எஸ் எல் டி ஜேயின் போலியான விவாத அழைப்பு பற்றி

Post by mujahidsrilanki 16 January 2014 கட்டுரைகள், விவாதங்கள்

விவாதத்திற்கு வரவில்லை. பின்வாங்கிவிட்டார் என்று sltj இவ்வளவு சொல்லியும் மக்களிடத்தில் அது ஏன் எடுபடவில்லை என sltj  சிந்திக்க வேண்டும்.

இப்பொழுது அங்கே உலமாக்களாக இருப்பவர்களை விட சகோதரர் அப்துர் ராஸிக் ரஸ்மி ஸதாத் போன்றவர்கள் மிகத் திறமையானவர்கள். அங்கே உள்ள உலமாக்களின் அறிவின் தரத்தை அதன் தலைவர் மிக அறிந்தவர். என்னையும் அவர் மிகவும் அறிந்தவர். அப்துர் ராஸிகின் சில ஆலோசனைகள்தான் sltj யை ஓரளவு அறிமுக வட்டத்தில் வைத்திருக்கிறது. இந்த உண்மையைச் சொல்வதால் என்னை யாரும் கோபிக்கத் தேவையில்லை. அவர்களை அல்லாஹ்வின் அருளால் மிகச் சிறப்பாக அளந்து வைத்திருக்கிறேன். அல்லாஹ் போதுமானவன்.

அதனால் தப்பியோடிவிட்டார்கள் என்று சப்தம் இடுபவர்களுக்கு சொல்கிறேன். உங்களது தோல்விக் கடித அழைப்பு உங்களுக்குள்ளே ஏற்படுத்திய அதிருப்திகள் என்ன என்பதையும் நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் என்றும் மாற்றமில்லாமல் சொல்கிறேன். நீங்கள் உண்மையில் இருந்தால் அதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் உங்களில் விவாதத்திறமையுள்ள மௌலவி பீஜேயுடன் விவாதத்திற்கு வாருங்கள் அல்லது sltjயினரே நீங்கள் தனித்து வாரு்ங்கள். 10 நாட்களோ 15 நாட்களோ அவகாசம் அல்ல. நீங்கள் இந்தக் கொள்கையை விட்டுத் திருந்தும் வரை உங்களுக்கு அவகாசம் உண்டு. நானும் எதிர்பார்த்திருப்பேன். இ்ன்ஷா அல்லாஹ்.

Comments are closed.