ரஜப் மாத துஆ

“நபியவர்கள் ரஜப் மாதத்தை அடைந்தால் அல்லாஹம்ம பாரிக் லனா பீ ரஜப் வ ஷஃபான் வபல்லிக்னா ரமலான் எனப் பிரார்த்திப்பார்கள் என்று வரும் செய்தி பஸ்ஸார் , இப்னுஸ் சுன்னி 659, சுஃபுல் ஈமான் 3815 , போன்ற கிரந்தங்களில் நபித்தோழர் அனஸ் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. இந்த செய்தியில் ஸாஇதா இப்னு அபிர்ருக்காத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் இச்செய்தியை ஸியாத் இப்னுன் நுமைரி என்பவர் வழியாக அறிவிக்கிறார். இருவருமே மிகவும் பலவீனமானவர்கள்.

1.இமாம் புகாரி அபூ ஹாதிம் போன்றோர் ஸாஇதாவை மிக பலஹீனமானவர் என்று விமரிசித்துள்ளனர்.

2.அதே போன்று ஸியாத் அந்நுமைரி ஒருபொருட்டே இல்லை என இப்னு மஈன் விமரிசித்துள்ளார்.

இப்னு ஹஜர் அவர்கள் தப்யீனுல் அஜப் என்ற தனது ரஜப் மாதம் பற்றிய நூலில் இந்தச் செய்தியை பலஹீனப்படுத்தியுள்ளார். பார்க்க பக்கம் 40. இந்த பலஹீனமான செய்தியை குறுஞ் செய்திகள் மூலம் பலர் பரப்பி வருகின்றனர். அவர்கள் இது பலஹீனமான ஒரு செய்தி என்று உணர்ந்துகொள்ள இன்னொரு குறுஞ்செய்தி மூலம் சகோதரர்கள்  தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறோம்

Comments are closed.