கலிமாவிற்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் .1

Post by mujahidsrilanki 4 October 2011 கட்டுரைகள், கொள்கை

லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்துக்கு ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறுயாரும் இல்லை’ என்று தமிழில் கருத்துக் கூறலாம். மக்கத்து காபிர்கள் சூரியன், சந்திரன், கல், மனிதர்கள் போன்றவற்றையெல்லாம் கடவுளாக ஏற்றிருந்தனர். உண்மையில் இவைகள் கடவுளல்ல. கடவுள் தன்மைக்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.  அல்லாஹ்வின் படைப்புக்கள் கடவுள்களாக வணங்கப்பட்டாலும் அவை வணங்கத் தகுதியானவைகளல்ல. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்பதையே இக்கலிமா நமக்குணர்த்துகின்றது. எனவே ‘வணங்கப்படுபவன் அல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லலை’ என்று கலிமாவுக்கு  நாம் விளக்கம் சொல்லக் கூடாது ‘வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை’ என்றுதான் அதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டும். இது மொழி பெயர்ப்பு சம்பந்தமான ஒரு சிறு விளக்கம். முஸ்லிம் சமூகம் கலிமதுத் தவ்ஹீதை முழுமையாக ஏற்றிருந்தாலும் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு விதமாக விளக்கம் சொல்வதைப் பார்க்கிறோம். விளக்கமாகச் சொல்வதென்றால் அந்த விளக்கங்களிடப்படையில்தான் அந்த ஜமாஅத்துக்களே உருவாகியுள்ளன. அதில் பிரதானமான இரண்டு தவறான விளக்கங்களை தெளிவுபடுத்துவதே இவ்வெழுத்தின் நோக்கம் .

   தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் கலிமாவுக்கு தவறான விளக்கங்களை வழங்கி தமது பிரசாரத்தில் அடிப்படையாகவே அதைப் போதித்து வருவதைக் காண்கிறோம். அவர்களது பயான் நிகழ்ச்சிகளைப் கேட்கும்  போது ‘அல்லாஹ்வால்தான் அனைத்தும் நடைபெறுகின்றது. நமது பார்வைக்கு சிலது சிலவற்றுக்குக் காரணமாக அமைவதாய் தெரிந்தாலும் அல்லாஹ்வால்தான் அதுவும் நடைபெறுகின்றது. அல்லாஹ்வால்தான் அனைத்தும் நடைபெறுகின்றது என்ற இக்கலிமாவைப் பிரசாரம் செய்யவே நபியவர்கள் இவ்வுலகுக்கு வந்தார்கள்…..’ என்று அவர்கள் பேசுவார்கள். தம்மோடு சேர்ந்து பணியாற்ற பிறரை அவர்கள் அழைக்கும் போது ‘உங்களது உழைப்பால்தான் உங்கள் குடும்பம் வாழ்கின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். அது தவறு. அனைத்தும் அல்லாஹ்வால்தான் நடைபெறுகின்றது ஆகவே வெளிக்கிளம்பிச் செல்லுங்கள்….’ என்று கூறுவார்கள். இந்த விளக்கத்தைத்தான் கலிமாவின் விளக்கமாகச் சொல்வார்கள். இதைத் தவிர வேறெதனையும் அவர்கள் பேசுவதில்லை. பக்கத்திலே ஷிர்க் அரங்கேறும் அதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்கள்.கலிமாவின் விளக்கம் அதைத் தடைசெய்யாதது போன்று இருந்துவிடுவார்கள்.அதாவது சுருங்கக் கூறினால் ‘எல்லாமே அல்லாஹ்வால்தான் ஆகிறது வஸ்துக்களுக்கு எந்த சக்தியுமில்லை’ என்பதுவே அவர்கள் கலிமாவிற்குத் தரும் விளக்கம்

ஆனால் கலிமாவின் சரியான விளக்கம் இதுவல்ல. நபியவர்கள் இந்தக் கலிமாவை மக்கத்து காபிர்களிடம் முன்வைத்த போது அதை எதிர்க்கத் தூண்டிய விளக்கம் இதுவல்ல. அல்லாஹ்வைப் பற்றி மக்கத்துக் காபிர்கள் இந்த அளவை விட சற்றுக் கூடுதலாகவே நம்பியிருந்தார்கள்.தப்லீக் ஜமாஅத்தினர் கூறும் இந்த விளக்கத்தை ஏற்கனவே மக்கத்துக் காபிர்களும் ஏற்றிருந்தனர். இதைக் கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவாகக் கூறுகிறது.

(وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ ( العنكبوت61
வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். (அல்அன்கபூத் : 61)

மக்கத்துக் காபிர்கள் ஏற்கனவே ஏற்றிருந்த கொள்கையை நபியர்கள் பிரசாரம் செய்யவரவில்லை. அதற்கவசியமுமில்லை. அதற்காக ‘இவ்விளக்கம் பிழையானது, இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணானது’ என விளங்கிடலாது. இவ்விளக்கம் சரியானதுவே ஆனாலும் ‘எல்லாமே அல்லாஹ்வால்தான் ஆகிறது ‘என்று நம்புவதால் மாத்திரம் ஒருவர் இஸ்லாத்துக்குள் நுழைய முடியாது.

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ
أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ. العنكبوت: 63
வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவர்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை. (அல்அன்கபூத்: 63)

இன்னோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ     لقمان: 25
வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள் .(லுக்மான் : 25)

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِيَ اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ  الزمر: 38
‘வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!(அஸ்ஸுமர் : 38)

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ  الزخرف: 87  
அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? (அஸ்ஸுகுருப் : 87)

ஒரு காபிருடைய பிராத்தனையை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்

وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ  الأنفال: 32 
”அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையாக இருந்தால் எங்கள் மீது வானத்திலிருந்து கல் மழையைப் பொழியச் செய்வாயாக! அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவாயாக!” என்று அவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள்  (அல் அன்பால் : 32)

நபியவர்களுக்கெதிராகவே அல்லாஹ்விடம் பிராத்திக்குமளவுக்கு மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வை ஏற்றிருந்தனர் என்பதற்கு இது சான்றாக அமைகின்றது. மக்கத்துக் காபிர்களைப் பார்த்து அல்லாஹ் பின்வருமாறு கேட்கின்றான்.

وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُونَ إِلَّا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الْإِنْسَانُ كَفُورًا  الإسراء: 67
கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரைசேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.(இஸ்ரா : 67)

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது

قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ (31) فَذَلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ فَأَنَّى تُصْرَفُونَ  يونس: 31، 32 
‘வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும் பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும் உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!  அவனே உங்களின் உண்மை இறைவனாகிய அல்லாஹ். உண்மைக்குப் பின்னே வழி கேட்டைத் தவிர வேறு என்ன உள்ளது? எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?   (யூனுஸ் : 31,32)

மேலே நாம் பார்த்த இந்த வசனங்களனைத்தும் மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்தான் உலகைப் படைத்துப் பரிபாலிப்பவன் என்பதை ஏற்றிருந்தார்கள் என்பதை தெளிவாகச் சொல்கின்றன. ஆகவே இதைப் பிரசாரம் செய்வதற்காக நபிவயவர்கள் வந்திருக்க முடியாது என்பது உறுதியாகின்றது.

                                                                                                                                                                                                                (வளரும்)

4 Responses to “கலிமாவிற்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள் .1”

  1. Anfas says:

    Assalamu allaikum!
    Dear brother,i pity that you have not yet understood the truth behind Dawath Thablig and its value.I feel that u have jumped into conclusion only seeing through particular angle.
    Just because you have some translations of the holy Quran Do you think you know the true meaning behind these verses.The verses of the Quran are deep with meaning that you have to get help from Ulamas who have spent there whole life in getting to the meaning of them.
    May Allah protect people like you who lead geniune muslims to the wrong path.
    Make an effort to go in the path of Allah and understand and attain its blessings.
    Dawath thabliq is the path of hidayath for ignorant people like you.
    May All Mighty Allah grant you with hidayath and guide you in the straight path.

  2. hassan says:

    ………………………………………………(moderated by mujahidsrilanki)

    islaamiya counsiling = thabliqh jamaath

  3. hassan says:

    அப்படி நான் என்ன கூறிவிட்டேன் என தாங்கள் moderate செய்துள்ளீர்கள்…

    ஆபாச வார்த்தை இல்லாமல் அழகிய வார்த்தை கொண்டு எனது கருத்தை தெரிவித்துள்ளேன்.. ஏற்றுக்கொல்ல்வதும் மறுப்பதும் அன்பாசின் சுதந்திரம்..

  4. zaidh says:

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    தப்லீக் பற்றிய தங்களது பார்வை குறித்து எனது கருத்துக்களை தெரிவிக்கலாமென நினைக்கிறேன். தப்லீக் இயக்கத்தினர் கூறும் கலிமாவின் அர்த்தம் அது மட்டும் தான என எந்த தப்லீக்காரர்களும் அர்த்தத்தை சுருக்கவில்லை அதை சுருக்குவதற்கு அவர்களூக்கு அதிகாரமும் இல்லை. நபியவர்கள் எந்த கலிமாவை மக்கள் தங்களது நோக்கமாக கொள்ளவேண்டுமெனெ விரும்பினார்களோ அதே கலிமாவைத்த்தான் அதுவும் நபியவர்கள் கூறும் அர்த்தங்களோடே தங்களது வாழ்க்கையை நபியவர்களின் உம்மத்தினர் அனைவரும் வாழவேண்டும் என ஆரம்பிக்கப்பட்டது தான் தப்லீக். நபியவர்கள் நிராகரிப்பவர்கள், இணைவைப்பவர்களக்கு மத்தியில் தங்களது கட்டுரையில் காணூம் சரியான அர்த்தங்களோடு தாவத் கொடுத்தார்கள். தற்போது நீங்கள் நிற்கும் களம் வேறு சுமார் 80 வருடங்களுக்கு முன் இல்யாஸ் அவர்கள் இருந்த களம் வேறு , நபியவர்கள் சந்தித்த களம் வேறென கருதுகிறேன். தற்போது நீங்கள் இஸ்லாத்துடைய எந்த கருத்துக்களை எந்த முறையில், எப்படி, எப்போது முஸ்லிம்களுக்கு கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என திட்டமிட்டு செயல்படுகிறீர்களோ அதேமுறையில் தான் இல்யாஸ் அவர்கள் அவருடைய காலத்தில் முஸ்லிம்கள் எந்த நம்பிக்கையை உள்ளத்தில் கொண்டுவந்தால் அவர்களுடைய மறுமை உலத்திற்கு வெற்றியாக அமையும் என யோசித்து நீங்கள் கூறும் கலிமாவுடைய ( தவறான )அர்த்தங்களுடன் அவர் ஆரம்பித்திருக்கலாம். அதுவும் நீங்கள் கூறுவது போல் அதை தவறான அர்த்தம் என கூறுவது அபத்தம் என நினைக்கிறேன். தப்லீக்காரர்கள் கூறும் கலிமாவுடைய அர்த்தம் முழுமையானதல்ல என நீங்கள் கூறியிருந்தால் ஒரு நடுநிலைமையான கருத்தாக இருந்திருக்கும். தப்லீக்காரரகள் கூறும் கலிமாவுடைய அர்த்தத்த்தில் என்ன குறையுள்ளது ? அல்லாஹ்வைக் கொண்டுதான் எல்லாம் நடக்கிறது எனகூறுவதில் என்ன தவறு உள்ளது. எந்த அவ்லியாவைக்கொண்டும் எதுவும் நடப்பதில்லை, எந்த கப்ரைக்கொண்டும் நடப்பதில்லை, எந்த உலக வஸ்துக்களைக்கொண்டும் ஏதும் நடப்பதில்லை என்பதில் என்ன தவறு உள்ளது. ஈமான் என்பது தக்வா, தவக்குல், யகீன், இஹ்லாஸ், ஆகியவை அனைத்தும் கொண்டதே என்பது எனது கருத்து. ( தவறு இருந்தால் மன்னிக்கவும். நான் ஆலிம் அல்ல ). தற்போது முஸ்லிம்கள் நேரடியாக சிலையை வணங்காத்து விட்டாலும் ஏதோ ஒரு வகையில் சிறிய ஷிர்க்கில் மாட்டிக்கொண்டுள்ளனர். தற்போது உலகத்தில் ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கங்களும் அவரவர்கள் கூறும் கருத்துக்கள்தான் தற்போது முக்கியமானவை என்றும், அவரவர்கள் செயல்படும் முறைதான் சரியானது எனவும் வாதிடுகின்றனர் மற்றவர்களை சாடுகின்றனர். ஆனால் தப்லீக்கை முறைப்படுத்தும் பெரியார்கள் தப்லிகாரர்களுக்கு கூறும் அறிவுரையில் ” தப்லீக் மட்டும் தீனுடைய வேலை அல்ல, உலகத்தில் இயங்கும் எல்லா இஸ்லாமிய அமைப்பினர்களும் தினுடைய வேலையை எதோ ஒரு வகையில் தினுடைய வேலையைத்தான் செய்கின்றனர். அல்லாஹ் ஒவ்வொருவரிடமிருந்தும், தான் நாடும் வேலையை வாங்குகிறான் எனவே நீங்கள் மற்ற இயக்கித்தினரை குறைகூறாதீர்கள்.முடிந்தால் உதவி செய்யுங்கள்”என கூறுகிறார்களே தவிர ( இந்த அறிவுரைகள் நானே நேரில் கேட்டது ) இது மட்டும்தான் சொர்க்கத்திற்கு கூட்டிசெல்லும் வேலை என அவர்கள் கூறியதில்லை. உங்கள் பகுதியில் தப்லிக்காரர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இக்கட்டுரையை எழுத தூண்டியிருக்கலாம் என கருதுகிறேன். நீங்கள் தப்லீகாரர்கள் ஷிர்க் நடக்கும் இடங்களில் களிமாவுடைய தாவத் கொடுப்பதில்லை என கூறுகிறீகள். தர்காவுக்கு போவோர்களிடம் சண்டையிட்டு அவர்களிடம் கலிமாவை பற்றிய தாவத் கொடுக்கும் போது எந்த சாதாரண மனிதனும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டான். அவனிடம் நயமாக பள்ளி ஈமானுடைய பாக்கியத்தைப்பற்றியும், அது இல்லாவிட்டாலும் அல்லது அல்லாஹ்வுடன் இணையாக வேறு யாரை ஆக்கினாலும் இவ்வுலகிலும் மறுமையிலும் எவ்வளவு நஷ்டம் என உணரவைப்பதன் மூலமே முழுமையான ஈமானை அவனுக்குள் செலுத்தமுடியும் என நினைக்கிறேன். தவறு இருந்தால் அல்லாஹ்விற்காக மன்னிக்கவும்.

Derek MacKenzie Womens Jersey