நபிவழியில் நம் ஹஜ்.6

Post by mujahidsrilanki 25 October 2010 கட்டுரைகள்

4. பதினோராம் நாள்

மினாவில் தங்கும் 11, 12, 13 ஆகிய நாற்கள் சாப்பிட்டு, குடித்து, அல்லாஹ்வை தியானிக்க வேண்டிய நாற்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே, நாம் அந்நாற்களை வீணாக்கி விடாமல் அல்லாஹ்வைப் புகழ்ந்து, தொழுது, தியானித்து, இயன்றவறை குர்ஆனையும் ஓதிக்கொண்டிருப்பதோடு, இம்மை, மறுமையின் தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தித்தவர்களாகவும், அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சி பாவ மன்னிப்பு கேற்கக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.

பதினொராம் நாள் கல்லெறியும் இடத்திற்குச் சென்று நன்பகல் சூரியன் உச்சிக்கு வந்து சாய்ந்தவுடன் (ஜம்ரதுல் ஊலா)  கல்லெறியும் (முதலாவது) இடத்தில் ஏழு சிறிய கற்களை எறியவேண்டும். ஒவ்வொறு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறவேண்டும். அத்துடன் சற்று முன்னேறிச் சென்று கிப்லாவை முன்னோக்கி நின்று தமது கைகளை உயர்த்தி துஅச் செய்யவேண்டும்.

பின்னர் (ஜம்ரதுல் வுஸ்தா இரண்டாவது) கல்லெறியும் இடத்தில் ஏழு சிறிய கற்களை எறியவேண்டும். ஒவ்வொறு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறவேண்டும். பின்னர் இடப்புறமாக சற்று நடந்து சென்று கிப்லாவை முன்னோக்கி நின்று தமது கைகளை உயர்த்தி துஅச் செய்யவேண்டும்.

பின்னர் (ஜம்ரதுல் அகபா மூன்றாவது) கல்லெறியும் இடத்தில் ஏழு சிறிய கற்களை எறியவேண்டும். ஒவ்வொறு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறவேண்டும். ஆனால் அங்கு துஆச் செய்ய நிற்காமல் சென்றுவிடவேண்டும்.

குறித்த நேரத்தில் கல்லெறிய முடியாவிட்டால் மற்றைய நேரங்களில் கல்லெறிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. எனினும் குறித்த நேரத்தில் எறிவதற்குண்டான முயற்சிகள் செய்வதே நபி வழியாகும். மேலும், அன்றைய இரவையும் மினாவிலேயே கழிக்கவேண்டும்.

5. பன்னிரண்டாம் நாள்

அன்றைய நாளையும் அல்லாஹ்வைப் புகழுதல், தொழுதல், திக்ரு செய்தல், குர்ஆன் ஓதுதல், பிரார்த்தித்தல், பாவ மன்னிப்புத் தேடுதல் போன்ற காரியங்களில் கழிக்கவேண்டும். அத்துடன் முதலாம் நாள் செய்தது பொன்று இன்றும் கல்லெறியும் இடத்துக்குச் சென்று மூன்று ஜமராக்களுக்கும் கல்லெறிய வேண்டும். துஅச் செய்யவேண்டும்.

பன்னிரண்டாம் நாள் கல்லெறிந்த பின் தனது வணக்கத்தை முடித்துக்கொள்ள விரும்பும் ஹாஜிகள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. அவர்கள் சூரியன் மறையும் முன் மினாவை விட்டும் வெளிப்பட்டு மக்காவுக்குச் செல்லவேண்டும். உடனடியாக ஊர் செல்ல நாடுவோர் தாவாபுல் வதாஃ என்னும் விடைபெரும் தவாபை செய்து விட்டு வெளியேறிச் சென்று விடலாம்.

பதிமூன்றாம் நாளும் கல்லெறியும் ஹாஜிகள் அன்றைய இரவும் மினாவிலே தங்கியிருந்து பதிமூன்றாம் நாளும் சூரியன் உச்சிக்கு வந்து சாய்ந்தவுடன் மூன்று இடங்களுக்கும் கல்லெறிந்து விட்டு செல்ல வேண்டும். அவர்கள் மீதும் எவ்வித குற்றமும் இல்லை.

6. அப்தஹில் தங்குதல்

13ம் நாளன்று மினாவில் கல்லெறிந்து விட்டு மக்காவுக்குச் செல்லும் வழியில் அப்தஹ் எனும் இடத்தில் ழுஹரையும் அஸரையும் மஃரிபையும் இஷாவையும் சுருக்கி உரிய நேரத்தில் தொழுது விட்டு அங்கே சிறிது நேரம் தங்கிச் செல்வது நபி வழியாகும்.

Comments are closed.

Derek MacKenzie Womens Jersey