஷியாக்கள் என்போர்கள் யார்?
  “இஸ்லாமிய போர்வைக்குள் இருக்கும் யூதர்கள்”
  வரைவிளக்கணம் நிதர்சன ரீதியாக உண்மை…உண்மை…உண்மை…

 4. Muhammed says:

  Sorry this article full of nonsense

 5. yoonus says:

  அஸ்ஸலாமு அழைக்கும்
  அன்புள்ள சகோதரர் முஹம்மத். நீங்கள் ஒரு கருத்தை தெருவிக்கவந்தால் முழுமையாக தெருவிக்கவீண்டும். இவ்வலோவு சுருக்கமாக எழுதினால்.Sorry this article full of nonsense நாங்கள் உங்கள் கருத்தை எப்படி புரிந்துக்கொள்வது. உங்களுக்கு மௌலவிக்கு விளங்காத விஷயம் தெரிந்தால் அதை தெளிவாக தெரிவிங்கள் அதை விட்டு விட்டு. சும்மா கானல் நீரை பார்பதுபோல் உள்ளது உங்கள் கதை.
  உங்களுக்கு படிப்பினை உண்டா எடுத்துக்கொள்ளுங்கள் இல்லை நீங்கள் பிழையேதும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்களுக்கு மௌலவி தெளிவு படுத்துவார்.
  உங்களைமாதிரியான ஆட்கள் மௌலவியானால் முழுசையும் மறைத்துவிடுவீர்கள். தயவு செய்து மழுப்பலை விட்டுவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 6. yasir says:

  சஹோதரர் யூனுஸ் அவர்களுக்கு எது மழுப்பல் எது முழுமை என்று தெறியவில்லை போலும்.
  எதையாவது கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதற்காக கருத்து தெரிவிப்பது வடிகட்டிய அறியாமையின் வெளிப்பாடே. இப்படியான அடிப்படை அற்ற கருத்துக்களை தெரிவித்து நீங்கள் மாத்திரம் திருப்தி அடையலாமே ஒழிய பார்கின்ற மற்றனைவர்களும் உங்கள் கருத்தை பார்த்து எல்லினகையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
  தெட்டத் தெளிவாக பக்கம் பாகத்தோடு எந்தவிதமான மழுப்பல், நெலிதல், இல்லாமல் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக சுட்டிக்காட்டி சொல்லி இருப்பதை காணல்நீர் என்று சொன்னால் உங்கள் கருத்துதான் வெறும் காணல் நீருக்கு ஒத்தது.

 7. yasir says:

  சஹோதரர் யூனுஸ் அவர்களே தவறுக்கு அல்லாஹ்வுக்காக என்னை மன்னிக்கவும். தவறான புரிதலினால் உங்களை நோக்கி இப்படியான ஒரு கருத்தை பதியவேண்டியதாயிற்று. நீங்கள் சஹோதரர் முஹமதை நோக்கி சொல்லப்பட்டதை நான் மௌலவிக்கு சொல்லப்பட்டதாக தவறுதலாக புரிந்து கொண்டதன் காரணமாக துரதிஷ்ட வசமாக இவ்வாறு உங்களை நோக்கி கருத்து பதிந்தற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

 8. abdul kader says:

  assalamu alaikum wrwb,

  shia main root come from murder of usman ()raliyallahu anhu.

  article is good, brother you want to describe more about supporters of shia…(kha warij)..

 9. Naleef says:

  Assalmu alikkum,

  This articles very good explanation for who are trusting Iran and president Najathi.

 10. w.i.m. says:

  Assalamualaikum verygood article,som of srilankan muslims they stil do not no about SHIA and sunny. this SHIA very far from islam, mins QURAAN and SUNNAH.

 11. Nabi Sal quran matrum sunnah vai vittu selvadhaaga idamperum hadees muatthahvilum, Haakim endra kirandhathilum idampetrulladhu avai balaveenamaanavaiyaaga ullana, Ahlulbaith ai vittu selvadhaaga idampetrulla sahih Muslimin hadees Thaan saheehaaga Ulladhu, aadhalaal Ahlulbaithai Nesithu avargal valiyil payanikkum shiya Muslimgalai Vimarsikka Wahaabigaluku thagudhi illai

Derek MacKenzie Womens Jersey