எஸ் எல் டிஜேயின் தோல்விக் கடிதம் எனும் புதிய வழிமுறை

Post by mujahidsrilanki 7 January 2014 கட்டுரைகள், விவாதங்கள்

06-01-2014 மாலை 6 மணியிலிருந்து தலைமையகத்தில் காத்திருந்ததாக எஸ் எல் டி ஜே யினர் பதிவு செய்திருந்த வீடியோவைப் பார்த்தேன். அதிலும் பின்வாங்கிவிடடேன் என்று கடிதம் கொடுத்துவிட்டு வருமாறு அழைப்புவிடுத்திருக்கிறார்கள். விவாத முறைமையில் தோல்விக் கடிதம் கொடுத்துவிட்டு விவாதஞ் செய்யமாறு அழைக்கும் முறையை ஏற்படுத்திய முதல் இயக்கம் இவர்கள்தான்.

விவாதஞ் செய்யும் மனோ நிலையில் அவர்கள் இல்லை என்பதை அவர்களது ஆத்திரத்தடனான பேச்சுக்கள் விளங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தவறான கொள்கையில் இருப்பவர்கள் ஆத்திரப்படுவதும் உண்மையில் இருப்பவர்கள் நிதானமாகப் பேசுவதும் உண்மையில் இருப்பவர்களின் உள்ளம்  உறுதியோடு இருப்பதற்கான ஆதாரங்களில் ஒன்று.

3:119   هَا أَنتُمْ أُولَاءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِالْكِتَابِ كُلِّهِ وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ ۚ قُلْ مُوتُوا بِغَيْظِكُمْ ۗ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
3:119. (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் – ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது: “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்; எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.

இவர்களுக்கு நான் பல முறை அவரது தலைமையகத்தில் நேரம் கேட்டும் தராமல் விளகிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?!!!! அவர்களது பல சகோதரர்களே இந்த தேவையற்ற நிபந்தனையைப் பார்த்து அதிருப்தியடைந்து கொண்டிருப்பது அல்லாஹ் அவர்களது மக்களுக்கே உண்மையயை புாியவைத்துள்ளான் என்பதை உறுதிப்படுத்துகிறது அல்ஹம்துலில்லாஹ்

2 Responses to “எஸ் எல் டிஜேயின் தோல்விக் கடிதம் எனும் புதிய வழிமுறை”

  1. முஹம்மத் சித்திக் says:

    SLTJ ல ஒரு ஆம்பள கூட இல்லையா

  2. kamil says:

    அன்பின் சகோதரர்களே உலக சம்பியன் பட்டம் ஒருவனுக்குக் கொடுப்பதாக இருந்தால் ஆரம்பத்தில் உலக சம்பியனாக இருந்தவனை வென்றெடுக்கவேண்டும். இதே போன்றுதான் பிஜே அவர்கள் திறமையான பேச்சாளர் விவாதத்திறன் மிக்கவர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. எனவே தன்னுடன் விவாதம் செய்ய பிஜே வரவேண்டும் என்று முஜாஹித் மவ்லவி சொல்வது நியாயம்தானே?. அடுத்து ஆம்பிளையில்லையா என்றெல்லாம் கேட்கும் SLTJ யினர் முஜாஹித் மவ்லவியின் அழைப்பிலிருந்து தப்பியோடும் வேலையை ஏன் செய்யவேண்டும்?