பெருநாள் இரவுகளில் நின்று வணங்கல் சிறப்பானதா?

இன்பங்களைப் புறக்கணிப்பதே இஸ்லாம் என்று தவறாக விளங்கிய சில சகோதரர்கள் பெருநாள் இரவுகளில் எழுந்து வணங்குவதை மிகப் பெரிய நன்மை எனக் கருதுகிறார்கள் அதற்கென சில ஆதாரங்களையும் முன்வைக்கிறார்கள்.பெருநாள் இரவுகளில் எழுந்து வணங்குவது தவறு கிடையாது.ஆனால் அதற்கென ஏனைய இரவுத் தொழுகையைவிட வேறு எந்தச் சிறப்பும் கிடையாது:-

முதலாவது செய்தி:

‘யார் இருபெருநாள் இரவு முழுவதும் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குகிறாரோ அவர் உள்ளம் உள்ளங்கள் இறந்துபோகும் நாளிலும் இறக்காமல் இருக்கும்’ என நபிகளார் கூறியதாக இவ்வாசகம் அறிவிக்கப்படுகிறது.

இது நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு வாசகமாகும்.

இதனை இமாம் இப்னு மாஜா தனது (ஸுனன் 1-542) அபூ உமாமா எனும் நபித்தோழர் வழியாக பதிவுசெய்துள்ளார்.இவ்வறிப்பாளர் வரிசையிலே:-

1- பகீயா இப்னுல் வலீத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் ‘பொய்யர்கள் தங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க அறிவிப்பாளர்கள் கூறியதாக கூறும் வாசகங்களை அவர்கள் வழியாக கேட்;ட பின்னர் தான் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவிப்பாளர்களிடம் கேட்டதுபோல் அறிவிப்பவர்’ இவ்வாறு இவரைப் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2- குறிப்பாக இமாம் இப்னு ஹிப்பான். இந்த அறிவிப்பாளர் வரிசையிலும் அதுவே நடந்திருக்கிறது. இவருக்கும் இவரது ஆசிரியருக்கிற்கும்; இடையில் உமர் பின் ஹாரூன் எனும் பொய்யரை இவர் வீழ்த்தியிருக்கிறார்.

இரண்டாவது செய்தி:

‘தர்வியாவுடைய நாள், அரபா நாள், ஹஜ்ஜுப்பெருநாள், நோன்புப் பெருநாள் உடைய நான்கு இரவுகலிலும் முழுமையாக அல்லாஹ்வை வணங்குகிறாரோ அவர் மீது சொர்க்கம் கட்டாயமாகிவிட்டது.’ என நபிகளார் கூறியதாக இவ்வாசகம் அறிவிக்கப்படுகிறது.

இது நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு வாசகமாகும்.

இதனை இமாம் நஸ்ர் அல் மக்திஸி அவரது (அமாலீ 2-187) இலே முஆத் இப்னு ஜபல் எனும் நபித்தோழர் வழியாக அறிவிப்புச் செய்கிறார்.இதன் அறிவிப்பாளர் வரிசையிலே இடம்பெறும்:-

1- அப்துர் ரஹீம் இப்னு ஸைத் அல் அம்மீ என்பவர் பொய்யராவார்.இவர் வழியாக அறிவிக்கும் ஸுவைத் இப்னு ஸஈத் பலஹீனமானவர்.

Comments are closed.