ஸலபிய்யாக் கொள்கை ஓர் விளக்கம்(2010)

அஹ்ஸலுஸ்ஸுன்னா, ஸலபிய்யா, தவ்ஹீத் , அஹ்லுல் ஹதீஸ் போன்ற வார்த்தைகள் சரியான கொள்கையில் இருப்பவர்களைக் குறிக்கப் பயன்பட்ட அடையாள வார்த்தைப் பிரயோகங்கள். முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே வழிமுறையில் இருக்கும் ஆரம்ப காலப்பகுதியில் இந்த வார்த்தைப் பிரயோகங்களை அவர்கள் இந்த அர்த்தத்தில் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அறிந்திருந்ததெல்லாம் மார்க்கம் இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள்.

என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளும் முறையிலும் நடை முறைப்படுத்தும் முறையிலும் முரண்பாடுகள் தோன்றியதோ அன்று தொடக்கம் தவறிப்போனவர்களை அவர்கள் தவறிய இடத்தை வைத்து கொள்கையை வைத்து எவர் அந்த தவறுக்குக் காரணமாக அமைந்தாரோ அவரை வைத்து அடையாளப்படுத்தும் வழமை ஆரம்பித்தது. இஸ்லாத்தில் தோன்றிய முதல் கொள்கைப் பிரிவு சீயா என அடையாளப்படுத்தப்பட்டது. இரண்டாவது கவாரிஜ் என அடையாளப்படுத்தப்பட்டது.

இன்னொரு விடயம் பொதுவாக ஆரம்ப காலத்தில் அடையாளப்படுத்தப்படும்போது இருந்த வழிகேடுகளை விட பிற்காலத்தில் ஒவ்வொரு பிரிவினரினதும் கொள்கைத் தவறுகள் வளர்ந்து முற்றி வேறு வடிவங்களையெல்லாம் எடுத்திருக்கும் தமக்குள்ளேயே அவர்கள் பலவாறாகப் பிரிந்திருப்பார்கள்.

இப்படி இஸ்லாத்தை விளங்குவதில் தவறுவிட்ட பிரிவினர்களை அடையாளப்படுத்த சில வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டன. அக்கால கட்டங்களில் வழிதவறியவர்கள் குறைவாகவே இருந்தனர். அவர்களை விட உண்மையான முஸ்லிம்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆனால் தொடர்ந்த காலங்களில் தவறிய பிரிவுகள் எண்ணிக்கை அதிகரித்து அவர்களின் ஆதிக்கமும் அதிகரித்தது. இந்தப்பிரிவின் வேர்களை 3 வகையாக நாம் வகுக்கலாம்.

1.    இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை புரிந்துகொள்வதில் உருவான சீயா கவாரிஜ் கதரீயா முர்ஜிஆ முஃதஸிலா அஷ்அரீயா மாத்ரூதியா போன்ற ஆரம்பகாலப் பிரிவுகள். இதில் இன்று வரைக்கும் அஷ்அரீயாக்கள் பின்னர் சீயாக்கள் பின்னர் மாத்ரூதியாக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

2.    மார்க்க சட்டரீதியான மற்றும் வணக்க வழிபாடுகள் சம்பந்தப்பட்ட சில அறிஞர்களின் முடிவுகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மத்ஹபீயத் பிரிவுகளான ஷாபிஈ ஹனபீ ஹன்பலீ மாலிகீ லாஹிரீ போன்ற பிரிவுகள். இவைகள் கொள்கை விடயங்களில் அந்த அறிஞர்களை தக்லீத் செய்வது மிக அரிது. சட்ட விடயங்களிலேயே தங்களது தக்லீதைச் சுருக்கிக் கொண்டனர். கொள்கை விடயங்களில் முதல் வகையை சார்ந்து நிற்பார்கள்.

3.    5ம் நூற்றாண்டுகளின் இறுதிப்பகுதியில் தோன்றிய காதிரியா ரிபாஇய்யா நக்சபந்தியா போன்ற சூபிஸப் பிரிவுகள். உளப்பயிற்சியை மையமாகக் கொண்டு ஆரம்பித்த இந்தப் பரிவுகளில் எல்லாம் இறைவனே என்ற இறை நிராகரிப்புகளும் நுழைந்தன.

இன்றுள்ள முஸ்லிம்களில் அதிகமானோர் இந்த 3இலும் களந்தே தமது மார்க்கத்தை அடையாளப்படுத்துகின்றனர். அதாவது கொள்கைளில் அஷ்அரீயாகவும் மத்ஹபில் சாபிஈயாகவும் தரீகாவில் காதிரீயாகவும் இருப்பார். அல்லது அது போன்ற 3 வழிகேடுகளை தமக்குள் இணைத்திருப்பர்.சரி விடயத்திற்கு வருகிறேன். இவ்வாறு வழிதவறிய கொள்கைகள் அதிகமாகியபொழுது உண்மையான முஸ்லிம்களின் எண்ணிக்கையும் ஆதிக்கமும் குறைய ஆரம்பித்தது. முஸ்லிம்கள் என்ற உண்மைப் பெயர் கொண்டவர்கள் இதுதான் இஸ்லாம் என்பதை அறிமுகப்படுத்த வேண்டிய வரலாற்றுத்தேவை இயல்பாக உணரப்பட்டது.

இவ்வடிப்படையில் அஹ்லுஸ்ஸுன்னா என்ற வார்த்தை பிரபல்யம் ஆனது. ஆரம்பாலங்களில் ஸுன்னா என்ற தலைப்பில் பல நூல்கள் வெளியாகின. இது கொள்கை ரீதியான பித்அத்திற்கு எதிரான பிரயோகமே. இதில் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் மகன் அப்துல்லாஹ்வின் நூலும் ஷைபானியின் நூலும் பிரபல்யமானது. இவ்வகையில் அஹ்லுஸ் ஸுன்னா என்ற பிரயோகத்தின் சற்றுப் பின்னர் உருவானதே ஸலபிகள் என்ற சொல்லாடல். இரு வார்த்தையின் நோக்கமும் இஸ்லாமிய கொள்கையை சரியாகப் புரிந்தவர்களை அடையாளப்படுத்துவதுதான்.

ஸலfப் என்றால் முன்சென்றவர் முன்சென்றது என்பது அர்த்தம். அல்குர்ஆனில் இக்கருத்தில் இச்சொல் 7 இடங்களில் கையாளப்பட்டுள்ளது. 2:275 4:23 24 5:95 8:38 10:30 69:24 . ஸலப் என்றால் எமக்கு முன் மரணித்தவர்கள் சென்றவர்கள் நல்ல அமல்கள் முற்பணம் போன்ற கருத்துக்களைத் தரும். முன்னோர்களில் கெட்டவர்களை குறிக்க இச்சொல் குர்ஆனிலே 43:56 ஒரு இடத்தில் கையாளப்பட்டுள்ளது. பல ஹதீஸ்களில் முற்பணம் என்ற கருத்திலும் சில ஹதீஸ்களில் நல்ல முன்னோர் என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் ஸஹாபாக்களின் அகீதா குர்ஆன் சுன்னாவின்படிதான் இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் எந்த முஸ்லிமிற்கும் இல்லை. மனிதன் என்ற முறையில் தவறான சிந்தனைகள் ஒரு சிலருக்கு ஏற்பட்டாலும் குர்ஆன் சுன்னாவில் இருந்து அது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டவுடன் அவைகளை மாற்றிக் கொண்டனர். இவ்வடிப்படையில் ஸஹாபாக்களின் அகீதாவிலே நாம் இருக்கிறோம் என்ற கருத்தைத் தரும் விதமாகவே இது உபயோகப்படுத்தப்பட்டது. இது பிக்ஹ் சட்டப் பிரச்சனைகளில் பயன்படுத்தப்படவில்லை. அவ்வாறு சரியான கொள்கையில் உள்ளவர்களைக் குறிக்க ஸலபி எனப் பயன்படுத்தப்பட்டது. சரியான கொள்கையில் உள்ளவர்களைக் குறிக்க இந்த செற்பிரயோகம் 2ம் நூற்றாண்டின் அரைப்பகுதியளவில்தான் உபயோகத்திற்கு வந்தது.

இன்று தமழுலகில் இந்த வார்த்தை தவ்ஹீத் தவ்ஹீத்வாதிகள் என்ற பிரயோகங்களுக்கு ஒத்தது. ஏனென்றால் அரபு உலகில் குர்ஆன் சுன்னாவை அடிப்படையாக வைத்துச் செய்த கொள்கைப் பிரயோகத்திற்கு ஸலபிக் கொள்கை என்று உபயோகப்படுத்தப்படுத்தப்பட்டது. தமிழுலகில் குர்ஆன் சுன்னாவை அடிப்படையாக வைத்துச் செய்த கொள்கைப் பிரயோகத்திற்கு தவ்ஹீத் பிரச்சாரம் என்று உபயோகப்படுத்தப்பட்டது. இரண்டிலுமே கொள்கை சம்பந்தப்பட்ட விடயங்களே முக்கியப்படுத்தப்பட்டன.

எனவே சரியான கொள்கையின் அடையாளத்திற்கு என்று உபயோகப்படுத்தப்படும் இந்த வார்த்தைகளில் தமிழுலகில் தவ்ஹீத் என்ற பிரயோகம்தான் மிகப்பொருத்தமானது. ஆனால் தவ்ஹீத்கொள்கைக்கு எதிராக சிலர் ஸலபியாவில் அடங்காத இல்லாத கருத்தைக் கொடுத்து தவ்ஹீதிற்கு எதிராக அதைப் பயன்படுத்துவதுதான் ஆச்சரியமாக உள்ளது. எவ்வாறு அஹ்லுஸ்ஸுன்னா எனும் பெயரை தவறான கொள்கையுடயோர் பயன்படுத்துகிறார்கள் அது போன்று ஸலபியா என்ற சொல்லையும் தவறான அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். சரியான கொள்கையை அடையாளங்காட்ட வழங்கப்பட்ட வார்த்தைகளை தவறானகொள்கையுடையோர் பயன்படுத்தினால் அது நமக்குரியதுதான் என்று நாம் வாதாட வேண்டிய அவசியம் இல்லை மாறாக நமது கொள்கையை அறிமுகப்படுத்தும் வகையில் அந்தப் பெயர் இருந்தால் போதுமானது. இந்த வகையில்தான் அஹ்லுஸ்ஸுன்னா என்ற வார்த்தையை தவறான கொள்கையிலுள்ளோர் பயன்படுத்தும்பொழுது நாம் பெரிதுபடுத்துவதில்லை.

ஆனால் இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் ஸலபிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்வோர் ஸஹாபாக்களை ஒரு மூலாதாரமாகக் கொள்வதற்கு ஸலபியா என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஸஹாபாக்களுக்கு குர்ஆனையும் ஸுன்னாவையும் தவிர முஹாஜிரின்களோ அன்ஸாரிகளோ இன்னொரு மூலாதாரமாக இருக்கவில்லை. எனவே அதுதான் எமது கொள்கை என்று சொல்பவர்களே உண்மையில் ஸலபிகள். ஆனால் இன்று துரதிஷ்ட வசமாக இந்த வார்த்தையை தவறாக இவர்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஸஹாபாக்களைப் பின்பற்றவேண்டும் என்றால் என்ன என்பதில் அவர்களுக்கு மத்தியில் குழப்பம் இருக்கிறது. இவர்கள் உண்மையில் ஸலபிகள் அல்ல கலபிகள்.

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பின்பற்றுவோம் என்று சீயாக்கள் கூறியதற்காக அவர்களை அலியை நேசிப்பவர்கள் என்று ஒருபொழுதும் கூறமாட்டோம். அதேபோன்று ஸஹாபாக்களைப் பின்பற்றுவோம் என்று கூறிவிட்டால் அவர்கள்தான் ஸஹாபாக்களை நேசிப்பவர்கள் மற்றவர்கள் தூற்றுபவர்கள் என்று ஆகிவிட மாட்டார்கள். உண்மையில் ஸஹாபாக்களை மதிப்பவர்கள் அவர்களை இஸ்லாத்தின் 3வது மூலாதாரமாக ஆக்காதவர்கள்தான். காரணம் அவர்களிடத்தில் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் 2தான். தவ்ஹீத்வாதிகளிடத்திலும் இரண்டுதான்.

ஸலபிகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் தமிழுலக தக்லீத் ஸலபிகள் தவ்ஹீத் கண்டத்திலிருந்தவர்கள்தான். இன்று தௌஹீத்வாதிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் இது ஒரு வெடிப்பாக உள்ளது நாளை அவர்கள் தனிக்கண்டமாவது நிச்சயம்.

33 Responses to “ஸலபிய்யாக் கொள்கை ஓர் விளக்கம்(2010)”

 1. faleelsrilanki says:

  அஸ்ஸலாமு அலைக்கும் .
  முஜாஹித் அவர்களே இன்றாவது உங்கள் கொள்கையில் ஒரு பகுதியை தெரியப்படுத்தியுள்ளீர்கள் ஆனால் என்ன இன்னு; நீங்கள் ஸஹாபாக்களை பின்பற்றலாமா கூடாதா என்பதை மாத்திரம் சரியாகத் தெரியப் படுத்தவில்லை.

  இனியாவது தெரியப்படுத்துங்கள்

  ஸலபி கொள்கை என்றால் என்ன என்று நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள இநத லிங்கைப் பாருங்கள் (link removed by admin) அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டப் போதுமானவன்

  • mujahidsrilanki says:

   Walaikumussalam

   உண்மையில் ஸஹாபாக்களை மதிப்பவர்கள் அவர்களை இஸ்லாத்தின் 3வது மூலாதாரமாக ஆக்காதவர்கள்தான். காரணம் அவர்களிடத்தில் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் 2தான். தவ்ஹீத்வாதிகளிடத்திலும் இரண்டுதான்.

 2. thowfeek says:

  SLTJ யில் ஸஹ்ரான் அவர்கள் ஸஹாபாக்களைப் பின்பற்றக் கூடாது என்று ஒரு ஜும்மாவில் கூறிய போது, நீங்கள் அவரை தூற்றினீhகளா இல்லையா? இவ்வளவு காலமாக மெது மெதுவாக SLTJ யில் ஸலபுக் கொள்கையை விதைத்து வருகிறேன். அதைத் தகர்க்க நினைக்காதே என்று நீங்கள் ஸஹ்ரானிடம் கூறவில்லையா? ஏனிந்த நடிப்பு?

  • mujahidsrilanki says:

   Walaikumussalam

   நான் அவ்வாறு சொல்லவில்லை ஸஹ்ரான் மௌலவி அவ்வாறு சொல்லியிருந்தால் அவர் பொய் சொல்லுகிறார். ஆனால் அவர் அவ்வாறு கூறியிருக்க வாய்ப்பு இல்லை. எனக்கு நடிக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை

 3. Ali says:

  சலபிகளின் தவறுகள் சிலவற்றைக் கூறவும்.

 4. PJsrilanki says:

  “ஸாலிமின் ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியிருக்கின்றது. எனினும், அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த ஒவ்வொரு ஹதீசும் அதன் கருத்து சரியாக அமைந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது”

  இவ்வாறு சவூத் பின் அப்துல்லாஹ் அல் குனைஸான் என்ற அறிஞர் இந்த ஹதீஸ் பற்றித் தெரிவிக்கின்றார்.

  இந்த நிலைப்பாட்டைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டிருக்கின்றது. பி.ஜே. என்ற ஒரு தனி மனிதரின் மீது கொண்ட வெறுப்பு காரணமாக நமது நிலைப்பாட்டைக் குறை கூறும் மக்கள் , அரபு நாட்டு மார்க்க அறிஞர்களின் இந்த நிலைப்பாட்டில் குறை காண்பார்களா?
  இந்த மார்க்க அறிஞர்களுடன் விவாதம் செய்வார்களா?

  இவர்களுக்கு எதிராக இணைய தளத்திலும், பத்திரிகைகளிலும், பிரச்சாரங்களிலும் போர்க்கொடி தூக்குவார்களா?

 5. cassim says:

  சும்மா இங்கே நடிக்க வேண்டாம் முஜாஹித் மௌலவி. நீங்கள் செய்த வண்டவாலங்களினால் தான் S.L.T.J, T.N.T.J யால் விலகப்பட்டது.குர்ஹானும் ஹதீசும் தான் மார்க்கத்தில் ஆதாரமாக கொன்று நடத்திய இயக்கம் நீங்கள் சலபியாக் கொள்கையை அதில் புகுத்து அவர்களை பிரித்துவிட்டீர்கள். அல்ஹம்துலில்லாஹ் இன்று உங்களை போன்று சலபியாக் கொள்கையை போதிக்கும் உலமாக்கள் S.L.T.J யில் இல்லாததினால் இன்று மருபடியும் T.N.T.J உடன் சேர்ந்து தனது தஹ்வாப் பணிகளை மேட்கொல்கின்றது.

  • mujahidsrilanki says:

   Assalamu Alaikum

   அன்புள்ள சகோதரரே தாங்கள் எந்தத் தகவலை வைத்து என்னைக் குற்றஞ் சாட்டுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மல்லிகாராம தவ்ஹீத் பள்ளிவாயலில் எஸ் எல் டீ ஜே சுமார் 5 வருடங்களாக இயங்கியது. அங்கு என்னை 4 வருடங்களாக பிரச்சாரங்களுக்கு அழைத்தார்கள். தொடர் வகுப்புக்கள் செய்துள்ளேன். மேடைப் பிரச்சாரங்கள் செய்துள்ளேன். அழைப்பு இதழின் ஆசிரியராக இருந்துள்ளேன். இக்காலங்களில் நான் பேசியவைகளில் அதிகமானவைகள் வீடியோக்களாக உள்ளன. பல கட்டுரைகள் உள்ளன. நான் எஸ் எல் டிஜேயில் நபித்தோழர்களை மூலாதாரமாகக் கொள்ளலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தால் இவைகளில் எங்கே அவ்வாறு சொல்லியுள்ளேன் என்று எடுத்துக் காட்டிப் பேச வேண்டும். ஆனால் அவ்வாறு ஒரு வசனத்தைக் கூட காட்ட முடியாது. அவ்வாறிருக்க எவ்வாறு இப்படி ஒரு குற்றச் சாட்டை வைப்பார்கள்.
   இன்னுஞ் சொல்வதென்றால் அதற்கு மாற்றமாக பல முறைகள் பேசியுள்ளேன் எழுதியுள்ளேன். ‘நாம் யாரைப் பின்பற்றவேண்டும்?” என்ற தலைப்பில் எஸ் எல் டி ஜேயில் ஒரு மிகப் பெரும் ஒன்று கூடலின்போது உரை நிகழ்த்தினேன். அது தமழழுலக போலி ஸலபிஸத்திற்கெதிராகத் தரப்பட்ட தலைப்பு. எனது கொள்கைக்கெதிரான தலைப்பையா என்னிடம் தந்தார்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்.
   கடந்த ரமழானிற்கு முந்திய ரமழானில் எஸ் எல் டி ஜேயில் 28 நாட்கள் தொடர் உரை நிகழ்த்தினேன். அதில் ஆயிசா ரலியல்லாஹ{ அன்ஹா பற்றிய தலைப்பில் நபித்தோழர்கள் மார்க்கத்தின் 3 வது மூலாதாரமாகமாட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக தலைப்பிற்கப்பாட்பட்டிருந்தும் நானே வலிய பின்வரும் செய்தியைக் குறிப்பிட்டேன்.

   صحيح البخاري ـ7100 – حَدَّثَنَا أَبُو مَرْيَمَ عَبْدُ اللَّهِ بْنُ زِيَادٍ الْأَسَدِيُّ قَالَ لَمَّا سَارَ طَلْحَةُ وَالزُّبَيْرُ وَعَائِشَةُ إِلَى الْبَصْرَةِ بَعَثَ عَلِيٌّ عَمَّارَ بْنَ يَاسِرٍ وَحَسَنَ بْنَ عَلِيٍّ فَقَدِمَا عَلَيْنَا الْكُوفَةَ فَصَعِدَا الْمِنْبَرَ فَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ فَوْقَ الْمِنْبَرِ فِي أَعْلَاهُ وَقَامَ عَمَّارٌ أَسْفَلَ مِنْ الْحَسَنِ فَاجْتَمَعْنَا إِلَيْهِ فَسَمِعْتُ عَمَّارًا يَقُولُ إِنَّ عَائِشَةَ قَدْ سَارَتْ إِلَى الْبَصْرَةِ وَ وَاللَّهِ إِنَّهَا لَزَوْجَةُ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَكِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى ابْتَلَاكُمْ لِيَعْلَمَ إِيَّاهُ تُطِيعُونَ أَمْ هِيَ
   ஜமல் யுத்தத்தின் போது அம்மார் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘…..அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஆயிசாதான் இவ்வுலகிலும் மறுமையிலும் உங்களது நபியின் மனைவி ஆனாலும் அல்லாஹ் நீங்கள் அவனைப் பின்பற்றுகிறீர்களா ஆயிசாவைப் பின்பற்றுகிறீர்களா என உங்களைச் சோதிக்கிறான்” புகாரி: 7100

   எவ்வளவு தெளிவான நிலைப்பாடு இன்னும் அந்த எனது உரைகள் ஸீடிக்களாக உள்ளனவே. ஏன் ஆதாரமின்றிப் பேசுகிறார்கள்.
   தயவு செய்து வெறுமனே பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல் ஆதாரத்துடன் குற்றாச்சாட்டுகளை வைக்க வேண்டும். சகோதரர்களுக்குத் தெளிவாகியிருக்க வேண்டும் என நம்புகிறேன்.

 6. ashfaaq says:

  தௌஹீத் வாதிகளின் மூலாதாரம் 2அல்ல மூன்று. குர்ஆன் ஹதீஸ’ என்று கூறியதற்கு அவர்கள் மூன்றாவதாக வரலாரையும் பின்பற்று கிறார்கள்.

 7. saneej says:

  “அல்லாஹ் இப்படி பட்டவர்களை கொன்று இஸ்லாமிய மார்கதிட்க்கு கெட்ட பெயர் வராமல் காப்பாற்ற வேன்றும்.” இந்த ஒன்றே உங்களுக்குள் ஜாஹிலியம் உள்ளது. நீங்கள் தக்லீத் செய்கிறீர்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறது. நிதானம் வேண்டும் சகோதரரே. மறுமை நாளைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறேன். ஆதாரத்துடன் பேசுங்கள். அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள் என்பது ஆதாரமாகுமா? சகோதரர் முஜாஹித் பேசியதாய் ஆதாரம் காட்டுங்கள். பிழையை ஏற்றுக் கொள்ளும் வரை உங்களுடன் சேர்ந்து நானும் கேட்பேன். cinema styleஇல் மார்க்கத்தைக் கொண்டு செல்ல வேண்டாம். சகோதரர் mujahidh ஒரு பக்கம் இருக்கட்டும், உங்களுடைய post ஐப் பாருங்கள். நபி வழியில் அழகான முறையிலா உள்ளது? அல்லாஹ்வுக்கு பயப்படுவது உங்களுக்கும், எனக்கும், அனைவருக்கும் முக்கியமானதாக இருக்கட்டும். நீங்கள் சொன்னது படுதூறாக இருந்தால் மறுமை நாளில் என்ன தான் செய்ய இயலும்? கொள்கை வாதி என்பதால் எனக்கோ, உங்களுக்கோ, இல்லை மற்றவர்களுக்கோ சுவர்க்கர்த்தை எழுதியா தந்து விட்டான் இறைவன்? கஷ்டப்பட்டு, தியாகங்களுக்கு மத்தியில் நீங்கள் செய்த நன்மைகளை ஒரு சகோதரனின் மனதை புண் படுத்தி இழக்க வேண்டாம். உங்களுக்கு தெளிவில்லையா? தீர்ப்பை அல்லாஹ்விடத்தில் விட்டு விடுங்கள். நன்மைகளை தக்க வைத்துக் கொள்ளுங்கள். கொள்கைச் சகோதரராகிய உங்களிடத்தில் கொண்ட அன்பில் தான் கொஞ்சம் காரமாக சொன்னேன். உங்கள் மனதைப் புண் படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.இயக்க வெறி நமது சகோதரனின் (யாராக இருக்கட்டும்) மனைதை புண் படுத்தும் வரைக்கும் கொண்டு செல்லாமல் இருக்க நம்மனைவரையும் நம்மிறைவன் காப்பானாக.

 8. azar says:

  அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரர் SANEEJ அவர்களுக்கு நீங்கள் எனக்கு எழுதிய கட்டுரையை நான் பார்வையிட்டேன். ஜசாகல்லாஹ் நான் அவ்வாறு கடுமையான சொற்களை பயன்படுத்தி எளிதியிருக்கக் கூடாது?
  முஜாஹித் மௌலவியிடம் நான் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்.

  இருந்தாலும் மௌலவி முஜாஹிதால் தான் SLTJ கிளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தால் விலகப்பட நேரிட்டது என்பது உலகறிந்த உண்மை. இதை SLTJ நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது மௌலவி முஜாஹித் அவர்கள் சலபியாக் கொள்கையை அங்கே புகுத்த முற்பட்டதால், இன்னும் வேறு சில நடவடிக்கைகளால் தான் இந்த நிலை ஏற்பட்டது?

  எனவே நான் மேலே குறிப்பிட்ட லிங்கில் எல்லாம் எழுதப்பட்டிருக்கின்றது. ஆக நான் ஆதாரத்தைக் கொன்று தான் இங்கே எழுதுகிறேன்.ஒரு நாளும் நான் இங்கே என்னுடைய சுயக் கருத்துக்களை எழுதியதில்லை. முஜாஹித் மௌலவி அவர்கள் இன்னமும் இதற்க்கு ஒரு பதில் கூட அளிக்கவில்லை. அவர் இந்த இணையத்தளத்தில் அன்புக்குரிய என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அந்த கட்டுரைக்கு மாற்றமாக நிறைய சகோதரர்கள் தினமும் அதற்க்கு மறுப்பு தெரிவித்து எழுத ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்க்கு பதில் அழிக்காமால் அந்த கட்டுரையை அழித்து விட்டார். இதில் இருந்தே விளங்கிவிட்டது இவரின் தில்லு முல்லுகள்.

  சகோதரர் அவர்களே மேலும் நீங்கள் எளிதியுல்லீர்கள்
  //சகோதரர் முஜாஹித் பேசியதாய் ஆதாரம் காட்டுங்கள். பிழையை ஏற்றுக் கொள்ளும் வரை உங்களுடன் சேர்ந்து நானும் கேட்பேன்.//

  இதை விட வலுவான ஆதாரம் என்னால் நிரூபிக்க முடியாது ? இது தான் என்னுடைய ஆதாரம் என்னுடன் சேர்ந்து முஜாஹித் மௌலவி தனது பிழையை ஏற்றுக் கொள்ளும் வரை கேட்பிர்களா?

  • admin says:

   சகோதரர் அஸார் அவர்களே السلام عليكم ورحمة الله وبركاته

   //அவர் இந்த இணையத்தளத்தில் அன்புக்குரிய என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அந்த கட்டுரைக்கு மாற்றமாக நிறைய சகோதரர்கள் தினமும் அதற்க்கு மறுப்பு தெரிவித்து எழுத ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்க்கு பதில் அழிக்காமால் அந்த கட்டுரையை அழித்து விட்டார். இதில் இருந்தே விளங்கிவிட்டது இவரின் தில்லு முல்லுகள்.//

   நீங்கள் சொல்லும் கட்டுரை இதுவா என தயவு செய்து பார்த்து கூற முடியுமா ?
   அன்புக்கினிய என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு

   • saneej says:

    to admin – please check server time.

    • admin says:

     தயவு செய்து அந்த கட்டுரையின் commentகளை பார்வையிடவும் அதில் அந்ந commentகள் எந்த நேரத்தில் பதியப்பட்டது என நேரம் இடப்பட்டிருக்கிறது.

     1. அந்த கட்டுரையை நான் அழித்திருந்தால் எப்படி commentகள் அங்கு இருக்கும் ?

     2. Server time
     http://img814.imageshack.us/img814/7744/46133753.jpg
     http://img713.imageshack.us/img713/1347/65542761.jpg

   • saneej says:

    to admin- i sad not that time. when i was typed that post time was around 12.30. but time shows 6.42.

   • saneej says:

    if i wanted to say exactly the time different, last post was posted around 10.55 pm time shown 5.25pm. 5.30+. I think server shows GMT time. Did made the same? Then ok. I thought time was local. Sorry.

   • admin says:
    yea server is set to show UTC +0
    just now I changed it to UTC +5:30

    jazakallah kyr saneej

  • saneej says:

   ஞாபகப்படுத்தியவுடன் கொஞ்சமும் தயங்காது பிழையை (கடுமையான சொற் பிரயோக விடயத்தில்) ஏற்றுக்கொண்டீர்கள் பாருங்கள்; உங்களுக்கும், எனக்கும் ஏனைய கொள்கைச் சகோதரர்களுக்கும் இறைவன் அருளிய அருள் இது. கொள்கைச் சகோதரனைப் போல வேறு எவரும் இப்படி விரைவாக மறுமையை ஞாபகப்படுத்தியவுடன் தன் நிலைப்பாட்டைப் பரிசீலித்து அல்லாஹ்வுக்கு பயப்பட மாட்டான். அல்ஹம்துலில்லாஹ். நான் உங்களை மனம் திறந்து பாராட்டுகிறேன். அழகிய முன் மாதிரி.
   “SLTJ நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது மௌலவி முஜாஹித் அவர்கள் சலபியாக் கொள்கையை அங்கே புகுத்த முற்பட்டதால், இன்னும் வேறு சில நடவடிக்கைகளால் தான் இந்த நிலை ஏற்பட்டது” இதைத் தவிர வேறு ஒன்றும் உங்களுக்கு ஆதாரமாக இல்லை. இதில் சம்மந்தப்பட்ட இரு சாரார் sltj & சகோதரர் முஜாஹித். இப்படி இருக்க sltj சொன்னதை வைத்து முடிவெடுக்க எங்கிருந்து வழி காட்டுதலைப் பெற்றீர்கள்? ( சகோதரர் முஜாஹித் உடன் சேர்ந்து செயற்பட்ட sltj தற்போது 2 ஆக பிளவு பட்டு உள்ளது.)
   இப்படியெல்லாம் சுற்றி வளைக்கத் தேவையில்லையே. simpleஆ இந்த பயானில், இவ்விடத்தில்… சொல்லலாமே! நீங்கள் காதால் கேட்டு இருக்கிறீர்களா? வேறு யாரவது? எங்களைப் பொறுத்த வரை அறிஞர்களை மதிக்கிறோம். அவர்கள் சொல்வதில் உண்மையை எடுக்கிறோம் மற்றதை விட்டு விடுகிறோம். முஜாஹித்,பீ. ஜே உட்பட எல்லோரும் மனிதர்கள். தவறு விட்டால் கூட அதை நடிப்பு, வேடம், ஒழிக்கிறார், மறைக்கிறார்….. இது நமக்குத் தேவை தானா? அவர்கள் மனதில் என்ன உள்ளது என்று நாமென்ன பூர்ந்தா பார்த்தோம்? கொள்கைச் சகோதரர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முன் வைத்து ஒன்று சேர வேண்டிய காலத்தில் உள்ளோம். இது போன்ற தெளிவில்லா விடயங்களில் ஏன் ஆராய்ச்சி செய்து மனக்கசப்பை அதிகரிக்க வேண்டும்? தீர்ப்பை அல்லாஹ்விடத்தில் விட்டு விடுங்கள். ஷைத்தானுக்கு இடம் விட்டு நமக்குள் பிளவை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? கொள்கையில் ஒன்று படலாம். எல்லா விடயங்களிலும் ஒன்று படுவது சாத்தியமா? அவரவர் ஆய்வில் அல்லாஹ் கொடுத்த அறிவின் பிரகாரம் ஒன்றோன்றை விளங்குவார்கள். நமக்கு பிழையாய் பட்டதை சுட்டிக் காட்டலாம். நமது கருத்துத் தான் சரி என்று யாராலும் சொல்ல இயலாதே! நமது மனது உண்மையை நாடுதா, மனோ இச்சையைப் பின்பற்றுதா என்பதில் தானே வெற்றி உண்டு? இதை உங்களுக்கு மட்டுமல்ல, நமது கொள்கைச் சகோதரர்கள் அனைவருக்குமாகத் தான் சொல்கிறேன். சலிப்பாக உள்ளது. நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஆதங்கம். மாற்றுக் கருத்து என்பதற்காக கொள்கைச் சகோதரன் என்று கூடப் பார்க்காமல் கொஞ்சம் கூட நாகரிகம் இன்றி…… எல்லாரும் தான் இதைச் செய்கிறோம். நமது சகோதரன். நமது மானம். அமானிதம்.
   உண்மையச் சொல்லுங்கள், நம்மில் எத்தனை பேர் தங்களை தாமே நடுநிலையான மனதுடன் மீள் பரிசீலனை செய்கிறோம்? ஒரு சகோதரர் பிழை செய்தால் (யாராக இருக்கட்டும்) அவன் திருந்த வேண்டும் என்ற தோரணையில் தானா நாம் வார்த்தைகளை அளந்து போடுகிறோம்? ஒருவர் பிழை விடும் பொழுது தானே நாம் பொறுமை காக்கலாம்?
   கொள்கை வாதிகளுக்கு மத்தியில் தக்லீத் வேண்டாம். இதை மார்க்க அறிஞர்களுக்கும், பின்பற்றும் என் போன்ற சகோதரர்களுக்கும் ஒரு வேண்டு கோளாக சகோதர வாஞ்சையுடன் வைக்கிறேன். ஒரு சகோதரன் வீம்பால் பிழை செய்தால் கூட நம்பிக்கையாளனின் எதிர்பார்ப்பு அவன் வீம்பால் அழியக்கூடாது என்று தானே இருக்க வேண்டும்?

  • saneej says:

   வஅலைக்குமுஸ்ஸலாம் my brother azar,

 9. azar says:

  admin அவர்களுக்கு நான் உறுதியாகக் கூறுவேன் கடந்த சில நாட்களாக இந்தக் கட்டுரை இந்த இணையத்தளத்தில் இருக்க வில்லை. இப்பொழுது தான் நீங்கள் இதை வெளியிட்டுள்ளீர்கள்.

  • admin says:

   தயவு செய்து search என்னும் featureஐ பாவிக்கவும் searchஇல் அன்பு என type செய்து பாருங்கள் அந்த கட்டுரையை எளிதில் கண்டு கொள்ளலாம்

   அத்துடன் சகோதரரே இந்த இணைய தளம் பல பக்கங்களையுடையது தயவு செய்து உறுதியாக பொய் கூற வேண்டாம் !

 10. azar says:

  சகோதரர் saneej அவர்கள் நீங்கள் எளிதியுல்லீர்கள்

  //இதில் சம்மந்தப்பட்ட இரு சாரார் sltj & சகோதரர் முஜாஹித். இப்படி இருக்க sltj சொன்னதை வைத்து முடிவெடுக்க எங்கிருந்து வழி காட்டுதலைப் பெற்றீர்கள்? ( சகோதரர் முஜாஹித் உடன் சேர்ந்து செயற்பட்ட sltj தற்போது 2 ஆக பிளவு பட்டு உள்ளது.)

  SLTJ இரண்டாக பிளவுப்பட்டதாக நீங்கள் மேலே எளிதியுல்லீர்கள் தயவுசெய்து இதற்கான ஆதாரத்தை வெளியிடவும்? ஏனென்றால் தற்போது sltj ஒரு கிளையாகத் தான் செயல்பட்டு வருகின்றது.

  இதை பற்றியும் மௌலவி முஜாஹிதை பற்றியும் அறிய தற்போதைய sltj நிர்வாகிகளுடன் தொடர்புக் கொள்ளவும்.

  • saneej says:

   sltj மல்லிகராமையில் இருந்து முழுப் பெயருடன் வெளியேறியதை நானும் அறிவேன். நான் கூற வந்தது அதை அல்ல. மல்லிகராமையில் தற்போது இருப்பவர்கள், sltj சகோதரர் முஜாஹித் உடன் சேர்ந்து வேலை செய்கையில் ஒன்றாகத் தானே இருந்தார்கள்.உங்களுக்கு நான் கூற வந்தது என்ன என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு sltj என்ற அமைப்பு முழுமையாக வெளியேறி விட்டது என்ற message சென்றடைந்ததை உறுதிப்படுத்தத் தான் அப்படி கேட்டீர்கள் என்று நினைக்கிறேன். “…. தற்போதைய sltj நிர்வாகிகளுடன் தொடர்புக் கொள்ளவும்” என்று நீங்கள் கூறியதை நான் கூறியதற்கு ஆதாரமாக முன் வைக்கிறேன். sltj தற்போது 2 ஆக பிளவு பட்டு உள்ளது என்பது தப்புத் தான் sltj ஆக இருந்தவர்கள் தற்போது ஒன்றாக இல்லை. என்பது தான் பொருத்தமென நினைக்கிறேன். மன்னித்துக் கொள்ளவும். எனக்கு எந்த ஒரு சகோதரனின் குறைகளையும் துருவித் துருவி ஆராய வேண்டிய தேவையோ, நாட்டமோ இல்லை என்னருமைச் சகோதரனே. அப்படி இருந்தால் நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ் பார்த்துக் கொள்வான். நான் சகோதரர் முஜாஹிதை தூதரகப் பின்பற்றவில்லை. அப்படி தவறு விட்டால் அந்த விடயத்தில் அவரது வழி காட்டலை விட்டு விடுவேன். அதற்காக நடிப்பு, பாசாங்கு, மறைப்பு, ஒழிப்பு, பயம்…… இப்படியெல்லாம் அவரை விமர்சித்து, அது தப்பாக இருந்தால்?? நான் செய்வதோ கொஞ்ச அளவு நன்மை. அதையும் தூக்கி சகோதரர் முஜாஹித் இடம் கொடுத்து விட்டால் என் நிலைமை?

 11. Ahmed Ruzik says:

  சரி சகோதரர் சனீஜின் கூற்றை நான் ஏற்றுக் கொள்கின்றேன் இனொருவருடைய எமக்குத்தெரியாத personal stuffஐ பற்றி பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

  இங்கு பிரச்சினை என்னவெனில் இலங்கை தவ்ஹீத்வாதிகளினுல் முக்கியமாக அதிகம் குர் ஆன் ஹதீஸ் பற்றித்தெரியாத என்னை போன்றவர்கள் எந்த நிலைப்பட்டிற்கு வருவது ?

  ஸஹீஹ் ஹதீஸ் குர் ஆனுக்கு முரண்படும் இந்த இந்த ஸஹீஹ் ஹதீஸ்களை இக்காரணத்திற்காக முரண்படும் என ஆதாரத்துடன் பீ.ஜே அவர்கள் முன்வைக்கும் போது இன்னுமொரு பக்கத்தில் ஸஹீஹ் ஹதீஸ்கல் குர் ஆனுடன் முரண்படாது என்பதுடன் இணையத்தில் தேடிப்பார்த்தால் ஸஹீஹ் ஹதீஸை குர் ஆனுக்கு முரண்படும் எனக்கூறினாலொ அல்லது அந்த கருத்தில் இருந்தாலோ அது இஸ்லாத்தை விட்டு வெளியே செல்லும் செயல் எனக் கூறுகின்றனர்.

  இப்போது என் போன்றவர்கள் இதில் எந்த நிலைபாட்டிட்கு வருவது ? முரண்படும் எனும் கருத்தில் இருந்தால் “இஸ்லாத்தை விட்டு வெளியே செல்லும் செயல்” முரண்படா எனக்கூரின் அது இன்னுமொரு வகையில் “இஸ்லாத்தை விட்டு வெளியே செல்லும் செயல்” என் இருக்கும் போது நான் எந்த நிலைப்பட்டிற்கு வருவது ?

  குர் ஆன் ஸஹீஹ் ஹதீஸுக்கு முரண்படாது எனறா ?
  குர் ஆன் ஸஹீஹ் ஹதீஸுக்கு சில நேரம் முரண்படும் சில நேரம் முரண்பட்டாது

  please advice !

  • azar says:

   ஆமாம் நீங்கள் சொல்வது சரி ஒரு சாரார், ஒரு சில சஹீகாண ஹதீஸ்கள் குர்ஹானுக்கு முரண்படும் எனக் கூறுகின்றார்கள். மற்றும் ஒரு சாரார் முரண்படாது எனக் கூறுகின்றார்கள்.

   எவர் ஒரு சில சஹீஹான ஹதீஸ்கள் குர்ஹானுக்கு முரண்படும் எனக் கூரிவருகின்றார்களோ,நாங்கள் சொல்வது பிழையாக இருந்தால் அதை நிரூபீயுங்கள் தயக்கமின்றி அதை நாம் ஏற்றுக்கொள்வோம் என அறைகூவல் விடுகிறார்கள்

   உண்மையிலையே எவர் இந்த செயல் இஸ்லாத்தை விற்று வெளியேறும் எனக் கூறுகிறார்களோ, அவர்கள் அதை ஆதாரத்துடன் சமர்பிக்க வேன்றும்.

   ஆனால் இவர்கள் வெறுமனே வாய் அளவில் மாத்திரம் தான் கூறுகிறார்களே ஒழிய செயல் அளவில் நிரூபிக்கவில்லை. இவர்களின் பார்வையில் இது இஸ்லாத்தை விற்றே வெளியேறும் கொடிய பாவம் எனக் கூறுகின்றார்கள், ஆனால் அதை ஆதாரதுடன் சமர்ப்பிக்க ஏன் தயக்கம் என தெரியவில்லை.

   ஆக சகோதரரே யார் எல்லாம் இதை எதிர்த்து பிரச்சாரம் செய்கின்றார்களோ அவர்கள் சம்பந்தப் பற்றவர்களோடு ஒரு கலந்துரையாடலோ, அல்லது விவாதமோ செய்தால் தான் எமக்கு எது சரி என விளங்கும்.

   அல்லாஹ் போதுமானவன்.

 12. S.A.S.Kamil says:

  சஹாபாக்கல் ஹதீசை விளங்கியது போன்ரு நாமும் விளங்க வேண்டும் என்ற கொள்கை பிழையா? பதில் அவசியம்……………..

 13. mujahidsrilanki says:

  அல்லாஹ் நம்மிருவரது பாவங்களையும் மன்னித்து நேர்வழியை அதிகப்படுத்துவானாக

 14. Abu Nusra says:

  Bislmillah

  Assalamu alaikum brother,

  There is no question about the 2 sorces Muhammed (sal) given to his Umma.

  1. Quran
  2. Saheeh Hadees.

  But if we the presently living muslim, look at the undestanding of Sahaaba in a Quranic verse or Hadees.. is it wrong?

  I understand.. we can not stick to one sahaaba. since some time the openion of one sahaaba may be 180 degree oppose to another sahaaba (in the matters of fiqh).

  But.. In general…

  For example:

  We all accept
  One of the most importand TAFSEER on Quran..done by Abdullah ibn Masoud (ral).. and we accept his understanding as one of the best. Is this acceptance is wrong…

  please explain me clearly with daleel…

  1) is it wrong to take the understanding of sahabaas on Quran and Sunna as a guide to our life ?

  2) If you say No… explain the limitation

  3) If you say Yes.. we can take.. then also give me the limits.

  Looking for Brother/Mw Mujahid to answer my question.

  NOTE: May Allah guide all of us and make us to accept the truth once it is confirmed.

  • mujahidsrilanki says:

   Walaikumussalam

   ஒரு சிறந்த கேள்வி. நபித்தோழர்கள் மார்க்க வசனங்களுக்கு கொடுத்த விளக்கங்கள். அவர்களது கருத்து முரண்பாடுகள் அனைத்தையும் தொகுத்து தமிழுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று இன்ஷா அல்லாஹ் அதற்கு முன்னுரை போன்று உங்கள் கேள்விக்கான பதில் அமையும் . அதனால் சில நாட்கள் அவகாசம் தாருங்கள். அதுவரை பின்வரும் கட்டுரைகளைப் படியுங்கள்

   நபித்தோழர்கள் பற்றிய முறையாக நம்புவது இஸ்லாமிய அகீதாவில் ஒரு பகுதியாகும்.1

   நபித்தோழர்கள் பற்றிய நம்பிக்கை.2


   நபித்தோழர்கள்.3

   • mohamed ishak says:

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ..

    mujahid Bai நபித்தோழர்கள் விளங்கிய மாதிரி தான் குர்ஆன் சுன்னாவை விளங்க வேண்டுமா?

    நபித்தோழர்களை விட நாம் நன்கு விளங்க முடியுமா?

    உங்கள் கட்டுரை இல்லைய

    • mujahidsrilanki says:

     walaikumussalam

     நீங்கள் என்ன முரணகை் கண்டீர்கள் என்பதைப் பதிவு செய்யுங்கள். கட்டுரையும் ஸலபியா சம்பந்தமாகப் பேசப்படும் உரையும் மிகத்தெளிவாக உள்ளது.ஒரே நிலைப்பாட்டையே முன்வைக்கிறது. மூடலாக இருப்பதாக தென்பட்டால் உரிய இடத்தை சுட்டிக்காட்டினால் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்

  • shan says:

   Peace be with you…
   A good question. But in Ibnu Masood(r.a)’s Quran the chapter 113,114 were not included and he believes they are just supplication…

 15. shan says:

  Brother Mujahid.
  Article is nice.
  Keep it up..