நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.

நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தியைக் கூறும் ஹதீஸ் தொடர்பாக முன்வைக்கப்படும் விமரிசனங்களுக்கான சரியான பதில்களை இப்பகுதியில் வழங்கலாம் என நினைக்கின்றோம். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை நாம் முதலில் அறிந்து கொள்வோம்.

صحيح البخاري ـ  5766 – حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا فَعَلَهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ وَهُوَ عِنْدِي دَعَا اللَّهَ وَدَعَاهُ ثُمَّ قَالَ أَشَعَرْتِ يَا عَائِشَةُ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ قُلْتُ وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ جَاءَنِي رَجُلَانِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالْآخَرُ عِنْدَ رِجْلَيَّ ثُمَّ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الْأَعْصَمِ الْيَهُودِيُّ مِنْ بَنِي زُرَيْقٍ قَالَ فِيمَا ذَا قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذِي أَرْوَانَ قَالَ فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ إِلَى الْبِئْرِ فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ ثُمَّ رَجَعَ إِلَى عَائِشَةَ فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَأَخْرَجْتَهُ قَالَ لَا أَمَّا أَنَا فَقَدْ عَافَانِيَ اللَّهُ وَشَفَانِي وَخَشِيتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ مِنْهُ شَرًّا وَأَمَرَ بِهَا فَدُفِنَتْ

“நபியவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள். ஓன்றை செய்ததாக நபியவர்கள் நினைப்பார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. நபியவர்ளின் நிலை இவ்வாறே இருந்தது. ஒரு நாள் நபியவர்கள் அல்லாஹ்விடம் துஆச்செய்து கொண்டிருந்தார்கள். பின்னர் நபியவர்கள் என்னிடம் “ஆயிஷாவே உனக்குத் தெரியுமா? நான் எந்த விடயத்தில் அல்லாஹ்விடம் தீர்ப்புக் கேட்டேனோ அல்லாஹ் எனக்கு அந்த விடயத்தைக் காட்டித்தந்து விட்டான்” எனக் கூறினார்கள். ஆல்லாஹ்வின் அது என்ன என்று நான் கேட்டேன். ஆதற்கு நபியவர்கள் “ இருவர் என்னிடம் வந்தார்கள். ஒருவர் என் தலைக்குப்பக்கத்திலும் மற்றையவர் என் கால்களுக்குப்பக்கத்திலும் அமர்ந்தனர். பின்னர் அவர்களிலொருவர் மற்றையவரிடம் “ இவருக்கு ஏற்பட்ட நோய் என்ன?” எனக் கேட்டார். அதற்கு மற்றையவர் “இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். அதற்கு மற்றையவர் “இவருக்கு சூனியம் வைத்தவர் யார்? எனக் கேட்க, “ஸ{ரைக் கோத்திரத்தைச் சேர்ந்த லபீதிப்னுல் அஃஸம் என்ற யூதர் தான் இவருக்கு சூனியம் செய்தார்” என்று அடுத்தவர் கூறினார். “இவருக்கு எதிலே சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என அவர் மீண்டும் கேட்க, “முடிகள், சீப்பு ஆகியவற்றில் சூனியம் செய்து அவற்றை ஒர் ஆண் பேரீத்த மரத்தின் பாலைக்குள் வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். “அந்தப்பாலை எங்கேயுள்ளது?” என்று மீண்டும் அவர் கேட்கவே, “அர்வான் என்ற கிணற்றுள் அது வைக்கப்பட்டுள்ளது” என்று மற்றையவர் கூறினார். பின்னர் நபியவர்கள் தனது தோழர்களுடன் அந்தக்கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த பேரீத்தம் கொப்புகளைப்பார்த்து விட்டு ஆயிஷா நாயகியிடம் திரும்பி வந்து “சூனியம் வைக்கப்பட்டுள்ள அக்கிணற்றின் நீர் மருதானி கலந்தது போன்றிருந்தது. அந்த பேரீத்தம் கொப்புகள் ஷெய்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன.” என்று கூறினார்கள். இதைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள் “ அல்லாஹ்வின் தூதரே நீங்கள் அவற்றை வெளியெடுத்தீர்களா?” எனக்கேட்டார்கள். அதற்கு “இல்லை” என்று பதில் கூறிவிட்டு “அல்லாஹ் என்னை குணப்படுத்திவிட்டான். எனவே மக்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படுத்துவதை நான் வெறுக்கிறேன்” என்று சொல்லி விட்டு அதைப் புதைக்குமாறு நபியவர்கள் ஏவினார்கள்”.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)

ஆதாரம்    : புஹாரி

இந்த சம்பவம் புஹாரியில் வார்த்தை வித்தியாசங்களுடன் பல இடங்களில் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் நமக்குப்பல படிப்பினைகளுள்ளன. நபியவர்கள் தனக்குச் சூனியம் செய்யப்பட்டிருந்த அந்தப் பொருட்களைப் பிரித்துப் பார்க்கவுமில்லை. வெளியிலெடுக்கவுமில்லை. பார்த்து விட்டு வருகிறார்கள். சூனியமென்பது அவிழ்க்கப்பட்டால்தான் குணமாகும் என்ற தவறான நம்பிக்கையை இந்த ஹதீஸ் உடைக்கிறது. ஒருவருக்கு நோயேற்பட்டால் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திக்கும் போது அல்லாஹ் குணப்படுத்துவான். சூனியத்தை அவிழ்க்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இந்த ஹதீஸ் மிகப்பெரும் சான்றாகவுமுள்ளது. அத்துடன், ஒருவருக்கு சூனியம் வைக்கப்பட்டிருப்பின் அதை சூனியக்காரன்தான் எடுக்க வேண்டும் என்பது பொய்யென்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகின்றது. ஒருவருக்கு நோயேற்படுவதற்கு கிருமிகள், சூழல், மனோநிலை போன்றன காரணமாகின்றதைப் போலவே சூனியமும் ஒருவருக்கு நோயேற்படுவதற்குக் காரணமாகின்றது என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரியவருகின்றது.

இந்த ஹதீஸி அறிவிப்பாளர் வரிசையைக் குறை கூறி சிலர் இந்த ஹதீஸை விமர்சிக்கின்றனர். முஃதஸிலாக்கள் போன்ற போலிப் பகுத்தறிவுவாதிகளே இவ்வாறு இதன் அறிவிப்பாளர் வரிசையை விமர்சிப்போராகும் என்பதனால் நாம் இவ்விமர்சனத்துக்கு பதில் கூற விளையவில்லை.

ஆனாலும் தௌஹீத் சகோதரர்களில் சிலர்  இந்த ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாக விமர்சிக்கின்றனர். அதுபற்றி இங்கு சிறிது ஆராய்வோம்.

மேற்படி ஹதீஸில் சில வார்த்தைக் குழப்பங்களுள்ளதாக விமரிசிக்கின்றனர்:

1.நபியவர்களுக்கு நாற்பது நாள்தான் இந்த நோய் இருந்தது என்று சில அறிவிப்புக்களிலும்ஆறு மாதங்கள்தான் நபியவர்களுக்கு இந்நோய் இருந்தது என்று சில அறிவிப்புக்களிலும் உள்ளன.

2.அதுபோலவே நபியவர்கள் அக்கிணற்றுக்குச் சென்று சூனியத்தை எடுத்தார்கள் என்று சில அறிவிப்புக்களிலும், நபியவர்கள் கிணற்றுக்குப் போய் எடுக்கவில்லை என்று சில அறிவிப்புக்களிலும் கூறப்பட்டுள்ளது. சில அறிவிப்புக்களில் நபியவர்கள் தனது தோழர்களை கிணற்றுக்கு அனுப்பினார்கள் எனவும் சில அறிவிப்புக்களில் நபியவர்களே போனார்கள்எனவும் கூறப்படுகின்றது.

3.சில அறிவிப்புக்களில் நபியவர்கள் சூனியத்தை தாமாக அகற்றினார்கள் எனவும் சில அறிவிப்புக்களில் நபியவர்களிடம் சூனியத்தை அகற்றுவீர்களா என்று கேட்ட போது தேவையில்லை என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான வார்த்தைக் குழப்பங்களை வைத்து இந்த ஹதீஸை சிலர் பலவீனப்படுத்துகின்றனர். ஒரு ஹதீஸைப் பொருத்தமட்டில் அதனுடைய அறிவிப்பாளர் வரிசை சஹீஹாக இருந்து, அந்த சம்பவம் சஹீஹாக இருந்து அந்த ஹதீஸின் கிளைகளில் காணப்படும் இது போன்ற வார்த்தைக் குழப்பங்களை வைத்து ஹதீஸ் பலவீனப்படுத்தப்படும் முறையொன்று கிடையாது. ஏனெனில் ஒரு பக்கமளவில் நீண்டிருக்கும் ஹதீஸ்களை நீங்கள் உற்று நோக்கினால் இது போன்ற வார்த்தைக் குழப்பங்கள் அதில் காணப்படும். உதாரணத்துக்குச் சொல்வதென்றால்:

நபியவர்கள் தனது மனைவியொருவரின் வீட்டில் தேன் குடித்ததாக வரும் ஹதீஸில்ஸைனப் (ரழி) அவர்களின் வீட்டிலா? ஹப்ஸா (ரழி) வீட்டிலா இது நடைபெற்றது என்ற கருத்து வேறுபாடுள்ளது.

அவ்வாறுதான் அத்தஹிய்யாத்திலே விரலை எவ்வாறு வைப்பது என்று பார்க்கும் போதும் சைக்கினை எனவும் அசைத்தல் எனவும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது இவ்வேறுபாடுகளை வைத்து யாரும் ஹதீஸை பலவீனப்படுத்துவதில்லை. கருத்துக்களுக்குள் பொருத்தம் காணவே முயற்சிப்பர்.

நபியவர்களின் சூரிய கிரகணத் தொழுகை தொடர்பான ஹதீஸில் நபியவர்கள் மூன்று ருகூஉ செய்ததாகவும் முஸ்லிமில் அறிவிப்புக்கள் இடம்பெறுகின்றன இதை வைத்து முழு ஹதீஸையுமே நாம் பலவீனப்படுத்துவதில்லை.

இது போன்ற பெரிய ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் இது போன்ற சில வார்த்தைக் குழப்பங்கள் இருப்பது தவிர்க்க முடியாததாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஹதீஸின் அடிப்படை சரியானதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக அவ்வாறான முரண்பட்ட வார்த்தைகளைக் கூறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமானவர்களாக இருந்தாலும் மிகச்சிறந்த அறிவிப்பாளர்கள் கூறும் வார்த்தைகளை வைத்தே ஏனையவைகளை நாம் முடிவுசெய்ய வேண்டும்.

மேலே நாம் பார்த்த ஹதீஸை ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து உர்வா அறிவிக்கின்றார். அவரிடமிருந்து ஹிஷாம் அறிவிக்கின்றார். ஹிஷாமிடமிருந்து உஸாமா, ஸுப்யான் அத்தௌரி போன்ற பலர் அறிவிக்கின்றனர். இவற்றுள் ஸுப்யான் அல் உயைனாவுடைய அறிவுப்புத்தான் முழுமையானதாக, நேர்த்தியானதாக இருக்கின்றது. ஆகவே இவ்வார்த்தை முரண்பாடுகளை வைத்து இந்த ஹதீஸை  நாம் பலவீனப்படுத்த முடியாது. இன்னும் இந்த ஹதீஸிற்கு வேறு சில அறிவிப்பாளர் வரிசைகளும் உள்ளன. அவைகளின் உடன்பாடு முரண்பாடுகளை வைத்தும் வார்த்தையின் பொருத்தமான வடிவத்தை முடிவு செய்யலாம். எனவே இந்த அளவுகோள் தவறானது.

அடுத்ததாக இந்த ஹதீஸின் கருத்துக்களைக் கவனித்து சிலர் இந்த ஹதீஸைப் பின்வருமாறு பலவீனப்படுத்துகின்றனர் :

நபியவர்கள் ஒன்றைச் செய்ததாகக் கற்பனை பன்னுகிறார்கள் ஆனால் அதை அவர்கள் செய்திருக்கவில்லை. செய்யவில்லை என்று நினைக்கின்றார்கள் ஆனால் அதைச் செய்துள்ளார்கள். இத்தகைய பாதிப்புக்கள் ஒருவருக்கு சூனியத்தால் ஏற்பட்டிருக்குமானால் அவருடைய நபித்துவத்தில் சந்தேகம் எழ வாய்ப்புண்டு. ஏனெனில் இக்காலப்பிரிவில் வஹியாக அல்லாஹ் இறக்கியதை இல்லையென்று அவர் சொல்லியிருக்கலாம், வஹியல்லாததை வஹியென்று அவர் கூறியிருக்கலாம் ஆகவே இந்த ஹதீஸை ஏற்கமுடியாது என்பதே அந்த வாதம்.

இந்த வாதங்களையும் ஏற்கமுடியாது. ஏனென்றால் உலகியல் ரீதியாக நபியவர்கள் ஒரு மனிதனாகவே இருந்தார்கள். மற்றைய மனிதர்களுக்கு வரும் பாதிப்புக்கள் நபியவர்களுக்கும் வரவே செய்தன. மறதி, ஒன்றை மாற்றிக் கூறுதல், நோய் போன்ற பலவீனங்கள் நபியவர்களுக்கும் இருந்தன. வஹி விடயத்தில் மாத்திரமே நூறு வீதம் நபியவர்களுக்கு எவ்விதத் தவறும் ஏற்படாது என்று நாம் நம்பவேண்டும்.  உதாரணமாகக் கூறுவதானால் ஸஹீஹ{ல் புஹாரியில் 460 வது ஹதீஸை எடுத்துக்கொள்வோம். அபூஹ{ரைரா (ரழி)அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்.

“ஒருமுறை நபியவர்கள் நான்கு ரக்அத் தொழுகையில் இரண்டு ரக்அத்தோடு ஸலாம் கொடுத்து விட்டார்கள். அதற்குப் பின்னால் கோபமான முகத்தோடு ஒதுங்கி அமர்ந்து கொள்கிறார்கள். இதைப்பார்த்த நபித்தோழர்களுக்குக் குழப்பமாக இருந்தது. அபூபக்ர் (ரழி) உமர் (ரழி) போன்றோர் நபியவர்களிடம் இதைப்பற்றிக் கேட்க அஞ்சினார்கள். இச்சந்தர்ப்பத்தில் ‘துல் யதைன்’ என்ற நபித்தோழர் தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா?”என்று நபியவர்களிடம் கேட்டார். அப்போது நபியவர்கள் நான் மறக்கவுமில்லை தொழுகை சுருக்கப்படவுமில்லை என்று கூறுகிறார்கள். அப்போது மற்றைய நபித்தோழர்களும் இரண்டு ரக்அத் தொழுத விடயத்தைக் கூறியதும் நபியவர்கள் எழுந்து விடுபட்டவற்றைத் தொழுதார்கள். என்று அந்த ஹதீஸ் இடம் பெறுகிறது.

இப்படி எத்தனை விடயங்களை நபியவர்கள் மறந்தார்களோ?” “மறதியால் எத்தனை விடயங்களைக் குறைத்தார்களோ?” எனக் கூறி மேற்சொன்ன வாதத்தினடிப்படையில் இந்த ஹதீஸையும் மறுக்கலாம். இவை மனித பலவீனங்களாகும். ஆனால் இந்த பலவீனங்களை வைத்து நபியவர்களின் வஹியுடைய பகுதியை நாம் குறை காண முடியாது.

இன்னும் சொல்வதென்றால், ஒரு முறை நபியவர்கள் தன்மீது ஒன்றை ஹராமாக்கிக் கொள்கிறார்கள். அல்லாஹ் உனக்கு ஹலாலாக்கியதை ஏன் நீர் ஹராமாக்கின்றீர் என்று உடனே அல்லாஹ் நபியவர்களிடம் கேட்கின்றான். உங்களின் மனைவியின் திருப்தியை நாடி  இப்படிச் செய்கிறீரே என்று அல்லாஹ் நபியவர்களிடம் கேட்கின்றான். ஆகவே அதை வைத்துநபியவர்கள் இப்படி இன்னும் பலவற்றை ஹராமாக்கியிருக்கலாமல்லவா?” என்று கூறி இந்த அல்குர்ஆன் வசனத்தை மறுக்கமுடியாது.

எனவே மனிதன் என்ற அடிப்படையிலான பலவீனங்கள் நபியவர்களிடம் இருந்துள்ளன. இந்த பலவீனங்களை வைத்து நபியவர்களுக்கு வழங்கப்பட்ட வஹியைக் குறைகாண முடியாது ஏனெனில் வஹி விடயத்தில் நபியவர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளது. எங்களில் ஒருவருக்கு சூனியம் வைக்கப்பட்டால் நபியவர்களுக்குப் போன்று உடனடியாக ஜிப்ரீல் (அலை) மூலம் எங்களுக்கு சூனியத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் சொல்லித்தரப்பட மாட்டாது. மூஸா நபியவர்களுக்கு தடியைப் போடச்சொல்லி அது பாம்பாகி உடனடியாக சூனியத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிகள் காட்டிக்கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் சொல்லித்தரப்படுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. நபிமார்களாயின் இதைப்போன்ற பாதுகாப்புக்களை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் ஆதாரமாகவுள்ளது. மூஸா நபியவர்களுக்கும், ஏனையோருக்கும் கயிறு பாம்பாக விளங்கியது. ஆனால் மற்றவர்களுக்கு அதிலிருந்து விடுதலைபெற முடியவில்லை. மூஸா நபியவர்கள் விடுதலை பெற்றார்கள். இது அல்லாஹ் செய்த அற்புதமாகும். இவ்வாறுதான் நபியவர்களுக்கும் சூனியம் செய்யப்பட்டது. மற்ற மக்களால் அதிலிருந்து உடனடியாக விடுதலைபெற முடியாது. ஆனால் நபியவர்களுக்கு சூனியம் எதில், எவ்வாறு வைக்கப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் வஹி மூலம் சொல்லிக் கொடுக்கப்பட்டு சூனியத்திலிருந்து உடனடியாகப் பாதுகாப்பளிக்கப்பட்டது. ஆகவே நபியவர்களுக்கும் மறதி, நோய், தெரியாமல் ஒன்றைக் கூறிவிடுதல் போன்ற மனித பலவீனங்கள் இருந்துள்ளன. எனவே நபியவர்கள் இது போன்று பலதை தவறாகக் கூறியிருக்கலாமல்லவா என்று சொல்வோமானால் இன்னும்பல ஹதீஸ்களை மறுக்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

அடுத்ததாக இந்த ஹதீஸ் பின்வரும் அல்குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாக சிலர் பின்வருமாறு வாதிடுகின்றனர்:

“نَحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَى إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا الإسراء : 47

“சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்” என்று அநீதி இழைத்தோர் இரகசியமாய்க் கூறியதையும், உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். (அல் இஸ்ரா: 47)

இவ்வசனத்தைப் பார்க்கும் போது நபியவர்களை ‘சூனியம் செய்யப்பட்டவர்கள்’ என்று கூறியவர்கள் அநியாயக்காரர்களே ஆகவே சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் மேலே பார்த்த ஹதீஸை வைத்து நாம் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருக்கின்றது என்று கூறுவோமானால் அந்த அநியாயக்காரர்களுடன் நாம் உடன்படுகின்றோம். எனவே இந்த ஹதீஸ் அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது.” என இவர்கள் கூறுகின்றனர்.

இதுவும் தவறான வாதம். காபிர்களெல்லாம் நபிமார்களை சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று கூறவில்லை. சூனியக்காரர்கள் என்றுதான் கூறினார்கள். எந்த நபி வந்தாலும் சூனியக்காரன் அல்லது பைத்தியகாரன் என்றே சொன்னார்கள். சூனியம் வைக்கப்பட்டவன் என்றும் அவர்கள் சொல்லவில்லை.

இவ்வசனத்தில் மஸ்ஹுர் என்று அல்லாஹ் கூறுவது சூனியவயப்பட்டவர்’, ‘சூனியத்திற்குட்பட்டவர் என்ற கருத்தில்தானே தவிர ‘சூனியம் செய்யப்பட்பவர்’ என்ற கருத்திலல்ல. கீழே நாம் கூறும் சான்றுகள் இதை உறுதிசெய்கின்றன.

மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகியோரைப் பார்த்து இரு சூனியங்கள்வெளிப்பட்டுவிட்டன என்றுதான் அந்த மக்கள் சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த மூஸாதான் இந்த சூனியக்காரர்களுக்கெல்லாம் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார் என்று பிர்அவ்னும் சொன்னான். பேன், தவளை, இரத்தம் போன்றவற்றை அல்லாஹ் அவர்களின் வீடுகளில் உண்டாக்கிய போது பிர்அவ்னும் அந்த மக்களும் மூஸா நபியைப்பார்த்துசூனியக்காரனே என்றுதான் அழைத்தனர். ஏனைய நபிமார்களும் இவ்வாறுதான் அழைக்கப்பட்டனர். காரணம் அந்த நபிமார்கள் காட்டிய அற்புதங்களே. நபியவர்கள் சந்திரனைப்பிளந்து காட்டினார்கள், மிஃராஜ் சென்றார்கள், அவர்களின் கைவிரல்களிலிருந்து நீர் வடிந்தது. இவற்றையெல்லாம் நபித்தோழர்களும் கண்டார்கள். அந்த மக்களும் கண்டார்கள். அற்புதங்களை நம்பாத அந்த மக்கள் நபியவர்களைப்பார்த்து சூனியக்காரன் என்றனர். ஓருவரை சூனியக்காரன்; என்று சொல்வதோடு மஸ்ஹுர் என்றும் சொன்னால் அதற்குசூனியத்திற்குட்பட்டவர் என்பதுவே அர்த்தமாகும். இதுவே சரியனதாகும். ஒருவரை சூனியக்காரன்என்றும் சூனியம் வைக்கப்பட்டவன்என்றும் சொல்ல முடியாது.அல்லாஹ் இதைப்பின்வருமாறு குறிப்பிடுகின்றான். மூஸா நபியை சூனியக்காரன்என்றழைத்த அந்த சமூகம் இன்னும் எவ்வாறு அழைத்தது என்பதை அல்லாஹ் கூறும் போது,

وَلَقَدْ آتَيْنَا مُوسَى تِسْعَ آيَاتٍ بَيِّنَاتٍ فَاسْأَلْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُمْ فَقَالَ لَهُ فِرْعَوْنُ إِنِّي لَأَظُنُّكَ يَا مُوسَى مَسْحُورًا  الإسراء : 101

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக மூஸாவே உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன் என்று அப்போது அவரிடம் பிர்அவ்ன் கூறினான். (அல் இஸ்ரா: 101)

இந்த வசனத்தில் மஸ்ஹுர் என்று கூறப்படுவது சூனியம் செய்யப்பட்டவர் என்ற கருத்திலா?,சூனியத்திற்குட்பட்டவர் என்ற கருத்திலா? என்பதை நாம் நன்கு அவதானிக்க வேண்டும். சூனியம் செய்யப்பட்டவர் அற்புதங்கள் காட்ட முடியாது, அவர் நோயாளியாகத்தான் இருக்க முடியும். மூஸா நபியவர்கள் அற்புதங்களைக் காட்டுகிறார்கள் அப்போது அம்மக்கள் “மூஸாவே நீ சூனித்திற்குட்பட்ட மனிதராகவே இருக்கிறாய்” என்றுதான்  சொன்னார்கள்.ஸாஹிர்என்றால் சூனியக்காரன்’. ‘மஸ்ஹுர்என்றால் சூனியம் வைக்கப்பட்டவன்.இதுவே சரியான கருத்தாயினும் இந்த இடத்தில் மஸ்ஹுர்என்ற வார்த்தை ஸாஹிர்என்ற கருத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது. என்பதை நாம் விளங்க வேண்டும். அற்புதங்களைக் காட்டும் ஒருவரைப்பார்த்து மஸ்ஹுர் என்று அவர்கள் கூறியது அவர் சூனியத்திற்குட்பட்டதனால்தான். நோயாளி என்பதாலோ, அவர் பாதிக்கப்பட்டவர் என்பதாலோ அவர்கள் அவரை அவ்வாறு கூறவில்லை.
அல்லாஹ் மேலும் கூறும் போது,

وَقَالُوا مَالِهَذَا الرَّسُولِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الْأَسْوَاقِ لَوْلَا أُنْزِلَ إِلَيْهِ مَلَكٌ فَيَكُونَ مَعَهُ نَذِيرًا, أَوْ يُلْقَى إِلَيْهِ كَنْزٌ أَوْ تَكُونُ لَهُ جَنَّةٌ يَأْكُلُ مِنْهَا وَقَالَ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورً

االفرقان : 7 ، 8

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார். கடை வீதிகளில் நடமாடுகிறார். இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு, இவருடன் சேர்ந்து அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா? என்று கேட்கின்றனர். அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்திருக்கக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். (அல்புர்கான்: 7,8)

எனவே அல்குர்ஆனில் எந்த இடத்திலாவது நபிமார்களுக்கு மஸ்ஹுர்; என்ற பதம் பாவிக்கப்பட்டிருந்தால் அது சூனியக்காரர்அல்லது சூனியத்திற்குட்பட்டவர் என்ற கருத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. மாற்றமாக ‘சூனியம் செய்யப்பட்டவர்’, ‘நோயாளி’ என்ற கருத்திலல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கலாம்.

ஆரம்பத்தில் நாம் பார்த்த ஹதீஸின் பிரகாரம் நபியவர்களுக்கு சூனியத்தினால் உண்டான பாதிப்பு என்னவெனில் ஒன்றை செய்ததாக நபியவர்கள் நினைக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஓன்றை செய்யவில்லை என்று அவர்கள் நினைக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்திருக்கிறார்கள். இந்த நிலையைக் காபிர்கள் விமரிசித்ததாகக் குர்ஆன் கூறவில்லை. நபியவர்கள் காட்டிய அற்புதங்களை வைத்தே அவர்கள் நபியவர்களைமஸ்ஹுர் சூனியவயப்பட்டவர் என்று சொன்னார்கள் இதையே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஆகவே நபியவர்களுக்கு நடந்ததும், காபிர்கள் சொன்னதும் வெவ்வேறாகும். எனவே இந்த ஹதீஸ் அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று கூறமுடியாது.  இந்த ஹதீஸில் எவ்வித முரண்பாடுகளுமில்லை என்பதால்தான் ஹதீஸ் கலை வல்லுனர்களான இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் ஆகியோர் தமது கிரந்தங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள். இதுதான் இந்த ஹதீஸ் பற்றி வைக்கப்படுகின்ற விமரிசனத்திற்கான எமது சுருக்க பதில்.

7 Responses to “நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.”

  1. ziyak says:

    சலாம் அலைக்கும்

    முடிகள், சீப்பு ஆகியவற்றில் சூனியம் செய்து அவற்றை ஒர் ஆண் பேரீத்த மரத்தின் பாலைக்குள் வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
    இந்த இடத்திலே முடிகள், சீப்பு என்பவட்ரின் மூலம் ஒருவருக்கு தீங்கு செய்யலாம் என்ரு உல்லது இதைப்பட்ரி விலக்கம் தரவும் இது தவ்ஹீதுக்கு எதிரான வாதமாக தெரிகிரது

    • mujahidsrilanki says:

      அவ்வாறு வராது விட்டால்தான் அது தவ்ஹீதிற்கெதிரான வாதமாக இருக்கும். மறாக முடி சீப்பு போன்ற பொருட்களை வைத்து சூனியம் செய்வது என்பது இருக்கிறதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க இந்த நவீனகாலத்தில் கஷ்டமான ஒன்றல்ல ஒவ்வொருவரும் பயன்படுத்திய பொருள்களில் அவரது தொடர்புகள் தங்கியிருக்கின்றன . ஒரு வரை அடையாளங்காண அது பெரும் உதவியாக இருக்கும் இந்த அடையாளத்தை இந்தப் பொருளே அவரின் மீது செய்தான தாக்கம் செலுத்துவதற்கான ஊடகமாக இருக்கிறது.மேலதிக விளக்கத்திற்காக ஏற்கனவே நான் பதிவு செய்த கட்டுரையின் ஒரு பகுதியை மறுபடியும் பதிவு செய்கிறேன்

      6. சூனியம் எவ்வாறு சாத்தியமாகும்?

      சூனியம் எவ்வாறு சாத்தியமாகும் என நாம் நினைக்கலாம். மனிதனைச் சுற்றி காந்த அலையொன்று இருப்பதை தற்போதுதான் விஞ்ஞானம் கண்டுபிடித்து வருகின்றது. மனிதன் இயங்கவேண்டுமெனில் இரத்தமும் நீரும் சரிவிகிதத்தில் மாறிக்கொண்டிருக்க வேண்டும். நஞ்சு குடித்த ஒருவருக்கு நன்றாக தண்ணீர் கொடுப்பார்கள். சிலருக்கு வைரசுகள் மூளைக்குச் சென்றுவிட்டால் முள்ளந்தண்டிலிருந்து நீரை எடுப்பார்கள் அதிசயிக்குமளவுக்கு நீர் வந்திருப்பதைப்பார்க்கலாம். தலையிலோ உடம்பிலோ இரத்தம் குத்தியெடுக்கும் மருத்துவத்தை நபியவர்கள் செய்துள்ளார்கள். இதற்கு ஹிஜாமா எனப்படும். சர்வதேச சுகாதர தாபனமும் இதை அனுமதித்துள்ளது. அசுத்தமான இரத்தம் உடம்பிலிருந்து வெளியேறுவதனால் பல நோய்கள் குணமாகின்றன. மனித உடலில் காணப்படும் இரத்தமும் நீரும் வெளியிலுள்ள காந்த சக்தியால் தாக்குமுறும் இயல்பு கொண்டவை.

      ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒத்த வயதையுடைய இருவர் கடைக்குச் சென்று ஒரு சட்டை பார்க்கிறார்கள். ஒருவருக்கு அது பிடிக்க அடுத்தவருக்கு அது பிடிக்காமல் போகின்றது. காரணம் என்னவெனில் ஆளுக்கேட்ப கவரும் தன்மையில் காணப்படும் மாறுதல்களேயாகும். பாதையில் நாம் செல்லும் போது ஒருவரைக்கண்டால் அவரைக்கண்டதுமே அவர் மீது நமக்கு வெறுப்பேற்பட்டு விடுகின்றது. இதற்கு முன்னர் அந்நபருடன் எந்தத் தொடர்புமே நமக்கு இருந்திருக்காது. ஆனாலும் அவர் மீது நமக்கு வெறுப்பேற்பட்டு விடுகின்றது. நமைச் சூழவுள்ளகாந்த அலைகளே இகற்குக் காரணமாகின்றன. மூவர் ஓரிடத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு நபரைப்பற்றிப் பேச முற்படும் போதே அந்நபர் அவ்விடத்துக்குப் பிரசன்னமாகின்றார். இது எப்படி நிகழ்ந்ததெனில் அவர் புறப்படும் போதே அவர்கள் அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள் காந்த அலைகளின் பறிமாற்றத்தால் அவரைப்பற்றிய பேச்சு அவர்களிடத்தில் உண்டாகின்றது. இதைத்தான்“Telepathy” என அழைப்பார்கள்.

      ஆக நம்மைச்சூழ ஓரலை வட்டத்தை அல்லாஹ் வைத்துள்ளான் ஆகையால்தான் உண்மையாக சூனியம் செய்யும் எவனும் சூனியம் செய்யப்படும் நபர் பாவித்த ஆடைஇ அவரின் முடிஇ நகம் போன்றவற்றை எடுத்து வரச்சொல்கின்றான். நபியவர்களுக்கும் இவ்வகையில்தான் சூனியம் செய்யப்பட்டது. ஒருவரின் சட்டையை வைத்து இது யாருடையது என்பதை இன்றைக்கு இலகுவாய்க் கண்டுபிடித்திடலாம். இதனடிப்படையிலேயே மோப்ப நாய்கள் மூலம் தடயங்களை வைத்து ஆட்களை அடையாளம் காண்கிறார்கள். ஆரம்பகாலங்களில் இதை நம்பமுடியாது போனாலும் இன்றைக்கு இது மிகச்சுலபமாகிடடது. இதை நாம் சைதானுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதைப்பற்றிய அறிவு அவனுக்கு எப்போதோ தெரிந்திருக்கின்றது. ஒருவனுக்குப்பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமெனில் அவனிடமுள்ள பொருளொன்று அதற்கு அவசியமாகின்றது. சூனியக்காரன்இ சைதான்இ சூனியம் செய்யப்பயன்படும் பொருள்இ சூனியம் செய்யப்படும் நபர் ஆகிய நான்கு அம்சங்களில்தான் சூனியம் தங்கியுள்ளது. தன்னை வணங்கும் சைதானிய அடியார்களுக்கு அவனின் உதவியின் வடிவமே இது. அந்த உதவிக்கான சைத்தானியக் கல்வியே சூனியம். ஒருவேடிக்கை என்னவெனில் சைதான் தனக்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும் தான் சொல்வதை அவன் செய்வதாகவும் கூறி சிலர் மக்களை வழிகெடுக்கின்றனர். ஒரேயொரு ஸ{ஜூதைக் கூட ஆதம் நபிக்கு செய்ய விரும்பாத அவன் எவ்வாறு ஒரு மனிதனுக்கு வசப்படுவான் என்பதுதான். சைதான் மனிதனுக்கு அடிபணியமாட்டான். அல்லாஹ்வுக்கு மட்டுமே அவன் வசப்படுவான். பத்ர் போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த போது இங்கு வந்த சைதான் “நீங்கள் காணாதவற்றை நான் காண்கின்றேன்” என்று கூறி விலகிக்கொண்டான். அதாவது மலக்குமார் இறங்கி வருவதை அவன் கண்டதாலேயே இவ்வாறு விலகிச்சென்றான். இதை அல்லாஹ் சூறா அன்பாலிலே சுட்டிக்காட்டுகின்றான்.

      • Y.L.jinan says:

        சூனியத்தால், இப்படி நடக்கலாம், அப்படி நடக்கலாம் என குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமளித்தால், சில தவ்ஹீத் சகோதரர்கள், அது எப்படி? அலாஹ்வினால்தானே எல்லாம் நடக்கின்றது. இங்கு சூனியத்தை அல்லாஹ்விற்கு நிகராக்கி விட்டீர்களே! நீங்கள் இணை வைத்துவிடீர்களே! உங்களின் பின்னால் தொழுவது கூடாது எனக் கூறி இப்படி கூறுபவர்களின் பின்னால் நின்று தொழ மறுக்கின்றார்கள்.
        இப்படி மறுக்கும் சகோதரர்கள், சூனியத்தால், கணவன் மனைவியை பிரிக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள்.
        இவர்கள், கணவன் மனைவியை பிரிக்கலாம் என்ற இந்த விடயத்தை அல்லாஹ்வை மறந்துதான் சொல்கின்றார்களா? என நாங்கள் அவர்களிடம் கேட்கின்றோம்.
        அல்லாஹ்வின் நாட்டப்படிதான் சகல விதமான, நன்மைகளும் தீமைகளும் நடைபெறுகின்றது என்பது ஈமானின் ஆறாவது அம்சமாகும். ஒரு முஸ்லிம் இதை நம்பித்தான் ஆகவேண்டும்.
        அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எந்தத் தீமையும் நடக்காது என்பது ஒரு முஸ்லிம் கட்டாயமாகத் தெரிந்திருத்தல் வேண்டும்.
        சூனியமும் அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தாது.
        பின்வரும் குர்ஆன் வசனம் இதை உண்மைப்படுத்துகிறது.
        எனினும் அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; (2:102)
        எனவே அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு சூனியத்தால் ——- போன்ற காரியங்களை நிகழ்த்தலாம் எனக் கூறுவது ஷிர்க் ஆகாது.

  2. ziyak says:

    நபியவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள். ஓன்றை செய்ததாக நபியவர்கள் நினைப்பார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. நபியவர்ளின் நிலை இவ்வாறே இருந்தது.
    இவ்வாசகத்தை பார்க்கும் போது இக்கால கட்டத்தில் வந்த வஹீயின் நிலை என்ன? என்ர என்னம் வருகிரது பதில் தரவும்

    • mujahidsrilanki says:

      தயவு செய்து கட்டுரையை முழுமையாகப் படிக்கவும் தங்களுக்கு ஏற்படும் ஐயத்தை நானே எழுப்பி பதிலும் எழுதியுள்ளேன்.

  3. k.M Seyed Ibrahim says:

    Vilakkam Arumaiyaga Irunthadhu

  4. ilyas says:

    தனக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஒரு நபா் கூறினால் அவருக்கு என்ன நிவாரணம் அல்லது பதில் ?

Derek MacKenzie Womens Jersey