நபிவழியில் நம் ஹஜ்.7

Post by mujahidsrilanki 25 October 2010 கட்டுரைகள்

பின்னர் மக்கா சென்று மக்காவைவிட்டு வெளிப்பட்டு செல்வதற்கு முன் கடைசி தவாபான தவாபுல் வதாஃ செய்ய வேண்டும். மாதவிடாய போன்றவைகள்; ஏற்பட்டுள்ள பெண்கள் இத் தவாபை செய்ய வேண்டிய அவசியமில்லை. இத்துடன் ஹஜ்ஜின் எல்லாக் கடமைகளும் பூர்த்தியாகி விட்டது. அல்ஹம்துலில்லா!

இஹ்ராமின் போது கடைபிடிக்கப்பட வேண்டியவை :-

1. இஹ்ராம் கட்டிய ஆண்கள் சட்டையோ, தலைப்பாகையோ, தொப்பியோ, அணியக்கூடாது. (ஆனால் வெயில் படாமல் குடை போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளலாம்.) கால் சட்டையும் அணியக்கூடாது. மஞ்சல் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளையும் அணியக்கூடாது. செருப்பு கிடைக்கா விட்டால் தவிர காலுறையும் அணியக்கூடாது. காலுறை அணிவதாயின் கரண்டைக்குக் கீழே இருக்குமாறு வெட்டிவிட வேண்டும்.

2. இஹ்ராம் கட்டிய பெண்கள் தனது முகத்தையும், மணிக்கட்டு வரை கைகளையும் மறைக்கக் கூடாது.

3. இஹ்ராம் கட்டும் போது குளித்துவிட்டு நறுமணம் பூசிக்கொள்ள அனுமதியுண்டு. ஆனால் இஹ்ராம் கட்டிய பின்னர் நறுமணம் பூசவோ, நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தவோ கூடாது.

4. இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக்கூடாது, பிறருக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பாளியாக இருக்கவும் கூடாது.

5. கணவன் மனைவியாக ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் நாற்களில் உடலுறவில் ஈடுபடவோ, இச்சையை தூண்டும் காரியங்களில் ஈடுபடவோ கூடாது. கெட்டவார்த்தைகள் பேசுவது கூடாது. சண்டை சச்சரவு செய்துகொள்வது கூடாது. மேலும் வீணான விவாதங்களில் ஈடுபடவும் கூடாது.

6. இஹ்ராம் கட்டியவர் எந்த உயிர் பிராணியையும் கொல்லக் கூடாது. வேட்டையாடவும் கூடாது. தனக்காக வேட்டையாடுமாறு மற்றவர்களை தூண்டவும் கூடாது. ஆனால் கடல் வேட்டையாடுவதற்கு அனுமதி உண்டு.

7. இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜுடைய கடமைகளை செய்து முடிக்கும் வரை முடிகளை நீக்கவோ, நகங்களை வெட்டவோ கூடாது. தவிர்க்க இயலாத காரணங்களினால் முடியை வெட்ட வேண்டி வந்தால் அதற்குப் பரிகாரமாக மூன்று நாற்கள் நோன்பு நோற்க வேண்டும். அல்லது  ஆறு ஏழைகளுக்கு உணவு  கொடுக்க வேண்டும். அல்லது ஒரு ஆட்டை குர்பான் கொடுக்க வேண்டும்.

Comments are closed.

Derek MacKenzie Womens Jersey