“மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும்

இந்தக் கட்டுரை ஷீஆக்களாலும் இக்வான்களாலும் ஸஊதி அரசு மீது பழி சுமத்தப்படும் மினா விபத்து பற்றி சற்று விரிவாக அலசுகிறது. நம் அனைவரினதும் நெஞ்சை உருக்கிய இந்த விபத்து ஸஊதியின் உள் நாட்டு வெளிநாட்டு எதிரிகளால் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது`.

  ஷீயாக்களும் ஒத்தூதும் வகையில் இக்வான்களும் ஸஊதியின் நிர்வாகக் கோளாறுக்கு பெரும் எடுத்துக்காட்டாக இதனை முன்வைக்கின்றனர். உஸ்தாத் மன்ஸூன் அவர்களும் கற்பனைகளை கட்டுரையாக்கியுள்ளார். 

பெருந்தொகை மக்கள் கூடக் கூடிய இடங்களில் எவ்வளவு திறமையான நிர்வாகம் இருந்தாலும் ஒரு வருடம் இல்லாவிட்டால் இன்னொரு வருடம் இது போன்ற ஏராளமான விபத்துக்கள் நடந்தே இருக்கின்றன. ஸஊதி பல தரப்பு எதிரிகளால் இலக்குவைக்கப்பட்டுள்ளதால் இது விளம்பரமாக்கப்பட்டிருக்கிறது.

 நெரிசல் மரணங்கள்

உலக அளவில் நடைபெற்ற விபத்துக்களில் இதுவே முதலாவதா! என்று நாங்கள் கேட்கின்றோம் . 2013 அக்டோபர் இந்தியாவில் இந்து யாத்திரிகர்கள் தமது கோவிலுக்கு செல்ல பாலத்தில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில் 109 பேர் மரணித்து , 133 பேர் காயமடைந்தனர்.

ஜூலை 10, 2013 பங்களாதேஷில் திடீரென ஏற்பட்ட விபத்தில் 22 பேர் மரணித்தனர்.

ஏன் மிக தூரம் போக வேண்டும்! 2005 ஒக்டோபர் மாதம் ஈரானிய ஷீயாக்களும் இராக் ஷீயாக்களும் மூஸா அல் காலிம் நினைவு தினத்திற்காக பெருந்திரளாக செல்லும் வழியில் ஒரு வதந்தி பரப்பப்பட்டதால்  பக்தாத் ஜிஸ்ருல் அஇம்மா பாலத்தில் 1000 க்கணக்கானோர் உயிரழந்தார்கள்.

இது போன்ற நூற்றுக் கணக்கான நிகழ்வுகள் உலகந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பின்வரும் விகிபீடியா இணைப்பில் அத்தனை நிகழ்வுகளையும் விளக்கமாக வாசிக்கலாம்

https://en.wikipedia.org/wiki/List_of_human_stampedes

south china morning post இணையதளம் உலகத்தின் நொிசல் மரணங்களை புகைப்படங்களுடன் பட்டியலிட்டுள்ளன.

http://www.scmp.com/news/world/article/1672652/factbox-worst-stampedes-21st-century

ஆயிரக் கணக்கில் மக்கள் ஒன்று சேரும் தருணங்களில் இது போன்று திடீர் விபத்துக்கள் சம்பவிக்கின்றன . ஒரே  இடத்தில் 2.5 மில்லியன் மக்கள் ஒன்று சேரும் போது இது போன்ற திடீர் விபத்து ஏற்படாதாஇது போன்ற திடீர் விபத்துக்கள் நிர்வாக ரீதியான பலவீனத்தால் ஏற்படுபவை என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. அப்படியிருக்க ஸஊதியை ஒரேயடியாக இஸ்லத்திற்கெதிரானவர்களடன் சேர்ந்து இக்வான்கள் விமாிசிக்க காரணம் என்ன!!  திடீர் விபத்துக்கள் உலகில் அதிகமாக ஏற்படுகின்றன . ஆனால் சஊதியில் அவை நிகழும்போது நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது .

ஸஊதி துருக்கி உறவில் விாிசல் ஏற்படுத்தும் முயற்சிகள்

மினா விவகாரம் தொடர்பான கருத்துக்கள் மூலம் ஸஊதிக்கும் துருக்கிக்கும் இடயே முறுகலை உண்டாக்கி கலங்கிய நீரில் சிலர் மீன் பிடிக்க முயல்கின்றனர் . மினா விபத்து தொடர்பில் துருக்கி வெளியிட்ட கருத்தை சஊதிக்கு எதிரான துருக்கியின் கண்டனம் போன்று சித்தரிக்க விளைகின்றனர்` ஆனால் அதிபர் உா்துவான் தனது தெளிவான நிலைப்பாட்டை வெளியிட்டவுடன் குளிர்காய நினைத்தவர்களுக்கு சுட்டது.

“சஊதி அரசை நான் நன்கறிவேன். ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் சிறந்த கவனமெடுக்கும் நாடது” என்பதே மினா விபத்து பற்றி உர்துவான் சொன்ன கருத்து . இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில் “ ஹஜ் ஏற்பாடுகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை . சஊதி அரசு அதன் கடமைகளை பரிபூரணமாக செய்கிறது என்பதை நான் உறுதி செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.உர்துவான் அவர்களின் இந்த கருத்துக்கள் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளின் புரிந்துணர்வுகளையும் பிரதிபலிப்பவையாக அமைந்துள்ளன .

ஹரம் விஸ்தாிப்புக்குச் செலவிடும் பணத்தை மினாவின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த பயன்படுத்துமாறு  ஸஊதி அரசுக்கு உபதேசித்து பொிய அவதானி என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கற்பனைக் கதையெழுதும் உஸ்தாத் மன்ஸூர் எங்கே! உஸ்தாத் மன்ஸூர் புகழ்ந்தெழுதும் அதிபர் உர்துவானின் பார்வையெங்கே!. முர்ஸிக்கு உர்துவானின் நிதானதமான ஆட்சியில் பாடம் இருப்பதாக உஸ்தாத் மன்ஸூர் முர்ஸிக்கு அரசியல் சொல்லிக்கொடுத்தார். துருக்கியும் ஸஊதியும் கத்தாரும் பாகிஸ்தானும் கைகோர்ப்பதை முதலில் வெறுப்பது ஷீயாக்கள் ஒத்தூதுவது இக்வான்கள். இல்லையென்றால் மினா விபத்தை அரசியலாக்கியிருப்பார்களா?

ஸஊதியின் ஹஜ் ஏற்பாடுகள் பற்றிய விமாிசனத்திற்கான ஆதாரங்களை உஸ்தாத் மன்ஸூர் முன்வைக்கத்தயாரா? நாம் கருத்ததாடத் தயார். இல்லையெனில் நீங்கள் அவதானி என்ற பெயரெடுக்க எழுதிய கற்பனைக்கதை எனன்பது வெள்ளிடை மழை

மினா விவகாரம் பற்றிய துருக்கியின் கருத்துகள் சஊதியை குறை கூறுவதாக அமயவில்லை . மாறாக எதிர்காலத்தில்  இவ்வாறு ஏற்படாமலிருக்க  கூடுதல் கவனம் எடுக்கச் சொல்வதாகவே அது அமைந்துள்ளன. இந்த பாணியிலான கருத்துக்களை யாரும் குறையாகப் பார்க்கமாட்டார்கள்.

ஈரானுடன் சேர்ந்து துருக்கியை சஊதிக்கு எதிரானதாக சித்தரிப்பவர்களுக்கு சீர்திருத்தம் இலக்கே கிடையாது . ஈரானைப் போன்று சஊதியை ஆக்கிரமிப்பதற்கான எந்த திட்டங்களும் துருக்கிக்குக் கிடையாது என்பதுடன் ஈரானும் துருக்கியும் ஒருபோதும் ஒரே அணியில் இடம் பெறாது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கத்தாகும்.

விபத்தா? இலக்கா?

மக்கள் பெருந்திரளாக கூடுமிடங்களில் இது போன்ற விபத்துகள் இயல்பாயினும் இலக்குவைத்து இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

ஹஜ் காலங்களில் இது போன்ற மோசமான விளைவுகளை இலக்குவைத்ததில் ஈரான்தான் முதலிடத்தில் உள்ளது . ஹஜ் காலங்களில் வன்முறை செய்வதில் அந்நாடு பிரபலமானது என்பதற்கு கடந்த கால வரலாறு சாட்சி. 1987 ளில் நடந்ததை நாம் மறக்கமாட்டோம். ஈரானியர்களின் அத்துமீறல்களால் வன்முறைகளால் பல ஹாஜிகள் உயிரிழந்தனர்,பலர் காயமடைந்தனர்.சொத்திழப்புகளும் ஏற்பட்டன.

ஹஜ்ஜில் நாசகார வேளைகள் செய்ததாக கராமிதாக்கள் வராலற்றைத் தொட்டுச் செல்கிறார் உஸ்தாத் மன்ஸூர். கராமிதாக்கள் ஷீயாப் பிரிவினர் என்பதை குறிப்பிடாமல் போனது உஸ்தாதின் திறமை.

சஊதிக்கு எதிரான ஈரானிய விரோதம் மிகத் தெளிவானது. இவ்வாறான தருணங்களிலே ஈரானிய தலைமையிலிருந்து நச்சுக்கருத்துக்கள் அதிகமாக வெளியாகும். இவர்களின் பிரதான நோக்கம் இரு புனிதத் தளங்களை பரிபாலனம் செய்யும் சஊதியிடமிருந்து கைப்பற்றி ஏனைய முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பொது நிறுவனம் ஒன்றின் ஊடாக அவற்றை பரிபாலிப்பதாகும். இத்தருணத்தில்  ஈரானும் மிகப்பெரும் பங்கேற்கும் என்பது இங்கே சுட்டிக் காட்டுவதற்கு உரியதாகும். இத்திட்டம் தொடர்பில் ஈரானின் தலைமை மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது.

 எகிப்து வைத்தியர் அப்துல்ஹமீத் பவ்ஸி “இந்த நிகழ்வில் மரணித்தவா்களை வைத்தியப் பரிசோதனைக்குள்ளாக்குங்கள். பலர் தமது விபரங்களை மறக்கும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நெரிசல் விபத்துகளின் வரலாற்றிலேயே காண முடியாத ஒன்று. நச்சுவாயு அடிக்கப்பட்டுள்ளதாக நானும் சிகிச்சை அளித்த எனது சக வைத்தியர்களும் இதனை சந்தேகிக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.

மினாவில் நிகழ்வின் போது இருந்த ஹாஜிகளின் நேரடி சாட்சியங்கள் இதனை இன்னும் உறுதிப்படுத்துகின்றன. இது இன்னும் உறுதிப்படுத்தப்படுமாயின் . இது விபத்தா இலக்கா என்பதும் திரைக்குப்பின்னால் இயக்கியவர்கள் யார் என்பதும்  நிரூபணமாகிவிடும்.

யாஅல்லாஹ் மினாவில் ஷஹீதானவர்களின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை கொடுத்தருள். இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் உள்ள சதிகாரர்களை அடையாளங்களாட்டு. அவர்களுக்குறிய தண்டனையை வழங்கு. அறிவீனர்களுக்கு நேர்வழி காட்டு. எமது பாவங்களை மன்னித்தருள்புறி!

(குறிப்பு-ஸஊதி அரசு செய்யம் ஹஜ் ஏற்பாடுகள் ஒழுங்குகள் நவீன முன்னெடுப்புக்கள் பற்றி   இன்னொரு கட்டுரையில் தெளிவுபடுத்தப்படும் இன்ஷா அல்லாஹ்)

மஸ்ஊத் அப்துர்ரஊப் & முஜாஹித் ரஸீன்

6 Responses to ““மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும்”

 1. (இது நான் இன்னொரு முஸ்லிம் இணையத்தளத்தில் பதிந்த எனது கருத்து, ஆனால் குறித்த இணைய நிர்வாகம் இதனை முற்றாக நீக்கிவிட்டது. உங்களுக்காவது பதில் சொல்ல முடியுமா? )

  வருடாந்த ஹஜ்ஜு யாத்திரையின் ஒரு அங்கமாக சாத்தானுக்கு கல்லெறிவதில் ஏற்பட்ட நெரிசலில் ஏகப்பட்ட மரணங்கள். சாத்தனுக்கு கல்லு எறியப் போனவர்களை இறைவன் கூட காப்பாற்றவில்லை…………………………………………(moderated by admin)………………………….

  இஸ்லாமிய நண்பர்களே, சிந்தியுங்கள். நீங்கள் என்னை எசுவதில், தூற்றுவதில் பயனில்லை. உங்கள் மத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்க பாடுபடுங்கள்.

  • mujahidsrilanki says:

   உங்கள் இந்த கருத்தை எந்த இஸ்லாமிய இணைய தளமும் பதியாது. காரணம் நீங்கள் கருத்திடவில்லை.160 கோடியினரின் நம்பிக்கையை உரிய வாதங்களை வைத்து விவாதிக்காமல் கிண்டல் அடித்துள்ளீர்கள். ஹஜ்ஜுடைய வணக்கங்கள் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதில் இருக்குமா என்று பாருங்கள். இல்லாதுவிட்டால் உங்கள் கேள்விகளை அதையொட்டிப் பதிவு செய்யுங்கள்.

  • nagore anees says:

   நிலவன் மார்க்ஸ் அவர்களே ..

   // வருடாந்த ஹஜ்ஜு யாத்திரையின் ஒரு அங்கமாக சாத்தானுக்கு கல்லெறிவதில் ஏற்பட்ட நெரிசலில் ஏகப்பட்ட மரணங்கள். சாத்தனுக்கு கல்லு எறியப் போனவர்களை இறைவன் கூட காப்பாற்றவில்லை…………………………………………(moderated by admin)………………………….//

   மேற்கண்ட உங்களின் வாதத்திற்கு , உங்களின் அறியாமை தான் காரணம்..
   இதற்காக உங்களை யாரேனும் ஏசினால் அவர்களும் விமர்சனகளை எதிர்கொள்ள தெரியாதவர்கள் அறியாமையால் பேசுகிறார்கள் என்றே புரிந்துகொள்ளுங்கள்…

   உங்களையும் என்னையும் படைத்த இறைவனுக்கு… யாரை காப்பாற்ற வேண்டும் யாருக்கு எப்போது தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீங்களும் நானும் படம்நடத்த தேவையில்லை..

   சௌதி மட்டுமல்ல உலகத்தில் எங்கு மக்கள் இருந்தாலும் இறைவன் நாடினால் பாதுகாப்பான் அல்லது வேதனை செய்வான் , நீங்களும் நானும் கேள்வி கேட்க முடியாது..
   சௌதியில் நடந்தால் தான் விபத்த, உலகத்தில் வேறு எங்குமே இது போல் அல்லது இதை விட கோரமான விபத்து நடக்கவில்லையா..?

   மரணம் என்பது அனைவருக்கும் சம்பவிக்கும் ஒன்று , யார் முன்னர் , யார் பின்னர் என்பது தான் வித்தியாசம் .. இறைவன் ஒருவருக்கு திடீர் மரணத்தை விபத்தினாலோ மற்ற காரணிகளாலோ ஏற்படுத்தினால் இறைவன் அவனை கைவிட்டு விட்டான் என்று அர்த்தமல்ல , இறைவன் மரணத்தை இதன் மூலம் விதித்துவிட்டான் என்பது சரியான புரிதல்.

   இஸ்லாம் இவ்வுலகை சோதனை கூடம் என்கிறது , உண்மையான நிலையான வாழ்வு முஸ்லிம்களுக்கு மறுமையில் தான்.. ஆகவே சோதனை கூடத்தில் இதுபோன்ற இன்னல்களும் , போராட்டங்களும் சகஜம் தான் … இது போன்ற சம்பவங்கள் சம்பவிக்கும் போது சராசரி மனிதனாக நாங்கள் வேதனைக்கு உள்ளானாலும் , அதிவிரைவாக நாங்கள் சகஜ நிலைக்கு திருப்புவோம் ஏன் தெரியுமா..?

   இவ்வுலக வாழ்வு அற்பமானது , இறைவா உன்னிடமிருந்தே வந்தோம் , உன்னிடமே நாங்கள் மீளுவோம் … இது யாவும் இறைவனின் நாட்டம் என்ற கொள்கையில் நாங்கள் இருப்பதால்.

   // இஸ்லாமிய நண்பர்களே, சிந்தியுங்கள். நீங்கள் என்னை எசுவதில், தூற்றுவதில் பயனில்லை. உங்கள் மத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்க பாடுபடுங்கள்.//

   நீங்கள் முதலில் தெளிவாக வாதங்களை வையுங்கள் ..

   எது மூடநம்பிக்கை , உங்கள் பார்வையில் இஸ்லாமே மூட நம்பிக்கையா அல்லது ஷைத்தானுக்கு கல்எரிவது மூட நம்பிக்கையா ..?

   உங்கள் பார்வையில் எது சரியான நம்பிக்கையை என்பதையும் பதிவு செய்யுங்கள் …
   பதில் அளிக்க எதுவாக இருக்கும்..

   மேற்கண்ட காணொளியை கேளுங்கள்…

   • //நீங்கள் முதலில் தெளிவாக வாதங்களை வையுங்கள் ..//

    தவறு என்னுடையதல்ல, எனது கருத்து முழுமையாக பிரசுரிக்கப் படவில்லை.

 2. Zawahir says:

  Assalamu Aliakum மஸ்ஊத் அப்துர்ரஊப் & முஜாஹித் ரஸீன்
  the above article is more or less being used to attack a person rather than criticizing him.
  you might disagree with one’s point but the way you have mentioned is not correct. you have taken all the main and good part of usthad mansoor ‘s article and just shown your anger on him.

  this is not the Islamic way.
  therefore in future when you criticize pls show some respect and decency in replying.
  Allah knows the best.

  “ஷீயாக்களும் ஒத்தூதும் வகையில் இக்வான்களும் ஸஊதியின் நிர்வாகக் கோளாறுக்கு பெரும் எடுத்துக்காட்டாக இதனை முன்வைக்கின்றனர். உஸ்தாத் மன்ஸூன் அவர்களும் கற்பனைகளை கட்டுரையாக்கியுள்ளார். – ஹரம் விஸ்தாிப்புக்குச் செலவிடும் பணத்தை மினாவின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த பயன்படுத்துமாறு ஸஊதி அரசுக்கு உபதேசித்து பொிய அவதானி என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கற்பனைக் கதையெழுதும் உஸ்தாத் மன்ஸூர் எங்கே!

  உஸ்தாத் மன்ஸூர் புகழ்ந்தெழுதும் அதிபர் உர்துவானின் பார்வையெங்கே!. முர்ஸிக்கு உர்துவானின் நிதானதமான ஆட்சியில் பாடம் இருப்பதாக உஸ்தாத் மன்ஸூர் முர்ஸிக்கு அரசியல் சொல்லிக்கொடுத்தார். –

  is this is the way to criticise some one.
  shame on you sheik mujahid fear Allah . im sure one day the ball will come back to you in your court.