ஆன்மீக பைஅத் எடுக்கும் உரிமை நபியவர்களுக்கு மட்டுமே.ஏத்தாளை விவாதம். 2

Post by mujahidsrilanki 18 February 2011 கட்டுரைகள், கொள்கை

இவ்வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி ஜமாஅதுல் முஸ்லிமீன் என தங்களை அழைத்துக்கொள்ளும் சகோதரர்களோடு புத்தளம் நகரசபை மண்டபத்தில் நடந்த விவாதத்தின் எங்கள் தரப்பு வாதத்தை தொகுத்து எழுத்து வடிவில் தருவதாக அறிவித்திருந்தோம். முதலில் என்னால் ஆற்றப்பட்ட கொள்கை விளக்க உரையின் முதல் தொடரை ஏற்கனவே தந்தோம்.இது எனது முன்னுரையின் இறுதிப் பகுதி

குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும்தான் பின்பற்றுகிறோம். என்று கூறிக்கொண்டு குறிப்பிட்ட சில செய்திகளோடு தமது கொள்கையை வரையறுத்துக் கொண்டமையே இந்த வழிகேட்டிற்குக் காரணம் என்பதைப் புரிய இன்னும் சில சான்றுகளை அவதானிப்போம்.

صحيح مسلم – 287عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَهَذَا حَدِيثُ ابْنِ أَبِى شَيْبَةَ قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى سَرِيَّةٍ فَصَبَّحْنَا الْحُرَقَاتِ مِنْ جُهَيْنَةَ فَأَدْرَكْتُ رَجُلاً فَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَطَعَنْتُهُ فَوَقَعَ فِى نَفْسِى مِنْ ذَلِكَ فَذَكَرْتُهُ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَقَتَلْتَهُ ». قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا قَالَهَا خَوْفًا مِنَ السِّلاَحِ. قَالَ « أَفَلاَ شَقَقْتَ عَنْ قَلْبِهِ حَتَّى تَعْلَمَ أَقَالَهَا أَمْ لاَ ». فَمَازَالَ يُكَرِّرُهَا عَلَىَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّى أَسْلَمْتُ يَوْمَئِذٍ. قَالَ فَقَالَ سَعْدٌ وَأَنَا وَاللَّهِ لاَ أَقْتُلُ مُسْلِمًا حَتَّى يَقْتُلَهُ ذُو الْبُطَيْنِ. يَعْنِى أُسَامَةَ

‘ஒரு யுத்தத்துக்கு நபியவர்கள் எங்களை அனுப்பினார்கள். ஜுஹைனா என்ற இடத்தில் ஹுரகாத் என்ற பகுதியில் நாம் காலையை அடைந்தோம். (அங்கு) நான் ஒரு நபரைச் சந்தித்தேன் அவர் (என்னைக் கண்டதும்) லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினார். (நான் அதைக் கவனிக்காமல்) அவரைக் கொலை செய்து விட்டேன். (என்றாலும்) அது என் மனதை உறுத்தியது. எனவே அதை நபியவர்களிடம் கூறினேன். (அதைக் கேட்ட நபியவர்கள்) ‘லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவரையா நீர் கொலை செய்தீர்’ எனக்கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே ஆயுதத்துக்குப் பயந்துதான் அவர் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னார்.’ என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ‘அதை அவர் அதற்குத்தான் கூறினார் என நீ தெரிவதற்கு அவருடைய உள்ளத்தை பிளந்து பார்த்தீரா’ என்று கூறினார்கள்……………’
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 287

இந்த ஹதீஸ் பைஅத் செய்யாமல் மரணித்தவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவராவார் என்ற ஹதீஸை விளங்க உதவியாக இருக்கிறது. லாஇலாஹ இல்லல்லாஹ் என்று மட்டுமே அந்த மனிதர் சொன்னார்.இஸ்லாத்திற்குள் நுழைய பைஅத் செய்வது கட்டாயமாக இருந்தால் நபியவர்கள் அதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை அங்கு குறிப்பிடவில்லை. அந்நபர் கலிமாவை மொழிந்தாரா இல்லையா என்பதைத்தான் நபியவர்கள் ‘அதை அவர் அதற்குத்தான் கூறினார் என நீ தெரிவதற்கு அவருடைய உள்ளத்தை பிளந்து பார்த்தீரா’ என்ற வினாவின் மூலம் சொல்லியிருக்கிறார்கள் என்பது இங்கே புலனாகின்றது. எனவே ஒருவர் இஸ்லாத்துக்குள் நுழைய லாஇலாஹ இல்லல்லாஹ்தான் அடிப்படையேயன்றி பைஅத் அல்ல என்பதை இதை விடத் தெளிவாக எப்படித்தான் விளங்கப்படுத்தலாம்??????

கத்தம் கொடுப்பதற்கு ஆதாரம் என்னவென்று மாற்றுக்கருத்துள்ளோரிடம் நாம் கேட்கும் போது தர்மம் பற்றிய ஹதீஸ்களையும், உணவளிப்பது பற்றிய ஹதீஸ்களையும் அதற்கு ஆதாரமாக அவர்கள் முன்வைப்பதைப் போல அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் பின்பற்றும் நாம் மார்க்க விடயம் ஒன்றுக்கு ஆதாரத்தை முன்வைக்கும் போது சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் கொண்டு வந்து சம்பந்தப்படுத்தக் கூடாது. குறித்த விடயம் தொடர்பாக வருகின்ற அனைத்து ஹதீஸ்களையும் ஒன்று சேர்த்து அவற்றிலிருந்துதான் சரியான முடிவொன்றைப் பெற முடியும். இதுவே அறிவுபூர்வமானதும், சரியானதுமான ஒரு முடிவாகும்.

இன்னுமோர் அம்சத்தை நாம் இங்கு நன்கு கவனிக்க வேண்டும். ஐந்து நேரத் தொழுகைகளை முறையாக யார் நிறைவேற்றுகின்றாரோ அவர் சுவனம் நுழைந்து விட்டார் என்று சொல்லப்பட்டால் உடனே நாம் அதனோடு ‘அவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமலிருந்தால் சுவனம் நுழைவார்’ என்பதையும் சேர்த்து அதை விளங்குகிறோம்.  ஏனெனில் அல்லாஹ் அதைத் தெளிவாக அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான். إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ النساء : 48 தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ்  மன்னிக்கமாட்டான் அதற்குக் கீழ் நிலையிலுள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான்.(அந்நிஸா : 48) இணை வைத்தவர் சுவனம் நுழையமாட்டார் என்ற அடிப்படையை நாம் சரியாக விளங்கியுள்ளதால் ஒருவர் எந்த நற்காரியங்களைச் செய்திருந்தாலும் அவர் இணை வைக்காமலிருந்தால் தான் அவரால் சுவனம் செல்ல முடியும் என்பதைப் போலவே பைஅத் செய்யாமல் மரணித்தவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவராவார் என்ற ஹதீஸையும் ஓர் அடிப்படையாக விளங்கி வைத்துள்ளோம். இணைவைத்தலைத் தவிர மற்றைய அனைத்தையும் நாடியவருக்கு மன்னிப்பேன் என்று அல்லாஹ் கூறியிருப்பதைப் போல பைஅத்துக்குச் சொல்லப்படவில்லை. ஆகவே இணை வைப்பைப் போன்று பைஅத்துக்கு நாம் அழுத்தம் கொடுக்கின்றோம் என்பதை ஜமாஅத்துல் முஸ்லிமீன் எனக் கூறிக்கொள்ளும் சகோதரர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் முஸ்லிமாவதற்கு பைஅத்துச் செய்வதே அடிப்படை என்ற கொள்கை தவறானது என்பதை கீழ்வரும் ஹதீஸிலிருந்தும் தெளிவாய் விளங்கிக் கொள்ளலாம்.

صحيح البخاري -4339عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ فَدَعَاهُمْ إِلَى الْإِسْلَامِ فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا أَسْلَمْنَا فَجَعَلُوا يَقُولُونَ صَبَأْنَا صَبَأْنَا فَجَعَلَ خَالِدٌ يَقْتُلُ مِنْهُمْ وَيَأْسِرُ وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ حَتَّى إِذَا كَانَ يَوْمٌ أَمَرَ خَالِدٌ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ فَقُلْتُ وَاللَّهِ لَا أَقْتُلُ أَسِيرِي وَلَا يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِي أَسِيرَهُ حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَاهُ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ مَرَّتَيْنِ

நபி(ஸல்) அவர்கள், காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு ‘அஸ்லம்னா – நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்’ என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. எனவே, அவர்கள் (தங்களின் வழக்குப்படி) ‘ஸபஃனா, ஸபஃனா’ – நாங்கள் மதம் மாறி விட்டோம். மதம் மாறிவிட்டோம்” என்று சொல்லானார்கள். உடனே காலித்(ரலி), அவர்களில் சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒரு நாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை கொல்ல மாட்டேன். மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்” என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, ‘இறைவா! ‘காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இருமுறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி)
ஆதாரம் : புஹாரி 4339

இந்த ஹதீஸில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு அடிப்படையாக எது அமைகிறது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த மக்கள் பைஅத் செய்தார்களா இல்லையா என்பது பற்றி நபியவர்கள் காலித் பின் வலீதிடம் விசாரிக்கவில்லை. ‘இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்’ என்று அவர்களுக்குத் தெரிந்த மொழியில் அம்மக்கள் சொல்லிய பின்னாலும் ஏன் அவர்களை நீ கொலை செய்தாய் ஆகவே நீ செய்த இந்தச் செயலுக்கு நான் பொறுப்பல்ல இதை நான் அல்லாஹ்வின் பொறுப்பில் விடுகின்றேன் என்ற கருத்தில்தான் நபியவர்கள் ‘இறைவா! ‘காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து வெளிப்படையாக விளங்க முடிகின்றது.

இவ்வளவு தெளிவாகவும், நேரடியாகவும் ஹதீஸ்கள் வந்திருந்தாலும் பைஅத் பற்றிய ஹதீஸ் ஜமாஅத்துல் முஸ்லிமீன் எனக் கூறிக்கொள்ளும் சகோதரர்களின் உள்ளங்களில் ஆழமாய் வேரூன்றிவிட்டதனால் அவர்களால் இந்த யதார்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இவர்களின் கொள்கை தவறானது என்பதை கீழ்வரும் ஹதீஸிலிருந்தும் தெளிவாக விளங்கலாம்.

صحيح البخاري – 1283عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ فَقَالَ اتَّقِي اللَّهَ وَاصْبِرِي قَالَتْ إِلَيْكَ عَنِّي فَإِنَّكَ لَمْ تُصَبْ بِمُصِيبَتِي وَلَمْ تَعْرِفْهُ فَقِيلَ لَهَا إِنَّهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَتْ بَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابِينَ فَقَالَتْ لَمْ أَعْرِفْكَ فَقَالَ إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى
கப்ருக்கருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!” என்றார்கள். அதற்கு அப்பெண், என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்பட வில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி(ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே காவலாளிகள் எவருமில்லை. ‘நான் உங்களை (யாரென) அறியவில்லை” என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினாள். ‘பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரழி)
ஆதாரம் : புஹாரி 1283

இந்த ஹதீஸை அவர்களிடம் முன்வைத்தால் அப்பெண்மணி ஆரம்பத்தில் வேறொரு முறையில் பைஅத் செய்திருக்கலாம் அதனால் நபியவர்களை அவளுக்குத் தெரியாமலிருந்திருக்கலாம் எனக் கூறி பைஅத் என்ற வட்டத்துள்ளிருந்தே ஹதீஸுக்கு விளக்கமளிக்கின்றனர்.

இதை இன்னும் தெளிவாய் விளங்கிக் கொள்வதற்கு கீழ்வரும் மற்றொரு ஹதீஸை அவதானிப்போம்.  
صحيح مسلم -2942 عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ يَوْمَ خَيْبَرَ « لأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ رَجُلاً يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ ». قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ مَا أَحْبَبْتُ الإِمَارَةَ إِلاَّ يَوْمَئِذٍ – قَالَ – فَتَسَاوَرْتُ لَهَا رَجَاءَ أَنْ أُدْعَى لَهَا – قَالَ – فَدَعَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلِىَّ بْنَ أَبِى طَالِبٍ فَأَعْطَاهُ إِيَّاهَا وَقَالَ « امْشِ وَلاَ تَلْتَفِتْ حَتَّى يَفْتَحَ اللَّهُ عَلَيْكَ ». قَالَ فَسَارَ عَلِىٌّ شَيْئًا ثُمَّ وَقَفَ وَلَمْ يَلْتَفِتْ فَصَرَخَ يَا رَسُولَ اللَّهِ عَلَى مَاذَا أُقَاتِلُ النَّاسَ قَالَ « قَاتِلْهُمْ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَإِذَا فَعَلُوا ذَلِكَ فَقَدْ مَنَعُوا مِنْكَ دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلاَّ بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ

‘அல்லாஹ்வும் அவன் தூhரும் விரும்பக்கூடிய, அல்லாஹ் வெற்றியைக் கொடுக்கக் கூடிய ஒருவரின் கையில்  அந்தக் கொடியை நான் கொடுப்பேன்’ என்று நபியவர்கள் ஹைபர் தினத்தன்று கூறினார்கள். ‘அன்றைய தினம் தலைமைக்கு நான் ஆசைப்பட்டது போன்று வேறெப்போதும் ஆசை வைத்ததில்லை. ஆகையால் அதற்கு நான் அழைக்கப்பட வேண்டுமென்று ஆவல்கொண்டிருந்தேன் என உமரிப்னுல் கத்தாப் கூறினார். நபியவர்கள் அலீ (ரழி) அவர்களை அழைத்து கொடியைக் கொடுத்து ‘அல்லாஹ் உனக்கு வெற்றியை வழங்கும் வரை நடந்து செல்வீரா திரும்பிப் பார்க்கவேண்டாம்’ எனக் கூறினார்கள். அலீ (ரழி) அவர்கள் சற்று தூரம் நடந்து சென்றுவிட்டு நின்று திரும்பிப்பார்க்காமல் ‘அல்லாஹ்வின் தூதரே எதற்காக மக்களுடன் நான் போர் செய்ய வேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ‘வணக்கத்துக்குரிய கடவுள் அல்லாஹ்வையன்றி யாருமில்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என அவர்கள் சாட்சி சொல்லும் வரை அவர்களோடு போராடு அதை அவர்கள் செய்துவிட்டால் தங்களின் இரத்தங்களையும், சொத்துக்களையும் உரிமையில்லாமல் நாம் எடுப்பதை விட்டும் காத்துக் கொண்டனர். அவர்களின் கணக்கு அல்லாஹடவிடமே’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : புஹாரி 2942

வணக்கத்துக்குரிய கடவுள் அல்லாஹ்வையன்றி யாருமில்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என அவர்கள் சாட்சி சொல்லும் வரைக்கும் மக்களுடன் போர் புரிய வேண்டும். அதை அவர்கள் செய்துவிட்டால் தங்களின் இரத்தங்கள், சொத்துக்கள் என்பன உரிமையில்லாமல் எடுக்கப் படுவதை விட்டும் காத்துக் கொண்டனர். ஆகவே இஸ்லாத்துக்குள் நுழைய லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதன் ரஸுலுல்லாஹ்தான் அடிப்படையே தவிர பைஅத் அல்ல என்பது இந்த ஹதீஸிலிருந்து மிகத்தெளிவாகின்றது.

இந்த ஹதீஸையும், وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ  ‘அல்லாஹ்வை வணங்குங்கள் தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்’ என்று (எடுத்துரைக்க) ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். (அந்நஹ்ல் : 36) என்ற வசனத்தையும், நரகவாசிகளைப் பார்தது மலக்குமார்கள் உங்;களுக்கு எச்சரிக்கை செய்வோர் வரவில்லையா? என்கின்ற வசனங்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது அல்லாஹ்வை வணங்குங்கள் தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்ற ஒரே நோக்கத்துக்காகவே நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள். அதற்காகத்தான் நபியவர்கள் காலத்திலும், அதற்கடுத்த காலங்களிலும் போர்களும் இடம் பெற்றுள்ளன என்பதை மிகத் தெளிவாக விளங்க முடிகின்றது. என்றாலும் பைஅத் பற்றிய தவறான விளக்கம் இந்த சகோதரர்களை மயக்கி விட்டதனால் இந்த உண்மைகளை அவர்களால் விளங்க முடியவில்லை.

இவர்களின் கொள்கை தவறானது என்பதை மென்மேலும் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு கீழ்வருகின்ற ஹதீஸ் மேலும் துணையாகவுள்ளது.

صحيح البخاري – 2943عَنْ حُمَيْدٍ قَالَ سَمِعْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا غَزَا قَوْمًا لَمْ يُغِرْ حَتَّى يُصْبِحَ فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ بَعْدَ مَا يُصْبِحُ فَنَزَلْنَا خَيْبَرَ لَيْلًا
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும் வரை தாக்குதல் நடத்த மாட்டார்கள். (அந்த மக்களிடையே தொழுகை அழைப்பான) பாங்கின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்காவிட்டால் காலை நேரம் வந்த பின் தாக்குதல் நடத்துவார்கள். கைபரில் நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம்.
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
ஆதாரம் : புஹாரி 2943

நபியவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால் அவர்கள் முஸ்லிம்களா இல்லையா என்பதை அறிய துணை நின்றது அதான் ஓசை தானே தவிர பைஅத் அல்ல. முஸ்லிமில் வரும் இதுபற்றிய ஹதீஸ் கீழ்வருமாறு இடம்பெறுகிறது.

صحيح مسلم – 873عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُغِيرُ إِذَا طَلَعَ الْفَجْرُ وَكَانَ يَسْتَمِعُ الأَذَانَ فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ وَإِلاَّ أَغَارَ فَسَمِعَ رَجُلاً يَقُولُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عَلَى الْفِطْرَةِ ». ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « خَرَجْتَ مِنَ النَّارِ ». فَنَظَرُوا فَإِذَا هُوَ رَاعِى مِعْزًى
காலை நேரமாகிவிட்டால் தாக்குதல் நடத்துவார்கள். மக்களிடையே தொழுகை அழைப்பான அதான் ஓசை கேட்கின்றதா என்பதை அவதானிப்பார்கள். அவ்வாறு அதான் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த மாட்டார்கள். அதான் ஓசையைக் கேட்காவிட்டால் தாக்குதல் நடத்துவார்கள். அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் சொல்வதை நபியவர்கள் கேட்டார்கள். ‘அவர் இஸ்லாத்திலிருக்கின்றார்’ என்று அதற்கு பதிலளித்தார்கள். பின்னர் அந்த மனிதர் ‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்  அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னார். அதற்கு நபியவர்கள் ‘நீ நரகிலிருந்து வெளியேறிவிட்டாய்’ என்று சொன்னர்hகள். (சத்தம் வந்த இடத்தின் பால் நபித்தோழர்கள்) பார்த்தார்கள். ஆடு மேய்ப்பவராக அந்த மனிதர் காணப்பட்டார்’
அறிவிப்பவர் :  அனஸ் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 873

யாரோ ஒருவர் ஏகத்துவ வார்த்தையைச் சொல்ல அவரைப் பார்த்து நீ நரகிலிருந்து வெளியேறிவிட்டாய்’………என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்து கீழ்வரும் விடயங்களை அவதானிக்கலாம்.

1- ஏகத்துவ வார்த்தையைச்
மனிதர் யார் என்பது நபியவர்களுக்கோ, நபித்தோழர்களுக்கோ தெரியாது. பைஅத்துச் செய்துதான் முஸ்லிமாக வேண்டுமென்றால் கட்டாயம் அந்த மனிதர் ஏதோ ஒரு வகையில் அடையாளம் காணப்பட்டிருப்பார்.
2- அல்லாஹு அக்பர் என்று அந்த மனிதர் சொன்னதும், ‘அவர் இஸ்லாத்திலிருக்கின்றார்’ என்று நபியவர்கள் பதில் சொன்னதிலிருந்து ஒருவர் முஸ்லிம் என்பற்கு அடையாளம் லாஇலாஹ இல்லல்லாஹ்தான் பைஅத் அல்ல என்பது உறுதியாகின்றது.

3-அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்று அம்மனிதர் சொன்னதும் அவரைப்பார்த்து நபியவர்கள் ‘நீ நரகிலிருந்து வெளியேறிவிட்டாய்’ என்று சொன்னதிலிருந்து ஒருவர் சுவனம் செல்ல லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா ஷஹாதா தான் அவசியமே தவிர பைஅத் அல்ல என்பது உறுதியாகின்றது.

நபியவர்களைத் தெரியாமலேயே அன்று முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள் சில பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களைத் தெரியாமலேயே நபியவர்களும் இருந்திருக்கிறார்கள் என்றால் இஸ்லாத்தை ஏற்கும் ஒருவர் தலைவரைச் சந்திக்க வேண்டும் அவருக்கு பைஅத் செய்ய வேண்டும் என்றெல்லாம் எந்த நிபந்தனைகளும் அன்றிருக்கவில்லை. இஸ்லாத்தின் செய்தி கிடைத்ததும் கலிமாவைச் சொன்னார்கள் முஸ்லிம்களானார்கள். என்பதையே இது போன்ற ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகிறது. பைஅத்துத்தான் இஸ்லாத்துக்கு அடிப்படை என்று அவர்களாகவே முடிவுகட்டிவிட்டதனால் இனிமேல் எத்தனை ஹதீஸ்களைத் தான் அவர்களுக்கு நாம் எடுத்துக் காட்டினாலும் பைஅத்தை மையமாக வைத்தே அவற்றுக்கு சுய விளக்கம் சொல்லிவிடுகின்றனர்;. எனவே விளக்கக் குழப்பம்; இந்தப் புள்ளியிலிருந்துதான்  இவர்களில் உருவாகின்றது என்பது உறுதியாகின்றது.

ஜமாஅத்துல் முஸ்லிமீன் எனக் கூறிக்கொண்டு ஏத்தாளையிலிருக்கும் இயக்கத்தில் பைஅத் செய்து சேர்ந்தால் தான் ஒருவர் முஸ்லிமாகலாம் என்று வைத்துக் கொண்டால் உகண்டாவிலிருக்கும் ஒருவர் எப்படி இஸ்லாத்துக்கு வருவது? அவர் கடிதத்தின் மூலம் இவர்களைத் தொடர்பு கொள்வதா? அப்படியாயின் ஒரு நாளில் அவரால் இஸ்லாத்துக்கு வரமுடியாது பல நாட்கள் அவருக்குத் தேவைப்படும் என்று சொல்லப் போகிறார்களா? இவ்வாறான தூர பிரதேசங்களிலுள்ளோருக்கு இவர்கள் என்ன பதிலைக் கூறப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றுவதாகக் கூறினாலும் மனோ இச்சையின் காரணத்தால் குறிப்பிட்ட சில செய்திகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து அவற்றுக்கு முரண்படும் ஏனைய ஆதாரங்களை இரண்டாம் பட்சமாக்கி புதிய கருத்தொன்று எவ்வாறு உருவாகின்றது என்பதற்கு கீழ்வரும் உதாரணத்தைப் பாருங்கள்.

سنن أبى داود – 492عَنْ أَبِى سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- – وَقَالَ مُوسَى فِى حَدِيثِهِ فِيمَا يَحْسَبُ عَمْرٌو – أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « الأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلاَّ الْحَمَّامَ وَالْمَقْبُرَةَ
குளியலறை, அடக்கஸ்தலம் ஆகியவற்றைத் தவிர பூமி முழுவதும் ஸுஜுது செய்யுமிடமாக (பள்ளியாக) ஆக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : அபூஸஈத் (ரழி)
ஆதாரம் : அபூதாவூத் 492

இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து குளியலறை, அடக்கஸ்தலம் போன்றவற்றைத் தவிர பூமியின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தொழலாம் என்று ஒருவர் விளக்கம் சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அவ்விரண்டு இடங்களே தொழுவதற்குத் தடை செய்யப்பட்டவை இவையல்லாத தொழத் தடைவிதிக்கப்பட்ட வேறு இடங்கள் எதுவுமில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். தனது இந்த நிலைப்பாடு சரியானதுதான் என்றாலும் ஒரு மௌலவியிடம் இது பற்றி விளக்கம் கேட்டுப்பார்ப்போம் என்ற நோக்கில் ஒரு மௌலவியை நாடுகிறார். குளியலறை, அடக்கஸ்தலம் போன்றவற்றில் தொழுவதற்கு தடை   வந்துள்ளதைப் போன்று ஒட்டகம் கட்டும் இடத்திலும் தொழ வேண்டாம் என்றும் தடை வந்துள்ளது என அந்த மௌலவி இவருக்கு பதில் கூறுகிறார். உடனே இவர் ஒட்டகம் கட்டும் இடத்திலும் தொழ வேண்டாம் என்று ஹதீஸில் தெளிவாக உள்ளதா? அந்த ஹதீஸ் ஆதாரபூர்மானதா? என்றெல்லாம் வினாக்களைத்தொடுத்துக் கொண்டு போவார். ஆம் அந்த ஹதீஸ் பலமானதுதான். தடை அந்த ஹதீஸில் தெளிவாகவே உள்ளது என்று பதில் சொன்னாலும் இரண்டு இடங்களே தடுக்கப்பட் இடங்கள் என்ற கருத்தை இவர் பலரிடத்தில் சொல்லி விட்டதால் கேள்விக்கு மேல் கேள்வி தொடுத்துக் கொண்டே போவார். தனது கருத்துத்தான் சரியானது என்ற மனோ இச்சையுடன் கலந்த பிடிவாதமே இவரின் இந்நிலைக்குக் காரணமாகின்றது. இஹ்லாஸோடு நடப்பவராயின் இது போன்ற குறுக்கு வாதங்களை வைக்காமல் தனது கருத்துப் பிழையானது என்று ஒப்புக்கொண்டு சரியனதை ஏற்றுக்கொள்வார்.

தவாறான மார்க்க விளக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை எடுத்துக்காட்டும் இன்னொரு ஹதீஸை அவதானியுங்கள்.

صحيح البخاري – 3610عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْسِمُ قِسْمًا أَتَاهُ ذُو الْخُوَيْصِرَةِ وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اعْدِلْ فَقَالَ وَيْلَكَ وَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ قَدْ خِبْتَ وَخَسِرْتَ إِنْ لَمْ أَكُنْ أَعْدِلُ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِيهِ فَأَضْرِبَ عُنُقَهُ فَقَالَ دَعْهُ فَإِنَّ لَهُ أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلَاتَهُ مَعَ صَلَاتِهِمْ وَصِيَامَهُ مَعَ صِيَامِهِمْ يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنْ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنْ الرَّمِيَّةِ……….’
நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது ‘பனூ தமீம்’ குலத்தைச் சேர்ந்த ‘துல் குவைஸிரா’ என்னும் மனிதர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகுவாய் நஷ்டமடைந்து விடுவாய்” என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி) இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது………..’
அறிவிப்பவர் : அபூஸஈத் (ரழி)
ஆதாரம் : புஹாரி 3610

வேறு அறிவுப்புக்களில் ‘இவர்கள் முஸ்லிம்களோடு போர் புரிவார்கள் ஆனால் சிலை வணங்கிகளை விட்டுவிடுவர்கள்.’ என்று வருகின்றது. அல்குர்ஆனையும், ஸுன்னாவையும்தான் பின்பற்றுவதென்றாலும் விளக்கங்கள் மாறினால் இது போன்ற தவறான முடிவுகள்தான் ஏற்படும் என்பதையே இந்த ஹதீஸிலே நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலே நாம் முன்வைத்த அனைத்துத் தகவல்களிலிருந்தும் சில முக்கியமான முடிவுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1- அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவையும் மட்டும் பின்பற்றுவதாகக் கூறி குறிப்பிட்ட ஓர் அல்குர்ஆன் வசனத்தை, ஒரு ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒரு கருத்தைத் தவறாக விளங்கி ஏனைய ஹதீஸ்களையும் அல்குர்ஆன் வசனங்களையும் முறையாக விளங்காமல் அவற்றை அக்கருத்துக்குக் கிளைகளாக ஆக்கி விளங்க முற்பட்டமைதான் இஸ்லாமிய சமூகத்தில் வழிகேடுகள் ஏற்படக் காணமாக அமைந்தது.

2- பைஅத் செய்தல், குறிப்பிட்ட சில புத்தகங்களை மட்டும் விஷேட கவனமெடுத்து குர்ஆன் போன்று திருப்பித்திருப்பி வாசித்தல் போன்ற அம்சங்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் எனக் கூறிக் கொள்ளும் வழிகெட்ட பிரிவினர் போன்றோரின் பிரதான அடையாளமாக உள்ளது. சமகாலத்தில் மார்க்கத்தின் பெயரால் தோன்றியுள்ள பெரும்பாலான வழிகெட்ட பிரிவுகளில் பைஅத், சில புத்தகங்களை மட்டும் விஷேட கவனமெடுத்து திருப்பித்திருப்பி வாசித்தல் ஆகிய அம்சங்கள் அதீத செல்வாக்குச் செலுத்திக் காணப்படுகின்றன.

இத்தகைய பிரிவுகள் பற்றியும், இவர்களின் இவை போன்ற அடையாளங்கள் பற்றியும் நபியவர்கள் ஹதீஸ்களிலே எச்சரித்துள்ளதால் இலகுவில் இந்த வழிகேடுகளை இணம் காணமுடிவதுடன், அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் பின்பற்றும் நாம் மார்க்க விடயம் ஒன்றுக்கு ஆதாரத்தை முன்வைக்கும் போது சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் கொண்டு வந்து சம்பந்தப்படுத்தி தீர்வுகாண முயலாமல் குறித்த விடயம் தொடர்பாக வருகின்ற அனைத்து ஹதீஸ்களையும் ஒன்று சேர்த்து அவற்றிலிருந்துதான் சரியான முடிவொன்றைப் பெற முயற்சிக்க வேண்டும். இதுவே அறிவுபூர்வமானதும், சரியானதுமான ஒரு முடிவாகும் என்பதும் இவற்றின் மூலம் தெளிவாகின்றது.

2 Responses to “ஆன்மீக பைஅத் எடுக்கும் உரிமை நபியவர்களுக்கு மட்டுமே.ஏத்தாளை விவாதம். 2”

  1. Abueesa says:

    தயவுசெய்து விடொ நக பொடுஙல்

  2. Abdhurrahman says:

    Jazakkallu hairen….