ஒரு விமர்சன ஓடியோ சீடி பற்றிய விளக்கம்

மௌலவி பி.ஜே அவர்கள் என்னைப் பற்றி விமர்சித்துப் பேசுகின்ற 1 மணித்தியாலங்கொண்ட ஒரு சீடியைப் பற்றி மௌலவி பி.ஜே முஜாஹித்திற்கு எதிராக சீடி பேசியிருக்கிறார் என தீர விசாரிக்காமல் பேசிவருவதாகக் கேள்விப்படுகின்றேன்.

உண்மையென்ன?
SLTJ பற்றியும் என்னைப் பற்றியும் சில விமர்சனங்கள் மௌலவி பி.ஜே யிடம் இருப்பது பற்றி மௌலவி பி.ஜே SLTJ தலைவர் வஸ்னி நிஸாரிடத்தில் சொன்னபோது அது பற்றி அவருடன் பேசுவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சென்னைத் தலைமையகத்திற்கு சென்றிருந்த SLTJ தலைவர் வஸ்னி நிஸாரோடு நடந்த கலந்துரையாடல் வஸ்னி நிஸாரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. தகவலிற்காக மாத்திரம் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வு சில தவறான நோக்கங்களைக் கொண்டோரால் பரிமாற்றம் செய்யப்பட்டு இன்று இந்த வடிவம் எடுத்திருக்கின்றது.

சீடியில் என்ன பேசப்பட்டுள்ளது?
இவ்விடயத்தை நானே அறிமுகப்படுத்தி விரிசலைப்பெரிதுபடுத்த எனது மனம் எனக்கு இடந்தரவில்லை, சமாதான நோக்கம் கருதி அதனைத் தவிர்த்துக் கொள்கின்றேன். அந்த ஓடியோவிற்குப் பின் பலவிதமான கடிதப்பரிமாற்றங்கள் SLTJயிற்கும் TNTJயிற்கும் இடையில் நடந்தன. இது சம்பந்தமாக என்னிடம் SLTJயினர் ஒரு விளக்கக்கடிதம் ஒன்றை வேண்டினர். அக்கடிதம் TNTJ தலைமையகத்திற்கு அவர்களுடைய கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது. அக்கடிதத்தை அந்த ஓடியோவிற்குரிய பதிலாக இங்கே பதிவுசெய்கிறேன்.

முஜாஹித் இப்னு ரஸீன்,
37, தக்கியா வீதி,
போருத்தோட்ட,
கொச்சிக்கடை.
mujahid@mujahidsrilanki.com

05-01-2009.

எனது ‘ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்’ சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

TNTJ யினர் எனது நிலைப்பாடுகள் பற்றி விமர்சித்தெழுதிய கடிதத்திற்கு நீங்கள் பதில்வேண்டியதிற்கிணங்க இம்மடலை வரைகிறேன். அம்மடல் நான் TNTJ யின் மார்க்க சம்பந்தமான நிலைப்பாடுகளில் முரண்படுவதை விமர்சித்து எழுதப்பட்டிருந்ததை அவதானித்தேன்.

TNTJ யோடு தவ்ஹீத் மௌலவிமார்கள் மார்க்க விடயங்களில் முரண்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அவர்கள் அதனை எழுதவில்லை. மாற்றமாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் TNTJ யோடு இணைந்து செயல்படுவதாலும் TNTJ யோடு இணைந்து செயற்படும் கிளையோ, கிளையின் அங்கத்தவராக இருக்கும் மௌலவியோ ஜமாஅத் சொல்லும் கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்வதாயின், என்ன அடிப்படையில், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அந்தக் கருத்தை முன்வைக்கின்றார் என ஜமாஅத் உலமாக்களோடு கலந்துரையாடிய பின்னரே அவர் அந்தக் கருத்தைச் சொல்வது, சொல்லாமல் இருப்பது என்ற முடிவுகளுக்கு வரவேண்டும்’

இதுவே அந்தக் கடிதத்தின் சுருக்கமாக நான் காண்கிறேன்.

கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு:-

நான் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அங்கத்துவம் பெற்ற பிரச்சாரகர் என்ற தகவலிலே அல்லது எண்ணப்பாட்டிலேதான் அக்கடிதம் எழுதபட்டிருக்கிறது. அழைப்பு இதழை பொறுப்பேற்றிருப்பதும், மத்ரஸாவின் அதிபராக இருப்பதும், ஜமாஅத்தின் பெரும்பாலான பிரச்சாரங்களில் பங்கேற்பதும் இதனை உறுதிப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது.

எனவே, முதலில் எந்த இயக்கத்திலும் நான் அங்கத்துவம் பெற்ற பிரச்சாரகராகவோ, ஊதியம் பெறும் பிரச்சாரகராகவோ இல்லையென்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலைப்பாடு இஸ்லாத்தில் அது தடையென்பதற்காக அல்ல. தனிப்பட்ட எனது சுயமுடிவு. அவ்வாறு அங்கத்துவம் பெறுவதில் பல்வேறுபட்ட அணுகூலங்கள் இருப்பதுபோல் பிரதிகூலங்களும் இருக்கின்றன. எனது வாழ்வாதாரப் பிரச்சினைகளை எப்பொழுதும் தனிப்பட்ட ரீதியில் தீர்த்துக்கொள்வதையே தீர்க்கமான முடிவாகக் கொண்டுள்ளேன். இதன் அடிப்படையிலேதான் நான் தஃவாக் களத்தில் இதுவரை காலமும் இயங்கிவருகின்றேன்.

மார்க்கப் பிரச்சினைகளின் பொழுது அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும்

01-உளத்தூய்மையோடும்.

02-உரிய முயற்சியோடும்.

03-சரியான அடிப்படைகளோடும் அணுகுவேன். எந்த முடிவை அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் சொல்கிறதோ அந்தக் கருத்தை நபித்தோழர்கள் சொல்லியிருக்கிறார்களா? அல்லது அவர்களுக்கு முரண்படுகிறதா? எந்த ஜமாஅத்தாவது சொல்கிறதா? அல்லது அதற்கு முரண்படுகிறதா? என்றோ, அல்பானி, உஸைமின், பீ.ஜே போன்ற அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்களா? அல்லது அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுகின்றதா? என்றோ பார்க்கமாட்டேன்.

இதுவே எனது இன்று வரைக்கும் உள்ள நிலைப்பாடு என்றும் இருக்கப் போகின்ற நிலைப்பாடு இன்ஷா அல்லாஹ்.

அதே நேரத்தில் எனது ஆய்வின் முடிவை யார் கலந்துரையாட விரும்பினாலும் அது யாராக இருந்தாலும் நான் தயாராகவும் இருக்கின்றேன். (எந்தக் கலந்துரையாடலாயினும் அது வீடியோப்பதிவு செய்யப்படுவதையே நான் விரும்புகின்றேன்.)அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவிற்கு எனது ஆய்வுகள் முரண்படக்கூடாது என்பதுதான் எனக்கு முக்கியமே தவிர வேறு எவரோடு முரண்பட்டாலும் அந்த முரண்பாடுகள் ஐம்பதல்ல ஐந்நூறாக இருந்தாலும் அதுபற்றி எனக்கு கவலைகிடையாது; நான் கவலைப்படவும் கூடாது.

கடைசியாக, நான் இரண்டு முகத்தோடு நடந்ததாக மௌலவி பீ.ஜே அவர்கள் குறிப்பிடும் அனைத்தும் தவறான செய்திகள் என்பதையும் அதற்கு சில பொய்யர்களின் தகவலைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடையாது என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

நான் மிகவும் வேதனைப்படுகின்ற விடயம் எனக்கும் மௌலிவ பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்குமிடையில் இருந்த ஓர் அறிவுப்பூர்வமான நற்புறவு இதுபோன்ற வதந்திகளால் சிதைக்கப்பட்டதுதான். இந்த நிகழ்வு எனது நிலையிலுள்ள ஒரு மாணவனுக்கு துரதிஷ்டமே. ஆனாலும் அல்லாஹ் நாடியவைகளே இவ்வுலகில் நடக்கும்.

இறுதியாக, மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த விரும்புகிறேன், மார்க்கப் பிரச்சினைகளின் பொழுது அல்குர்ஆனையும் ஸுன்னாவையும்

01. உளத்தூய்மையோடும்.

02. உரிய முயற்சியோடும்.

03. சரியான அடிப்படைகளோடும் அணுகுவேன். எந்த முடிவை அல்குர்ஆனும் ஸுன்னாவும் சொல்கிறதோ அந்தக் கருத்தை நபித்தோழர்கள் சொல்லியிருக்கிறார்களா? எந்த ஜமாஅத்தாவது சொல்கிறதா? என்றோ அல்பானி, உஸைமின், பீ.ஜே போன்ற அறிஞர்கள் சொல்கிறார்களா? என்றோ பார்க்கமாட்டேன்.

இதுவே எனது இன்று வரைக்கும் உள்ள நிலைப்பாடு என்றும் இருக்கப் போகின்ற நிலைப்பாடு இன்ஷா அல்லாஹ்.

இறுதி வரைக்கும் அல்லாஹ் சொல்வதும் அவனது தூதர் சொல்வதுமே மார்க்கம் என்ற முடிவில், உறுதியோடு மரணிக்க எனக்கும் உங்களுக்கும் பிரார்த்தித்த வண்ணம் இம்மடலை நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு

முஜாஹித் இப்னு ரஸீன்,

9 Responses to “ஒரு விமர்சன ஓடியோ சீடி பற்றிய விளக்கம்”

 1. Muslim says:

  Allah Ugalukku Arulpuriwanaha >>>>>>>>>

 2. rikaz says:

  assalamu alaikum
  ungalukku rasmin m.i.sc avargal oru maruppu poddu ullagr nengal azatku maruppu podungal plz… abbas ali book ku ku maruppu eluzalame???avar azai kettu ullar…plz do it

 3. raizdeen says:

  அஸ்ஸலாமு அலைக்கும்

  என்ன பெரிசா sltj இல் சம்பளம் வாங்கல்லன்னு பீற்றிக்கொல்றீங்க ? sltj இல் இருந்ததனால்தான் சகோதரர் izni இடம் கணக்கு வழக்கு இல்லாமல் பணம் வாங்க முடித்தது .மறந்துட்டீன்களோ ? அதை இல்லை என்று அவரிடம் மறுக்க முடியுமா? எத்தனை பேரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் நம்பிக்கை துரோகம் செய்திருப்பீங்க ? பயான் பண்ணினால் மட்டும் போதாது நடை முறை படுத்தனும் .எத்தனை பேருக்கு வாக்கு கொடுத்து ஏமாற்றி இருப்பீங்க ?கவனம் ! என்றாவது ஒருநாள் இதற்காக உங்க சுப்பாவை பிடித்து கேட்கத்தான் போறாங்க ,, பாருங்க

  • mujahidsrilanki says:

   WALAIKUMUSSALAM

   சகோதரர் ரிஸ்னி அன்றோ இன்றோ எஸ் எல் டி ஜே யின் உருப்பினரோ நிர்வாகியோ கிடையாது. இன்னும் சொல்லப் போனால் உமர் சரீபை இலங்கை கொண்டு வர முய்சித்ததற்காக இவரை ஆதரவாளர் வட்டத்தில் கூட வைக்கக் கூடாது என்ற பேச்சு வார்த்தைகள் அப்பொழுது எஸ் எல் டி ஜேயில் நடைபெற்றன. ஆதலால் எஸ் எல் டி ஜே யினரிடமிருந்து ஒரு பைசா கூட நான் ஊதியம் வாங்கவில்லை என்பதுதான் உண்மை. பலர் ஊதியம் பெறும் பிரச்சாரகராக இருந்தால்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற வகையில் எல்லாம் பேச்சு வார்த்தை நடத்தியும் . பயன்படுத்துவதும் விடுவதும் உங்களைப் பொறுத்தது. ஆனால் எனது நிலைப்பாடு இதுதான் என உறுதியாக இருந்தது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏன் எஸ் எல் டி ஜே என்னைப் பயன்படுத்துவதிலிருந்து ஒதுங்கியும் சகோதரர் ரிஸ்னி எனக்கு மாதாந்தக் கொடுப்பனவு தரத் தயாராகவே இருந்தார். நான்தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு வேண்டாம் என்று மறுத்தேன். இது எஸ் எல் டி ஜேயின் இன்றைய சில உருப்பினர்களுக்கும் தெரியும். எஸ எல் டி ஜேயிலே நான் 4 அரை வருடங்கள் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளேன். அக்கால கட்டத்தில் நான் எதனையும் ஊதியமாக சகோதரர் ரிஸ்னியிடமிருந்தோ வேறு எவரிடமிருந்தோ பெற்றதில்லை. மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டு அங்கு 1 வருடங்கள் படிப்பித்த காலத்தில் எனக்கு அவராக முன் வந்து மாதாந்த ஊதியம் ஒன்றைத் தந்தார். அதைப் பெற்று வந்தேன். அதுவும் எஸ் எல் டி ஜே ஊடாகத்தான் வர வேண்டும் என்று ஆலோசிக்கப்பட் பொழுது அப்படி நடக்குமாயின் எனக்கு வேண்டாமென்றேன் என்பது அவர்களுக்கு நன்றாக வே தெரியம். இதில் இன்னும் விவரங்கள் தேவைப்படின் ஆதாரங்களுடன் விரிவாக எழுதுவேன் இன்சா அல்லாஹ். கணக்கு வழக்கில்லாமல் நான் எதனையும் எடுக்கவில்லை. ஆனால் சகோதரர் ரிஸ்னி ஒரு சிறந்த தர்ம உணர்வுள்ளவர் என்பதை நான் எங்கும் மறுக்க மாட்டேன். கடனெடுத்து விட்டுக் கொடுக்காமல் இருப்பதாய் சொல்லியுள்ளீர்கள். யாருக்கு எவ்வளவு என்று சொன்னால் உங்கள் வழியாகவே விபரமறிந்து ஒப்படைக்கத் தயாராக இருக்கிறேன். நானறிந்த வகையில் எனது சில நெருங்கிய நண்பர்களுக்குத் தவிர அவ்வாறான கடன்கள் எனக்கு இல்லை. விபரம் குறிப்பிட்டால் கணக்குத் தீர்க்கலாம் இன்சh அல்லாஹ்

  • saneej says:

   sltj சம்பத்தப்பட்ட விடயம் கூறினீர்கள். கூறிய விதம் அசிங்கமாக இருந்தாலும், பதில் கூற வேண்டிய கடமை முஜாஹித் சகோதரருக்கு உண்டு. personalஆக வாங்கிய கடன் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்தாலும் இப்படி pubilcஆ கூறுவது சரியா? அவரைத் திருத்துவது நோக்கமாக இருந்தால் தனிப்பட்ட முறையில் அவருடன் தொடர்பு கொண்டு சொல்லி இருக்கலாமே! கேட்கவில்லையா? தீர்ப்பை அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள். எங்கு என் சகோதரனே ரசூலுல்லாஹ் நமக்குக் காட்டித் தந்த நற்பழக்கம்? மனதுக்கு கவலையாக இருக்கிறது. கொள்கை பேசிக்கொண்டு… பிழை விடுவது நீங்களாக இருந்தாலும் என்னால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. ஏன் என்றால் கொள்கை வாதிகளை நான் அவ்வளவு நேசிக்கிறேன். தெரியாமல் தான் கேட்கிறேன் sltj சகோதரர்களின் குறைகளைத் தான் மறைப்பீர்களா? அவர்களுடன் மாத்திரம் தான் நேசமாக நடப்பீர்களா? உங்கள் குறைகளை அல்லாஹ் மறுமை நாளில் மறைப்பதை நீங்கள் விரும்பவில்லையா? அவர் பிரச்சாரத்துடன் நின்று விடுகிறார் செயலில் இல்லை என்றால், அதை அல்லாஹ்விடம் விட்டு விடுங்களே! நீங்கள் ஏன் தீர்ப்பு சொல்லப் போகிறீர்கள்? ரசூலுல்லஹ்விடம் இருந்த நட்பழக்கங்களை நாம் எப்போது உள்வாங்குவது? tntj மாதிரி எப்போது dawah வில் தடம் பதிப்பது? நமது பண்பு மற்றவர்கள் நம்மைப் பார்த்து ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டாமா? ஈர்ப்பதற்காக இஸ்லாத்தை விட்டு விடச் சொல்லவில்ல. இஸ்லாம், ரசூலுல்லாஹ் சொன்னதை- செய்ததை செய்யலாமே! உங்களிடம் அமாநிதமாய் தூய இஸ்லாம் உள்ளது. அதை முடியுமான வரை எடுத்துச் சொல்ல இந்தப் பழக்கம் தடையாக இருக்காதா? கடினத் தன்மை வேண்டாம். அல்லாஹ் தனது தூதரிடத்தில் இருப்பதாக பாராட்டிக் கூறிய மென்மையான போக்கை கையாளுங்கள். இதை எனக்கும் உங்களுக்குமாய் கூறிக் கொள்கிறேன். இதை சகோதரர் முஜாஹிதுக்கு வக்காளத்து வாங்க சொல்லவில்லை. உங்களில் கொண்ட நேசத்திலும் நம்மனைவருக்கும் ஞாபகமூட்டலுக்குமாக சொன்னேன். தனி மனித வெறுப்பு நம்மை வழிகேட்டின் பக்கம் இட்டுச் செல்லாதிருக்க அல்லாஹ் நம்மைக் காத்தருளுவானாக.

 4. ziyak says:

  சகோதரர் முஜாஹித்
  சலாம் அலைக்கும்
  குரான் ஹதீசை சொல்ல வேன்டிய நாமே பிலவு பட்டால் மக்கலுக்கு சத்தியத்தை சொல்வது யார்?

 5. ahamed says:

  Ungalai Patri Puram Pesi Ungalaku Adhiga Nanmaihalai petru tharum PJ&TNTJ virku Nanri Solungal……

 6. பாரித் says:

  //சரியான அடிப்படைகளோடும் அணுகுவேன். எந்த முடிவை அல்குர்ஆனும் ஸுன்னாவும் சொல்கிறதோ அந்தக் கருத்தை நபித்தோழர்கள் சொல்லியிருக்கிறார்களா? எந்த ஜமாஅத்தாவது சொல்கிறதா? என்றோ அல்பானி, உஸைமின், பீ.ஜே போன்ற அறிஞர்கள் சொல்கிறார்களா? என்றோ பார்க்கமாட்டேன்.//

  இதுவே சரியான அணுகு முறை ,குரான் -ஹதீஸுக்கு
  மாற்றமாக எந்த அறிஞர் கருத்தோ ,முடிவோ சொன்னால் அது குப்பைக்கு சமம்தான்….

 7. abdul rasheed says:

  assalamu alaikum
  ungalukku rasmin m.i.sc avargal oru maruppu poddu ullagr nengal azatku maruppu podungal plz… abbas ali book ku ku maruppu eluzalame???avar azai kettu ullar…plz do it