நபிவழியில் நம் ஹஜ்.1

Post by mujahidsrilanki 16 October 2010 கட்டுரைகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


ஹஜ் கடமையை நிறைவேற்றும் நாட்கள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. அல்குர்ஆன் சுன்னா அடிப்படையில் தமது ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ள சகோதரர்கள் பல நூற்களையும் குறுற்தகடுகளையும் வாங்கிப் படித்து தங்கள் அமலை முறைப்படி செய்ய முயற்சிக்க வேண்டும். ஏலவே பல புத்தகங்கள் ஹஜ் பற்றி பல அறிஞர்களால் எழுதப்பட்டு விட்டன. அந்த வரிசையில் பஸ்யாலையைச் சேர்ந்த நமது தஃவா சகோதரர்களில் ஒருவரான பைஸர்தீன் அபூ பஜ்ர் அவர்கள் இது சம்பந்தமாக ஒரு சிறு வழிகாட்டல் நூலைத் தொகுத்துள்ளார். அவர் சில வருடங்களுக்கு முன் ஹஜ் செய்வதற்காகப் படித்தவைகளை வைத்தும் ஹஜ்ஜின் போது அவர் கண்ட மார்க்கத்திற்கு முரணான வழிகாட்டல்களைக் கண்டு சரியானதை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் விளைவுமே இந்த நூல். இந்த நூலை  மீள்வாசிப்புச் செய்ய என்னிடத்தில் வந்த போது அவர் முன்னிலையில் சில முக்கிய திருத்தங்கள் அதிகரிப்புகள் மேலதிக விளக்கங்கள் என சில மாற்றங்கள் செய்தேன். மக்களுக்குக்குச் சென்றடையும்போது இளகுவில் புரிந்துகொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கேற்ப அந்த நூல் இளகு நடையிலே இருந்தது. இன்சா அல்லாஹ் அந்த நூலை  அவரது அனுமதியுடன் இங்கே கட்டம் கட்டமாக பதிவு செய்கிறேன்.

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ

“அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்.”(2:96)

எல்லாப் புகளும் வல்லவன் அல்லாஹ்வுக்கே சொந்தம். ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும்இ அவர்களது குடும்பத்தினர்கள் தோழர்கள் மீதும்இ அவரை பின்தொடர்ந்து வாழ்ந்தஇ வாழக்கூடிய எல்லா முஸ்லிங்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக!

அறிமுகம்

இஸ்லாமிய மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ் கடமையாகும். இக்கடமையைச் சரிவரச் செய்து அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்டால் அவர்  கடந்த காலங்களில் செய்த எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டு தூய்மாயாவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் நாம் செய்யும் எல்லா விதமான செயல்களையும் அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த வழியில் மட்டுமே செய்யவேண்டும். ஏனென்றால் அவரிடமே அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆசை வைப்பவருக்கு அழகிய முன்மாதிரி உண்டு என அல்லாஹ் கூறியுள்ளான். அதே போன்று “ஹஜ் கடமையை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த வகையில் புனித ஹஜ் கடமையை எமது வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில்தான் நிறைவேற்ற வேண்டும்.

ஆகவே அல்லாஹ்வின் அருளால் என்னால் முடிந்தவரை நபிகளாரைப் பின்பற்றி ஹஜ் கடமையை நிறைவேற்றிய அனுபவங்களுடன் எல்லா முஸ்லிம்களும் இக்கடமையை பூரணமாக நபி வழியில் நிறைவேற்ற வேண்டும் என்ற தேவை உணர்வுடனும்; இந்தச் சிறு நூலை உங்களிடம் சமர்பிக்கிறேன். ஹஜ் உம்ரா செய்வோர் இதன் மூலம் பயனடைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

அன்புடன்.

முஹம்மத் பைஸர்தீன் அபூ பஜ்ர்

நிய்யத் :-

ஹஜ் கடமைக்குறிய நிய்யத் மூன்று வகைப்படும். தமத்துஃ , கிரான், இப்ராத், இம் மூன்றில் ஏதாவது ஒன்றில் நிய்யத் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றலாம்.

முதல் வகை :- தமத்துஃ

எமக்குறிய மீகாத் எல்லையைச் சென்றடைந்ததும் உம்ராவிற்கு மாத்திரம் லப்பைக்க உம்ரதன் என்று கூறி நிய்யத் செய்து இஹ்ராம் கட்டிக்கொள்ளவேண்டும்.1 பின்னர் மக்கா சென்று உம்ராவை செய்து முடித்ததும் இஹ்ராமை கலைந்து விடலாம். பின்னர் நாம் தங்கியிருக்கும் இடத்திலிருந்தவாரே துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் செய்து ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி1 ஹஜ்ஜுடைய கடமைகளை செய்ய வேண்டும். இந்த முறையில் ஹஜ் செய்பவர் குர்பானியும் கொடுக்கவேண்டும்.

(1.லப்பைக உம்ரதன்….என்ற வார்த்தையை சொல்வதுதான் இஹ்ராம். அந்த வார்த்தை சொல்லும் வேளையில் இஹ்ராமுக்குறிய ஆடையை அணிந்தவர்களாக இருக்கவேண்டும்.)

இரண்டாவது வகை  :- கிரான்

இது மீகாத் எல்லையைச் சென்றடைந்ததும் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்குமாக லப்பைக்க ஹஜ்ஜன் வ உம்ரதன் என்று நிய்யத் செய்து மக்கா சென்று தவாபுல் குதூம் எனும் தவாபை செய்து விட்டு ஸபா மர்வாவுக்கு வந்து ஹஜ்ஜையும் உம்ராவையும் நினைத்தவறாக ஸயீ செய்யவேண்டும். இந்த ஸயீயை ஹஜ்ஜுடைய தவாபுக்குப் பின் செய்யவும் முடியும். எனினும் (இப்பொழுதே) தவாபுல் குதூமுக்கு பின்னால் செய்வதுதான் சிறப்பானதாகும். இந்த வகையில் ஹஜ் செய்பவர் இஹ்ராமை கலையாமல் எட்டாம் நாளிலிருந்து செய்ய வேண்டிய ஹஜ்ஜின் கடமைகளை செய்துவிட்டு பத்தாம் நாளன்றுதான் இஹ்ராமை கலைய வேண்டும். இவர் குர்பனியும் கொடுக்கவேண்டும்.

மூன்றாவது வகை :-  இப்ராத்

இது மீகாத் எல்லையை சென்றடைந்ததும் ஹஜ்ஜுக்கு மாத்திரம் லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் செய்து இஹ்ராம் கட்டிக்கொண்டு மக்கா சென்று தவாபுல் குதூம் எனும் தவாபை செய்து விட்டு இஹ்ராமைக் கலைந்து விடாது எட்டாம் நாளிலிருந்து செய்ய வேண்டிய ஹஜ்ஜின் கடமைகளை செய்துவிட்டு பத்தாம் நாளன்று இஹ்ராமிலிருந்து விடுபடல். இம்முறையில் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

Comments are closed.

Derek MacKenzie Womens Jersey