இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கடந்த கால வரலாறு ஓர் அலசல்(போலி இயக்கத் தூய்மை பேசுவோர்களுக்கோர் மறுப்பு). 4

Post by mujahidsrilanki 24 June 2011 கட்டுரைகள்

ஜமாஅதே இஸ்லாமியிலிருந்து தடம் புரண்டு ஈரானிய சீயாஇஸப் புரட்சியை இலங்கையில் பரப்ப அமைக்கப்பட்ட இயக்கத்தின் தலைவராக மாறி ஜமாஅதே இஸ்லாமியை எதிர்த்த ஜமாஅத்தே இஸ்லாமியின் 4காவது தலைவர் யூஸுப் ஸாஹிப்

யூஸுப் ஸாஹிபின் போக்கில் அன்றைய முக்கிய அங்கத்தவர்களுக்கு திருப்தி இருந்திருக்க முடியாது. இவர் மார்க்க சட்ட விடயங்கள் பற்றிய ஆய்வுகளை மதிக்கும் போக்கைக் கொண்டவரல்ல. அரபுமொழி தெரியாத மூல மொழியில் மார்க்கத்தைக் கற்காதவர்களை ஒரு இயக்கத்தின் நிர்வாகத்தில் தலைமையில் வைப்பது தவறல்ல. ஒரு முழுக்கொள்கையையே இந்த இயக்கம் பிரதிபலிக்கிறது என்று கூறும் இயக்கத்திற்கு இது பொருத்தமற்றது. இவரது காலத்தில்தான் நீர்கொழும்பு பலகத்துறையைச் சேர்ந்த ஹோமியோபதி வைத்தியரான நுபார்பாரூக் அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் ஜமாஅதே இஸ்லாமியின் 2வது தலைவரான தாஸிம் அஸ்ஹரியின் சகோதரர். இந்தச் செயலாளரும் கருத்துவேற்றுமையால் விலகி மாளிகாவத்தையில் ‘தஹ்ரீருச் சபாபில் முஸ்லிமீன்’ என்ற இரகசிய இயக்கத்தை ஆரம்பித்தார். ஜமாஅதே இஸ்லாமியின் செயலாளராக இருந்து பிரிந்தவரின் ஜமாஅத்திற்கெதிரான பிரச்சாரத்தால் ஜமாஅதே இஸ்லாமி கலங்கிப்போனது. ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர்கள் தடம்புரண்டதல்லாது செயலாளர்களுமா!!!இது எந்த வகை நிர்வாகத் திறமையில் அடங்குமோ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் தற்காலிகமாக செயலாளர் பதவியில் அறியாமல் அமர்த்திவிட்டோம் என இலேசாக ஜமாஅத் சொல்லிவிட முடியாது. ஏன் என விளக்குகிறேன் கேளுங்கள்.

ஸையித் அஹமத் தலைவராக இருக்கும் காலத்திலே பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் முல்தான் மத்ரஸாவிற்கு 5வர்  5வருட கற்கைக்காக இலங்கையிலிருந்து ஜமாஅதே இஸ்லாமியால் தெரிவு செய்து அனுப்பப்பட்டனர். எனது ஞாபகத்தில் உள்ளவர்கள். நுபார்பாரூக், அஷ்ரப் மரிக்கார், அஷ்ரப் (புதுக்கடை), ஜுனைத் என்ற 4வர்களே.இவர்களில் அஷ்ரப் மரிக்கார் 2வருடங்களில் இலங்கை திரும்பி ஜமாஅதே இஸ்லாமியோடு ஒத்துழைக்காமல் நானும் பின்னர் அங்கத்துவரான  மஜ்லிஸே இஸ்லாமியை ஆரம்பித்து செயல்பட்டார்.  புதுக்கடை அஷ்ரப் தப்லீக் ஜமாஅத்தில் சேர்ந்து அஷ்ரப் ஹாஜியார் என்ற பெயரில் பிரபல்ய பிரச்சாரகராக இருந்தார். ஜுனைத் என்பவர் ஓரிருவருடம் கற்று விட்டு ஜித்தாவில் வேலை பார்த்தார்.

இந்த வரிசையில் நுபார் பாரூக் அவர்கள் 3வருடங்களில் கற்கையை முடிக்காமல் திரும்பி வந்து ஜமாஅத்தின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றினார். மௌலான மௌதூதியின் மாணவராக இருந்தவர். ஆக இவரைச் செயலாளராக்க முன் தூரப்பார்வையுடனேயே(?) ஜமாஅத் இவரைத் தெரிவு செய்திருக்கிறது. மௌலானா மௌதூதியின் மாணவர் என்ற அடைமொழியே இதற்குப் போதும். ஆனால் துரதிஷ்டவசமாக  ஜமாஅத் அனுப்பிய அனைவருமே வேறு இயக்கங்களில் போய் சேர்ந்தனரே தவிர ஜமாஅதே இஸ்லாமியில் சேரவில்லை. நுபார்பாரூக் செயலாளராக சில காலம் இருந்தார். அவரும் ஜமாஅதே இஸ்லாமியை எதிர்த்து வெளியேறி பிரிதொரு இயக்கம் கண்டார். ஜமாஅத்தின் ஸ்தீரமற்ற ஆரம்ப கால நிர்வாகத்திற்கு இவைகள் மிகப் பெரிய ஆதாரங்கள்.

இந்த யூஸுப் ஸாஹிபின் தலைமைக் காலத்தில் அவரும் அபூ உபைதாவும் பாகிஸ்தான் சென்று அங்குள்ள ஜமாஅதே இஸ்லாமியின் செயற்பாடுகளை பார்த்து வந்தார்கள். ஒரு முறை மாலிகாவத்தையில் மஜ்லிஸே இஸ்லாமியிற்கு அழைத்து அங்கத்துவர்களுக்கு மத்தியில் பேச வைத்தோம். அவ்வுரையில் பாகிஸ்தான் ஜமாஅத்தின் ஜம்இய்யதுத் தலபாவின் சுருசுருப்பை விளங்கப்படுத்தினார். இறுதியில் கேள்விபதில் பகுதியில்  (இன்றைய ஜமாஅதே இஸ்லாமியில் அப்படியொரு பகுதியே கிடையாது) சுறுசுறுப்பான பாகிஸ்தான் ஜமாஅத்தின் கிளையான இலங்கை ஜமாஅதே இஸ்லாமி இவ்வாறு செயலற்றுப் போயிருப்பதன் காரணமென்ன? என்ற வினா எழுப்பப்பட்டபோது பின்வருமாறு பதிலளித்தார்: ‘நல்ல கேள்வி. எனக்கு முன்பு தலைமையில் இருந்தவர்கள் நன்மை என்று நினைத்து சில தீமைகளைச் செய்துவிட்டார்கள். அதனால் ஜமாஅத்தின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன’

இதன் உண்மை யாதெனில் இவருக்கு முந்திய தலைமைகள் ஷிர்க்கை எதிர்ப்பதிலும் பித்அத்துக்களை எதிர்ப்பதிலும் தீவிரம் காட்டினர். பரகஹதெனிய கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் தவ்ஹீத்வாதிகளுக்கு அடையாளமாக இருந்ததே ஜமாஅதே இஸ்லாமி என்ற பெயர்தான். குர்ஆன் வகுப்பு என்றாலே எதிர்ப்புத்தான். ஆனால் யூஸுப் ஸாஹிபிடம்அந்தத் தீவிரம் இருக்கவில்லை. இதுவே அவரின் இந்த பதிலிற்கான காரணமாக இருந்தது. இவரது காலத்தில் ஜமாஅதே இஸ்லாமியின் பொருளாதார வலமும் குறைவாகவே காணப்பட்டது.(அன்று ஜம்இய்யா டீ சேட் பற்றி சிந்தனை வர வாய்ப்பே இருக்கவில்லை).

யூஸுப் ஸாஹிபுடை காலப்பகுதியில் மஜ்லிஸே இஸ்லாமியின் ‘புதுமைக் குரல்’ சஞ்சிகையை நிறுத்த ஒரு சதி செய்யப்பட்டது. ஜமாஅத் எங்கே சதி செய்தாலும் ஜமாஅத்திற்கு சம்பந்தம் உண்டாகாத வகையில்தான் அது நடக்கும் ஏன் அது சதி என்பது கூட உள்ளங்களை அறிந்தவனான அல்லாஹ்விற்கும் அந்த சதியில் அகப்பட்டவர்களுக்கும் ஜமாஅத்தின் தலைமைகளுக்கம் மாத்திரமே தெரிந்திருக்கும். இன்று வரை பிரித்தாளுங்கொள்கையை ஜமாஅத் விடவில்லை. இன்ஷா அல்லாஹ் இதை அவர்கள் மறுத்தால் ஜமாஅத்தின் 10 இற்குப் மேற்பட்ட சதிகளை ஆதாரங்களோடு என்னால் சமர்ப்பிக்க முடியும் அது வரை அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. அப்படிப்பட்ட சதிகளில் ஒன்றாகவே ‘புதுமைக் குரல்’ சஞ்சிகையை நிகழ்த்தும் அந்த நடவடிக்கை இருந்தது. அல்லாஹ் எங்களைக் காப்பாற்றினான்.

இறுதியில் ஆசனம் ஆட்டம் கண்டதால் ஜமாஅத்தை விட்டு யூஸுப் ஸாஹிப் அவர்கள் வெளியேறினார். பின்னர் 1970 களின் கடைசியில் ஏற்பட்ட ஈரானியப் புரட்சிக்கு கடுமையான ஆதரவளித்தார்.அதை இலங்கையில் வழி நடத்திய இயக்கத்தின் தலைமைப் பதவியையும் ஏற்றார். ஒருகொள்கையே இல்லாதவர்தான் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராக இருந்திருக்கிறார் என்பது இதிலிருந்து வெளிச்சமாகிறது. இலங்கையில் குமைனி இமாம் குமைனி என்று அழைக்கப்பட முழுக் காரணமும் ஜமாஅதே இஸ்லாமிக்குத்தான். இதற்குப் பல ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும். ஈரானிய ஷீயாப் பரட்சியை ஜமாஅதே இஸ்லாமி அன்று கடுமையாக ஆதரித்தது. ஈரானிய ஷீயாப் புரட்சியின் போது இலங்கை ஜமாஅதே இஸ்லாமி என்ற தனித் தலைப்பில் இதை இன்சா அல்லாஹ் தெளிவாக எழுதுவேன். இந்த ஷீயாப் பரட்சியை உடனேயே எதிர்த்து மக்களுக்குத் தெளிவுபடுத்திய நன்மை பரகஹதெனிய ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸுன்னவாவிற்கு உண்டு. அன்று முதல் இன்று தவ்ஹீத் பிரச்சாரம் கொள்கைத் தெளிவோடு இருப்பதும் அது பற்றி ஆழ்ந்த அறிவோடும் பற்றோடும் இருப்பதே இதற்குக் காரணம். ஆனால் ஜமாஅதே இஸ்லாமி அவ்வாறல்ல எங்கேயாவது முஸ்லிம் நாட்டில் சண்டை என்றால் ‘அல்லாஹு அன்பர் இஸ்லாமியப் புரட்சி’ என்று கோஷமிடுவதும் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ என்று பின்னர் திரும்புவதும் அவர்களின் வழமை என்பதை உணர பெரிய ஆதாரங்கள் தேவையில்லை.

யூஸுப் ஸாஹிபின் பிளவிற்குப் பின் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராக வந்தவர் இப்ராஹீம் மதனி அவர்கள். இவரது காலத்தில் ஜமாஅதே இஸ்லாமியின் போக்கில் ஒரு பாரிய மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றத்தை இன்றைய ஜமாஅதே இஸ்லாமியின் போக்கின் 1 கட்டமாக்கொள்ளலாம்.

பாகிஸ்தானிலிருந்த பார்வையை அரபு நாடுகளின் பக்கம் திருப்பி படிப்படியாக தன்னையறியாமலேயே இக்வானுல் முஸ்லிமீனாக மாற்றிக் கொண்ட இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அரபு நாட்டுப் பிரவேசம்.

16 Responses to “இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கடந்த கால வரலாறு ஓர் அலசல்(போலி இயக்கத் தூய்மை பேசுவோர்களுக்கோர் மறுப்பு). 4”

 1. Jafran says:

  Assalamu alaikkum.

  Jazakumullahu hairan for this article.

  I have got some latest information about ஜமாஅத் எங்கே சதி செய்தாலும் ஜமாஅத்திற்கு சம்பந்தம் உண்டாகாத வகையில்தான் அது நடக்கும் ஏன் அது சதி என்பது கூட உள்ளங்களை அறிந்தவனான அல்லாஹ்விற்கும் அந்த சதியில் அகப்பட்டவர்களுக்கும் ஜமாஅத்தின் தலைமைகளுக்கம் மாத்திரமே தெரிந்திருக்கும். இன்று வரை பிரித்தாளுங்கொள்கையை ஜமாஅத் விடவில்லை, this is from 2011, from a palce where Jamathe Islami is working with full power.

  I will write you about this after confirming this with trusted sources, Insha Allah. I have already made contects with related people and collecting the information as it should be from 100% trusted resources.

  • mujahidsrilanki says:

   Walaikumussalam

   ஜஸாகல்லாஹு கைரா எதிர்பார்த்திருக்கிறேன்

  • Jafran says:

   Assalamu alaikkum.
   Sorry for the delay.

   I am still trying to varify the sources of information.

   It is actually from Mawanella.

   Anyone knows more facts, pls contact me on jaffi_rox007@yahoo.com

   Insha allah, I am working on the article with proof

 2. Mohamad Irfan says:

  I should thank to the person who has sent the worse and canny history of jamath islamy.jazakallahu hairan.

 3. imthiyazbuhary says:

  Really You job is looking and seeking mistakes from other Islamic movement. But when we see what you are doing for Muslim society is nothing.

  No problem Muslim community need good jokers like you.

 4. Ibnu says:

  I think Moulavi Mujahid feeling This is the better way to go for Jennah

 5. xfactor says:

  These guys are nuts !!! people are misguided saying if you be with a Movement you can be in the right track and if u ask a JI fanatic whats that movement he’ll say its JI if you ask Brotherhood fanatic he’ll say its ihvan al muslimoon but if you ask a Thowheed person he wont say follow SLTJ ,TNTJ or SALAF council theyll say follow quran and sunnah thts the correct answer

  these fanatics they never understand that there are mistakes made by these movements but what they say is islamic movements are prefect you SHOULD join 1 thts their answer !!!

  may allah guide them towards straight path !!!

 6. Rihan says:

  Salam xfactor.
  Well done, like your comment. Why Sri Lanka got more then one tawheed organisation?

  • mujahidsrilanki says:

   salaam There is no wrong in existence of more than one movement to call to Islam and to guide to it

  • xFactor says:

   @mujahidsrilanki

   jazakallah kyr

  • Saneej says:

   Salaam. இயக்கங்கள் பல இருந்தாலும் கொள்கை ஒன்றே. ஏனென்றால் நாங்கள் மக்களை அல்லாஹ்வின் பக்கமும், அவனின் தூதரின் பக்கமுமே அழைக்கிறோம். எங்களின் பக்கமல்ல. குரானையும், ஹதீஸையும் ஆய்வு செய்பவர்கள் சில சட்டங்களில் வேறு வேறாக விளங்கி இருப்பார்கள். நாம் அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வாழ்பவர்கள் அல்ல என்பதால் இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இஸ்லாமிய அகீதாவில் முரண் படவில்லை. தௌஹீத் இயக்கங்கள் மக்களிடம் ஹக்கை எடுத்துச் செல்லவே பயன்பாட்டில் உள்ளன. இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அல்ல. தெளிவில்லாத ஒரு சிலர் இருந்தாலும், அநேகர் இந்தக் கருத்திலேயே உள்ளோம். நாங்கள் மனிதர்கள் என்பதற்கும், எங்களை அல்லாஹ் இயக்கங்களையோ, மனிதர்களை யோ கண்மூடிப் பின்பற்றும் மக்களில் இருந்து காப்பாற்றி உள்ளளான் என்பதற்கும் இதையே ஆதாரமாக நினைக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். வேறு எந்த இயக்கங்களிலும் இல்லாத அளவு நாங்களே எங்களுக்குள் அதிகம் விமர்சனம் செய்து கொள்வோம். பிழை விட்டது முஜாஹித் மௌலவி என்றாலும் நாங்கள் கேட்போம். விமர்சிப்போம். உலக நட்பு எங்களை எங்களுக்கு பிழையின் பக்கம் இருந்து நண்பனை மீட்கவோ, சுட்டிக்காட்டவோ,சொந்த ஆய்வை வெளியிட்டு கருத்துக்களை உள்வாங்கவோ தடையாக இருந்ததில்லை. இது இதயங்களுக்குள் உள்ள பிளவு அல்ல. வழி தவறி விடக்கூடாது என்ற முயற்சி. அல்லாஹ் நாடினால் மன்னிக்கப் போதுமானவன். இன்ஷா அல்லாஹ். அல்லாஹ்வே நமது முடிவை அறிவான். அல்லாஹ் நம்மனைவரையும் நேர்வழியில் நடத்துவானாக. some texts are more to your question. Just to tell some messages to all other brothers only i was extending.

 7. Jafran says:

  We are eagerly waiting for the next part (5)

 8. Ahmed says:

  Mr. Mujahid you are great Muslim!????

  • xFactor says:

   யோசித்துத்தான் பேசுகிறீர்களா அல்லது உங்கள் இயக்கத்தின் உண்மை முகம் வெளியில் வந்தவுடன் இயக்கத்தின் பால் உல்ல அந்த ஆசை உம்மை பேசவைக்கிறதா ?

   ஏன் எதற்கு என்பதெல்லாம் கேட்பதில்லை இயக்கத்தைப் பற்றி பேசாதே ? என்பதா உங்களது பதில்

   எனக்கு புரியவில்லை கொஞ்சம் விளக்கி கூறவும் நாய் பேய் என்றெல்லாம் இல்லாமல் அழகான முறையில் முஜாஹித் பதில் தருவார் என நினைக்கின்றேன்

 9. nisamdeen says:

  يا أخي الكريم ما تقدمه الجماعة الإسلامية بسريلانكا من خدمات عظيمة للشعب المسلم السريلانكي في سبيل النهوض به أحسن وأفضل بآلاف المرات مما تقدمه أنت.ترك الطعن في رجالات الدعوة الإسلامية المخلصين ا.

  • mujahidsrilanki says:

   இஸ்லாத்திற்கு எவ்வளவு சேவை செய்துள்ளார் என்பதை மட்டும் வைத்து ஒருவரையோ ஒரு ஜமாஅத்தையோ அளப்பதாக இருந்தால் அபூதாலிப்தான் முன்னிலையிலிருப்பார்.அவரும் முஸ்லிமல்ல என்பதுவே முஸ்லிம்களின் அகீதா சிந்தித்து பதில் எழுதப் பழகுங்கள்