“மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்” (கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்)

Post by mujahidsrilanki 6 May 2014 எண்ணங்கள், கட்டுரைகள்

பராஆ எகிப்தை சேர்ந்த 10 வயது சிறுமி. பெற்றோர்களுடன் ஸஊதி அரேபியாவில் வசித்து வந்தாள். அவரது பெற்றோர்கள் ஒரு வைத்தியசாலையில் வேளை செய்து வந்தனர்.

மகிழ்ச்சி அந்தக் குடும்பத்தில் நிறைந்திருந்தது. பராஆ மிகத் திறமையான சிறுமி இந்த 10 வயதிலேயே குர்ஆனை அதன் சட்டங்களோடு மனனமிட்டிருந்தாள்.

அந்த மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒரு சோக சம்பவம். எந்த விதமான முன்னடையாளமுமின்றி தாய் நோய் வாய்ப்படுகிறார். வைத்திய பாிசோதனையில் கென்ஸர் அதன் இறுதி நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தொிவித்தனர்.

இந்த விடயத்தை மகளிடத்தில் தொிவிக்க வேண்டாம் என தாய் கேட்டுக்கொண்டாள். இந்த இளம் வயதில் அதைத் தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை சொல்ல வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார்.

மகள் தினம் தோறும் வைத்தியசாலைக்குப் போய் தாயிடம் அமர்ந்து குர்ஆனை ஓதுவாள். ஒரு முறை தன் சின்ன மகளிடம் மறைமுகமாக தனது மரணத்தை சொல்லி வைக்க தாய் நினைத்தாள் –

“பராஆ! உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன். நீ ஓதும் குர்ஆனை தொடர்ந்து ஓது. அதுதான் உன்னை பாதுகாக்கும்ம்ம்…” என்ற கூறி வைத்தாள். முழுமையாக தாயின் நோக்கத்தைப் புாியாது விட்டாலும் சில மாற்றங்களை உணர்ந்தாள் பராஆ.

ஒரு நாள் காலை வைத்தயாசலையிலிருந்து தந்தைக்கு ஓர் அழைப்பு வந்தது. செய்தி என்ன என்று முழுமையாகத் தொியாத நிலையில் பராஆவை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றார் தந்தை.

பராஆவிற்கு அதிர்ச்சியான செய்தி எதுவும் தொியக் கூடாது என்ற நோக்கில் “பராஆ! நீ வாகனத்திற்குள் இருந்துகொள். இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பதட்டத்துடன் வேகமாக வீதியைக் கடந்தார்.

ஆனால்………………..

பராஆவின் இரு கண்களுக்கு முன்னாலேயே தந்தை வேகமாக ஒரு வாகனத்தில் மோதுண்டு விழுகிறார். அழுகையோடு பராஆ வீதிக்கு ஓடி வந்து தந்தையின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுகிறாள். ஆம் தந்தை உயிரை இழந்தார்.

பராஆவை வேதனையை அதிகாிக்க இருந்த அடுத்த கவலையான செய்தியை வைத்தியர்கள் மறைத்து விட்டனர்.

ஆனாலும் எத்தனை நாட்கள் மறைக்கலாம் 5 நாட்களில் தாயின் உடல் மண்ணறை நோக்கி சுமந்து செல்லப்படும் செய்தியை அவளுக்குத் தொிவித்தார்கள். கதறியழுதாள் பராஆ.

உறவினர்களின்றி ஸஊதியிலே தனித்துப் போன பராஆவை எகிப்தில் அவளது உறவினர்களிடம் அனுப்ப நண்பர்கள் ஆலோசித்தனர்.

ஆனால்…

சில நாட்களில் திடீரென பராஆ நோய்வாய்ப்பட்டாள். வைத்தியாசாலைப் பாிசோதனையில் மிக மோசமான கென்ஸர் தாக்கியுள்ளது என வைத்தியர்கள் தொிவித்தார்கள்.இந்த செய்தி பராஆவுக்கு தொிய வந்ததும் புன்னகைத்தாள்.

“எனது தந்தையும் தாயையும் பார்க்கப் போறேன்” என்று எல்லோருக்கும் முன்னால் ஆனந்தத்துடன் கூறினாள்.

செய்தியறிந்த ஸஊதி தனவந்தர் ஒருவர் பராஆவை தனது முழு செலவிலும் யுகேயிற்கு அனுப்பி மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார்.

ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட பராஆவின் நோய் முற்றிக்கொண்டே வந்தது. இறுதியில் அந்த இளம் உடலின் இரு கால்களும் வெட்டப்பட்டன.

சில மாதங்களில் பராஆவைஅல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஆனாலும் …

அந்த இளம் பிஞ்சு வைத்தியசாலையில் இருந்த காலத்தில் அனைத்து மீடியாக்களும் தொடர்பு கொண்டன. அனைத்தையும் யுடியுபில் நீங்கள் காணலாம்.அந்த சின்ன மகள் ஓதிய ஓதல்கள் கவிதைகள் அனைவரையும் அழ வைத்தன. ஆம் உங்களையும் அழவைக்கும் கேட்டுப்பாருங்கள். படிப்பினை பெறுவோம்

4 Responses to ““மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்” (கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்)”

 1. Ansary says:

  கட்டுரையை படித்து கொண்டிருக்கும் போதே பாதி உடைந்து போனேன் – சகோதரி பாராஆ அவர்களின் மழலை குரலில் குர்ஆணிய வசனங்களை கேட்டபோது…….

  யா அல்லாஹ்…….

  வார்த்தைகள் இல்லை….
  வார்த்தைகள் இல்லை….

  என் கண்ணீருக்கு பேசிட முடியுமாயின் அவைகள் பேசட்டும். என் உதடுகள் அல்ல.

  அர்ரஹ்மான் சூராவை அவள் ஓத கேட்ட என் செவிகள் – என் முன் இருந்த கணினியின் யூ- டியூபில் ஓடிக்கொண்டு இருந்த காணொளியை காணாமல் நிறுத்த செய்து விட்டது.
  ஏன் தெரியுமா ?
  அழுவதற்கு சில நிமிடங்கள் என் கண்கள் வேண்டிக்கொண்டதால்.

  மூமினுடைய வாழ்வில் அவன் கடந்து செல்லும் ஒவ்வொரு சம்பவமும் படிப்பினை பெறுவதற்கே.
  கோடான கோடி வரிகள் சொல்ல முடியாத செய்தியை
  கோடான கோடி வார்த்தைகள் சொல்ல முடியாத செய்தியை
  ஒரேயொரு சம்பவம் உணர்த்திவிடும்.
  10 வயதில் இவளுக்கு இருக்கும் உறுதி நம்மில் எத்தனை பேருக்கு ?
  மறுபடியும் அழுகிறேன்….. நம் நிலைகளை நினைத்து.
  யா அல்லாஹ்….. நீ எங்களை நேசிக்காத நிலையில், எங்களை மரணிக்க செய்து விடாதே…….

 2. Ansary says:

  நமது ஈமான் சற்று தொய்வு அடையும்போது இது போன்ற சம்பவங்கள் நம்மை உறுதி பெற வைக்கிறது. சகோதரிக்காக எங்கள் கைகள் இறைவனின் பக்கம் உயரும்.

 3. Azizullah says:

  ((Anthal haaadhi Anthaaal haq laisal haadhi) ). After dis word what word comes?
  iLahooo or ilalahooo

Derek MacKenzie Womens Jersey