“வாப்பா!!….வெட்கமாக இருக்குது வாப்பா வெட்கமாக இருக்குது”

(ஒரு உண்மைச் சம்பவம்–ஷெய்க் அப்துல் பாாி யஹ்யாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

இரவு நடு நிசி நேரம் முழுக் குடும்பமும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது. தந்தை எழுந்து கொள்கிறார்.

TV உள்ள அறைக்குள் நுழைகிறார். 

அந்த நடு நிசியில் TVயை ஒன் செய்து மோசமான காட்சிகளை பார்க்க ஆரம்பிக்கிறார்.

அவர் அதில் லயித்து மூழ்கியிருக்கும் போது….. திடீரென கதவு திறக்கப்படுகிறது.

அவரது இளவயது மகள் ……………….உள்ளே வந்தாள்.

திகைத்துப் போன தந்தை TVயை மறைக்க ரிமோட்டின் மூலம் அணைக்க முயற்சியெடுத்தார். இதைக் கண்ட மகள்

“வாப்பா!!….வெட்கமாக இருக்குது வாப்பா வெட்கமாக இருக்குது”

என்று சொல்லிவிட்டு அவளின் அறைக்கு திரும்பிவிட்டாள்.

செய்வதறியாது கலங்கிய தந்தை டிவியை அணைத்து அவரது அறைக்குள் நுழைந்தார்.

“வாப்பா!!….வெட்கமாக இருக்குது வாப்பா வெட்கமாக இருக்குது”

என்ற அவரது மகளின் வார்த்தை அவரது காதுகளில் திரும்பத்திரும்ப ஒழித்தது.

கண்ணீர்த் துளிகள் அவரது கண்களில் இருந்து வழிந்தோடின. பஜ்ர் வரை அழுது துடித்தார்.

அதே நிலையில் பள்ளிக்குச் சென்றார். ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார். அவர் கண்ணீர் மல்கிக்கொண்டிருந்தார்.

அவரை இது வரை பஜ்ர் தொழுகையில் காணாத சகோதரர்கள் அவாிடம் ”ஏதும் பிரச்சனையா? நன்றாக இருக்கிறீர்களா?” என விசாரித்தனர். “எதுவும் இல்லை நன்றாக உள்ளேன்” என பதில் சொன்னார்.

அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் அவாிடம் ”ஏதும் பிரச்சனையா?” எனக் கேட்டார். அவர் அழுது கொண்டே சொன்னார்….

“ 20 ……வருடம்……ஆம் 20 வருடங்கள் நான் இறைவனுக்கு ஒரு ஸுஜூது கூட செய்ததில்லை. இதுதான் எனது முதல் ஸுஜூத்”!!!

எதனால்….”வெட்கமாக இருக்கிறது தந்தையே வெட்கமாக இருக்கிறது” என்ற மகளின் வேதனை மிக்க வார்த்தைகள்.

காலையில் அவர் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் களைப்போடு வேலைக்குச் சென்றார். மனைவி அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. வீடு திரும்பிய நேரம் …

மனைவி கனிவுடனும் கவலையுடனும் “எங்கே சென்றீர்கள்” என்று வினவிக் கொண்டே சொன்னார்!!!!!!

“மகள் மௌத்தாகிட்டா”

“வெட்கமாக இருக்கிறது தந்தையே வெட்கமாக இருக்கிறது” என்ற அவரது மகளின் இறுதி வார்த்தைகள் மறுபடியும் அவரது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

3 Responses to ““வாப்பா!!….வெட்கமாக இருக்குது வாப்பா வெட்கமாக இருக்குது””

  1. ABU AMMAR says:

    avasiyam ovvoruvarum padithu unaravendi pathivu. jazakkallah hairan.

  2. muhamed azeem says:

    intha Aakkam thatkolaiyai Aatharippathu poal ullathea… ippadiyana Aakkam nalla padippinai thanthalum koorappadum vidayam muraiyanathaha illai. ithai vifarikkavum please.