முஸ்லிம்களுக்கு அநியாயமிழைக்கப்பட்டால்-

நபிகளார் வாழும் போது

முஸ்லிம்களுக்கு அநியாயமிழைக்கப்பட்டால்-
——————————————————————-

1-விதவைகளானவர்களை மணமுடிப்பவர்கள் இருந்தார்கள்

2-அநாதைகளை வாழ் நாள் முழுதும் பொறுப்பெடுப்பவர்கள் இருந்தார்கள்

3-அகதிகளுக்கு தஞ்சமளிப்பவர்கள் இருந்தார்கள்.

4-கதியற்றவர்களுக்கு தொழில் வழங்குபவர்கள் இருந்தார்கள்.

இதனால் அந்த சமூகத்தின் ஆண்மக்கள் அநியாயங்களை அல்லாஹ்விற்காய் துணிந்து எதிர்கொண்டார்கள்

ஆனால் இன்று-
———————-

அவ்வாறு இல்லை இதற்கு முன் நடந்த கலவரங்கள் அதற்கு சாட்சி. தன் உயிரைக் கொடுத்துப் போராட நினைப்பவர்கள் யோசிக்கும் ஓா் அம்சம் இது மாத்திரம்தான்

எனவே
————-

இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுடனும் தற்காலிக தஞ்சமளிப்புடனும் உதவிகள் நின்றுவிடாமல் பாதிக்கப்படும் மக்களை இஸ்லாமிய உறவுகள் கைவிடாது என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களின் சமூகங்களிலும் விதைப்போமாக!

One Response to “முஸ்லிம்களுக்கு அநியாயமிழைக்கப்பட்டால்-”

  1. adiraiameen says:

    காலத்திற்கேற்ற நல்ல நினைவூட்டல், பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து, அரவணைத்து செல்ல தனித்தனி மனிதர்களாய் முயலாமலும் பிரிவினை ஏற்படுத்தும் அமைப்பாக / இயக்கமாக இல்லாமலும் இறையச்சத்தை மட்டும் நம்மை ஒருங்கிணைக்கும் காரணியாக கொண்டு மேற்காணும் அறிவுரையை இணைந்து செயல்படுத்த வாரீர் என அழைக்கிறோம்.

    அதிரைஅமீன்
    துபை