முல்தகா அஹ்லில் ஹதீஸ் வரலாறு

Post by mujahidsrilanki 1 September 2017 ஏனையவை, கட்டுரைகள்

மஸ்ஊத் ஸலபி

இணைய உலகில் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கும் வெப் தளங்களில் ஜாம்பவானாகத் திகழக் கூடியதும், இஸ்லாமிய கருத்தாடல் வெப்தளங்களில் மிக மிக முன்னிலையிலுள்ளதுமான ‘முல்தகா அஹ்லில் ஹதீஸ்’ உடைய மேற்பார்வையாளர் அஷ்ஷெய்க் ஹைதம் ஹம்தான் அவர்களிடம் ‘முல்தகா அஹ்லில் ஹதீஸ்’ உடைய தமிழ் பகுதி மேற்பார்வையாளர் சகோதரர் முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அஷ்ஷெய்க் ஹைதம் ஹம்தான் அவர்கள் தமிழ் பேசும் வாசகர்களுக்காக அரபியில் வழங்கிய தொடர் கட்டுரையின் தமிழாக்கமே இதுவாகும்.

அடியார்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை அருட்கொடையாக வழங்கி, மனிதர்களுக்கு நேர்வழி காட்ட தூதர்களை அனுப்பி, நேரான பாதையை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்தி, அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் மனிதர்களுக்கு சரியான வழிகாட்டியாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டும். அவனுடைய ஸலவாத்தும், ஸலாமும் அல்hஹ்வின் நேசத்துக்குரிய நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், அவர்களுடைய தோழர்கள், அவர்களைப் பின்தொடர்ந்த அனைவருக்கும் உரித்தாகட்டும். ‘முல்தகா’வைப் பற்றி இங்கே பேசுவது அவசியமானவொன்றாகும். இஸ்லாமியர்களிடத்தில் ஒரு அறிஞர் கூட்டம் உருவாகி, அவர்கள் மூலம் சிறந்த ஆக்கங்களையும், அபூர்வமான ஆய்வுகளையும், புத்தகங்களையும், கருத்தரங்குகளையும் தரக்கூடிய ஒரு மாணவர் சமுதாயம் தலைப்பட்டமையும், அவர்களுக்குள் நெருக்கமான அன்புப் பிணைப்பு ஏற்பட்டு அவர்கள் ஓருடலாகக் கைகோர்த்து ஒவ்வொருவரும் தம்மால் முடியுமான அளவில் மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களுக்கு இந்த இணையத்தளத்தினூடாய் உதவிக்கொண்டிருக்கின்றமையும் அல்லாஹ் செய்த பேரருளாகும்.
எத்தனை பேர் இந்த முல்தகாவிலே ஆய்வுகளிலும் பாடப்பகிர்விலும் பிரயோசனமாகப் பல மணி நேரங்களைக் கழிக்கின்றார்கள.; அறிவுத்தாகங் கொண்ட எத்தனை மாணவர்கள் தமது தேவையை அடைகின்றார்கள். ஒரு மஸ்அலாவுக்கான பதிலைப் பெறுகின்றார்கள். எத்தனை ஆய்வாளர்கள் இதிலுள்ள கட்டுரைகளிலும், ஆக்கங்களிலும் பயனடைகின்றார்கள். அறிவின் வாயிலிலுள்ள எத்தனை மாணவர்கள் இந்த முல்தகாவிலே பாடங்களை மீட்டுகின்றார்கள். படிப்பதற்கு ஊக்கம் பெறுகிறார்கள். இவ்வனைத்து நெஞ்சங்களையும் இந்த முல்தகாவிலே சங்கமிக்கச் செய்து மார்க்கத்தை விரிவுற வைத்த புகழ் அல்லாஹ்வுக்கே சேரும்.

முல்தகா அஹ்லில் ஹதீஸின் தோற்றம்

மார்க்க அறிவுகளுக்கான அமர்வுக்கென ஹி:1421(2001)ம் ஆண்டு சவூதி அரேபியாவிலுள்ள ஒரு கிராமப் புரமான ‘பல்ஜுரஸீ’ (டீயடதழசயளாi) என்ற ஊரைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துர்ரஹ்மான் உமர் அல் பகீஹ் அல் காமிதி என்பவரால் ‘முன்ததா பல்ஜுரஸி’ என்ற பெயரில் இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சிலரது வேண்டுகோளுக்காகவும், தகுதி வாய்ந்த அறிஞர்களின் ஆலோசனைகளுக்கமைவாகவும் ‘முல்தகா அஹ்லில் ஹதீஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டது. மார்க்கக் கல்வியை நோக்கமாகக் கொண்டமையே இப்பெயர் மாற்றத்துக்கான காரணமாக அமைந்தது. மார்க்கத்தின் பல் துறை கற்கைகளுக்கான அமர்வு, மார்க்கத்தீர்ப்புகளுக்கான அமர்வு, கருத்துக் களம் ஆகிய பகுதிககை மட்டுமே முல்தகா உள்ளடக்கியிருந்தது. பின்னர் புத்தகங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான களஞ்சியம் என்ற அமர்வு இணைக்கப்பட்டமையினால் பயன்தரும் தரும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், ஆய்வுகள் முல்தகாவினூடாய் இணையத்தில் பிரசுரமாக அல்லாஹ் உதவி செய்தான். பின்னர் புத்தகங்கள் பற்றிய அறிமுகத்துக்கான அமர்வு என்ற பகுதி இணைக்கப்பட்டது. இது பல புத்தகங்களின் எழுத்தாளர், பதிப்பு, கருத்துக்களில் மார்க்கத்துடனான உடன்பாடு, முறண்பாடு ஆகியவை தொடர்பாக விவரணப் படுத்தியதால் பல புத்தகங்களின் குறுக்கு வெட்டு முகங்கள் தெரிய வந்தன. பின்னர் கையெழுத்துப் பிரதிகளுக்கான விஷேட அமர்வு சேர்க்கப்பட்டது. இது பயன்மிகு பல கையெழுத்துப் பிரதிகளை அறிய வழிசெய்தது. அதன் பின்னர் மார்க்கக்கல்வியைக் கற்க ஆர்வமுடையோருக்கான வழிகாட்டல் அமர்வு இணைக்கப்பட்டமையினால் மார்க்கக்கல்வி ஆர்வலர்கள் தகுதியான இடங்களில் சேர்ந்து மார்க்கத்தைப் பயில வழி பிறந்தது.

முல்தகாவின் ஸ்தாபகரும், மேற்பார்வையும்

இஸ்லாத்தைப் பேசும் பல கருத்தாடற்தளங்கள் இணையவெளியில் வியாபித்திருந்தாலும் அவை இசைகள், உருவப்படங்கள், முறையற்ற, தவறான கருத்தாடல்களைக் கொண்டிருந்ததனால் முழுமையாகவே இஸ்லாத்தைப் பிரதிபலிக்கும் இணையத்தளமொன்றின் அவசியத்தை உணர்ந்தே அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் பின் உமர் அல் பகீஹ் அல்காமிதி அவர்கள் முல்தகாவை உருவாக்கினார்கள். முல்தகாவின் முழுமையான மேற்பார்வையாளராகத் தன்னையும் மார்க்கத்தின் பல் துறை கற்கைகளுக்கான அமர்வுப் பகுதிக்கு அஷ்ஷெய்க் ஹைதம் பின் அப்துல் ஹமீத் பின் ஹம்தான் அவர்களையும், அஷ்ஷெய்க் கலீல் பின் முஹம்மத் அஷ்ஷாஇரீ அவர்களையும் மேற்பார்வைக்காக நியமித்தார்கள். முல்தகாவின் ஆரோக்கியமான, துடிப்பான செயற்பாட்டிற்கு இவர்களிருவரின் பங்களிப்பு மேலானதாகும். இவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. அவ்வாறே இந்த இணையத்தளம் ஜனரஞ்சகமாகுவதிலும், தகுதிவாய்ந்த அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருப்பதன் மூலம் அவர்களின் அறிவுரைகளை, காத்திரமான ஆய்வுகளை முல்தகா வைத்திருப்பதிலும் முல்தகாவைக் கண்காணித்து ஆலோசனைகளை வழங்கும் கௌரவத்துக்குரிய நல்லறிஞர்களுக்கும் அளப்பரும் பங்குண்டு. அல்லாஹ் அவர்களுக்கும் அருள்பாளிப்பானாக.

முல்தகாவின் வளர்ச்சிக்குத் துணையான அறிஞர் சந்திப்புக்கள்

இவ்விணையத்தளத்தின் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் பெறும் நோக்கில் இஸ்லாமிய நாடுகளில் வாழும் தலைசிறந்த அறிஞர்களுடன் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு சந்திக்கப்பட்ட அறிஞர்கள் விபரம் பின்வருமாறு.

அஷ்ஷெய்க் ஹாதிம் பின் ஆரிப் அல் அவ்னீ
அஷ்ஷெய்க் அலியிப்னு முஹம்மத் அல் இம்ரான்
அஷ்ஷெய்க் முஹம்மத் அல் அமீன்
அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் அத்தரீபி
அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அஸ்ஸஃத்
அஷ்ஷெய்க் ஹம்ஸா அல் மலேபாரி
அஷ்ஷெய்க் அப்துல் கரீம் அல் ஹுழைர்
அஷ்ஷெய்க் அப்துர்ரஹ்மான் அல் பர்ராக்
அஷ்ஷெய்க் முஹம்மத் அம்ர் அப்துல்லதீப்
அஷ்ஷெய்க் முஅம்மர் அப்துல்லாஹ் அந்நாஹிபி
அஷ்ஷெய்க் ஸுஹைர் அஷ்ஷாவீஷ்

முல்தகாவில் தமது ஆய்வுகளைப் பதிவு செய்கின்ற தலை சிறந்த அறிஞர்களில் சிலர் பின்வருமறு.

இந்த இணையத்தளத்தின் வளர்கச்சிக்கும், எழுச்சிக்கும் அதிலுள்ள ஆக்கங்களை எழுதிய அறிஞர் பெருந்தகைகளின் பங்களிப்பு இன்றியமையாதவொன்றாகும். அபூ காலித் அஸ்ஸலமீ என்ற பெயரில் ஆக்கங்களை எழுதி வருகின்ற அஷ்ஷெய்க் முக்ரி வலீதிப்னு இத்ரீஸ் அல் முனீஸி, அஷ்ஷெய்க் மாஹிர் யாஸின் பஹ்ல், அஷ்ஷெய்க் இப்னு வஹப், அஷ்ஷெய்க் இப்ராஹிம் அல்மைலீ அபூதைமியா, அஷ்ஷெய்க் ஸியாத் அல்அலீலா போன்றவர்களைக் குறிப்பிடலாம். (தொடரும் இன்ஷாஅல்லாஹ்);

2 Responses to “முல்தகா அஹ்லில் ஹதீஸ் வரலாறு”

  1. Aarif says:

    pls give me link of multaqa tamil section
    and update a next part of this news