நபிவழியில் நம் ஹஜ் . 4

Post by mujahidsrilanki 24 October 2010 கட்டுரைகள்

2.ஒன்பதாம் நாள் (அரபாவுடைய நாள்) :-

1.சுபஹ்த் தொழுகையைத் தொழுது விட்டு அதிகாலை சூரிய உதயத்துக்குப் பின் தல்பியா சொல்லியவாறு அரபாவை நோக்கி புறப்பட வேண்டும்.

2.முற்பகலில்  குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட வேண்டும்;. அப்பிரசங்கத்தில் இஸ்லாமிய சகோதரத்துவத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்துவதோடு அரபா தினத்தின் சிறப்பையும், அன்றைய நாளில் ஹாஜிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் தெளிவுபடுத்தி உபதேசிக்கவேண்டும்.

3.பின்னர் ஒரு பாங்கு இரண்டு இகாமத்துக்கள் கூறி ழுஹரை இரண்டு ரக்அத்களாகவும், அஸரை இரண்டு ரக்அத்களாகவும் சேர்த்து சுருக்கி ஜமாத்தாக தொழுதுகொள்;ள வேண்டும்.

4.இந்த நேரத்தில் முக்கியமாக நாம் அரபாவின் எல்லைக்குள் நுழைந்து விட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். குறிக்கப்பட்ட அரபாவின் எல்லைக்குள் எங்கும் இருந்துகொள்ளலாம். (சந்தர்ப்பம் கிடைக்குமாயின் ரஹ்மா மலைக்குப் பக்கத்தில் இருந்துகொள்ளலாம்.) அம்மலைக்கு ஏறுவது நபி வழிக்கு உட்பட்டதல்ல!

5.ஹஜ் என்றால் அரபாதான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகையால் அத்தினத்தில் நாம் கிப்லாவை முன்நோக்கி அதிகமதிகம் திக்ருகளை ஓதிக்கொள்வதோடு, எமக்காகவும், எமது தாய்தந்தயருக்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும், மனைவி மக்களுக்காகவும், உறவினர்களுக்காகவும், ஊரவர்களுக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் இம்மை மறுமை நற்பலனை கேட்டுப் பிரார்த்திக்க வேண்டும். அத்துடன் எமது பாவங்களை உணர்ந்து பச்சாதாபப்பட்டு அல்லாஹ்விடம் மனறாடி மன்னிப்புக் கேற்கவேண்டும். ஒருவர் பிரார்த்திக்க மற்றவர்கள் ஆமீன் கூறுவது நபி வழிக்கு முரணானதாகும். மேலும் நபி (ஸல்) அவர்கள் மீது  ஸலவாத்து கூறிக் கொள்ளவேண்டும். நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது எமது கைகளை உயர்த்தி மௌனமாகவும், பணிவாகவும் பிரார்த்திக்க வேண்டும்.

6.சூரியன் நன்றாக மறையும் வரை அரபாவில் தங்கி இருந்து விட்டுபின்னர் மறைந்ததும் மஃரிபை தொழாமல் அரபாவை விட்டும் வெளியாகி முஸ்தலிபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது அவசரமின்றியும் அமைதியாகவும் செல்வது நபிவழியாகும் முஸ்தலிபாவைச் சென்றடைந்ததும் அங்கு ஒரு பாங்கு இரண்டு இகாமத்துக்கள் கூறி மஃரிபை மூன்று ரக்அத்கள் ஆகவும், இஷாவை இரண்டு ரக்அத்கள் ஆகவும் சேர்த்து சுருக்கித் தொழுதுகொள்ள வேண்டும். பின்னர் பஜ்ர் வரை அங்கே படுத்துறங்க வேண்டும். பலஹீனமானவர்களுக்கும், பெண்களுக்கும் நடு இரவிலேயே மினாவுக்கு செல்ல அனுமதி உண்டு.

7.முஸ்தலிபாவில் சுபஹை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுது விட்டு மஷ்அருல் ஹராம் என்ற இடத்தை அடைந்து அங்கு கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை திக்ரு செய்ய வேண்டும் கேட்டுப் பிரார்த்திக்க வேண்டும். அத்துடன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ வேண்டும்.

One Response to “நபிவழியில் நம் ஹஜ் . 4”

  1. […] நபிவழியில் நம் ஹஜ் . 4 […]

Derek MacKenzie Womens Jersey