நபிவிழியில நம் ஹஜ். 5

Post by mujahidsrilanki 24 October 2010 கட்டுரைகள்

3. பத்தாம் நாள்

1. மஷ்அருல் ஹராம் நன்றாக வெளிக்கும் வரை அந்நிலையிலே இருந்துவிட்டு ஹாஜிகள் அனைவரும்  தல்பியாவை முழங்கியவாறு மினாவை நோக்கிப் புறப்படவேண்டும். மினாவில் ஜம்ரதுல் அகபாவில் எறிவதற்கான ஏழு சிறு கற்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முஸ்தலிபாவிலோ அல்லது மினாவிலோ எடுத்துக்கொள்ளலாம். மினாவில் எடுப்பதே சிறந்ததாகும். மினாவை வந்தடைந்த ஹாஜிகள் அனைவரும் ஜம்ரதுல் அகபாஎன்ற கல்லெறியுமிடத்துக்குச் சென்று ஏழு கற்களையும் தக்பீர் (அல்லாஹ{ அக்பர்) கூறியவாறு  எறிய வேண்டும். கல்லெறியும் போது நெருங்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ கூச்சல் போடவோ கூடாது.

2. பின்னர் குர்பானி அறுத்து அதிலிருந்து தாங்களும் புசித்து ஏழைகளுக்கும் கொடுக்கவேண்டும். (இப்ராத் முறையில் ஹஜ் செய்தவர்களுக்கு குர்பானிஅறுப்பது கிடையாது.)

3. அடுத்ததாக ஆண்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள வேண்டும். அல்லது பூரணமாக குறைத்துக் கொள்ளவேண்டும். (குறைப்பதை விட சிரைப்பதே விரும்பத்தக்க சுன்னாவாகும்.) பெண்கள் சிறிளவு தங்கள் தலை முடியை கத்தரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் இஹ்ராம் உடையை கலைந்து குளித்து சுத்தமாகி எமது வழமையான உடைகளை உடுத்துக்கொள்ளலாம். மேற்கூறப்பட்டவைகளை செய்து முடிப்பதன் மூலம் உடலுறவைத் தவிர இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட ஏனையவைகள் அனைத்தும் ஆகுமாகிவிடும்.

4. பின்னர் மக்கா சென்று கஃபாவை தவாப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது தவாபை
(இபாலா) செய்யவேண்டும். தமத்துஃ முறையில் ஹஜ் செய்தவரும், கிரான் முறையில் நிய்யத்துச் செய்து முன்னர் ஸஈ செய்யாதவரும் ஸஈ செய்யவேண்டும். மேற்கூறப்பட்ட அனைத்துக் கடமைகளையும் பத்ததம் நாளன்றே நிறைவேற்றுவதே மிகச்சிறந்ததாகும் அதுவே நபிவழியாகும்.

மேற்கூறப்பட்ட அனைத்துக் கடமைகளையும் பூரணப்படுத்திவிட்டால் இஹ்ராமின் மூலம் தடுக்கப்பட்டிருந்த அனைத்துக் காரியங்களும் ஆகுமாகிவிடும்.

பத்தாம் நாளுக்குறிய இக்காரியங்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக செய்யவேண்டிய அவசியம் இல்லை. சிலதை முட்படுத்தியும், பிட்படுத்தியும் செய்யலாம்.

ஸம்ஸம் நீரை அறுந்துவதும் முடியுமானவர்கள் பாத்தாம் நாளின் ளுஹர் தொழுகையை மக்காவில் தொழுவதும் நபி வழியாகும்.

பின்னர் மினாவுக்குச் சென்று ஏனைய மூன்று இரவுகளை மினாவில் கழிக்க வேண்டும்.

Comments are closed.

Derek MacKenzie Womens Jersey