நபிவழியில் நம் ஹஜ்.8

Post by mujahidsrilanki 25 October 2010 கட்டுரைகள்

ஹாஜிகளால் நடைபெறும் சில முக்கியமான தவறுகள்

ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்கிறார்கள். அத்தவறுகளிலிருந்து அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவைகள் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றன.

1. இஹ்ராம் கட்டிய பின் தல்பியா சொல்லாது மௌனமாக இருத்தல்.

2. தல்பியாவை ஒருவர் சொல்ல மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டமாகச் சொல்லல். தல்பியாவை தனித்தனியாக ஒவ்வொருவரும் சொல்லவேண்டும். ஆண்கள் சப்தமிட்டுச் சொல்ல வேண்டும்.

3. கஃபாவைக் காணும் போது அல்லது அதற்குள் நுழையும் போது குறிப்பான சில திக்ர், துஆக்களை ஓதுதல்.

4. தவாப் செய்யும் போது கூட்டமாக அல்லது தனியாக சத்தத்தை உயர்த்தி பிரார்த்தித்தல்.

5. ஸபா மர்வா மலையில் இரண்டு பச்சை அடையாளங்களுக்குமிடையில் பெண்கள் ஓடுதல்.

6. ஸபாவிலிருந்து மர்வாவுக்கும் மர்வாவிலிருந்து ஸபாவுக்கும் நடப்பதை ஒன்றாகக் கணித்தல்.

7. அரபாவில் பிரார்த்திக்கும் போது கிப்லாவை முன்னோக்காமலும், கைகளை உயர்த்தாமலும் பிரார்த்தித்தல்.

8. அரபாவில் ஒருவர் சத்தத்தை உயர்த்தி பிரார்த்திக்;க மற்றவர்கள் அதற்கு ஆமீன் கூறிவிட்டு நாங்கள் பிரார்த்தித்துவிட்டோம் என்று எண்ணிக் கொள்ளல்.

9. அரபாவில் இருக்கும் ரஹ்மா மலைக்கு வணக்கம் என்ற எண்ணத்துடன் ஏறுதல், ஏற முயற்சித்தல்.

10. மினாவில் எறிவதற்குறிய கற்களை முஸ்தலிபாவில் எடுத்துக்கொள்வது சுன்னத்து என்று நினைத்தல், எறிவதற்கு முன்னர் கற்களைக் கழுவுதல், எல்லாக் கற்களையும் ஒரே தடவையில் எறிதல்.

11. முதலாம் இரண்டாம் இடங்களில் கல்லெறிந்த பின் பிரார்த்திக்காமல் சென்றுவிடுதல்.

12. தனக்குச் சக்தியிருந்தும் கற்களை தான் எறியாமல் பிறரை எறியுமாறு பணித்தல்.

13. பெரிய கற்கள், பாதணிகள், போத்தல்கள் போன்றவைகளை எறிதல்.

14. வயது பூர்த்தியாகாத, குறைகள் உள்ள பிராணிகளை அறுத்துப் பழியிடல்.

15. பத்தாம் நாளன்று ஹாஜிகள் தமது தாடியை சவரம் செய்தல் அல்லது வெட்டுதல். பொதுவாக தாடியை பூரணமாக வைப்பது கடமையாகும்.

16. ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட மற்றவர்களை நோவினை செய்யும் அளவுக்கு; முண்டியடித்துக்கொண்டு செல்லல்.

17. கஃபாவின் ஒவ்வொரு  மூலைகளையும் சுவர்களையும் வாய்வைத்து முத்தமிடல், அல்லது தொட்டு முத்தமிடல்.

18. ருக்னுல் யமானியை முத்தமிடல்.

19. கஃபாவை தவாப் செய்யும் போது ஹிஜ்ர்( இஸ்மாயில்) எல்லைக்குள்லால் வருதல்.

20. சைகை மூலம் கஃபாவுக்கு பிரியாவிடை சொல்லல், மேலும் கடைசித் தவாப் செய்த பின்னும் மக்காவில் தங்குதல்.

21. நபிகளார்அவர்களின் கப்ரை தரிசிக்கச் செல்வதை ஹஜ் வணக்கத்தில் ஒன்று எனக் கருதுதல்.

இவைகள் இன்றைய ஹாஜிமார்களால் தெரிந்தோ, தெரியாமலோ நடை பெறும் தவறுகளாகும். எனவே இவைகளை தவிர்ந்து நபிகள் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியைப் பின்பற்றி சிறந்த முறையில், அல்லாஹ் ஒப்புக்கொள்ளக் கூடிய வகையில் இக்கடமையை நிறைவேற்றுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புறிவானாக!

Comments are closed.

Derek MacKenzie Womens Jersey