மௌலவி பீஜே அவர்கள் இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்கள்-(முதல் பாகம்)

ததஜ தலைவர் மௌலவி பீஜே அவர்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது அல்லது பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை அல்லது நிதர்சன உண்மைக்கு மாற்றம் என்று கூறி இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்களை முடிந்தவரை தொகுத்து மக்கள் மத்தியில் வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் முதல் பகுதியாக இதனை வெளியிடுகின்றேன்.

2003ம் ஆண்டு (ஸபர் 1424 ஹி) வெயியீடப்பட்ட 2nd Edition பீஜெ-யின் தர்ஜமா-வில் அடிகுறிப்பு எண் 357ல் (பக்கம்- 1198 மற்றும் 1199)

…சில ஹதீஸ்கள் குர்ஆனுடன் எந்த வகையிலும் இணைக்க முடியாத நிலையில் உள்ளன. ஏற்கத்தக்கவை என முடிவு செய்யப்பட் ஹதீஸ்களில் இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50-க்கும் குறைவான உள்ளன.

இவற்றை அப்படியே ஏற்பதால் குர்ஆனின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்களை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும்…
– பீஜே குர்ஆன் தர்ஜமா

ஆரம்பகாலங்களில் 50-க்கும் குறைவான ஹதீஸ் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்றவர்கள் இன்று எத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரித்துகொண்டுயுள்ளார்கள் என்பதனை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

        (79   80  ஹதீஸ்கள் 26/ஏப்ரல்/2017  அப்டேட் செய்யப்பட்டது)

 

79-கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை குத்தியிருந்தால் மறுமையில் அதற்கு பலிதீர்க்கும் (முஸ்லிம்)

80-யூதர்களை கர்கத் எனும் மதம் காக்கும் (புகாரி)

 

         (81வது  ஹதீஸ் 26/ஜூலை/2017  அப்டேட் செய்யப்பட்டது)

 

81-ஹஜ் காலங்களில் வியாபாரம் செய்யலாம் என்ற ஹதீஸ் (புகாரி)

 

 (82, 83, வது  ஹதீஸ் 7/ஓகஸ்ட்/2017  அப்டேட் செய்யப்பட்டது)

82-மூஸா அலைஹிஸ்ஸலாம் உடல் குறையற்றவர் (புகாரி)

83-தன் உடலை எரித்தவறுக்கு மறுமையில் மன்னிப்பு (புகாரி)

 

 

1- நபிகளாருக்கு சூனியம் பாதித்ததை சொல்லும் ஹதீஸ் (புகாரி,முஸ்லிம்)

2- அஜ்வா ஈத்தம் பழம் நஞ்சுக்கெதிரான மருந்து (புகாரி,முஸ்லிம்)

3- கண்ணேறு உண்மையானது (புகாரி,முஸ்லிம்)

4- ஜஃபரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட கண்ணேறு பாதிப்பு (முஸ்லிம்)

5- உம்மு ஸலமா வீட்டுப் பெண்ணுக்கு கண்ணேறு பாதிப்பு (முஸ்லிம்)

6- நபித்தோழர் ஸஹ்ல் கண்ணேரால் பாதிப்புறல் (இப்னு மாஜாஹ்)

7- கண்ணேறுக்கு மருத்துவம் (முஸ்லிம்)

8- கத்ருக்கும் கண்ணேறுக்கும் இடையிலான தொடர்பு (முஸ்லிம்)

9- கண்ணேறுக்காக  கழுவிக்கேட்டல் (முஸ்லிம்)

10-கண்ணேறுக்கு எதிரான ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமின் துஆ (முஸ்லிம்)

11-கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிற்கு நபிகளாரின் கட்டளை (முஸ்லிம்)

12- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை அனஸ் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

13- நபியவர்கள் தன் பேரர்களுக்கு கண்ணேறிலிருந்து பாதுகாக்கக் கேட்ட துஆ (முஸ்லிம்)

14- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

15- கண்ணேறு உண்மை என்ற ஹாபிஸ் தமீமி ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

16- கண்ணேறு உண்மை என்ற இப்னு அப்பாஸ்  ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

17- கண்ணேறுக்காக வுழூ எடுத்தல் (அபூ தாவூத்)

18- கண்ணேறு உண்மை என்ற ஆமிர்  ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு(இப்னு மாஜாஹ்)

19- கண்ணேறிலிருந்து நபிகளார் பாதுகாப்புத் தேடுதல்(திர்மிதி)

20- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை புரைதா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

21-நபியவர்களுக்கு ஆயிஷா  ரலியால்லாஹு அன்ஹா அவர்கள் கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேடல்

22- தந்தை உறவை மறுத்தல் பற்றிய ஹதீஸ் (புகாரி)

23- 5 தடவை தாய்ப் பாலருந்தினால் உறவு முறை உண்டாதல்(முஸ்லிம்)

24- மணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து  கொல்லல் பற்றிய வசன ஓதல் மாற்றம் உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)

25- மணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொல்லல் பற்றிய வசன ஓதல் மாற்றம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பு(இப்னு மாஜா)

26- பிஃரு முஊனாவில் கொல்லப்பட்டவர்கள் பற்றி வசன ஓதல் மாற்றம் (புகாரி,முஸ்லிம்)

27- ஆதமுடைய மகனிற்கு இரண்டு தங்க பள்ளத்தாக்குகள் இருந்தால் என்ற வசன ஓதல் மாற்றம் பற்றிய அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு(முஸ்லிம்)

28- ஆதமுடைய மகனிற்கு இரண்டு தங்க பள்ளத்தாக்குகள் இருந்தால் என்ற வசன ஓதல் மாற்றம் பற்றிய உபை ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு(முஸ்லிம்)

29- அஸர் தொழுகை பற்றிய வசன ஓதல் மாற்றம் (முஸ்லிம்)

30- ஸூரதுல்லைலின் வசன ஓதல் மாற்றம் (புகாரி)

31-  கருஞ்சீரகத்தின் சிறப்பு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)

32-கருஞ்சீரகத்தின் சிறப்பு அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)

33-மாலையில் ஓதும் அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாத் என்ற பிரார்த்தனை (முஸ்லிம்)

34- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு

35- பல்லியைக் கொல்லுமாறு  நபியவர்களின் கட்டளை உம்மு ஷரீக் ரலியால்லாஹு அன்ஹாவின் அவர்களின் அறிவிப்பு (புகாரி)

36- …………………..குர்ஆனைத் தொகுக்க இரண்டு சாட்சி (புகாரி)

37- பல்லியைக் கொல்லுவதன் நன்மை பற்றிய அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

38- ……………..குர்ஆனைத் தொகுக்க இரண்டு சாட்சி (மஸாஹிப்)

39- பல்லியைக் கொல்லுமாறு  நபியவர்களின் கட்டளையை ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹா நடைமுறைப்படுத்திவிட்டு நபிகளாரின் கூற்றை விளக்கும் அறிவிப்பு (நஸாஈ)

40- ஸாலிம் ரலியல்லாஹு அவர்களின் ஹதீஸ்(முஸ்லிம்)

41- 100 கொலை செய்தவனின் பாவமன்னிப்பு (புகாரி)

42- உம்மு ஹராம் ரலியால்லாஹு அன்ஹா  வீட்டில் நபிகளார் உறங்குதல்(புகாரி,முஸ்லிம்)

43- பிலால் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் கடன் (அபூ தாவூத்)

44- குஸைமா ரலியால்லாஹு அன்ஹு இரு சாட்சிகளுக்கு சமம் (புகாரி)

45- குஸைமா ரலியால்லாஹு அன்ஹு இரு சாட்சிகளுக்கு சமம் என்று நபிகளார் சான்று பகரக் காரணமான ஹதீஸ்

46- ஹுதைபியாவில் நபிகளார் மீது நபித்தோழர்கள் காட்டிய அளவற்ற அன்பு (புகாரி)

47- ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 100 திருமணங்கள் (புகாரி)

48- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மலகுல் மௌத்தும் (புகாரி)

49- பாதிமா பின்து கைஸ் ரலியால்லாஹு அன்ஹா அவர்களின் விவாகரத்து (புகாரி)

50- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

51- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

52- 7 நாட்களில் அல்லாஹ் படைத்த படைப்புக்களின் விபரங்கள் (முஸ்லிம்)

53- இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தையின் மறுமைத் தீர்ப்பு (புகாரி)

54- மாடும் ஓநாயும் பேசியதாக வரும் ஹதீஸ் (புகாரி,முஸ்லிம்)

55- எலியை பனூ இஸ்ரேலின் உருமாற்றத்துடன் சம்பந்தப்படுத்தி நபிகளார் சந்தேகித்த செய்தி (முஸ்லிம்)

56- ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் பற்றிய ஹதீஸ் (புகாரி)

57- சூரியனின் ஸுஜூத் (புகாரி)

58- அஸர் தொழுகையை வேண்டுமென்று விட்டவனக்கு தரித்திரியம் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

59- அஸர் தொழுகையை வேண்டுமென்று விட்டவனக்கு தரித்திரியம் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு  (புகாரி)

60- தரித்திரியம் இருந்தால் 3 இல்  இருக்கும். இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

61- தரித்திரியம் இருந்தால் 3 இல்  இருக்கும் ஸஹ்ல் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

62- இப்னு உமரின் மனைவியை தலாக் செய்யுமாறு உமரிட்ட கட்டளைக்கு வழிப்பபடுமாறு நபியவர்களின் உத்தரவு. (திர்மிதி)

63- தொழுகை ஆரம்பமாக 2 ரக்அத்துக்களாக கடமையாக்கப்படல் (புகாரி)

64-ஆதம் அலைஹிஸ்ஸலாம் தன் வயதில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு மறந்துவிடல் (திர்மிதி)

65- சிறு வயதில் நபிகளாரின் இதயம் பிளக்கப்பட்டு சீர் செய்யப்படல் (முஸ்லிம்)

66- குனூத் ஓதுதலை தடுத்து இறங்கிய அல் குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸ் (முஸ்லிம்)

67- ஸூரதுல் புர்கானை  2விதமாக ஓதல் (புகாரி)

68- வரஹ்துக மின்ஹுமுல் முக்லஸீன் என்ற வசன ஓதல் மாற்றம் (முஸ்லிம்)

69- ஸூரா தரியாதின் வசன ஓதல் மாற்றம் (அஹ்மத்)

70- ஸூரா பய்யினாவின் வசன ஓதல் மாற்றம் (அஹ்மத்)

71- மணமுடித்தவரின் விபச்சாரத் தண்டனைகள் கல்லெறிந்து கொல்லல் வசன ஓதல் மாற்றம் (இப்னு மாஜாஹ்)

72- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணத்திற்கான இறைவனின் முன்னறிவிப்பு (முஸ்லிம்)

73- விவாசய உபகரணங்கள் மூலம் இறைவன் இழிவைக் கொடுத்தல். (புகாரி)

74- ஈத்தம்பழம் உள்ள வீட்டவர்க்கு பசியேற்படாது (முஸ்லிம்)

75- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

76- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

77- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

78- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

ததஜ குர்ஆனுக்கு முரண்படுகிறது என ஒரு ஹதீஸை மறுக்கிறது என்றால் அவர்களது எல்லா உலமாக்களும் ஒன்று கூடி ஆய்வு செய்யாமல் மறுக்கமாட்டார்கள்என்பது அவர்களது அறிவிப்பு.

எனவே பீஜெ மறுக்கிறார் என்பதும் அவர்களது கிளை உலமாக்களில் யாராவது ஒருவர் மறுப்பதும் ததஜ பொது அறிவிப்பின் மூலம் மறுப்பதும் சமமே.

நான் பட்டியிலிட்டுள்ள

“மௌலவி பீஜே குர்ஆனுக்கு முரண்படும் என்று மறுத்த ஹதீஸ்கள்” என்பதை

அப்படியே புரிந்துகொள்ள வேண்டும். நான் முரண்படுகிறது என்று பட்டியலில் இட்ட ஹதீஸ்களில் ஒன்று ஒன்லைன் பீஜேயில் ஆதாரப்புர்வமானதாக எழுதப்பட்டிருந்தால் அது அவர்களே அவர்களுக்குள் முரண்பட்டுள்ளார்கள் என்பதற்குத்தான் ஆதாரம் . நான் அவர்கள் மறுத்ததற்கான ஆதாரத்தை வைத்திருக்கிறேன்.

34 Responses to “மௌலவி பீஜே அவர்கள் இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்கள்-(முதல் பாகம்)”

 1. Abu Haajar Ahamed Firdhou says:

  *2014ம் ஆண்டின் நவம்பர் மாத நிலவரப்படி* எனக் குறிப்பிடவும். இவர்களின் ஆய்வு தொடருமாம். எனவே இந்த பட்டியல் மேலும் நீளும் அல்லது ‘அஹ்லே குரான்’ என தங்களை அழைத்துக்கொள்ளும் முன்கர் அஹாதீஸ் என்னும் குஃப்ஃபார்களுடன் இவர்களும் வெகு சீக்கிரத்தில் சங்கமம் ஆகலாம்.

 2. Mohamed Aslam says:

  Assalamu alaikum.

  Aayisha(raliyallahu anhaa) awarhal arivipathaaha saheeh muslimil irukum “10 murai paal kudithaal uravu yerpadum enru irunthathu pinnar maatrapattuvittathu” enra Hadeesai konjam explain panreengala

 3. Fouzul Ameen says:

  79. சஹீஹ் புஹாரி 3570. ரசூல் ( ஸல் ) மிஂராஜ் சென்றதை அறிவிக்கும் ஹதீஸ். மிஂராஜை அவர் மறுக்கவில்லை. மிஂராஜ் நபியாக அறிவிக்கப்படுவதற்கு முன்னாள் சென்றதாக இந்த ஹதீஸ் கூறுவதாக தானாக ஒரு விளக்கத்தை எடுத்து கொண்டு இதை மறுக்கிறார். ஆனால் அந்த ஹதீஸ் அவ்வாறு கூறவில்லை. தமிழாக்கம் படியுங்கள் சகோ உங்களுக்கே புரிய வரும் அறிஞர்(?) பிஜே யின் மடமைத்தனம். மறுக்கப்பட்டவைகளை ஆவனப்படுத்தியதற்கு நன்றி.

 4. Abu Haajar Ahamed Firdhous says:

  இஸ்லாத்தை விட்டு மதம் மாறி முர்தத் ஆனோர் கொல்லப்பட வேண்டும் என்ற புஹாரியில் பதிவான ஹதீஸும் இவர்களால் மறுக்கப்படுகிறது. (பார்க்க: 2008 ஜூலை ஏகத்துவம் ”இந்த மோசமான சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சிறந்த சான்றாக உள்ளது”—-http://www.onlinepj.com/egathuvam/egathuvam_2008/jul_2008/pdf-gen/Intro.php#.VHlWajGUeth). இதையும் பட்டியலில் சேர்க்கவும்

 5. zuabir says:

  can u post with arabic text

 6. Ismail Salafy says:

  38- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹாவின் அவர்களின் அறிவிப்பு (புகாரி)

  தவறாக முஜாஹித் கூறியுள்ளார்.அதற்கு மாற்றமாகவே புகாரியில் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிப்பு வந்துள்ளது.மாற்றவும்.

  ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
  நபி(ஸல்) அவர்கள், ‘பல்லி தீங்கிழைக்கக் கூடியது” என்றார்கள். அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை. நபி(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டதாக ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கருதிக் கொண்டிருக்கிறார்கள். புகாரி 3306.

  • mujahidsrilanki says:

   ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்கள் பல்லியைக் கொல்லக் கட்டளையிட்டதை தான் நபியவர்களிடமிருந்து கேட்டதில்லையெனவும் ஸஃத் கேட்டதாக நம்புவதாகவும் இந்த செய்தியில் சொல்கிறார்கள். அதனாலேயே இந்த ஹதீஸைப் பதிவு செய்தேன். ஸஃத் வழியாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பாக இதைக் கொள்ளலாம். ஸஃத் ரழயில்லாஹு அன்ஹு வழியாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் அறிவிப்பு என்று வாசகத்தை மாற்றிக்கொள்கிறேன்.

   புகாரியிலும் முஸ்லிமிலும் 100க் கணக்கான இடங்களி َزَعَم என்ற அரபுப் பதம் சொன்னார் அறிவித்தார் நம்புகிறார் என்ற கருத்திலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நபிகளார் சொன்னதாக ஸஃத் நம்புவதாக ஆயிஷா சொல்வதாகவோ அல்லது அவரது மாணவர் உர்வா சொல்வதாகவோ அல்லது ஸுஹ்ரி சொல்வதாகவோ இதைக் கருதலாம். எவ்வாறாக இருப்பினும் ஸஃத் ரலியல்லாஹு அன்ஹுவின் அறவிப்பை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.

   • Ismail Salafy says:

    அந்த ஹதீஸை அவர்கள் நிராகரிக்கவில்லை.தன்னுடைய கருத்துக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்.அதை தான் நான் சுட்டிக்காட்டினேன்.நீங்கள் அந்த ஹதீஸையும் நிராகரிக்கிறார்கள் என்று தவறாக பதிந்துள்ளீர்கள்.

    • mujahidsrilanki says:

     அவர்கள் ஆதாரத்திற்கு முன்வைக்கும் ஹதீஸ் நான் இங்கு பட்டியலில் சேர்த்த ஹதீஸ் அல்ல. நான் பட்டியலில் சேர்த்த ஹதீஸை அவர்களின் பொதுவான வாதத்தில் நிராகரித்துவிட்டார்கள். அவர்கள் நிராகரிப்பதாக நான் பதிவு செய்த ஹதீஸ் இப்னு ஷிஹாப் வழியாக வரக்கூடிய ஸஈத் இப்னு உபைரின் அறிவிப்பு (3306)

     அவர்கள் ஆதாரம்காட்டும் ஹதீஸ் இப்னு ஷிஹாப் வழியாக ஸஈத் இப்னு உபைர் இடம்பெறாத அறிவிப்பு. அது 1831 இலக்கத்திலே இடம்பெறுகிறது. அதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்துள்ளார்கள் அவர்களது ”பல்லிக்குப் பகுத்தறிவு பைத்தியத்தில் ஜாக்” என்ற கட்டுரை அதற்கு மிகப்பாெிய சாட்சி.

     • Ismail Salafy says:

      அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டதால் தான் பல்லியை கொல்ல வேண்டும் என்ற கருத்தில் உள்ள ஹதீஸ்களை தான் மறுக்கிறார்கள். பல்லியை தீங்கு தரக்குடியது என்ற அடிப்படையில் அதைக் கொல்லலாம் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களை அவர்கள் நிராகரிக்கவில்லை.அதற்கு ஆதாரமாக ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸை தான் ஆதாரமாக காட்டுகிறார்கள்.
      பார்க்கவும்.
      http://www.onlinepj.com/books/hadith_kuranirku_muranpaduma/#.VHwA0_mSzp4

     • mujahidsrilanki says:

      நீங்கள் சொல்வதே சரியானது. பல்லியைக் கொல்லச் சொல்லுமாறு நபியவர்கள் ஏவிய அறிவிப்புக்களில் இந்த 2 அறிவிப்புகளையும் நீக்கிவிட்டேன் தொடர்ந்து சுட்டிக்காட்டியமைக்கு ஜஸாகுமுல்லாஹு கைரா.

 7. Ismail Salafy says:

  நீங்கள் குறிப்பிட்டுள்ள சில ஹதீஸ்கள் எனக்கு மேலும் சந்தேகமாக இருக்கிறது.அவர்களே இதுபோன்ற ஒரு பட்டியல் வெளியிடாத போது நீங்களாக அவர்கள் மறுக்கும் ஹதீஸ் பட்டியல் வெளியிடுவது சரியான வழிமுறையில்லை என்று நான் கருதுகிறேன்.இதை முழுமையாக நீக்குவதே சிறந்தது.

  • mujahidsrilanki says:

   நீங்கள் சந்தேகிக்கும இலக்கங்களை சுட்டிக்காட்டினால் பரிசீலக்கலாம். பட்டியலை ஏன் நீக்க வேண்டும் என்பதற்கான எந்தவிதமான ஞாயமான காரணமும் எனக்குத் தெரியவில்லை.

   • Ismail Salafy says:

    51- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

    இப்னு உமர்(ரலி) கூறியதாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ்.சரிபார்க்கவும்

    • mujahidsrilanki says:

     ஆம் அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கின்றனர். இதில் எதனை சரிபார்க்கச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை

     • Ismail Salafy says:

      அது அயிஷா(ரலி) விளக்கம் கொடுக்கும் ஹதீஸ் அதை அவர்கள் மறுக்கவில்லை.புஹாரி ஹதீஸ் எண்னை குறிப்பிடவும்.

     • mujahidsrilanki says:

      ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா இப்னு உமர் நபிகளார் தொட்டும் அறிவிப்பதை மறுக்கவில்லை. நபிகளார் சொன்னார்கள் ஆனால் வாசகம் அவ்வாறல்ல என்றுதான் மறுக்கிறார். ஆனால் இப்னு உமருடைய அறிவிப்பில் எந்தக் கருத்தை மறுத்தார்களோ அதே கருத்து ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹும் அவர்களுடைய செய்தியிலும் இருப்பது தாங்கள் அறிந்ததே. எனவே இப்னு உமர் சொன்ன வாசகங்களை மறுப்பதை ஹதீஸை மறுத்ததாகவே கொள்ளவேண்டும்.

     • Ismail Salafy says:

      உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் கருத்தில் அமைந்த ஹதீஸ்களை ஆயிசா(ரலி) அவர்கள் குர்ஆன் வசனங்களின் துணைக்கொண்டு எப்படி விளக்கினார்கள் என்ற தங்களின் கருத்துக்கு ஆதாரமாக வைக்கின்றனர்.
      பார்க்க:
      http://www.onlinepj.com/books/hadith_kuranirku_muranpaduma/#.VIBFkPmSzp5
      இப்னு உமர்(ரலி) அவர்களின் கருத்தை ஆயிசா(ரலி) அவர்கள் தான் நிராகரிக்கிறார்கள்.
      மேலும் நாமும் இப்னு உமர் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை ஆயிசா(ரலி) அவர்களின் விளக்கத்துடனேயே ஏற்றுக்கொள்கிறோம்.என்பதை கவனத்தில் கொள்ளவும்.

      “குடும்பத்தினர் அழுவதால் மண்ணறையில் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர்(ரலி) கூறினார் என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா(ரலி), ‘(நபி – ஸல் – அவர்கள் அப்படிச் சொல்லவில்லை), ‘இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள்” என்று கூறினார்கள்.
      புஹாரி 3978

     • mujahidsrilanki says:

      முஃமினுக்குப் பதிலாக காபிர் என்று வரவேண்டும் என்பது ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கொடுத்த விளக்கம். ”விளக்கங்களுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்ற வசனத்திற்காக அவர் அந்த ஹதீஸை மறுக்கவில்லை என்று சாெல்ல முடியாது. இந்த ஹதீஸை அவர் முதலில் பல கேள்விகள் கேட்டு நிராககரிக்கிறார்.

      இன்னும் சொல்வதென்றால் உமர் தனக்காக ஸுஹைப் அழுததற்காக கேட்ட கேள்வியும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனிடத்தில் இப்னு உமர் அவர்கள் கேட்ட கேள்வியும் தெளிவாக முஃமின் அழுகையின் மூலம் வேதனை செய்யப்படுவான் என்பதை உணர்த்துகிறது. அப்படியிருக்க ”விளக்கங்களுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்று சொல்வது மறுக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கையை குறைக்க பீஜேயெடுக்கும் முயற்சி.

      நாம்தான் இதை மறுக்கவில்லையே என்று வாதம் வைப்பார்களாயின் அதற்கு அவர் பிறருக்கு சொன்ன பதில்கள் என்னிடம் உள்ளன.

      ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் 1288 ஹதீஸ் பீஜேயின் வாதங்களுடன் நேரடியாக முரண்படுகிறது.

      அடுத்து அவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்து என்று அந்த ஹதீஸுக்கு சொல்கிறார். ஆனால் உமரோ நபிகளார் சொன்னதாகச் சொல்கிறார்

     • Ismail Salafy says:

      அவர்கள் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்ட ஹதீஸை மறுக்கிறார்கள் என்றால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று தான் மறுக்கிறார்கள். ஆனால் இந்த ஹதீஸை பொருத்த மட்டில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று மறுக்கவில்லை.நபி(ஸல்) அவர்கள் கூறியதை சிலசமயம் சஹாபாக்கள் தவறாக விளங்கிக்கொள்ள கூடும் அப்பொழுது குர்-ஆன் வசனங்கள் மூலம் ஆயிசாரலியல்லாஹு அன்ஹு விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்ற கருத்திலேயே இந்த ஹதீஸ்ஸை அவர்கள் அனுகிறார்கள் .

      நீங்கள் குறிப்பிடும் புஹாரி ஹதீஸ் 1288 கருத்தில் அமைந்த முஸ்லிம் 1694 ஹதீஸை தான் அவர்கள் onlinepj.comலும் ஆதாரமாக குறிப்பிடுகின்றனர்.

      ///
      உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது அவர்களிடம் சகோதரரே! நண்பரே! எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஸுஹைபே எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா? என்றார்கள்.

      உமர் (ரலி) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக. அல்லாஹ்வின் மீதாணையாக (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (53 : 43) ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (35 : 18) (என்று குர்ஆன் கூறுகிறது) குர்ஆனே உங்களுக்குப் போதும் என்றார்கள்.

      அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

      நூல் : முஸ்லிம் (1694)

      ///

 8. கீழ்காணும் ஹதீஸையும் ததஜவினர் மறுப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

  قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ مَا بَالُ أَقْوَامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلاَتِهِمْ ‏”‏‏.‏ فَاشْتَدَّ قَوْلُهُ فِي ذَلِكَ حَتَّى قَالَ ‏”‏ لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ ‏”‏‏.‏

  தொழுகையில் வானத்தை நோக்கி பார்வையை செலுத்துபவர்களின் பார்வை பறிக்கப்படும் என்று எச்சரிக்கும் ஹதீஸ் (ஸஹீஹ் புஹாரி 750). இதுவரை தத ஜமாத்தின் கவனத்திற்கு இந்த ஹதீஸ் வரவில்லை என்றே நினைக்கிறேன். மறுப்பார்கள், பின்னர் செய்து காட்டச்சொல்வார்கள்; இதுதான் இவர்களின் வழக்கமான வழிமுறை.

 9. Yakkoob says:

  நீங்கள் சொல்லும் ஹதிஸ்களின் இலக்கங்களை. குறிப்பிட்டால் பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும் இன்னும் சந்தேகம் வருவதக்கும் வழி வகுக்காது இந்த தொடரை தொடர்ந்து செய்யுங்கள் .அப்பதான் மறுக்கும் ஹதிஸ் எது எத்தனை என்று மக்களுக்கு தெரியவரும்

 10. Mansoor says:

  சில ஹதீஸ்களுக்கு ஹதீஸ் நூல் பெயரே இல்லை ஹதீஸ் எண் இல்லை.உங்கள் நோக்கம் மக்களை குழப்பி TNTJ மறுக்கும் ஹதீஸ்களை அதிகபடுத்தி காட்ட வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

  • mujahidsrilanki says:

   அப்படி நாம் எந்த ஹதீஸையாவது அதிகப்படுத்திக் காட்டியிருந்தால் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வோம்

 11. Mansoor says:

  34- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு .

  புஹாரி,முஸ்லிம் 2 கிதாபுளையும் பல்லி ஹதீஸ் போட்டுடிங்க,அப்புறம் 2 பல்லி ஹதீஸ் நீக்கிட்டிங்க .பிறகு இது எந்த கிதாபு பெயர் இல்லாம?

  • mujahidsrilanki says:

   புரியவில்லை

   • Mansoor says:

    34வது குறிப்பில் நூல் பெயர் இடம்பெறவில்லை.அந்த நூலின் பெயர் குறிப்பிடவும்.

 12. Ismail Salafy says:

  75- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

  76- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

  77- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

  78- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

  இந்த ஹதீஸ்களை அவர்கள் நிராகரித்தற்கான ஆதாரம் இருந்தால் கொடுக்கவும்.பயனுள்ளதாக இருக்கும்.

 13. Sheik Syed Ibrahim says:

  Assalamu alaikum wa rahmatullahi wa barakaathuhu,

  Alhamdulilah. Islamkalvi.com and mujahid srilanki.com are providing authentic islamic knowledge upon the light of Quran and Sunnah according to the way of salaf.I have one question to ask,Is it permissible to pray behind Tntj for upcoming Eid Prayers?
  why i am asking this question is I am living in ( Pathamadai)Tirunelveli,Tamilnadu.In my locality the sunnath jamaath people are praying according to hanafi madhab of eid prayer which is against sunnah of authentic hadiths.so,every year i used to pray behind tntj.But now,Tntj is going far away from Quran and Sunnah,I think they are going in the way of Mu’tazillahs.So,please give an answer,is it permissible to pray behind tntj now a days for upcoming eid prayers?

  May ALLAH reward you for your sincere efforts and May ALLAH guide us all.Aameen

 14. MOHAMED HAMTHAN says:

  அஸ்ஸலாமு அழைக்கும்…. எனது கேள்வி (ஊஹது மற்றும் பத்ரு போர்ர் ) இதில் எந்த தோழர்களின் முன் பின் பாவங்கள் மன்னிகபட்டாதக நபி சள்ளள்ளஹு அலைஹி வஸ்ஸலாம் கூறினார்கள் ., இன்ஷாஅல்லாஹ் kindly reply me

 15. MOHAMED HAMTHAN says:

  அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்…

  என்னிடம் ஒரு சகோதரர் இந்த கேள்வி மறுக்க படும் ஹதீஸில் ஈதுஉம் ஒன்று சொல்கிறார் இதற்கு நான் எவ்வாறு விளக்கம் கூறுவது.

  மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மலகுல் மௌத்தும் (புகாரி)
  புஹாரி : 3407,

  அந்த சகோதரர் குடுத்த குரான் ஆதாரம் (6:61,6:50,21:27,66:6)

  இதற்கு இன்ஷால்லாஹ் விளக்கம் தருக.

  • mujahidsrilanki says:

   walaikumussalam

   பட்டடியலை வாசித்துவிட்டு பின்னூட்டம் இடவும்

 16. m md mohideen says:

  விளக்கங்களை பக்கமிட்டால் பலனாகும். அல்லாஹ் அருள் செய்வானாக.

Derek MacKenzie Womens Jersey