உஸ்தாத் மன்ஸூருக்கு நன்றி

 மக்காவின் பாதுகாப்பு இறைவன் மனிதனுக்கு வழங்கிய சிந்தனை மட்டும் செயல் சுதந்திரத்தை  கட்டுப்படுத்தாது என்ற கருப்பொருளை உள்ளடக்கி உஸ்தாத் மன்ஸூர் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் அதன் இறுதிப்பகுதி ஆதாரங்கள் அற்ற யூகங்களை உள்ளடக்கிய ஸஊதியின் ஹஜ் சேவையை  நோக்கிய விமாிசனங்களாக அமைந்தது. அது அந்தக் கட்டுரையின் முழு அழகையும் இழக்கச் செய்தது. அதனால் அந்தக் கட்டுரையை நாமும் இன்னும் பலரும் விமாிசித்தோம். அது அவருக்கு எத்திவைக்கப்பட்டதனால் தனது கட்டுரையின் முழு நோக்கத்தையும் பாதிக்கும் அப்பகுதியை நீக்கிவிடுவதாக அறிவித்து அதனை நீக்கியுள்ளார். எமக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பினும் விமாிசனங்களுக்கு செவிகொடுத்த அந்தப் பண்பை பாராட்டுகிறோம் ஜஸாஹுல்லாஹு கைரா.

உஸ்தாத் மன்ஸூர் சொன்னது-

UPDATE: 29/09/2015

ஹஜ்ஜின் அனர்த்தங்கள் குறித்து…

ஹஜ்ஜின்போது நடந்த அனர்த்தங்களைப் பற்றி எழுதியமை ஒரு சுமுகமான கலந்துரையாடலாகப் போயிருக்க வேண்டும். ஆனால் அது சர்ச்சைக்கைக்குரியதாக மாறியமை குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். எழுதிய கட்டுரையை மட்டும் நோக்காது எழுதுபவரின் எண்ணங்களையும் நோக்க முயல்வது மிகவும் அபாயகரமானது.

நான் இஃவானுமல்ல, ஷீயாவுமல்ல, எந்த சிந்தனை முகாமைச் சேர்ந்தவனுமல்ல என்று என்னை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

நான் எழுதிய கட்டுரை அரசியல் சார்பு வடிவம் எடுப்பதை நான் விரும்பவில்லை. அதனால் பலர் சர்ச்சைப் படுவதையும் விரும்பவில்லை. எனவே அக்கட்டுரையின் அப்பகுதியை நீக்கிவிடுகிறேன்.

அத்தோடு நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு மக்கா என்ற புனித நகரின் பாதுகாப்பு என்பது அற்புதமாக நிகழ்வதில்லை. அது மனிதனின் கையிலேயே விடப்பட்டுள்ளது என்பதையும் கவனத்திற்கொள்க.

5 Responses to “உஸ்தாத் மன்ஸூருக்கு நன்றி”

 1. அல்லாஹ்வின் குர்ஆனில் கிலாகித்துச் சொல்லபப்டும் மக்கா என்கின்ற (எனக்கு அது புனித நகர் அல்ல) நகரின் பாதுகாப்பு மனிதனின் கைகளில் விடப்பட்ட ஒன்று என்றால், ஜித்தாவின் பாதுகாப்பும், துபாய், லண்டனின் பாதுகாப்பும் ஷைத்தானின் கைகளிலேயா விடப்பட்டுள்ளது? அல்லாஹ்வின் பெயரால் முஹம்மது சொன்ன பொய்யை நியாயப்படுத்த செய்யப்படும் சப்பைக் கட்டல்லவா இது?

 2. முஜாஹித் வர்களே, அல்லாஹ்வின் அபயமளித்தல் குறித்த உங்களின் விளக்கம் குறித்து : நீங்கள் சொல்வதுதான் சரியான விளக்கம் என்றால், அதாவது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் நோவினை செய்யக்கூடாது, கொள்ளக்கூடாது என்பதுதான் உண்மையான அர்த்தம் என்றால், அது கட்டளையாக அல்லவா வர வேண்டும்? எப்படி தான் செய்ததாக அல்லாஹ் சொல்ல முடியும்?

 3. இரண்டு கொமன்ட் அப்ரூவ் ஆகவும் இல்லை, பதிலும் இல்லை.

 4. விமர்சனத்தை ஏற்றுகொன்டு அவருடைய கட்டுரையின் பிழையான பகுதிகளை நீக்கியது அவருடை நல்ல பன்பொன்றை வெலிபடுத்தினார்.

  ஆனால் அந்த தவரை ஏற்கும் போது “நான் இஹ்வானுமல்ல ஷீயாவுமல்ல … ” என்று சொல்லியிருக்கிறார் .

  அவர் இஹ்வான் இல்லை என்று சொன்னாலும் அதனை நாம் முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது.

  அவரை பற்றி எம்மால் புரியமுடிவது அவர் மற்ற இஹ்வான்களை பார்க்கவும் வித்தியாசமானவராக இருந்தாலும் அவர் இஹ்வான்களை விட்டும் தூரமானவர் அல்ல. அவரிடம் இஹ்வாங்களிடம் இருக்ககூடிய சிந்தனை இருக்கிறது என்பது எமக்கு தெளிவாக தெரியக்கூடிய ஒரு விஷயம்.

  அவர் இஹ்வானாக இருக்க விரும்பாதவராக இருக்கலாம், ஆனால் ஆங்காங்கே அவரிடம் உள்ள அந்த இஹ்வானிய சிந்தனையும் இஹ்வானிய போக்கும் வெலிபட்டுகொண்டு தான் இருக்கின்றது.