நான் நபித் தோழர்கள் இஸ்லாத்தின் 3வது மூலாதரம் என்ற ஒரு தவறான கொள்கையில் இருப்பதாகப் பிரச்சாரம்!!!!!

அன்புள்ள சகோதரர்களே ஒரு சிலர் நான் நபித் தோழர்கள் இஸ்லாத்தின் 3வது மூலாதரம் என்ற ஒரு தவறான கொள்கையில் இருப்பதாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எஸ் எல் டீ ஜே  யில் அந்தக் கருத்தில் இருந்ததாகவும் பின்னர் மாறியதுபோல் இருப்பதாகவும் பரப்பி வருகிறார்கள்.  எந்தத் தகவலை வைத்து என்னைக் குற்றஞ் சாட்டுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

மல்லிகாராம தவ்ஹீத் பள்ளிவாயலில் எஸ் எல் டீ ஜே  சுமார் 5 வருடங்களாக இயங்கியது. அங்கு என்னை 4 வருடங்களாக பிரச்சாரங்களுக்கு அழைத்தார்கள். தொடர் வகுப்புக்கள் செய்துள்ளேன். மேடைப் பிரச்சாரங்கள் செய்துள்ளேன். அழைப்பு இதழின் ஆசிரியராக இருந்துள்ளேன். இக்காலங்களில் நான் பேசியவைகளில் அதிகமானவைகள் வீடியோக்களாக உள்ளன. பல கட்டுரைகள் உள்ளன. நான் எஸ் எல் டிஜேயில் நபித்தோழர்களை மூலாதாரமாகக் கொள்ளலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தால் இவைகளில் எங்கே அவ்வாறு சொல்லியுள்ளேன் என்று எடுத்துக் காட்டிப் பேச வேண்டும். ஆனால் அவ்வாறு ஒரு வசனத்தைக் கூட காட்ட முடியாது. அவ்வாறிருக்க எவ்வாறு இப்படி ஒரு குற்றச் சாட்டை வைப்பார்கள்.

இன்னுஞ் சொல்வதென்றால் அதற்கு மாற்றமாக பல முறைகள் பேசியுள்ளேன் எழுதியுள்ளேன். ‘நாம் யாரைப் பின்பற்றவேண்டும்?” என்ற தலைப்பில் எஸ் எல் டி ஜேயில் ஒரு மிகப் பெரும் ஒன்று கூடலின்போது உரை நிகழ்த்தினேன். அது தமழழுலக போலி ஸலபிஸத்திற்கெதிராகத் தரப்பட்ட தலைப்பு. எனது கொள்கைக்கெதிரான தலைப்பையா என்னிடம் தந்தார்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்.

கடந்த ரமழானிற்கு முந்திய ரமழானில் எஸ் எல் டி ஜேயில் 28 நாட்கள் தொடர் உரை நிகழ்த்தினேன். அதில் ஆயிசா ரலியல்லாஹ{ அன்ஹா பற்றிய தலைப்பில்  நபித்தோழர்கள் மார்க்கத்தின் 3 வது மூலாதாரமாகமாட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக தலைப்பிற்கப்பாட்பட்டிருந்தும் நானே வலிய பின்வரும் செய்தியைக் குறிப்பிட்டேன்.

صحيح البخاري ـ7100 – حَدَّثَنَا أَبُو مَرْيَمَ عَبْدُ اللَّهِ بْنُ زِيَادٍ الْأَسَدِيُّ قَالَ لَمَّا سَارَ طَلْحَةُ وَالزُّبَيْرُ وَعَائِشَةُ إِلَى الْبَصْرَةِ بَعَثَ عَلِيٌّ عَمَّارَ بْنَ يَاسِرٍ وَحَسَنَ بْنَ عَلِيٍّ فَقَدِمَا عَلَيْنَا الْكُوفَةَ فَصَعِدَا الْمِنْبَرَ فَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ فَوْقَ الْمِنْبَرِ فِي أَعْلَاهُ وَقَامَ عَمَّارٌ أَسْفَلَ مِنْ الْحَسَنِ فَاجْتَمَعْنَا إِلَيْهِ فَسَمِعْتُ عَمَّارًا يَقُولُ إِنَّ عَائِشَةَ قَدْ سَارَتْ إِلَى الْبَصْرَةِ وَ وَاللَّهِ إِنَّهَا لَزَوْجَةُ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَكِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى ابْتَلَاكُمْ لِيَعْلَمَ إِيَّاهُ تُطِيعُونَ أَمْ هِيَ
ஜமல் யுத்தத்தின் போது அம்மார் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘…..அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஆயிசாதான் இவ்வுலகிலும் மறுமையிலும் உங்களது நபியின் மனைவி ஆனாலும் அல்லாஹ் நீங்கள் அவனைப் பின்பற்றுகிறீர்களா ஆயிசாவைப் பின்பற்றுகிறீர்களா என உங்களைச் சோதிக்கிறான்”  புகாரி: 7100

எவ்வளவு தெளிவான நிலைப்பாடு இன்னும் அந்த எனது உரைகள் ஸீடிக்களாக உள்ளனவே. ஏன் ஆதாரமின்றிப் பேசுகிறார்கள்.

தயவு செய்து வெறுமனே பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல் ஆதாரத்துடன் குற்றாச்சாட்டுகளை வைக்க வேண்டும். சகோதரர்களுக்குத் தெளிவாகியிருக்க வேண்டும் என நம்புகிறேன்.

7 Responses to “நான் நபித் தோழர்கள் இஸ்லாத்தின் 3வது மூலாதரம் என்ற ஒரு தவறான கொள்கையில் இருப்பதாகப் பிரச்சாரம்!!!!!”

 1. me says:

  dear friend nice you all tawheed people speaking about unity in the quran and hadeed but we can not see that unity at least between you people how many branches you all have why you all repeating same topic again and again

  may allah guide you right path to you and me

  • mujahidsrilanki says:

   may allah guide right path to you and me

  • saneej says:

   well said my brother. we are also expecting the same. Unfortunately this “Jahiliya” activity continues.. If all the people are understood the limits & barriers defined by allah this won’t happen. I’m saying this not only for a particular sector in believers. For all the people who accept unity (ultimate bond as sahaabys) by keeping allah and rasoolullah in the judgment position. If this happens we can expect unity. Pray allah for this kind of unity. One thing i wanted to remind you that, This conflict is only there between these organizations. People who follow quran & sunnah they never mind this. They are listening from all. Filtering & taking what ever they want. Ignoring the rest. If u went through them, u can see. May allah guide us to follow Islamic High Level Qualities.

 2. rashid says:

  இணையத்தளத்தில் நான் எழுதும் கோம்மேன்ட்சை (comments) அழித்து விடுகிறார்கள். இதைப் போன்று கீழ்த்தனமான வேலை நான் எந்த ஒரு இணையதளத்திலும் பார்த்ததே இல்லை

  • admin says:


   உங்களது commentகள் இந்த இணையதளத்திற்கோ அல்லது முஜாஹித் பின் ரஸீன் என்பவரிற்கோ எதிராக இருப்பதால் நாம் தணிக்கை செய்வது கிடையாது. வீணாக வம்புக்கு இழுப்பது போன்ற தோறணையில் அமையும் அனைத்து கொமென்ட்களையும் நேரத்தின் பெறுமதி கருதி தணிக்கை செய்துள்ளோம்.

   நீங்கள் பதிவு செய்த அதிகமான கொமென்ட்களை அப்ப்ரொவ் செய்துமுள்ளோம். குற்றச்சட்டுக்களுக்கு விளக்கம் கோரும் வகையில் உள்ள கேள்விகளுக்கு மட்டும் இன்ஷா அல்லாஹ் இத்தளத்தில் பதிளிக்கப்படும்.

   SPAM

   அத்துடன் SPAM commentகளையும் நாம் அனுமதிப்பது கிடையாது.

 3. Anees Mohamed says:

  නබි(සල්)තුමාගේ සහීහ් වන හදීස් හා අල් කුර්ආනය එකිනෙකට පටහැනි වෙයිද?
  උදා:සලීම්ගේ කිරි බීම වැනි චේවල්

 4. Anees Mohamed says:

  මගේ ඊමේල් එකට යවන්න.