வட்டியும் சூழல் நிர்பந்தங்களும்

Post by mujahidsrilanki 25 July 2011 கட்டுரைகள், பொருளியல்

பொதுவாக இன்றைய பணவியலைப் பற்றிப் பேசும் போது ஒரு அடிப்படை விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக வங்கி பற்றிப் பேசும் போது இவ்வடிப்படை மிக முக்கியமானதாகும். இன்றைய வங்கி முறைமை வட்டியை அடிப்படையாகக் கொண்டது. எங்களுக்கும் வங்கிக்கும் எந்த விதத் தொடர்பும் இருக்கக் கூடாது. காரணம் அது ஒன்றில் :

1-நேரடியாகவே வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது,

2-மறைமுகமாக வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது,

3-வட்டியை அடிப்படையாகக் கொண்டியங்கும் அவைகளுக்குத் துணைபோவதாக இருக்கும்.

ஆக உலகில் எந்த அறிஞரும் வங்கியோடு தொடர்பு மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்றே தீர்ப்புச் சொல்ல வேண்டும். இன்று வங்கியோடு தொடர்புள்ளவர்களை 3 வகைப்படுத்தலாம்.

1.இஸ்லாம் வட்டியைத் தடை செய்கிறது அது பாரதூரமான கொடும்பாவம் என்பதையெல்லாமல் கணக்கில் எடுக்காமல் வங்கியுடன் மனவிருப்பத்துடன் எல்லா வகையிலும் தொடர்புள்ளவர்கள். இவர்கள் வட்டியெடுப்பவர்கள் மற்றும் கொடுப்பவர்கள் அதற்கு துணைபோபவர்கள்.

2.இஸ்லாம் வட்டியைத் தடை செய்கிறது. எனவே வங்கியுடனான தொடர்பை மட்டுப்படுத்தி ஆனால் அவசியமா இல்லையா என்பதைப் பாராது வங்கியின் ஒரு சில பகுதிகளை தாரளாமாகப் பயன்படுத்துபவர்கள். உதாரணமாக: நடைமுறைக் கணக்கு, சேமிப்புக் கணக்கு, வங்கிதரும் ஸில்வர்காட் கோல்ட் கார்ட் கடன் வசதிகள்… என இப்பட்டியல் நீளும். இவர்கள் வங்கியோடு இது போன்ற தொடர்புகள் வைப்பது தவறில்லை என எண்ணி அதில் தாராளம் காட்டுபவர்கள்.ஆனால் வங்கியுடன் இதர விடயங்களில் தொடர்பகொள்வது ஹராம் என்ற உறுதியான நம்பிக்கையிலுள்ளவர்கள்

3. வங்கியுடனோ வட்டியைத் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த நிறுவனங்களுடனோ கொடுக்கல் வாங்கல் தொடர்பு வைப்பது ஹராம் என்பதை அறிந்து வங்கியுடன் எந்த விதத் தொடர்பையும் வைக்கக் கூடாது என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள். ஆனால் தவிர்க்க முடியாத எந்த வகையிலும் வங்கி மூலமன்றி செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கும் விடயங்களில் மாத்திரம் தொடர்பை பயன்படுத்தி விட்டு வங்கியைத் தவிர்ப்பவர்கள்.அந்த நிலையிலும் அதை வெறுப்போடும் மன விருப்பமின்றியும் செய்பவர்கள். அதே நேரம் தாம் இந்த நிர்பந்த சூழலில் இதைப் பயன்படுத்துகிறோம் என்பதற்காக அதை அடிப்படையிலேயே ஹலால் என்று நினைக்கமாட்டார்கள். இது ஹராமானததான் ஆனால் எனக்கு இதனூடாக அன்றி இதைச் செய்ய முடியாது என்பதனால் பயன்படுத்துகிறேன் என்ற எண்ணத்தோடுள்ளவர்கள்.

இந்த 3வது நிலையில் உள்ளவர்களை அல்லாஹ்  குற்றம் பிடிக்கமாட்டான் என்றே மார்க்க அடிப்படையில் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. காரணம் இங்கே நாம் செய்யப் போகும் அந்த வியாபாரமோ அல்லது கொடுக்கல் வாங்கலோ அடிப்படையில் ஹலாலலானது. நாம் செய்யப்போகும் அந்தத் தொழில் அல்லது ஒரு செயற்பாடு வங்கியுடனானது அல்ல. ஆனால் வங்கி மூலமே செய்ய வேண்டியிருக்கிறது . அதற்கு  இந்த வட்டியை அடிப்படையாகக் கொண்ட சட்டம் குறுக்காக நிற்கிறது. எனக்கு இஸ்லாம் அனுமதித்த ஒன்றைச் செய்ய அது எனக்குக் குறுக்காக நிற்கிறது. இப்பொழுது நான் குற்றவாளியல்ல. கப்பம் கேட்கும்போது வீடு போய்ச் சேர அல்லது வியாபாரத்தை தொடர்ந்து நடத்த வேறு வழியின்று அதை வழங்குவது குற்றமாகாது. அதுபோன்ற ஒன்றே இது. இந்த அடிப்பைடயில்தான் நாம் வாகனங்களை பயன்படுத்துகிறோம். விமான சீட்டுக்களை வாங்குகிறோம். வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்கிறோம். மேற் சொல்லப்பட்ட 3இலும் இன்ஸூரன்ஸ் (கப்பம்) இருக்கிறது. ஆனால் அது நாமாக விரும்பிக் கேட்கவில்லை. நாம் வாகனம் ஓட்டுவது வாங்குவது விற்பது இஸ்லாம் எங்களுக்க அனுமதித்த ஒன்று. அதற்கு குறுக்காக இந்த தேட் க்ளாஸ் இன்ஸூரன்(கப்பம்) நிற்கிறது. அதற்காக வாகனம் வாங்குவது ஹராம் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. நாம்  விமானச் சீட்டுக்கு பணம் செலுத்தும்போது இன்ஸூரன்ஸிற்கும் சேர்த்துத்தான் அறவிடப்படுகிறது. விமானத்தில் பயணப்பிது இஸ்லாம் எங்களுக்கு அனுமதித்த ஒன்று. அதற்கு குறுக்காக இந்த வட்டிச் சட்டம் வந்தால் நாம் ஹஜ்ஜுக்குப் போவது ஹராம் என்று அர்த்தமாகாது. இது நாங்கள் விரும்பிய ஒன்றல்ல. அதுபோன்று இஸ்லாத்தின் தூய்மைக்கு எதிரான மனித கலாச்சாரத்திற்கு எதிரான லட்சக்கணக்கான இணைதளங்கள் மக்களை வழிதவறச் செய்துகொண்டிருக்கின்றன. அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு உண்மையை உணரச் செய்வது ஆற்றலுள்ளவர்களது கடமை. ஆனால் அதைப் பதிவு செய்ய இன்னும் அதற்கு ஒத்த நடைமுறைகளை மேற்கொள்ள டெபிட் காட்டை பயன்படுத் வேண்டியுள்ளது.

அதற்காக வேண்டி டெபிட்கார்ட் அடிப்படையிலேயே ஹலால் என்று தீர்ப்பு வழங்க முடியாது. காரணம் நான் ஏற்கனவே சொன்னதுபோல் வங்கியுடனான தொடர்பு ஒன்றில் நேரடியாகவே வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது மறைமுகமாக வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது வட்டியடிப்படையாகக் கொண்டியங்கும் அவர்களுக்கும் துணைபோவதாக இருக்கும். அப்படியிருக்கையில் எவ்வாறு டெபிட்காட் ஹலால் என்று சொல்ல முடியும் வங்கி இதன் மூலம் இலாப நோக்கமற்ற அல்லது முறையான இலாப நோக்கங்கொண்டஒரு சேவையையா எமக்குத் தருகிறது. சிறுதுள்ளி பெருவெள்ளம் என்ற அடிப்படையிலும் வேறு பெயர்களிலும் எம்மைச் சுரண்டும் பலவழிமுறைகளில் டெபிட் காடும் ஒன்று. எனவே அது அடிப்படையிலே ஹராம்தான். ஆனால் இஸ்லாம் அனுமதித்த ஒரு செயல்பாட்டுக்குக் குறுக்கே வரும்போது நாம் அதனூடாகவே அதைத் தாண்ட வேண்டியிருக்கும் போது அதைப் பயன்படுத்துவதில் அல்லாஹ் எம்மைக் குற்றம் பிடிக்கமாட்டான். இன்ஷா அல்லாஹ்.

{ قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَحِيمٌ (145)} الأنعام: 145

6:145. (நபியே!) நீர் கூறும்: ‘தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை’ – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் -நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங்கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

இஸ்லாம் அனைத்துச் சூழலுக்கும் எமக்கு வழிகாட்டியிருக்கிறது. மனித மனநிலைகளை அறிந்த எல்லாம் அறிந்த இறைவனது மார்க்கத்தில் நாம் இருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்

24 Responses to “வட்டியும் சூழல் நிர்பந்தங்களும்”

 1. R. Mohamed says:

  நல்ல ஒரு விளக்கத்தை தந்த உங்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக

 2. Aboo Zeidh says:

  Jezakallah Khaira

  Need of the time brother. It would be more useful if you could write on the jobs here in england as I said saving of alchohol in a shop and delivering of pizza’s with poke.

  Known Brother

  • mujahidsrilanki says:

   Sure i read your question.Insha Allah i will write an article as answer for it

 3. mohamed salam nasrim says:

  nagal ungal article i dowload panna mudiyatha?

 4. Ajmr. says:

  Jazakellah.
  Good explanation. But I think we living in a capitalist environment which Muslim and non Muslim fall in to these trap all the time. Islam came to whole humanity not only for Muslim and it should influence in all part of human life.
  We don’t have a Roll modle life and the system to show to the people that how the Islam will contribute to economy without the interest.
  This is one of the challenge Muslims face in modern age. But there more we have political struggle, economy struggle, education, and invertion Muslim land and so on so forth.
  Inshallah Islam will win and we need to work in every sector to bring back Islam.

 5. Ajmr. says:

  Salam. Aboo zaid
  I think if you are living in uk, best way to ask some local ulama. B coz they know the reality and living in the same society.

  Jazk.

 6. mariam says:

  Assalamu allikum….jazakallahyhairan for ur nice article about intrest and banking. But i have some doughts……my first question is,how about ur opinion regarding working in a intrest bank.2)do we regect the marriage proposals that who is working in a bank?.(some times he might be a good person) please reply me……jazakkallahuhairan

  • mujahidsrilanki says:

   walaikumussalam

   வங்கிகளில் வேலை செய்வது எந்த சூழ்நிலையிலும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதே. அதே போன்று முஸ்லிமாக இருக்கும் எவரையும் ஒழுக்கமற்றவர் என்ற விமரிசனம் இல்லாவிடின் மணமுடிப்பதில் தவறு இல்லை. ஆனால் மார்க்கப்பற்றுள்ளவரை மணமுடிப்பதிலே இம்மை மறுமை வெற்றியுள்ளது என இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. வட்டி வங்கியில் வேலை செய்து வரும் உழைப்பால் வருமானம் ஈட்டப் போகும் ஒருவரின் மூலம் நிச்சயமாக மார்க்கப்பற்றுள்ள ஒரு குடும்பத்தை எதிர்பார்க்க முடியாது என்பதால் அப்படிப்பட்டவர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பதே சிறந்தது.

 7. ALI AKBAR says:

  dear Brother mujahid, Asslam Alaikum

  I have small shop as supplier of silver jewelry . We make order with factory with some deposit. I am new to finance.meanwhile, my friend has given the deposit money to me and asks 30 fixed percentage of profit(as sleeping partner) Here we know the profit when we make the proforma before making order.I felt the fixed percentage is as interest, Please advice.Ali

  • mujahidsrilanki says:

   walaikumussalam

   அவர் வியாபாரத்தில் தனக்கு எந்தளவில் லாபம் கிடைக்கும் என்று விசாரிப்பதில் தவறு இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்லி அது கட்டாயம் எனக்கு கிடைக்க வேண்டும் குறையக் கூடாது என்று சொல்வது வட்டியையே சாறும்

   • ALI AKBAR says:

    Dear Brother,

    For an example
    Totl cost 20000US$
    Total invoice (sales) will be 22000$
    The profit will be around 2000$
    My partners wants 50% i.e. 1000$
    These all details we know very well when we get the order i.e. before starting production.So this is haram.So,
    I decided to drop this sleeping partner.May Allah will guide better way. Okay?Please Advise. Ali

    • mujahidsrilanki says:

     லாபத்தை தெளிவாக அறிந்து குறிப்பிட்ட ஒரு லாபம் கேட்பது தவறு என சொல்ல முடியாது. மாறாக அது நட்டமடைந்தாலும் அதை நான் ஏற்கமாட்டேன் என்று சொன்னாலோ அல்லது அவ்வாறு எண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தாலோதான் தவறாகும். இதில் எந்த நிலை என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்

    • admin says:

     why its haram ?

 8. Aashiq Rasheed says:

  Mortgage அடிப்படையில் இங்கு இங்கிலாந்தில் பலர் வீடு எடுத்துள்ளனர். இவற்றுக்கு அவர்கள் பல காரணங்களும் கூறுகின்றனர். இங்குள்ள நிலைமையை கொஞ்சம் விலக்கினால் உங்களுக்கு அதன் அடிப்படையில் பதில் கூற முடியும் என்று நினைக்கின்றேன்
  நாங்கள் இங்கு நிரந்தர வாதிவாளர்கள். எங்களுக்கென்று நிரந்தர வதிவிடம் இல்லை, அதனால் அது அத்தியாவசிய தேவை என்ற ரீதியில் இதற்க்கு நாம் நிர்ப்பந்திக்கப் படுகின்றோம். எனவே முதன் முதலில் ஒரு வீடொன்று அத்தியாவசியம் என்றரீதியில் வீடொன்றை எடுப்பதற்காக வங்கிக் கடன் ஒன்றை பெறமுடியும் என்று சில உலமாக்களின் பத்துவாவின் அடிப்படையில் எடுக்கின்றனர். அடிப்படைத்தேவை என்ற முதல் வீடே. அனால் இரண்டு மூன்று என்று பெறமுடியாது. உங்களுடைய நிலை உங்களுக்குத்தான் தெரியும் என்கின்றனர்.
  உதாரணமாக; ஒருமாத வாடகை சுமார் ஆயிரம் பவுண்கள் என்று வைத்தால், அவர் நிரந்தரமாகவே வாடகை வீட்டிலேயே என்றென்றும் இருப்பார், அவரால் ஒருபோதும் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கவே முடியாது. ஏனெனில் இங்குள்ள வருமானத்தின் அடிப்படையில் சொந்தமாக வீடொன்றை வாங்குவதற்கு அவரால் அவ்வாறான பாரிய பணத்தைத் திரட்டுவதென்பது இயலாத காரியம்.
  வங்கிக் கடன்மூலம் ஒருவர் வீடு எடுத்தால், அதே ஆயிரம் பவுண்களை மாதாமாதம் வங்கிக்கு செலுத்துவார், சுமார் இருபத்தைந்து ஆண்டுகளில் வீடு அவருக்கு சொந்தமாகிவிடும். இதன்மூலம் அவருடைய அத்தியாவசிய தேவை நிறைவு பெறுகின்றது. இதன் அடிப்படைகளை சரியாக கிரகித்து அதற்க்குத் தக்க பதில்கொண்ட உரையோ கட்டுரையோ தருமாறு அன்புடன் வேண்டுகின்றேன். உரையாக இருக்குமாயின் அதிக பலன் கிட்டும் இன்ஷாஅல்லாஹ்.

  ஜஸாக்கல்லாஹு கைரன்

  ஆஷிக் ரஷீத்.

  லெஸ்டர், இங்கிலாந்து.

 9. brother says:

  அஸ்ஸலாமு அழைக்கும் மௌலவி அவர்களே

  ஒருவர் வாகன வியாபாரம் செய்கிறார் அவரிடம் நிறைய வாகனம் இருக்கு அவர் அதை உடன் பணத்துக்கும், பினான்ஸ் முறையிலும் விற்கிறார். பினான்ஸ் முறையில் வட்டிகலப்பது என்று தெரிந்தும் அதற்கான ஆவணங்கள் எல்லாம் தயார் பண்ணி கொடுக்கிறார்.

  எனது கேள்வி உடன் பணத்துக்கு விற்கும் ஒரு வழிமுறை இருக்கும்போது விற்பனை செய்யப்படும் அளவை அதிகரிப்பதற்காக பினான்ஸ் முறையில் வாகனத்தை விற்பது கூடுமா ?

  ஏன் என்றால் உடன் பணம் கொடுபவர்கள் குறைவு என்பதனால் பலர் பினான்சை விரும்புகிறார்கள்.

 10. ashak says:

  Dear bro,
  Salam,
  Leave it other country, just take saudi arabia govt can start a bank throughout saudi as islamic bank and charge some service charge whoever have account in the bank then thay can spend that money to the employee who are working in the bank, then saudi arabia will be free from interest but dawah center useless here, only making soaping to the kings

 11. Abdur Rahman Hyder Ali says:

  Assalamu Alaikum Brother Mujahid,

  Could you please let me know , can i have “Saving Account” for saving money for mandatory purpose for EX, Am in in KSA , if i wanted to send money to India , I should depends with a Bank Account…

  Could you please answer.

  May Allah Give you long life to serve Deen.

 12. yunush says:

  ஜி பள்ளியில் ஒருத்தர் சந்தித்து பேசினார். அவர் என் பெற்றோர்கள் வட்டியில் சம்பாதித்து என்னை படிக்க வைத்து விட்டனர். ஆகையால் நான் படித்த படிப்பு ஹராமா என்று கேட்டார். பிறகு அந்த வழியாக படித்த படிப்பு ஹராமா என்று கூறி. ஹராம் என்றால் என்ன பரிகாரம் என்று கேகேட்டார். பதில் செல்லுங்கள் உஸ்தாத்.

  • mujahidsrilanki says:

   தந்தையின் சம்பாதிப்பு ஹராமனாதாக இருந்தால் மகன் மீது எந்தக் குற்றமும் இல்லை. அவர் இவருக்கு செலவு செய்தவைகளில் இவர் படித்ததாலோ உண்டதாலோ இவருக்கு குற்றம் கிடையாது. ஆனால் என்று தன் செலவில் வாழ முடிந்த சூழ்நிலைக்கு வந்துவிட்டாரோ அன்றிலிருந்து தந்தையின் உழைப்பில் வாழ்வதைத் தவிர்க்க வேண்டும். அப்பாெழுதும் கூட அவர் வழங்கும் உணவை உண்ணுவது இவருக்கு ஹராமாகாது.

 13. abu shabin says:

  அஸ்ஸலாமு அலைக்கும்
  சஹோதரர் முஜாஹித் அவர்களுக்கு, உங்களுடைய மார்க்க சொர்ப்பொழிவுகலயும், பயான்களையும் சமீப காலமாக தொடர்ந்து கேட்டு வருகிறேன். பொருளியல் சம்பந்தமாக சில சந்தேகங்களை தீர்வு செய்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன்,
  நான் சவுதியில் கிழக்கு மாகாணத்தில் வேலை புரிந்து வருகிறேன். என்னுடைய சந்தேகம் இங்கு தவணை முறையில் வாகனங்கள் விற்க்கபடுகிறது இதை நாம் வாங்கலாமா? தவணை முறையில் ரொக்கத்தை விட சிறிது கூடுதலாக விலை கணிக்க படுகிறது, மட்டுமல்லாமல் தவணை முறை முடியும் வரை வாகனத்தின் உரிமை ஏஜென்சியே வைத்துகொள்கிறது.
  இங்கு அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சில பல சஹோதரர்கள் இந்த முறையில் வாகனத்தை உடமை படுத்தியுள்ளார்கள். இதை பற்றி விளக்கம் குரான் மற்றும் நபிவழியில் எதிர்பார்க்கிறேன் . எனது சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் .

  • பின்வரும் லின்கைப் பார்வையிடவும்

   • abu shabin says:

    ஜசாக்கல்லாஹ் கைர் பதில் கிடைக்கவில்லையெனினும் எதிர்காலத்தில் இதை பற்றி மேலும் ஆராய்ந்து மார்க்க முறையில் கூடும் / கூடாது என்ற பதிலுக்காக முற்சிபெற தாங்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். முராபஹா என்ற முறையில் வியாபாரம் நடந்தால் கூடும் என்று புரிந்துகொண்டேன்.