ஆன்மீக பைஅத் எடுக்கும் உரிமை நபியவர்களுக்கு மட்டுமே.ஏத்தாளை விவாதம். 1

Post by mujahidsrilanki 17 February 2011 கட்டுரைகள்

இவ்வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி ஜமாஅதுல் முஸ்லிமீன் என தங்களை அழைத்துக்கொள்ளும் சகோதரர்களோடு புத்தளம் நகரசபை மண்டபத்தில் நடந்த விவாதத்தின் எங்கள் தரப்பு வாதத்தை தொகுத்து எழுத்து வடிவில் தருவதாக அறிவத்திருந்தோம். அதனை இன்று முதல் தொடராகப் பதிவு செய்வோம்.முதலில் என்னால் ஆற்றப்பட்ட கொள்கை விளக்க உரையைப் பகுதி பகுதியாகப் பதிவுசெய்கிறேன்.

தூய்மையான இஸ்லாமும் வழிகேடுகள் தோற்றம் பெற்ற முறையும்

அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவையும் மட்டும் அடிப்டையாகக் கொண்டுள்ள தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகேடுகள் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக அமைந்தது எதுவெனில் குறிப்பிட்ட ஓர் அல்குர்ஆன் வசனத்தை, ஒரு ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒரு கருத்தை விளங்கி ஏனைய ஹதீஸ்களையும் அல்குர்ஆன் வசனங்களையும் முறையாக விளங்காமல் அவற்றை அக்கருத்துக்குக் கிளைகளாக ஆக்கி விளங்க முற்பட்டமைதான் என்பதை இஸ்லாமிய வரலாற்றை ஆராயும் போது அறியமுடிகின்றது. அமீருக்கு பைஅத் செய்வதே இஸ்லாத்தின் அடிப்படை பைஅத் செய்யாதவன் முஸ்லிம் அல்ல என்ற வழிகெட்ட கொள்கையும் இந்த அடிப்படையிலேயே தோற்றம் பெற்றது .

صحيح مسلم 4899 – جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ مُطِيعٍ حِينَ كَانَ مِنْ أَمْرِ الْحَرَّةِ مَا كَانَ زَمَنَ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ فَقَالَ اطْرَحُوا لأَبِى عَبْدِ الرَّحْمَنِ وِسَادَةً فَقَالَ إِنِّى لَمْ آتِكَ لأَجْلِسَ أَتَيْتُكَ لأُحَدِّثَكَ حَدِيثًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ خَلَعَ يَدًا مِنْ طَاعَةٍ لَقِىَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ لاَ حُجَّةَ لَهُ وَمَنْ مَاتَ وَلَيْسَ فِى عُنُقِهِ بَيْعَةٌ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً

யாருடைய கழுத்திலே பைஅத் (உடன்படிக்கை) இல்லாமல் மரணிக்கின்றாறோ அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி)
ஆதாரம் :  முஸ்லிம் 4899

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒரு தலைவருக்கு பைஅத் (உடன்படிக்கை) செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பைஅத் செய்யாதவர் ஜாஹிலிய்ய (அறியாமைக் கால) மரணத்தைத் தழுவியவராவார் என்றும் எனவே இந்த ஹதீஸ் எல்லாக்காலத்தையும் பைஅத்தின்றி ஒருவர் முஸ்லிமாகவே முடியாது என்றும் சிலர் வாதிடுவதைக் காண்கிறோம். இது மேலுள்ள குறிப்பிட்ட ஒரு ஹதீஸை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட தவறான விளக்கமாகும். இது பற்றிய ஏனைய ஹதீஸ்களை சற்று ஆராய்ந்து பார்த்தால் இந்த தவறான முடிவு பெறப்பட்டிருக்காது.

صحيح مسلم – 282 – عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ يُحَدِّثُ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « أَتَانِى جِبْرِيلُ – عَلَيْهِ السَّلاَمُ – فَبَشَّرَنِى أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ ». قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ. قَالَ  وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ
‘உமது உம்மத்திலே  யார் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காமல் மரணிக்கிறாறோ அவர் சுவனம் நுழைந்தார். என ஜிப்ரீல் எனக்கு நன்மாராயம் கூறினார்.’ என்று நபியவர்கள் கூறினார்கள் ‘அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலுமா’ எனக் கேட்டேன். ‘ஆம் அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும்தான்’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரழி)
ஆதாரம்: முஸ்லிம் 282

صحيح البخاري – 25 – عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الْإِسْلَامِ وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ
மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி)
ஆதாரம் : புஹாரி 25

புஹாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் வருகின்ற மேல் குறிப்பிடப்பட்ட இரு ஹதீஸ்களும் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்‘ என்ற கலிமாவை கூறியவர் சுவனம் நுழைந்து விடுவார் என்பதைக் கூறுகின்றன. இன்னும் சில ஹதீஸ்களில் ”லாஇலாஹ இல்லல்லாஹ்’ (என்றகலிமா)வை மட்டும் ஒருவர் கூறி நல்லமல்கள் எதுவும் செய்யாமலிருந்தாலும் சரியே’ என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இவை போன்ற ஏராளமான ஹதீஸ்கள் வருகின்றன. இந்த அனைத்து ஹதீஸ்களையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்ற வார்த்தையில் ஒருவர் உறுதியாகவிருந்து நல்லறங்கள் ஏதும் அவர் செய்யாதிருந்து அதன் காரணமாக அவர் நரகம் நுழைந்தாலும் அவருக்கு நரக விடுதலையிருக்கிறது என்பதை விளங்கலாம். ஆனாலும் இதை அவர்கள் ஏற்கமறுப்பர். காரணம் ‘பைஅத் செய்யாதவர் ஜாஹிலிய்ய (அறியாமைக் கால) மரணத்தைத் தழுவியவராவார்’ என்ற ஹதீஸுக்குக் கொடுக்கின்ற அதே அழுத்தத்தை  மற்றைய ஹதீஸ்களுக்கும் அல்குர்ஆன் வசனங்களுக்கும் அவர்கள் கொடுக்காமலிருந்தமையும் குறிப்பிட்ட ஓரிரு ஹதீஸ்களை மாத்திரம் அவர்கள் தமக்கு அடிப்படையாகக் கொண்டமையுமே. ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்ற வார்த்தையைச் சொன்னவருக்கு நரக விடுதலையுண்டு என்று நேரடியான ஹதீஸ்கள் வந்தாலும் பைஅத் பற்றிய குறிப்பிட்ட ஓரு ஹதீஸில் அவர்கள் தமது அடிப்படையை அமைத்து விட்டதனால் இந்த ஹதீஸ்களுக்கு அவர்கள் மாற்று விளக்கம் சொல்லி தமது தவறான கொள்கையை நிருவ முற்படுகின்றனர்.

வரலாறு நெடுகிலும் வழிகேடுகள் தோன்றியமைக்கு ஹதீஸ்களை விளங்குவதில் காட்டிய பாரபட்சமே அடிப்படைக் காரணம் என்பதை நீங்கள் காணலாம்.

உதாரணத்திற்கு ஓரிரு செய்திகளைப் பாருங்கள்.மூஸா (அலை) அவர்கள் நபியாக வந்த போது அப்போதைய மக்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்.

وَلَقَدْ جَاءَكُمْ يُوسُفُ مِنْ قَبْلُ بِالْبَيِّنَاتِ فَمَا زِلْتُمْ فِي شَكٍّ مِمَّا جَاءَكُمْ بِهِ حَتَّى إِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ يَبْعَثَ اللَّهُ مِنْ بَعْدِهِ رَسُولًا كَذَلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُرْتَابٌ غافر : 34
முன்னர் யூஸுப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் ‘இவருக்குப்பின் எந்த தூதரையும் அல்லாஹ் அனுப்பமாட்டான்’ எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்தான் வழிகெடுக்கின்றான். (அல் முஃமின்: 34)

இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து ‘இனி நபிமார்கள் வரமாட்டார்கள் என்று சொல்வது தவறு’ என்று காதியானிகள் கூறினார்கள். இதுவும் முறையற்ற விளக்கத்தால் விளைந்த தவறான முடிவாகும். அப்படியாயின் சரியான விளக்கம் எதுவென்று தேடுவோமானால் இது தொடர்பான அனைத்து அம்சங்களையும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவிலிருந்து ஒன்று சேர்க்க வேண்டும். இவற்றுள் எதையும் அடிப்படையாக ஆக்கிவிடாமல் ஆதாரங்கள் அனைத்தையும் ஒன்றினைத்து மேலுள்ள அல்குர்ஆன் வசனத்தையும்  கீழே வரும்

صحيح البخاري 3455 – سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمْ الْأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي…………..
.    எனக்குப்பின்னால் எந்த நபியும் வரமாட்டார்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : புஹாரி 3455

என்ற ஹதீஸையும் ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் காதியானிக் கொள்கை உருவாகியிருக்காது.

இன்னுமொன்றை உதாரணத்தைப் பாருங்கள்:

அல்லாஹ் தன்னைப் பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு வர்ணிக்கின்றான்.

هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ  الحديد : 3
அவனே முதலானவன்  முடிவானவன் வெளிப்படையானவன் அந்தரங்கமானவன் ஒவ்வொரு பொருளையும் அவன் அறிந்தவன்
(அல் ஹதீத் : 03)

மற்றோரிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் .وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى الأنفال : 17
நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். (அல் அன்பால் : 17)

இவ்விரு வசனத்தையும் அடிப்படையாக வைத்து சிலர் எல்லாமே அல்லாஹ்தான் என்ற தவறான முடிவுக்கு வந்தார்கள். இக்கொள்கைக்கு முரண்படும் சூறத்துல் இஹ்லாஸ் போன்ற ஆதாரங்களையும் ஏனைய ஆதாரங்களையும் நாம் அவர்களிடம் முன்வைத்தாலும் அவர்கள் அதை ஏற்கமாட்டார்கள் அவற்றுக்கு வலிந்துரை செய்து மாற்று விளக்கம் கொடுக்க விளைவார்கள். குறிப்பிட்ட அவ்விரு வசனங்களை மட்டும் தமக்கு அடிப்படையாகக் கொண்டதுதான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாகும்.

வழிகேடுகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில்  பின்வருமாறு சொல்லிக்காட்டுகின்றான். هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ  آل عمران : 7
(முஹம்மதே) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தரும் வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும் அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர்…………’ (ஆலு இம்ரான் : 17)

அல்குர்ஆன் அஸ்ஸுன்னவைப் பின்பற்றுவோரிடத்தில்  வழி கேடுகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை இந்த வசனத்தில் தெளிவாகவே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

ஆகவே குறிப்பிட்ட சில வசனங்களை அடிப்படையாக வைத்து உருவாகிய எந்தப் பகுதியினராகவிருந்தாலும் தமது தவறான கொள்கைக்கு ஆதாரமாகிய அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும்தான் அவர்களுக்கு இனிப்பாகவுள்ளதையும் விருப்பமாகவுள்ளதையும் காணலாம்.

ஒரு தலைவருக்கு பைஅத் (உடன்படிக்கை) செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பைஅத் செய்யாதவர் ஜாஹிலிய்ய (அறியாமைக் கால) மரணத்தைத் தழுவியவராவார் என்ற கொள்கையை உடையவர்களுக்கு ‘யாருடைய கழுத்திலே பைஅத் (உடன்படிக்கை) இல்லையோ அவன் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான்’. என்ற ஹதீஸ் இனிப்பது போன்று லாஇலாஹ இல்லல்லாஹ்’ (என்றகலிமா)வைச் சொன்னவர் சுவனம் நுழைந்தார்’ என்ற ஹதீஸ் இனிப்பதில்லை.

وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ (31) مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ الروم : 31 ، 32
தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணைவைப்போரில் ஆகிவிடாதீர்கள் ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.

என்ற வசனம் அவர்களுக்கு விருப்பமாக இருப்பதைப்போல وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ النحل : 36 ‘அல்லாஹ்வை வணங்குங்கள் தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்’ என்று (எடுத்துரைக்க) ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். (அந்நஹ்ல் : 36) என்ற வசனம் அவர்களுக்கு விருப்பமாக இருப்பதில்லை.

அதனால்தான் பித்அத்வாதிகள் சிலர் சில குர்ஆன் வசனங்களைப் பார்த்து ‘இவை வராமலிருந்திருக்கக் கூடாதா’ என்றெண்ணுவர்.  ஆகவே வழிகேடுகள் தோன்றியதற்;கான அடிப்டை எதுவெனில் குர்ஆன் ஹதீஸ் என்று கூறிக்கொண்டு சில ஹதீஸ்களை அடிப்படைகளாக்கி மற்றைய ஹதீஸ்களையெல்லாம் இரண்டாம் தரமாக்குவதுதான் என்பதை விளங்கலாம். இத்தகைய வழி தவறிய கொள்கைகளிலிருப்போர்  யாரும் ஹதீஸ்களை இரண்டாம் தரமாகக் கருத நினைப்பதில்லையென்றாலும் ஒரு தலைப்பட்சமான அவர்களின் பார்வையின் காரணமாக அவர்களையறியாமலேயே இவ்வாறான சிந்தனைகளுக்கு அவர்கள் ஆட்பட்டுவிடுகின்றனர் என்பதுவே இங்கு நடைபெறுகிறது எனலாம்.

ஒரு தலைவருக்கு பைஅத் (உடன்படிக்கை) செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பைஅத் செய்யாதவர் ஜாஹிலிய்ய (அறியாமைக் கால) மரணத்தைத் தழுவியவராவார் என்ற கொள்கையை உடைய ஜமாஅத்துல் முஸ்லிமீன் என தங்களைக் கூறிக்கொள்ளும் சகோதரர்கள் நாம் மேற்சொன்ன அடிப்படையில்தான் தமது தவறான கொள்கையைக் கட்டியெழுப்பினார்கள் என்பதை இன்னும் சற்று ஆழமாக அறிந்து கொள்வோம்.

‘யாருடைய கழுத்திலே பைஅத் (உடன்படிக்கை) இல்லையோ அவன் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான்.’ ஒருவர் இஸ்லாத்தைத் தழுவ வேண்டுமாயின் அவர் பைஅத் (உடன்படிக்கை) செய்ய வேண்டும் என்று இந்த ஹதீஸில் கூறப்படவில்லை. ஆனால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டதன் பின்னால் அவருக்கிருக்கும் கடமைகளுள் ஒன்றைப் பற்றியே இந்த ஹதீஸ் கூறுகிறது என்பதை எளிதாய் விளங்கலாம். ஆனால் இந்த ஹதீஸ் இவர்களுக்கு அடிப்படையாகிவிட்டதனால் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவ வேண்டுமெனில் அதற்கு பைஅத்துத்தான் அடிப்படை என்பதில் உறுதியாகி விட்டனர். அதனால் இதை விட தெளிவாக வரும் பல ஹதீஸ்களையும் இவர்கள் ஏற்க மறுக்கின்றனர். உள்ளத்தில் கடுகளவு ஈமானிருந்து நற்காரியங்கள் எதையும் செய்யாதிருந்தவர்களுக்கும் நரகவிடுதலையுண்டு. எனவே ஒருவர் சுவனம் செல்ல அடிப்படை  ஈமான் மட்டுமே தவிர பைஅத் அல்ல என்பதை கீழ்வருகின்ற நீண்ட ஹதீஸிலிருந்து தெளிவாக அறியலாம்.

صحيح مسلم – 472…….. لإِخْوَانِهِمُ الَّذِينَ فِى النَّار يَقُولُونَ رَبَّنَا كَانُوا يَصُومُونَ مَعَنَا وَيُصَلُّونَ وَيَحُجُّونَ. فَيُقَالُ لَهُمْ أَخْرِجُوا مَنْ عَرَفْتُمْ. فَتُحَرَّمُ صُوَرُهُمْ عَلَى النَّارِ فَيُخْرِجُونَ خَلْقًا كَثيرًا قَدْ أَخَذَتِ النَّارُ إِلَى نِصْفِ سَاقَيْهِ وَإِلَى رُكْبَتَيْهِ ثُمَّ يَقُولُونَ رَبَّنَا مَا بَقِىَ فِيهَا أَحَدٌ مِمَّنْ أَمَرْتَنَا بِهِ. فَيَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِى قَلْبِهِ مِثْقَالَ دِينَارٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ. فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ نَذَرْ فِيهَا أَحَدًا مِمَّنْ أَمَرْتَنَا. ثُمَّ يَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِى قَلْبِهِ مِثْقَالَ نِصْفِ دِينَارٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ. فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ نَذَرْ فِيهَا مِمَّنْ أَمَرْتَنَا أَحَدًا. ثُمَّ يَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِى قَلْبِهِ مِثْقَالَ ذَرَّةٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ. فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ نَذَرْ فِيهَا خَيْرًا ». وَكَانَ أَبُو سَعِيدٍ الْخُدْرِىُّ يَقُولُ إِنْ لَمْ تُصَدِّقُونِى بِهَذَا الْحَدِيثِ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ (إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا) « فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَفَعَتِ الْمَلاَئِكَةُ وَشَفَعَ النَّبِيُّونَ وَشَفَعَ الْمُؤْمِنُونَ وَلَمْ يَبْقَ إِلاَّ أَرْحَمُ الرَّاحِمِينَ فَيَقْبِضُ قَبْضَةً مِنَ النَّارِ فَيُخْرِجُ مِنْهَا قَوْمًا لَمْ يَعْمَلُوا خَيْرًا قَطُّ………

‘…………..நரகிலிருக்கும் தமது சகோதரர்களுக்காக அவர்கள் அல்லாஹ்விடம் ‘எங்களின் இரட்சகனே அவர்கள் எங்களோடு நோன்பு நோற்றார்கள், தொழுதார்கள், ஹஜ் செய்தார்கள் என்று கூறி மன்றாடுவார்கள். (அப்போது) ‘நீங்கள் அறிந்தவர்களை (நரகிலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்படும். அதிகமானோரை நரகிலிருந்து அவர்கள் வெளியேற்றுவார்கள். அவர்களில் கரண்டைக் காலின் அரைவாசி வரைக்கும் நரகம் தீண்டிவர்களும் முழங்கால் வரை நரகம் தீண்டியவர்களும் இருப்பார்கள். (பின்னர்) ‘எங்களின் இரட்சகனே நீ ஏவியவர்களில் ஒருவரேனும் (நரகில்) மிஞ்சவில்லை’ என (அந்த நல்லடியார்கள்) கூறுவார்கள். அப்போது அல்லாஹ் ‘யாருடைய உள்ளத்தில் ஒரு தீனார் அளவேனும் நன்மையுள்ளதோ அவனையும் (நரகிலிருந்து) மீட்டெடுங்கள்’ என்று கூறுவான். அதிகமானோரை நரகிலிருந்து அவர்கள் வெளியேற்றுவார்கள். பின்னர் ‘எங்களின் இரட்சகனே நீ ஏவியவர்களில் ஒருவரேனும் (நரகில்) மிஞ்சவில்லை’ என (அந்த நல்லடியார்கள்) கூறுவார்கள். அதன் பின்னர் ‘யாருடைய உள்ளத்தில் அரை தீனார் அளவேனும் நன்மையுள்ளதோ அவனையும் (நரகிலிருந்து) மீட்டெடுங்கள்’ என்று அல்லாஹ் கூறுவான். அதிகமானோரை நரகிலிருந்து அவர்கள் வெளியேற்றுவார்கள். பின்னர் ‘எங்களின் இரட்சகனே நீ ஏவியவர்களில் ஒருவரேனும் (நரகில்) மிஞ்சவில்லை’ என (அந்த நல்லடியார்கள்) கூறுவார்கள். ‘யாருடைய உள்ளத்தில் அணுவளவேனும் நன்மையுள்ளதோ அவனையும் (நரகிலிருந்து) மீட்டெடுங்கள்’ என்று அல்லாஹ் கூறுவான். அதிகமானோரை நரகிலிருந்து அவர்கள் வெளியேற்றுவார்கள். பின்னர் ‘எங்களின் இரட்சகனே நீ ஏவியவர்களில் ஒருவரேனும் (நரகில்) மிஞ்சவில்லை’ என (அந்த நல்லடியார்கள்) கூறுவார்கள்……………………………… அப்போது அல்லாஹ் ‘மலக்குகள் சிபாரிசு செய்து விட்டார்கள். நபிமார்கள் சிபாரிசு செய்து விட்டார்கள். முஃமின்களும் சிபாரிசு செய்து விட்டார்கள். கருணையாளர்களில் மிகப் பொரும் கருணையாளன் மட்டுமே மிஞ்சியுள்ளான் என்று கூறி நரகிலிருந்து ஒரு பிடிபிடித்து ஒரு கூட்டத்தை அல்லாஹ் வெளியெடுப்பான் அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள்…………….’
அறிவிப்பவர் : அபூஸஈதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 472

‘யாருடைய கழுத்திலே பைஅத் (உடன்படிக்கை) இல்லையோ அவன் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான்.’  என்ற ஹதீஸில் ‘அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான்’ என்று வரும் வாசகம் எதைக் குறிக்கின்றது? அதன் சரியான விளக்கம் என்ன? என்ற கேள்வியெழுகிறது. எனவே மனித கருத்துக்களையெல்லாம் ஒரு புறம் வைத்து விட்டு மற்றைய ஹதீஸ்களையும் அதனோடு ஒன்று சேர்த்து சரியான விளக்கத்தைப் பெற முயற்சிக்கவேண்டும்.

ஆகவே மேலே நாம் பார்த்த ஸஹீஹ் முஸ்லிமில் வரும் நீண்ட ஹதீஸில் இடம் பெரும் நரகிலிருந்து ஒரு பிடிபிடித்து ஒரு கூட்டத்தை அல்லாஹ் வெளியெடுப்பான் அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள்…………….’ எனும் வாசகத்திலிருந்து இந்த சர்ச்சைக்கு நமக்கு மிகத்தெளிவான விளக்கம் கிடைக்கின்றது. அது யாதெனில் உள்ளத்தில் கடுகளவு ஈமானுள்ளவரென்றாலும் அவரும் நரகிலிருந்து வெளியேற்றப்படுவார்.; முஸ்னத் அஹ்மதில் வரும் மற்றோர் அறிவிப்பில் அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள் தௌஹீதைத் தவிர என்று மிகத்தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. எனவே பைஅத்துச் செய்யாமலிருப்பது ஒரு பாவமாயினும் அதனால் ஒருவர் நிரந்தர நரகவாதியாகிவிடப் போவதில்லை. ஆகவே பைஅத்துச் செய்யாதவர் நிரந்தர நரகவாதியில்லை என்பதை விளங்க இந்த ஸஹீஹான ஹதீஸ் தாரளமாகப் போதுமெனலாம்.

இந்த ஹதீஸில் குளறுபடிகள் ஏதும் கிடையாது. இடைச்சொருகல் எதுவும் கிடையாது. இது வரலாறுமல்ல. இவ்வளவு தெளிவாக தௌஹீதைத் தவிர அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள் என்று இந்த ஹதீஸில் கூறப்பட்டிருந்தும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று கூறிக்கொள்ளும் அந்த சகோதரர்களால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. இதை அவர்களிடம் முன்வைத்தால் இதுவும் பைஅத்துக்குப் பின்னர்தான் என்று தவறான விளக்கம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைப் போல பைஅத் செய்யாதவர் நிரந்தர நரகவாதி என்று சொல்வதென்றால் மேலே நாம் பார்த்த ஹதீஸில் தௌஹீதைத் தவிர அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளதைப் போன்று பைஅத்தைத் தவிர அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள் அல்லது அவர்கள் பைஅத் செய்தவர்களாக இருப்பார்கள் என்று ஏதாவது ஒரு ஹதீஸில் கூறப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தௌஹீதைத் தவிர அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள் என்ற ஹதீஸுக்கு அவர்கள் சரியான விளக்கமளிக்க வேண்டும். சுருங்கக் கூறுவதென்றால் பைஅத் பற்றி மூடலாக வருகின்ற ஹதீஸ் அவர்களுக்கு அடிப்படையகி விட்டதனால் தௌஹீதைத் தவிர என்று தெளிவாக வரும் ஹதீஸை அவர்களால் சரியாக விளங்க முடியவில்லையென்பது தெளிவாகின்றது.

குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும்தான் பின்பற்றுகிறோம். என்று கூறிக்கொண்டு குறிப்பிட்ட சில செய்திகளோடு தமது கொள்கையை வரையறுத்துக் கொண்டமையே இந்த வழிகேட்டிற்குக் காரணம் என்பதைப் புரிய இன்னும் சில சான்றுகளை அவதானிப்போம்.

2 Responses to “ஆன்மீக பைஅத் எடுக்கும் உரிமை நபியவர்களுக்கு மட்டுமே.ஏத்தாளை விவாதம். 1”

  1. fazlyhussain says:

    அஸ்ஸலாமு அழைக்கும்,
    ஜசாகல்லாஹுகைர் ,இதனுடைய விவாத ஒலிநாடாவை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  2. Abdhurrahman says:

    Jazakkallahu hairen……..

Derek MacKenzie Womens Jersey