நபிவழியில் நம் ஹஜ்.2

Post by mujahidsrilanki 18 October 2010 கட்டுரைகள்

உம்ரா செய்யும் முறை :-

1-உம்ரா செய்யும் ஒருவர் தனது நகங்களை வெட்டி, மர்மஸ்தான, அக்குள் முடிகளை எல்லாம் அகற்றி, குளித்து தன்னைத் சுத்தமாக்கிக் கொண்டு, நறுமணங்கள் பூசி, தலைக்கும் தாடிக்கும் எண்ணை தடவிய பின் இஹ்ராம் ஆடையை அணிந்து மீகாத் எல்லையை அடைந்ததும் லப்பைக்க உம்ரதன் (உம்ராவை நாடி அல்லாஹ்வே உன்னிடம் (நான்) வந்துவிட்டேன்.) என்று கூறி நிய்யத் செய்து கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து ஹரம் எல்லையைச் சென்றடையும் வரையில் ஆண்கள் சப்தத்தை உயர்த்தியும் பெண்கள் தங்களுக்குள் மட்டும் கேட்கும் வகையிலும் பின் வரும் தல்பியாவை சொல்ல வேண்டும்.

« لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ »

(லப்பைக் அல்லாஹ{ம்ம லப்பைக் லப்பைக் லா ஷரீக லக லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க் லா ஷரீக்க லக்)

பொருள் : அல்லாஹ்வே! உனக்கு நான் முற்றாக செவிசாய்க்கின்றேன். இதோ நான் ஆஜராகி விட்டேன். உனக்கு எந்தவித இணையும் கிடையாது. நிச்சயமாக புகழ், அருள் அனைத்தும் உனக்கே உரியவை. ஆட்சி அதிகாரம் அனைத்தும் உனக்கே சொந்தமானவை.

2-பின்னர் மக்காவில் மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலை அடைந்ததும் பொதுவாக மஸ்ஜிதுகளில் நுழையும் போது ஓதும் துஆவாகிய “அல்லாஹ{ம்மப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக”; (அல்லாஹ்வே! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக!) என்று ஓதிய வண்ணம் வலது காலை முன்வைத்து கஃபதுல்லாவுக்குள் நுழைந்து முதலில் நாம் தவாபை ஆரம்பிக்க வேண்டும். (கஃபாவை ஏழு தடவைகள் சுற்றுவது ஒரு தவாபாகும்) தவாபை ஆரம்பிக்க ஹஜருல் அஸ்வத் கல்லின் பக்கம் சென்று அதைத் தொட்டு முத்தமிடவேண்டும். முடியாவிட்டால் அதன் பக்கம் திரும்பி கையால் சைகை செய்துகொண்டு அல்லாஹ{ அக்பர் (கையால் சைகை செய்தவர் தனது கையை முத்தமிடவேண்டிய அவசியமில்லை.) என்று கூறியவாறு தவாபை ஆரம்பிக்கவேண்டும்.

முதலாவதாக செய்யும் தவாபான தவாபுல் குதூமை செய்யும் போது பின்வரும் விடயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, தவாப் முடியும் வரை ஆண்கள் இல்திபாஃ எனும் வகையில் தனது இஹ்ராம் ஆடையை இடது கையின் தோற் பகுதியை மூடி வலது கையின் தோற் பகுதியை திறந்தவாரு அமையுமாறு அணிந்து கொள்ள வேண்டும். முதலாவது மூன்று சுற்றிலும் ஆண்கள் உடம்பு குழுங்கும் அளவுக்கு ஓடவேண்டும்.

கஃபாவை எமது இடது புறமாக வைத்து தவாபை ஆரம்பித்து சுற்றி வரும் போது ருக்னுல் யமானி எனும் மூளையை அடைந்துவிட்டால் அதனைத் தொடவேண்டும். (முத்தமிடக் கூடாது) நெருக்கத்தின் காரணத்தால் தொட முடியாது போனால் குற்றமில்லை. யமானி மூளையிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல்லு பதிக்கப் பட்டிருக்கும் மூளை வறையில் பின்வரும் துஆவை ஓதிக் கொள்ளவேண்டும்.

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

(ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனத்தன் வபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்.)

பொருள் : எங்கள் அல்லாஹ்வே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! நரக வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!

ஹஜருல் அஸ்வத் கல்லை அடைந்ததும் அதை தொட்டு முத்தமிட வேண்டும். முடியாது போனால் கையால் சைகை செய்து அல்லாஹ{ அக்பர் என்று தக்பீர் கூறியவாறு அடுத்த சுற்றை ஆரம்பிக்கவேண்டும். யமானி மூளையை அடையும் வரை அனுமதிக்கப்பட்ட துஆக்கள், திக்ருகளை ஓதுவதோடு இன்னும் எமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திக்கலாம்.

தவாபை முடித்துக் கொண்டதும் முன்பு போலவே ஆண்கள் வலது கையின் தோற் பகுதியையும் மூடி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஏழு முறை கஃபாவை சுற்றி தவாப் செய்து முடிந்து விட்டால் மகாமு இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரக்அத்கள் சுன்னத் தொழ வேண்டும். அவ்விடத்தில் தொழ சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் கஃபாவின் எந்த இடத்திலும் தொழலாம். அத்தொழுகையில் முதலாவது ரக்அத்தில் பாதிஹா சூராவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் என்ற சூராவையும்  இரண்டாம் ரக்அத்தில் பாதிஹா சூராவுடன் குல் ஹ{வல்லாஹ{ அஹத் எனும் சூராவையும் ஓதவேண்டும். இதுவே நபி வழியாகும்.

பின்னர்  முடியுமானால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டும். (முடியாவிட்டால் குற்றமில்லை.)

3-பின்னர் ஸபா மலைக்குச் சென்று அம் மலையை நெருங்கும் போது

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ

(இன்னஸ் ஸபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்)

எனும் குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து கஃபாவை முன் நோக்கியவாறு ஸபாவில் நின்றுகொண்டு பின்வரும் துஆவை மூன்று முறை ஓத வேண்டும்.

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كَلِّ شَىْءٍ قَدِيرٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ

وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ

(லாஇலாஹ இல்லல்லாஹ{ வஹ்தஹ{ லாஷரீக லஹ{ லஹ{ல் முல்கு வலஹ{ல் ஹம்து வஹ{வ அலா குல்லி ஐஷஇpன் கதீர் லா இலாஹ இல்லல்லாஹ{ வஹ்தஹ{ அன்ஜஸ வஃதஹ{ வனஸர அப்தஹ{ வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்.;)

பொருள் : வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை. அவனுக்கே புகழ், ஆட்சி அனைத்தும் சொந்தம். அவன் எல்லாவற்றின் மீதும் சக்தியுடையவன். அவன் வாக்கை நிறைவேற்றிவிட்டான். தனது அடியானுக்கு உதவி செய்தான். அவனே பகைவர்களை ஒழித்தான்.

ஒவ்வொரு தடவைக்குப் பின்னரும் எமக்குத் தேவையானவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திக்கலாம். பின்னர் ஸபாவிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். நடக்கும் போது இடையில் பச்சை அடையாலம் வந்ததும் அப்பகுதியில் ஆண்கள் மெதுவாக உடம்பு குழுங்குமளவுக்கு ஓட வேண்டும். அடுத்த பச்சை அடையாளத்தை அடைந்ததும் சாதாரணமாக நடந்து சென்று மர்வாவை அடைய வேண்டும். இவ்வாறு ஸயீ செய்யும் போது அனுமதிக்கப்பட்ட திக்ருகளை ஓததல், குர்ஆன் குர்ஆன் ஓததல், இன்னும் தனது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தித்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

மர்வாவை அடைந்ததும் அம் மலையில் நின்று கஃபாவை முன்நோக்கியவாறு ஸபாவில் ஓதிய அதே துஅவை மூன்று முறை ஓத வேண்டும். ஒவ்வொரு தடவைக்குப் பின்னரும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு அப்படியே ஸபாவை நோக்கி நடக்க வேண்டும். இவ்வாறு ஸபா மர்வாவுக்கிடையே ஏழு முறை நடக்க வேண்டும். இறுதியாக மர்வாவை அடைந்தது விட்டால் ஸஈ செய்வது முடிந்து வடும். அத்துடன் அங்கு துஆச் செய்துவிட்டு,

4.ஆண்கள் தமது தலைமுடியை  பூரணமாக குறைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களது தலை முடியை சற்று கத்தரித்துக்கொள்ள வேண்டும். (ஹஜ் அல்லாத காலங்களின் உம்ராவின் போது ஆண்கள் தலை முடியை குறைப்பதைவிட சிரைப்பதே ஏற்றதாகும்.) இத்துடன் உம்ராவின் சகல கடமைகளும் முடிந்துவிடும். இஹ்ராமைக் கலைந்து எமது வழமையான ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

Comments are closed.

Derek MacKenzie Womens Jersey