Home »
கேள்விகள்
Admin : இஸ்லாம் பற்றிய கேள்விகளை மட்டும் இங்கு பதிவு செய்யவும் ! இத்தளம் அல்லது முஜாஹித் பின் ரஸீன் அவர்களைப்பற்றிய விமர்சனங்களை உங்கள் பகுதியில் பதிவு செய்யவும் !
பதில்கள் தாமதமானாலும் நேரம் அமையும் போது பதிவு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்
789 Comments
ASSALAMU ALAIKKUM,
IS THERE ANY HADEES TO DO SUBAH PRAYER TIME IN WHICH WE GOTUP?
அறியாமல் தூங்கி விடுதல் மறதி போன்ற ஞாயமான காரணங்களிற்கன்றி தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தை விட்டும் பிற்படுத்துவது பெறும் பாவமாகும். குறிப்பாக சுபஹ் தொழுகையில் அலட்சியப் போக்கு நிறையவே காணப்படுகிறது.தொழுகைக்கு எழும்ப வேண்டும் என்ற எந்தக் கவனமும் இன்றி தூங்கி விட்டு எழும்பிய நேரத்தில் தொழலாம் என்ற சாட்டுப் போக்கைச் சொல்லிக் கொண்டு தொழுகிறார்கள்.அவ்வாறு தொழுதவரின் கடமை நீங்கினாலும் தொழுகையின் ஆரம்ப நேரத்தை அலட்சியம் செய்த பெறும்பாவம் அவரை விட்டு நீங்காது.அறியாது ஒருவர் தூங்கி விடுவாராயின் அவர் விழித்த உடனேயே தொழுகையை நிறை வேற்ற வேண்டும்.அடுத்த நாளில் அத்தொழுகையை உரிய நேரத்திற்கு தொழ வேண்டும்.நபியவர்கள் கூறுகிறார்கள்.
صحيح مسلم للنيسابوري – 1594
“…………فَمَنْ فَعَلَ ذَلِكَ فَلْيُصَلِّهَا حِينَ يَنْتَبِهُ لَهَا فَإِذَا كَانَ الْغَدُ فَلْيُصَلِّهَا عِنْدَ وَقْتِهَا….”
“‘யார் அறியாமல் தூங்கி விடுகிறாரோ உணர்ந்தவுடன் அதனைத் தொழட்டும் அத்தொழுகையை வரும் நாளில் உரிய நேரத்திற்குத் தொழட்டும்.” முஸ்லிம்:1594
தவறுதலாக நடப்பதை வழமையாக்குவதை நபியவர்கள் இந்த ஹதீஸில் கண்டிக்கிறார்கள்.தவறுதலாக நடந்தால் அடுத்த நாள் அதில் கவனஞ் செலுத்த வேண்டும் என நபிகளார் இந்த ஹதீஸில் கட்டளை இடுகிறார்கள்.
அஸ்ஸலாமுஅ அழைக்கும்
நான் சில ஹதீஸ்களில் தொழக்கூடாத நேரங்களைபற்றி வாசித்துள்ளேன் , நபிகள் நாயகம் (ஸல்) அந்த நேரத்தில் தொழுவதை தடைசைதுள்ளனர்.
அந்த நேரங்களை சரியாக இத்தின இத்தின மணி நேரம் என்று சற்று விளக்க முடியுமா?
தொழுவதற்கு தடைசெய்யப்பட்ட நேரங்கள் 3 . பின்வரும் செய்தி முஸ்லிமில் 1996ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
صحيح مسلم للنيسابوري – 1966 – عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِىَّ يَقُولُ ثَلاَثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَنْهَانَا أَنْ نُصَلِّىَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ.
‘மூன்று நேரங்களில் தொழுவதையோ எம்மில் இறந்தவர்களை அடக்குவதையோ நபிகளார் தடை செய்தார்கள்.
1.சூரியன் உதயமாக ஆரம்பித்ததிலிருந்து (நில எல்லையிலிருந்து) உயரும் வரை
2.உச்சியில் இருக்கும் நேரத்தில் இருந்து சூரியன் சாயும் வரை
3.மறைவதற்காக சாய்ந்ததிலிருந்து (முழுமையாக) மறையும் வரை”.
இன்று அன்றாடக் கலண்டர்களில் தொழுகை நேரம் இடம் பெறும் பகுதியில் சூரியன் உதிக்க ஆரம்பிக்கும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நேரத்திலிருந்து 15 அல்லது 20 நிமிடங்கள் வரை தொழுவதைத் தவிர்க்க வேண்டும். அதே போன்று ழுஹருக்கு அதான் ஒளிப்பதற்கு முன்னர் உள்ள 10 அல்லது 15 நிமிடங்களிலும் தொழுவதைத் தவிர்க்க வேண்டும். மஃரிபின் அதானுக்கு முன்னுள்ள அரை மணி நேரங்களிலும் தொழுவதைத் தவிர்க்க வேண்டும். அன்னளவாகவே நேரங்களைக் குறிப்பிட முடியும். ஆனால் ஜும்ஆத்தினத்தில் மாத்திரம் உச்சியில் சூரியன் இருக்கும் நேரத்திலும் தொழுவதற்கு அனுமதி உண்டு என்பதை பின்வரும் ஹதீஸ் சொல்கிறது.
صحيح البخاري ـ 883 – عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى
‘வெள்ளிக்கிழமை நாளில் யார் குளித்து முடிந்தவரை சுத்தமாகி தனது எண்ணையிலிருந்து பூசி தனது வீட்டிலுள்ள வாசைன தடவி அங்கிருந்து வெளியேறி மஸ்ஜிதிற்கு வருகை தருகிறாரோ மஸ்ஜிதிலே இருவருக்கு மத்தியில் பிரிக்காமல் நடந்து சென்று தனக்கு எழுதப்பட்ட அளவு தொழுது.பின்னர் இமாம் உரை நிகழ்த்தும் போது மௌனமாகக் கேட்கிறாரோ அவரது இந்த ஜும்ஆவிற்கும் அடுத்த ஜும்ஆவிற்கும் இடைபட்ட காலத்தில் நடக்கும் தவறுகள் மன்னிக்கப்படும். என நபிகளார் கூறினார்கள். புகாரி 883
இந்த ஹதீஸில் இடம்பெறும் ‘ தனக்கு எழுதப்பட்ட அளவு தொழுது” என்ற வாசகம் இமாம் மின்பரில் ஏறும் வரை தொழலாம் என்பதைக் குறிக்கிறது.இமாம் மின்பரில் ஏறும் நேரத்தில்தான் அதான் சொல்லப்படும். இமாம் மின்பருக்கு ஏறும் முன்னுள்ள அந்த நேரத்தில் சூரியன் உச்சங் கொடுக்கும் நேரமும் அடங்கும் என்பதால் ஜும்ஆத் தினத்தில் மாத்திரம் இந்த நேரத்தில் தொழத் தடை இல்லை எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் இன்னும் விளங்கப்படுத்தப்பட வேண்டிய சில விதிவிலக்குகளும் உண்டு.
Jazakallahu Hairen!
But if we went to Magrib Jamath and there is time to say azan so can we pray Thahyathul Masjid?
அல்குர்ஆனில் டைனோஸர்களைப் பற்றி எதாவது வசன்ங்கள் உண்டா ?
சில தளங்களில் அல் குர்ஆன் 2:164, 31:10 எனும் வசனங்களில் வரும்
“dabbah”
எனும் அரபிச் சொல் இவற்றையே குறிக்கும் என வாதிடுகின்றன இதைப்பற்றி
கொன்ஞம் விளக்க முடியுமா ?
டைனோஸர் பற்றி குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்தவொரு வசனமும் கிடையாது.அதே நேரத்தில் டைனோஸர்கள் இருந்தன என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அதை நம்புவதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையும் கிடையாது. தாப்பா என்ற சொல் நகர்ந்து நடந்து செல்லும் ஒவ்வொரு உயிரையும் குறிக்கும்.
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ (6) [هود : 6
‘பூமியில் உள்ள ஒவ்வொரு உயிர்வாழிக்கும் உணவளிப்பதை இறைவன் பொறுப்பு……” ஹ{த்:6
இந்த வசனத்திலும் இது போன்று உள்ள ஏராளமான குர்ஆன் வசனங்களிலும் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் தாப்பா என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது டைனோஸரைக் குறிக்கும் என்று சொல்வது அறபு மொழி பற்றிய அறியாமை. டைனோஸர் என்ற ஒரு உயிர் வாழ்ந்திருந்தால் இந்த தாப்பா என்ற வார்த்தைக்குள் அதுவும் அடங்கும்.
وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82) [النمل : 82
எமது வார்த்தை அவர்கள் மீது நிகழும் போது பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் வெளிப்படுத்துவோம். எமது வார்த்தைகளை மனிதர்கள் நம்பாமல் இருந்தார்கள் என மனிதர்களோடு அது பேசும். நம்ல் 82
இந்த வசனத்தில் ஒரு பிராணி என்று அல்லாஹ் சொல்கிறானே தவிர அது பற்றிய விவரங்களைச் சொல்லவில்லை. ஆனால் அது டைனோஸர் போன்ற ஒரு மிருகம் அல்ல. காரணம் டைனோஸர் நம்பிக்கை பிரகாரம் அது ஏற்கனவே வாழந்து அழிந்து போன மிருக இனம். இந்தப் பிராணி மறுமை நாளின் பொழுதுதான் வெளியாகும். அடுத்தது உருவகித்துக் காட்டப்படும் டைனோஸரைப் பார்த்தால் வழிகேடு நேர்வழி பற்றிய தெளிவில் இருப்பது போன்று தெரியவில்லை.
this comment was post by a user named brother in our blogspot blog
http://mujahidsrilanki.blogspot.com/p/blog-page.html
அஸ்ஸலாமு அழைக்கும் முஜஹிட் அவர்களே,
1 . பெண்கள் தங்கம் அணிவது சம்பந்தமான ஹதீஸ்களை இலங்கையில் உள்ள சிலர்(உங்களைப்போன்ற) தவறாக விளன்கியுள்ளமை வேதனைக்குரியது, அதைனம்பவேண்டாம் என்றும் , அந்த ஹதீஸை தவறாக விளங்கியுள்ளனர் என்று சகோதரர் பீ, ஜே அவர்கள் அவரது onlinepj .com அந்த ஹடீசுகளை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார்.
சகோதரர் பீ,ஜே அவர்களின் விளக்கத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? அல்லது மறுப்பீர்களா?
இது என்ன விளக்கம் சொல்வதில் உள்ள சிக்கலா, போட்டியா?
2 . எவ்வாறான தங்க ஆபரணங்கள் பெண்கள் அணியமுடியும் என்பது பற்றி விளக்கமுடயுமா?
இந்தக் கேள்விக்கு ஒரு விரிவான பதில்தேவை. விரைவில் பதில் எழுதுவேன். இன்சா அல்லாஹ்
ஒரு குழந்தை பிறக்கும் போது அது ஆணா பெண்ணா என அறிய முடியாது என ஹதீஸ்க்ளில் உள்ளது ஆனால்
இப்போது நவீன மருத்துவ முறைகளை கையாண்டு க
XY ஜீன்களை உபயோகித்து பிள்ளை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கும் பிறப்பை தீர்மானிக்க முடியும்
என்று பல மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூருகின்ரனர் இது ஹதீஸுக்கு முரண் படுவது போல் உள்ளதே
தயவுசெய்து இதற்கான் விளக்க்த்தை தர முடியுமா ?
mujahidsrilanki reply:
பதிலைக் காண இங்கே க்ளிக் செய்யவும்
அஸ்ஸலாமு அழைக்கும் முஜாஹித் அவர்களே,
சென்ற ரமலான் காலத்தில் கஹட்டோவிட்ட தௌஹீத் பள்ளியில் ஒரு மௌலவி சொன்னார் 20 இரக்கத்து தராவீக் தொழுவது விபச்சாரம் சைய்வதைபோன்றது என்று இது முழு ஊருக்கும் கேட்கும் அளவுக்கு ஒலிவாங்கி மூலம் சொல்லப்பட்டது .
அவர் சொன்ன கருத்து சரியானதா? அல்லது தெரியாமல் சொல்லிவிட்டாரா?
சரியாயின் குரானிலோ, அல்லது ஹதீஸிலோ 20 ரக்காத் தராவீக் தொழுவது விபச்சாரம் சைய்வதைப்போன்றது என்பததட்கு ஆதாரம் உண்டா?
அவ்வாறு அவர் பிழையாக சொல்லி இருந்தால் , ஊர் அறிய ஒலிவாங்கி மூலம் மன்னிப்புகேட்பது ஒரு மார்க்கப் போதகரின் கடமை அல்லவா?
mujahidsrilanki reply:
ஆம் நீங்கள் சொன்னது போன்று குர்ஆனிலோ சுன்னாவிலோ அவ்வாறு சொல்வதற்கு ஆதாரம் இல்லை. இதுவே எமது நிலைப்பாடு. ஆனால் பேசிய மௌலவி அதில் என்ன நிலைப்பாட்டில் உள்ளார் தவறாயின் வாபஸ் வாங்கவேண்டும் போன்ற விவரங்களைத் தெரிய தெரியப்படுத்த கஹடோவி தௌஹீத் பள்ளிவாயல் நிருவாகத்துடன் தொடர்புகொள்ளுங்கள்
அஸ்ஸலாமுஅலைக்கும்
பித்ஹத்கள் செய்கின்றவர்கள் நரகத்தை சுவைத்தே ஆக வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கூறிவருகின்றது.
ஆனால் நாம் இஸ்லாத்தின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்மஹ்விட்க்கு இரண்டு அதான்களை தோற்றுவித்துள்ளார்.
இந்த செயல் ரசூலுள்ளஹ்வின் காலத்தில் நடைமுறையில் இருக்கவில்லை. ஆக உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பித்ஹாவை செய்துள்ளார்.
இவரை பற்றி உங்களுடைய தீர்ப்பு என்ன?
mujahidsrilanki reply:
உஸ்மான் ரழியல்லாஹ் அன்ஹ் அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டு அதான் ஏற்படுத்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஜுமஆவிற்கு நேரகாலத்தோடு மக்களை வரவைப்பதற்காக சந்தையில் ஒரு அறிவிப்புச் செய்தார்கள். என்றே வந்துள்ளது. இது அல்லாமல் முதல் அதான் போன்று இன்னொரு அதானை ஏற்படுத்தினார்கள் என்பதற்கு ஆதாரம் இருந்தால் கேட்டுத்தாருங்கள் ஆய்வுக் குற்படுத்தலாம். இன்சா அல்லாஹ்.
உஸ்மான் (ரலி) மக்கள் ஜும்மஹ்விட்க்கு நேர காலத்தோடு வருவதற்க்கு தான் இதை நடைமுறை செய்தார் என நீங்கள் மேலே குறிப்பிட்டிருந்தீர்கள்.
எப்படியானாலும் இது நபிவளியாகுமா ? ஆகாதா? இது பித்ஹாவா அல்லது சுன்னத்தா?
mujahidsrilanki reply:
ஜும்ஆவிற்கு நேரகாலத்தோடு மக்களை வரவைப்பதற்காக சந்தையில் ஒரு அறிவிப்புச் செய்தார்கள். என்று மாத்திரம் நான் குறிப்பிடவில்லை. அதனோடு உஸ்மான் ரழியல்லாஹ் அன்ஹ் அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டு அதான் ஏற்படுத்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. என்றும் குறிப்பிட்டேன். மார்க்கஞ் சொல்லித்தராத ஒரு அழைப்பு முறையை யார் ஏற்படுத்துகிறார்களோ அது மார்க்கத்தின் பெயரால் நடைபெறுவதால் பித்அத்தாக மாறிவிடும். சந்தைகளில் நேரமாகிவிட்டது பள்ளிக்குச் செல்லுங்கள் என்று ஒரு அறிவிப்பு செய்வதில் எந்தத் தவறும் கிடையாது. நபிகளாரும் நபித்தோழர் உஸ்மானும் செய்யாத ஒரு காரியத்தைத்தான் இந்த மக்கள் செய்கிறார்கள். அதுதான் பித்அத் என நாம் கூறி வருகிறோம். நபியவர்கள் காட்டித்தராத ஒன்றை உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் செய்தாலும் அதுவும் பித்அத்தான். ஆனால் அவர் அவ்வாறு அதான் விடயத்தில் நடந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை.
assalamu alaikum,en kelvi nan USA le irukkiren..ennuden oru different nation argue panraru EESA NABI irakkep paduwaar enbadhuku Quraanil aadharem illei enrum,bible il thaan adhu kurippide pattuledhu enrum,Imam mahdhi warwaar enbadhu wadhandhi enrum kooruhirar andhe nafer,,,,inshallah mudiyum enral enaku idhu patri theliwaahe wilangi paduthe mudiyuma…jazakellah
walaikumussalam
ஈஸா அலைஹிஸ்ஸலாம் கொல்லப்படலுமில்லை. சிலுவையில் அறையப்படவுமில்லை. உயிரோடும் உடலோடும் அல்லாஹ் தன்பக்கம் உயர்த்திக் கொண்டார். மறுமைநாள் நெருங்கும்போது அதன் அடையாளமாக அவர் இறங்குவார். இந்த அனைத்து நம்பிக்கைகளும் அல்குர்ஆனிலே நேரடியாகச் சொல்லப்பட்டவைகள்.
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا (157) بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (158) وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا (159) ஜالنساء : 157 – 159
‘அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறியதாலும்(இறைவன் முத்திரையிட்டான் ). அவரை அவர்கள் கொல்லவுமில்லை அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக அவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாக கொல்லவில்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர்(ஈஸா) மரணிப்பதற்கு முன் அவரை ஈமான் கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார். நிஸா: 157..159
وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ (61) ஜالزخرف : 61
‘அவர் (ஈஸா) அந்த மறுமை நாளின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர். என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேர்வழி (எனக் கூறுவீராக). ஸ{க்ருப்: 61
ஈஸா அலைஹிஸ்ஸலாம் மரணிப்பதற்கு முன்னர் வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவரை ஈமான் கொள்ளுவார்கள் என்ற வார்த்தை ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பதையும் அவர் வரும்போது அவரைக்கானும் வேதக்காரர்கள் அரை ஈமான்கொள்வார்கள் என்பதையும் தெளிவாக நேரடியாகச் சொல்கிறது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் மறுமை நாளின் அடையாளமென்ற வார்த்தையும் அவர் உலக அழிவு நெருங்குவதற்கு அடையாளமென்பதை உணர்த்துகிறது. இதுவன்றி நபியவர்கள் பல செய்திகளைப் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள். எனவே ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவது பற்றி குர்ஆனில் இல்லை பைபிளில்தான் வந்திருக்கிறது என்று அவர் அறியாமல் சொல்லியிருக்கலாம். இவைகளை அவருக்கு சொல்லிக்கொடுங்கள் தெளிவடையலாம்.
மஹ்தியைப் பற்றி பல ஹதீஸ்கள் உள்ளன. அதில் ஆதாரப் பூர்வமானவைகள் பலஹீனமானவைகள் இட்டுக்கட்டப்பட்டவைகள் என பல தரங்கள் கொண்ட ஹதீஸ்களைப் பார்க்கிறோம். பின்வருங் கட்டுரையை வாசியுங்கள். மேலதிக விவரங்கள் தேவைப்படின் எழுதுங்கள்.
http://www.mujahidsrilanki.com/2010/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/
அஸ்ஸலாமு அழைக்கும் முஜஹிட் அவர்களே.
உடம்பை புண்படுத்தும் வகையான தங்க ஆபரணங்களை (காதுப்பூ, மூக்குத்தி,அருங்கோல் ….) அணிவது இஸ்லாத்தில் கூடுமா , கூடாதா?
Walaikumussalam
இந்தக் கேள்விக்கு ஒரு விரிவான பதில்தேவை. விரைவில் பதில் எழுதுவேன். இன்சா அல்லாஹ்
இரவுத் தொழுகையை நபியவர்கள் ரமழானிலோ ரமழான் அல்லாத காலங்களிலோ 11 மேல் அதிகரித்ததில்லை என்பது புகாரியில் இடம்பெறும் ஆதாரப்பூர்வமான தெளிவான செய்தி. இதற்கு மாற்றமாக 13க்கோ அதற்கு மேற்பட்டதிற்கோ ஹதீஸ்கள் இருந்தால் எழுதுங்கள் இன்சா அல்லாஹ் அது பற்றி ஆய்வு செய்யலாம். நாம் அறிந்தவகையில் அவ்வாறு ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.
الحاوي للفتاوي للسيوطي – (2 17)
وقال الجوري من أصحابنا عن مالك أنه قال الذي جمع عليه الناس عمر بن الخطاب أحب إلي وهو إحدى عشرة ركعة وهي صلاة رسول الله صلى الله عليه وسلم قيل له إحدى عشرة ركعة بالوتر قال نعم وثلث عشرة قريب قال ولا أدري من أين أحدث هذا الركوع الكثير
1.
‘உமர் ஜமாஅத்தாக தொழ ஏற்பாடு செய்த 11 ரக்அத்துக்களே எனக்கு விருப்பமானது அதுவே நபியவர்களின் தொழுகை. என இமாம் மாலிக் கூறினார்கள். அப்பொழுது ‘வித்ரோடும் சேர்த்தா 11 என வினவப்பட்ட போது ‘ஆம் 13 ம் ஓரளவு நெருக்கமானதுதான் ஆனால் இன்று தொழுமளவிலுள்ள இந்த புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிக ரக்அத்கள் எங்கிருந்து உருவாகின என தெரியவில்லை” என பதிலளித்தார்கள்.”
ஸலாதுத்தராவீஹ் லிஸ்ஸ{யூதி(அல்ஹாவி:2.17
2.
والصحيح : أن يصلي إحدى عشرة ركعة : صلاة النبي عليه السلام وقيامه فأما غير ذلك ن الأعدد فلا أصل له ولا حد فيه . فإذا لم يكن بد من الحد فما كان النبي عليه السلام يصلي . ما زاد النبي عليه السلام في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة . وهذه الصلاة هي قيام الليل فوجب أن يقتدى فيها بالنبي عليه السلام
‘நபியவர்கள் இரவிலே 11க்கு மேல் அதிகப்படுத்தவில்லை எனவே இவ்விடயத்தில் நபியவர்களின் எண்ணிக்கையைப் பின்பற்றுவது கடமையாகும்” என இமாம் இப்னுல் அரபி கூறுகிறார் (சரஹத் திர்மிதீ
3.
سبل السلام – (2 266)
( وَاعْلَمْ ) أَنَّ مَنْ أَثْبَتَ صَلَاةَ التَّرَاوِيحِ وَجَعَلَهَا سُنَّةً فِي قِيَامِ رَمَضَانَ اسْتَدَلَّ بِهَذَا الْحَدِيثِ عَلَى ذَلِكَ وَلَيْسَ فِيهِ دَلِيلٌ عَلَى كَيْفِيَّةِ مَا يَفْعَلُونَهُ وَلَا كَمِيَّتِهِ فَإِنَّهُمْ يُصَلُّونَهَا جَمَاعَةً عِشْرِينَ يَتَرَوَّحُونَ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ .
فَأَمَّا الْجَمَاعَةُ فَإِنَّ عُمَرَ أَوَّلُ مَنْ جَمَعَهُمْ عَلَى إمَامٍ مُعَيَّنٍ وَقَالَ ” إنَّهَا بِدْعَةٌ ” كَمَا أَخْرَجَهُ مُسْلِمٌ فِي صَحِيحِهِ وَأَخْرَجَهُ غَيْرُهُ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ ” أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُرَغِّبُهُمْ فِي قِيَامِ رَمَضَانَ مِنْ غَيْرِ أَنْ يَأْمُرَهُمْ فِيهِ بِعَزِيمَةٍ فَيَقُولُ مَنْ قَامَ رَمَضَانَ إيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ قَالَ وَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَالْأَمْرُ عَلَى ذَلِكَ وَفِي خِلَافَةِ أَبِي بَكْرٍ وَصَدْرٍ مِنْ خِلَافَةِ عُمَرَ ” زَادَ فِي رِوَايَةٍ عِنْدَ الْبَيْهَقِيّ ” قَالَ عُرْوَةُ فَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ الْقَارِيّ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ لَيْلَةً فَطَافَ فِي رَمَضَانَ فِي الْمَسْجِدِ وَأَهْلُ الْمَسْجِدِ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ وَاَللَّهِ لَأَظُنُّ لَوْ جَمَعْنَاهُمْ عَلَى قَارِئٍ وَاحِدٍ فَأَمَرَ أُبَيَّ بْنَ كَعْبٍ أَنْ يَقُومَ بِهِمْ فِي رَمَضَانَ فَخَرَجَ عُمَرُ وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاتِهِ فَقَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِهِ ” وَسَاقَ الْبَيْهَقِيُّ فِي السُّنَنِ عِدَّةَ رِوَايَاتٍ فِي هَذَا الْمَعْنَى .وَاعْلَمْ أَنَّهُ يَتَعَيَّنُ حَمْلُ قَوْلِهِ بِدْعَةٌ عَلَى جَمْعِهِ لَهُمْ عَلَى مُعَيَّنٍ ، وَإِلْزَامِهِمْ بِذَلِكَ لَا أَنَّهُ أَرَادَ أَنَّ الْجَمَاعَةَ بِدْعَةٌ فَإِنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَمَعَ بِهِمْ كَمَا عَرَفْت .إذَا عَرَفْت هَذَا عَرَفْت أَنَّ عُمَرَ هُوَ الَّذِي جَعَلَهَا جَمَاعَةً عَلَى مُعَيَّنٍ وَسَمَّاهَا بِدْعَةً وَأَمَّا قَوْلُهُ ” نِعْمَ الْبِدْعَةُ ” فَلَيْسَ فِي الْبِدْعَةِ مَا يُمْدَحُ بَلْ كُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ .وَأَمَّا الْكَمِّيَّةُ وَهِيَ جَعْلُهَا عِشْرِينَ رَكْعَةً فَلَيْسَ فِيهِ حَدِيثٍ مَرْفُوعٍ إلَّا مَا رَوَاهُ عَبْدُ بْنُ حُمَيْدٍ………………”
‘இன்று தராவீஹ் தொழும் முறைக்கு எந்த ஆதாரமும் கிடையாது. 11க்கு மேல் அதிகரிப்பது பித்ஆத்தாகும்” என இமாம் ஸன்ஆனி தனது நூலிலே தெளிவாக விளங்கப்படுத்தி எழுதியுள்ளார். (ஸ{புலுஸ்ஸலாம்2:267
ஆக எமக்கு முன் சென்ற 3 இமாம்களது கூற்றுக்களை உங்களக்கு ஆறுதலாகக் குறிப்பிட்டுள்ளோம். நபியவர்களோடு வாழ்ந்த இமாம் ஆயிசா ரழியல்லாஹ{ அன்ஹா அவர்கள் 11க்கு மேல் தொழவில்லை என மறுக்கிறார்கள.; மொத்தமாக 4கு இமாம்களைக் எடுத்துக்காட்டிற்காய் 4 இமாம்களைக் குறிப்பிட்டுள்ளோம். எதுவாயினும் வழிகளில் சிறந்தது நபியவர்களின் வழியே.
assalamualaikum sheikh mujahid
I read an article on zakir naik in Multaqa ahl-al-hadeeth saying that he has some mistakes. Even I have heard you saying that zakir naik has mistakes. you told these things in sltj at dematagoda in a wednesday class. so can you tell me the mistakes that he has with him?
ஆம் கொழும்பு புதன் கிழமைத் தொடர் வகுப்பிலே நான் அவ்வாறு சொன்னேன் அவைகள் அனைத்தும் அவர் பிரச்சாரஞ் செய்யக் கைளயாளும் முறைகளைப் பற்றிய அம்சங்கள். உதாரணமாக:
The similarity between hindusam and Islam என்ற உரையில் இந்து மத குரு பகவக் கீதையை வாசிக்கிறார் இவர்கள் குர்ஆன் ஓதி ஆரம்பிக்கிறார்கள். இது தவறு மேடை இஸ்லாமிய மேடையாக இருக்க வேண்டும் மார்க்க விடயங்களில் பகிர்வு நடக்கும் மேடைகளில் அமர்வது எட்ஜஸ்மன்ட் ஆகவே கருத வேண்டும். அவர் கருத்துக்களில் அவ்வாறு நடப்பது குறைவாக இருந்தாலும் இது போன்ற சில விடயங்கள் காணப்படுகின்றன.
அதுவன்றி அவரது பிரச்சாரம் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கு பாரிய பங்களிப்புச் செய்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. இது உங்களது கேள்விக்கான எனது சுருக்கமான பதிலாகும்
assalamu alaikum…neengel shiya kel patri peasiyulle link enaku anuppe mudiyuma???bcz nan ingu work panre edthule michem shiya people irukkange….ennode many times argue panraange…so i need more knoeldge about shiya kolhai….plz send the link..jazakellah
இஸ்லாமிய ஆட்சியில் ஷியாக்கள்
தஃவா அதாவது அல்லஹ்வின் பக்கம் அழைப்பு விடுப்பது எல்லா முஸ்லீமான் ஆண்கள் பெண்கள் மீதும் கடமையா ?
அல்லது இஸ்லாம் பற்றி நன்கு படித்த அறிந்தவர்கள் மீது அது கடமையா ?
ஒரு அரபி தெரியாத ஹதீஸ்களைப்பற்றி அரைகுறையாக தெரிந்த என்னைப் போல் ஒருவன் மீது அல்லஹ்வின் பக்கம் அழைப்பு விடுப்பது கடமையா ?
மார்க்கப் பிரச்சாரம் ஈமான் கொண்ட ஒவ்வொருவரினதும் கடமை.
صحيح البخاري ـ3461
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً
‘ஒரு என்னிடமிருந்து ஒரு வசனம்தான் நீங்கள் அறிந்திருந்தாலும் எத்திவையுங்கள்” புகாரி:3461
இங்கே நபியவர்கள் எத்திவைப்பவருக்கு சொல்லுபவருக்கு அது பற்றிய முழுமையான ஞானம் இருக்க வேண்டுமென்றோ பல வருட காலம் தன்னோடு இருந்தவர்கள்தான் சொல்ல வேண்டுமென்றோ நிபந்தினையிடவில்லை.
அதே நேரம் தனக்கு எது பற்றிய அறிவில்லையோ அது பற்றிப் பேசுவதையோ தர்க்கிப்பதையோ தவிர்க்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ (43) النحل : 43
‘நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்” நஹ்ல்: 43
இந்த இரண்டு விடயங்களோடு நாம் ஒரு கடமையைச் செய்கிறோம் என்ற உணர்வோடு இறைவனை அஞ்சிப் பிரச்சாரம் செய்யுங்கள். அல்லாஹ் நம்மனைவரது அமல்களையும் அங்கீகரிப்பானாக
First you said:
“but It looks like u and some extremist thowheed people
don’t care what the scholars say….
but u and ur group gives fatwa that more than 11, 13 bid’aa
isn’t that a little unfair
ஆரம்பத்தில் பின்வருமாறு சொன்னீர்கள்.
what scholars has said is wrong but what u tell is right ?
do u posses more knowledge than the scholars ???
this is like don’t follow imaams but follow me my views are correct !!!”
பின்னர் இவ்வாறு சொல்கிறீர்கள்.
“also many scholars also din refute this. some accepted some din therefore how can u tell that its only 11,13 not more than 11,13 ?”
இமாம்களைவ விட நீங்கள் பெரியவர்களா? நீங்கள் சொல்வதுதான் சரியா? ஒரு சில அறிஞர்களும் எம்மைப் போன்று கூறியுள்ளார்களே. அவர்களுக்கும் இந்தக் கேள்விகளைக் கேட்கலாமே என உணர்த்தியவுடன். இதில் இரு கருத்துக்கள் உள்ளன. இது பாதிஹா ஹிஜாப் பிரச்சினைகளைப் போல என இறங்கியுள்ளீர். முறையாக இந்த இடத்தலிருந்து கேள்வியை ஆரம்பித்திருக்கலாம்.
ஆம் நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். இன்சா அல்லாஹ் உங்கள் கேள்விக்கான பதிலை நாளை பதிவு செய்கிறேன் .
அஸ்ஸலாமு அலைக்கும்..
மௌலவி.முஜாஹித் அவர்களுக்கு
புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டுக்கு குடி புகும்போது, நாம் இஸ்லாத்தின் பார்வையில் என்ன நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஏதும் ஓதல்கள் இருக்கா?
வஸ்ஸலாம்,
ஸினான்….
புதிய வீட்டிற்கு நுழைதலுக்கும் ஏற்கனவே நாம் வாழும் வீட்டில் நுழைவதற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. புது வீட்டிற்கென நபியவர்கள் பிரத்தியேகமாக எதனையும் சொல்லித்தரவில்லை. பிஸ்மில்லாஹ் என்று வீட்டிற்குள் நுழைவதுதான் இஸ்லாம் எங்களுக்குச் சொன்ன வழிகாட்டல். புதுவீடு கட்டிப் போகின்றவர் விரும்பினால் தனது உறவினர்களை ஏழைகளை நண்பர்களை அழைத்து விருந்து ஏற்பாடு செய்வதிலும் தவறில்லை. இந்த ஒன்றுதான் புது வீடு என்பதற்கு பிரத்தியேக அனுமதி எனலாம். இது தவிற வேறு எந்த மார்க்கக் காரியங்களையும் எமக்குச் சொல்லவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
Assalamualaikum
nan oru veedu kattiyirukan adu yennudaiya devaiku adihamanadu edatku nan zakath kodukkanuma nan yennudaiya sontha veettukku zakath kodukkanuma
oruvar yedatku zakath kodukkanum velakkamaha sollavum pls adj
நீங்கள் வாழும் வீட்டிற்கோ உபரியாக வாங்கிய வீட்டிற்கோ ஸகாத் கிடையாது. அந்த வீட்டை வாங்கிய பணத்திற்கு பத்தரை பவ்ன் பெறுமதி இருந்தால் வாங்கும் முன் அப்பணத்திற்கு இரண்டரை வீதம் ஸகாத் கொடுத்திருக்க வேண்டும். கொடுத்திராது விட்டால் அந்த வீட்டின் பெறுமதிக்கு இரண்டரை வீதம் ஸகாத் கொடுக்க வேண்டும். அந்த வீட்டை வாடகைக்கு விட்டு முற்பணம் வாங்குவீர்களாயின் அதன் பெறுமதி பத்தரை பவ்ன் நகைக்கு ஈடாக இருந்தால் அதிலும் இரண்டரை வீதம் ஸகாத் கொடுக்க வேண்டும். இந்த இரு நிலையிலன்றி அந்த வீட்டிற்கு ஸகாத் கடமையில்லை. அப்படிச் சொல்பவர்கள் யூகமாக ஆதரமின்றியே பேசுகிறார்கள். நாம் சொன்ன இரு நிலையும் பணத்திற்கு ஸகாத் கடமை என்ற அடிப்படையை வைத்தே சொல்லியுள்ளோம். வீட்டிற்கு தனியாக ஒரு ஸகாத்தை நபியவர்கள் சொல்லவில்லை. ஒவ்வொரு பொருளுக்கும் ஸகாத் கடமையாக ஒரு அளவு உண்டு. ஸகாத்திற்கு ஒரு கணக்கு உண்டு. வீட்டிற்கு நபியவர்கள் ஸகாத் குறிப்பிடவுமில்லை. அளவு நிர்ணயிக்கவுமில்லை.
அஸ்ஸலாமு அழைக்கும்
1. நாம் தொழும்போது தக்பீர்கட்டிவிட்டு அல்ஹம்டு சூராவினைமாத்திரம் ஓதிவிட்டு ருகூவிற்கு செல்லமுடியுமா?
2. ருகூவில், சுjooதில், கட்டாயமாக ஓதவேண்டிய விடயம்கள் உண்ட?
3. அமர்வுகளில் கட்டாயமாக அத்தகியாத்து ஓதவேண்டுமா?
4. இவைகளில் கட்டாயமாக ஓதவேண்டியவிடயங்கள் இருந்தால் அவற்றை சொல்லுங்கள்?
5. அவ்வாறு கட்டாயமாக ஓதும் விடயங்கள் இருந்து அவற்றை ஓதத்தேரியாமல், ஓதாமல் தொழுதால் தொழுகை கூடுமா?
6. அவ்வாறு இருந்தால் நாம் அதனை பாடமாக்கவேண்டும் தானே?
w.salam
நபியவர்கள் தொழுகையை கற்றுத்தந்த ஹதீஸ்களை ஆய்வுசெய்தால் அதன் செயல்களை 3 தரங்களில் கற்றுத்தந்துள்ளார்கள். சிலவைகள் செய்யாது விட்டால் தொழுகையே கூடாது அல்லது ரக்அத் கூடாது என்ற தரத்தில் சொல்லித்தந்தவைகள். இன்னும் சில அம்சங்கள் செய்யாது விட்டால் குற்றம் எழுதப்படும் ஆனாலும் தொழுகை நிறைவேறும். இன்னும் சில அம்சங்கள் செய்தால் நன்மை ஆனால் விட்டால் குற்றங்கிடையாது.
அந்த நிலையில்தான் நாம் பாதிகாவிற்குப் பின்னால் ஓதும் சுறாக்களை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். நபியவர்கள் அவைகளை விட்டால் தொழுகை கிடையாது என எங்கும் சொல்லவில்லை. இந்த அடிப்படையில்
பாதிகா மாத்திரம் ஓதினால் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும் ஆனால் பின்னால் உள்ள சுறாக்களை விட்டதற்காக குற்றம் எழுதப்படும்.
சுஜுதில் துஆக்களை விட்டாலும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும் ஆனால் திக்ரை விட்ட குற்றம் எழுதப்படும்.
அத்தஹிய்யாத் ஓதுவது கடமை விட்டாலும் தொழுகை அங்கீகரிக்கப்படும் ஆனால் கடமையை விட்ட குற்றம் எழுதப்படும்.
ஆனால் இவைகள் அனைத்தையும் நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள் எனத் தெரிந்தும் சந்தர்ப்பங்கள் இருந்தும் தெரிந்திருந்தும் ஒருவர் விடுவாரானால் அது மிகப் பெரும்பாவமாகும். அல்லாஹ்மிக அறிந்தவன்.
அஸ்ஸலாமுஅலைக்கும்
இன்று கொள்கையை சொல்லக்கூடிய தௌஹீத் ஜமாத்தே பல பிரிவுகளாக பிரிந்து காணப்படுகின்றது. இந்த பிரிவினைக்கு என்ன காரணம்? இவ்வாறு பிரிவது சரி தானா?
மக்கள் சரியான கொள்கையில் இருக்க வேன்றுமென்றால் அவர் எந்த தௌஹீத் ஜமாஅத் சொல்லக்கூடிய கருத்தை ஏற்றுக்கொள்ள வேன்றும்? நாங்கள் சரிவர கொள்கையை பின்பற்ற வேன்றுமேண்டால்,
ஜமியதுஸ் ஷபாப், ACTJ, SLTJ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – இலங்கை
இந்த ஜமாஅத்களில் யாரு குரானுக்கும் ஹதீஸுக்கும் உற்பட்ட கருத்துகளை மக்கள் மத்தியில் கூறி வருகிறார்கள்? தயவுசெய்து இதை விளக்கவும்.
Walaikumussalam
எந்தப் பெயரில் யார் எத்தனை இயக்கமாக நிறுவனங்களாக இயங்கினாலும் அது இஸ்லாம் தடுக்கின்ற பிரிவாக மாறாது. என்ன அடிப்படையில் இயங்குகிறார்கள் எதைப் போதிக்கிறார்கள் என்பதை வைத்துத் தான் நாம் யாரையும் சரிகாண்பதோ பிழை காண்பதோ இருக்க வேண்டும். யார் குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக வைத்துப் பிரச்சாரம் செய்பவர்கள் என்பதைக் காண பெரிய ஆய்வுகள் தேவையில்லை. எனவே ஜமியதுஸ் ஷபாப், ACTJ, SLTJ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – இலங்கை சொன்னாலும் குர்ஆனை ஹதீஸை ஆதாரங்காட்டிப் பேசுகிறார்களா என்பதையும் அந்த ஆதாரங்களில் அவர்களின் கூற்றுக்கு ஆதாரம் உள்ளதா என்பதையும் மாத்திரம் அவதானித்து பின்பற்றுங்கள் . இதுவே நம்மால் சொல்ல முடிந்தது.
Assalamu Alikum!
Wiki pedia vil ‘Sunnihalin paarvayil Abu Huraira’ enra talipil oru hadees parthan, azu koottu duavukku aazaramaha irukkirazu endu nan nenaikkiren.
izo anda hadees (aangilatthil irukkuzu)
“”On reaching Madinah, Abu Hurayrah set his heart on attaining knowledge. Zayd ibn Thabit, the notable companion of the Prophet reported: ‘While Abu Hurayrah and I and another friend of mine were in the Masjid praying to God Almighty and performing dhikr to Him, the Messenger of God appeared. He came towards us and sat among us. We became silent and he said: “Carry on with what you were doing.’”
“So my friend and I made a supplication to God before Abu Hurayrah did and the Prophet began to say Ameen to our dua.”
“Then Abu Hurayrah made a supplication saying: ‘O Lord, I ask You for what my two companions have asked and I ask You for knowledge which will not be forgotten.’”
“The Prophet, peace be on him, said: ‘Ameen.’ ”
URL http://en.wikipedia.org/wiki/Sunni_view_of_Abu_Huraira
Inda hadees patriya vilakkathi tharavum.
வஅலைகுமுஸ்ஸலாம்
5697السنن الكبرى للنسائي -
أخبرنا محمد بن إبراهيم ، قال : حدثنا الفضل بن العلاء ، قال : حدثنا إسماعيل بن أمية ، عن محمد بن قيس ، عن أبيه ، أنه أخبره أن رجلا جاء زيد بن ثابت ، فسأله عن شيء ، فقال له زيد : عليك أبا هريرة ، فإني بينما أنا وأبو هريرة ، وفلان في المسجد ذات يوم ندعو الله ، ونذكر ربنا خرج علينا رسول الله صلى الله عليه وسلم حتى جلس إلينا فسكتنا فقال : ” عودوا للذي كنتم فيه ” قال زيد : فدعوت أنا وصاحبي قبل أبي هريرة ، وجعل رسول الله صلى الله عليه وسلم يؤمن على دعائنا ، ثم دعا أبو هريرة ، فقال : اللهم إني أسألك مثل ما سألك صاحباي هذان ، وأسألك علما لا ينسى ، فقال رسول الله صلى الله عليه وسلم : ” آمين ” ، فقلنا : يا رسول الله ونحن نسأل الله علما لا ينسى ، فقال : ” سبقكم بها الغلام الدوسي ”
இது நஸாஈயில் 5697 இடம்பெறும் செய்தி இந்த செய்தியில் இடம்பெறும் பழ்லு இப்னுல் அலாஃ என்பவர் விமர்சனத்திற்குறியவர். ஆகையால் இச்செய்தியை ஆதாரங்காட்ட முடியாது. அடுத்து இது பலமானது என வைத்துக் கொண்டாலும் இது ஐந்து நேரத் தொழுகை பற்றிய செய்தியுமல்ல. அவ்வாறு வைத்துக் கொண்டாலும் மஃமூம்கள் துஆக் கேட்க இமாம் ஆமீன் சொல்வதற்குத்தான் இது ஆதாரமாக அமையும்.
Assalamu alikum warahmathullah
May allah reward you, for your task and may allah make your task easy
i need information on Aqeeda
How it is defained.?
What is aqeeda?
About Kabrul Ahadeed to aqeedah
People deviated from aqeeda
(it is dificult to type in tamil)
Rihan faculty of Science
வஅலைகுமுஸ்ஸலாம்
இஸலாத்தின் நம்பிக்கை சார்ந்த அனைத்துமே கொள்கைதான் அதுபற்றி சுருக்கமாகக் காண எமது சகோதர இணையத்தளத்தில் உள்ள பின்வரும் லின்கை பார்வையிடவும்
http://tamil.iccgsl.com/p/vision.html
குர்ஹானில் பன்றி இறைச்சி மற்றும் தான் ஹராமாக உள்ளது அதனுடைய ஏனைய உறுப்புகள் ஹராம் இல்லை என பி.ஜே கூறிவருகிறார். இதனை பற்றி மார்க்கத்தின் தீர்ப்பு என்ன? பன்றின் மாமிசம் மற்றுமா முஸ்லிம்களுக்கு ஹராம் அல்லது அதனுடைய மற்ற உறுப்புக்களும் ஹராமா?
வஅலைகுமுஸஸலாம்
மௌலவி பீஜே அவர்கள் அவ்வாறு எங்கும கூறிவரவில்லை. மாற்றமாக ஒரு ஆய்வின்பொழுதே அதனைக் குறிப்பிட்டார். ஆனால் பன்றியின் அனைத்துயும் ஹராமென்றே கூறிவருகிறார்
http://onlinepj.com/books/vilakapatta-unavukal/
Assalamu Alaikum.
shaik enakku jingal patriya islaththin nilaipadu enna enbadai vilakkavum? jingal manida udambil padippai eatpaduththuma? silar ellai engirarhal silar thakkam eatpadum engirarhal? enave Ahlussnnavin AQEEDHA enna enbadai vilakkavum? jazakallah hairan/
வஅலைகுமுஸ்ஸலாம்
பின்வரும் இணைப்பைப் பார்வையிடவும்
http://www.youtube.com/user/OnlyOneAlmightyGod#p/c/7A3863CC39DE0C1B/16/O5o5yR1amDo
அஸ்ஸலாமு அழைக்கும்,
நான் தங்கம் பற்றி கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லை , உங்கள் கருத்துக்காக காத்துக்கொண்டு இருக்கிறன்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.
சலபிகள் என்றால் யார்? சலபிசம் கொள்கை என்றால் என்ன? சலபிகளும் குர்ஹானையும் ஹதீசையும் தான் மூல ஆதாரமாக பின்பற்றுகிறார்களா? அவர்களிடம் காணப்படும் தவறுகளை இங்கே குறிப்பிடவும்.
walaikumussalam
பின்வரும் கட்டுரையைப் பார்வையிடவும் ஸலபிய்யாக் கொள்கை ஓர் விளக்கம்
asalamu alykkum.
naan shenra shila waramaha than ugga bayan nihalshihaly parthu waruhiren.
alhamdulillah ellam nanrahawe irukku. innum mella nega makkalukku Quran, Al hadis muryila Dawwa panna allah vidam naan pirarthikkuren.
ennudaya kelvi enna wendal!
egga uril(Beruwalla) Warantham thorum nady petru warum Keshumalla Kanthuri & Buhary Kanduri Patry ugga Karu thu than enna? Eggalaukku Nershei Sheiiya mudiyuma? inum Shilar soluragga aggu kooduthalana makkal warathane annaga ado, koliyo koduthan athu awaggalukku thane poisherurathu eggalikku nanma thane kitykkum enhirarhal.
enakku ithapatry theriyum ithu pachcha walihedu but egalukku shariyana muryil solla theriyathu athanalla than ugga kitta kekuran.
ugga karuthu wanthathum insha allah athy naan ennal mudithawary Allah wukkaha patrawarhalukku etthi yakkuren
enakku wasaramaha itharkkan pathily sollawum.
wassalam
Walaikumussalam
கந்தூரி எவ்வாறு கூடாது என்பதை ஒரு கட்டுரை வடிவில் கேட்டுள்ளீர்கள். இன்சா அல்லாஹ் முடிந்தவரை விரைவாகப் பதிவு செய்கிறோம்
Assalamu Alaikum.
sahabakkal maththiyil fiqh mas alakkalil karuththu verupadu erundullada? avatrai Aadaraththodu udaranaggaludan vilakka mudiyuma?
Walaikumussalam
நபித் தோழர்களும் மனிதர்களே என்ற அடிப்படையில் அவர்களக்கு மத்தியிலும் பல கருத்து மரண்பாடுக்ள எழுந்தன. கருத்து முரண்பாடுகளில் ஸஹாபாக்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது சம்பந்மதமாக ஒரு கட்டுரை இன்சா அல்லாஹ் விரைவில் பதிவு செய்யப்படும்
assalamu alaikum moulavi…i m mafaz from USA….my question is…I go to work after fajr….i pray fajr at house…i come to back home at isha…i pray isha also on time..aanaal luhar,asr,magrib pray timele nan work panren….inde prayers late a thole mudiyuma???or weare edhum maarke sattengel iwwaraane sandherpathil ullenewa…theliwaahe wilakkewum…..
M.MAFAZ
BOSTON CITY
USA
Walaikumussalam
தொழுகையை யுத்தக் களத்திலும் இஸ்லாம் நேரந்தவற அனுமதிக்கவில்லை தொழுகை விடுபடும் அளவிற்கு ஒரு நிர்ப்பந்த சூழல் இருந்தால் மாத்திரம் ழுஹரைப்பிற்படுத்தியும் அஸரை முற்படுத்தியும் தொழ இஸ்லாம் அனுமதிக்கிறது. அவ்வாறு இல்லையெனில் உரிய நேரத்திற்கே தொழ வேண்டும். எனவே உங்கள் வேலைத்தளம் அமைந்துள்ள ஊரும் நீங்கள் தங்குமிடங் கொண்டுள்ள ஊரும் வேறாக இருந்தால் அதிகபட்ச சலுகையாக உங்களுக்கு இந்த முற்படுத்தல் பிற்படுத்தலைப் பயன்படுத்தலாமே தவிர இரவாகிய பின் 4கு தொழுகைகளையும் ஒரு சேரத் தொழ அனுமதி இல்லை. இயன்றவரை ழுஹரையும் அஸரையும் வேலைத்தளத்தில் ஒரு நேரத்தில் சேர்த்துத் தொழுதுகொள்ளுங்கள். மஃரிபையும் இசாவையும் தங்குமிடத்திற்கு வந்த பின்னர் பிற்படுத்தி சேர்த்துத் தொழுங்கள். இது உங்களுக்கு உரிய நேரத்தில் தொழக் கூடிய சூழல் இல்லையென்றால் மாத்திரம்தான். அல்லாஹ் மிக அறிந்தவன்
assalamu alaiakkum
mathippitkuriya maulavi mujahid avarkale enathu keelvi ennavenralnamathu naattil irukkakoodiya sila maulavi maarkal thaankalum thawheeth vaathikal ena solkinraarkal aanal satthiya maarkkatthai makkalidam edutthu solvathatkuthayakkam kaattu kinrarkal ithu mikavum kavalayana vidayamaka irukkirathu ivarkaludaya inntha thayakkatthitku kaaranam enna?
sarabdeen lafeer
saudiarabia riyadh
assalamu alaikkum
mthippitkuriya moulavi .mujahid avarkale enathu kelvi
irannthavarkalukkaka .umra maatthiram seiyalama umra
maatthiram seithaal .athu bidh ath aakuma?ithattku
thayavu seithu pathil tharavum
lafeer sarabdeen
saudiarabia riyadh
[srilanki]
Walaikumussalam
இறந்தவருக்காக அவர் ஹஜ் க்காக நேர்ச்சை வைத்திருந்து சந்தர்ப்பம் கிடைக்காது மரணித்தால் அதை செய்வது அவர்களது பிள்ளைகளுக்கு வசதியிருப்பின் ஆணாயினும் பெண்ணாணினும் கடமையாகும் என்பதை பின்வரும் ஹதீஸ் எமக்குச் சொல்கிறது.
صحيح البخاري ـ 1852 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ
ஜுஹைனா கோத்திரப் பெண் ஒருவர் நபியவர்களிடம் வந்து, என் தாய் ஹஜ்ஜுக்காக நேர்ச்சை வைத்து மரணிக்கும வரை நிறைவேற்றவில்லை அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா என வினவினார்.அதற்கு நபியவர்கள், உங்கள் தாய் மீது கடனிருந்தால் நிறைவேற்றுவீர்களல்லவா! அது போன்று அல்லாஹ்வுக்கு இதை நிறைவேற்றுங்கள். நிறைவேற்லுக்கு மிகத் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ்தான் என பதில் அளித்தார்கள்.
அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ{ அன்ஹ{ (புகாரி:1852
இந்தச் செய்தியில் பகரமாக ஹஜ்ஜுசெய்கின்றவர் மகளாகவும் இருக்கலாம் என்பதும் தெளிவாகிறது.
உம்ராவைப் பொறுத்தவரை இறந்தவருக்காகச் செய்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் உயிரோடிருக்கும் தந்தையோ தாயோ உம்ராவிற்கு உடல் சக்திபெறாதவர்களாக இருந்தால் அவர்களுக்காக பிள்ளைகள் உம்ராச் செய்யலாம் என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.
سنن الترمذي لمحمد الترمذي – 930 – حدثنا يوسف بن عيسى حدثنا وكيع عن شعبة عن النعمان بن سالم عن عمرو بن أوس عن أبي رزين العقيري أنه أتى النبي صلى الله عليه و سلم فقال يا رسول الله! إن أبي شيخ كبير لا يستطيع الحج ولا العمرة ولا الظعن قال حج عن أبيك واعتمر قال أبو عيسى هذا حديث حسن صحيح وإنما ذكرت العمرة عن النبي صلى الله عليه و سلم في هذا الحديث أن يعتمر الرجل عن غيره و أبو رزين العقيري اسمه لقيط بن عامر
அபு ரஸீன் அல் அகீரி என்ற நபித்தோழர் கூறுகிறார். நான் நபியவர்களிடம் சென்று ‘எனது தந்தை ஹஜ்ஜோ உம்ராவோ பிரயாணமோ செய்ய சக்தியற்ற வயது முதியவர்” என்றேன். அதற்கு ‘ உன் தந்தைக்கு பகரமாக நீங்கள் அவருக்காக ஹஜ் செய்யுங்கள் உம்ரா செய்யுங்கள்” என நபியவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் திர்மதி: 930
assalamu alaikkum
thahajjath tholukai iravil enntha neratthil venndumanalum tholalama allathu athatkena neram irukkiratha ?appadi athatkena kurippaka neram undenil athai vilakkamaka tharavum .
[jazakumallahu hair]
lafeer sarabdeen
sauduarabia riyadh
[srilanki]
Walaikumussalam
பின்வரும் லின்கைப் பார்வையிடவும் தஹஜ்ஜுத் தொழுகை
கடமையான் குளிப்பைப் பற்றி இணையத்தில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு மாதிரி குறிப்பிடப்பட்டுள்ளது இதில் குர் ஆன் சுன்னா அடிப்படையில் சரியான முறை எது ?
1. எண்ணம் >> மறைவான இடத்தை கழுவுதல் >>முழுமையாக வுழு >> தலையும் உடம்பும் முழுமையாக நனையும் படி குளிப்பு
2. எண்ணம் >> மறைவான இடத்தை கழுவுதல் >> இரு கால்களைக் கழுவாமல் முழுமையாக வுழு >> தலையை மூன்ரு முரை கழுவுதல் >> வலது புறமும் இடது புறமும் மூன்று முரை நீரை விடுவது >> தலையும் உடம்பும் முழுமையாக நனையும் படி குளிப்பு >> குளித்து முடிந்தவுடன் கால்களக் கழுவுவது
3. எண்ணம் >> மறைவான இடத்தை கழுவுதல் >> முழுமையாக வுழு >> வலது புறமும் இடது புறமும் மூன்று முரை நீரை விடுவது >> தலையும் உடம்பும் முழுமையாக நனையும் படி குளிப்பு
பின்வரும் லின்கைப் பார்வையிடவும் கடமையான குளிப்பு முறை
assalamu alaikkum
mathippitkuriya moulavi mujahid avarkale hadees muraippadi thoppi pooduvathatku markkatthil entha aathaaramum kidaiyathu ithu poonru thadi vaippathattu uriya hadeesay thara mudiyuma?thaadi vaippathattku mattravarkalidam naam sollvathattku maarkkatthil anumathi irukkiratha?ithattku pathil tharavum [jazaakkumallahuhairah]
lafeer sarabdeen
saudiarabia riyadh
[srilanki]
WALAIKUMUSSALAM
தாடியை வளர விடுவது கட்டாயப்படுத்தப்பட்ட நபிவழிகளில் ஒன்றாகும். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாக அமைகிறது.
صحيح البخاري ـ 5892 – عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ
“முஷ்ரிகீன்களுக்கு மாறு செய்யுங்கள். தாடியை வளர விடுங்கள். மீசையைக் கத்தரியுங்கள்” என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 5892
இந்தக்கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவையனைத்துமே தாடியை வளரவிடுவதும் மீசையைக் கத்தரிப்பதும் கடமை என்பதைத் தெளிவாகக் கூறுவதால். அதை நாமும் செய்வதோடு பிறருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
ASSALAMU ALIKKUM. I’M RIHAN FROM MAWANELLA. I WANT “ASMAHUL HUSNA” WITH TAMIL MEANING.
WALAIKUMUSSALAM
صحيح البخاري ـ 2736 – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ
“அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் உள்ளன. அதை யார் மனனமிடுகிறாறோ அவர் சுவர்க்கம் நுழைவார்.” என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹ{ரைரா
ஆதாரம்: புகாரி 2736
மேலுள்ள செய்தி அல்லாஹ்விற்குள்ள நாமங்களில் 99 ஐ யார் மனனமிடுகிறாறோ அவர் சுவர்க்கம் நுழைவார் என்று சொல்கிறது. ஆனாலும் அவைகள் இன்னவைகள்தான் என்று அந்தப் பெயர்களைப்பட்டியலிடவில்லை. அவ்வாறு 99 பெயர்களும் இவைகள்தான் என பட்டியலிடப்பட்ட ஒரு செய்தி திர்மிதியிலே 3507 இடம் பெறுகிறது. அந்தச் செய்தி பலஹீனமானது. ஆகையால் தாங்கள் அந்தப் பட்டியலைத்தான் கேட்பதாக இருந்தால் அது பலஹீனமானது என்பதனை இதன் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறோம். அந்த பலஹீனமான செய்தியில் அல்லாஹ்வுக்குறிய பெயர்களும் உள்ளன ஆதாரபூர்வமற்ற பெயர்களும் உள்ளன. நீங்கள் குர்ஆனில் தேடுவீர்களாயின் நிறையப் பெயர்களைக் காணலாம். அவ்வாறு நீங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் தேட முயற்சிப்பதும் “ 99 பெயர்களை யார் மனனமிடுகிறாறோ” என்ற வார்த்தையில் அடங்கும் இன்சா அல்லாஹ்
Assalamu Alaikkum,
Today ALLAH is introduced your site through youtube. I have watched full of your IS SIN A PLEASURE lecturer. It is very nice, Just two days ago,, i have stopped to watch TV. But today i was thinking to watch. before that i have seen your lecturer. So i took strong decision that to continue to ignore the TV. Please ask Dua for me.
I have a humbly request:
Please do the BAYAN about the young generation (GIRL & BOY). Because recently, there is very big problem is the muslim girl & boy are FALL IN LOVE with NON MUSLIMS and they are running away from the house.even they are religious. I could not explain about this.
If you did the BAYAN before, kindly introduce me the link.
Vassalam.
WALAIKUMUSSALAM
http://www.youtube.com/user/OnlyOneAlmightyGod#p/u/80/ybMr0ajtXFY
இந்த லின்கில் உரையில் தாங்கள் வினவியது இருக்கலாம். இல்லையென்றால் அந்த யூடியூப் பக்கத்தில் இளைஞர்களின் ப்ரென்சிப் சம்பந்தமான சில தலைப்புக்கள் அதில் உள்ளன அவைகள் மூலம் பயனடையலாம் இன்சா அல்லாஹ்
நீங்கள் உருவப்படம் பற்றி ஆய்வூ செய்து உள்ளீh; என்று நினைக்கின்றேன். எஸ்.எல்.டீ.ஜே(SLTJ) ஜீம்மா ஒன்றில் இது பற்றி பேசினீh;கள். மாஸாஅல்லாஹ் அந்த அல்லாஹ்வூக்கே எல்லாப்புகழும் அப்படிப்பட்ட தௌpவை தந்ததற்கு. அந்த ஆய்வை கட்டுரைவடிவில் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
WALAIKUSSALAM
அது ஒரு நீண்ட கட்டுரையாக அமையும். இன்சா அல்லாஹ் கட்டுரை வடிவில் தயாரிக்க முயற்சி எடுக்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்
This question related to thady sayyappatta tholugai naram
நீங்கள் செய்த ஆய்வூ வரவேற்கத்தக்கது. மாஸாஅல்லாஹ்.
எனக்கு சில சந்தோகம் உள்ளது
சுபஹ் தொழுகையானது தூக்கம் மிகைத்து சூhpயன் உதயமாக 5 நிமிடன் முன் எழுந்தவனின் நிலை என்ன. ஒரு ஹதீஸ் உள்ளது ‘ஒருவன் சுபஹ் தொழுகை சூhpயன் உதயமாக முன் ஒரு ரக்கஅத்தை நிறைவேற்றிய நிலையில் அவனது தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்” இந்த கருத்தில் ஹதீஸ் கேள்விப்பட்டுள்ளேன். இந்த ஹதீஸ் ஸஹீஹா? இது ஸஹீஹானதாக இருந்தால் அவனது அடுத்த ரக்கஅத்தை நிறைவேற்றவேண்டுமா?
WALAIKUMUSSALAM
سنن النسائي مشكولا – 516 – عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ ( قَالَ « إِذَا أَدْرَكَ أَحَدُكُمْ أَوَّلَ سَجْدَةٍ مِنْ صَلاَةِ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلاَتَهُ وَإِذَا أَدْرَكَ أَوَّلَ سَجْدَةٍ مِنْ صَلاَةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلاَتَهُ
“உங்களில் சூரியன் மறைவதற்கு முன் அஸர் தொழுகையின் முதல் ஸஜ்தாவை அடைந்து விட்டால் அவர் தன் தொழுகையைத் தொழுது முழுமைப்படுத்தட்டும். அதே போல் சூரியன் உதிக்க முன்னர் சுபஹ் தொழுகையின் முதல் ஸஜ்தாவை அடைந்து விட்டால் அவர் தன் தொழுகையைத் தொழுது முழுமைப்படுத்தட்டும்.” என நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா
ஆதாரம்: நஸாஈ 516
இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமான செய்தி. இந்த ஹதீஸில் நபியவர்கள் தொழுகையை முழுமைப்படுத்துமாறும் கட்டளையிடுகிறார்கள். ஆனாலும் தொழுகையை நேரம் பிந்தும் வரைப் பிற்படுத்திய குற்றம் அவருக்கு எழுதப்படும்.
அஸ்ஸலாமு அழைக்கும்,
(1) முனன்காளுக்குமேல் ஆடை அணிவது ஹராமா அல்லது கூடுமா? இதன் நிலைதான் என்ன ?
(2) தொழுகைக்கு தொப்பி கட்டாயம் இல்லை என்பது சரி ஆனால் கண்ட கண்ட hair cream, hair jel என்பவற்றை தலையில் தடவிக்கொண்டு தொலமுடியுமா?
WALAIKUMUSSALAM
கணுக்காலிற்குக் கீழ் கீழாடை அணியக் கூடாது. ஆனால் முன்னங்காலிற்கு மேல் அணியலாம். என்ற ஒரு ஆய்வு முன்வைக்கப்பட்டிருக்கிறது. கரண்டைக்குக் கீழ் ஆடைபோகாத நிலையில் முன்னங்கால்களில் படுமளவிற்கு ஆடையணிவது தவறு கிடையாது. கரண்டைக் கீழ் கீழாடை செல்வதையே நபியவர்கள் தடை செய்திருப்பதால் கரண்டையில் படும்முறையில் ஆடை அணிவது தடுக்கப்பட்டதல்ல. என்றாலும் நபியவர்கள் ஆடை இயன்றளவிற்கு கரண்டையை விட்டு தூரமாவதையே விரும்பியிருப்பதால் அதைப் பேணுவதே சிறந்தது.
எந்த ஹெயா க்ரீமாயினும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்டதாயின் தாராளமாக பூசிக் கொண்டு தொழலாம். தாங்களுக்கு விருப்பமில்லையாயின் தவிர்ந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வும் தூதரும் அனுமதித்த ஒன்றைத் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை
அஸ்ஸலாமு அழைக்கும்,
தலை திறந்து தொழுவது தவறு என்று நான் சொல்லவில்லை நீங்கள் அதை தவறாக விளன்கியுள்ளீர் என்பதை உங்கள் பதிலின் கடைசி வரிகள் சொல்கிறது, நீங்கள் தொழுவிக்கும் பள்ளிகளிலே பாருங்கள், நபிகள் எப்படி நமது தலை முடிகள் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்க குரானையும், ஹதீசையும் பின்பற்றும் பள்ளிகளில் இளைங்கர்களின் தலைகளை பார்த்தால் உங்களுக்கு விளங்கும்,
தலை திறந்து தொழுவது எந்த அமலையும் குறைக்கும் என்று நான் சொல்லவில்லை. உள்ளங்களில் உள்ளவற்றை இறைவன் ஒருவனே அறிவான்
Assalamu Alaikum,
What is your opinion on facebook. I had deactivated it sometime ago. But I feel we can use it as a base for Dawah. Pls elaborate.
Wasalam.
WALAIKUMUSSALAM
பேஸ் புக் பற்றி ஒரேயடியாக ஒரு தீர்மானம் என்னால் சொல்ல முடியவில்லை. ஆனாலும் பல காரணங்களால் அதைத் தவிர்ப்பதே சிறந்தது. அல்லாஹ் மிக அறிந்தவன். விரிவாக எழுத முயற்சிக்கிறேன். இன்சா அல்லாஹ்
Dear Moulavi Razeen
1. Who is this Shia? Are they muslim?
2. Can we pray any one prayer with close time (Before Athan) to the next prayer (i.e Assume Asr prayer is at 3:15 pm so can we pray luhar around 3:00 pm and wait for Asr prayer)
WALAIKUMUSSALAM
ஜமாஅத்தாக தொழாமல் நேரத்தைப் பிற்படுத்துவது நயவஞ்சகர்களின் அடையாளம் என்ற கருத்துப்பட ஹதீஸ்கள் உள்ளதால் காரணமின்றி கடைசி நேரம் வரைத் தொழுகையைப் பிற்படுத்துவது பெரும்பாவமாகும். அப்படியே பிந்திவிட்டால் அடுத்த தொழுகையின் நேரத்திற்கு முன் தொழுதுகொள்ள வேண்டும். ஆனாலும் காரணமின்றிப் பிற்படுத்தியதற்கான குற்றம் உண்டு.
சீயாக்கள் காபிர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பின்வரும் லின்கில் உள்ள உரையைப் பார்வையிடவும்
http://www.youtube.com/user/OnlyOneAlmightyGod#p/u/144/FjQiq_CsTyE
தயவு செய்து உங்கள் கேள்விகளையும், விமர்சனங்களையும் தமிழில் பதிவு செய்யவும்
இந்த தளத்தை உபயோகித்து உங்கள் கேள்விகளையும், விமர்சனங்களையும் தமிழில் இலகுவாக பதிவு செய்யலாம்
Admin : Comment Moved from உங்கள் பகுதி to உங்கள் கேள்விகள்
————-
Aayisha :
I want to know if we went to Makka to perform umra, at the same time can we perform more than one umra? Hope you understand my question.At that time If we do more than one Umra, will Allah accept all?
WALAIKUMUSSALAM
பின்வரும் லின்கைப் பார்வையிடவும்
ஒரே பிரயாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உம்ராக்கள் செய்யலாமா?
assalamualaiku sheikh mujahid bin razeen
will saheeh hadees contradict with the holy quran? if it does how can we treat that saheeh hadees?
இதற்க்கு இன்னம் பதில் வரவில்லை
சகோதரர் முஜாஹித் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு
ரோமர்களின் வெற்றிக்காக அபூபக்கர் (ரழி) அவர்கள் சபதம் விட்ட நபர் யார்?
walaikumussalam
நாம் அறிந்த வகையில் அந்த அறிவிப்புகளில் அபூபக்ர் ரழியல்லாஹ் அன்ஹ் அவர்களுடன் குறைசிகளில் ஒரு சிலரிடம் அவ்வாறு சபதம்விட்டார்கள் என்றே வருகிறது. நபருடைய பெயர்வரக் காணவில்லை
அஸ்ஸலாமு அலைக்கும்
1. மேடை போட்டு விவாதத்திற்க்கு அழைப்பதும் பித்அத்துத்தானே என சிலர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லலாம். அதற்க்கும் ஆதாரம் கேற்க்கிறார்கள்.
2. அதே போன்றுதான் “web sit” ஆரம்பிப்பது. “ Mic” பேசுவது இதல்லாம் நபியவங்கட காலத்தில் இருக்கவில்லை தானே.
WALAIKUMUSSALAM
கூடாது என்று சொல்பவர்தான் ஆதாரங் காட்ட வேண்டும். அவ்வாறு ஏதும் சொல்வாரானால் அதைக் கேட்டுத் தாருங்கள்
அஸ்லாமு அலைக்கும்.
கண்ணியத்திற்க்குரிய ஹஸ்ரத் அவங்களே! கூடாது என்று சொல்வதற்கு எவ்வாறு ஆதரம் காட்டுவது. நபியவங்கட காலத்தில இருக்கவில்லையே. கூடும் எனசெய்வதற்கு தானே நபியவங்கட காலத்தில இருந்ததா? இல்லையா என பார்க்கவேண்டும்
Assalamu Alaikum
நபியவர்கள் காலத்தில் இன்டனட் வசதி இருக்கவில்லை நீங்கள் அதனைப்பயன்படுத்தித்தான் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் நானும் பதிலளித்துக்கொண்டிருக்கிறேன். இதையும் நீங்கள் பித் பித்அத் என்கிறீர்களா?
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இன்று எமது முஸ்லிம் சமூகத்தினர்கள் தாய் மொழியாக தமிழை தெரிவு செய்து படிக்கின்றனர்., அதிலே முழுக்க முழுக்க இருப்பது காதல் கதைகளும், பெண்களை வர்ணித்தல், ஆண்களை வர்ணித்தல் என்பன,
அவற்றை நாம் கட்டாயமாக மனப்பாடம் சைய்யவேண்டும் அப்போது தான் பல்கலைகழகம் செல்லமுடியும்.
இந்தமுரையிலான தமிழ் பாடத்தை படிப்பது கூடுமா? அதற்கு இஸ்லாத்தில் இடம் உண்டா?
நாம் குரானை, ஹதீஸை பின்பற்றுகின்றோம் என்று சொல்லுபவர்கள் கூட இதை செய்கிறார்கள் அப்படியென்றால் இதற்கு அவற்றில் ஆதாரம் உண்டா?
WALAIKUMUSSALAM
இன்றைய பாடத்திட்டங்கள் சம்பந்தமாகவும் கற்பித்தல் முறைமை சம்பந்தமாகவும் சில தகவல்களை சேமித்து வைத்து வருகிறேன். இன்சா அல்லாஹ் வெகு விரைவில் பதில் எழுத முயற்சிக்கிறேன்.
அஸ்ஸலாமு அழைக்கும்,
உண்மையிலேயே தகவல்கள் திரட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நல்லம் தான்.
அதனை விரைவாக வெளியிடுங்கள்.
பாடசாலையில் சில காதல் கதைகளை புத்தகத்தில் மட்டுமே படிக்கிறோம், அதேநேரம் வீட்டு தொலைகாட்சி நாடகங்களில் அதை கதையுடன், நடிப்பதையும் பார்க்கிறோம்
மொத்தத்தில் பாடசாலைக்கும், சில வீட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று நினைக்கிறேன்.
நாம் எதனை மனப்பாடம் செய்கிறோமோ அதுதான் எமது வாழ்க்கையில் வரும், இவற்றை எல்லாம் படித்துக்கொடுத்து விட்டு எமது பிள்ளைகள் காதல் பண்ணி கெட்டுப்போகிறோம் என்று கவலை படுவதில் அர்த்தம் இல்லை அல்லவா மௌலவி.
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிட்குரிய மவ்லவி முஜஹித் அவர்கலே பள்ளீ நிர்வாக சபைக்கு கட்டுப் படாதவர்கலை ஊரை விட்டு விலத்தி வைப்பதட்கு மார்க்கத்தில் அனுமதிஉன்டா?
லாபிர் சராபப்தின்
சவுதி அரபியா ரியாத்
இலங்கையர்
WALAIKUMUSSALAM
அல்லாஹ்விற்கும் தூதரிற்கும் முரணாக யாரும் கட்டளைகள் இடுவார்களாயின் பள்ளிநிர்வாகமல்ல இஸ்லாமிய ஆட்சியாளராக இருந்தாலும் கட்டடுபடுவது கூடாது. ஆனால் அல்லாஹ்விற்கும் தூதரிற்கும் முரண்படாத விடயங்களில் இயன்றவரை நல்ல காரியங்களில் அவர்களுக்குத் துணையாக உதவியாக நடந்து கொள்ள வேண்டும். இந்த வகையில் ஊரின் நலவுகள் பாதிக்கப்படும்போது ஒழுக்கம் பாதிக்கப்படும்போது ஊரின் சமநிலையை பாதுகாக்க ஊரொதுக்கம் என்கின்ற பதில் நடவடிக்கை பள்ளி நிர்வாகங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நலவுக்காக இது பயன்படுமாயின் இதில் மார்க்க ரீதியாக எந்தத் தவறும் இல்லை. ஆனால் இந்த நடவடிக்கை இன்று எதற்காக உருவாக்கப்பட்டதோ அவைகளுக்கல்லாமல் உண்மையான மார்க்கத்தைப் பின்பற்றும் தவ்ஹீத் சகோதரர்களுக்கெதிராகப் பயன்படு;த்துவதால் இன்று இந்த சட்டம் மொத்தமாக பெறுமதியிழந்துவிட்டது.
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிட்குரிய மவ்லவி முஜாஹித் அவர்கலே நபி [ஸல்]அவர்கள் வீடு வீடாக போய் தொலுகைக்கு அழைதிருக்கின்றார்களா?அப்படிஅழைத்தார்கள் என்பதட்ட்கு ஆதார பூர்வமான ஹதீஸ்கள் உன்டா?
லாபீர் சராப்தீன்
சவூதி அறபியா ரியாத்
[இலங்கையர்]
Walaikkumussalam
தொழுகையை வலியுறுத்த தொழுகைக்கு அழைக்க என்று பிரத்தியேக வழிமுறைகள் எதனையும் நபியவர்கள் காட்டித்தரவில்லை. ஆனாலும் ஒருவருடைய வீட்டுக்குச் சென்று தொழுகையின் முக்கியத்துவத்தைச் சொல்வதிலும் தவறு இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்
assalamu alaikum. Innamal ahmalu minneyath- face book is against to islamic religion why are you still there.if not you have no qualification to say others to stop using face book
அஸ்ஸலாமு அலைகும் சகோதரரே நீங்கள் கூறும் facebooக் பக்கமானது
முஜாஹித் பின் ரஸீன் அவர்களால் maintain செய்யப்படும் பக்கம்ல்ல மாறாக
நானே அந்த பக்கத்தை maintain செய்கின்றேன்.
இது சம்பந்தப்பட்ட கேள்வியொன்றை ஏற்கனவே பதிந்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் விரைவில் முஜாஹித் பின் ரஸீன் அவர்கள் பதில் எழுதுவார்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும் மௌலவி அவர்களே.
நாம் தொவ்ஹீட்வதிகள் என்று சொல்லிக்கொன்று இருக்கின்ற சிலர் இன்று தலை நோன்பு பிடிப்பதில் முரணாக உள்ளனர். ஒருசாரார் இன்றும், இன்னொரு சாரார் நாளையும் தலை நோன்பை எடுக்கவுள்ளனர். இதில் யாரோ ஒரு சாரார் இஸ்லாத்துக்கு மாறாக செயட்படுகின்றார்களா? இதன் நிலைதான் என்ன? இதில் யார் பித்தத் வாதிகள் ?
இதை நான் யாரையும் கொச்சை பண்ண வேண்டும் என்பதற்காக கேட்கவில்லை. ஒரு சிறந்த பதிலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
Walaikumussalam
பிறை பார்த்தல் சாட்சி சொல்லல் என்பது இன்று ரமளாலின் பேசப்படும் பெரும் தலைப்புக்களில் ஒன்று இன்சா அல்லாஹ் ஒரு நீண்ட ஆய்வை இதற்காகப் பதிய இருக்கிறேன். அல்லாஹ் அதற்குத் துணைபுரிவானாக. உங்களது கேள்விகளில் பெரும்பாலானவை ஆயவோடு சம்பந்தப்பட்டதனாலேயே தாமதமாகிறது என்பதையும் பணிவாய்த் தெரிவித்துக் கொள்கிறேன்.
அச்ச்லாமு அலைகும்.
ஃபர்லான தொலுகையிலும் சுஜுது செய்யும்பபோது தமிலால் துஆ கேட்க முடியுமா,ஆதாரதுடன் விலக்கவும்
Walaikumussalam
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அல்லாஹ்விடம் கேளுங்கள். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள். என்று எங்கு வந்தாலும் எங்களுக்கு புரிந்த தெரிந்த பரீட்சியமான மொழிகளில் கேட்பதையே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படித்தான் புரிந்துகொண்டுமிருக்கிறோம். அதனால்தான் பிந்திய இரவு வேலைகளில் வெள்ளிக் கிழமையில் நோன்பின் கடைசிப் பத்து இரவுகளில் எல்லாம் நாம் நமது மொழியிலேயே இறைஞ்சுகிறோம். அவ்வாறே ஸஜ்தாவில் உங்கள் தேவைகளைக் கேளுங்கள் என்று நபியவர்கள் கூறுவதையும் புரிந்துகொள்ள வேண்டும். எமது அனைத்துத் தேவைகளையும் அவ்வாறுதான் கேட்க முடியும்.தொழுகையின் மொழி அரபு என்றோ தொழுகையில் அரபு மட்டுமே என்றோ நபியவர்கள் சொல்லவில்லை. தொழுகையைப் பொறுத்தவரை அரபியாக இருந்தாலும் நபியவர்கள் சொல்லித்தந்த திக்ருகளையே கூற முடியும் தானாக தன் மொழி அரபு என்பதால் எதையும் கூறலாம் என்றாகிவிடாது. ஆனால் ஸஜ்தாவில் நமது தேவைளைக் கேட்க நபியவர்கள் அனுமதி தந்துள்ளதால் அரேபியர் அவரது மொழியிலும் நாம் நமது மொழியிலும் கேட்கலாம் . தொழுகையின் ஏனைய இடங்களில் நபியவர்கள் சொன்ன வாசகங்களையே அரபியாயினும் அஜமியாயினும் பயன்படுத்த வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிபிற்குரியமௌலவி முஜஹித் அவர்கலளே ரமழான் மாதத்தில் இரவுதொழுகையின் போது வித்ரு தொழுகையில் இமாம் ஹுனூஹத் ஓதும்பபோது மௌமூம்கள் கட்டாயம் ஆமீன் கூறவேன்டுமா?தயவு செய்து இதற்கு ஆதாரத்துடன் பதில் தரவும். அத்தோடுமௌமூம்கள் கைஏந்துவது க்ட்டாயமா?
[ஜஸாகல்லாஹுஹைறா]
லாபீர் சறாப்தீன்
சவுதிஅரேபியா ரியாத்
[இலங்கையர்]
Walaikumussalam
பதிலைக் காண பின்வரும் லின்கில் உள்ள கடைசிக்கேள்வியை பார்வையிடவும்
Dear Sheik Mujaahidh,……..salaam to you…………..
please reply this question………………….. My Mail adres………….
ஹதீஸ்களை நான் நம்பி எற்கும் முறை…………இரத்தின சுருக்கமாக ;;;;;,,
நான் கற்கும் , எனக்கு வரும் , என்னிடம் சொல்லப்படும் பல ஹதீஸ்களையும் இயன்றளவு உன்னிப்பாக அதன் ஒவ்வொரு வசனத்தையும் படித்து பார்கிறேன்…….. அதன் பின் இந்த கருத்துக்கள் , உலகத்துக்கே , ஒழுக்கத்தையும் உண்மையையும் போதிக்க வந்த இறைவனின் தூதர் இப்படி சொல்லியிருப்பார்களா இல்லையா என முதலில் சிந்திப்பேன் ……. அதன் பின் முடிந்தால் முதலில் QUR’AAN டன் ஒப்பிட்டு ஆய்வு செய்வேன்…… அது ஒரு சொல் முரணாக இருந்தாலும் அது அவ்வளவு ஸஹேஹ் என தொகுத்தவர்கள் கூறியிருந்தாலும் , நான் அதை தூக்கி எரிந்து விடுவேன்…….
QUR’AAN டன் ஒப்பிட்டு ஆய்ந்து உண்மை நிலையை விளங்க முடியாத நூற்றுக் கனக்கான ஹதீதுகள அதன் கருத்துக்கள் முதல் சரியா என்பதை முதில் பார்த்து ஓகே எனில் பின்தான் அது அறிவிப்பாளர் அனைவரும் நம்பிக்கையானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என பார்த்து , மட்டும் ஏற்றுகொள்கின்றேன்…………
அதே நேரம் இபாதத்களின் விளக்கத்தை, மற்றும் ஒழுக்க உபதேசங்களை ஸஹீஹ் என உருதிப்பட்ட்ட ஹதீஸ்களின் உதவி கொண்டு மட்டும் ஏற்று அமுல் படுத்துகின்றேன்…………….
எனவே சகோதரர்கள் , ஹதீஸ் ஓன்று எவ்வாறு ஏற்றுக்கொல்லனும் என்பதற்கு நான் உபயோகிக்கும் முறை சரியா , அல்லது தவறா என்பதை ஆதாரத்துடன் தெளிவாக்குங்கள்…….உங்கள் அறிவுரை எனக்கு மேலும் மேலும் அறிவை வளர்த்துக்கொள்ள மிக உதவியாக இருக்கும்……
…இறைவன் உதவி புரிவான்… My mail……. ****************
அன்பிற்கினிய சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் வாழ்வது கணினியுகம் இந்த கணினியுகத்தில் நகரம் முதல் கிராமத்தில் வசிப்பவர் வரை கம்ப்யூட்டர் பயன்படுத்துகின்றனர் இதில் இஸ்லாமியர்களும் அடங்குவர்.விஷயம் என்னவென்றால் கம்ப்யூட்டர் இயக்கப்பயன் படுத்தும் OS இன்னபிற softwar போன்றவைகளை அதிகமான மக்கள் பைரேட்டடாக(திருட்டுப் பொருளை) பயன்படுத்துகின்றனர் இது அந்த கம்பனியின் காப்பிரைட் ரூலிற்கு எதிரானதல்லவா? இதே நிலையில் மரணித்தால் நாளை மறுமையில் முப்ளிசாக (திவாலானவராக)ஆகிவிடுவோமே? ஏனென்றால் உதாரணத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக ஒரு OS வெளியிடுவதாக இருந்தால் பலகோடி முதல் போட்டு பலபேரை
வேலைக்கு அமர்த்தி பலநாள் கஷ்ட்டப்பட்டு வெளியிடுகின்றனர் அதை ஈஸியாக நாம் ஒரு CD இல் காப்பி பண்ணி பயன்படுத்திவிடுகிறோம் இதற்க்கு இஸ்லாத்தின் நிலை என்ன? விளக்கவும்இதில் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் மைக்ரோசாப்ட் நிறுவனமோ வேறு எந்த நிறுவனமோ ஒரு சாப்ட்வேரை விற்பனை செய்யும்போதே கண்டிசநோடுதான் விற்கின்றனர்,அந்த கண்டிசனை ஏற்றுக்கொண்டால் தான் நமது கம்ப்யுட்டரில் அந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யமுடியும்,அந்த டெர்ம்ஸ் அண்ட் கண்டிசனை ஏற்றுக்கொண்டுதான் நாமும் இன்ஸ்டால் செய்கிறோம் ஒருவருடைய ஆக்ரீமெண்டை ஒப்புக்கொண்டுவிட்டு அதற்கு மாற்றமாக ஒரு இஸ்லாமியன் நடக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த்ததற்கு ஆதாரம் உள்ளதா? இதற்கு குரான் ஹதிஸ் அடிப்படையில் தெளிவான பதில் சொல்லவும்.
GM.BASAH R.PUDUPPATTINAM PDUKKOTTAI DT-614621
MOB:NO.9524681116
walaikumussalam
ஒரு பொருளுக்கான விலையை கொடுத்துவிட்டால் அது வாங்கியவருக்கே சொந்தம். இதற்கு மாற்றமாக நபியவர்களது காலத்தில் எந்த நிகழ்வுகளும் ஆதாரமாக இல்லை. ஒரு நிறுவனம் 1 குறிப்பிட் மென்பொருளை நூறு குறுந்தகடுகளில் பதிவு செய்து ஒன்றின் விலை ஐயாயிரம் என்று தீர்மானிக்கிறது என்றால் அதன் கருத்து அந்த நூறும் விற்றுத் தீர்ந்தால் உரிய முதலும் இலாபமும் அந்த நிறுவனத்திற்கு கிடைத்து விடுகிறது என்பதே. அதற்குப் பின்னர் அதை வாங்கியவர் அதை விற்கக் கூடாது பிரதி பண்ணக் கூடாது என்பது அநியாயம். இதனால்தான் இப்பொழுது ஓபன் ஸோஸ் யுகம் உருவெடுத்துள்ளது. ஒருபொருளை உரிய விலைக்கு வாங்கிய பின்னர் அதில் இப்படித்தான் நீ நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டம்போடுவதற்கு எந்த ஆதாரமும் நபி வழியில் இல்லை. இதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்பது ஆதாரமற்ற செய்தி. ஆனால் இலாபக் குறைவு இருக்கலாம்
அஸ்ஸலாமுஅலைக்கும் ஷெயிக் முஜாஹித் அவர்களுக்கு!
யார் இந்த யஹ்யா சில்மி? இவர் தவ்ஹுத் வாதிகள் வளிகேடர்கள் என்றும், காஃபிர்கள் எனறும் கூரி வருகிரார். இவர் ஏற்றிறுக்கும் கொள்கைத் தான் சரியானது என்று கூரி வருகிறார். உன்மையிலையே இவருடடைய கொள்கைத் தான் என்ன?
Walaikumussalam
சகோதரர் யஹ்யா ஸில்மி அவர்கள் தவ்ஹீத்வாதிகளைக் காபிர் என்று கூறியதக எந்த ஆதாரமும் இல்லை. ஆனாலும் அவர் தவ்ஹீத் வாதிகளை வழிகேடர் என்று கூறிவருவது உண்மைதான். நபித் தோழர்கள் மார்க்கத்தின் 3வது மூலாதாரம் என்பதே அவரது நிலைப்பாடு. அவரது கொள்கை.பின்வரும் லின்கில் உள்ள கட்டுரையைப் படியுங்கள். அந்தக் கொள்கை தவறானது என்பதை விளங்கப்படுத்தியுள்ளோம் மேலதிக விளக்கம் தேவைப்படின் எழுதுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிட்குரிய மவ்லவி முஜாஹித் அவர்கலே
குரானில் நாட்பது தலைமுரை பட்ரி சொல்லப்படுகிரதெ.அது பட்ரி தெலிவான விலக்கம் தாருங்கல்.
walaikumussalam
நாற்பது தலைமுறை என்ற வாசகம் மூலம் நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்பது எமக்குப் புரியவில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்கலே தாங்லகலிடம்
நான்குனூஹத் சம்பந்தமான கேல்வி கேட்டிருந்ததேன் அதற்கு தாங்கல் எழுதிய பதில் எனக்கு திருப்தி அளிக்கவில்லை .குனூஹத் ஓதுவதற்கு ஆதாரம் இல்லை என்பது.அல்ஹம்துலில்லாஹ் நான் அறிவேன்ன். நான் கேட்ட கேல்விஎன்னவென்றால்
நாம் இமாம்ஜமாத்தாகததொழும்போது.இமாம்ஹுனூஹத் ஓதினால் மௌமமூம்கள் கைஏனந்தலாமா. ஆமீன்.கூரலாமா.இதுதான் எனது கேல்வி. நான் இக்கேல்வியை கேட்ககாரனம் பித் ஆத் என்றாலே விரன்டோடும் இந்த சவுதி அரேபியாவிலேயே ரமழான் மாதத்தில் வித்ரு தொலழுகையின் போது ஹுனூஹத் ஓதப் படுகிறது.
சத்திய மார்க்கத்தை தூயவடிவில் அறிந்துகொள்ளூம் நோக்கத்துடனேயே இக்கேல்வியை தாங்கலிடம் மீன்டும் கேறட்கிறேன் என்பதை தாங்கல் புரிந்து கொலள்வீர்கல் என நினைக்கிறேன்.[ஜஸாக்கல்லாஹு ஹைரறாஹ்]
லாபீர் சறாப்தீன்
சவுதி அரேபியா ரியாத்
இலக்கையர்
Walaikumussalam
இமாமை வித்ரின் குனூத் விடயத்தில் பின் தொடரக் கூடாது. ஆமின் சொல்லவுங்; கூடாது. காரணம் வித்ர் குனுத் சம்பந்தமாக வரும் ஹதீஸ்களில் கூட கையேந்தி ஓதினார்கள் என்றோ சப்தமாக ஓதினார்கள் என்றோ மஃமூன்கள் ஆமீன் கூறினார்கள் என்றோ இடம்பெறவில்லை. எனவே அந்த ஹதீஸை நாம் பலமெனக் கருதினாலும் இவைகளுக்கு ஆதாரமாக அந்த ஹதீஸ் இல்லை எனத் தெரிகின்றபோது இமாமை இந்த விடயத்தில் பின்தொடரக் கூடாது. அடுத்து இமாமை தக்பீரிலும் ருகூஃ சுஜுதிலும் இருப்புகளிலுமே பின்தொடரச் சொன்னார்கள். இமாமை எல்லா நிலையிலும் பின்தொடரச் சொல்லவில்லை. இமாம் அஸர் தொழுவிக்கும்போது நாம் அவரின் பின் ழுஹர் தொழலாம் அவர் ஸஜ்தாவில் ஒரு திக்ர் சொல்லும்பொழுது நாம் இன்னொரு திக்ரைச் சொல்லலாம். இதனால் நாம் இமாமைப் பின்பற்றவில்லை என்ற குற்றத்திற்கு ஆளாக மாட்டோம். நபியவர்கள் இமாமைப் பின்பற்றச் சொன்னது போன்று எவைகளில் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்கள். ஆதலால் குனூத் அந்த வகையில் பின்பற்றுதலில் இல்லையென்பதால் அதில் நாம் இமாமைப் பின்பற்றத் தேவையில்லை. இது குனூத் மார்க்கத்தில் உண்டு வைத்துக் கொண்டால். குனூத் மார்க்கத்தில் இல்லை எனும் போது பின்பற்றவே கூடாது என்பது மிகத் தெளிவு. குனூத் சம்பந்தமான ஒரு ஆய்வை விரைவில் பதிவு செய்வேன் இன்சா அல்லாஹ்.
iqbal wrote :
அன்பின் லாபிர் அவர்கலே,
“”மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித்”” என்ரு சொல்ரீன்கலே?
ஒன்கலுக்கு இந்த ஆல பத்தி ஒன்னுமே தெரியாவா?
சவுதீ அரேபிய்ல ஹபீல் சலபி கிட்ட கேட்டு பாருன்க. எல்லா வெலாட்டும் சொல்லுவாரு.
ஒன்கலுக்கு ஃபத்வா கேக்க வேர ஆலே இல்லயா?
Dear Iqbal brother first think your position before you scold others Allah is the only who know every think
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்கலே
வேறு மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாத்துக்கு வந்து தற்போது முப்பது வருடமாகிறது.அப்பெண் திருமணத்துக்கு முன்பு முஸ்லிம் ஒருவர் மூலம் கருத்தரித்தாள்.அவள் இஸ்லாத்துக்கு வந்து அம்முஸ்லிமவரை திருமணம் முடித்து குழந்தையை பிரசவித்தாள்.எந்த பாவமும் அறியாத அக்குழந்தையை ஹராமான குழந்தை என்று சொல்லலாமா? பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே என்று சொல்லுகின்றோமே.
Walaikumussalam
பெற்றோர்கள் விபச்சாரத்தின் காரணமாகக் கிடைத்த குழந்தை ஒருபோதும் பெற்றோரின் பாவத்திற்கு ஆளாக மாட்டாது. அவ்வாறு நம்புவது மார்க்கத்தின் அடிப்படைகளுக்கே முரணானது. பிறப்பால் யாரும் கெட்டவராவதில்லை அவரவர்களின் நடவடிக்கையே ஒருவரை நல்லவரா கெட்டவரா என்று தீர்மானிக்கிறது. திருமண உறவின் மூலம் பிறந்த குழந்தைகள் கெட்டுப் போகமாட்டார்கள் என்று இஸ்லாம் சொல்லவில்லை. நலவும் கெடுதியும் செயல்பாடுகளை வைத்தே. பெற்றோர்களின் பாவம் பிள்ளையைப் பாதிக்கும் என்று எந்தக் குர்ஆன் வசனமும் கிடையாது ஆதாரபூர்வமான நபிமொழியும் கிடையாது.
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்கலளே!
ஒரு மனிதர் வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறும் போது அம்மனிதருடைய உறவினர்களுடன் பழக முடியுமா?அவர்கலுடன் தொடர்புகளை துண்டிக்க வேண்டுமா?இது கூடுமா?
Walaikumussalam
அவர்களது மதக்காரியங்களில் பங்கு கொள்ளாமலும் துணைபோகாமலும் எமது மார்க்க கட்டளைகளைப் புறக்கணிக்காமலும் அவர்களுடன் உறவைப் பேணலாம் பேண வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிட்குரிய மவ்லவி முஜாஹித் அவர்கலே
குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக கேட்கிறேன்..வாய்த்தர்க்கத்தின்போது இப்படி சொன்னார்கள்.அது நாற்பது தலைமுறைக்கும் சரி வராது என்று சொன்னார்கள்.அது பற்றி குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளதாம். அது என்ன?அது ஏன் அப்பிடி சொல்லப்படுகிறது? என்ன காரணம்?அது பற்றி தெளிவான விளக்கம் சொல்லுஙகள்.
சகோதரரே ……………… முஜாஹித் அவர்களுக்கோ எனக்கோ இந்த நாற்பது தலைமுறை பற்றிய செய்தி என்னவென்ரு இன்னும் புரியவில்லை ? குர் ஆனில் எந்த அத்தியாயத்தில் ? அல்லது எத்தனையாவது வசனத்தில் என குறிப்பிட முடியுமாயின் இன்ஷா அல்லாஹ் முஜாஹித் அவர்களுக்கு பதில் சொல்ல முடியுமாய் இருக்கும் !
Wassalam
திருமணமின்றி விபச்சாரத்தின் மூலம் பெறப்பட்ட குழந்தையைப் பற்றியா கேட்கிறீர்கள்
–
Site admin, Web master
முஜாஹித் மௌளவி அவர்களே!
உங்களுடய இந்தக் கட்டுரைக்கு மருப்பாக யஹ்யா சில்மியின் கூட்டத்தார்கள் சில விடயஙகளை எளுதியுள்ளார்கள்.கீலே உள்ள விடயங்களைப் பார்வையிடவும். தயவுசெய்து இதற்க்கான பதிலை விரைவில் எளுதவும்.
1. பரகதேனிய மதரசாவில் இருந்து பாதியில் குதித்து வந்து சுயமாக தன்னை தாயி ஆக பிரகடனம் செய்து பிரச்சாரத்தில் இருக்கும் இந்த பையன், ஆதாரங்களை முன்வைக்காமல் போலியான சலபிய்யா வரலாறு பேசுவதை விட்டு விட்டு, இந்த தமிழ் சலபி வெப்தளத்தில் உள்ள விடயங்களை ஆதாரங்களுடன் விமர்சித்தால் உபயோகமாக இருக்கும். அதை விட்டு விட்டு சும்மா பொய்யான வரலாறுகளை இட்டு கட்டி வாசகர் நேரங்களை வீணடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
2. சலாபி கொள்கையை பற்றித் தெளிவு படுத்துவது முஜாஹிதா ? என்ன கொடுமை? சலாபி என்று பெயர்சொல்வதனால் சலபியாக முடியுமா? சஹாபா வலியைத்தூகி எரிந்துவிட்டு தர்க்கம் வாதம் என்று தனது புத்தியினடிப்படையில் முஹ்தசிலாவின் உசூளில் மார்க்கத்தைக் கொச்சைப்படுத்தும் இவர் எப்படி சலப் பாதையைக் காட்டுவார். முதலாவது அவருக்கு சலப் பாதை தெரியுமா?
Walaikumussalam
நமது கட்டுரைக்கான எந்த பதிலையும் எழுதாமல் அவர்கள் சுய விமரிசனமே செய்துள்ளனர். கட்டுரைக்கான மறுப்புக்கள் ஏதும் இருந்தால் எழுதுங்கள்
திருத்திக்கொல்லவும்.
பரகஹதெனிய மதரசவில் இருந்து பாதியில் குதித்து வரவில்லை, பலவந்தமாக வெலியேட்டப்பட்டார். காரனம் கேட்கக் கூடாது, பச்சையாக சொல்ல்வும் முடியாது.
(தைரியம் இருந்தால் இதை பிரசுரிக்கவும்)
நன்ரிகல்.
பிரசுரித்தமைக்கு எனது பாராட்டுக்கல் உரித்தாகட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இரவு நேர வணக்கங்களில் 23 றக்அதுகள் என்பதற்கு ஆதாரபூர்வமான ஹதிஸ்கள் எதுவும் இல்லாத நிலையில் , மஸ்ஜிதுல் ஹரமில் 23 றக்அதுகள் தொழுவதற்கு என்ன காரணம்? இவர்களுக்கு இதுவரைக்கும் ஹதிஸ் பற்றிய அறிவில்லையா? இதற்குரிய காரணத்தை உங்களிடம் எதிர்பார்கிறேன் .
Zihath Musthafa
Qatar
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்களே!
நாட்டம் நிறைவேறுவதற்கு இறைவனுக்காக என்ன செய்ய வேண்டும்?
Walaikumussalam
இறைவனிடம் துஆச் செய்வது ஒன்றே வழி. இறைவனிடம் மனம் உருகிப் பிரார்த்திக்கின்றபோது தாயை விடப் பன்மடங்கு இரக்கமுள்ள இறைவன் நிச்சயம் தங்களது தேவையை நிறை வேற்றுவான். உங்கள் தேவை நிறை வேறவில்லையெனில் அங்கீகரிக்கப்படவில்லையே என்று அவசரப்பட வேண்டாம். உங்கள் மீது இறைவனுக்குள்ள கருணையே உங்களது நலவிற்காய் சில தேவைகளை பிற்படுத்தக் காரணமாக இருக்கலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிபிற்குரிய இக்பால் அவர்களே.மரியாதயாக பேசுவது என்னுடய தாய் தந்தயர்கள் எனக்கு கற்றுதந்தது இதை சொல்வதற்கு நீங்கள் யார்
மதிப்பிற்குரிய இக்பால் அவர்களே குர் ஆன் ஆதார பூர்வமானகதீஸ் கலை யார் சொன்னாலும் எங்கலுடய தௌஹீத் சகோதரர்கள் ஆதாரம் இருந்தால் ஏற்றுக்கொலள்வோம் என்பதை சகோதரர் இக்பால் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.ஒருவர்மீதூள்ளகோபத்தை இஸ்லாத்தின் மூலமாகதீர்த்துக் கொள்ளனினைக்க வேன்டாம்.உங்கலுடய சொந்தமுகவரியை நீங்கல் குரிபிடாதது உங்கலுடய கோலைத் தனத்தைகாட்டுகிறது தயவு செய்து உங்கள் முகவரியை குரிப்பிடவும்
லாபீர் சறாப்தீன்
சவுதி அரேபியா ரியாத்
[இலங்கையர்]
லாஃபிர்,
உன்கலுடய குரிப்ப படிகும் பொது உன்கலுடய தாய் தந்தயர் கட்டுத்தந்த மரியாதை தெலிவாக புரிகிரது. முகவரி குரிப்பிடாமைக்கு கோலைத்தனம் காரனம் என்ரு எலுதுவது இதை மேலும் உருதி படுதுஹிரது.
நீன்கல் ஒன்கட வீட்டு முஹவரியா போட்டுஇருக்கிர? இலன்கை என்ரு மட்டும் தானே இருக்கு. நான் இலன்கைல இர்க்கிரதால அத போடல.
இக்பால்
மாபொல.
லாபிர் அவர்கலே,
மத்த குரிப்புகல், கேல்விகல் எல்லாம் படித்து பாருன்கல், எத்தன பேர் முகவரி பேட்டு இரிக்கிர என்ரு? அவன்கல் எல்லாம் கோலைகல் என்ரா சொல்ல போரீன்க?
சகோதரர் இக்பால் அவர்கலுக்கு எல்லாம் வல்லால்லாஹுதா லா நேர்வழியைக் காட்டுவானாக.
[அல்லாஹு அக்பர்]
லாபீர் சறாப்தீன்
சவுதி அரேபியா ரியாத்
[இலங்கையர்]
அஸ்ஸலாமு அலைக்கும்
மௌலவி முஜாஹித் அவா;களுக்கு
பெண்கள் பயணத்தூரம் பற்றி வரும் ஹதீஸ்களில் மூன்று விதமான ஹதீஸ்கள் வருகின்றது. 1 நான் தூரம் 2 நாள் தூரம் 3 நாள் தூரம் இதில் எந்த அளவை ஏற்றுக்கொள்வேண்டும். இது சம்பந்தமான ஒரு முழு ஆய்வை வெளியிட்டால் மக்களுக்கு நன்றாக இருக்கும். தயவூ செய்து இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவூம். இதற்கு முன்னரும் ஒரு கேள்வி கேட்டேன் உருவப்படம் சம்பந்தமான ஒரு ஆய்வை வெளியிடும்படி இது பொpய சிக்கலான பிரச்சினையாக உள்ளது. இதனையூம் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக!.
walaikumussalam
வித்ர் குனூத் சம்பந்தமான ஹதீஸ்களை ஆய்வு செய்து கொண்டிருந்ததால் உங்களுக்கு சுருக்கமாகவேனும் பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இன்சா அல்லாஹ் உங்கள் கேள்விக்கு பதிலளிக்க கொஞ்சம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் சிறிது தாமதித்தேனும் பதிலை விரிவாகப் பதிவு செய்கிறேன் இன்சா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித்அவர்கலே சிலரிடத்திலேசில வலக்கங்கல் இருக்கிரறது ஒருவர் மௌத்தாகிவிட்டால் கேல்விப்பட்டவுடன் [வெள்ளி, திங்கல், ரமழான் மாதம்,]போன்ற நாட்கலில் மௌத்தானால் சுவர்க்கம் கிடைக்கும் என சொல்கிறார்கள் இது பற்றி குர் ஆன் கதீஸ்கலில் கூறப் பட்டுள்ளதா? ஆதாரத்துடன் விளக்கவும்
[ஜஸாகல்லாஹு ஹைரன்]
லாபீர் சறாப்தீன்
சவுதி அரேபியா ரியாத்
[இலங்கையர்]
Walaikumussalam
பின்வரும் லின்கைப் பார்வையிடவும்
அஸ்ஸலாமுஅலைக்கும்!
உலகில் உள்ள அனைவரும் தற்போது நோன்பை அடைங்துள்ளார்கள். இந்தக் காளக் கட்டத்தில் மிக மிக அவசியமானது இந்த ஜகாத் தான். ஒரு பொருளுக்கு ஜகாத் ஒரு தடவைக் கொடுக்கப் பட்டால் பொதுமா? அல்லது வருடா வருடம் அந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்றுமா?
தயவுசெய்து இதை விளக்கவும்
ஏன் இதற்கு பதில் எழுதவில்லை?
அஸ்ஸலாமு அலைக்கும்
rilwan
நீங்கள் கேட்டுள்ள கேள்வி ஏதோ சிறிய விடயம் போல் உடன் பதில் தருமாரு அதுவூம் கேள்வி பதில் பகுதியில் தருமாறு கேட்குகின்றீh;கள். இது ஒரு முழு ஆய்வூக்கு உட்படுத்திய பின்னே ஒரு ஆய்வாளருக்கு சொல்லமுடியூமே தவிர உடன் சொல்லமுடியாது. உடன் சொல்லவூம் கூடாது. குh;ஆனை படித்தால் உங்களுக்கு புhpயூம்.
அஸ்ஸலாமு அலைக்கும் மௌளவி முஜாஹித் அவர்களுக்கு!
நீஙகள் நான் எலுதிய முந்தைய கேள்விக்காக ஒரு பதிலை எலுதினீர்கள். அதற்க்கு மருப்பாக சலஃபுகளின் இனையதளத்திள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள். கீலே உள்ள அந்த செய்தியை வாசிக்கவும்.
// பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம், அஸ்ஸலாமு அழைக்கும் வ ரகுமாதுல்லாஹி வா பரகாதுஹு அன்பின் இஸ்லாமிய சகோதரே ! அல் குர் ஆனில் அல்லாஹ் சுபகாணஹுதாலா கூறுகிறான் , அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமா ? இமாம் புஹாரி தமது புஹாரியில் தலைப்பிடுகிறார்கள் சொல்லுக்கும் செயலுக்கும் முன்னர் இல்ம் ! இதன் அடிப்படையில் முஜாஹித் இன் கருத்துக்களை தெளிவு படுத்தும் முன்னர் , அவரது அறிவின் தரத்தை முன்வைத்தேன். இப்படியான அரை வேக்காடுகளிடம் எச்சரிக்கையாக இருங்கள், இவர்கள் மார்க்கம் என்ற பெயரில் சும்மா உளறுவார்கள் என்பதனை சுட்டிக்காட்டவும் , இந்த உளறல்களுக்கு பதில் அளிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதற்காகவும். இன்னும் நீங்கள் எனது மறுப்பை கவனமாக வாசித்து பாருங்கள், நான் அவரது உளறலையும் எடுத்துக்காட்டியுள்ளேன். அதாவது அவர் சொல்லும் சலப்புகள் பற்றிய கதைகளுக்கு எந்த ஆதாரத்தையும் வைக்கவில்லை. எந்த நூலில் எந்த அறிஞ்சர் இவரைபோன்று இப்படி கதையளக்கிறார் எனற எந்த விபரங்களும் இல்லை. மாறாக இவர் முன்சென்ற சலப்புகள் காலத்தில் வாழ்ந்த மாதிரி எதுவும் குறிப்பிடாமல் எழுதுகிறார். இதனையே நான் ” ஆதாரங்களை முன்வைக்காமல் போலியான சலபிய்யா வரலாறு பேசுவதை விட்டு விட்டு, இந்த தமிழ் சலபி வெப்தளத்தில் உள்ள விடயங்களை ஆதாரங்களுடன் விமர்சித்தால் உபயோகமாக இருக்கும். அதை விட்டு விட்டு சும்மா பொய்யான வரலாறுகளை இட்டு கட்டி வாசகர் நேரங்களை வீணடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ” என்று குறிப்பிட்டு உள்ளேன். நீங்கள் கவனித்து இருப்பீர்கள் என்று எண்ணினேன். ஆனால் இல்லை. இன்னும் உங்களை போன்றவர்களுக்கு தெளிவாக விளங்குவதற்காக அவரது கதையில் இருந்து இன்னொரு விடயத்தையும் சுட்டிக் காட்டுகிறேன். அதாவது, அவர் சலப்புகள் வரலாறை இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் இருந்து துவங்கியதாக சித்தரிக்கிறார். எந்த ஆதாரமும் இல்லாமல். மாறாக இந்த வெப்தளத்தில் இமாம் அஹ்மத் ரஹீமஹுல்லாஹ் அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த சலப்பு கொள்கையை பேசுகிற இமாம்களின் கிதாபுகளில் இருந்து சலப் கொள்கை வழிமுறை பற்றிய ஆடியோக்கள் உள்ளன. இதனால் தான் கூறினேன் , சும்மா பொய்யான வரலாறுகளை இட்டு கட்டி வாசகர் நேரங்களை வீணடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ” என்று . மேலும் மீண்டும் கூறுகிறேன் இந்த தமிழ் சலபி வெப்தளத்தில் உள்ள விடயங்களை ஆதாரங்களுடன் விமர்சித்தால் உபயோகமாக இருக்கும். அதை விட்டு விட்டு சும்மா பொய்யான வரலாறுகளை இட்டு கட்டி வாசகர் நேரங்களை வீணடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். //
Abu Muhammadh
தயவுசெய்து இந்தக் கட்டுரைக்கு ஒர் மருப்புக் கட்டுரை ஒன்றை வெளியிடுங்கள். நீங்கள் இலங்கையிலே உள்ள சலஃபுகளைப் பற்றி யும் அவர்களின் கொள்கைப் பற்றியும் எளுதுங்கள்.
Walikumussalam
சகோதரர் ஹாரிஸ் அவர்களே இன்சா அல்லாஹ் உங்கள் விருப்பம்போல் இலங்கைப் போலி ஸலபிகளின் உண்மை நிலையையும் அறவின் தராதரத்தையும் நிரூபிக்கும் வகையில் சில ஆக்கங்கள் எழுதுகிறேன் இன்சா அல்லாஹ். அதற்கு முன்னர் நீங்கள் யாரிடமிருந்து பதிலை வாங்கித் தருகிறீர்களோ அவரின் தகுதியையும் அவர் யாரென்பதையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் அறிவுத் தகுதியுள்ளவர்களிடம்தான் பேசலாம் என்று அவர்களே கூறியுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள்.
சகோதரர் இக்பால் அவர்கலுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பிற்குரியசகோதரர் இக்பால் அவர்கலே இதிலேகேல்வி கேட்கும் அனைவரும் அரறிவுபூர்வமான கேல்விகளைத்தான் கேட்கிறார்கல் அதாவது இஸ்லாத்தை தூயவடிவிலேஅறிந்துகொள்வதற்காக ஆனால் நீங்கல் கேல்வி கேட்பவர்லகலை கின்டல் செய்வது போன்ற விடயங்கலைஎழுதுகின்றீர்கல் இது உங்கள் மனதுக்குசரியாகபடுகிரறதா?தாங்கல்மவ்லவி முஜாஹித் அவர்கலைப் பற்றி என்னதெரியும் என்று கேட்டீர்கள்.சகோதரர் இக்பால் அவர்கலே நீங்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளவேன்டும்சத்தியமார்க்கத்தை யார்சொனாலும் எடுத்துனடப்பதுதான் நமது கொள்கை இதில் முஜாஹித் மவ்லவி அல்ல நீங்கள்சொன்னாலும் ஆதாரம் இருந்தால் ஏற்று கொள்ள்த்தான் வேன்டும். சகோதரர் இக்பால் அவர்கலே யாரும் தவரு செய்யாத மனிதர்கல் அல்ல தவறேசெய்யவில்லையென்றால் அவர்கல் மனிதர்கலேஅல்ல.என்பதை சகோதரர் இக்பால் புரிந்து கொள்வீர்கல் என நினைக்கிறேன்
எல்லாம் வல்லால்லாஹு உங்கலுக்கு நல்லருல் புரிவானாக……..
லாபீர் சறாப்தீன்
சவுதி அரேபியா ரியாத்
மீரா நகர் தம்பலகாமம்.
திருகோண மலை
அஸ்ஸலாமுஅலைக்கும் மௌளவி முஜாஹித் அவர்களுக்கு!
தாஙகள் அவரின் தகுதியையும் அவர் யாரென்பதையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.எனக் குறிப்பிட்டிருங்தீர்கள். இதற்க்கு நான் அவர்களிடம் வினவியப் பொளுது அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு.
//பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம், அஸ்ஸலாமு அழைக்கும் வ ரகுமதுல்லாஹி வ பரகாதுஹு ஏற்கனவே உளறியவைகளுக்கு பதில் இல்லை போதாக்குறைக்கு மேலும் உளறல்களை தொடர்வேன் என்று கூறுகிறார் அவ்வளவு தான். இது தான் எல்லா சுய பிரகடன அரை வேக்காடு தாயிகளின் நிலைமை. தனது கூற்றில் , தனது செயல்பாடுகளில் நேர்மையுள்ளவராக இருந்தால் தனது கல்வித் தகைமைகளை பற்றி அவர் வெளியிடட்டும். இங்கே பதிவதற்கு வெட்கமாக இருந்தால் அவரது இணைய தளத்தில் பதிந்து வைக்கட்டும். அதாவது இந்த இணைய தளத்தில் சகோதரர் ஷேக் யஹ்யா சில்மி அவர்களின் கல்வித் தகைமை பதியப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் விரிவாக பதியப்பட்டுள்ளது. இது இந்த மார்கத்தை நம்பிக்கையுடன் பெற்றுக்கொள்ள மக்களுக்கு உத்தரவாதம் ஆகும். “பள்ளிகு அன்னி வளவ் ஆயா” அதாவது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களிடமிருந்து ஒரு செய்தியேனும் அறிந்திருந்தால் அறிவித்து விடுங்கள் என்பதற்கு அமைய , முதலில் , செய்தியை நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் கேட்டாரா? படித்தாரா ? என்பது உறுதிசெய்யப்பட வேண்டும். அதாவது அந்த இல்ம் / கல்வி இருப்பது உறுதி செய்யப்படல் வேண்டும். எனவே , சும்மா சுற்றி வலைத்து நேரத்தை வீன்னடிக்காமல் அவரது தகைமையை அவர் பிரசுரித்து, தான் பாதியில் குதித்து வந்தவரோ, அரை வேக்காடோ அல்ல என்பதை நிருபிக்கட்டும். இது தான் அறிவின் தராதரத்தை நிருபிக்கும் வழிமுறை. அதுவல்லாமல் , ஆளை காட்டுங்கள் , மீண்டும் உளறுகிறேன் எழுதுகிறேன் எல்லாம் சும்மா பந்தா மட்டுமே ? இந்த பந்தாக்களை அவரைப் போன்ற பையன்களுடன் வைத்துக்கொள்ளட்டும். மேலும், இந்த இணைய தளத்தில் சலபி வரலாறும் வழிமுறைகளும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன, குறைந்தபட்சம் அவைகளையாவது ஆதாரங்களோடு தெளிவு காட்டி மறுப்பு எழுதட்டும். மீண்டும் கூறுகிறேன் இந்த தமிழ் சலபி வெப்தளத்தில் உள்ள விடயங்களை ஆதாரங்களுடன் விமர்சித்தால் உபயோகமாக இருக்கும். அதை விட்டு விட்டு சும்மா பொய்யான வரலாறுகளை இட்டு கட்டி வாசகர் நேரங்களை வீணடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.//
இந்த யஹ்யா சில்மியைப் பற்றி இவர்கள் அவருடய வம்சத்துடன் குரிப்பிட்டுள்ளார்கள்.
//Abu Abdur Rahman = Kuniyaa (Sunnah to have kuniyaa), Yahya Silmy = Name, bin = son of, Muhammedu Nubar = Father name, bin = son of, Usman = Grandfather name, bin = son of, Noah Lebbe = Grand Grand father name, Aala Marikar = Family Name, Al-Yemani = Origin Country of this lineage, As-Saylani = Present Location on Globe, As-Salafi = Method of following Islam, Al-Athari = Method of proofing Islamic evidenசெச்.?? (சிரிப்பு வருகிறது)
நான் இவர்கக்ளுடன் தொடர்ப்புக் கொள்ளும் இனையத்தளமானது …………………………
தயவுசெய்து இந்த யஹ்யா சில்மியின் கூட்டத்தாரைப் பற்றியும் அவர்களின் கொள்கைப் பற்றியும் ஒரு கட்டுரை வெளியிடவும்.
Method of eating, method of bathing, method of sleepiங் எல்லாம் போட சொல்லவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்களே!
ஏன் என்னுடைய ஐந்து கேள்விக்கு இன்னும் விடையளிக்காமல் இருக்கிறீர்கள்? ஆனால் எனக்கு பிறகு உள்ளவருக்கு விடையளித்துள்ளீர்கள்?நீங்கள் நேர்மையான மனிதர் என்றால் இப்படி செய்யலாமா? முறைப்படி செய்யுங்கள்.யார் முதலில் கேட்டாரோ அவருக்கு முதலில் சொல்ல வேண்டும்.பிறகு தான் அடுத்தவருக்கு விடையளிக்க வேண்டும்.
சில கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கலாம் சில கேள்விகளுக்கு ஆய்வுகள் தேவைப்படும்.
அதனால் அதில் ஓர் சிறிய தாமதமேற்படுலாம் மன்னித்துக்கொள்ளவும்.
இன்ஷா அல்லாஹ் முஜாஹித் அவர்கள் விரைவில் பதிலளிப்பார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
புனித அல்குர்ஆனில் முழுவதுமாக ஒரே தடவையில் இறங்கிய சூறா எது ? என்பதனை தயவு செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அறியத்தரவும்.
walaikumussalam
நிறைய அத்தியாயங்கள் உள்ளன. உங்கள் கேள்வியில் நீங்கள் அவ்வாறு ஒன்றுதான் இருப்பதுபோல் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறல்ல கடைசி பாகத்திலே உள்ள பெரும்பாலான அத்தியாயங்கள் முழுமையாகவே இறங்கின. உதாரணம் சூறா நஸ்ர்
பெண்கள் காது குத்தலாமா?
walaikumussalam
அழகுக்காக தங்கள் உடல்களில் மாற்றம் செய்யும் பெண்களை நபியவர்கள் சபித்துள்ளார்கள். (ஆபுதாவுத் 4170)எனவே காது குத்துவதும் அழகுக்காக உடலில் செய்யப்படும் மாற்றம் என்பதால் அதுவும் தடை செய்யப்பட்டதாகும்
முஜாஹித் மௌலவி அவா;களே
உங்கள் பதிலை ஒரு ஹதீசுடன் நிறுத்தி விடாமல் ஒரு ஆய்வூ மூலம் எல்லா ஹதீஸ்களை தொகுத்து கூறினால் நன்றாக இருக்கும்.
அஸ்ஸலாமூ அலைக்கும்
மௌலவி முஜாஹித் அவா;களுக்கு, ரமலான் தராவிஹ் தொலுஹை இல் கடைசி ரகாஅத்ல இமாம் துஆ செய்யும்போது மஹ்முன்கல் ஆமின் கூருவது சரிய்யா
அஸ்ஸலாமூ அலைக்கும்
மௌலவி முஜாஹித் அவா;களுக்கு,
என்னுடய நன்பர் க்கு அரபி முலம் குர்ஆன் ஒத வராது அதனல் அவர் தமிலில் தன் வாசிப்பார் இதைப்பத்தி உன்கலுடய கறூத்தூ ஏன்ன என பதீல்
Walaikumussalam
அரபியில் இயன்றவரை முயற்சிக்க வேண்டும். முடியாது விட்டால் ஓதுவதை கேட்பதிலும் நன்மையுண்டு. அரபியில் ஓதத் தெரிந்தாலும் தெரியாது விட்டாலும் அவரவர் தத்தமது மொழியிலே குர்ஆனை படிப்பது கடமை
Walaikumussalam
பின்வரும் லின்கைப் பார்வையிடவும்
அஸ்ஸலாமுஅலைக்கும் மௌளவி முஜாஹித்!
நாங்கள் எங்கள் வீட்டினுள் ஃபர்ளான தொளுகை தொளும் பொளுது பாங்கும் இக்காமத்தும் சொல்லித் தொழ வெங்றுமா?
walaikumussalam
سنن أبي داود للسجستاني – 1205 – حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ أَنَّ أَبَا عُشَّانَةَ الْمَعَافِرِىَّ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « يَعْجَبُ رَبُّكُمْ مِنْ رَاعِى غَنَمٍ فِى رَأْسِ شَظِيَّةٍ بِجَبَلٍ يُؤَذِّنُ بِالصَّلاَةِ وَيُصَلِّى فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ انْظُرُوا إِلَى عَبْدِى هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلاَةَ يَخَافُ مِنِّى فَقَدْ غَفَرْتُ لِعَبْدِى وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ »
“மலைக் குன்றின் மேல்; அதான் சொல்லி தொழுகையை நிறைவேற்றும் ஆட்டிடையனையைப் பார்த்து உங்களது இறைவன் பெருமிதங்கொள்கிறான். “எனது அடியானைப் பாருங்கள். அதான் சொல்லி தொழுகையை நிறைவேற்றுகிறான். என்னை அஞ்சுகிறான். எனது அடியானின் பாவத்தை நான் மன்னித்து விட்டேன். அவனை சொர்க்கம் நுழைவித்தேன்” என்றும் கூறுகிறான். அபுதாவுத் 1205 அறிவிப்பவர் உக்பா இப்னு ஆமிர் இந்த செய்தி ஹஸன் தரத்தில் உள்ள ஆதாரப்புர்வமான செய்தி.
தனியே தொழுபவர் அதான் சொல்லி இகாமத் சொல்லித் தொழுவது சிறந்தது என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. அதே நேரம் அது கடமைகிடையாது. அதான் இகாமத் இல்லாமல் தொழுதாலும் தனியே தொழுபவரின் மீது அதை விட்டதனால் குற்றம் கிடையாது.
அஸ்ஸலாமுஅலைக்கும் மௌளவி முஜாஹித் அவா;களே
கூட்டுத்துஆ கூடாது என்பது உண்மை. ஆனால் ஒரு பிரபலமான ஹதீஸ் ஒன்றுள்ளது. ‘நபி(ஸல்) அவா;கள் மிம்பா; மேல் ஏறும்போது ஜிப்ரீல் (அலை) அவா;கள் மூன்று துஆ கேட்க நபி(ஸல்) அவா;கள் ஆமீன் கூறியதாக உள்ளது.
1.என் பெயா; கேட்டு ஸலவாத்து சொல்லவில்லையே அவன் மீது ஸாபம் உண்டாகட்டும்.
2. நோன்பை அடைந்து எவன் பாவமன்னப்பை பெறவில்லை அவன் நாசமாகட்டும்.
3. எவன் பெற்றௌரை நோவினை செய்கிறானேஅவனும் என்பதாகும்.
3 வது எனக்கு சாpயாக நினைவில்லை.
இந்த ஹதீஸ் ஸஹீஹானதா? அப்படியாயின் இதில் கூட்டுத்துஆவிற்கு ஆதாரமுள்ளதாக கூறிகின்றவா; இதனை பிடிப்பது தவறா? இந்த கேள்விக்கு சீக்கிராமாக பதில் சொல்லவூம். வஸ்ஸலாம். அர்ஜடன்ட்
Walaikumussalam
மின்பரில் ஏறும்போது இதை ஜிப்ரீல் சொல்ல நபியவர்கள் ஆமீன் சொன்னார்கள் என்று வரும் அனைத்தும் பலஹீனமானவைகள். ஆனால் ஹதீஸின் ஒரு பகுதி ஸஹீஹ் முஸ்லிம் போன் கிரந்தங்களில் ஆதாரப்பூர்வமாக பதியப்பட்டுள்ளன. இன்சா அல்லாஹ் இந்த ஹதீஸ் பற்றிய தர ஆய்வை விரிவாகப் பதிவு செய்கிறேன்
jazakallahu kair
இந்த ஹதீஸை வைத்தே நாம் நோன்புக்காலத்தில் பாவமன்னிப்பு பெறாதவாppன் நிலை அநியாயக்காரா;களில் ஒருவன். என்று கூறுகின்றனா;. ஸஹீஹான ஹதீஸ் அடிப்படையில்
ஒரு மனிதன் நோன்பு நேற்காமல் இருக்கின்றான்.
இன்னொருவன் நோன்பு நோற்று பாவமன்னிப்பு பெறாதநிலையில் இருக்கின்றான்.
இப்படிப்பட்டவா;களின் நிலைபற்றி ஹதீஸ்கள் என்ன கூறுகின்றது.
السلام عليكم
“நரகில் காலின் பின் நரம்புகள் வழியாக மேலே தொங்கவிடப்பட்டு முகத்தின் இரு பக்கங்களும் பிளக்கப்பட்டு இரத்தம் வடிந்துகொண்டிருக்கும் நிலையில் சிலரை நான் கண்டேன். இவர்கள் யார் என்று இரு மலக்குகளிடமும் நான் வினவினேன். அதற்கவர்கள் “நேரம் வரமுன் நோன்பு திறப்பவர்கள்” என பதலளித்தார்கள். அறிவிப்பவர்:அபூ உமாமா ஆதாரம்:நஸாஈ 3286
நேரம் வருமுன் நோன்பை பகலிலோ அஸர் நேரத்திலோ விடுபவர்களின் நிலையே இவ்வளவு வேதனையானது என்றால் நோன்பு நோற்காதவர்களின் நிலையை கேட்கவே வேண்டாம். அல்லாஹ் நம்மனைவரையும் நரக வேதனையிலிருந்து காப்பானாக.
“ரமழானை அடைந்தும் எவரது பாவம் மன்னிக்கப்படவில்லையோ அவரை அல்லாஹ் மண்ணைக்கவ்வச் செய்வானாக” என்று நபியவர்கள் பிரார்த்தித்ததாக திர்மிதியில் 3545 அபுஹரைரா வழியாக ஹஸன் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கே ரமழானை அடைந்தும் பாவம் மன்னிக்கிப்படவில்லையென்பது அவர் அந்த மாதத்தில் பாவம் மன்னிப்புத் தேடாமையை அல்லது அதை அலட்சியமாக செய்ததை அல்லது அந்த மாதத்தை புறக்கணித்ததையே குறிக்கும்.
அஸ்ஸலாமு அழைக்கும்
பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவது ஹராம், என்பது எமது மார்க்க சட்டம். அது முழு உலக சமுதாய பெண்களுக்கும் தான். அவ்வாறு இருக்க அவ்வாறான அரைகுறையான மார்பு, தொடை தெரியும் வகையிலான ஆடைகளை நமது முஸ்லிம் கடைகளில் விற்பது கூடுமா?
மதுபானம் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஹராம். அகவே மதுபானம் விப்பதும் ஹராம்.
அதே போன்று ஹராமான விடங்களை விற்பது, வாங்குவது ஹராம் தானே?
wassalamu alaikum
ஆபாசத்தைத் துஸண்டும் வகையிலான ஆடைகள் ஹராம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வீட்டில் மாத்திரம் அணிய முடிந்த ஆடைகளை கடைகளில் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அதை அணிபவர்கள் அதை சிலவேளை தவறாகப் பயன்படுத்தலாம். இதனால் எனவே இதில் அணிபவர்களுக்குத்தான் சட்டம் சொல்ல வேண்டியிருக்கிறதே தவிர விற்பனையாளர்களைத் தவறு காண முடியவில்லை
கடைகளில் ஆடைகளை பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம் அவை சும்மா வீட்டுக்கு அணியும் ஆடைகள், அடுத்தது காரியாலய அலுவல்களுக்கு அணியும் ஆடைகள்.
இதில் காரியாலய அலுவல்களுக்கு அணியும் ஆடைகள் பெண்களின் ஆடைகளும் உள்ளன அவை முனன்கால், இடுப்பு என்பன தெரியும் வகையில் உள்ளது இவ்வாறான ஆடைகளும் எமது முஸ்லிம் கடைகளில் விற்கப்பட்டு வருகின்றது.
வீட்டுக்கு அணியும் ஆடைகள் பரவாஇல்லை என்று சொல்லமுடியும், அனால் காரியாலய அலுவல்களுக்கு என்றே வரும் ஆடைகளின் நிலை எப்படி இருக்கும் ( இதற்கான இஸ்லாமிய சட்டத்தில் இடம் உண்டா ) ?
நீங்கள் குறிப்பிடுவது போன்ற ஆடைகள் அனைத்தும் ஆபாசமான ஆடைகளே. அவைகளை இஸ்லாம் அணியத் தடை செய்வதனால் விற்கவும் தடை என்பதில் சந்தேகம் இல்லை
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்களே!
01. திருமணத்துக்கு பெற்றோரின் விருப்பத்துக்கு மாத்திரம் தானா பெண் இணங்க வேண்டும்? அப்பெண்ணுடைய விருப்பத்தை கவனிப்பதில்லையா? தனக்கு விருப்பமானவரை முடித்து தருமாறு பெற்றோரிடம் கேட்க முடியாதா?
கேட்டாலும் அவ்வாறு செய்ய முடியாது என்று பெற்றோர்கள் கூறலாமா? பெற்றோரின் சம்மதப்படி நடந்தால் தான் அத்திருமணம் நன்றாக இருக்குமாம்?
அப்படி கூறுவது சரியானதா? பெண்களின் விருப்பத்தை கவனிக்கக் கூடாதா?
02. இஸ்லாத்துக்கு வந்தவரை (இஸ்லாத்துக்கு வந்து நீண்ட வருடமாகியும்)முஸ்லிமல்ல என்று சொல்லலாமா? இது கூடுமா?
03. உறவினர்களை விலக்கி வைக்கலாமா? அவர்களுடன் கோபித்து நடக்கலாமா? சொத்துப் பிரச்சினை, ஏச்சு, ஏமாற்றம், துன்பம், அநியாயம், அநீதி ,உதவி செய்யாமை போன்ற கார்ணிகளால் பாதிக்கப்பட்டதற்காக அவ் உறவினர்களுடன் பேசாமல் இருக்கலாமா? விலகி இருக்கலாமா? மேலும் இஸ்லாத்துக்கு வந்த உறவினர்களையும் ஒதுக்கி வைக்கலாமா?
04. நாட்டம் நிறைவேறுவதற்கு இறைவனுக்காக என்ன செய்ய வேண்டும்?
05. வேறு மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாத்துக்கு வந்து தற்போது முப்பது வருடமாகிறது.அப்பெண் திருமணத்துக்கு முன்பு முஸ்லிம் ஒருவர் மூலம் கருத்தரித்தாள்.அவள் இஸ்லாத்துக்கு வந்து அம்முஸ்லிமவரை திருமணம் முடித்து குழந்தையை பிரசவித்தாள்.எந்த பாவமும் அறியாத அக்குழந்தையை ஹராமான குழந்தை என்று சொல்லலாமா? பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே என்று சொல்லுகின்றோமே என்ற கேள்விக்கு நீங்கள் விடையளித்தாலும் அப்பெண் அதே முஸ்லிமவரை திருமணம் முடித்ததற்காக அது விபச்சாரமா?
தயவு செய்து கேள்விகளை மீள்பதிவு செய்வதை நிறுத்தவும்
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்களே!
எங்கே இந்த கேள்விகலுக்கு விடையளித்துள்ளீர்கள்? விடையளிக்காத படியால் மீண்டும் பதிவு செய்தேன். மேலும் நீங்கள் இந்த கேள்விகலுக்கு விடையளிக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளீர்கள்.”உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க முஜாஹித் அவர்கள் விடையளிப்பார் என்று கூறினீர்கள்.அத்துடன் சற்று தாமதம் ஏற்படும் என்று சொன்னீர்கள்”. பிறகு கொஞ்சம் நாள் போன பிறகு மீண்டும் பார்த்த போது விடைகளை காணவில்லை. எனவே மீண்டும் பதிவு செய்தேன்.
தயவு செய்து இந்த 5 கேள்விகளுக்கு விடை தருமாரு தயவாய் வேண்டிக் கொள்கிறேன்.
அஸ்ஸலாமூ அலைக்கும்
மௌலவி முஜாஹித் அவா;களுக்கு,
என்னுடய நன்பர் க்கு அரபி முலம் குர்ஆன் ஒத வராது அதனல் அவர் தமிலில் தான் வாசிப்பார் இதட்கு குரான் நபி மொலில் உன்கலுடய கறூத்தூ ஏன்ன என பதீல் தரவும்
உங்கள் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது இந்த சுட்டியை பார்வையிடவும்
அஸ்ஸலாமுஅலைக்கும் மௌலவி முஜாஹித் அவர்களே!
தவ்ஹீத் வாதிகளாக இருக்கக்கூடிய நாங்கள் நோன்பு 27 மற்றும் லைலதுல் கதர் இரவு இல்லை ஏனைய ஒற்றைப்படை நாட்களிலும் இருக்கும் என நம்புகிறோம்.
ஆனால் எங்களை எதிக்கக்கூடியவர்கள் நோன்பு 27 தான் இந்த இரவு உள்ளது என சில சான்றுகளை முன்வைக்கின்றார்கள்.
நபிகள் நாயகன் (ஸல்) அவர்கள் சொன்னதாக முஹாவிய (ரலி) அவர்கில் கூறுகிறார்கள் லைலதுல் கதர் என்பது 27 ஆம் இரவாகும். (அபூ தாவுத், தபரானி, இப்னு ஹிப்பான்)
மேலும் நபி அவர்கள் கூறினார்கள் லைலதுல் கதர் இரவை அடைவதற்கு உங்களில் யாராவது விரும்பினால் அவர் அதை 27 இரவில் தேடிக்கொள்ளட்டும் என்றார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அஹ்மத்
உபை இப்னு கஹ்ப் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள் நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டுக் கூறுவேன் லைலதுல் கதர் இரவு 27 நாளில் தான் உள்ளது என்று .
(முஸ்லிம்)
தயவுசெய்து இதற்கு கட்டாயம் இன்றோ, அல்லது நாளையோ பதில் அளிக்கவும், ஏனென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் நான் 27 நாளை அடைய இருக்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் முஜாஹித் மொளலவி அவா;களே
மேலே குறிப்பிட்ட ஹதீஸ்பற்றி தயவூ செய்து கூறவூம். மற்றும் நான் பேசியூள்ளவா;களிடம் இப்படிப்பட்ட ஹதீஸ்கள் கேள்விப்பட்டதில்;லை. முஸ்லிம் கிரந்தத்தில் இருப்பது உண்மையா? அப்துல்லாஹ் அவா;களே தயவூ செய்து முஸ்லிமில் எந்த பாடத்தில் அல்லது எத்தனையாம் இலக்க ஹதீஸ் என்று கூறினால் வாசகா;களுக்கு உதவியாகவிருக்கும்.
السلام عليكم
27ம் இரவை லைலதுல் கத்ர் என்கிறார்கள் என்பதற்காக மாத்திரம் தவ்ஹீத் சகோதரர்கள் யாரையும் எதிர்க்கவில்லை. லைலதுல் கத்ரில் தனித்தனியாக அவரவர்கள் வீட்டிலே எவ்வாறு தொழுதும் அழுதும் பிரார்த்தித்தும் ஓதியும் நபியவர்கள் காலத்தில் அந்த இரவைக் கழித்தார்களோ அதற்கு மாற்றமாக மஸ்ஜித்களை ஜோடனை செய்தும் இருட்டுத் தவ்பா என்ற பெயரில் விளக்குகளை அனைத்தும் சாப்பிட்டும் குடித்தும் கூட்டுத் தவ்பாவிலும் அன்றைய இரவு முழுவதையும் பாலாக்குவதைத்தான் அதனைக் கண்டிக்கிறோம் பித்அத் என்கிறோம்.
லைலதுல் கத்ர் இரவு என்பது எந்த இரவு என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்துக்கள் உள்ளதைப் பார்க்கிறோம். இமாம் இப்னு ஹஜர் தனது பத்ஹில்பாரியில் லைலதுல் கத்ர் தினம் எது என்பதில் நாற்பதுக்கு மேற்பட்ட கருத்துக்கள் உள்தாகக் கூறி அவைகளைப் பட்டியலிட்டுள்ளார்கள். அதில் பல நபித்தோழர்களின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்கள். சில நபித்தோழர்கள் 21 என்றும் இன்னும் சிலர் 23 இன்னும் சிலர் 25 ….என பட்டியல் நீளுகிறது.
1. முஆவியா ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் 27ம் இரவுதான் லைலதுல் கத்ர் என்று கூறினார்கள் என்ற கருத்தில் உள்ளார். என சுஃபா விடமிருந்து அப்பான் வழியாக அறிவிக்கப்படுகிறது.ஆதாரம் இப்னு அபீசைபா:9537
இதே செய்தி சுஃபாவிடமிருந்து அபுதாவுத் தயாலிஸி வழியாக பைஹகியில் 8818 பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புத்தான் சுஃபா விடமிருந்து உபைதுல்லாஹ் இப்னு முஆத் வழியாக அபுதாவுதில் முஆவியாவின் கருத்தாக இல்லாமல் நபியவர்களின் செய்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது உபைதுல்லாஹ் இப்னு முஆத் தவறாக அறவிவித்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. பின்வரும் ஹதீஸ் இது உபைதுல்லாஹ் இப்னு முஆத் என்ற அறிவிப்பாளர் நம்பகமானவராக இருந்தாலும் இந்த அறிவிப்பில்தவறியுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
“27ம் இரவுதான் லைலதுல் கத்ருடைய இரவு என ஒரு மனிதர் கனவு கண்டார்.(அது நபியவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு) “உங்கள் அனைவரது கனவுகளும் லைலதுல் கத்ர் இறுதிப் பத்தில் வருவதாகவே உள்ளது. ஆதலால் கடைசிப் பத்தின் ஒற்றை இரவுகளில் தேடிக்கொள்ளுக்கொள்ளுங்கள்” எனநபியவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 2820.
இந்த செய்தி 27 என்ற கனவு நபியவர்களிடம் தெரிவிக்கப்பட்டும் இறுதிப் பத்தின் ஒற்றை இரவுகளில் வணக்கம் செய்யவே நபியவர்கள் வழிகாட்டியதாகத் தெளிவாக உள்ளது. நபியவர்களுக்கு அந்த நாள் தெரியாமல் இருந்ததால்தான் நடுப்பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்னர் இறுதிப்பத்தில்தான் லைலதுல் கத்ர் என உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். முஸ்லிம் 2826.
அடுத்ததாக இப்னு உமர் அறிவிக்கும் 27 லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று நபியவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மதிலே 4808 பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆதாரபூர்வமான செய்தியாகும். இதில் 27தான் லைலதுல் கத்ர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பின்வரும் செய்தியைப் பாருங்கள்.
“லைலதுல் கத்ரை 29வது இரவிலோ 23வது இரவிலோ தேடுங்கள்” என நபிகளார் கூறினார்கள்.அறிவிப்பவர் இப்னு அப்பாஸ். ஆதாரம் புகாரி 2022 இந்த ஹதீஸை எவ்வாறு புரிந்து கொள்வோமோ அவ்வாறுதான் 27 பற்றிய ஹதீஸையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த இரவுகளில் தேடுமாறு நபியவர்ள் சொன்னார்களே தவிர அவைகள்தான் லைலதுல் கத்ருடைய இரவு என்று நபியவர்கள் கூறவில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னும் என்னுடைய கேள்விக்கான பதில் உங்களிடம் இருந்து வரவில்லை, மீண்டும் ஒரு முறை பதிவு செய்கிறேன்
இரவு நேர வணக்கங்களில் 23 றக்அதுகள் என்பதற்கு ஆதாரபூர்வமான ஹதிஸ்கள் எதுவும் இல்லாத நிலையில் , மஸ்ஜிதுல் ஹரமில் 23 றக்அதுகள் தொழுவதற்கு என்ன காரணம்? இவர்களுக்கு இதுவரைக்கும் ஹதிஸ் பற்றிய அறிவில்லையா? இதற்குரிய காரணத்தை உங்களிடம் எதிர்பார்கிறேன் .
Zihath Musthafa
Qatar
அஸ்ஸலாமு அலைக்கும் அவா;களே
எங்களுடைய கொள்கை குh;ஆன் மற்றும் ஹதீஸ் என்பதில் நாம் உறுதியாக இருக்கிடன்ரொம். சவூதி அரசாங்கத்திற்கு எந்தவிதத்திலும் வஹி இறங்குவதில்லை. எனவே நாம் எம் கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும்.
உங்களது நண்பா; யாராவது இவ்வாறு கூறியிருந்தால் அவா;களுக்கு நன்றாக சவூதியில் தொழுவிப்பதை பாh;க்கச்சொல்லுங்கள். அதில் சுரோம் 8 தொழுவித்துவிட்டு பின் செல்வா;. அதை தொடா;ந்து சுதோஸ் வருவாh;. காரணம் ஒரு தொழுகை முடிந்த பின்னா; தொழாத மற்றவா;களுக்கு தொழுவிப்பதற்காக என்றே நான் கேள்விப்பட்டுள்ளேன்.
இன்னும் ஒரு காரணம் இருக்கலாம் (எனக்கு தொpந்த வகையில்) சாலிஹ் அல் பவ்ஸான், சாலிஹ் அல் குதைமீன் அவா;களின் கருத்து எத்தைனையூம் தொழலாம் என்பதாகும். (இந்த கருத்து பிழையாக இருந்தால் சுட்டிக்காட்டவூம்) வஸ்ஸலாம்.
السلام عليكم
பல இஸ்லாமிய அறிஞர்கள் 11க்கும் அதிகமாக இரவுத் தொழுகையைத் தொழலாம் என்ற அபிப்பிராயத்திலேயே உள்ளனர்.இன்றுள்ள சவுதி மூதறிஞர் சபையும் இதே முடிவில்தான் உள்ளனர். அவர்கள் 11ரக்அத்கள் தொழுவது சிறந்தது என்று மாத்திரமே கூறுகின்றனர்.கட்டாயம் என்று கூறவில்லை. அதற்கு ஆதாரமாக பின்வரும் செய்தியையே முன்வைக்கின்றனர்.
இரவுத் தொழுகை எவ்வாறு என்று நபியவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபியவர்கள் “இரண்டிரண்டாக நீங்கள் சுபஹை அஞ்சினால் ஒரு ரக்அத் தொழுது ஒற்றைப்படுத்துங்கள்” என்று கூறினார்கள். இப்னு உமர். ஆதாரம் புகாரி 1137
நபியவர்கள் இரண்டிரண்டாகத் தொழுங்கள் என்று சொன்னார்களே தவிர எவ்வளவு ரக்அத்கள் தொழ வேண்டும் என்று சொல்லவில்லை. அது மாத்திரமல்ல சுபஹை அஞ்சினால்தான் வித்ராக்கச் சொன்னார்கள். “ஒரு விளக்கத்தை அதற்குறிய நேரத்தை விட்டு பிற்படுத்துவது கூடாது” என்ற பிக்ஹ் விதிப்படி இரவுத்தொழுகைக்கு ஒரு எண்ணிக்கை இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இதுதான்.என்ற வாதத்தை இந்த ஹதீஸை வைத்து முன்வைக்கின்றனர்.
அவர்களது முடிவில் ஒரு பலமிருப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இங்கு பல விடயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது.
11தான் சிறந்தது. 11க்கு அதிகமாகவும் தொழலாம் எனக் கொண்டாலும் நபியவர்களின் வழிமுறையில் எங்கும் இல்லாத 23 என்ற எண்ணிக்கைக்கு கூடாமல் குறையாமல் கடைபிடித்து வருவது தவறு பித்அத் என்பது தெளிவு.
11தான் சிறந்தது. 11க்கு அதிகமாகவும் தொழலாம் என்பதாக இருந்தால் ஒருவருடம் 13 இன்னொருவருடம்15 17 21 23 என எண்ணிக்கை மாறும் விதமாகத் தொழுவித்தால் அனுமதியைப் பயன்படுத்துகிறார்கள் எனலாம். ஆனால் சிறந்ததைப் புறக்கணித்து இன்னொரு எண்ணிக்கையை தொடர்ந்து கடைபிடிக்கக் காரணம் என்ன. இது தவறு என்பது வெள்ளிடைழை.
11தான் சிறந்தது. 11க்கு அதிகமாகவும் தொழலாம் என்பதாக இருந்தால் சிறப்பைத்தான் மதீனாப்பள்ளிவாயலிலே கடைபிடிக்கவேண்டும். 11க்குத் தவிர வேறொரு எண்ணிக்கைக்குச் சிறப்பில்லை.
மதீனாப் பள்ளிவாயலிலே ஜமாஅத்தாக இந்தத் தொழுகையை பள்ளி நிரம்பி வழியும் அளவு நபித்தோழர்கள் மஃமூமாக நிற்க நபியவர்கள் தொழுவித்தார்கள். நிச்சயமாக நபியவர்கள் 11 ரக்அத்கள்தான் தொழுவித்திருப்பார்கள் என்பதில் யாரும் சந்தேகப்படவில்லை. இதுவே மதீனாப் பள்ளிவாயலில் நடந்த முதல் இரவுத் தொழுகை. அதற்குப் பின்னர் மதீனாப் பள்ளிவாயலில் இரவுத் தொழுகை நிறுத்தப்பட்டுவிட்டது.
இரண்டாவது முறையாக நபியவர்களுக்குப்பின்னால் மதீனாப் பள்ளிவாயலிலே உமர் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்களின் காலத்தில் தொழுகை நடாத்தப்பட்டது அதுவும் 11 ரக்அத்தாகவே நடந்தது. முவத்தா 304
மக்காவிலும் நபியவர்கள் 1வருடங்கள் ஜமாஅத்தாக இரவுத் தொழுகை நடத்தினார்கள். அங்கும் 11க்கு மேல் அதிகரிக்கவில்லை. (பார்க்க புகாரி:1773)
எனவே சிறப்பென வைத்தாலும் பல வகையில் நடைமுறை அந்த முடிவிற்கு மாற்றமாக இருப்பதைக் கவனிக்கலாம்
அந்த அறிஞர்களால் ஆதாரமாக முன்வைக்கப்படும் ஹதீஸைப் பொருத்தவரையில் அது தொழும் முறை பற்றிக் கேட்கப்பட்ட செய்தியே என்பது பின்வரும் அறிவிப்பில் தெளிவாகவே உள்ளது.
இதே ஹதீஸ் முஸ்லிமிலே 1799 இடம்பெறுகிறது. அதிலே மஸ்னா மஸ்னா என்றால் என்ன என்று இந்த ஹதீஸை அறிவிப்புச் செய்யும் இப்னு உமரிடத்திலே கேட்கப்பட்டபோது “ஒவ்வொரு இரண்டாவது ரக்அத்திலும் ஸலாம் கொடுப்பது என்றார்கள்.ஹதீஸை அறிவிப்பவரே அது தொழும் முறை பற்றிக் கேட்கப்பட்ட கேள்வி என்பதை விளக்கியுள்ளார்.
பின்வரும் ஹதீஸிலும் அதே இரண்டிரண்டாக என்ற வார்த்தை இடம்பெறுகிறது.
“நபியவர்கள் இரவுத் தொழுகையை இரண்டிரண்டாகத் தொழுவார்கள்.ஒரு ரக்அத் தொழுது அதை ஒற்றையாக்குவார்கள்….” அறிவிப்பவர் இப்னு உமர். ஆதாரம் புகாரி:995
நபியவர்கள் இரண்டிரண்டாக 10 அல்லது 8 தொழுதார்கள் என்றுதான் எல்லா அறிஞர்களும் இந்தச் செய்தியை விளங்கியுள்ளனர். ஏனெனில் அந்த ஹதீஸில் தொழும் முறை பற்றியும் 11க்கு மேல் அதிகரிக்கமாட்டார்கள் என்ற செய்தியில் எண்ணிக்கை பற்றியும் வந்துள்ளதை இணைத்தே இந்த முடிவுக்கு வருகின்றனர். அதே போன்றே இப்னு உமருடைய ஹதீஸை விளங்க வேண்டுமென நாம் கூறுகிறோம். 11க்கு மேலே தொழலாம் இல்லையா என்ற ஆய்வை நான் பிழை காணவில்லை அதற்கு மேல் தொழக் கூடாது என்பது எனது நிலைப்பாடு. ஆனால் 11 ரக்அத்துக்கு மேல் யாராவது ஒரு எண்ணிக்கையை வரையறுத்தால் அல்லது சிறந்தது எனக் கண்டால் அவர் பித்அத் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
அஸ்சஸலாமு அலைக்கும்
சகொதரரே ! இஸ்லாதை கொச்சை படுதும் சிலர் லலைலதுல் கடுர் இரவு 27 இல்தான் எண்று சொலுராங்க
அதற்கு சில ஆதரங்கல்ய் முன்வெய்குரர்ஹல்
அவயாவன : நாயகம் ஸல்… கூறுவதாக ஹழ்ரத் இப்னு உமர் ரழி… அவர்கள் அறிவிக்கின்ற இந்த ஹதீஸ் அஹமத் என்னும் கிரந்தத்தில் உள்ளது.
நாயகம் ஸல்… அவர்கள் , யார் அந்த (கத்ர்) இரவை நாடுவாரோ அவர் 27 ம் இரவில் அவ்வாறு (அமல்கள்) செய்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்
நூல்: அஹமத்
மேலும் ஹழ்ரத் உபைய் இப்னு கஅப் ரழி… அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
அவனை தவிர வேறு இறைவன் இல்லையே அப்படிப்பட்ட அல்லாஹ்வின் மீது ஆணையாக, அது (கத்ர் இரவு) ரமழானில் இருக்கின்றது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அது (கத்ர் இரவு) எந்த இரவு என்று எனக்கு தெரியும். அந்த 27 ம் இரவில் தான் நாயகம் ஸல்… தொழுக கட்டளையிட்டார்கள். அவ்விரவு சூரியனின் சுடர் வருவதற்கு முன் வரை உள்ளது.
நூல் : முஸ்லிம், அபூ தாவூத், அஹமத், திர்மிதி.
இதனை பற்றி சட்ரு தெலிவக விலக்கவும்… இந்த ஹதீஸ்கல் ஆதாரபுர்வமானத அதயும் விலக்கவும்
السلام عليكم
27ம் இரவை லைலதுல் கத்ர் என்கிறார்கள் என்பதற்காக மாத்திரம் தவ்ஹீத் சகோதரர்கள் யாரையும் எதிர்க்கவில்லை. லைலதுல் கத்ரில் தனித்தனியாக அவரவர்கள் வீட்டிலே எவ்வாறு தொழுதும் அழுதும் பிரார்த்தித்தும் ஓதியும் நபியவர்கள் காலத்தில் அந்த இரவைக் கழித்தார்களோ அதற்கு மாற்றமாக மஸ்ஜித்களை ஜோடனை செய்தும் இருட்டுத் தவ்பா என்ற பெயரில் விளக்குகளை அனைத்தும் சாப்பிட்டும் குடித்தும் கூட்டுத் தவ்பாவிலும் அன்றைய இரவு முழுவதையும் பாலாக்குவதைத்தான் அதனைக் கண்டிக்கிறோம் பித்அத் என்கிறோம்.
லைலதுல் கத்ர் இரவு என்பது எந்த இரவு என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்துக்கள் உள்ளதைப் பார்க்கிறோம். இமாம் இப்னு ஹஜர் தனது பத்ஹில்பாரியில் லைலதுல் கத்ர் தினம் எது என்பதில் நாற்பதுக்கு மேற்பட்ட கருத்துக்கள் உள்தாகக் கூறி அவைகளைப் பட்டியலிட்டுள்ளார்கள். அதில் பல நபித்தோழர்களின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்கள். சில நபித்தோழர்கள் 21 என்றும் இன்னும் சிலர் 23 இன்னும் சிலர் 25 ….என பட்டியல் நீளுகிறது.
1. முஆவியா ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் 27ம் இரவுதான் லைலதுல் கத்ர் என்று கூறினார்கள் என்ற கருத்தில் உள்ளார். என சுஃபா விடமிருந்து அப்பான் வழியாக அறிவிக்கப்படுகிறது.ஆதாரம் இப்னு அபீசைபா:9537
இதே செய்தி சுஃபாவிடமிருந்து அபுதாவுத் தயாலிஸி வழியாக பைஹகியில் 8818 பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புத்தான் சுஃபா விடமிருந்து உபைதுல்லாஹ் இப்னு முஆத் வழியாக அபுதாவுதில் முஆவியாவின் கருத்தாக இல்லாமல் நபியவர்களின் செய்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது உபைதுல்லாஹ் இப்னு முஆத் தவறாக அறவிவித்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. பின்வரும் ஹதீஸ் இது உபைதுல்லாஹ் இப்னு முஆத் என்ற அறிவிப்பாளர் நம்பகமானவராக இருந்தாலும் இந்த அறிவிப்பில்தவறியுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
“27ம் இரவுதான் லைலதுல் கத்ருடைய இரவு என ஒரு மனிதர் கனவு கண்டார்.(அது நபியவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு) “உங்கள் அனைவரது கனவுகளும் லைலதுல் கத்ர் இறுதிப் பத்தில் வருவதாகவே உள்ளது. ஆதலால் கடைசிப் பத்தின் ஒற்றை இரவுகளில் தேடிக்கொள்ளுக்கொள்ளுங்கள்” எனநபியவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 2820.
இந்த செய்தி 27 என்ற கனவு நபியவர்களிடம் தெரிவிக்கப்பட்டும் இறுதிப் பத்தின் ஒற்றை இரவுகளில் வணக்கம் செய்யவே நபியவர்கள் வழிகாட்டியதாகத் தெளிவாக உள்ளது. நபியவர்களுக்கு அந்த நாள் தெரியாமல் இருந்ததால்தான் நடுப்பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்னர் இறுதிப்பத்தில்தான் லைலதுல் கத்ர் என உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். முஸ்லிம் 2826.
அடுத்ததாக இப்னு உமர் அறிவிக்கும் 27 லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று நபியவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மதிலே 4808 பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆதாரபூர்வமான செய்தியாகும். இதில் 27தான் லைலதுல் கத்ர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பின்வரும் செய்தியைப் பாருங்கள்.
“லைலதுல் கத்ரை 29வது இரவிலோ 23வது இரவிலோ தேடுங்கள்” என நபிகளார் கூறினார்கள்.அறிவிப்பவர் இப்னு அப்பாஸ். ஆதாரம் புகாரி 2022 இந்த ஹதீஸை எவ்வாறு புரிந்து கொள்வோமோ அவ்வாறுதான் 27 பற்றிய ஹதீஸையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த இரவுகளில் தேடுமாறு நபியவர்ள் சொன்னார்களே தவிர அவைகள்தான் லைலதுல் கத்ருடைய இரவு என்று நபியவர்கள் கூறவில்லை.
பெண்கள் தனியாக ஜமாஅத் நடாத்தலாமா?
السلام عليكم
பெண்கள் ஆண்களுக்கோ பெணகளுக்கோ ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் நபிவழியில் காண முடியவில்லை. பெண்கள் எவ்வாறு தனி ஜமாஅத்தக ஜும்ஆத் தொழக் கூடாதோ அதே போன்றுதான் ஐவேலைத் தொழுகையும். நபியவர்கள் பெண்கள் பள்ளியில் ஆண்களைவ விட்டும் தூரமாவதையே விரும்பினார்கள் பெண்கள் ஜமாஅத்திற்கு அனுமதியிருந்தால் நிச்சயம் அதையே கட்டளையிட்டிருப்பார்கள். பெண்கள் பள்ளி என்ற ஒரு பள்ளிவாயல் நபியவர்கள் காலத்தில் இருக்கவுமில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும் முஜாஹித் மொளலவி
ஜகாத்துல் பித்ரா என்பது யாருக்கு நாம் கொடுக்கலாம். ஒரு ஏழை என்றுள்ளது. (புகாhp கிரந்த்தில்) அந்த மனிதன் தொழாமல் நோன்பு பிடிப்பவனாக இருந்தால் என்ன செய்வது.
அவன் ஏழை நோன்பும் பிடிக்காமல் இருக்கின்றான் இவா;களுக்கும் கொடுக்கலாமா?
நோன்பு ஆரம்பத்திலிருந்து பெருநாள் தொழுகை வரை கொடுக்கலாம் என்பது சாpதானா? ஹதீஸையூம் கூறவூம்.
وعليكم السلام
ஸகாதுல் பித்ரை பெருநாளைக்கு ஓரிரு நாளைக்கு முன்னரும் கொடுக்கலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் நோன்பின் ஆரம்பத்திலேயே கொடுப்பது தவறு. இறைவனை அஞ்சி வாழும் ஏழை நோன்பாளிகள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு பித்ரா போய்ச் சேரவே நாம் முயல வேண்டும். இல்லாத பட்சத்தில் எமக்குத் தெளிவாக ஒருவர் மார்க்கப்பற்றற்றவர் என்று தெரிந்தாலும் வழங்குவதில் தவறில்லை. அவரின் வறுமைக்குத்தான் உணவு மறுமைக்கல்ல.
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரியமவ்லவி ம முஜாஹித் அவர்கலே இமாம் ஜமாத்தாகததொழும் போது இமாம் ஸூரா பாத்திஹா ஓதியவுடன் மௌமூம்கள் ஆமீன் கூறுவதட்க்கு ஆதாரம் உன்டா?அப்படியாயின் ஆதாரத்துடன் விளக்கம் தரவும்.
[எல்லாம்வல்லால்லாஹு றப்புல்லாலமீன் ஏகத்துவத்துடன் வாழ்ந்து ஏகத்துவத்துடன் மரனிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் த்ந்தருல்வானாக.]
லாபீர் சறாப்தீன்
சவுதிஅரேபியா றியாத்
[இலங்கையர்]
وعليكم السلام
இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் கூறுங்கள். அறிவிப்பவர் அபூ ஹ{ரைரா. முஸ்லிம் 942
சப்தமாக ஆமீன் கூற முடியூமா. இது ஸஹாபக்களின் கூற்று என சிலா; கூறுகின்றனா; இது உண்மையா? மேலும் இதனை வைத்து கூட்டுதுஆ கூடும் என கூற வாய்ப்புண்டா?
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்களே!
ஓறூவர் ஹஜ்,உம்ர செய்யும் பொது நம் நாட்டு வலக்கில் புகல்வது பொல (அல்ஹாஜ்)
என்ட்ரு அலைப்பர்கல் அதனல் அப்படீ அலைப்பது புகல்மதிரி ஆஹிவிடும் என அஞினல் நாம் யாறீடமூம் குறாமாள் ஹஜ் செய்யளாமா
وعليكم السلام
அவ்வாறு அழைப்பதில் தவறு இல்லைஆனால் அழைக்கப்படுபவர் அதை விரும்பினால். அதற்காகவே ஹஜ் செல்வதற்கு முன்னர் தான் ஹஜ் செய்யப் போகிறேன் என்று சொன்னால் முகஸ்துதியாக மாறும். எமது மன நிலை சரியாக இருக்குமென்றால் முக்கிய உறவினர்களிடமும் நண்பர்களிடமும் விளம்பர நோக்கமின்றி வழமையாக நீண்ட பிரயாணங்களின் போது அறிவிப்பது போன்று உங்களது பிரயாணத்தை அறிவிப்பதில் தவறு இல்லை
அஸ்ஸலாமுஅலைக்கும்!
ஒரு முஸ்லிமைப் பார்த்து நீ ஒரு ஷைத்தான் எனக் கூறலாமா? உங்களை மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் ஷைத்தான் எனக் கூறுகிறார் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.51:10
இந்த குரான் வசனத்தின் ஆழமான விளக்கம் என்ன ? also தப்சீர் இப்னு கசீர் தமிழில் ஏதேனும் இனியதலத்தில் கிடய்குமா?
وعليكم السلام
அதற்கு விளக்கம் தேவையில்லை அந்த வசனத்தில் தெளிவாகவே உள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பிறை கண்ணால் பார்த்து மாதத்தை துவங்கிய அனைத்து ஹதீஸ்களும் தரமற்றவை என உலமாக்கள் விளக்கமளிக்கிறார்கள். எனவே பிறை பார்த்து நபி(ஸல்) அங்கீகரித்தாக உள்ள செய்திகளை விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்படிக்கு
முகம்மது
அஸ்ஸலாமு அலைக்கும்
எந்த ஊhpல்உள்ள உலமாக்கள் என்பதை சற்று தௌpவாக சொல்லவூம். நேயா;களுக்கு உதவக்சூகூடியதாக இருக்கும்.
இறைத்தூதH(ஸல்) அவHகள் கூறினாHகள்”
”பிறையைப் பாh;த்து நோன்பு வையூங்கள்; பிறையைப் பாHத்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.”என அப+ ஹுரைரா(ரலி) அறிவித்தாH.
(புகாhp 1909)
وعليكم السلام
இன்சா அல்லாஹ் முயற்சிக்கிறேன்
பெண் மறைக்கப்பட வேண்டியவள். அவள் வெளியே சென்றால் (வழிகெடுப்பதற்காக ஷைத்தான் அவளை நோக்கி) வந்து விடுகிறான். என நபி (ஸல்) அவா;கள் கூறினாh;கள்.
(திh;மிதி 1093)
இந்த ஹதீஸ் ஸஹீஹானதா?
எங்களுக்கு பெண்களால் கேடு, பெண்களுக்கு எங்களால் கேடு என ஒவ்வொரு நாளும் காலையில் 2 மலக்குகள் சப்தமிட்டு கூறுகின்றாh;கள் என நபி(ஸல்) கூறினாh;கள். அறிவி: அபூசயீத் அல் குத்ரி (ரலி)
நூல் : இப்னு மாஜா
ஸஹீஹானதா? லஈப் என்றால் காரணத்தையூம் தருக
وعليكم السلام
سنن ابن ماجه – 3999 – حدثنا أبو بكر بن أبي شيية وعلي بن محمد . قالا حدثنا وكيع عن خارجة ابن مصعب عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه و سلم مامن صباح إلا وملكان يناديان ويل للرجال من النساء وويل للنساء من الرجال
في الزوائد في إسناده خارجة بن مصعب وهو ضعيف . ضعيف جدا
“பெண்களால் ஆண்களுக்குக் கேடு. ஆண்களால் பெண்களுக்குக் கேடு. என ஒவ்வொரு காலையிலும் இரண்டு மலக்குமார்கள் அழைக்காமல் இருப்பதில்லை.” என நபியவர்கள் கூறியதாக அபு ஸஈத் அல் குத்ரி அறிவிப்பதாக ஒரு செய்தி இப்னு மாஜாவில் 3999 பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியில் இடம்பெறும் காரிஜா இப்னு இப்னு முஸ்அப் மிக பலஹீனமானவர். என பல அறிஞர்கள் விமரிசித்துள்ளனர். இமாம் பூஸைரி அவர்கள் அவர்கள் இப்னுமாஜாவிற்கு எழுதிய “மிஸ்பாஹ்” என்ற நூலில் இதைக் குறிப்பிட்டுமுள்ளார்.
وعليكم السلام
ஆம் இந்தச் செய்தி திர்மிதி இப்னு குஸைமா தபரானி போன்ற நுற்களில் பதிவுசெய்யப்பட்ட ஸஹீஹான செய்தி
ஜஸாகல்லாஉ கைரன்
assalamualikum brother,
one of my friend in qatar asked me this question.. is it allowed to pray janasa prayers for his uncle who passed away in srilanka?
muslim bro
وعليكم السلام
நபிவழியில் இதற்கான எந்த அனுமதியையும் காண முடியவில்லை.ஆனால் அவருக்காகப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள் பாவமன்னிப்புத் தேடச் சொல்லுங்கள்
தயவு செய்து ஆங்கிலத்தில் விளக்கம் கேட்பதாயின் எமுது ஆங்கில இணையத்தளத்தில் உங்கள் கேள்வியை பதிவு செய்யுங்கள்
“Bissmillahirrahman Irraheem ………”
Assalamu Alaikkum,
I thank you very much for able us to study the religion through the web sites. Also, may Allah reward you more and more in future? I have some simple questions below, which is faced with me always.
Quest;
01. We our Muslims will be 73 divisions in future an according to that one (01) & only division will go to the “jannah…..” So, who so ever follow the Quran & Saheeh Hatheedh those will be going to the “jannah…..” Is it Sunni Muslims …..? How we could verify thus 01 & 72 divisions, then we Muslims have any rights to fight against them 72 divisions?
02. Some Muslims community they visiting the “Avvliya’s……..” for protect them self by him. Is it means thus community did not accept Allah as them “Yah Rubben…….”! Them keeping a broker between Allah. Is it correct! Then, any Muslim community having fully rights to avoid it? Then by do by die or die by do for ALLAH?
03. Such my blood relative may become a none Muslim become a Muslim later on has any rights to argue or fight for my rights unless not exceeding the Islamic Sunnah? None Muslim become a Muslim later on also, blood relatives of none Muslims do they have any rights to support and protect the blood relatives?
04. If the above 03 question could say the Sunni Muslims become relatives of none Muslims and did the blood relative have any rights to fight against the Shiha Musliம் ?
The above 04 questions I have prepared by my self and there are no any people whom so ever I knew well to ask and clear this matter through online or direct to my e-mail that it will more appreciated.
So please, if you find any mistake with above questions please observe for ALLAH and hope your correct answer in this regards.
Truly,
MiRzA(n) Uwais.
கஹட்டோவிட்ட
Member No.2…
وعليكم السلام
தயவு செய்து ஆங்கிலத்தில் விளக்கம் கேட்பதாயின் எமுது ஆங்கில இணையத்தளத்தில் உங்கள் கேள்வியை பதிவு செய்யுங்கள்
பெண்கள் முகம் மூடுவது கட்டாயமா? ஆதரத்துடன் விளக்கவும்
وعليكم السلام
ஆய்வுக்குறிய கேள்வி என்பதால் தொகுக்க நேரம் எடுக்கும். இன்சா அல்லாஹ் பதிவு செய்கிறேன்
ஆஸ்ஸலாமூ அலைகும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்களே!
இண்கு கடார் ல உல்ல சிலர்க்கு பனி புரிஉம் இடத்தில் விசா சும்மா குடுக்குரார்கள் ஆணால் சிலர் அன்த விசாவை இன்கு வரும் நஃபருக்கு அணூப்பி வரும் ஆளீடம் (காசு) வேண்குறார்கள். இப்படிப்பட்ட இந்த செயல் இஸ்லாதின் பாறர்வைல் கூடுமா?
இது (ஹளாளா, ஹறாமா)
வஸ்ஸலாம்
وعليكم السلام
சட்டத்தில் விற்க அனுமதியிருந்தால் அதைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை. சட்டம் அதை தடை செய்யுமென்றால் தவிர்க்க வேண்டும்
யா ரசூலல்லாஹ் தாங்களுக்கு நபித்துவம் எப்பது கிடைக்கப் பெற்றது?..ஆதம்(அலை ) உடலுக்கும் ரூஹுக்கும் மத்தியிலே இருக்கும் போது எனக்கு நபித்துவம் கிடைக்கப்பெற்றது .அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி ) திர்மிதி (3542 )
இந்த ஹதீஸ் சஹீஹா?
அப்படியாயின் இதன் கருத்து என்ன?
وعليكم السلام
எப்பொழுது உங்களுக்கு நபித்துவம் கடமையாகியது ? அல்லது ஏற்பட்டது? ஆதம் டலுக்கும் உயிருக்கும் இடையே ஈருக்கும் போது என்ற வசனத்தின் கருத்து நபியவர்கள் அப்போது உயிருடன் இருந்தார்கள் என்பதல்ல. அதற்கு இந்த ஹதீஸில் எந்த முகாந்தரமும் இல்லை. நபியவர்களுக்கு நபிப்பட்டம் கிடைக்கும் என்று எ;பnhழுது இறைவன் தேர்ந்தெடுத்தான் என்பதையே இந்த ஹதீஸ் சொல்கிறது. தரம் பற்றிச் சொல்ல அவகாசம் தேவை
குர்ஆன் வசனம் (69:44,45) இற்கு பீ.ஜே. அவர்கள் இப்படி மொழி பெயர்த்துள்ளார்கள். இந்த மொழி பெயர்ப்பு சரிதானா?
சில சொற்களை இவர் (முஹம்மது) நம் மீது இட்டுக் கட்டியிருந்தால், இவரை வலது கையால் தண்டித்திருப்போம்.
35
وعليكم السلام
யமீன் என்ற அரபிச் சொல் வலது , சக்தி , அபிவிருத்தி கொண்டது போன்ற கருத்துகளில் பயன்படுத்தப்படும் வலது கை என்று அந்த சொல்லிற்கு நேரடிப் பொருள் கிடையாது. ஆனாலும் மொழி வழக்கில் வலதுகை என்பது வலது என்று சுருங்கியது. அரபு மொழியில் வலது கை என்று சொல்வதென்றால். அல்யதுல் யமீன் என்று சொல்வதில்லை. அல்யதுல் யும்னா என்றே சொல்லப்படும். உனது வலது என்றால் கையைக் குறிக்கப் பயன்படுகிறது. மிருகத்தின் வலது என்றால் கையைக் குறிப்பதில்லை அதன் பக்கத்தையே குறிக்கும். வீட்டின் வலது என்றால் பக்கத்தையே குறிக்கும் எனவே யமீன் என்ற சொல்லுக்கு கை என்பது பாவினை வழக்கே தவிர அந்தச் சொல்லில் கை என்ற கருத்து இல்லை. எந்த இடத்தில் எதற்கு உபயோகிக்கிறோம் என்பதைப் பொருத்துத்தான் கையைக் குறிக்கிறதா திசையை குறிக்கிறதா பக்கத்தைக் குறிக்கிறதா என்பது தெரியும். ஏனெனில் வலது என்பதில் எதனுடைய வலது என்ற கேள்வி தொக்;கி நிற்கிறது. அவரது வலதிலே என்று வரக் கூடிய ஏராளமான ஹதீஸ்களில் வலது கை என்று மொழிபெயர்க்கப்படுவதில்லை. வலதுபக்கத்திலே என்று மொழ பெயர்க்கிறோம். காரணம் அந்த இடம். அல்குர்ஆனிலும் யமீன் என்ற சொல் கை திசை சக்தி என்று பல கருத்தில் இடத்தைப் பொருத்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சுட்டிக்காட்டும் வசனத்தைப் போன்ற ஒரு முரண்பாடு பின்வரும் வசனத்திலும் அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது
“பின்னர் அவைகளை பலமாக அடித்தார்.37:93 என்று இப்றாஹீம் நபி சிலை உடைப்பு பற்றி அல்லாஹ் கூறுகிறான். அங்கே பலமாக என்ற இடத்தில் நீங்கள் சுட்டிக் காட்டும் வசனத்தில் உள்ள பில் யமீன் என்ற சொல்லே ஆளப்பட்டுள்ளது. அங்கே அறிஞர்கள் சக்தியென்றும் வலது என்றும் பொருள் வைப்பதில் முரண்படுவதை தப்ஸீர்களில் காண முடிகிறது. இந்த இடத்தில் எவ்வாறு பொருள்கொள்வதிலும் பிரச்சனையில்லை. இந்த இடத்தில் மௌலவி பீஜே அவர்கள் பலமாக என மொழிபெயர்த்துள்ளார். வலது கரத்தால் என்று மொழிபெயர்க்கவில்லை. ஆனால் அந்த இடத்தில் “வலது கையால்” என்று மொழிபெயர்த்துள்ளார். வலது என்ற சொல்லை அல்லாஹ் அங்கே யாருடைய என்ற விளங்கும் வகையில் பிரதிப் பெயர்ச் சொல் இல்லாமல் உபயோகப்படுத்துகிறான். எனவே யாருடனும் சம்பந்தப்படுத்தாமல் சொல்கின்ற பொழுது அல்லாஹ்வுடைய வலது கையைத்தான் அது குறிக்கிறது எனும் வகையில் மொழிபெயர்க்காமல் பில்யமீன் என்பதற்கு எப்படி பலமாக என்று மொழிபெயர்த்துள்ளாறோ அவ்வாறு மொழிபெயர்ப்பதுதான் பொருத்தமானது.
A’mro Bin A’bsa reported: I asked the Prophet: what is the best time of the night? He [ the prophet- replied: " the last part of the night. PRAY AS MUCH AS YOU WISH because Salah at that time is witnessed and written ( by angles) and do so until you pray Subh ( Fajir)...." [ Sahih Ibn Khuzaima:260 and Mustadrak: 584]
அஸ்ஸலாமு அழைக்கும்
முஸ்லிம்கள் நிறையப்பேர் தொழிலுக்காக வெளிநாடு செல்வது வழக்கம், அப்படி செல்பவர்களில் சிலர்
உம்ரா கடமையினை நிறைவேற்றப்போவதாக கூறி விசா எடுத்து அங்கு அந்த நாட்டு அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் தொழில் செய்கின்றார்கள்,
அதோடு இன்னும் சிலர் யூகே , ஆஸ்திரேலியா, அமேரிக்கா போன்ற இன்னும் பல நாடுகளில் அந்த நாட்டின் அனுமதியின்றி வேலைசெய்து சம்பாதிக்கின்றார்கள்(பாய்ந்து வேலைசெய்தல் )
1 . இவ்வாறு சம்பாதிப்பது கூடுமா?
2 . இந்த சம்பாதிப்பில் சிலர் பள்ளிகளுக்கு, குடும்பத்திக்கு, சகாத், சதகா போன்ற உதவிகளை புரிகின்றார்கள் அவ்வாறு இந்த உளைப்பைக்கொண்டு சையும் நல்ல வேலைகள் கூடுமா?
அதோடு அவர் அவ்வாறு பாய்ந்து வேலை செய்கிறவர் என்று தெரிந்துகொண்டும் அந்த உதவிகளை பெறமுடியுமா?
وعليكم السلام
ஒருவர் எந்த நாட்டிற்கு வருவதிலும் செல்வதிலு; எந்த ஒரு சட்டமும் ஞாயமான காரணமின்றித் தடுக்க முடியாது. ஆனாலும் இஸ்லாத்திற்கு முரணாகாத வரை இயன்றளவு சட்டங்களுக்குக் கட்டுப்படுவதே தனிமனிதனுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூக நலனிற்கும் ஏற்றது. ஆனால் தொழிலிற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. ஒருவரது உழைப்பு ஹலாலனதாயின் அதில் நீங்கள் வினவியவைகளைப் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போன்று உம்ரா என்று மார்க்கத்தின் பெயரைப் பயன்படுத்தி தொழில் பெறுவது ஏமாற்றாகும். இதை நமது சகோதரர்கள் தவிர்க்க வேண்டும். அதிலும் அவர்கள் ஈட்டும் வருமானத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்களே!
01. திருமணத்துக்கு பெற்றோரின் விருப்பத்துக்கு மாத்திரம் தானா பெண் இணங்க வேண்டும்? அப்பெண்ணுடைய விருப்பத்தை கவனிப்பதில்லையா? தனக்கு விருப்பமானவரை முடித்து தருமாறு பெற்றோரிடம் கேட்க முடியாதா?
கேட்டாலும் அவ்வாறு செய்ய முடியாது என்று பெற்றோர்கள் கூறலாமா? பெற்றோரின் சம்மதப்படி நடந்தால் தான் அத்திருமணம் நன்றாக இருக்குமாம்?
அப்படி கூறுவது சரியானதா? பெண்களின் விருப்பத்தை கவனிக்கக் கூடாதா?
02. இஸ்லாத்துக்கு வந்தவரை (இஸ்லாத்துக்கு வந்து நீண்ட வருடமாகியும்)முஸ்லிமல்ல என்று சொல்லலாமா? இது கூடுமா?
03. உறவினர்களை விலக்கி வைக்கலாமா? அவர்களுடன் கோபித்து நடக்கலாமா? சொத்துப் பிரச்சினை, ஏச்சு, ஏமாற்றம், துன்பம், அநியாயம், அநீதி ,உதவி செய்யாமை போன்ற கார்ணிகளால் பாதிக்கப்பட்டதற்காக அவ் உறவினர்களுடன் பேசாமல் இருக்கலாமா? விலகி இருக்கலாமா? மேலும் இஸ்லாத்துக்கு வந்த உறவினர்களையும் ஒதுக்கி வைக்கலாமா?
04. நாட்டம் நிறைவேறுவதற்கு இறைவனுக்காக என்ன செய்ய வேண்டும்?
05. வேறு மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாத்துக்கு வந்து தற்போது முப்பது வருடமாகிறது.அப்பெண் திருமணத்துக்கு முன்பு முஸ்லிம் ஒருவர் மூலம் கருத்தரித்தாள்.அவள் இஸ்லாத்துக்கு வந்து அம்முஸ்லிமவரை திருமணம் முடித்து குழந்தையை பிரசவித்தாள்.எந்த பாவமும் அறியாத அக்குழந்தையை ஹராமான குழந்தை என்று சொல்லலாமா? பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே என்று சொல்லுகின்றோமே என்ற கேள்விக்கு நீங்கள் விடையளித்தாலும் அப்பெண் அதே முஸ்லிமவரை திருமணம் முடித்ததற்காக அது விபச்சாரமா?
எங்கே இந்த கேள்விகலுக்கு விடையளித்துள்ளீர்கள்? விடையளிக்காத படியால் மீண்டும் பதிவு செய்தேன். மேலும் நீங்கள் இந்த கேள்விகலுக்கு விடையளிக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளீர்கள்.”உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க முஜாஹித் அவர்கள் விடையளிப்பார் என்று கூறினீர்கள்.அத்துடன் சற்று தாமதம் ஏற்படும் என்று சொன்னீர்கள்”. பிறகு கொஞ்சம் நாள் போன பிறகு மீண்டும் பார்த்த போது விடைகளை காணவில்லை. எனவே மீண்டும் பதிவு செய்கிறேன்.
தயவு செய்து இந்த 5 கேள்விகளுக்கு விடை தருமாரு தயவாய் வேண்டிக் கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்கலே என்னுடன் வேலை செய்யும் முஸ்ஸலிம் அல்லாத ஒருவர் என்னிடம் ஒரு கேல்வி கேட்டார் நான்கொடுத்த பதில் அவரை திருப்ப்தி யடயச் செய்யவில்லை,அதனால் இந்தகேல்வியைஉங்கலிடம் கேற்கிரேன்.அவர் கேட்ட கேல்வி இதுதான்;அதாவது
ம்றுமை நாளில் முஸ்லீம்கள்மட்டுமே இறைவனைப்பார்க்கமுடியும்மற்றவர்கலுக்குதிரையிட்டுஅடைக்கப்படும் என்று குர் ஆன்கூறுகிறது.அதே போலொருகுழந்தைக்கு நான்கு மாத கருவிலேயேஅதனுடைய.செயல்கலையும் ஆயுலயும் இறைவன் எழுதி விடுகிறான் என்றும் குர் ஆன் கூறுகிறது.அப்படி இருக்கையில்.மறுமை நாளிள் இரைவனே இந்து.முஸ்லிம்.கிரிஸ்தவம்.என்று.பேதம் பார்க்கலாமா?எல்லோரும் அவனுடைய பிள்ளைகள் அல்லவா?[அதாவயது அவர் கேற்பது இறைவன்கருவிலேயே. முஸ்லிம்.ஹிந்து.கிரிஸ்தவம்.என்று எழுதி விடுகிறாந்தானே.அப்படியானால் இறைவன் எப்படிதன்டனை தரமுடியும்?]
லாபீர் சறாப்தீன் அவருடையபெயர்;கிரிஸ்னகுமார்
சவுதிஅரேபியா ரியாத்
[இலங்கையர்] [இந்தியா திழ் நாடு]
وعليكم السلام
இக்கேள்வி மாற்றுமதச் சகோதரர்களால் தங்கள் மதத்தை ஞாயப்படுத்த வழமையாகக் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இன்சா அல்லாஹ் இயன்றவரை அவசரமாக பதில் எழுத முயற்சிக்கிறேன்
இன்ஸா அல்லஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்…. ஹாரூத் மாரூத் பற்றி சிலர் அவர்கள் செய்த்தான்கள் என்கிறார்கள். வேறு சிலர் அவர்கள் மலக்குகள் என்கிறார்கள். இதில் எது அல்குரான் ஹதீஸ் அடிப்படையில் சரியானது? விரிவாக விளக்கம் தரவும்
وعليكم السلام
ஹாரூத் மாரூத் மலக்குகளா மனிதர்களா என்ற கருத்து முரண்பாடு வரலாற்று நெடுகிலும் காணப்படும் ஒன்று. சைத்தான்கள் சூனியத்தைக் கற்பித்துக் காபிர்களானார்கள் என்று அல்லாஹ் சொல்வதால் குப்ரான காரியத்தை அல்லாஹ் ஏவமாட்டான் என்றே நாம் கூற வேண்டியுள்ளது. அவர்களை மலக்குகள் என்பதை விட சைத்தான்கள் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது என்று நான் விளங்குகிறேன்.இல்லையென்றால்குப்ரான ஒன்றை இறைவன் ஏவினான் என்றாகிவிடும்.
இன்சா அல்லாஹ் இந்நிலைப்பாட்டை விரிவாக விளக்க முயற்சிக்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்களே
ஒரு குலந்த பிரந்தல் அந்த குலந்தைன் ஒரு காதில் அதான், இன்னொரு காதில் இகாமத்தும் சொல்ஹிர பலக்கம் உன்டு இந்த செயல் இஸ்லதின் பார்வைல் கூடுமா. இதன் பதீலை அவசரமாக எதிர்பர்க்கிரென்.
ஜஸாகல்லாஉ கைரன்
وعليكم السلام
இது சம்பந்தமாக வரக்கூடிய அனைத்துச் செய்திகளும் பலஹீனமானவைகள். அவ்வாறு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்
அஸ்ஸலாமு அழைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்களே
தயவு செய்து சகாத் பதி அதன் சட்டம்கல் விரிவான விலக்கம் தண்தால் உபயொஹமாக இருக்கும்
ஜஸாகல்லாஉ கைரன்
وعليكم السلام
இன்சா அல்லாஹ்
மலை நேரதில் சேர்த்து தொலளாமா?
பின்வரும் கட்டுரையைப் பார்வையிடவும்
அஸ்ஸலாமு அழைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜஹித் அவர்களே
குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா
குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா அல்லது கூடாதா என்பதில் பலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதனை நாம் சற்று கவனமாக ஆராய்வோம்.
ஜஸாகல்லாஉ கைரன்
இப்படிக்கு
முஹம்மத் நிலஃப்டின்
தூய்மையானவர்களைத் தவிர…
குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா
குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா அல்லது கூடாதா என்பதில் பலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதனை நாம் சற்று கவனமாக ஆராய்வோம்.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
“நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. “தூய்மையானவர்களைத் தவிர (வெறெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்” (அல்குர்ஆன் 56:78,79)
நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் ‘குர்ஆனைப் தூய்மையானவர்களைத் தவிர மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூபக்ருபின் முஹம்மதுபின் அம்ரு பின் ஹஜ்மு (ரலி) நூல்கள்: நஸயீ, பைஹகீ, தாரகுத்னி
மேற்காணும் ஆயத்தில் இதனைத் தொடமாட்டார்கள் எனும் வாசகம் இருக்கிறது. இதனை என்று சொல்லப்பட்டிருப்பது “பாதுகாக்கப்பட்ட ஏட்டை” என்பதுதான் பொருள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் கூறுகிறார்கள்.
அடுத்து நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் ‘குர்ஆனைப் பரிசுத்தமானவரின்றி மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியிருப்பதால் நபி (ஸல்) அவர்களே பாதுகாக்கப்பட்ட ஏட்டை என்று பொருட்கொள்ளாது குர்ஆனை என்று தானே பொருள் கொண்டிருக்கிறார்கள் எனலாம். அப்படி என்றால் அவர்கள் தொடவேண்டாம் என்று கூறாது “தொடமாட்டார்” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறிருக்க தொடமாட்டார் என்னும் வார்த்தைக்கு தொட வேண்டாம் என்று பொருட்கொள்வது எங்கனம் பொருந்தும்?
அவ்வாறே ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் அந்த வாசகம் குர்ஆனைப் தூய்மையானவர்தான் தொடவேண்டும் என்பதைப் பொதுவாகக் காட்டுகிறதே தவிர ஒளுவில்லாதவர் அதைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டுவதாக அது அமைந்திருக்கவில்லை.
ஏனெனில் தூய்மையானவர் என்ற வார்த்தை பல கருத்துக்களைக் கொண்ட பொதுச் சொல்லாக அமைந்திருக்கிறது. அதற்கு [1] ஒளு செய்து சுத்தமானவர் [2] கையை மட்டும் களுவி சுத்தமானவர் [3] குளித்து சுத்தமானவர் [4] ஷிர்க் [இணைவைத்தல்] என்னும் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம் என்ற வகையில் சுத்தமானவர் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் கொள்ள இடமிருப்பதால் ஒளு செய்து தூய்மையானவர் என்று மட்டும் பொருள் கொள்வதற்கு தக்க ஆதாரம் குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இருந்தாக வேண்டும். அவ்வாறிருப்பதாக தெரியவில்லை. அல்லாஹ்வும், ரசூலும் பொதுவாக சொல்லியிருக்கும் ஒரு வார்த்தைக்கு அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அதற்கு குறிப்பிட்டு விளக்கம் தராதிருக்கும்பொழுது , தக்க ஆதாரமின்றி அதற்கு இதுதான் விளக்கம் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது?
ஆகவே மேற்காணும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் ஒளுவில்லாது குர்ஆனைத் தொட்டால், அவ்வாறு அவர் தொடுவதைத் தடுப்பதற்கு மார்க்க ரீதியாக நம்மிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஜஸாகல்லாஉ கைரன்
இப்படிக்கு
முஹம்மத் நிலஃப்டின்
அஸ்ஸலாமு அலைக்கும்! ஹாரூத், மாரூத் தொடர்பாக நான் பி. ஜே. இற்கு எழுதிய விமர்சனத்தையும், புதிதாக இன்னுமொரு பகுதியையும் சேர்த்தியுள்ளேன். இது தொடர்பான விளக்கம் ஒன்றை உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றேன்.
சகோதரர், பீ.ஜே.அவர்களே! வை.எல்.ஜினான்,
அஸ்ஸலாமு அலைக்கும்! (அபூதாபி), இலங்கை.
ஹாரூத் மாரூத் தொடர்பாக……
.உங்களது ஒன்லைன் பி ஜே யில், சிறிய உரைகள் – வீடியோ என்ற பகுதியில் ஹாரூத் மாரூத் என்ற தலைப்பின் கீழ் நீங்கள் பெசியுள்ளதைக் கேட்டேன்.
உங்களது தர்ஜுமாவில், (2:102) ம் வசனத்தில், ‘வமாஉன்சில அலல்மலகைனி’ என்பதற்கு ’(ஜிப்ரீல்,மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை’ என மொழிபெயத்துள்ளீர்கள்.
’பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத்,மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர்.’ என்றும் மொழிபெயத்துள்ளீர்கள்.
’அலல்மலகைனி’ என்பதற்கு விளக்கமளிக்கும் போது, முன்னர் 2:98 ம் வசனத்தில் ’ஜிப்ரீல், மீக்காயீல் எனும் இரு மலக்குகள் பற்றிக் கூறப்பட்டிருப்பதால், இவ்விருவரையும்தான் அது குறிப்பிடுகிறது என விளக்கியுள்ளீர்கள்.
இங்கு ஒரு சிக்கல் ஏற்படுகின்றது. அதாவது தற்போது புத்தக வடிவில் இருக்கின்ற குர்ஆனில் வசனங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வரிசைப்படி குர்ஆன் வசனங்கள் இறக்கப்படவில்லை. முன்பின்னாகத்தான் வசனங்கள் இறங்கின. அதாவது தற்போதுள்ள சமுதாயம் குர்ஆனைப்பார்த்து 102 ம் வசனத்திற்கு முன்பதாக 98 ம் வசனம் அமைந்துள்ள காரணத்தினால் முன்னர் 2:98 ம் வசனத்தில் ’ஜிப்ரீல், மீக்காயீல் எனும் இரு மலக்குகள் பற்றிக் கூறப்பட்டிருப்பதால், நீங்கள் சொல்லும் விதமாக புரிந்து கொள்வதற்கு இடமுண்டு.
இருந்தாலும் சஹாபாக்களைப் பொருத்தவரை இதே மாதிரியாக புரிந்து கொள்வதாயின் 102 ம் வசனத்திற்கு முன்பதாக 98 ம் வசனம் இறக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே 102 ம் வசனத்திற்கு முன்பதாக 98 ம் வசனம் அருளப்பட்டதாக ஏதாவது அறிவிப்புக்கள் உள்ளனவா?
அடுத்தது நீங்கள் ஷைத்தான்கள் எனும் சொல்லுக்கு, மனித ஷைத்தான்கள் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு ஆதாரமாக 2:14,6:112 வசனங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். மேற் குறிப்பிடப்பட்ட வசனங்களின் போது ஷைத்தான்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மனிதர்களைத்தான் அது குறிப்பிடுகின்றது என்று அவ் வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தின் போது புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
மேற் குறிப்பிட்ட 102 ம் வசனத்தை விளக்கும் போதும் இங்கு ஷைத்தான்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மனித ஷைத்தாங்களைத்தான் எனக் கூருகின்றீர்கள். உங்களது தர்ஜுமாவில், ‘பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்கு கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தாங்களே மறுத்தனர்’ எனவும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளீர்கள். இங்கு குறிப்பிடப்படும் ஹாரூத், மாரூத் என்ற இருவரும் ஷைத்தான்கள் அல்ல! அவர்கள் இருவரும் மனித ஷைத்தான்கள்தான் என்ற முடிவை எடுப்பதற்கு எந்த மாதிரியான காரணிகளை உதவியாக எடுத்துக்கொண்டீர்கள்
நீங்கள் மலக்குகள் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தல் என்பது மலக்குகளின் குண நலன்களை பார்க்கும் போது இந்த விடயம் அவர்களுக்கு பொருந்தாது எனக் கூருகின்றீர்கள். இந்த முடிவு சரியானதுதான்.
இருந்ததாலும் அல்லாஹ் ஷைத்தானைப் பற்றி குர்ஆனில் குறிப்பிடுகையில், 1. ஏமாற்றுபவன் 2. பொய் சொல்பவன் 3. பொய் வாக்குறுதி அளிப்பவன். 4. வழிகேட்டில் இட்டுச் செல்பவன் 5. நரகிற்கு அழைப்பவன், பகிரங்க விரோதி என பலவாறாகக் கூறுகின்றான். ஆனால் இங்கு இந்த இரு ஷைத்தான்களும், அதாவது ஹாரூத், மாரூத் எனும் இருவரும், நாங்கள் சோதனையாக இருக்கின்றோம் எனவே நிரகரித்து விடாதே! என்று கூறாமல் யாருக்கும் அதை கற்றுக் கொடுப்பதில்லை என குர் ஆன் கூறுகிறது.
இங்கு ஷைத்தான்கள் குர் ஆன் கூறும் பன்புகளுக்கு மாற்றமாக நடந்துள்ளனர்.
அல்குர்ஆன் வசனம் (59:16) இல், நயவஞ்சகர்களுக்கான உதாரணமாக அல்லாஹ் ஷைத்தானை குறிப்பிடுகிறான். இங்கு ஷைத்தான், மனிதனை நோக்கி, ‘நீ நிராகரித்து விடு’ எனக் கூறியதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். இங்கு வசனம் (2:102) இல், ஷைத்தான் அல்லாஹ் குறிப்பிடும் உதாரணத்திற்கு மாற்றமாக, நீ நிராகரித்து விடாதே என்றுதான் கூருகின்றான்.
மலக்குமார்கள் ஒருக்காலும் சூனியத்தைக் கற்றுக்கொடுக்க மாட்டார்கள் எனவும், எனவே ஹாரூத், மாரூத் எனும் இருவரும் மலக்குமார்கள் அல்ல அவர்கள் இரு ஷைத்தான்கள் எனவும் கடைசியாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
’அல்லாஹ் மானக்கேடான காரியங்களையும், பாபமான காரியங்களையும் ஏவ மாட்டான்’ என குர் ஆன் கூறுகிறது. அந்த அடிப்படையில் அவ்விருவரும் ‘இதைக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தால் அவர்கள் மலக்குகளாக இருக்க முடியாது. ஆனாலும் ‘கற்றுக்கொள்ள வேண்டாம்’ என்றுதான் கூறுகின்றார்கள். மேலும் கற்றுக்கொண்டால் காபிராகி விடுவீர்கள் என்றுதான் கூறுகின்றார்கள். அதாவது உண்மையைத்தான் கூறுகின்றார்கள்.
எனவே ஷைத்தான்கள் இப்படி நடந்துகொள்ள முடியுமா? என்பதையும் ஆதாரத்துடன் விளக்கவும்.
இது தொடர்பாக மற்றும் சிலர் இப்படியும் ஒரு கருத்தைக் கூறுகின்றார்கள்!
”இதனைக்கற்ற மக்களை அல்லாஹ் காபிர்கள் என்று கூறவில்லை மாறாக இதனை செய்வதன் மூலம் தான் காபிராகிரார்கள். இதனையே ஹதீஸ் சொல்கிறது. சூனியக்காரணை உண்மைபடுத்துகிறானோ அவன் முஹம்மத் மீது இறக்கப் பட்டதை நிராகரித்து விட்டான் என தெளிவு படுத்துகிறது. இதனைத்தான் நான் கூறுகிறேன். மாறாக சூனியக்காரனிடம் சென்று அவனது விடயங்களை தெரிந்துகொள்வதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்பதை மேற்கண்ட வசனம் சுட்டிக்காட்டுகிறது மீறி ஒருவர் கற்றுக்கொண்டால் குப்ர் இல்லை ஆனால் அதனை உண்மைபடுத்துவாறேயானால் நிராகரித்துவிட்டார் என்பது தெளிவு”
நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். காபிராகிவிடாதீர்கள். என்றுதான் உள்ளது. கற்றுக்கொள்வதன் மூலமாக என்பதை சேர்க்கக் கூடாது என்பதும் ஒரு சிலரின் விளக்கமாகும்.
وعليكم السلام
ஹாரூத் மாரூத் மலக்குகளா மனிதர்களா என்ற கருத்து முரண்பாடு வரலாற்று நெடுகிலும் காணப்படும் ஒன்று. சைத்தான்கள் சூனியத்தைக் கற்பித்துக் காபிர்களானார்கள் என்று அல்லாஹ் சொல்வதால் குப்ரான காரியத்தை அல்லாஹ் ஏவமாட்டான் என்றே நாம் கூற வேண்டியுள்ளது. அவர்களை மலக்குகள் என்பதை விட சைத்தான்கள் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது என்று நான் விளங்குகிறேன்.இல்லையென்றால்குப்ரான ஒன்றை இறைவன் ஏவினான் என்றாகிவிடும். இன்சா அல்லாஹ் இந்நிலைப்பாட்டை விரிவாக விளக்க முயற்சிக்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்!
“சூனியமும், மறுக்கப்படும் சஹீஹான ஹதீஸ்களும்” என்ற உரையை யூடியுப் இல் கேட்டேன். நன்றாக இருந்தது. ஜசாகல்லாஹு ஹைறா!
ஒரு கேள்வி:- சகோதரர் பீ.ஜே. அவர்கள், சாலிம் என்பவர் அந்நிய பென்னொருவரிடம் பால் குடித்ததாக வரும் ஹதீஸ் சஹீஹானதான். இருந்தாலும் அதில் இடம் பெரும் சம்பவத்தைப் பார்த்தால், எத்தனையோ ஹதீஸ்களுக்கும், குர்ஆன் வசனங்களுக்கும் முரண்படுகின்றது. இதற்கு பல காரணங்களையும் முன் வைக்கின்றார். அவைகள் ஏற்கக் கூடியதாகவும் உள்ளது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகின்றார்.
இந்த ஹதீஸ் தொர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன?
وعليكم السلام
அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நீங்கள் கேட்ட கேள்விக்குறிய பிரச்சனையை நான் அறிவேன். இன்சா அல்லாஹ் விடை முயற்சிக்கிறேன்
முடியுமானால் நிரூபியுங்கள். இப்படித் தான் எத்தனையோ விடயங்களுக்கு பதில் அளிப்பேன் எனக் கூறிக் கூறி மழுவுகிரீர்கள்
وعليكم السلام
சகோதரர் ராசித் அவர்களே. நான் மழுப்ப வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை.. காரணம் தெரியாது என்று நான் கூற சிறிதும் தயங்கமாட்டேன். அதற்குறிய விளக்கம் தெரியாதிருந்தால் ஹதீஸ் ஸஹீஹானதுதான் ஆனால் அதற்குறிய விளக்கம் எனக்குத் தெரியாது என்று தெளிவாகவே சொல்லியிருப்பேன். அதே நேரம் இஸ்லாமயி அறிஞர்களால் வரலாறு நெடுகிலும் பலமானது எனக்காணப்பட்ட ஒரு ஹதீஸ் ஒரு தனிநபரின் அர்த்தமற்ற கேள்விகளால் ஒருகாலமும் தரமிழந்து பலஹீனமாகிவிடாது. சில வாதங்கள் சிலந்தி பிண்ணும் வலைகள் என்பதை நான் பதில் எழுதும்போது புரிந்துகொள்வீர்கள். இன்சாஅல்லாஹ். எழுத அவகாசம் தாருங்கள்.
எனது காம்மெண்டை அழிக்காமல் அதற்க்கு பதில் அளித்ததற்கு முதலில் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஏனென்றால் நான் உங்கள் இணையத்தளத்தில் எழுதும் ஒவ்வொரு காமேன்ட்சையும் அழிப்பதில் நீங்கள் வல்லவர்.
இப்பொழுது உங்களின் பதிலை சற்று அவதானிப்போம்! நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் //ஒரு ஹதீஸ் ஒரு தனிநபரின் அர்த்தமற்ற கேள்விகளால் ஒருகாலமும் தரமிழந்து பலஹீனமாகிவிடாது. //
நீங்கள் இங்கே யாரைப் பற்றி கூறுகிறீர்கள் என்று நன்றாகத் தெரியும். நீங்கள் யாரைப் பற்றி இங்கே குறிப்பிட்டுல்லீர்களோ, அவரிடம் தங்களைப் பற்றி உள்ள ஆதாரத்தை வெளியிட்டால் மக்கள் காறித் துப்புவார்கள்.
அர்த்தமற்ற கேள்விகள் என்று நீங்கள் உளறுகிறீர்கள். இந்த கேள்விகள் அர்த்தமற்றதா? என நீங்கள் சிந்தித்திருந்தால் இவ்வாறு கூறியிருக்க மாட்டீர்கள்.
இந்தக் கேள்விகள் அர்த்தமற்ற கேள்விகள் என நிரூபிக்கத் தயாரா? சகோதரர் அப்பாஸ் அலியின் சஹீஹான ஹதீஸ்கள் குர்ஹானுக்கு முரண்படுமா? என்றப் புத்தகத்திற்கு வரிக்கு வரி பதில் அளிக்கத் தயாரா?
எழுதுங்கள் எழுதுங்கள் உங்கள் பதிலை. உங்கள் பதில் எப்பொழுது வரும் ஒரு நாள்? இரண்டு நாள்? மூன்று நாள்? ஒருமாதம்? ஒருவருடம்? பத்து வருடம்?
சகோதரர் முஜாஹித் அவர்களே என்னுடைய இந்தக் காமேன்ட்சை அழிக்காமல் இதற்க்கு பதில் அழிக்க முடியுமா???
அன்புள்ள சகோதரர் ராசிதிற்கு
/////அவரிடம் தங்களைப் பற்றி உள்ள ஆதாரத்தை வெளியிட்டால் மக்கள் காறித் துப்புவார்கள்.//// என்று குறிப்பிட்டுள்ளீர்கள்
ஏன் இந்த சம்பந்தமில்லாத தலையீடு பிரச்சனை ஸாலிமின் ஹதீஸைப் பற்றிய விமரிசகர்களின் கேள்வி அர்த்தமுள்ளதா இல்லையா என்பதும் அதற்கு பதில் சொல்ல எனக்கு அவகாசம் தேவை என்பதும்தான். அதைவிட்டுவிட்டு எதையோ காட்டினால் யாரோ காரித் துப்புவார்கள் என்பதைப் பற்றியல்ல. ஒரு ஹதீஸைப் பற்றிப் பேசும்பொழுது அதுபற்றி சிந்திப்பதில் குறியாக இருக்க வேண்டுமே தவிர நம்மோடு கருத்துப் பகிர வருபவரை எப்படி மௌனிக்க வைப்பது என்பதில் அல்ல.அதே நேரம் என்மீது கரித்துப்பினாலோ காராமால் துப்பினாலோ முன் சென்ற இஸ்லாமிய அறிஞர்களின் வாதங்களுக்கோ நான் வைக்கப்போகும் வாதங்களுக்கோ அது பதிலாகாது என்பதில் உறுதி குழையாமல் இருங்கள். அதே நேரம் இதில் யார் தூய்மையானவர் என்று நீங்கள் விவாதிப்பீர்களாயின் நான் தவறுகள் பல உள்ள அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்கக் கூடிய உங்களைவிட தூய்மை குறைந்த ஒரு இறையடிமை என்பதை எங்கும் ஏற்றுக்கொள்வேன். அதில் நான் யாரோடும் போட்டிபோடமாட்டேன். சிலவேலை நீங்கள் காரித்துப்புவதால் என்னை நானே நொந்துகொள்ளும் நேரம் என் பாவங்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு. அதனால் எனது பாவமன்னிப்புக்காய் அதிகமதிகம் பிரார்த்தியுங்கள். நீங்கள் எனக்குப் பத்து வருட அவகாசம் தந்துள்ளீர்கள். இன்சா அல்லாஹ் முடிந்தவரை அந்த காலத்திற்குள் பதிலளிக்க முயற்சிப்பேன்.
சகோதரர் முஜாஹித் அவர்கள் எனது காமேன்ட்சை அழிக்காமல் அதற்க்கு பதில் அளித்ததற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கேற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நான் எழுதிய காமேன்ட்சில் இருந்து ஒரு வசனத்தை எடுத்து தங்களின் பதிலை எழுதியுள்ளார். இதில் விளங்கிவிட்டது இவரின் தடுமாற்றம்.
அவர் இறுதியாக ஒரு பதிலை எழுதியுள்ளார். // நீங்கள் எனக்குப் பத்து வருட அவகாசம் தந்துள்ளீர்கள். இன்சா அல்லாஹ் முடிந்தவரை அந்த காலத்திற்குள் பதிலளிக்க முயற்சிப்பேன்.//
இது ஒரு நகைச்சுவைமிக்க ஒரு வாதமாகும். சகோதரர் முஜாஹித் அவர்களே நீங்கள் வேன்றுமானால் பத்து வருடத்திற்குப் பின் உயிரோடு இருந்து பதில் எழுதலாம். ஆனால் நான் உயிரோடு இருப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
இவரின் இந்த வாதங்களினாலே விளங்கிவிட்டது இவரிடம் எந்த ஒரு பதிலும் இல்லை. வெறும் வாதங்களை வைத்து காலத்தை வீணடிக்கப் பார்க்கிறார்.
நான் மறுபடியும் இவரிடம் என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்.
1. இந்தக் கேள்விகள் அர்த்தமற்ற கேள்விகள் என நிரூபிக்கத் தயாரா?
2. சகோதரர் அப்பாஸ் அலியின் சஹீஹான ஹதீஸ்கள் குர்ஹானுக்கு முரண்படுமா? என்றப் புத்தகத்திற்கு வரிக்கு வரி பதில் அளிக்கத் தயாரா?
3. சகோதரர் றஸ்மின் உங்களுக்கு எழுதிய மறுப்புக் கட்டுரைக்கு வரிக்கு வரி பதில் எழுதத் தயாரா?
பத்து வருடத்திற்குள் பதில் அளிப்பேன் எனக் கூறாமல் இந்த மாதத்திற்குள் பதில் அளிக்கத் தயாரா?
சகோதரர் முஜாஹித் அவர்களே என்னுடைய இந்தக் காமேன்ட்சை அழிக்காமல் இதற்க்கு பதில் அழிக்க முடியுமா???
السلام عليكم
சகோதரர் ராசித் அவர்களே சில பொறுப்புக்கள் இருப்பதால் 3மாத காலம் தாருங்கள் இன்சா அல்லாஹ் நான் அறிந்த விளக்கத்தை எழுதுகிறேன். இன்சா அல்லாஹ் அதில் நீங்களும் தெளிவடையலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்!
அல்லாஹ் சிரிக்கிறான் என்றால், சிரிக்கிறான் என எடுத்துக்கொள்ளுங்கள்! ஆனால் ஒப்பீடு செய்யாதீர்கள்! என்ற கருத்துப்பட ஒரு ஹதீஸ் உள்ளது.
ஒவ்வொரு நாளும் கடைசி இரவில், அல்லாஹ் முதலாவது வானத்திற்கு இறந்குகின்றான் என்ற ஹதீஸில், அல்லாஹ் முதலாவது வானத்திற்கு இறந்குகின்றான் என்பதை இறங்குவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது அதை வேறு விதமாகத்தான் புரிந்துகொள்ளவேண்டும் என பீ. ஜே. கூறுகிறார். இப்படி எடுத்துக்கொண்டால், உலகில் ஏதாவது ஒரு பகுதி எந்த நேரமும் கடைசி இரவாக இருப்பதன் காரணமாக அல்லாஹ்வுடைய அர்ஷ் எந்த நேரமும் காலியாக இருக்கும் நிலை ஏற்படும் என்ற ஒரு வாதத்தை அவர் முன் வைக்கிறார். ரசூல் எதை வேண்டாம் என்று சொன்னார்களோ, அதாவது ஒப்பீடு செய்யவேண்டாம் என்று சொன்னார்களோ, அதை பீ. ஜே. இந்த இடத்தில், அல்லாஹ்வோடு மற்றைய படைப்புக்களை ஒப்பீடு செய்வதன் காரணமாகத்தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்பது தெளிவாகின்றது. எனவே அவரது அந்த வாதம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன என்பதை விளக்கமாகக் கூறவும்.
وعليكم السلام
அல்லாஹ்வின் அமைப்பு செயல்கள் பற்றி வரும் அனைத்து செய்திகளையும் வியாக்கியானம் செய்யாமல் ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான் சரியான நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில்தான் மௌலவி பீஜேயும் இருக்கிறார். ஆனால் இவ்விடயத்தில் பெதீகப் பார்வையை செலுத்தி தவறு விட்டுள்ளார். மௌலவி அவர்களின் இறைவனுக்குஉருவம் உண்டா என்ற விவாதம் இறைவனின் இறங்கி வருதலை அதன் நேரடிப்பொருளிலேயே ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சரிகாணும் வகையில் உள்ளதை அதைப் பார்ப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள். இன்சா அல்லாஹ் இந்த ஹதீஸ் பற்றிய வாதப் பிரதிவாதங்களை விரிவாகப் பதிவு செய்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்…. ஹாரூத் மாரூத் பற்றிய எனது கேள்விக்கு பதில் தர என் தாமதம்?
وعليكم السلام
ஹாரூத் மாரூத் மலக்குகளா மனிதர்களா என்ற கருத்து முரண்பாடு வரலாற்று நெடுகிலும் காணப்படும் ஒன்று. சைத்தான்கள் சூனியத்தைக் கற்பித்துக் காபிர்களானார்கள் என்று அல்லாஹ் சொல்வதால் குப்ரான காரியத்தை அல்லாஹ் ஏவமாட்டான் என்றே நாம் கூற வேண்டியுள்ளது.
அவர்களை மலக்குகள் என்பதை விட சைத்தான்கள் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது என்று நான் விளங்குகிறேன்.இல்லையென்றால்குப்ரான ஒன்றை இறைவன் ஏவினான் என்றாகிவிடும். இன்சா அல்லாஹ் இந்நிலைப்பாட்டை விரிவாக விளக்க முயற்சிக்கிறேன்
அகீகா க்காக மாடு கொடுக்கலாமா
35 வயதயும் தான்டியபின் அது கடமையா?
وعليكم السلام
குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பின் அகீகா கொடுப்பதற்கு பலமான எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. இளம் பருவத்தில் நமக்காக் கொடுக்கப்டாவிட்டால் நாமே நமக்கு அகீகா கொடுத்தல் என்பது கொஞ்சம் ஆய்வுற்குற்படுத்தப்பட வேண்டிய விடயம். கொஞ்சம் சந்தர்ப்பம் தாருங்கள்
ரசூலுல்லா மக்காவில் 19 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் போது கஸ்ர் செய்துள்ளார்கள் இதை ஆதாரமாக வைத்து நான் இப்பொது இருப்பதோ இன்னுமொரு நாட்டில் நான் இக்கே இருக்கும் வரை கஸ்ர் செய்யலாமா ?
அஸ்ஸலாமு அலைக்கும்!
மறுமையில் சுவர்க்கவாசிகள், சுவர்க்கத்தில் நுழைந்த பின்பு, இன்னும் ஏதாவது தேவையா? என அல்லாஹ் அவர்களிடம் கேட்பான். அப்போது சுவர்க்கவாசிகள் இல்லை எனக் கூறுவார்கள். இபாடியாக உரையாடல் நடக்கும். கடைசியாக அல்லாஹ் தன்னைக் காண்பிப்பான். சுவர்க்கவாசிகள் அல்லாஹ்வின் அழகைப் பார்த்தவண்ணம் இருப்பார்கள்—-
இந்த மாதிரியான கருத்துக்கள் அடங்கிய ஒரு ஹதீஸ் உண்டு. அந்த ஹதீசைத் தரமுடியுமா?
وعليكم السلام
அத்தியாயம்: 1, பாடம்: 1.80, ஹதீஸ் எண்: 266
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مَيْسَرَةَ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ قَالَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنْ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنْ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ
لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ
“சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர், “உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று அல்லாஹ் அவர்களிடம் கேட்பான். அதற்கு அவர்கள், ” (இறைவா! எங்களுக்குப் பேரருள் புரிந்து) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்தாயே! (எங்களுக்கு வேறென்ன வேண்டும்?)” என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி(அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்கத் தம் இறைவனைக் காண்பதைவிட அவர்களுக்கு வேறேதும் அதிவிருப்பமாக இருக்காது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஸுஹைப் (ரலி)
குறிப்பு:
இதே ஹதீஸ், ஹம்மாதிபுனு ஸலமா (ரஹ்) வழி அறிவிப்பில், “நன்மை செய்தோருக்கு (உரிய கூலியான) நன்மையும் மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும் …” என்ற (10:26) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
http://satyamargam.com/muslim/index.php
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜாஹித் அனவர்களே ஹஜ் செய்வதற்கு போதிய வசதி இல்லாதவருக்கு இன்னொருவர் ஹஜ்ஜிக்கான செலவை கொடுத்து ஹஜ் செய்தால் அந்தஹஜ் செல்படியாகுமா? அவ்வாரக ஹஜ் செய்பவருக்குகடன்கள் இருந்தால் ஹஜ் செய்யலாமா? தயவு செய்து கூடிய சீக்கிரம் பதில் எழுதவும்[ஜஸாக் அல்லாஹு ஹைராஹ்]
லாபீர் சறாப்தீன்
சவுதி அரேபியா ரியாத்
[இலங்கையர்]
ஒருவர் ஹஜ் செய்வதற்கென பணங்கொடுத்து அதனை வாங்கினால் வாங்கியவருக்கு ஹஜ் கடமையாகிவிடும். ஹஜ் செய்ய சக்திபெற்றவருக்குக் கடமை என்பதில் அவரும் அடங்குவார். ஹஜ் நிறைவேற்ற கடன்களை அடைத்திருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால் என்னுடைய சொந்தப் பணம் மேலதிகமாக 3 லட்சம் இருக்கிறது. எனக்கு 3 லட்சம் கடனும் இருக்கிறது என்றால் முதலில் கடனை நிறைவேற்றவே நாம் முயற்சிக்க வேண்டும். காரணம் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டாலும் கடன் குற்றம் மன்னிக்கப்படமாட்டாது. இது தவிர கடன் உள்ளவர் ஹஜ் கடமை நிறைவேற்றினால் கூடாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கடனுடன் தொழுதால் நோன்புநோற்றால் எப்படி நிறைவேறுமோ அதுபோன்றுதான் ஹஜ் கடமையும். உங்களுக்கு ஒருவர் ஹஜ் செய்யப் பணம் தந்து அதை நீங்கள் வாங்கினால அதன் மூலம் உங்களுக்கு ஹஜ்தான் செய்ய முடியும் கடனை அடைக்க முடியாது. எனவே ஹஜ் செய்வது உங்கள் மீது கடமையாகி விடும். வசதியுள்ளவர்தான் ஹஜ் செய்ய வேண்டும் என்றால் நபித்தோழர்களில் அதிகமனாவர்கள் ஹஜ் செய்திருக்க முடியாது. எனவே தாராளமாக அவர் ஹஜ் செய்யலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்!
38:75. “இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.
மேற் கூறிய வசனத்தில், “என்னுடைய கைகளால்” என்று அல்லாஹ் குறிப்பிட்டிருந்தாலும், அதன் கருத்து “நான்” படைத்தவருக்கு என்றுதான் அர்த்தம் வரும். அதே நேரம் அல்லாஹ் ஒன்றைப் படைக்க நாடினால், ஆகுக! (குன்) என்று கூறினால் அது ஆகி விடும் என்றும் கூறுகின்றான். எனவே அல்லாஹ் இங்கு குறிப்பிடும், என்னுடைய கைகளால், என்பதன் சரியான விளக்கம், நான் படைத்த என்ற பொருளைத்தான் தரும். எனவே இங்கு அல்லாஹ்விற்கு கைகள் உண்டு என்று நம்பக்கூடாது என்று சிலர் விளக்கம் கொடுக்கின்றனர்.
55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
இதே மாதிரியாக, “இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.” என்று கூறப்பட்டாலும், அதன் உண்மையான கருத்து, எல்லோரும் அழிந்த பின் அல்லாஹ் மட்டுமே மீதியாக இருப்பான் என்பதாகும்.
எனவே இங்கும் அல்லாஹ்விற்கு முகம் இருப்பதாக நம்பிக்கை கொள்ளக்கூடாது என ஒரு சிலர் சொல்கின்றனர்.
இது தொடர்பாக உங்களுடைய நிலைமை என்ன?
السلام عليكم
நீங்கள் குறிப்பிடுவது போன்று இன்னும் உள்ள ஏராளமான இறைவனது பண்புகள் சமபந்தமான வசனங்களை வியாக்கியானம் அளிக்காமல் திரிபு செய்யாமல் மறுக்காமல் ஒபபாக்காமல் உள்ளபடி நம்ப வேண்டும் என்பதே குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றி வாழ்ந்த நபித்தோழர்கள் தொடக்கம் இன்று வரைக்கும் அதன்வழி நடப்போரினது நிலைப்பாடு. நபித் தோழர்களனைவரதும் மரணத்தின் பின்தான் இந்த விடயங்களில் இரு கருத்து ஏற்பட்டது. நபிகளாருடைய காலத்தில் இந்த வசனங்கள் இறங்கும்போது மொழியில் உள்ளதற்கு மாற்றமாக விளங்க வேண்டும் என்றிருந்தால் நபியவர்களே அதை விளங்கப்படுத்தியிருப்பார்கள்.நபியவர்கள் அவ்வாறு விளங்கப்படுத்தவுமில்லை. நபித் தோழர்கள் அது பற்றிக் கேட்கவும் இல்லை என்றால் அந்த வசனங்களுக்கு உள்ளபடியே பொருள்கொள்ள வேண்டும் என்பது அஅர்த்தம்.அவ்வாறு அதன் நேரடிப் பொருளில் புரிந்துகொள்ளாமல் வேறொரு கோணத்தில் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த அர்த்தம் வழங்கும் மொழி வழக்கு அந்த வசனங்கள் இறக்கப்படும் காலததில் இருக்க வேண்டும். இந்த வாதம் ஞாயமானது என்பதை யாருமே ஏற்பார்கள்.
அஸ்ஸலாமுஅலைக்கும் மௌலவி முஜாஹித் அவர்களே
நீங்கள் இலங்கையிலே உள்ள சலபிய்யாக் கொள்கையைப் பற்றி எழுதுவதாக சில மாதங்களுக்கு முன்பு எனக்கு வாக்களிதிருன்தீர்கள் ஆனால் அதற்க்கு இன்னமும் பதில் வரவில்லை. தயவுசெய்து அதற்க்கான பதிலை விரைவில் எழுதவும்.
وعليكم السلام
பின்வரும் லின்கைப் பார்வையிடவும்
அஸ்ஸலாமுஅலைக்கும்
மௌலவி முஜாஹித் அவர்களே
எனது நண்பர் ஓருவர் உல்லார் அவர் இன்கு கடார் ல இருக்குரார் அவர் திருமனம் முடித்து ஒரு பென் பில்லை உம் உன்டு ஆணால் அவர் மனைவிக்கு என ஒரு விடு கட்ட முன்வர தயன்குறார் ஆணாள் அவர் குடும்பதின் அன்கதவர்ஹலுக்கு வீடு இன்னும் பல உதவிகல் செய்ஹிரார் செய்துகொன்டும் இருக்குரார் இதனால் மிஹவும் மனவெதனைல் உல்லார் அவரின் மனைவி சொந்தம் யென்பதல் என்னிடம் இதை பரிமாரிக்கொன்டர். இதட்கு உஙகலிடம் ஒரு மார்க்க விலக்கதில் ஒரு பதில் எதிர்பர்க்குரார்.
அஸ்ஸலாமுஅலைக்கும்
மௌலவி முஜாஹித் அவர்களே
(இந்த வினா (October 26, 2010 ) அன்ட்ரும் கேட்டு இருந்தேன்)
எனது நண்பர் ஓருவர் உல்லார் அவர் இன்கு கடார் ல இருக்குரார் அவர் திருமனம் முடித்து ஒரு பென் பில்லை உம் உன்டு ஆணால் அவர் மனைவிக்கு என ஒரு விடு கட்ட முன்வர தயன்குறார் ஆணாள் அவர் குடும்பதின் அன்கதவர்ஹலுக்கு வீடு இன்னும் பல உதவிகல் செய்ஹிரார் செய்துகொன்டும் இருக்குரார் இதனால் மிஹவும் மனவெதனைல் உல்லார் அவரின் மனைவி சொந்தம் யென்பதல் என்னிடம் இதை பரிமாரிக்கொன்டர். இதட்கு உஙகலிடம் ஒரு மார்க்க விலக்கதில் ஒரு பதில் எதிர்பர்க்குரார்.
2)= இன்கு கடார் இன்னும் பல அரபு நாட்டில் (காம்ப்லக்ஸ்) நாம் ஏதும் வான்கினால் கூப்பன் தருவார்கல் அந்த கூப்பனை குலுக்கி அதன் மூலம் யாரு தெரிவாஹிரார்களோ அவர்கலுக்கு பொருலாஹவொ,பனமாஹவொ,கொடுப்பார்ஹல் இதுவும் ஒருவஹை சூது என்கிரார்கல் இஸ்லாதில் இதட்கு அனுமதி உன்டா
وعليكم السلام
நீங்கள் தந்த விவரம் அளவிற்கு பதிலை எழுதியுள்ளேன்.இரண்டாவது கேள்வியை இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்கள்.
அஸ்ஸலாமுஅலைக்கும்
மௌலவி முஜாஹித் அவர்களே
எனது நண்பர் ஓருவர் உல்லார் அவர் இன்கு கடார் ல இருக்குரார் அவர் திருமனம் முடித்து ஒரு பென் பில்லை உம் உன்டு ஆணால் அவர் மனைவிக்கு என ஒரு விடு கட்ட முன்வர தயன்குறார் ஆணாள் அவர் குடும்பதின் அன்கதவர்ஹலுக்கு வீடு இன்னும் பல உதவிகல் செய்ஹிரார் செய்துகொன்டும் இருக்குரார் இதனால் மிஹவும் மனவெதனைல் உல்லார் அவரின் மனைவி சொந்தம் யென்பதல் என்னிடம் இதை பரிமாரிக்கொன்டர். இதட்கு உஙகலிடம் ஒரு மார்க்க விலக்கதில் ஒரு பதில் வெஹு விரைவில் எதிர்பர்க்குரார்
ஜஸாக் அல்லாஹு ஹைராஹ்
وعليكم السلام
திருமணம் முடித்த பின் மனைவியின் உணவுக்கும் உடையிற்கும் வாழ்வாதார அடிப்படைத் தேவைகளுக்கும் கணவனே பொறுப்பாகி விடுகிறார்.அந்த வகையில் தனது மனைவியை தன் சக்திக்கு உற்பட்ட வகையில் கணவர் கவனிக்க வேண்டும்.ஆனால் மனைவிக்கென்று ஒரு வீடு தனியாகக் கட்ட வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல.தான் வாழும் வீட்டில் மனைவியை வைததுச் செலவளிக்க வேண்டும் என்பதே இதன் கருத்து.நான் மேற் சொன்ன அளவில் மனைவியைக் கவனிக்காமல் தன் உறவுகளுக்கு பணத்தை இறைப்பது தவறு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தான் வாழும் வீட்டில் தன் மனைவியை வைத்துக் கவனித்துக் கொண்டு அவர் மேலதிகமாக பிறருக்குச் செய்யும் உதவிகளில் மார்க்க ரீதியாகக் குற்றம் பிடிக்க முடியாது. தமக்கும் கணவனுக்கும் உள்ள உறவை வைத்து ஒரு வேண்டுகோளாக வைக்க முடியுமே தவிர அதனை மார்க்கக் கடமையாக்க முடியாது.அல்லாஹ் மிக அறிந்தவன்
அஸ்ஸலாமு அலைக்கும்!
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நிச்சயமாக எவைகளை நீங்கள் பற்றிப் பிடித்து நடந்தால் எனக்குப் பின்னால் வழி தவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை நான் உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன். (அதாவது) வானத்திலிருந்து பூமியின் பக்கம் நீட்டப்பட்ட கயிராக இருக்கின்ற அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனாகும். மேலும் என்னுடைய அஹ்லுள் பைத் என்ற என்னுடைய குடும்பத்தார்களாகும். அவ்விரண்டும் ஹவ்லில் வந்து என்னிடத்தில் சேருகின்ற வரை ஒன்றை விட்டும் ஒன்று நிச்சயமாக பிரிந்து விடாது. ஆகவே அவ்விரண்டில் நீங்கள் எனக்கு பிரதிநிதிகளாக இருந்து எப்படி செயல்பட்டு வரப்போகின்றீர்கள் என்பதை (இப்போதே நன்றாக) கவனித்துக்கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: சைதிப்னு அர்கம் (ரலி)
திர்மிதி: 3788 , தாரமி: 2-254 , அஹ்மத்: 4-366 , மிஷ்காத்: 6153
இப்படி ஒரு ஹதீஸ் உள்ளதா? இருந்தால் அதன் தரம் என்ன?
وعليكم السلام
இந்த ஹதீஸ் பலஹீனமானது.குறிப்பாக இந்த ஹதீஸில் இடம்பெறும்
“அவ்விரண்டும் ஹவ்லில் வந்து என்னிடத்தில் சேருகின்ற வரை ஒன்றை விட்டும் ஒன்று நிச்சயமாக பிரிந்து விடாது. ஆகவே அவ்விரண்டில் நீங்கள் எனக்கு பிரதிநிதிகளாக இருந்து எப்படி செயல்பட்டு வரப்போகின்றீர்கள் என்பதை (இப்போதே நன்றாக) கவனித்துக்கொள்ளுங்கள்.”
என்ற வர்த்தை சாத் எனும் பலவீன வகை சார்ந்தது. இந்த வார்த்தை இடம்பெறாமல் இமாம் முஸ்லிம் இந்த ஹதீஸை நபித் தோழர்களின் சிறப்புகள் என்ற பாடத்தில் 6378 என்ற இலக்கத்தில் அறிவிப்புச் செய்துள்ளார். அந்த அறிவிப்பே பலமானது.
அழைக்கும், முஜஹிட் அவர்களே,
பெண்கள் தங்கம் அணிவது சம்பந்தமாக நீங்கள் ஒரு விளக்கம் தருவதாக இரண்டு மாதங்களுக்கு முன் சொன்னீர்கள். ஆனால் இன்னமும் நீங்கள் எந்தவித பதிலும் எழுதியதாக எனக்கு தெரியவில்லை. அதோடு உங்கள் கருத்தை சகோதரர் பீ . ஜே அவர்களும் மறுத்து எழுதயுள்ளது பற்றியும் நீங்கள் பதில் தருவதாக சொன்னீர்கள் அதற்கும் இன்னும் எந்த பதிலும் இல்லை
உங்களால் விளக்கம் ஒன்று தரமுடயுமா ? அல்லது தாமதத்தின் காரணம் தான் என்ன ?
السلام عليكم
அவகாசம் கிடைத்தவுடன் எழுதுகிறேன் இன்சா அல்லாஹ் வேறு எந்தக் காரணமும் இல்லை
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிபிற்குரிய மவ்லவி முஜாஹித் அவர்கலே ஹஜ்ஜுக்கு செல்லக் கூடியவர் அவருடய கடன், சொத்து, பற்றி வஸீயத்.[மரண சாசனம்] செய்ய வேன்டுமா?என்பதனை விளக்கமாக .கூடிய சீக்கிரம் எழுதவும்[ஜஸாக் அல்லாஹு ஹைராஹ்]
லாபீர் சறாப்தீன்
சவூதி அரேபியா ரியாத்
[இலங்கையர்]
وعليكم السلام
ஹஜ்ஜிக்கென்று அவ்வாறு எந்தக் கடமையம் இல்லை. ஆனாலும் ஒரு முஃமின் எப்பொழுதும் தன் கடனைப் பற்றி வஸிய்யத் செய்திருக்க வேண்டும். ஏனெனில் எப்பொழுதும் மரணம் வரலாம். கடன் சொர்க்கம் நுழையத் தடையாக இருக்கும். ஆனால் இதை செய்தால்தான் ஹஜ் கடமை நிறைவேறும் என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை.
அஸ்ஸலாமுஅலைக்கும்
மௌலவி முஜாஹித் அவர்களே
எனது நண்பர் ஓருவர் உல்லார் அவர் இன்கு கடார் ல இருக்குரார் அவர் திருமனம் முடித்து ஒரு பென் பில்லை உம் உன்டு ஆணால் அவர் மனைவிக்கு என ஒரு விடு கட்ட முன்வர தயன்குறார் ஆணாள் அவர் குடும்பதின் அன்கதவர்ஹலுக்கு வீடு இன்னும் பல உதவிகல் செய்ஹிரார் செய்துகொன்டும் இருக்குரார் இதனால் மிஹவும் மனவெதனைல் உல்லார் அவரின் மனைவி சொந்தம் யென்பதல் என்னிடம் இதை பரிமாரிக்கொன்டர். இதட்கு உஙகலிடம் ஒரு மார்க்க விலக்கதில் ஒரு பதில் வெஹு விரைவில் எதிர்பர்க்குரார்
ஜஸாக் அல்லாஹு ஹைராஹ்
[இலங்கையர்
وعليكم السلام
திருமணம் முடித்த பின் மனைவியின் உணவுக்கும் உடையிற்கும் வாழ்வாதார அடிப்படைத் தேவைகளுக்கும் கணவனே பொறுப்பாகி விடுகிறார்.அந்த வகையில் தனது மனைவியை தன் சக்திக்கு உற்பட்ட வகையில் கணவர் கவனிக்க வேண்டும்.ஆனால் மனைவிக்கென்று ஒரு வீடு தனியாகக் கட்ட வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல.தான் வாழும் வீட்டில் மனைவியை வைததுச் செலவளிக்க வேண்டும் என்பதே இதன் கருத்து.நான் மேற் சொன்ன அளவில் மனைவியைக் கவனிக்காமல் தன் உறவுகளுக்கு பணத்தை இறைப்பது தவறு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தான் வாழும் வீட்டில் தன் மனைவியை வைத்துக் கவனித்துக் கொண்டு அவர் மேலதிகமாக பிறருக்குச் செய்யும் உதவிகளில் மார்க்க ரீதியாகக் குற்றம் பிடிக்க முடியாது. தமக்கும் கணவனுக்கும் உள்ள உறவை வைத்து ஒரு வேண்டுகோளாக வைக்க முடியுமே தவிர அதனை மார்க்கக் கடமையாக்க முடியாது.அல்லாஹ் மிக அறிந்தவன்
அஸ்ஸலாமுஅலைக்கும் மௌலவி முஜாஹித் அவர்களே!
கப்ருள்ள பள்ளியின் சட்டம் பற்றி மௌலவி. நுபார் பாருக் அவர்களுக்கு மறுப்பு கடிதம் எழுதியூள்ளீர்கள். ஒரு பள்ளியில் எந்த நிலையில் கப்ருஸ்தானம் இருந்தால் அங்கு தொழக்கூடாது மற்றும் எப்படியிருந்தால் தொழலாம் எனவூம் சற்று தெழிவாக கூறுக.
கொழும்பு பொரிய பள்ளி வாசலில் பள்ளியினுள் ஆக கீழே நான்கு சுவற்றினை சுற்றி கட்டியூள்ளார்கள். மற்றையது பள்ளி வளாகத்தினுள் பாதை ஒன்றுக்கு சற்று தள்ளியதாக உள்ளது இதில் இரண்டின் நிலை என்ன?
இதுவூம் பள்ளியின் சட்டத்திற்குள் வரும்.
அதாவது ஒரு பள்ளியில் வருடாவருடம் கொடி ஏற்றும் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த பள்ளியில் தொழலாமா?
ஒருவார் புவானா எனும் இடத்தில் நோர்ச்சை செய்துள்ளதாக நபி(ஸல்) அவார்களிடம் கூறி நோர்ச்சையை நிறைவேற்றலாமா என கேட்டதற்கு நபி(ஸல்)
1. அங்கு இணைவைப்புக்கள் இடம்பெறுகின்றதா? எனகேட்டார்கள்.
2. ஜாஹிலிய்யா பலக்கவழக்க விழா இடம்பெறுகின்றதா என வினவ
ஒரு ஹதீஸில் அங்கு நடக்கவில்லை என உள்ளது.
மற்றயதில் நடந்தது என உள்ளது.
இந்த இரு ஹதீஸின் நிலை என்ன என்றும்
இதன் படி மேலே கூறிய பள்ளியில் தொழாமல் இருக்கவேண்டும் என்ற சட்டம் எடுக்கலாமா?
وعليكم السلام
இன்சா அல்லாஹ் அந்த மறுப்பு நூலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவு செய்கிறேன். அதில் இக்கேள்விகளுக்கான பதிலும் உள்ளே அடங்கியிருக்கும். உங்கள் கேள்விக்குச் சுருக்கமாக பதிலளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்
assalamu alaikum
nabiyavarkal thatkolai seyya muyatchi seithaarhal anra sambavam aathaarapoorvamantha?
وعليكم السلام
பின்வரும் லின்கைப் பார்வையிடுங்கள்
அஸ்ஸலாமுஅலைக்கும்
பெருநாள் தினத்தில் அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஅல்லாஹுஅக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து” என்ற தக்பீரை மொழிவது பித்ஹத் என்று தவ்ஹீத் வாதிகள் கூறிவருகின்றார்கள்
ஆனால் அதற்க்கு சான்றாக பின்வரும் ஹதீஸை சற்று பார்க்கவும்.
அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஅல்லாஹுஅக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து” அறிவிப்பவர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு , இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு
( முசன்னப் இப்னு அபி செயிபா , தமாமுள் மின்னா ஷேய்க் அல்பானி )
தயவுசெய்து இந்த ஹதீஸை பற்றி விளக்கவும்.
walaikumussalam
நபியவர்கள் தக்பீர் சொல்வார்கள் என்ற ஹதீஸில் எவ்வார்த்தைகளுக் கொண்டு தக்பீர் சொல்வார்கள் என்று வரவில்லை என்பதால் தக்பீர் என்ற சொல் பெருமைப்படுத்தலைக் குறிக்கிறது எனவே ஹதீஸ்களில் பெரும்பாலும் இந்தச் சொல் அல்லாஹ்வைப் பெறுமைப்படுத்தவே உபயோகப்படுத்தப்படுவதால் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையோடு பெருநாள் தக்பீரை சுருக்கிக்கொள்ள வேண்டும் என சிலர் கருதுகின்றனர். ஆனால் நபித்தோழர்கள் தொடக்கம் இன்னும் பல அறிஞர்கள் அல்லாஹ்வை எவ்வாறெல்லாம் பெறுமைப்படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் பெறுமைப்படுத்தலாம். இவ்வாறுதான் பெறுமைப்படுத்த வேண்டும் என பெருநாள் தக்பீர் சம்பந்தமான ஹதீஸ்களில் வரவில்லை இதனால்தான் பல நபித் தோழர்கள் பலமாதிரியான வார்த்தைகளில் பெருநாள் தக்பீர் சொல்லியுள்ளனர் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். பல காரணங்களால் இந்த நிலைப்பாடே சரியான நிலைப்பாடு. எனவே ஒரே வார்த்தiயை கடைபிடிப்பதும் தவறு அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதனையும் சொல்லக் கூடாது என்பதும் தவறு. இல்லையெனில் அன்றைய முழு நாளும் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையோடு வேறு வார்த்தைய சேர்ப்பது பித்அத் என்ற தவறான முடிவுக்கு வர வேண்டி ஏற்படும்
அஸ்ஸலாமு அலைக்கும், நான் வெகு நாட்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு பொருளை திருப்பி கொடுக்கும் நோக்குடன் இரவலாக பெற்றேன். அதனை நான் அவரிடம் திருப்பி கொடுக்கும் முன்பு “வபாதகி விட்டார் ” . இப்போது அப்பொருளை அவர்கள் வீட்டில் நான் இது உங்களுடைய மகனின் பொருள் என்று திருப்பி கொடுக்கும் போது, அவர்களின் மனம் அவர்களின் வபாதாகிய மகனின் நினைவால் வேதனைப்படுமே, என நான் அஞ்சுகிறேன். எனவே எனது நிலைபாட்டிற்கு என்ன தீர்வாக அமையும்?
walaikumussalam
தங்களது கவலை ஞாயமானது. ஆனாலும் அதைக் காரணமாக வைத்து ஒரு அமானிதத்தைக் காலந் தாழ்த்துவது தவறு. அது சிலவேளை உங்கள் மீது தப்பான எண்ணங்களை அவர்களுக்கு உருவாக்கிவிடும். எனவே உரியவேளையில் அதைத் திருப்பிக் கொடுப்பதே உகந்தது.
அஸ்ஸலாமுஅலைக்கும் மௌலவி முஜாஹித் அவர்களே
ஆடை கழுவூவதற்கு இஸ்லாம் கூறும் வழிமுறை என்ன? தண்ணீh; ஓடும் படியாக கழுவவேண்டும் என சிலா; கூறுகின்றனா; இது உண்மையா? washing machine கழுவூவது கூடுமா?
walaikumussalam
நாம் அறிந்த வகையில் ஆடையை இப்படித்தான் கழுவ வேண்டும் என எந்தவொரு மார்க்க வழிமுறையும் இல்லை
வயிறு நிரம்ப உண்டவனுக்கு மறுமையில் அல்லாஹ் சாப்பாடு தரமாட்டான் என்று ஏதாவது ஹதீஸ் இருக்கின்றதா?
wassalamu alaikum
இந்த உலகில் வயிறார உண்பவர்கள் மறுமையில் பசித்திருப்பவர்கள் என தபரானியிலே ஒரு செய்தி பதியப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பலஹீனமானது
பிரை பத்தி உஙகல் கருத்து என்ன, நாட்டு பிரைய அல்லது உலக பிரைய, இது பத்தி விலக்கஉம்.
ஜக்கரிய
டுபை
wassalamu alaikum
இது பற்றி ஒரு சகோதரர் ஏற்கனவே கேட்டதாக ஞாபகம். இன்சா அல்லாஹ் இதை ஆய்வாகத் தொகுப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதால் இயன்றளவு விரைவாகப் பதிவு செய்ய முயற்சிக்கிறேன் என்றே சொல்ல முடியும்
ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்..
என்னுடைய உலக வாழ்க்கை உங்களுக்கு நல்லதே. என்னைப் பற்றி (ஹதீதுகளை) நீங்கள் பிறரிடம் கூறுவதுடன் பிறரும் என்னைப் பற்றி உங்களுக்குக் கூறுவர். மேலும் எனது மறைவு (வபாத்) உங்களுக்கு நல்லதே. (மறைவின் பின்) உங்களது செயல்கள் எனக்கு எடுத்துக்காண்பிக்கப்படுகிறது. அப்போது அச்செயல்களில் நல்லத்தைக் கண்டால் அதற்காக நான் அலாஹ்வைப் புகழ்கிறேன். மேலும் பாவச் செயல்களைக் கண்டால் உங்களுக்காக அல்லாஹ்விடம் பிழை பொருக்க வேண்டுகிறேன்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), (முஸ்னத் அல் பஸ்ஸார்-1/397)
1.மேற் கூறிய ஹதீஸ் சஹீஹான ஹதீஸா?
2..இங்கு ரசூல் (ஸல்) அவர்களுக்குப் பிறகு எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், மொழி பெயர்ப்பின் சில இடங்கள் ரசூல் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும்போது உள்ள நிலையைக் குறிப்பிடுகிறது.
3.இதன் சரியான மொழி பெயர்ப்பு என்ன?
السلام عليكم
இந்த செய்தி நீங்கள் குறிப்பிட்டது போல் முஸ்னதுல் பஸ்ஸரிலே பதியப்பட்ட செய்தி. இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல் மஜீத் இப்னு அப்தில் அஸீஸ் இப்னு அபீ ருவ்வாத் இடம்பெறுகிறார். இவர் நம்பகமானவராயினும் மனனத்தில் பலஹீனமானவர். குறிப்பாக பிறரது அறிவிப்புகளுக்கு மாற்றமான செய்திகளை அறிவித்தால் இவரது பலஹீனமே அதற்குக் காரணம். இந்த குறிப்பிட்ட ஹதீஸிலும் அதுவே நிகழ்ந்துள்ளது. இந்த செய்தியை நபியவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவரிடமிருந்து ஸாஸான் என்பவரும் அவரிடமிருந்து அப்துல்லாஹ் இப்னுஸ் ஸாஇப் என்பவரும் அவரிடமிருந்து இருவர் அறிவிக்கின்றனர்.1. அஃமஷ் 2.சுப்யான். இதில் சுப்யான் வழியாக அறிவிக்கும் எந்த மாணவரும் மேற்கண்ட ஹதீஸின் எந்த வாசகத்தையும் குறிப்பிடவில்லை.’இந்த பூமியில் பயணிக்கும் இறைவனது மலக்குமார்கள் எனது உம்மத்திடமிருந்து எனக்கு ஸலாத்தை எத்திவைப்பார்கள்’ என்ற வார்த்தையை மாத்திரமே அம்மாணவர்கள் சுப்யான் வழியாக அறிவிக்கிறார்கள் . இது நஸாஈ பேர்ற கிரந்தங்களிலே பதியப்பட்டுள்ளது. அது போல் அஃமஷின் எந்த மாணவரும் ‘இந்த பூமியில் பயணிக்கும் இறைவனது மலக்குமார்கள் எனது உம்மத்திடமிருந்து எனக்கு ஸலாத்தை எத்திவைப்பார்கள்’ என்ற வார்த்தையை தவிர மேலதிகமாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் அப்துல் மஜீத் இப்னு அப்தில் அஸீஸ் இப்னு அபீ ருவ்வாத் என்பவர் மாத்திரமே ‘இந்த பூமியில் பயணிக்கும் இறைவனது மலக்குமார்கள் எனது உம்மத்திடமிருந்து எனக்கு ஸலாத்தை எத்திவைப்பார்கள்’ என்பதோடு சேர்த்து நீங்கள் குறிப்பிட்ட செய்தியை அறிவிக்கிறார். எனவே இவர் பஹீனமான என்பதோடு சுப்யான் மற்றும் அஃமஷின் மாணவர்களின் அறிவிப்பில் இடம்பெறாத செய்தியையும் அறிவிப்பதால் இந்தச் செய்தி பஹீனமானது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தண்ணீ கிடைக்காத பட்சத்தில் தூய மண்ணினால் தயமம் செய்ய வேண்டும். மண் எமக்கு கிடைக்காத பட்சத்தில் என்ன செய்யவேண்டும்.
பலா; கண்ணாடியில் தூசு உள்ள சுவாpல் தயமம் செய்யலாம் என்கின்றனா; இது மாh;க்கத்தில் அனுமதிக்கப்படடதா? ஆதாரம் உள்ளதா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இது சம்பந்தப்பட்ட கேள்விதான்
அதாவது ஒருவருக்கு குளிப்பு கடமையாக காலை எழும்புகின்றார். ஆனால் அவருக்கு காலையில் குளிக்க முடியாது. (கடும் குளிர் காரணமாக அல்லது உடலுக்கு கூடாது என்பதனாலும்) வூளு மட்டும் எடுத்து விட்டு (சுபஹ்) பள்ளிக்கு செல்லலாமா?
وعليكم السلام
நீங்கள் சொன்னது போன்ற சூழ்நிலையாயின் அது அனுமதிக்கப்பட்டதே. அதே நேரம் தயம்முமும் செய்து வுழுவும் எடுக்கவேண்டும் என்பது தவறானது. வுழு செய்ய முடியும் என்றால் அது மட்டும் போதுமானது.
وعليكم السلام
தண்ணீர் கிடைக்காது விட்டால் மண்ணைக் கொண்டு தயம்மும் செய்ய வேண்டும். மண் கிடைக்காது விட்டால் தூசியைக் கொண்டு தயம்மும் செய்ய மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. இந்நிலையில் இரண்டில் ஒரு முடிவிற்கே எம்மால் வர முடியும். 1. தண்ணீரோ மண்ணோ கிடைக்கும் வரை தொழாமல் இருப்பது.2. இரண்டும் கிடைக்காது விட்டாலும் தொழுகையைப் பிற்படுத்தக் கூடாது என்பதால் தொழுகையை அதன் கடைசி நேரதத்தில் தொழுவது. இதில் இரண்டாவது முடிவே சரியானது என்பதை உங்களால் இளகுவாகப் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
குழந்தை பிறந்த சம்பந்தாமாக சில கேள்வி கேட்க வேண்டும்.
1. பிறந்த பிள்ளைக்கு பாத்திஹா சூறா ஓதி ஊதலாமா. ஆதாரம் உள்ளதா?
2. நபியவர்களுக்கு குழந்தை கொடுக்கப்பட்டால் என்ன துஆ ஓதுவார்கள் அர்த்தத்துடன் தரவூம்.
3. அகீகா எப்போது கொடுக்கவேண்டும்.
4. பிறந்த குழந்தையின் பெயாpல் (அல்லாஹ்வூக்கா) தா;மம் செய்யலாமா? .
ஒரு குழந்தையின் முதலாவது முறை முடி வெட்டிய பின்னர் அதனை நிறுத்து ஆண் பிள்ளை என்றால் வெள்ளியின் கணக்குக்கும் பெண் பிள்ளைஎன்றால் தங்கத்தின் கணக்குக்கும் தா;மம் செய்ய வேண்டும் என்கின்றனர் இது மார்க்கத்தில் உள்ளது தானா?
وعليكم السلام
1.இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
2.அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் பிறந்த போது நபியவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். இன்னும் பாரகல்லாஹு பீக எனச் சொன்னார்கள். 3909 புகாரி
3.7வது நாளன்று கொடுக்க வேண்டும். அதுவே சிறந்தது. தவறியவர்கள் பிற நாட்களில் கொடுக்க எந்தத் தடையும் இல்லை.
4.எப்பொழுதும் தர்மம் செய்யலாம். குழந்தையின் பெயரால் தர்மம் என்பது நபி வழியில் இல்லை.அதே நேரம் குழந்தை பிறந்த சந்தோசத்தைப் பரிமாறத் தடையும் இல்லை.
5.நபி வழியில் இதற்கு ஆதாரம் இல்லை இது சம்பந்தமாக திர்மிதியில் ரும் செய்தி பலஹீனமானது
அஸ்ஸலாமு அலைக்கும்!
கீழ்க் காணும் ஹதீசின் தரமென்ன?
இறைவா! உனது நபியின் போருட்டாலும் எனக்கு முன்னாள் உள்ள நபிமார்களின் போருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக என்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் துஆச் செய்தார்கள்.
தப்ரானி 2 – 22 அறிவிப்பவர்: அலி (ரலி)
وعليكم السلام
தபரானி அல் கபீரில் 871 வது இலக்கத்திலே இந்த செய்தி பதியப்பட்டுள்ளது. ஆனால் இந்த இந்த ஹதீஸில் இடம்பெறும் ரூஹ் இப்னு ஸலாஹ் என்பவர் பலஹீனானவர்.
அஸ்ஸலாமு அலைக்கும்
கண்ணுரின் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? கண்ணுருக்கு எதாவது துஆ உள்ளதா?
وعليكم السلام
கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது.1
கண்ணேறு பற்றி இஸ்லாம்.2
சுப்ஹில் குனூத் ஓதுபவரை பின்பற்றி தொழலாமா?
وعليكم السلام
நபி வழிப்படி தொழுவிக்கக் கூடிய ஒருவர் கிடைக்காதவரையில் அவரைப் பின்பற்றித் தொழுவது உங்களுக்குக் கடமை.
வெலி நாடுகலில் ஜன்பு மட்ரும் கஸ்ர் தொலுகைகலை எத்தனை நாட்கல் தொழளாம்?
وعليكم السلام
வெளிநாடுகளில் தங்கியிருப்பவர்கள் பிரயாணிகளல்ல. அவர்கள் தங்களது தங்குமிடங்களையும் இருப்பிடங்களையும் அங்கேயே ஆக்கிக் கொண்டதால் அவர்கள் அந்த ஊரவர்கள் போன்றே தொழுகைகளை நிறை வேற்றவேண்டும். இந்த முடிவுதான் மிகச் சரியானது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
என் கேள்வி ஒரு முஸ்லிம் கடனாலி கடன் திருப்ப கொடுக்க வசதி இல்லாதபோது ஒரு சமூகத்தின் “ஸக்காத்…” மூலம் உதவ முடியுமா ?
வேலை செய்து தீர்க்க முடியாத கடன் ?
“ஜஸாஹகல்லா ஹய்ரன்………..”
மிர்ஸான் / 299
டம்மாம்
சவுதி அராபியா.
* மீண்டும் நாடோடி ……..வருகை ”
وعليكم السلام
நிச்சயமாக , கடன் பெறத் தகுதியானவர் கூட்டத்தில் கடனாளியும் ஒருவர். தாராளமாக அவருக்கு ஸகாத்தை வழங்கி அவரது கடனையடைக்க உதவலாம்
அஸ்ஸலாம் அழைக்கும்,
ஒருவர் தனது மனைவியோடு சண்டை பிடிக்கும் நேரமெல்லாம் நான் உன்னை த்லாக் செய்துவிட்டேன் த்லாக் செய்துவிட்டேன் விட்டேன் தலாக் தலாக் தலாக் என்று அவன் விரும்பாமலே சும்மா கோபத்தின் காரணமாக கூரிவிடுவாநாயின், அதன் பாரதூரம் என்ன ? அது தலாக் சைததுபோலாகுமா? அவன் அதை சொல்லும்போது உண்மையில் தலாக் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவனது மனதில் இல்லை என்று கூட சொல்லுகிறான் ஆனால் அவனுக்கு வருகின்ற கோபத்தின் காரணமாக அவ்வாறு சொல்லிவிடுகிறான்?
இதனைப்பற்றி அவன் என்னிடம் கேட்ட பொது நான் அவனுக்கு அளித்த பதில்தான் அல்லாஹ் உனது உள்ளத்தில் என்ன உள்ளாது என்பதையே பார்ப்பான் என்று இது சரியா ?
وعليكم السلام
அவ்வாறு நிகழ்ந்தால் அது விவாகரத்தாகாது. ஆனால் அல்லாஹ்வுடைய சட்டத்தை விளையாட்டாக எடுத்த மிகப்பெரும்பாவத்திற்கு ஆளாகுவார் என்பதையும் அவருக்குக் கூறி வையுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
மையத்து விடயத்தில் இன்று ஏனைய கொள்கை பின்பற்றுபவா;களிடத்தில் பல பித்அத்துகள் காணப்படுகின்றன. உண்மையில் இஸ்லாத்தின் உள்ள விடயம் எது என்பதை ஒரு தொடராக தந்தால் வாசகா;களுக்கு நன்றாக இருக்கும்.
மையத்து சம்பந்தமான கேள்விகள்.
1. மையத்தை பாதையில் வரும் போது அமர்ந்திருந்தால் எழும்ப வேண்டுமா?
2. யாருடைய மையத்தை கேள்விபட்டாலும் அந்த மையத்துக்கு போவது எம்மீது கடமையா?
3. 4ம் தக்பீரில் ஏதாவது துஆக்கள் கூற இருக்கின்றதா?
4. மையத்துடன் செல்லும் போது முன்னால் தான் போக வேண்டும்இ பின்னால் போக கூடாது என்றுள்ளதா?
5. முக்கியமான ஒரு பிரச்சினையானது. ஸலப் கொள்கையை பின்பற்றுகின்றௌம் என்று சொல்லக்கூடியவா;கள் ஒரு மையத்தை கொண்டு செல்லும் போது அதனை கபன் துணியை முடியூள்ளாh;கள். ஆனால் அதன் மீது (சுந்துக்) முடியில்லை. மையத்து விளங்கும் படியாக கொண்டு செல்கின்றனா;. இது மாh;க்கத்தில் உள்ளதா?
6. கபுh;ஸ்தானத்திற்கு போகும் போது செறுப்பு அணிந்து போகக்கூடாது என்கின்றனா;. இந்த விடயத்தில் உங்கள் ஆய்வூ என்ன? ஆய்வை வெளியிட்டால் பேருதவியாக இருக்கும்.
Walaikumussalam
1.எழும்ப வேண்டிய அவசியம் இல்லை. நபியவர்கள் ஆரம்பத்தில் அவ்வாறு எழும்பி நின்றார்கள்.பின்னர் அதனைத் தவிர்த்துக் கொண்டார்கள்.
2.ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஜனாஸாவில் கலத்தலும் ஒன்றாகும். எனவே நேரமிருக்குமாயின் வாய்ப்புக் கிடைக்குமாயின் கலந்துகொள்ள வேண்டும். அது கடமை
3.ஆதாரப்பூர்வமான எந்த துஆவும் இல்லை.
4.எவ்வாறும் போகலாம் .ஜனாஸாவைத் தொடர்ந்து செல்லல் என்ற ஹதீஸின் பிரயோகம் முன்னால் செல்வதை தடைசெய்யாது.
5.ஜனாஸாவை அடக்குவது கடமை. மூடிச்செல்வதோ திறந்து செல்வதோ கடமை கிடையாது. இப்படித்தான் கொண்டு செல்ல வேண்டும் என எதனையும் நபியவர்கள் எமக்குக் கடமையாக்கவில்லை. ஆனால் திறந்து கொண்டு செல்பவர்களை தடை செய்வதும் கூடாது
6.இது சம்பந்தமான ஹதீஸில் சில விமரிசனங்கள் இருக்கின்றன. இன்சா அல்லாஹ். கொஞ்சம் நேரமெடுத்து பதில் எழுதுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
கொடி ஏற்றும் பள்ளிகளில் தொழ முடியூமா?
புவானா எனும் இடத்தில் நேர்ச்சை விடயமாக கேட்ட நபிதோழருக்கு நபி(ஸல்) அவர்கள் 1. ஷிh;க் நடக்கின்றதா? 2. ஜாஹிலிய்யா கால நடவடிக்கை இருக்கின்றதா என கேட்டு அனுமதித்த ஹதீஸிலிருந்து கூடாது என விளங்குகின்றது. இது சாpதானா?
Walaikumussalam
ஜாஹிலியாக்கால வணக்கங்கள் நடந்து வந்த இடங்களில் அறுப்பதை நபியவர்கள் தடை செய்ததையே இந்த ஹதீஸ் குறிக்கிறது. அல்லாஹ்விற்கென கட்டப்பட்ட பள்ளியில் மார்க்கத்திற்கு முரணான கொடியேற்றங்கள் நடந்தால் அது பற்றி என்ன தீர்ப்பு என்பதை இந்த ஹதீஸ் குறிப்பிடவில்லை. நாமறிந்த வகையில் மார்க்க வழிப்படி இயங்கும் பள்ளி ஒன்று கிடைக்காத வரையில் அப்பள்ளியில் தொழுவதைத் தவிர்க்கக் கூடாது.
முனன்காளுக்கு மேல் ஆடைகளை அணிவதில் ஆண்களுக்கு உள்ள குரான் ஹ்யடீஸ் சட்ட விதிமுறை என்ன?
Walaikumussalam
மர்மஸ்தானம் அதை அண்டிய பகுதி தவிர்ந்த பகுதிகளே ஒரு ஆண் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி.இதுவல்லாமல் தொடையோ மற்றவைகளோ அவ்ரத் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.ஆனாலும் அல்லாஹ்வே வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன் என்ற ஹதீஸின் அடிப்படையில் இயன்றளவு மறைத்த நிலையில் இருப்பது சிறந்தது.
சுய இன்பத்தில் ஈடுபடுவது ஹலால், இப்னு அப்பாச் ரலியல்லாஹு அன்ஹு அனுமதி கொடுத்து உல்லார்கல் என யஹியா சில்மி தமில் சலபி இனய தலத்தில் கட்டுரை எலுதி உல்லார். இது தொடர்பில் இச்லாமிய நிலைப்பாடு என்ன?
இவரை இனியும் நம்பலாமா?
சுய இன்பம் மார்க்கத்தில் கூடாது என்பதற்கு. பாவமென்றால் உன் உள்ளத்தை உறுத்தும். மக்கள் அந்த நிலையில் உன்னைக் காண்பதை நீ வெறுப்பாய். என நபியவர்கள் கூறிய செய்தியே போதுமாகும். இந்ந இரண்டு நிபந்தனைகளும் ஒரு விடயத்தில் சேர்ந்து இருந்தால் அது பாவம். சுய இன்பமும் இதே நிலையைக் கொண்டது என்பதை யாரும் உணர்வார்கள். கண்மூடித்தனமாக அறிஞர்களைப் பின்பற்றும் தக்லீத் போக்கே இந்த பத்வாவிற்குக் காரணம். இமாம் சவ்கானி அவர்கள் بلوغ المنى في حكم الاستمناء என்ற தலைப்பில் சுய இன்பம் அனுமதியே என ஒரு நூலை எழுதியுள்ளார்கள். அந்த நூலில் உள்ளதை அப்படியே தக்லீத் செய்ததுதான் இந்த பத்வாவுக்குக் காரணம். ஆனாலும் அந்த நூலை வெளியிட்ட அச்சகத்தார் கூட ஒரு அறிஞரின் தீர்ப்பை அப்படியே மக்கள் ஏற்றுவிடக் கூடாது என்பதற்காக. அந்த நூலின் இறுதிப்பகுதியில் تحفة الشاب الرباني என்ற தலைப்பில் இமாம் அல்பானி அவர்களின் மாணவரான செய்க் முக்பில் எழுதிய மறுப்பையும் பதிவு செய்தே வெளியிட்டனர். எப்போதும் அல்பானி அவர்கள் மாணவர்கள் என முந்நிலைப்படுத்தும் இவர்கள் இந்த இடத்தில் அந்த மறுப்பை சட்டை செய்யவே இல்லை. இதுவல்லாமல் அல்பானியின் இன்னொரு முக்கிய மாணவரான செய்க் மஸ்ஹுர் அவர்களளும் இதை மறுத்து ஒரு நூல் எழுதியுள்ளார். அல்பானி அவர்கள் தமாமுல் மின்னா என்ற நூலிலே குர்ஆன் வசனத்தை முன்வைத்து மறுத்துவிடடு கூடும் என்று பத்வா கொடுப்பவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் எழுதியுள்ளார். இப்னு அப்பாஸ் அவ்வாறு நிர்பந்த சூழலில் கூடும் என தீர்ப்பளித்தாக ஒரு அறிவிப்பு உள்ளது. ஆனாலும் அதுவும் பலஹீனமான அறிவிப்பு.சில நபித்தோழர்கள் முத்ஆ அனுமதி எனக் கண்டார்கள். அதையும் ஆதாரமாக ஏற்பார்களா. நபித்தோழர்களை மதிக்கிறோம் என அவர்களை மாசுபடுத்துகின்றனர்.அவ்வளவுதான்
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ
மாற்று கொள்கையை உடையவர்கள் முக்கியமாக ஜமாத் இஸ்லாம் வாதிகள்,
மறுமையில் நன்மையை ஏவி தீமையை தடுப்பதை பற்றி கேள்விகள் கேட்க பட மாட்டாது காரணம் “அவர்கள் செய்தவற்றை பற்றி உங்களிடம் கேள்வி கேட்க பட மாட்டாது” என்ற குர்ஆன் வசனத்தை முன்வைக்கின்றனர். இதற்கு விளக்கம் தந்து அவர்களுக்கு ௯ற வேண்டிய பதிலை தருமாறு கேட்டு கொள்கின்றேன்.
ஜஸாக்கல்லாஹு ஹைரன்.
அப்துர்ரஹ்மான்
லெஸ்டர்.
Walaikumussalam
قَامَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ تَقْرَؤونَ هَذِهِ الْآيَةَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] ، وَإِنَّا سَمِعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الْمُنْكَرَ فَلَمْ يُغيِّرُوهُ، أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللهُ بِعِقَابِهِ ”
[مسند أحمد ط الرسالة 1/ 178]
முஸ்னத் அஹ்மதில் இடம் பெறும் முதல் ஹதீஸ் இது.
அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை எழுந்து உரையாற்றினார்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு நபிகளாரிற்கு பிரார்த்தித்து விட்டு பினவருமாறு கூறினார்கள் ‘ குர்ஆனில் ‘ஈமான் கொண்டவர்களே நீங்கள் உங்களை கவனிததுக்கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியில் இருந்தால் வழிதவறியவர்களால் உங்களுக்கு பாதிப்பு இல்லை’ என்ற வசனத்தை நீங்கள் ஓதுகிறீர்கள். நபியவர்கள் பின்வருமாறு சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.’தீமைகளை கண்டு ஏனையவர்கள் அதை தடுக்காவிட்டால் அல்லாஹ் அனைவரையும் அழித்துவிடலாம்’
அஸ்ஸலாமுஅலைக்கும் வ.வ
கடைபிடிக்க வேண்டிய சுன்னாவில் ஒன்று தான் ருகூவில் அல்லாஹ்வை துதிப்பதும் சுஜுதில் துஆ கேட்பதும், ஆனால் இவ்விரண்டையும் வாயை திறந்து மொழியலாமா? அது தொழுகையில் பேசியது போன்று ஆகுமா? விளக்கம் தருக……
ஜஸாக்கல்லாஹு கைரன்.
walaikumussalam
எந்த மொழியிலும் வாயால் மொழிந்து கேட்கலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்ஈ
இசை கேட்பது ஹராமா? என்று விளக்கி அனுப்புமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.
ஜஸாகுமுல்லாஹ ஹைரன்
இப்திகார் முஹம்மது.
Walaikumussalam
Click Here
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ
நான் ரியாளுஸ்ஸாலிஹீனில் ஸலாம் என்ற தலைப்பில் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முற்படுத்தி ஸலாம் கூற வேண்டாம்,அவர்கள் ஸலாம் கூறினால் வஅலைக்கும் என்று கூறவும், பாதையில் கண்டால் சாலை ஓரங்களில் ஒதுங்கி செல்லுமாரு செய்து விடுங்கள் என அமைந்துள்ளது. இது முஸ்லிமில் பதியப்பட்டுள்ளது.ஆகவே இந்த ஹதீஸின் படி லண்டனில் பயணிக்க முடியாது.எனக்கு சரியான விளக்கம் தரவும்.
ஜஸாக்கல்லாஹு ஹைரன்…..
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ
பெண்களுக்கு காது குத்தலாமா? பூரண விளக்கம் தரவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்பிற்குரிய மவ்லவி முஜாஹித் அவர்களே.உழு செய்ததன் பின்னால் ஓதப்படும் து ஆ வில் அஸ்ஹது அல்லாஇலாஹ இல்லால்லாஹு வ அஸ்ஹது அன்னனமுஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு. அல்லாஹும்மஜல்னி மினல் தவ்வாபீன் வஜால்னி மினல் முதத் தஹ்ஹிரீன். இது .சரியா அல்லாது அஸ்ஹது கலீமா மாத்திரம் சரியா? ஆனால் அஸ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வாஸ்ஹது அன்ன முஹம்மதன் அப்ப்துஹு வரஸூலுஹு.என்ற துஆ முஸ்லிமில் வரக்கூடிய ஆதார பூர்வமான ஹதீஸ்.இப்படியிருக்கும் போது சில அறிஞ்ஜர்கலுக்கிடை யில் மேலே கூரப்பட்ட அல்லாஹும்மஜல்னி மினத்தவ்வாபீன் மினல் முதத் தஹ்ஹிரீன் எனப்படும் துஆ வை பலஹீனமாக இருந்தும் கூட அமல் செய்வதட்ட்கு எடுதுக் கொல்லலாம் என்ர .ஒரு கருத்து உள்ளது இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
லாபீர் சறாப்தீன்
சவூதி அரேபியா ரியாத்
[இலங்கையர்]
அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்கள் பயான் பன்னும் இடமும் (காலை,மாலை) என்றுதான் போட்டுள்ளீர்கள் நேரத்தையும் குறிப்பிட்டாள் சிறப்பாக இருக்குமே.
காமில்………..
Walaikumussalam
ஆலோசனைக்கு جزاك الله خيرا
அஸ்ஸலாமு அழைக்கும் மௌலவி அவர்களே நான் உங்களிடம் ஏற்கனவே ஒரு கேள்வியினை thoduththum innum பதில் வரவில்லை அதோடு இதனையும் இணைத்துக்கொள்கிறேன்
athaavathu emathu oor kahatowitaavil ore neraththil aiynthu athaan olikkappadukirathu , இவ்வாறான ஒரு நேரத்தில் நாம் ella athaanukkum பதில் kooravendumaa ? இவ்வாறான ஒரு nilai பற்றி குரான் ஹதீஸ் என்ன சொல்லுகிறது
walaikumussalam
நபிகளாரின் காலத்தில் ஒலிபெருக்கியின்றி சொல்லப்பட்ட சொல்லப்படும் ஒரு மஸ்ஜிதின் அதான் இன்னொரு மஸ்ஜிதிற்குக் கேட்கும் அளவிற்கு மஸ்ஜித்கள் நெருக்கமாக இருந்ததாக எந்த செய்தியும் இல்லை. ஒலிபெருக்கியின்றி மஸ்ஜின் உயரமான பகுதியிலே அதான் சொல்லப்பட்டால் இந்தக் கேள்வி எழாது. ஆனால் ஒலிபெருக்கி அதானை கிராமம் முழுக்க ஒலிக்கச் செய்வது சிறந்ததாக இருந்தாலும் மற்ற அதான்களோடு மோதும் நிலை ஏற்படுகிறது. இவ்விடயத்தில் மார்க்கத்தின் நிலையென்ன? என்பதே தங்கள் கேள்வி. இது பற்றிய இப்போது மார்க்க ரீதியாக ஒரு முடிவு என்னிடத்தில் இல்லை. சற்று ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு அம்சம். சற்று அவகாசம் எடுத்துக்கொள்கிறேன்.
mohamed Nuzrath says:
January 20, 2011 at 5:50 pm
அஸ்ஸலாமு அலைக்கும்
கொடி ஏற்றும் பள்ளிகளில் தொழ முடியூமா?
புவானா எனும் இடத்தில் நேர்ச்சை விடயமாக கேட்ட நபிதோழருக்கு நபி(ஸல்) அவர்கள் 1. ஷிh;க் நடக்கின்றதா? 2. ஜாஹிலிய்யா கால நடவடிக்கை இருக்கின்றதா என கேட்டு அனுமதித்த ஹதீஸிலிருந்து கூடாது என விளங்குகின்றது. இது சாpதானா?
Reply
mohamed Nuzrath says:
January 20, 2011 at 5:40 pm
அஸ்ஸலாமு அலைக்கும்.
மையத்து விடயத்தில் இன்று ஏனைய கொள்கை பின்பற்றுபவா;களிடத்தில் பல பித்அத்துகள் காணப்படுகின்றன. உண்மையில் இஸ்லாத்தின் உள்ள விடயம் எது என்பதை ஒரு தொடராக தந்தால் வாசகா;களுக்கு நன்றாக இருக்கும்.
மையத்து சம்பந்தமான கேள்விகள்.
1. மையத்தை பாதையில் வரும் போது அமர்ந்திருந்தால் எழும்ப வேண்டுமா?
2. யாருடைய மையத்தை கேள்விபட்டாலும் அந்த மையத்துக்கு போவது எம்மீது கடமையா?
3. 4ம் தக்பீரில் ஏதாவது துஆக்கள் கூற இருக்கின்றதா?
4. மையத்துடன் செல்லும் போது முன்னால் தான் போக வேண்டும்இ பின்னால் போக கூடாது என்றுள்ளதா?
5. முக்கியமான ஒரு பிரச்சினையானது. ஸலப் கொள்கையை பின்பற்றுகின்றௌம் என்று சொல்லக்கூடியவா;கள் ஒரு மையத்தை கொண்டு செல்லும் போது அதனை கபன் துணியை முடியூள்ளாh;கள். ஆனால் அதன் மீது (சுந்துக்) முடியில்லை. மையத்து விளங்கும் படியாக கொண்டு செல்கின்றனா;. இது மாh;க்கத்தில் உள்ளதா?
6. கபுh;ஸ்தானத்திற்கு போகும் போது செறுப்பு அணிந்து போகக்கூடாது என்கின்றனா;. இந்த விடயத்தில் உங்கள் ஆய்வூ என்ன? ஆய்வை வெளியிட்டால் பேருதவியாக இருக்கும்.
Reply
walaikumussalam
ஜனாஸா சம்பந்தமாக நீங்கள் சுட்டிக்காட்டியது மட்டுமல்லாத பல பிரச்சினைகள் இரு சாராரின் கருத்துக்கள் ஆதாரங்கள் என பல விடயங்கள் தொகுக்கப்பட வேண்டாம். இன்சா அல்லாஹ் இது போன்ற ஆய்வாக மாறும் பல கேள்விகள் இங்கே கேட்கப்பட்டுள்ளன. இன்சா அல்லாஹ் பதில எழுத முயற்சிக்கிறேன்.
குர்ஆன் எழுத்துக்கள் உள்ள குர்ஆன் அல்லாத பேப்பர்கலை குபை இல் போடலாமா?
Walaikumuissalam
குர்ஆன் வசனங்கள் உள்ள எந்த பேப்பராயினும் அதை வீசுவதாயின் எரிப்பதே சிறந்த முறை
அஸ்ஸலாமு அலைக்கும்!
அல்லாஹ் சிரிக்கிறான் என்று சொன்னால், சிரிக்கிறான் என எடுத்துக்கொள்ளுங்கள்! ஆனால் ஒப்பீடு செய்யாதீர்கள். என ஒரு ஹதீஸ் உள்ளது. அதைத் தர முடியுமா?
walaikumussalam
அவ்வாறு நேரடியாக எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் அதுதான் இஸ்லாமியர்களின் சரியான நிலைப்பாடு.
காதியானிகல் காபிர்கலா?
நபித்துவம் தவ்ஹீத் என்ற கொள்ளகையின் ஒரு பகுதி. அதில் யார் தவறிழைத்தாலும் அவர்கள் காபிர்களே
பெண்கள் கட்டாயம் பேஸ் கவர் பண்ண வேண்டுமா ? அல்லது முகம் தெரிகின்ற மாதிரி பர்தா அணிந்தால் போதுமா?
விரும்பினால் முகத்தை மூடலாம். தடையும் இல்லை கட்டாயமும் இல்லை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு
அல்லாஹ்வின் தூதரை விட அழகாக கற்றுத்தரும் ஆசிரியரை நான் பார்த்ததே இல்லை என்று கூறிய நபிதோழர் யார்?
இந்த ஹதீஸ் முழுமையாக தமிழில் கொடுக்கவும்
அன்புடன்
முஹம்மது நிஜாம்
Walaikumussalam
அத்தியாயம்: 5, பாடம்: 5.08, எண் 836
நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தபோது, மக்களில் ஒருவர் தும்மினார். அதற்கு நான், “யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக!)” என்று கூறினேன். மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான், “என்னை ஏன் இவ்வாறு வெறிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று புரிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவில்லை; அடிக்கவில்லை; திட்டவில்லை. என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் தொழுது முடிந்ததும், “தொழுகை என்பது என்பது மனிதர்களோடு பேசுவதன்று. மாறாக, இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்” என்றோ இந்தக் கருத்துப்படவோ என்னிடம் சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இஸ்லாத்தை (எங்களுக்கு) வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், “சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள்.
நான் “எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?” என்றேன். அதற்கு நபியவர்கள், “இது மக்களின் உள்ளங்களில் மீந்துவிட்ட, அவர்கள் விடமறுக்கும் பழக்கமாகும். எனவே, இது அவர்களை/உங்களை (நற்செயல்களிலிருந்து) தடுத்துவிடக் கூடாது” என்று கூறினார்கள்.
நான் “எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிவதாகக்கூறி மணலில்) கோடு வரைகின்றனர்” என்றேன். அதற்கு அவர்கள், “நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். அவருடைய கோட்டை ஒத்து எவராவது கோடு வரைவாரெனில் அதுவொரு கோடுதான்” என்றார்கள்.
அடுத்து, என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை உஹது மலையின் ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து வந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்த போது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. நானும் ஆதமுடைய மக்களுள் ஒருவன்தானே, கோபப்பட்டேன். கூடுதலாக, அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அதைக் கூறியபோது அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்” என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம் “அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள் “வானத்தில்” என்று பதிலளித்தாள். அடுத்து, “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள் “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றாள். அவர்கள் “(என்னிடம்) அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய பெண் ஆவாள்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி)
இந்த மொழிபெயர்ப்பு சத்திய மார்க்கம் இணைய தளத்திலிருந்து
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு
இலங்கையில் இருக்கும் சலபியின் கொள்கைகள் என்ன என்று தெளிவாகவும், விரிவாகவும் தெரியபடுத்தவும்.
அன்புடன்
முஹம்மது நிஜாம்
Walaikumussalam
Click Here
Click Here
Can you give your emai address please.
mujahidsrilanki@gmail.com
Jazakallh khair
அஸ்ஸலாமு அலைகும்
“பெண்கள் கட்டாயம் பேஸ் கவர் பண்ண வேண்டுமா ? அல்லது முகம் தெரிகின்ற மாதிரி பர்தா அணிந்தால் போதுமா?” என்று தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு
“விரும்பினால் முகத்தை மூடலாம். தடையும் இல்லை கட்டாயமும் இல்லை” என்று பதிலளித்துள்ளீர்கள். இந்தப் பதில் திருப்தியானதாக இல்லை.
இது எப்படி இருக்கிறது என்றால்:
“முஸ்லிம்கள் தொப்பி அணிய வேண்டுமா? அல்லது தலை தெரிகின்ற மாதிரி ஆடை அணிந்தால் போதுமா?” என்று கேட்கப்படும் ஒரு கேள்விக்கு “விரும்பினால் தொப்பி அணியலாம். தடையும் இல்லை கட்டாயமும் இல்லை” என்று பதிலளிப்பது போன்று இருக்கிறது.
அதாவது பெண்களுக்கு “ஹிஜாப்” என்பது ஆண்களுக்கு “தொப்பி” போன்று தான் என்ற ஒரு பார்வை உங்கள் பதிலில் விளங்குகிறது.
நான் தவறாக விளங்கியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அத்துடன் இந்தக் கேள்விகளுக்கும் பதில் தாருங்கள்.
1) பெண்கள் கட்டாயம் ஹிஜாப் போட வேண்டுமா?
2) நபியவர்களின் மனைவிமார்கள் ஏன் முகம் மறைத்து ஹிஜாப் அணிந்தார்கள்? (புகாரி:4141)
இக்கேள்விக்கு அல்லாஹ் கூறும் பதில்: “அதன் மூலம் அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாது இருப்பதற்கு இது சுலபமான வழியாகும்..”(33:59)
இந்த “கண்ணியம்”இ “துன்பத்திலிருந்து பாதுகாப்பு” நபியின் மனைவிமார்களுக்கும் மட்டும் தான் தேவையா?
3) ஹிஜாபை சட்டமாக்கிய அல்லாஹ்இ “நபியின் மனைவிமார்களுக்கு வேறு ஹிஜாப் நபியின் மனைவிமார்கள் அல்லாத பெண்களுக்கு வேறு ஹிஜாப்” என்று வித்தியாசப்படுத்தியுள்ளானா?
4) ஒரு வேளைஇ “ஆம் வித்தியாசப்படுத்தியுள்ளான்” என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்றால் “நபியே! நீங்கள் உங்கள் மனைவிகளுக்கும் உங்கள் மகள்மார்களுக்கும் நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் தங்கள் ஜில்பாப்களை இறக்கிக்; கொள்ளும் படி நீங்கள் கூறுங்கள்……” (33:59) என்ற அல்லாஹ்வின் வார்த்தைக்கு அர்த்தம் என்ன?
“நபியின் மனைவிமாருக்கு எது ஹிஜாபோ அது தான் நபியின் மகள்மார்களுக்கும் விசுவாசிகளின் பெண்களுக்கும் ஹிஜாபாகும். அதில் அவர்களுக்கிடையில் வித்தியாசமில்லை” என்பது மேற்படி வசனத்திலிருந்து தெட்டத் தெளிவாக விளங்குகிறதே?
5) முகம் திறக்க சில பெண்களுக்கு அல்குர்;ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும் அனுமதியளித்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
(இது உங்களை எதிர்ப்பதற்காக கேட்கப்படுகின்ற கேள்விகள் அல்ல. விளக்கம் பெறுவதற்காக கேட்கப்படுகின்ற கேள்விகள். என் வார்த்தைகள் உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நீங்கள் சொல்லப் போகும் பதில் வஹியிற்கு உடன் பட்டதாக இருந்தால் “செவிமடுப்பேன்இ கட்டுப்படுவேன்” இன்ஷா அல்லாஹ்.)
Walaikumussalam
ஆம் நிச்சயமாக தொப்பி அணிவது போன்றுதான் முகம் மூடுவதும். அது பற்றி சிறப்பும் வரவில்லை தடையும் வரவில்லை. பெண்களுக்கு ஹிஜாப் என்பது ஆண்களுக்கு தொப்பி போன்றது என்று நான் எனது பதிலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எங்கும் சொல்லவில்லை. கேள்வி முகம் மூடுவது பற்றியது உடலை மறைக்கும் முழுமையான ஹிஜாப் பற்றியதல்ல. அதே நேரம் நீங்கள் ஹிஜாப் என்ற பதத்தை முகம் மூடுதல் என்ற அர்த்தத்தில் இங்கு கூறியிருந்தால் ஆம் ஹிஜாபும் தொப்பியும் ஒரே நிலைதான் என்பதே நமது பதில்.அல்லாஹ் மிக அறிந்தவன்.
முதல் கேள்விக்குறிய பதிலை மேலே சொல்லியுள்ளேன். இரண்டாவதாக நீங்கள் காட்டியுள்ள ஹதீஸில் முகத்தை மறைத்தல் பெண்களுக்கு கடமை என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை அதில் உள்ளதெல்லாம் ஆயிசாரலியல்லாஹு அன்ஹா முகத்தை மறைத்தார்கள் என்பதுதான்.முகத்தை மறைப்பதை நாம் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் கடமை இல்லை என்றே நாம் சொல்கிறோம்.
அடுத்து நீங்கள் குறிப்பிட்ட வசனம் நபியவர்களுடைய மனைவியருக்கு மாத்திரம் உள்ளதல்ல மாற்றமாக அந்த வசனம் ஆரம்பிக்கின்ற முறையே அது அனைத்து பெண்களுக்கும் உறியது என்பதைக் கூறுகிறது.’நபியே உங்கள் மனைவியருக்கும் உங்களது பெண் மக்களுக்கம் முஃமினான பெண்களுக்கும் கூறுங்கள்…….’ என்றே அந்த வசனம் ஆரம்பிக்கிறது. எனவே இது நபியவர்களுடைய மனைவியருக்கு மாத்திரம் என்று யார் சொன்னாலும் தவறுதான். ஆனால் அந்த வசனத்தில் முகம் மூடுதல் சம்பந்தமான எந்த வார்த்தையும் இல்லை என்பதே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நபியவர்களின் மனைவியரை மட்டும் குறித்துப் பேசும் வசனங்களும் உண்டு. ஆனால் இது அதில் உள்ளது அல்ல என்பது வெளிச்சம்
3 ஆவது 4ஆவது கேள்விகளுக்கும் மேலே சொன்னதுதான் பதில். 5வது கேள்வியில்
என்று கேட்டுள்ளீர்கள். நாமறிந்த வகையில் சலுகையடிப்படையில் முகம் திறக்க அனுமதிக்கபட்ட ஒரு ஹதீஸையும் காணவில்லை. மாறாக அனுமதி என்ற அடிப்படையில் பல பெண்கள் நபியவர்களின் காலத்தில் முகம் திறந்த நிலையில் ஹிஜாப் அணிந்ததைக் கூறும் பல ஹதீஸ்கள் உள்ளன. அல்லாஹ் மிக அறிந்தவன்
எனது நண்பன் முஜாஹித் அவர்களே!
உங்கள் பதிலின் முதல் பகுதியில் “கேள்வி முகம் மூடுவது பற்றியது உடலை மறைக்கும் முழுமையான ஹிஜாப் பற்றியதல்ல” என்று நீங்கள் கூறுவதிலிருந்து ஹிஜாபுக்கும் முகம் மூடுவதற்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்ல வருகறீர்கள். அப்படித் தானே????
1) சம்பந்தமே இல்லை என்றால் ஏன் ஆயிஷா (ரழி) அவர்கள் ஹிஜாபுடைய வசனத்திற்கு முன் முகத்தை திறந்தவர்களாகவும் ஹிஜாபுடைய வசனத்திற்குப் பிறகு முகத்தை மறைப்பவர்களாகவும் இருந்தார்கள்????????
2) “ஹிஜாப் என்ற பதத்தை முகம் மூடுதல் என்ற அர்த்தத்தில் இங்கு கூறியிருந்தால் ஆம் ஹிஜாபும் தொப்பியும் ஒரே நிலைதான் என்பதே நமது பதில்” என்று கூறியிருக்கிறீர்கள். முகம் மூடுவதும் தொப்பியும் ஒரே நிலை தான் என்றால் உடலை மறைக்கும் முழுமையான ஹிஜாப் என்று நீங்கள் கூறும் ஹிஜாபின் நிலை என்ன????? அதுவும் தொப்பி போன்றதா????
எமது பேச்சு வழக்கில் அபாயாவிற்கும் பர்தாவிற்கும் நாம் ஹிஜாப் என்ற வாசகத்தைப் பயன்படுத்தி வருகிறோம். எந்தப் பெயரில் அழைத்தாலும் தவறு கிடையாது. ஆனால் குர்ஆனுடைய வசனங்களையோ ஹதீஸ்களின் வசனங்களையோ வார்த்தைகளையோ விளக்கும் போது எமது நடைமுறை வார்த்தைகளை வைத்து விளக்கக் கூடாது. இதனால்தான்.
‘ஹிஜாப் கடமையாக முன்னர் அவர் என்னைக் கண்டிருக்கிறார்….’ என்ற ஆயிசா ரழியல்லாஹு அன்ஹாவின் வார்த்தையையும் ‘ எனது முகத்தை எனது ஜில்பாபால் மறைத்துக்கொண்டேன்’ என்று அதைத் தொடர்ந்து என்ற ஆயிசா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறும் வார்த்தையையும்
ஒரே அர்த்தத்தில் விளங்கியுள்ளீர்கள். இதில் ஹிஜாப் என்ற சொல்லை நமது நடைமுறை வழக்கை வைத்து விளங்கியதால் பலர் இதில் தவறுவிட்டுள்ளனர். அந்த ஹதீஸிலேயே அதற்குறிய விளக்கும் உள்ளது.
‘ எனது முகத்தை எனது ஜில்பாபால் (ஹிஜாபாலல்ல) மறைத்துக்கொண்டேன்’ என்ற வார்த்தையே ஜில்பாப் வேறு ஹிஜாப் வேறு என்பதைத் தெளிவாகக் குறிக்கிறது.
நாம் ஹிஜாப் என்று வழமையில் கூறுவது ஜில்பாபிற்கே. குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஹிஜாப் என்ற சொல் உடலை மறைக்கும் ஆடை என்பதற்கு எங்கும் ஆதாரம் கிடையாது. மொழியிலும் கிடையாது. ஹிஜாப் என்பதற்கு ‘திரை’ அல்லது ‘திரையிடல்’ என்பதே அர்த்தம். எனவே ‘திரை கடமையாகும் முன்னர் அவர் என்னைக் கண்டிருக்கிறார்….’ என்பதே அதை விளங்கும் முறை. எனவே திரை பற்றிய வசனத்திற்கும் முகம் மூடுவதற்கும் சம்பந்தம் இல்லை. திரை ஆண்கள் பெண்களைப் பார்க்க இயலாதளவிற்குப் போடப்படும் ஒரு தடுப்பு அல்லது புடவை. இதற்கும் உடம்பில் போடும் ஆடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
உடலை மறைத்தல் சம்பந்தமான வசனங்களில் ஹிஜாப் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.மாறாக கிமார் ஜில்பாப் போன்ற சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
அப்படியென்றால் எதனால் ஆயிசா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மூடினார்கள்? என்ற வினா எழும் இதில் நான் விளக்க வேண்டிய இன்னும் நிறைய அம்சங்கள் உண்டு. ஆனாலும் முதலில் ஹிஜாப் உடலில் இடும் ஆடை என்பதற்கு ஏதாவது ஆதாரம் குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இருந்தால் சமர்ப்பியுங்கள். அல்லது இல்லை என்ற முடிவுக்கு நான் வந்ததைப் போன்று வாருங்கள் அதன் பின் எனது விளக்கத்தைத் தொடர்கிறேன் இன்சா அல்லாஹ்
ASSALAMU ALAIKUM
SAHOTHARAR MOULAVI KKU
YENATHU NANPAR KKU SONTHAMAHA IRUKKA HOUSE ILLAI ANAL AVARGAL HAJJ SEYVATHAHA ULLARGAL BUT AWAR WIFE HOUSE KADDUMPADE SOLLUHIRAR ITHIL MARKKA SADDAPPADI YENTHA ONTRAI MUTHALIL SEYYA ANUMATHI ULLATHU
Walaikumussalam
உண்ணுவதற்கு உணவும் அணிய ஆடையும் வாடகையாகவோ சொந்தமாகவே வாழ வீடும் அளிப்பது ஒரு கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் உள்ளது. இந்தக் கடமைகள் போக தன் கையில் உள்ள பணத்தை வைத்து உம்ரா செய்ய நினைத்தால் தடுக்க அவரது மனைவிக்கு உரிமை இல்லை. நிச்சயமாக உம்ரா செல்லச் செலவாகும் பணத்திற்குள்ளோயே சொந்தமாக ஒரு வீடு கட்டிவிட முடியுமாயின் அதை அவர் செய்வதே சிறந்தது. ஆனால் உம்ரா செல்லும் பணத்தைப் போன்று 5மடங்காவது வீடு கட்டத் தேவைப்படும். அப்படியாயின் இருநிலைகள்தான் உள்ளன. அவரிடம் அதை விட மெலதிகமாகப் பணம் உள்ளது அல்லது இல்லை என்ற இரு நிலைகள். மேலதிகமாகப் பணம் இருப்பின் அழகாக உம்ரா செய்து விட்டு எஞ்சிய பணத்தில் வீட்டைக் கட்ட நினைத்தால் அவருக்கு அந்த உhமை உண்டு. அது போதாமல் போகலாம் போதலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை கணவரது கையிலேயே உள்ளது. இரண்டாவது நிலை: மேலதிகமாக எந்தப் பணமும் இல்லை எனின் அவர் உம்ரா செய்யாது விட்டாலும் கடன்பட்டே வீடு கட்ட வேண்டியிருக்கும்.அதை விட உம்ரா அவருக்குச் சிறந்தது. அல்லாஹ் மிக அறிந்தவன்
எனது அன்புக்குரிய முஜாஹித் மௌலவி அவர்களே!
நீங்கள் மிகவும் திறமையானவர். நா வன்மை மிக்க ஒரு பேச்சாளர். சொல் நயம் அறிந்த எழுத்தாளர். மட்டுமல்ல சிறந்த சிந்தனையாளர். மெய்யியலில் (LOGIC) விற்பன்னர்.
இந்தத் திறமைகளை வைத்து வஹியின் வார்த்தைகளின் அர்த்தங்களை தவறாக விளங்க வேண்டாம். தவறாக விளங்கப்படுத்தவும் வேண்டாம்.
“ஹிஜாப் என்பது வேறு, ஜில்பாப் என்பது வேறு” என்ற ஒரு வாதத்தை எடுத்து வைத்துள்ளீர்கள்.
அதற்கான உங்களது ஆதாரம்:
“உடலை மறைத்தல் சம்பந்தமான வசனங்களில் ஹிஜாப் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.மாறாக கிமார் ஜில்பாப் போன்ற சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. “ என்பதாகும்.
இது மிகவும் பிழையான வாதம்:
ஹிஜாப் என்பது ஒரு பொதுப் பெயர். பெண்கள் ஆண்களை விட்டும் தம்மை மறைத்துக் கொள்வதற்காக செய்யப்படுகின்ற எந்த எந்த மறைப்பும் “ஹிஜாப் (திரை)” தான்.
“ஹிஜாப் என்பதற்கு ‘திரை’ அல்லது ‘திரையிடல்’ என்பதே அர்த்தம்” என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.
ஆனால் அரபு அகராதி முன்ஜிதில் “ஹிஜாப்” என்ற பதத்தின் அர்த்தம் பின்வருமாறு உள்ளது.
الحجاب ج حجب : الستر وكل ما احتجب به (ص118)
“மறைத்தல் மற்றும் மறைப்பதற்கு பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும்” ஹிஜாப் எனப்படும்.
மேலும், ஆயிஷா (ரழி) அவர்களின் வார்த்தை அரபியில் இப்படி பதிவாகியிருக்கிறது.
“سترت وجهي عنه بجلبابي”
அதாவது, இங்கே “ஸதர்து” என்ற அரபுப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பதத்தின் மூலச் சொல் “ஸித்ர்” என்பதாகும்.இதன் தமிழ் அர்த்தம் “மறைத்தல்” என்பதே.
“ஹிஜாப்” என்பதும் “ஸித்ர்” என்பதும் ஒரே அர்த்தம் என்பதை மேலே அகராதியில் கண்டோம்.
And ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் இதே செய்தியின் ஆரம்பத்தில்
بعد ما أنزل الحجاب””
“ஹிஜாபுடைய சட்டம் இறங்கியதற்குப் பின்னால்” என்ற வாசகம் இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
எனவே, ஆயிஷா (ரழி) அவர்கள் “ஹிஜாப்” எனும் அர்த்தத்தில் தான் “ஸித்ர்” என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவு.
இதன்படி ஒரு பெண் தன்னை மறைத்துக் கொள்ள “ஜில்பாபைப்” பயன்படுத்தினால் அதுவும் “ஹிஜாப்” தான்.
மேலும் “ஹிஜாப் என்பது வேறு, ஜில்பாப் என்பது வேறு” என்ற உங்களது வாதம் பின்வரும் வாதங்களுக்கு சமனானது.
- “பாடசாலை என்பது வேறு, வகுப்பு என்பது வேறு”
- “பள்ளிவாசல் என்பது வேறு, மிம்பர் என்பது வேறு”
- “வீடு என்பது வேறு சமயலறை என்பது வேறு”
- “உடம்பு என்பது வேறு முகம் என்பது வேறு”
இந்த வாதங்களை சரி என்று கூறுவதா? பிழை என்று கூறுவதா??
நியாயமாக கருத்துச் சொல்லும் ஒருவர் இப்படிக் கூறுவார்.
- “பாடசாலையின் ஓர் அங்கம் தான் வகுப்பு”
- “பள்ளியின் ஓர் அங்கம் தான் மிம்பர்”
- “வீட்டின் ஓர் அங்கம் தான் சமயலறை”
- “உடம்பின் ஓர் அங்கம் தான் முகம்”
அது போலவே, “ஹிஜாபின் ஓர் அங்கம் தான் ஜில்பாப்”.
மேலும் நீங்கள் “‘ எனது முகத்தை எனது ஜில்பாபால் (ஹிஜாபாலல்ல) மறைத்துக்கொண்டேன்’ என்ற வார்த்தையே ஜில்பாப் வேறு ஹிஜாப் வேறு என்பதைத் தெளிவாகக் குறிக்கிறது.” என்று கூறியிருக்கிறீர்கள்.
“எனது முகத்தை எனது ஜில்பாபால் மறைத்துக் கொண்டேன்” என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள் என்பது உண்மை. அதனால் “ஜில்பாப்” என்பது ஹிஜாபில் அடங்காது என்பது அர்த்தமா?
“எனது வகுப்புக்குச் சென்றேன்” என்று ஒரு மாணவன் கூறுகிறான். இவ்வார்த்தையை செவிமடுக்கின்ற ஒருவர் “அந்த மாணவன் வகுப்புக்குத் தான் சென்றிருக்கிறான். பாடசாலைக்குச் செல்லவில்லை” என்று வாதிக்கிறார்.
அதற்கு ஆதாரமாக “எனது வகுப்புக்கு (பாடசாலைக்கல்ல) சென்றேன்’ என்ற வார்த்தையே வகுப்பு வேறு பாடசாலை வேறு என்பதைத் தெளிவாகக் குறிக்கிறது” என்று கூறினால், அவரது வாதத்தை ஏற்றுக் கொள்வீர்களா???
எனவே, “ஹிஜாப் என்பது வேறு ஜில்பாப் என்பது வேறு” என்ற உங்கள் வாதம் பொறுத்தமற்றது. நியாயமற்றது. ஆதாரமற்றது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
“ஹிஜாப், ஜில்பாப் என்ற இரண்டும் ஒன்றா? அல்லது வெவ்வேறானதா?” என்ற வாதம் இங்கே முக்கியமானதல்ல.
எனது சுருக்கமான கேள்வி: ஆயிஷா (ரழி) அவர்கள் தனது ஜில்பாபினால் தனது முகத்தை மறைப்பதற்குக் காரணம் அல்லாஹ்வின் கட்டளை என்பதா? அல்லது வேறு காரணமா??
இவ்வாறு ஏற்கனவே நான் இதில் விளக்க வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தேன். எனது கேள்விக்கு மாத்திரம் நீங்கள் பதில் சொன்னால் போதுமானது. எனது வினா தெளிவாகவே உள்ளது. உடலை மறைப்பதற்கு ஹிஜாப் என்று ஹதீஸிலோ குர்ஆனிலோ எந்த இடத்திலாவது பயன்படுத்தப்பட்டடுள்ளதா? என்பதே. இருந்தால் சமர்ப்பியுங்கள். இந்த ஹதீஸே அதற்கு ஆதாரம் என்று சொல்லிவிட வேண்டாம் இந்த ஹதீஸ் ஹிஜாபால் மறைத்தேன் என்று எங்கும் சொல்லவில்லை. ஜில்பாபால் மறைத்தேன் என்றே சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் மறைத்ததற்கு ஹிஜாபுடைய வசனம் காரணமென்று சொல்லவில்லை. ஹிஜாப் உடைய வசனம் இறங்க முன் அவர் என்னைக் காண்பவராக இருந்தார். என்பதற்கும் முகத்தை மூடியதற்கம் சம்பந்தம் இல்லை என்றுதான் கூறுகிறோம். அப்படியாயின் ஏன் மூடினார்கள்? என்ற வினாவிற்கு நான் பதில் சொல்வேன் இன்சா அல்லாஹ். ஆனால் ஹிஜாபை ஆடை என்ற அர்த்தத்தில் ஹதீஸிலோ குர்ஆனிலோ எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா? தயவு செய்து பதில் தாருங்கள். அதை விட்டு விட்டு மொழிரீதியாக ஜில்பாபும் ஹிஜாப்தான் என்ற விளக்கம் அளித்துள்ளீர்கள். நான் எதைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை அதை நீங்களாகவே கற்பனை செய்து பதில் கூறியுள்ளீர்கள். ஹிஜாப் என்றால் கற்களால் கட்டப்பட்ட சுவரும் அடங்கும் அதற்காக பெண்கள் கற்களால் தங்கள் உடலை மறைக்கலாம் என்று சொல்ல முடியாது. நான் கேற்பது. ஹிஜாப் உடலை மறைக்கும் ஆடை என்ற வழக்கில் குர்ஆனிலும் ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதே? தயவு செய்து அதற்கு மாத்திரம் பதில் தாருங்கள்
“ஹிஜாப் உடலை மறைக்கும் ஆடை என்ற வழக்கில் குர்ஆனிலும் ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை ஊன்றிக் கேட்டுள்ளீர்கள்.
இதற்கான பதிலைத் தான் நான் முன்னதாகவே எழுதியிருக்கிறேன்.
அதாவது “ஹிஜாப் என்பது வேறு ஜில்பாப் என்பது வேறு” என்ற உங்கள் வாதம் பொறுத்தமற்றது. நியாயமற்றது. ஆதாரமற்றது.” என்பதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன்.
எனது பதில் உங்களுக்கு விளங்கவில்லையென்றால் மீண்டுமொருமுறை விளங்கப்படுத்துகிறேன்.
குர்ஆனிலும் ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ள “ஹிஜாப்” என்ற பதம் உடலை மறைக்கும் ஆடையையும் குறிக்கும். அது அல்லாதவற்றையும் குறிக்கும்.
இப்பதம் உடலை மறைக்கும் ஆடையை எச்சந்தர்ப்பத்திலும் குறிக்கவே குறிக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லவே இல்லை என்றே நான் கருதுகிறேன். முடிந்தால் எடுத்துக் காட்டுங்கள். ஏற்றுக் கொள்கிறேன்.
அதற்கு மாற்றமாக “ஹிஜாப்” என்ற பதம் உடலை மறைக்கும் ஆடையையும் குறிக்கும் என்பதற்கு ஏற்கனவே கூறப்பட்ட ஆயிஷா (ரழி) அவர்களின் முழுமையான வாசகத்தைக் கவனியுங்கள்.
” قالت عائشة وكان صفوان بن المعطل السلمي ثم الذكواني من وراء الجيش فأدلج فأصبح عند منزلي فرأى سواد إنسان نائم فأتاني فعرفني حين رآني، وكان يراني قبل الحجاب فاستيقظت باسترجاعه حين عرفني فخمرت وجهي بجلبابي” أخرجه البخاري ومسلم
இதில் கோடிடப்பட்டுள்ள வாசகமான
“அவர் என்னைக் கண்டவுடன் என்னை அடையாளம் கண்டுகொண்டார். (காரணம்) ஹிஜாபுக்கு முன்னர் என்னை அவர் கண்டிருக்கிறார்” என்பதில்
“ஹிஜாப்” என்ற பதம் என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதனை நேர்மையாக சிந்தித்தால் உங்கள் குழப்பத்திற்கு தெளிவு கிடைத்து விடும் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வுக்காக வேண்டி இஹ்லாஸ{டன் சிந்தியுங்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் தன்னை தூக்கம் மிகைத்து தூங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவ்வழியே ஸப்வான் (ரழி) அவர்கள் வருகிறார்கள். அவ்விடத்தில் ஒரு கருப்பு மனித உருவத்தைக் காண்கிறார். அவர் அவ்விடம் போய்ப் பார்த்தால் அவ்வுருவம் ஆயிஷா என்பதை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
அவ்வுருவம் ஆயிஷா தான் என்பதை அவர் அடையாளம் கண்டு கொள்வதாக இருந்தால் ஏற்கனவே ஆயிஷா (ரழி) அவர்களை ஸப்வான் (ரழி) அவர்கள் கண்டிருக்க வேண்டும். அப்படிக் காணுவதாக இருந்தால் ஏற்கனவே ஆயிஷா (ரழி) அவர்கள் முகம் திறந்திருக்கத வேண்டும். அப்படித் தானே?
இங்கே ஆயிஷா (ரழி) அவர்கள் கண்விழித்து ஸப்வான் (ரழி) அவர்களைக் கண்டவுடன் தனது முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். இப்படி முகத்தை மறைத்துக் கொள்ளும் ஒரு பெண்ணை ஏற்கனவே எப்படி ஸப்வான் (ரழி) அவர்கள் கண்;டிருக்க முடியும்? ஏனெனில் முகத்தை மறைத்திருக்கும் ஒருவரை காண முடியாதே? என்று வினா எழுவது நியாயம்.
இந்த வினாவுக்குத் தான் மேற்படி கோடிடப்பட்டுள்ள வாசகம் பதிலாக அமைந்திருக்கிறது. அதாவது, ஆயிஷா (ரழி) அவர்கள் முகம் மறைக்கத் தொடங்கியது ஹிஜாபுக்குப் பிறகு தான். ஹிஜாபுக்கு முன்னர் முகம் திறந்தவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.
எனவே தான் “ஹிஜாபுக்கு முன்னர் என்னை அவர் கண்டிருக்கிறார்” என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறர்கள்.
காணுவதாக இருந்தால் முகம் திறந்திருக்க வேண்டும் தானே??
அப்படியென்றால், ஹிஜாபுக்கு முன் ஆயிஷா (ரழி) அவர்கள் முகம் திறந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஹிஜாபுக்கு முன் முகம் திறந்திருந்த ஆயிஷா (ரழி) அவர்கள் ஏன் ஹிஜாபுக்குப் பிறகு முகத்தை மறைக்க வேண்டும்??????
ஹிஜாபிற்கு முன் ஏற்படாத மாற்றம் ஹிஜாபுக்குப் பின் ஏன் ஏற்படுகிறது????
“ஹிஜாபுக்கு முன்னர் என்னை அவர் கண்டிருக்கிறார்” என்ற வாசகத்தில் ஏன் “ஹிஜாபுக்கு முன்னர்” என்று குறிப்பிட வேண்டும்????
“ஹிஜாப் உடைய வசனம் இறங்க முன் அவர் என்னைக் காண்பவராக இருந்தார். என்பதற்கும் முகத்தை மூடியதற்கம் சம்பந்தம் இல்லை என்றுதான் கூறுகிறோம்.” என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் அதே வேளை
ஆயிஷா (ரழி) அவர்கள் தான் “முகத்தை திறந்திருந்ததற்கும்” “முகத்தை மூடியதற்கும்” ஹிஜாபுக்கு முன் – ஹிஜாபுக்குப் பின் என்பது தான் காரணம் என்பதை தெட்டத் தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?????
இப்போது சிந்தியுங்கள்.
மேலுள்ள வாசகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “ஹிஜாப்” என்ற பதத்திற்கு “உடலை மறைக்கும் ஆடை” என்ற அர்த்தம் அல்லாது வேறு என்ன அர்த்தம் கொடுக்கப் போகிறீர்கள்??
முகத்தை மூடுவதும் முகத்தை திறப்பதும் உடலை மறைக்கும் ஆடையுடன் சம்பந்தப்பட்டது தானே??
முகத்தை மூடுவதும் முகத்தை திறப்பதும் “ஹிஜாபுக்குப் பின்னும் ஹிஜாபுக்கு முன்னும்” என்பதுடன் சம்பந்தப்பட்டது தானே??
எனவே ஹிஜாப் உடலை மறைக்கும் ஆடையுடன் சம்பந்தப்பட்டது தானே??????????????
அல்லாஹ் மிக அறிந்தவன்.
உடலை மறைக்கும் ஆடையையும் குறிக்கும் என்கிறீர்கள். அப்படிக் குறிக்கின்ற ஒரு ஹதீஸைக் காட்டுங்கள் என்றால் காட்டமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறீர்கள். தயவு செய்து அவ்வாறு குறிக்கும் வகையில் வந்திருக்கும் ஒரு ஹதீஸை எடுத்துக் காட்ட முடியுமா. இல்லை இந்த ஹதீஸ்தான் ஹிஜாப் என்றால் முழு உடலை மறைக்கும் ஆடை என்பதற்கான ஆதாரம். வேறு ஹதீஸ்கள் இல்லை என்று சொல்லுங்கள் . இந்த ஹதீஸில் நீங்கள் உங்களை அறியாமலேயே தவறாக மொழிபெயர்க்கிறீர்கள் என்பதை விளக்குகிறேன் இன்சா அல்லாஹ். ஆனால் முக்கியம் இந்த ஹதீஸ்தான் ஹிஜாப் என்றால் முழு உடலை மறைக்கும் ஆடை என்பதற்கான ஆதாரம். வேறு ஹதீஸ்கள் இல்லை என்று சொல்லிவிடுங்கள். அல்லது அதை எடுத்துக் காட்டுங்கள்.
1இஸ்லாத்தில் கரு உருவஹாமல்இருக்க ஊசி அல்லது மாத்திரை பாவிக்க முடிஉமா?
2 குர்பானி கொடுக்கும் போது அறி குத்திய மாடு கொடுக்கலாமா?
“உடலை மறைக்கும் ஆடையையும் குறிக்கும் என்கிறீர்கள். அப்படிக் குறிக்கின்ற ஒரு ஹதீஸைக் காட்டுங்கள் என்றால் காட்டமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறீர்கள்” என்று கூறியிருக்கிறீர்கள்.
தோழனே!
“ஜில்பாப்” என்பது ஓர் ஆடை. “இந்த ஆடை ஹிஜாபின் ஓர் அங்கம்” என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
அந்த விளக்கத்தை உங்களால் மறுக்க முடியாது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த விளக்கம் குறித்து நீங்கள் மறுப்பேதும் சொல்லவில்லையே.
அந்த விளக்கத்தில் ஓர் உதாரணத்தைக் காட்டியிருந்தேன்.
(((“எனது வகுப்புக்குச் சென்றேன்” என்று ஒரு மாணவன் கூறுகிறான். இவ்வார்த்தையை செவிமடுக்கின்ற ஒருவர் “அந்த மாணவன் வகுப்புக்குத் தான் சென்றிருக்கிறான். பாடசாலைக்குச் செல்லவில்லை” என்று வாதிக்கிறார்.
அதற்கு ஆதாரமாக “எனது வகுப்புக்கு (பாடசாலைக்கல்ல) சென்றேன்’ என்ற வார்த்தையே வகுப்பு வேறு பாடசாலை வேறு என்பதைத் தெளிவாகக் குறிக்கிறது” என்று கூறினால்இ அவரது வாதத்தை ஏற்றுக் கொள்வீர்களா???)))) என்றொரு கேள்வியைக் கேட்டிருந்தேன்.
இப்போது, இப்படி வாதம் புரிகின்ற இதே நபர் நம்மிடம், “பாடசாலை என்ற பதம் வகுப்பையும் குறிக்கும் என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள்” என்று கூறுகிறார்.
இப்படி ஆதாரம் கேட்கும் இவருக்கு “பாடசாலை என்பது வகுப்பையும் குறிக்கும் அது அல்லாதவற்றையும் குறிக்கும்” என்று நாம் விளக்கம் கூறினால் உடனே, “பாடசாலை என்பதற்கு வகுப்பையும் குறிக்கும் என்று கூறியுள்ளீர்கள். அப்படிக் குறிக்கின்ற ஒரு ஆதாரத்தைக் காட்டுங்கள் என்றால் காட்டமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கின்றீர்கள்” என்று அவர் மீண்டும் வாதிக்கிறார்.
இதே வாதங்களுக்குச் சமனான ஒரு வாதம் தான் இப்போது நம்மிருவருக்குமிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அன்பனே! “ஹிஜாபின் ஓர் அங்கம் தான் ஜில்பாப்” என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?? இதற்குக் கட்டாயம் பதில் சொல்லுங்கள்.
எனது நண்பன் முஜாஹித் அவர்களே!
“எதனால் ஆயிசா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மூடினார்கள்? என்ற வினா எழும் இதில் நான் விளக்க வேண்டிய இன்னும் நிறைய அம்சங்கள் உண்டு” என்று ஏற்கனவே நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.
மேலும், “இந்த ஹதீஸில் நீங்கள் உங்களை அறியாமலேயே தவறாக மொழிபெயர்க்கிறீர்கள் என்பதை விளக்குகிறேன் இன்சா அல்லாஹ்.” என்றும் கூறியிருக்கிறீர்கள்.
INNUM VILAKKATTAIK KANAVILLAI.
அத்தவறை உடனே கூறிவிடுங்கள். அது தவறாக இருந்தால் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஏனெனில், எனது இக்கலந்துரையாடலின் நோக்கம் உங்களை வீழ்த்துவது அல்ல.
உங்கள் முழு விளக்கத்தையும் பதிலையும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கிறேன். வஹியிற்கு உடன்பட்டால் மறுக்க மாட்டேன்.
என்று நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு விடயத்தை நான் அதை விளங்கவில்லையோ என்ற ஐயப்பாட்டில் மறுபடி கொஞ்சம் மேலதிகமாக எழுதியுள்ளீர்கள். பின்னர் பின்வருமாறு கேட்கிறீர்கள்
இது நீங்கள் ஏற்கனவே கேட்டு நான் பதிலளித்தது. மீண்டும் மீண்டும் என் கேள்வி விளங்காதது போல் பதில் எழுதுகிறீர்கள். சுருக்கமாக எனது கேள்விகயை நான் மறுபடி விளக்குகிறேன்.ஹிஜாப் என்றால் திரை . அது எந்தத் திரையாகவும் இருக்கலாம் எதனால் ஆன திரையாகவும் இருக்கலாம். இதில் எனக்கும் உங்களுக்கும் உடன்பாடுதான் என்பதை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன்.
ஹிஜாபுடைய வசனத்திற்குப் பின்னால் ஆயிசா ரலியல்லாஹு அன்ஹா முகத்தை மறைத்தார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் …
ஹிஜாபுடைய வசனம் முகத்தை மூடுங்கள் என்று சொன்னதற்காகவோ அல்லது அது ஆடை பற்றி இறங்கிய வசனம் என்பதற்காகவோ அவர் மறைக்கவில்லை. ஹிஜாப் என்ற சொல் குர்ஆனிலோ ஹதீஸிலோ முழுமையான ஆடை என எங்கும் பயன்படுத்தப்படவும் இல்லை.
அவ்வாறு பயன்படுத்தும் வழமை உண்டு எனின் எடுத்துக்காட்டுங்கள். இல்லை அவ்வாறு பயன்படுத்தப்படவில்லை என்றால் அதை சொல்லிவிடுங்கள்.
அதன் பின் இந்த ஹதீஸை விளக்குகிறேன் என்று சொல்லியிருந்தேன் அதை விட்டுவிட்டு.பாடசாலைக்குள்தான் வகுப்பிருக்கும் என்கிறீர்கள். நான்தான் அதை ஏற்கனவே எழுதிவிட்டேனே. ஒரு சொல்லிற்கான மொழிப்பயன்பாடு மார்க்க ரீதியான பயன்பாடு என பல இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் மொழி ரீதியாக அந்த அர்த்தம் இருப்பதை மறுக்கவில்லை.மொழி ரீதியாக இரண்டிற்கும் பயன்படுத்தப்படும். ஆனால் மார்க்க ரீதியாக குர்ஆனிலோ ஹதீஸிலோ ஹிஜாப் என்ற சொல் ஆடைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா. என்பதே கேள்வி. திருப்பியும் ……
சகோதரனே!
“ஹிஜாபுடைய வசனம் முகத்தை மூடுங்கள் என்று சொன்னதற்காகவோ அல்லது அது ஆடை பற்றி இறங்கிய வசனம் என்பதற்காகவோ அவர் மறைக்கவில்லை. ஹிஜாப் என்ற சொல் குர்ஆனிலோ ஹதீஸிலோ முழுமையான ஆடை என எங்கும் பயன்படுத்தப்படவும் இல்லை ”
என மீண்டும் மீண்டும் நீங்களும் எழுதுவதால் தான் மீண்டும் மீண்டும் விளக்குகிறேன்.
“ஒரு சொல்லிற்கான மொழிப்பயன்பாடு மார்க்க ரீதியான பயன்பாடு என பல இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் மொழி ரீதியாக அந்த அர்த்தம் இருப்பதை மறுக்கவில்லை.”
என்று கூறியுள்ளீர்கள்.
“மொழி ரீதியான பயன்பாடு மார்க்க ரீதியான பயன்பாட்டுக்கு பொருத்தமற்றது” என்று யாராலும் சொல்ல முடியாதே. மொழியை வைத்துத் தான் மார்க்கத்தை விளங்க வேண்டும். மொழியின்றி மார்க்கம் ஏது?
“ஹிஜாப் என்பதில் ஜில்பாபும்” அடங்கும் என்பதை மொழி ரீதியாக நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.
ஹிஜாப் விடயத்தில் மொழி ரீதியாக நீங்கள் ஏற்றுக் கொள்ளும் அர்த்தத்தை மார்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள உங்களைத் தடுப்பது எது???
அதாவது, மொழி ரீதியாக ஹிஜாப் என்பதில் ஜில்பாபினால் முகத்தை மறைப்பதும் அடங்கும் என்பதை நீங்கள் மறுக்கவில்லை. இதே விடயத்தை மார்க்க ரீதியாக ஏற்பதற்கத் தயங்குகிறீர்கள். அத்தயக்கத்திற்கான காரணம் என்ன???
ஹிஜாப் என்பது முகத்தை மறைப்பதையும் மொழி ரீதியாக குறிக்கும் என்பதாலும் ஆயிஷா ரழி அவர்களின் செயல் இதனை இன்னும் ஊர்ஜிதம் செய்வதாலும் அச்செய்தியில் வரும் ‘ஹிஜாப்’ என்ற பதம் ‘முகத்தை மறைப்பது’ என்ற அர்த்தத்தில் பயன்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
இப்போது
1) எதனால் ஆயிசா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மூடினார்கள்?
2) ஹதீஸ் மொழிபெயர்ப்பில் நான் விட்ட தவறையும் சுட்டிக் காட்டுங்கள்.
ஜஸாகல்லாஹ{ கைரன்.
ஒரு சொல்லின் மொழியியில் ரீதியான அர்த்தத்திற்கும் மார்க்க ரீதியான விரிந்த அல்லது சுருங்கிய அர்த்தத்திற்கும் வித்தியாசத்தை நீங்கள் விளங்கியவர் என்ற நல்லெண்ணத்தில்தான் அவ்வாறு சுருங்க எழுதினேன். ஆனால் மேலுள்ள உங்கள் கூற்று நீங்கள் அதைப் புரிந்தவரல்ல என்பதை சொல்லுகிறது. கீழ்வரும் பந்தியும் அதனையே காட்டுகிறது.
நீங்கள் முறையாக தெரிந்ததை தெரிந்ததென்றும் தெரியாததை தெரியாதென்றும் சொல்லும் பண்புள்ளவர் என்ற எண்ணப்பாட்டில்தான் நான் இதுவரை உங்களோடு தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு காரணமாக இருந்தது. தயவு செய்து
மேற்சொன்னது போன்ற வார்த்தைகள் ஒரு சொல்லுடைய மொழிப்பயன்பாடு மற்றும் துறைப் பயன்பாடு சம்பந்தமான தெளிவின்மையால் ஏற்பட்டிருந்தால் நான் கலந்துரையாடலைத் தொடர்ந்து செய்வேன். ஆனால் நீங்கள் அதைத் தெரிந்திருந்தும் புறக்கணிக்கும் வகையில் நடந்திருந்தால் நீங்கள் உண்மையை ஏற்கத் தயாரானவரல்ல என்பதற்கு அந்த ஒன்றே போதுமானது எனலாம். ஆனாலும் நீங்கள் அறியாதுதான் அவ்வாறு சொல்லியருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு சொல்லின் அர்த்தம் ஒரு துறையில் சில பொழுதுகளில் விரிந்த அர்த்தத்தையும் சில பொழுதுகளில் மொழியின் அர்த்தத்தையும் விட சுருங்கிய அர்த்தத்தையும் தரும். இதைத்தான் ஒரு சொல்லை விளக்கும் போது மொழியில் என்றும் துறைப்பயன்பாட்டில் என்றும் கூறுவார்கள். உதாரணமாக ஸலாத் என்றால் பிரார்த்தனை .ஸலாத்தை நிலைநாட்டுங்கள் என்ற இடங்களிலெல்லாம் நாம் மொழியில் உள்ளதை விட விரிந்த அர்த்தத்தை வழங்கியதால் தொழுகை என்று சொல்கிறோம் . எவர் ஸலாத்தை விட்டாரோ அவர் நிராகரித்து விட்டார். என்ற ஹதீஸையெல்லாம் மொழியை விட விரிந்த அர்த்தத்திலேயே மொழிபெயர்க்கிறோம்.அதே போன்றுதான் ஸகாத் என்ற சொல். ஸகாத் மொழியில் எங்கும் பொருளாதாரத்தில் ஒரு பகுதியை வழங்கல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் மார்க்கம் அதற்கு சில விரிந்த அர்த்தத்தை தருகிறது. அதே போன்றுதான் ரிபா வட்டி என்ற சொல்லிற்கு இஸ்லாம் விரிந்த பொருள் கொண்டது. அதே போன்றுதானா ஹிஜாபும் என்ற அடிப்படையிலேயே என் கேள்வி எழுந்தது. ஹிஜாப் என்ற சொல் இஸ்லாத்திற்கு முன் மொழியில் எங்கும் உடலை மறைக்கும் ஆடைக்கு உபயோகிக்கப்படவில்லை. எனது ஹிஜாப் என்றோ அல்லது ஹிஜாப் இட்டேன் என்றோ வந்த கவிதைகளாக இருக்கலாம் அல்லது இலக்கியங்களாக இருக்கலாம் எந்த ஜாஹிலியக் கால கவிதையாக இருந்தாலும் எதிலும் ஹிஜாப் உடலை மறைக்கம் ஆடை என்ற அர்த்த்தில் உபயோகிக்கப்படவில்லை. அந்த மொழியர்த்தத்திற்கு மாற்றமாக ஹதீஸிலோ குர்ஆனிலோ விரிந்த அர்த்தம் வந்திருந்தால் அதைத் தாருங்கள் என்றுதான் இவ்வளவு நாளும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ஹிஜாப் என்ற சொல்லின் மொழியர்த்தம் திரை என்பதும் எவைகளொல்லாம் திரையிடப் பயன்படுகிறதோ அவைகளும் என்ற மொழிவிளக்கத்திற்கான உங்களது தவறான வாத அடிப்படையில் நாம் தமிழில் சொல்வதென்றால் ‘எனது திரையைத் தாருங்கள்’ என்று சொன்னால் அதில் உடலை முழுமையாக மூடும் ஆடையும் அடங்கும் என்று சொல்லலாம் பெடஸீட்டிற்கும் திரை என்று சொல்லலாம் என தொடர்ந்த உளர வேண்டி வரும்.நீங்கள் ஹிஜாப் என்பது உடலை மறைக்கும்ம் முழுமையான ஆடை என்றும் விளங்கலாம் என்று சொன்னீர்கள் அப்படி வரும் ஹதீஸைக் காட்டுங்கள் என்றால் அடம்பிடிக்கிறீர்கள். இதையெல்லாம் பார்க்கும் போது ஹிஜாபின் பிற்பட்ட கால வழக்கை வைத்துத்தான் நீங்கள் ஹதீஸை விளங்கியுள்ளீர்கள் என்ற எனது முந்தைய விரிசனமும் உண்மையாகிறது. தயவு செய்து ஹிஜாப் என்ற சொல் உடலை மறைக்கும் ஆடை என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களை காட்டுவீர்களா.
‘ஹிஜாப் விடயத்தில் மொழி ரீதியாக நீங்கள் ஏற்றுக் கொள்ளும் அர்த்தத்தை மார்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள உங்களைத் தடுப்பது எது???’
என்ற எனது கேள்விக்கு பதிலளிக்காமல் விட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
மேலும் ‘ஒரு சொல்லுக்கு மொழி ரீதியாக ஓர் அர்த்தம் இருக்கும் அதே நேரம் மார்க்க ரீதியாக வேறொரு அர்த்தம் கொடுக்க முடியாது என்று நான் எங்கும் கூறவில்லை.
மாற்றமாக,
“மொழி ரீதியான பயன்பாடு மார்க்க ரீதியான பயன்பாட்டுக்கு பொருத்தமற்றது” என்று யாராலும் சொல்ல முடியாதே. மொழியை வைத்துத் தான் மார்க்கத்தை விளங்க வேண்டும். மொழியின்றி மார்க்கம் ஏது?
என்று தான் கூறியிருக்கிறேன்.
இவ்வாசகத்தை சரியாக நீங்கள் புரிந்திருந்தால் என்னை வீணாக விமர்சித்திருக்க மாட்டீர்கள்.
மொழியின்றி மார்க்கம் ஏது?
என்று கேட்டிருந்தேன். அதன் அர்த்தம் ‘ஒரு சொல்லுக்கு மொழி ரீதியாக ஓர் அர்த்தம் இருக்கும் அதே நேரம் மார்க்க ரீதியாக வேறொரு அர்த்தம் கொடுக்க முடியாது’ என்பதல்ல அன்புக்குரிய முஜாஹித் அவர்களே!
அல் குர்ஆனும் சுன்னாவும் அரபு மொழியில் தான் இருக்கிறது. இவ்விரண்டிலும் உள்ள மார்க்க விடயங்களை அறிந்து கொள்ள அம் மொழி அவசியப்படுகிறது. வேறு எந்த மொழியில் மார்க்கம் இருந்தாலும் அம்மார்க்கம் அரபு மொழியிலிருந்து எடுக்கப்பட்டது தான். எனவே, மொழியில்லை என்றால் மார்க்கமே இல்லை.
இந்த அர்த்தத்தில் தான் நான் அதைச் சொன்னேன்.
மனிதனுக்கு தவறான புரிதல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாது தானே. அதனால் தான் நீங்கள் என் வாசகத்தை தவறாகப் புரிந்து விட்டீர்கள் போலும்.
மேலும் உங்களிடம் ஸலாத், ஸகாத், ரிபா பற்றியெல்லாம் கேள்வி எழுப்பவில்லை.
ஹிஜாபைப் பற்றித்தான் கேள்வி எழுப்பியிருக்கிறேன்.
நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த மூன்று சொற்களுக்கும் மொழியை விட மார்க்கம் வித்தியாசமான அர்த்தத்தை தருகிறது என்பதை யாரும் மறுப்பதில்லை.
இதே போன்று (பெண்களுடன் சம்பந்தப்பட்டு வருகின்ற) ஹிஜாப் என்ற சொல்லுக்கு மொழியை விட மார்க்கம் வித்தியாசமான அர்த்தத்தைத் தருகிறது என்று நீங்கள்; கூறுகிறீர்களா??
ஆம் எப்படி ஸலாத், ஸகாத், ரிபா போன்ற சொற்களுக்கு மொழியை விட மார்க்கம் வித்தியாசமான அர்த்தத்தைத் தருகிறதோ அதே போன்று ஹிஜாப் என்ற சொல்லுக்கும் மொழியை விட மார்க்கம் வித்தியாசமான அர்த்தத்தைத் தருகிறது என்று நீங்கள் கூறுபவராக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் காட்டுங்கள்.
மீண்டும் மீண்டும் நீங்கள் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி
“ஹிஜாப் என்ற சொல் உடலை மறைக்கும் ஆடை என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களை காட்டுவீர்களா.’’
“ஹிஜாப் என்ற சொல் உடலை மறைக்கும் ஆடை என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களை காட்டுவீர்களா.’’
“ஹிஜாப் என்ற சொல் உடலை மறைக்கும் ஆடை என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களை காட்டுவீர்களா.’’
என்பது தான்.
இக்கேள்விக்கு எத்தனை தடவைகள் பதில் சொல்லியும் உங்களுக்குப் புரிவதே இல்லையே. திரும்பத் திரும்ப அதையே கேட்டு கேட்டு சப்ஜக்ட்டை எங்கங்கெயோ இழுத்துக் கொண்டு செல்கிறீர்கள்.
நன்றாக அவதானியுங்கள்.
மொழியையும் மார்க்கத்தையும் வைத்து ஒரு சொல்லை விளங்க நீங்கள் இரு வழிமுறையைத் தான் கூறியுள்ளீர்கள். அதாவது,
1- மொழியை விட விரிந்த அர்த்தம்
2- மொழியை விட சுருங்கிய அர்த்தம்
ஆனால் மூன்றாவதும் ஒன்றுள்ளதை மறந்து விட்டீர்கள். அது தான்
3- மொழிக்கு சமனான அர்த்தம்
ஹிஜாப் விடயத்தில் மொழிக்கு சமனான அர்த்தம் தான் மார்க்கத்தில் கூறப்பட்டிருக்கிறது என்றே நான் விளங்குகிறேன்.
புகாரியில் வரும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு அமைந்திருக்கிறது.
أقام النبي صلى الله عليه وسلم بين خيبر والمدينة ثلاثا يبني عليه بصفية بنت حيي فذكر الحديث وفيه فقال المسلمون إحدى أمهات المؤمنين أو مما ملكت يمينه فقالوا إن حجبها فهي من أمهات المؤمنين وإن لم يحجبها فهي مما ملكت يمينه فلما ارتحل وطى لها خلفه ومد الحجاب بينها وبين الناس
((அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (சத்துஸ்.ஸஹ்பா எனுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது நபியவர்களின் வலீமா-மணவிருந்துக்காக முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ/ இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட/ (அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது) அதில் பேரீச்சம் பழம்/ பாலாடைக் கட்டி/ நெய் போன்றவை இடப்பட்டன. இதுவே அன்னாரின் வலீமா-மணவிருந்தாக அமைந்தது. அப்போது முஸ்லிம்கள்/ ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (-நபியவர்களின் துணைவி-)யரில் ஒருவரா அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா என்று பேசிக்கொண்டனர். அப்போது ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் திரையிட்டுக் கொள்ளும்படி கட்டளையிட்டால்/ அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர்/ அப்படி அவருக்குத் திரையிட்டுக் கொள்ளும்படி கட்டளையிடாவிட்டால்/ அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று (சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) அவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் திரையிட்டு இழுத்து மூடிவிட்டார்கள்.))
bukhari: 5085
மேலுள்ள ஹதீஸில் “திரை” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அரபுப்பதம் “ஹிஜாப்” என்பதாகும்.
இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் இச்சொல்லுக்கான அர்த்தம் எது என்பதனை விளங்கினால் அதுவே உங்கள் கேள்விக்கான நேரடி பதில்.
நபியவர்கள் வாகனத்தின் மீது உட்கார்ந்து கொண்டு தனக்குப் பின்னால் அன்னை ஸபிய்யா (ரழி) அவர்களை உட்கார வைக்கின்றார்கள். பிறகு ஸபிய்யா (ரழி) அவர்களுக்கு திரை (ஹிஜாப்) அணிவிக்கின்றார்கள்.
இங்கே இடப்பட்ட திரை (ஹிஜாப்), ஸபிய்யா (ரழி) அவர்களின் உடலை மறைக்கும் முழுமையான ஆடை தானே??
அது “ஆடை” தான் என்பதை புகாரியில் வரும் மேலும் ஒரு அறிவிப்பு வலுப்படுத்துகிறது.
حدثنا عبد الغفار بن داود حدثنا يعقوب بن عبد الرحمن عن عمرو بن أبي عمرو عن أنس بن مالك رضي الله عنه قال ثم قدم النبي صلى الله عليه وسلم خيبر فلما فتح الله عليه الحصن ذكر له جمال صفية بنت حيي بن أخطب وقد قتل زوجها وكانت عروسا فاصطفاها رسول الله صلى الله عليه وسلم لنفسه فخرج بها حتى بلغنا سد الروحاء حلت فبنى بها ثم صنع حيسا في نطع صغير ثم قال رسول الله صلى الله عليه وسلم آذن من حولك فكانت تلك وليمة رسول الله صلى الله عليه وسلم على صفية ثم خرجنا إلى المدينة قال فرأيت رسول الله صلى الله عليه وسلم يحوي لها وراءه بعباءة ثم يجلس ثم بعيره فيضع ركبته فتضع صفية رجلها على ركبته حتى تركب
((அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். அல்லாஹ்/ நபி (ஸல்) அவர்களுக்கு (கமூஸ் என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்த போது/ (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப்பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டு விட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (கோர்ச் செல்வத்தில் குமுஸ் பஙகிலிருந்து) பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். (கைபருக்கு அருகிலுள்ள) சத்துஸ் ஸஹ்பா என்னுமிடத்தை நாங்கள் அடைந்த போது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு/ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள். அதன் பிறகு (பேரீச்சம் பழம்/ நெய்/ பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) ஹைல் எனப்படும் ஓர் உணவைத் தயாரித்துச் சிறிய தோல் விரிப்பில் வைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் உன் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய வலீமா – மண(மகன்) விருந்தாய் அது அமைந்தது. பிறகு நாங்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேல்/ ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரையமைத்தார்கள். பிறகு/ தமது ஒட்டகத்தின் அருகில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து/ தமது முழங்காலை வைக்க/ அவர்களது முழங்கால் மீது தமது காலை வைத்து (அன்னை) ஸபிய்யா (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் ஏறியதை நான் பார்த்தேன்.))
மேலுள்ள ஹதீஸில்
“ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரையமைத்தார்கள்.”
இருக்கிறது.
மேலும் அல்பிதாயா வந்நிஹாயாவில் இதே சம்பவம் இப்னு இஸ்ஹாக்கின் அறிவிப்பில் இடம்பெருகிறது. அதில்
وأمر بصفية فحيزت خلفه ، وألقى عليها رداءه ، فعرف المسلمون أن رسول الله صلى الله عليه وسلم قد اصطفاها لنفسه
“நபியவர்கள் தனக்குப் பின்னே அமர்ந்து கொள்ளுமாறு ஸபிய்யா (ரழி) அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு ஸபிய்யா (ரழி) அவர்களுக்கு தனது போர்வையை அணிவித்தார்கள்.”
எனவே, ஹிஜாப் விடயத்தில் மொழிக்கு சமனான அர்த்தம் தான் மார்க்கத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது சரியானது தான் என நான் உணர்கின்றேன்.
“இல்லை. இல்லை. ஹிஜாபுக்கு மொழியை விட சுருங்கிய அர்த்தம் தான் இருக்கிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள்” என்றால் அந்த சுருங்கிய அர்த்தத்தை விளங்கப்படுத்துங்கள்.
நமது இக்கலந்துரையாடலில் நம்மால் எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தையும் படைத்த ரஹ்மான் அவதானித்துக் கொண்டிருக்கிறான். இது பற்றியும் மறுமையில் நாம் வினவப்பட இருக்கிறோம். நாம் இங்கே கலந்துரையாடுவது நமது சொந்த விடயம் பற்றியதல்ல படைத்தவனின் மார்க்கத்தைப் பற்றி. அதனால் அழகிய முறையில் இறுதி வரை கலந்துரையாடுவோம். இன்ஷா அல்லாஹ் இதில் வஹியின் தீர்வைக் காணும் வரை நான் நிறுத்தமாட்டேன்.
இவற்றுக்கு பதில் எங்கே
1) எதன் காரணமாக ஆயிசா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மூடினார்கள்?
2) ஹதீஸ் மொழிபெயர்ப்பில் நான் விட்ட தவறு?
3). ‘ஹிஜாப் விடயத்தில் மொழி ரீதியாக நீங்கள் ஏற்றுக் கொள்ளும் அர்த்தத்தை மார்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள உங்களைத் தடுப்பது எது???’
ஒரு விடயத்தை தேவையில்லாமல் விளக்கப் போனதால்தான் உங்களுக்கு அத்தவறு ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஒரு சொல்லின் அர்த்தம் மார்க்கப் பயன்பாட்டில் மொழியை விட விரிந்த அல்லது சுருங்கிய அர்த்தத்தை தரலாம் என்பது மார்க்கம் கற்ற அனைவருக்கம் தெரிந்திருக்கம். எனவே அதனை நீங்கள் பேசியிருக்கத் தேவையில்லை. ‘ஹிஜாப் என்ற சொல்லின் அர்த்தம் மொழியிலும் மார்க்கத்திலும் ஒரே விளக்கத்தைக் கொண்டதா?’ என்ற என்கேள்விக்கு ‘மொழியின்றி மார்க்கம் ஏது’ என்ற உங்கள் குதர்க்கமான பதிலே இதற்குக் காரணமாக அமைந்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.மொழியின்றி மார்க்கம் இல்லை என்பது அடிப்படை. நாம் இருதரப்பினரம் அதை புரிந்துதான் வைத்திருப்போம். அதை விட்டுவிட்டு இந்த குதர்க்கத்தை அதற்கு பதிலாகச் சொன்னதுதான் மொழிப் பயன்பாடு மற்றும் துறைப்பயன்பாடு பற்றி நான் விளக்க வேண்டி ஏற்பட்டது. இப்பொழுதுதான் அந்த வேறுபாட்டை தெளிவாக நீங்கள் விளங்கியுள்ளீர்கள் என்பதை. துறைப்பயன்பாடு பற்றிய உங்கள் நிலைப்பாட்டை நீண்டதாக நீங்கள் மேலே விளக்கிய முறை எனக்கு உணர்த்துகிறது.அல்லாஹ் மிக அறிந்தவன்.
நான் அறிந்த வகையில் அரபு மொழியில் நபிகளாரின் காலத்திலோ அதற்கு முன்னரோ எந்த அரபு எழுத்துக்களிலும் ஹிஜாப் என்ற சொல் உடலை மறைக்கம் ஆடை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டதில்லை. எனவே முதலில் மொழியில் உடலை மறைக்கும் ஆடை என்ற கருத்தில் ஹிஜாப் என்ற சொல் ஆளப்பட்டிருந்தால் நீங்கள்தான் அதை எடுத்துக்காட்ட வேண்டும்.திரையிடல் மறைத்தல் மற்றும் திரை என்ற அர்த்தத்தில் தவிர உடலை ழுமையாக மறைக்கப்படும் ஆடைக்கு ஹிஜாப் என்று அரபியில் எங்கும் அன்றைய காலப் பயன்பாட்டில் இருக்கவில்லை. இதற்கு ‘ஆம் இது உடல் திரை’ என பதில் சொல்லிவிட வேண்டாம். எனது கேள்வி திரையிடுவது பற்றியல்ல உடலை மறைக்கப் பயன்படும் ஆடைக்கு திரை(ஹிஜாப்) என்று அரபுகள் அன்று வழங்கினார்களா? ஆம் என்றால் ஒரு வரியை எடுத்துக் காட்டுங்கள். சாதரணமாக திரைக்கு மட்டுமே அது உபயோகப்படுத்தப்பட்டது என்பதற்கு பல அரபுக் கவிதை வரிகளை காட்ட முடியும்.
மொழியில் எங்கும் உடலை மறைக்கம் ஆடை என ஹிஜாப் பயன்படுத்தப்படவில்லை என்பதை விளக்கியுள்ளேன்.
ஆச்சரியமாக இருக்கிறது. ஹிஜாப் உடலை மறைக்கும் ஆடை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டதற்கு ஒரு ஆதாரத்தையாவது காட்டுங்கள் என்று பல முறை நான் கேட்டும் அந்தக் கேள்விகளை எனது விளக்கக் குறைகளாக முன்னைய பல பதில்களில் விமரிசித்துக் கொண்டே இருந்தீர்கள். இப்பொழுது இதோ அந்த ஹதீஸ் என முன்வைக்கிறீர்கள். இதையே ஆரம்பத்தில் வைத்திருந்தால் இவ்வளவு இந்த உரையாடல் வேறு திசையில் இழுபட்டிருக்காதே. ஏன் இந்த இழுபறி. நான் அப்பொழுது கேட்டதெல்லாம் ஒரு ஹதீஸைக் காட்டுங்கள் என்பதுதான் அதற்கெல்லாம் ‘ஹிஜாப் என்பது வேறு ஜில்பாப் என்பது வேறு’ என்ற உங்கள் வாதம் பொறுத்தமற்றது. நியாயமற்றது. ஆதாரமற்றது.’ என்பதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன்.எனது பதில் உங்களுக்கு விளங்கவில்லையென்றால் மீண்டுமொருமுறை விளங்கப்படுத்துகிறேன்.’ என இழுத்தடித்தீர்கள் இப்பொழுது சமர்ப்பிக்கிறீர்கள். ஆனாலும் அல்ஹம்துலில்லாஹ் கலந்துரையாடல் சிறந்த கோணத்தில் போக ஆரம்பிக்கிறது என நினைக்கிறேன்.ஆனாலும் ஹதீஸை தவறாக அர்த்தம் செய்கிறீர்கள். அதே நேரம் சரியாக அர்த்தம் செய்யப்பட்டவைகளில் உள்ள நேரடி விளக்கத்தை பேசாமல் மௌனித்துள்ளீர்கள். ஹிஜாப் என்பது மார்க்கத்திலும் மொழியிலும் உடலை மறைக்கும் முழுமையான ஆடை என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை திரை என்ற கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தம் பல ஆதாரங்களில் ஒன்றே நீங்கள் பதிந்துள்ள ஆதாரம். விளக்குகிறேன் கேளுங்கள்.
தவறான மொழிபெயர்ப்பு:
திரையிட்டுக்கொள்ளம்படி கட்டளையிட்டால் என்று ஹதீஸில் இல்லை. நபியவர்கள் அவருக்கு திரையிட்டால் என்றே உள்ளது. முதல் மொழிபெயர்ப்பு ஹிஜாப் என்பது ஆடையென்ற அர்த்தத்தை தரலாம் ஆனால் இரண்டாவது அந்த அர்த்தத்தை தராது. உங்கள் கருத்தில் உள்ள ஒருவரின் மொழிபெயர்ப்பை அப்படியே பிரதிபண்ணியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அதேபோன்று
என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். நபியவர்கள் அவருக்கு திரையிடாது விட்டால் என்றே உள்ளது. அதே நேரம் நீங்களும் உங்கள் கருத்தில் உள்ளவர்களும் இங்கே ஒரு தவறு செய்துள்ளீர்கள். அதை கண்டுகொள்ளாமல் செல்கிறீர்கள். திரையிடாதுவிட்டால் என்பதை முகம் மூடாது விட்டால் என்ற மொழி பெயர்த்து வருகிறீர்கள்.மொழிக்குச் சம்பந்தமில்லத மொழி பெயர்ப்பு. இதற்கும் பதிலில் விளக்கம் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அப்பொழுதுதான் அடிமைப் பெண்களின் ஆடை பற்றியும் உங்கள் தவறுகளை விளங்கப்படுத்தலாம். முதலில் ஹிஜாபை முடிப்போம்.அதேபோன்று ஸபியாவை நபியவர்கள் எப்படி நடத்துவார்கள் என்ற விடயத்தை எதிர்பார்த்த மக்களுக்கு நபியவர்களின் செயற்பாடு எப்படி இருந்தது என்பதைச் சொல்லும் கடைசிப் பந்தியை தவறாக பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளீர்கள்
அவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் திரையிட்டு இழுத்து மூடிவிட்டார்கள் என்பது தவறு ஸபிய்யாவுக்கும் மக்களுக்கும் இடையில் திரையை இழுத்துவிட்டார்கள் அல்லது நீட்டிவிட்டார்கள்.என்பதே சரியானது. அன்புள்ள சகோதரர்களே இங்கேதான் சகோதரர் சுட்டிக்காட்டிய ஹிஜாப் என்ற சொல் இடம்பெறுகிறது.எவ்வகையில் எந்த யோசனையில் சகோதரர் இந்த ஹிஜாப் என்ற சொல் உடலை மறைக்கும் ஆடை என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்வார். இந்த ஹதீஸ் தெளிவாகவே ஹிஜாப் என்றால் மக்களுக்கும் நபியர்களது மனைவியருக்கும் இடையில் இடப்படும் திரை என்பதைத் தெளிவாகச் சொல்கிறதே.
அதே போல் தஹ்வியா என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. ஒட்டகத் திமிலை சுற்றி பின்னால் உள்ளவர் சாயும் வகையில் போடப்படும் ஒரு சாய்மனம் இதுவம் ஸபிய்யாவை மக்களை விட்டும் திரை செய்யும் வேலையைச் செய்யும். அதேபோன்று 4212 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ يَحْيَى، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقَامَ عَلَى صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ بِطَرِيقِ خَيْبَرَ ثَلاَثَةَ أَيَّامٍ، حَتَّى أَعْرَسَ بِهَا، وَكَانَتْ فِيمَنْ ضُرِبَ عَلَيْهَا الحِجَابُ»
நபியவர்கள் கைபரின் வழியில் 3 நாட்கள் ஸபியாவை மணமுடித்த நிலையில் தங்கினார்கள். அவர் திரை(ஹிஜாப்) கடமையாக்கப்பட்ட பெண்களில் ஒருவராக இருந்தார். (புகாரி:4212)
மேற் கூறப்பட்ட ஹதீஸை சற்று அவதானியுங்கள். ஹிஜாப் என்ற சொல் நபிமார்களின் மனைவியருக்குப் பிரத்தியேகமான ஒரு அம்சத்திற்காய் இறங்கியது என்பதைத் தெளிவாகவே புரிந்துகொள்வீர்கள். இன்சா அல்லாஹ் தொடர்ந்து போவோம் ஹிஜாப் என்பதன் அர்த்தத் இன்னும் தெளிவாகும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு
அன்புக்கினிய சஹோதரர்க்கு:
எனது சந்தேகம் என்ன வென்றால் மலக்குகள் பற்றியதாகும்.ஏன் என்றால் இரண்டு மலக்குகளை அல்லாஹ் இவ்வுலகில் மறைத்து வைத்துள்ளான் என்றும் ஏனனில் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதாகவும் கூறப்படுகிறது. தயவு செய்து மலக்குகள் பற்றிய ஈமானுடைய அம்சத்தையும் அவர்களை எவ்வாறு நம்ப வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தவும்.
இப்படிக்கு
முகம்மது அர்ஷத்
Walaikumussalam
ஹாரூத் மாரூத் என்ற இருவர் பற்றிய பொய்யான செய்திகளே அவைகள். இன்சா அல்லாஹ் மலக்குமார்கள் பற்றிய நம்பிக்கையை விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.
இவற்றின் பதில்களுக்கு கார்த்துக் கொண்டிருக்கிறேன்
1) எதன் காரணமாக ஆயிசா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் முகத்தை மூடினார்கள்?
2) ஹதீஸ் மொழிபெயர்ப்பில் நான் விட்ட தவறு?
3). ‘ஹிஜாப் விடயத்தில் மொழி ரீதியாக நீங்கள் ஏற்றுக் கொள்ளும் அர்த்தத்தை மார்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள உங்களைத் தடுப்பது எது???’
திறமைகள் நிறைந்த அன்பு நண்பன் முஜாஹித் மௌலவி அவர்களே!
ஸபிய்யா (ரழி) அவர்களுடைய செய்தியை “விளக்குகிறேன் கேளுங்கள்” என்று விளக்கமளிக்க முயற்சி எடுத்துள்ளீர்கள். ஏன் அதே முயற்சி ஆயிஷா (ரழி) அவர்களுடைய செய்தியில் எடுக்கப்படவில்லை??
ஸபிய்யா (ரழி) அவர்களின் செய்தியில் முகம் மறைத்த விடயம் மூடலாக இருக்கிறது (தெளிவாக இல்லை).
ஆயிஷா (ரழி) அவர்களின் செய்தியில் முகம் மறைத்த விடயம் மிகத் தெளிவாக இருக்கிறது (மூடலே இல்லை).
தெளிவாக வந்ததை விளக்காமல், அதைப் பற்றிய எந்தப் பேச்சுமே இல்லாமல் தெளிவற்றதாக வந்த செய்தியை எடுத்துக் கொண்டு குழம்பிப் போய் இருக்கிறீர்கள். (முகம் மறைத்த செய்தியொன்று ஏன்டா வந்தது. வராமல் இருந்திருக்கலாமே என்று கசப்பாக யோசிக்க வேண்டாம். அதையும் இன்பமாக எடுத்து விளக்கம் பெறுங்கள். விளக்கப்படுத்துங்கள்)
கடைசிப் பதிவில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு மேலும் முன் வைத்த தவறான கருத்துக்களுக்கு இன்ஷா அல்லாஹ் பதில் அளிpப்பேன்.
அதற்கு முன் நீங்கள் பதில் சொல்வதாக வாக்களித்த இந்தக் கேள்விக்கு அல்லாஹ்வுக்காக பதில் சொல்லுங்கள். விட்டு விட்டு போக வேண்டாம்.
1. ஹிஜாப் இறங்கிய பிறகு, ஆயிஷா (ரழி) அவர்கள் எந்தக் காரணத்திற்காக முகத்தை மறைத்தார்கள்??
1.ஹிஜாப் இறங்கிய பிறகு, ஆயிஷா (ரழி) அவர்கள் எந்தக் காரணத்திற்காக முகத்தை மறைத்தார்கள்??
1.ஹிஜாப் இறங்கிய பிறகு, ஆயிஷா (ரழி) அவர்கள் எந்தக் காரணத்திற்காக முகத்தை மறைத்தார்கள்??
உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்
எனது பதிலுக்காக நீங்கள் காத்திருப்பதற்கு நன்றிகள்.
நான் உங்கள் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறேன். அத்துடன் நீங்கள் மார்க்க விடயங்களில் நேர்மையாக நடந்து கொள்வீர்கள் என்ற நல்ல அபிப்ராயமும் என்னிடம் இருக்கிறது.
அதனால், நமது இக்கலந்துரையாடலை நேர்மையாக கொண்டு செல்வோம்.
உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விட மாட்டேன் இன்ஷா அல்லாஹ். நீங்கள் கேட்ட கேள்விகளை இலக்கமிட்டுக் கூறினால் எனக்கு இன்னும் வசதியாக இருக்கும்.
எனினும், நான் இலக்கம் 1 இட்டு கேட்டிருக்கும் எனது கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாமலேயே தாவித் தாவிச் செல்கிறீர்கள். உங்கள் எல்லாப் பதிவுகளையும் உற்று நோக்கினால் இந்தக் கேள்விக்கு மட்டும் பேச்சும் இல்லை. மூச்சும் இல்லை.
இப்பகுதி, ‘நாங்கள் கேள்வி கேட்டு நீங்கள் பதில் சொல்லும் பகுதி’ என்பதனை மட்டும் மறந்து விடாதீர்கள். எங்களுக்குத் தெளிவு தேவை. வீண் வம்போ, விதண்டா வாதமோ எமது நோக்கமல்ல.
எமது கலந்துரையாடலின் தலைப்பு: ‘முகம் மறைப்பது மார்க்கமா? இல்லையா’ என்பது தான்.
அதனால், அல்லாஹ்வுக்காக மீண்டும் மீண்டும் வேறு காரணங்கள் சொல்லி பதிலை விட்டும் திசை மாறிச் செல்லாமல் இக்கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
1. ஹிஜாப் இறங்கிய பிறகு, எந்தக் காரணத்திற்காக ஆயிஷா (ரழி) அவர்கள் முகம் மறைத்தார்கள்???
ஹதீஸ் கலையில், வழித்தவரிய கொள்கையுடையவர்,உதாரணமாக Khawaarij or ஜஹ்மீயா கொள்கையுடையவர், அரிவிப்பாளர் வருசையில் வந்தால், அந்த ஹதீஸ் பலவீனமாக ஆகும் என்ற ஒரு சட்டம் இருக்கிறதா? அப்படி இருந்தால், அதர்க்கு ஆதாரம் சற்று தாருங்கள்.
வழிதவறுதல் குப்ரிற்கு இட்டுச்செல்லாத வரை அவர் உண்மை பேசக் கூடியவராக இருக்கும் வரை யாருடைய அறிவிப்பும் ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்படுவதில்லை. காரணம் அவர் முஸ்லிமாகவும் பொய் சொல்லாதவராகவும் இருக்கும் அவரது அடிப்படைத் தகுதியே. இந்த அடிப்படையிலேயே புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பல அறிவுப்புக்களை இவ்வகையில் காணலாம்
1. ஹிஜாப் இறங்கிய பிறகு, எந்தக் காரணத்திற்காக ஆயிஷா (ரழி) அவர்கள் முகம் மறைத்தார்கள்???
அஸ்ஸலாமு அழைக்கும் மௌலவி அவர்களே, இஸ்லாமிய வங்கி முறை என்று ஏதும் முறைகள் உண்டா?
எமது நாட்டிலே காணப்படுகின்ற இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்ற நிதி நிறுவனங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா ?
நீங்கள் தெரிந்த இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் எமது நாட்டிலே இருக்கிறதா?
முஸ்லிம்களாகிய நாம் வங்கிகளில் பணம் வைப்பில் இடுவது கூடுமா, வங்கி மூலமான காசோலை கொடுக்கல் வாங்கல்கள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா ?
எமது முஸ்லிம்களினது வியாபாரங்களில் சுமாராக 99 % வங்கியுடனான தொடர்பு இருப்பதால் கொஞ்சம் விளக்கினால் நல்லம்.
Walaikumussalam
இது சம்பந்தமாக கொழும்பு அமானா கிளைக்குச் சென்று இது பற்றி உரையாடிய ஒளிப்பதிவு ஒன்றிருந்தது. தேடிப்பதிவு செய்கிறேன். இன்சா அல்லாஹ். இஸ்லாமிய வங்கி முறை என்றியங்கும் வங்கிகளின் பெரும்பாலான முறைகள் ஏமாற்றே என்பதில் சந்தேகம் இல்லை.
அஸ்ஸலாமு அலைகும்…
பல திங்கட்கிழமைகளும் புதன் கிழமைகளும் கடந்து விட்டன. நமது கலந்துரையாடலும் இடைநடுவில் நின்று விட்டது. (நின்றால் எவ்வளவு நல்லம்? என்று நீங்கள் யோசிக்க மாட்டீர்கள் என நல்லெண்ணம் வைக்கிறேன்.)
ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் நான் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு மௌனமே பதிலாக இருக்கிறது.
எனது கேள்விக்கு கிட்டடியில் பதில் தர நேரம் போதாது என நீங்கள் கருவதாக இருந்தால்
1- பதிலுக்கான ஒரு திகதியை குறிப்பிடுங்கள்.
2- அல்லது பதில் தர முடியாது என்று குறிப்பிடுங்கள்
மீண்டும் மௌனத்தையே பதிலாக அமைக்க வேண்டாம்.
கேள்வி:
1. ஹிஜாப் இறங்கிய பிறகு, எந்தக் காரணத்திற்காக ஆயிஷா (ரழி) அவர்கள் முகம் மறைத்தார்கள்???
அன்புக்குரிய மௌலவி முஜஹிட் அவர்களே அயதுல் குர்ஷி பற்றி ஒரு ஆய்வே இதுவிளக்கம் தரவும் :
கடமையான தொழுகைக்குப் பின்னர் ஆயத்துல் குர்ஸி ஓதுவது சம்பந்தமாக அறிஞர்களுக்கிடையில் சர்ச்சைகள் காணப்படுகின்றன. எனவே அது சம்பந்தமாக இங்கு தெளிவுபடுத்துகிறோம். சாதாரணமாக பொதுaமக்கள் புரிவதற்கு ஏற்றால் போல் இதனை எழுதியுள்ளோம். தேவைப்பட்டால் பின்னர் விலாவாரியாக இதனை விபரிக்கிறோம்
இதை இரு பகுதிகளாக நாம் பிரித்து விளங்க வேண்டியுள்ளது
முதல் பகுதி: கடமையான தொழுகைக்குப் பின்னால் ஆயத்துல் குர்ஸி ஓதுவது சம்பந்தமாக இடம் பெற்ற பலவீனமான அறிவிப்பாளர் தொடர்
இரண்டாவது பகுதி: கடமையான தொழுகைக்குப் பின்னால் ஆயத்துல் குர்ஸி ஓதுவது சம்பந்தமாக இடம் பெற்ற ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடர்
கடமையான தொழுகைக்குப் பின்னால் ஆயத்துல்குர்ஸி ஓதுவது சம்பந்தமாக பலவீனமான அறிவிப்பாளர் வரிசையின் தொடர்கள் சில ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளன அவைகளை நாம் ஆதாரமாகக் கொள்வதில்லை எனவே அவைகளை விபரிப்பதில் எவ்வித தேவையும் இங்கு கிடையாது.
கடமையான தொழுகைக்குப் பின்னால் ஆயத்துல் குர்ஸி ஓதுவது சம்பந்தமாக இடம் பெற்ற ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடர்:
أخبرنا الحسين بن بشر بطرسوس كتبنا عنه قال حدثنا محمد بن حمير قال حدثنا محمد بن زياد عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم * من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة الا ان يموت
கடமையான ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் எவர் ஆயதுல் குர்ஸியை ஓதிவருகிறாரோ அவர் சொர்க்கம் நுழைய அவரது மரணத்தை தவிர வேறு தடை கிடையாது. என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூ உமாமா(ரழி)
ஆதாரம்: ஸுனனுன் நஸாயீ
இலக்கம்:9848
கடமையான தொழுகைக்குப் பின்னால் ஆயத்துல் குர்ஸி ஓதுவதற்கு மேற்குறித்த ஹதீஸைத்தான் நாம் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்கிறோம். சிலர்கள் இந்த ஹதீஸை பலவீனம் என வாதிடுகின்றனர். எனவே இது சம்பந்தமான முழுமையான விளக்கத்தை தற்போது நோக்குவோம்.
நாம் ஒரு செய்தியை ஏற்று அதை நடைமுறைப்படுத்துவதென்றால் அது ஆதாரபூர்வமானதா இருக்க வேண்டும். ஆதாரபூர்வமாக அமைவதற்கு அறிவிப்பாளர் வரிசையை ஆய்வுக்கு உட்படுத்துவது முதன்மையான ஒன்றாகும்
இந்த அடிப்படையில் மேற்குறித்த ஹதீஸை நாம் ஆய்வு செய்தால் அது ஆதாரபூர்வமானது என்பதைக் காணலாம்
இந்த செய்தியின் தொடரை தற்போது வழங்குகிறோம்
இதனை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ உமாமா(ரழி) அவர்கள் கேட்கிறார்கள் அபூ உமாமா ஸஹாபி என்பதால் அவரது அறிவிப்பை ஏற்கிறோம்
ஸஹாபியிடமிருந்து முஹம்மத் இப்னு ஸியாத் என்பவர் அறிவிக்கிறார்
இவர் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்துக்கள்
இமாம் யஹ்யா பின் மயீன்: இவர் நம்பகமானவர் ஆவார் பார்க்க: அல்ஜரஹு வத்தஃதீல்:(258-7)
இமாம் தஹபீ: இவரை (அறிஞர்கள்) கூட்டம் தரப்படுத்தியுள்ளது பார்க்க: அல்காஷிப்:172-2)
முஹம்மத் இப்னு ஸியாதிடமிருந்து முஹம்மத் இப்னு ஹிம்யர் என்பவர் இதனை அறிவிப்புச் செய்கின்றார்.
மேற்குறித்த ஹிம்யரிலிருந்து பல மாணவர்கள் ஹதீஸை அறிவிப்பு செய்துள்ளனர். ஹதீஸை பலவீனம் என வாதிடுபவர்கள் ஹிம்யர் என்ற அறிவிப்பாளரையும் அவரிடமிருந்து கேட்ட மாணவர்களையும்தான் பலவீனம் என வாதிடுகின்றனர். முதலில் நாம் ஹிம்யர் சம்பந்தமாக அறிஞர்கள் என்ன அவதானத்தில் இருந்துள்ளார்கள் என்பதை நோக்குவோம்
இமாம் அப்துல்லாஹிப்னு அஹ்மத்: எனது தந்தை(இமாம் அஹ்மத்) யிடத்தில் இவரைப் பற்றிக் கேட்கப்பட்டது நான் (அவரைப் பற்றி) நல்லதைத் தவிர வேறு எதையும் அறியவில்லை என்று கூறினார்கள்
இமாம் யஹ்யா பின் மயீன்: இவர் நம்பகமானவர் ஆவார்
இமாம் இப்னு ஹஜர்: இவர் சாதாரண நம்பகத்தன்மை கொண்டவர்
இமாம் ஹாகிம்: நான் தாரகுத்னியிடம் முஹம்மத் இப்னு ஹிம்யரைப் பற்றி வினவினேன் அதற்கு அவர்கள் அவரை எங்களது உஸ்தாத்மார்கள் தரப்படுத்தியுள்ளனர் இன்னும் சிலர் விமர்சித்துள்ளனர் என்று கூறினார்கள் பார்க்க மஃஸுஅது அக்வாலித் தாரகுத்னீ:31-200)
இமாம் தாரகுத்னீ: இவர் பரவாயில்லை
இமாம் யஃகூப்: இவர் பலமற்றவர்
இமாம் அபூஹாதிம்: இவர் அறிவிக்கும் ஹதீஸ் எழுதப்படும் ஆனால் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது
முஹம்மத் இப்னு ஹிம்யர் சம்பந்தமாக அறிஞர்கள் இத்தகைய கருத்துக்களைத்தான் கூறியுள்ளனர். இவைகளில் காரணம் குறிக்கப்பட்டு இவர் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தால் அவைகளை நாம் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் இவர் மீது முன்வைக்கப்பட்ட மேற்குறித்த விமர்சனம் காரணம் குறிக்கப்படாமலேயே இருக்கின்றது ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று அபூஹாதிம் கூறுகிறாரே தவிர அதற்கான முறையான காரணத்தை முன்வைக்கவில்லை அதே போன்று இமாம் யஃகூப் இவர் பலமற்றவர் என்றுதான் கூறுகிறாரே தவிர அதற்கான முறையான காரணத்தை முன்வைக்கவில்லை காரணம் கூறாமல் விமர்சனம் மாத்திரம் முன்வைக்கப்பட்டால் அதை ஏற்க இயலாது
இது அறிவுபூர்வமும் கூட உதாரணமாக நாம் ஒருவரை நல்லவர் என்று கூறுவதாயின் அதற்கு பல காரணிகள் இருக்கலாம் எனவே நல்லவர் என்று கூறுவதற்கு காரணிகள் விபரிப்பது அவசியம் கிடையாது ஆனால் ஒருவரை கெட்டவர் என்று கூறுவதாயின் அதற்கு காரணிகள் அவசியம் முன்வைக்கப்பட வேண்டும் இல்லா விட்டால் அதை ஏற்க இயலாது
எனவே ஹிம்யர் நம்பகமானவர் என்று இமாம் யஹ்யா பின் மயீன் தீர்ப்பு வழங்கியுள்ள படியால் அவரை ஏற்றுக் கொள்வது எவ்விதத்திலும் தவறு கிடையாது
மேற்குறித்த ஹிம்யரிடமிருந்து பல மாணவர்கள் ஹதீஸை அறிவிப்பு செய்கின்றனர்
முதல் மாணவர்: அலியிப்னு ஸதகா: இவரைப் பற்றிய விளக்கத்தை காணமுடியவில்லை
இரண்டாவது மாணவர்: ஹாரூன் பின் தாவூத்: இவர் பற்றிய எந்த தகவலும் இல்லை
இவரை இமாம் தாரகுத்னீ பலவீனம் என்கிறார் ஆனால் அதன் காரணத்தை விபரிக்கவில்லை பார்க்க: அல்லுஅபாஉ வல்மத்ரூகீன்:1-25)
மூன்றாவது மாணவர் அஹ்மத் இப்னு ஹாரூன்: இவர் நம்பகமானேரிடமிருந்து மறுக்கத்தக்க செய்திகளை அறிவிப்பு செய்பவர்: பார்க்க அல் முஃனீ:1-62)
நான்காவது மாணவர்: யமான் இப்னு யஸீத்
இவரை சிலர்கள் யமான் பின் ஸயீத் என்கின்றனர் அது தவறானது அவரது சரியான பெயர் யமான் பின் யஸீத் என்பதாகும் இதை இமாம் தாரகுத்னீ தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்கள் அத்துடன் இவர் இனங்கானப்படாதவர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்கள். பார்க்க: மஃஸுஅது அக்வாலித் தாரகுத்னீ:31-201)
ஐந்தாவது மாணவர்: ஹுஸைன் பின் பிஷ்ர்
இமாம் நஸாயீ: இவர் நம்பகமானவர்
மேற்குறித்த ஐவரில் முதல் நான்கு பேரினதும் அறிவிப்புக்களை ஏற்க இயலாது காரணம் அவர்களில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் ஏற்கத்தகாதவர்களாகவே இருக்கிறார்கள் ஆனால் கடைசியாக நாம் குறிப்பிட்ட ஹுஸைன் என்பவரை ஏற்றுக் கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது
அவர் நம்பகமானவர் என இமாம் நஸாயீ தீர்ப்புக் கொடுத்துள்ளார்கள் விமர்சிப்பதில் சற்று கடும்போக்கை கடைபிடிக்கும் இமாமவர்கள் இவரை தரப்படுத்துகின்றார் எனின் இவரை ஏற்கத்தக்க அறிவிப்பாளராக நாம் எடை போடுவதில் என்ன தவறு உள்ளது? நம்பகமான ஒருவர் தனித்து அறிவித்தால் அதை ஏற்காமல் விடுவதற்கு என்ன முகாந்திரம் உள்ளது?
சகோதரர் முஜாஹித் அவர்களும் தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதுவது சம்பந்தமாக தனது ஆய்வை அவரது இணையத்தில் பதிப்பித்திருந்தார். எனினும் அவ்வாய்வில் பல தவறுகள் நிறைந்திருப்பதை எம்மால் காணக்கிடைத்தது அவைகளை ஒவ்வொன்றாக நோக்குவோம்
சகோதரர் முஜாஹித் குறிப்பிட்டது: இந்த ஹதீஸ் புகாரி,முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாஈ, இப்னுமாஜா போன்ற எந்த பிரபல்யமான நூல்களிலும் இடம் பெறவில்லை இந்தச் செய்தி மேற்சொல்லப்பட்டவாறு பின்வரும் நூல்களில் இடம்பெற்றுள்ளது.
எமது பதில்: ஒரு ஹதீஸ் பிரபலமான கிரந்தத்ததில் இடம் பெற்றால்தான் ஏற்கத்தக்க ஹதீஸ் என வாதிடுவதை ஏற்க இயலாது பிரபலமற்ற ஹதீஸ் கிரந்தங்களிலும் ஏற்கத்தக்க ஹதீஸ் சில வேளை இடம் பெறும் அதே போன்று பிரபலமான ஹதீஸ் நூற்களிலும் ஏற்கவே இயலாத சில செய்திகளும் இடம் பெறும் உதாரணமாக அறியாமைக்காலத்தில் ஒரு குரங்கு விபச்சாரம் செய்ததற்கு ஏனைய குரங்குகள் தண்டனையை நிறைவேற்றின என்று இடம் பெறுகின்ற செய்தி முஸ்லிம்களுக்கு மத்தியிலே மிகவும் பிரபல்யமான புஹாரியில்தான் இடம் பெற்றுள்ளது ஆனால் அந்த செய்தியை நன்கு சிந்தித்தாலே அது ஏற்கத்தக்க செய்தியல்ல என்பதைப் புரியலாம். பிரபல்யமான கிரந்தத்தில் இடம் பெற்று விட்டது என்பதால் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க இயலுமா? முடியவே முடியாது. குர்ஆன் வசனங்களாக இருந்தால் கூட கண்ணை மூடிக் கொண்டு ஏற்கக் கூடாது என இஸ்லாமிய மார்க்கம் எமக்கு அறிவுரை கூறுகிறது சரியான அளவு கோல் அறிவிப்பாளர் வரிசை மற்றும் ஹதீஸின் மூல வாசகம் போன்றவை ஏற்கத்தக்கவையாக இருப்பதே ஆகும். எனவே ஹதீஸை வலிந்து பலவீனப்படுத்துவதற்குரிய காரணியாகவே மேற்குறித்த முஜாஹிதின் வாசகம் அமையப் பெற்றுள்ளதை நாம் காணலாம்
சகோதரர் முஜாஹித் குறிப்பிட்டது: முஹம்மது இப்னு ஹிம்மீர்: புகாரியில் இடம்பெறும் ஒரு அறிவிப்பாளராக இருந்தபோதும் இவரது 3அறிவிப்புக்களே புகாரியில் இடம் பெறுகின்றன.அதுவும் இவரல்லாதவர்களும் அந்த ஹதீஸ்களை அறிவுப்புச் செய்துள்ளனர்.அதே வேளை இந்த ஹதீஸில் அவரது ஆசிரியரான அல்ஹானி புகாரியில் இடம் பெறும் அறிவிப்பாளராக இருந்தும் அவர் வழியாக எந்த அறிவிப்பும் புகாரியில் இடம் பெறவில்லை.ஆகையால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் புகாரியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் என்று சொல்வதோ அல்லது புகாரியின் நிபந்தனைக்குட்பட்ட ஹதீஸ் என்று சொல்வதோ போதிய ஆய்வின்மையையே எடுத்துக் காட்டுகிறது.இவர் தனியாக அறிவிக்கும் எந்த ஹதீஸையும் இமாம் புகாரி தனது கிரந்தத்தில் பதிவு செய்யாமல் விட்டதும் இவரில் ஒரு பலஹீனம் இருப்பதையே எமக்கு உணர்த்துகிறது.இவரை இமாம் இப்னு மஈன் மற்றும் துஹைம் பலமானவர் என்றும் நஸாஈ அவரில் பிரச்சினை இல்லை என்றும் சொல்லியுள்ள அதே வேளை இவர் பலமற்றவர் என இமாம் யஃகூப் அல் பஸவீயும் இவரை ஆதாரமாக எடுக்க முடியாது என அபூஹாதமும் விமரிசிக்கின்றனர்.இவர் யாருமறிவிக்காத செய்திகளை அறிவிப்பவர் எனவும் விமரிசிக்கப்படுபவர்.எனவே இவர் பலஹீனமானவர் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டியுள்ளது.
இவர் தனியாக அறிவிக்கும் எந்த ஹதீஸையும் இமாம் புகாரி தனது கிரந்தத்தில் பதிவு செய்யாமல் விட்டதும் இவரில் ஒரு பலஹீனம் இருப்பதையே எமக்கு உணர்த்துகிறது……… அதே வேளை இவர் பலமற்றவர் என இமாம் யஃகூப் அல் பஸவீயும் இவரை ஆதாரமாக எடுக்க முடியாது என அபூஹாதமும் விமரிசிக்கின்றனர்.இவர் யாருமறிவிக்காத செய்திகளை அறிவிப்பவர் என்று முஜாஹித் கூறுகிறார்……
எமது பதில்:
1-ஒரு அறிவிப்பாளரை இமாம் புஹாரீ தனது நூலில் இடம் பெறச் செய்யாவிட்டால் அவர் பலவீனமானவர் என்பதினால்தான் இடம் பெறச் செய்யவில்லை என்று புரிவது போதிய ஆய்வின்மையையே எடுத்துக் காட்டுகின்றது. அவ்வாறு புரிந்தால் புஹாரியில் இடம் பெறாத அறிவிப்பாளர்கள் அனைவரும் பலவீனமானவர்கள் என்று புரிய வேண்டிய துரதிஷ்ட நிலை எமக்கு ஏற்பட்டு விடும். முஹம்மத் இப்னு ஹிம்யரிலே மனன சக்திக் கோளாறு பற்றி ஏதாவது விமர்சனம் இருந்திருந்தால் முஜாஹிதின் வாதத்தை சற்று நியாயம் எனலாம் அத்துடன் முஹம்மத் இப்னு ஹிம்யரை விமர்சித்த மேற்குறித்த இரு அறிஞர்களும் காரணத்தை விபரிக்கவில்லை. பலமற்றவர் ஏன் என்றோ அல்லது ஏன் ஆதாரத்திற்கு ஏற்கத்தக்கவரல்ல என்பதை இருவருமே தெளிவுபடுத்தவில்லை என்பதாலும் பிரபலமான அறிஞர் இமாம் யஹ்யா பின் மயீன் இவரை நம்பகமானவர் என தீர்ப்பு வழங்குவதாலும் இது ஆதாரபூர்வமான செய்திதான் என்று புரிவதில் எவ்வித குழப்பமும் கிடையாது
2- சகோதரர் முஜாஹித் குறித்த அறிவிப்பாளரை ஹிம்மீர் எனக் கூறியுள்ளார். அது தவறானது அவரின் சரியான பெயர் ஹிம்யர் என்பதாகும்
ஹாபிழ் இப்னு ஹஜர் இவரது பெயரை இவ்வாறு குறிப்பிடுகிறார்
محمد بن حمير بكسر الحاء المهملة وإسكان الميم وفتح الياء الأخيرة(هدي الساري:213-1)
எனவே தொழுகைக்குப் பின்னால் ஆயத்துல் குர்ஸி ஓதுவது மார்க்கத்தில் உள்ளது அதனை பலவீனம் என்று கூறுவது தவறானது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிக்கு
ஸைனீ
தேசிய தௌஹீத் ஜமாஅத் பிரச்சாரகர்
முகைதீன் பள்ளி வீதி
புதிய காத்தான்குடி-03
நேரமெடுத்து இவ்வாய்வு சம்பந்தமான நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறேன் இன்சா அல்லாஹ்
Assalamu Allaikum,
mujahidsrilanki says:
June 8, 2010 at 6:02 am
இரவுத் தொழுகையை நபியவர்கள் ரமழானிலோ ரமழான் அல்லாத காலங்களிலோ 11 மேல் அதிகரித்ததில்லை என்பது புகாரியில் இடம்பெறும் ஆதாரப்பூர்வமான தெளிவான செய்தி. இதற்கு மாற்றமாக 13க்கோ அதற்கு மேற்பட்டதிற்கோ ஹதீஸ்கள் இருந்தால் எழுதுங்கள் இன்சா அல்லாஹ் அது பற்றி ஆய்வு செய்யலாம். நாம் அறிந்தவகையில் அவ்வாறு ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.
My Oppenion: it’s clearely mention “Ramadan & expect Ramadan month”. it means everyday he will not pray more then 11 rakat. just thing thravi will do only in the month of ramadan. if i am not wrong Prophet Muhammad(saaw) will not do all days thravi(8 rakat). that 8 rakat may be it’s thajaad.
walaikumussalam
there is no prayer mentioned in life of prophet as tharaweeh
Assalamu Allaikum,
Thanks for your reply.
i can understand there is no hadees for
tharaweeh.then how thaveed jamad mention
tharaweeh is only 8 rakat?
if you are saying the below hadees is a
evidance(2.248, 2.241), like 8(thraweeh) &
3(witr), then prophet will not perform
tahajaad in the month of ramadan?
Also from (2.224) we know prophet is never
miss the tahajaad in his life except those
days(final days).
2.248:
Narrated Abu Salma bin `Abdur Rahman: I asked `Aisha, “How is
the prayer of Allah’s Apostle during the month of Ramadan.”
She said, “Allah’s Apostle never exceeded eleven rak`at in
Ramadan or in other months; he used to offer four rak`at−− do
not ask me about their beauty and length, then four rak`at, do
not ask me about their beauty and length, and then three
rak`at.” Aisha further said, “I said, ‘O Allah’s Apostle! Do
you sleep before offering the witr prayer?’ He replied, ‘O
`Aisha! My eyes sleep but my heart remains awake’!”
2.241:
Narrated `Aisha,
The Prophet (p.b.u.h) used to offer thirteen rak`at of the
night prayer and that included the witr and two rak`at (Sunna)
of the Fajr prayer.
2.224:
Narrated Jundab:
The Prophet became sick and did not get up (for Tahajjud
prayer) for a night or two.
From another hadees, one of the sahabi ask to prophet, how to perform radadam night prayer, he says do 2 rakat each(but he never mentioned total how many rakats).so, from the above hadees, it’s clearelly mentioned he performaed 4+4+3(witr).
I am argue with you. i want clear evidance. also i am not a moulavi or researcher.
If i mentioned anything wrong please forgive me in the name of allah.
Jazaak Allahu Khairan
Insath Ali
“I am argue with you.” sorry it’s typo error. it should be “I am not argue with you”.
Jazaak Allahu Khairan
Insath Ali
அரபா நோன்பு தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களில் சர்ச்சைகள் ஏதும் உள்ளனவா?
அறிஞர்களுக்கு மத்தியில் அந்த ஹதீஸ் பற்றி எந்த சர்ச்சையும் இல்லை
முஸ்லிம் அல்லாத ஒரு சகோதரர் வினவிய கேள்வி பின் வருமாறு
இஸ்லாத்தில் ஆண், பெண் அல்லத “அரைவானிகள்” எனப்படுபவர்கள் யார்?
அரவாணிகள் ஆண்கள் போன்றே இஸ்லாம் நடத்துகிறது. காரணம் அவர்கள் உடல் ரீதியாக குறைபாடுள்ளவர்களாக இருந்தாலும் ஆண்களின் தோற்றத்தையும் குணங்களையும் பெறுவாரியாகக் கொண்டிருப்பதுதான். இதுபற்றி விரிவாக எழுத முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்
Assalamu Allaikum Moulavi Mujahid,
I am waiting for your reply regarding my Doubt about Tharaweeh prayer?
Jazaak Allahu Khairan
Insath Ali
அஸ்ஸலாமு அழைக்கும்
ஒவ்வொரு தொளுஹையின் பின்னரும் குல் சூராக்களை ஓதுவது தொடர்பான ஹதீஸின் தரம் என்ன?
walaikumussalam
ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் நாஸ் மற்றும் பலக் என்ற இரண்டு ஸூராக்களையும் ஒரு முறை ஓதுவது நபிவழியாகும்
அஸ்ஸலாமு அலைக்கும்
01. சனிக்கிழமை சுன்னத்தான நோன்பு நோற்க தடையேதும் உள்ளதா?
02. ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் குல் சூராக்களை ஓதுவது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களின் தரம் என்ன?
walaikumussalam
1-கடமையான நோன்பைத் தவிர வேறு நோன்புகள் நோற்கத் தடை வந்துள்ளது. இந்த செய்தி திர்மிதி, அபுதாவுத், இப்னு மாஜாஹ் போன்ற கிரந்தங்களில் அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ள ஆதாரப் பூர்வமான செய்தி. ஆனால் வெள்ளியோடு சனிக்கிழமையும் நோன்பு வைப்பதற்கு ஸஹீஹான ஹதீஸ்களில் அனுமதியுள்ளதால். இரண்டு நாட்களிலும் நோன்பு வைத்தால் இத்தடைக்கு உற்பட மாட்டோம்
2-ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் நாஸ் மற்றும் பலக் என்ற இரண்டு ஸூராக்களையும் ஒரு முறை ஓதுவது நபிவழியாகும்
hajjupperunal toluhaiku mun (FAJAR ADANUKKU PIN IRUNNDU PERUNAL TOLUKAI MUDIUM VARAI) TANNEERO TEA O VERU SIRIYA SAPPADO UTKOLVATHU KOODATHA?
அவ்வாறு எந்தத் தடையும் இல்லை. தாராளமாக சாப்பிட்டுவிட்டுப் போகலாம்
assalamu alaikum bro mujahid maulavi should we refrain from taking any food or drink from the adahn for fajr till we finish our eid aluha pryer?
walaikumussalam
there is no prohibition. see this hadees in saheehul buhari 955
assalamu alaikum bro mlv mujahid,kitabul janaazi il rasool(sal) awarkalin mahalin kaburil iranguwatatku anru iravu tan manaiviedam ondru koodatha abu talha(rali)awarkalai mattum anumathitatan padippinai enna? penkalin janasawil ippadi ketpathum appadiyanawartaan kaburil irangavum venduma?
walaikumussalam
எல்லாப் பெண் ஜனாஸாக்களிலும் அவ்வாறு நபியவர்கள் கேட்கவில்லை. இந்த இடத்தில் கேட்டதற்கு நேரடியாக எந்த விளக்கத்தையும் ஹதீஸ்களில் காணமுடியவில்லை. உடலுறவு மார்க்கம் அனுமதித்த ஒன்றாக இருந்தாலும் அது ஒரு உலக இன்பம்தான். நபியவர்கள் குறிப்பிட்ட இரவில் உலகத் தொடர்பற்று வணக்க வழிபாடுகளில் ஈடுபற்ற ஒருவர் தனது மகளின் கப்ரில் இறங்க வேண்டுமென விரும்பியதனால் அவ்வாறு கேட்டிருக்கலாம். கப்ரில் இறங்க முந்திய சில மணி நேரங்களில் உலகத் தொடர்பற்று வணக்கவழிபாடுகளில் ஈடுபற்ற ஒருவர் கப்ரில் இறங்குவது சிறந்தது என நபியவர்கள் இந்த நிகழ்வின் மூலம் வழிகாட்டியிருக்கலாம்
Assalamu alaikum bro Mlv Mujahid, Allah(sub) created the first human nabi Adam(alai) and ordered all the Malaks (not jinns) to salutate to nabi Adam.All did the same but Iblis(saitan),but Iblis is not a malak. So how iblis has come to this categary?
moulavi…..thabliqk jamadh vali thavariya iyakkama..vilakkunga vireeeeeeeeva pls…..skariya ean kapsa story lam eludhi vacharu,,,pinnani enna…..tharjuma qurana ean thabliq vasikka vida matikranga…layman vasicha puriyadha pudhira quran????????????//