நபிவழியில் நம் ஹஜ் .3

Post by mujahidsrilanki 20 October 2010 கட்டுரைகள்

1.துல் ஹஜ் எட்டாம் நாள் :-

1.தமத்து முறையில் நிய்யத் செய்த ஹாஜிகள் தாம்; தங்கியிருக்கும் இடத்தில் இருந்தவாறு  ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்ள வேண்டும். ஹாஜிகள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்னதாக நகங்களை வெட்டி, மேல் மீசையை கத்தரித்து, சிரைக்க வேண்டிய முடிகளை சிரைத்து, குளித்து சுத்தமாகி இஹ்ராம் துணியை அணிந்து கொள்வது சிறந்ததாகும். ஆண்கள் தலையை மூடக் கூடாது. பெண்கள் முகத்தை மூடாமலும், கைகளில் மணிக்கட்டு வரையிலுள்ள பகுதியை மூடாமலும் மற்ற எல்லா உறுப்புக்களையும் மூடும் வகையில் ஆடை அணிந்துகொள்ள வேண்டும். (அணியும் ஆடை கருப்பாக இருந்தால் சிறப்பானதாகும்) இஹ்ராம் கட்டியிருக்கும் போது ஆண்கள் தமது இரண்டு தோற்புயங்களையும் மறைக்கும் வகையில் தமது ஆடையை அமைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் எல்லா ஹாஜிகளும் “லப்பைக்க ஹஜ்ஜன்” (ஹஜ்ஜை நாடி அல்லாஹ்வே உன்னிடம் (நான்) வந்துவிட்டேன்.)  என்று நிய்யத் செய்துகொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டிய ஹாஜிகள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறிக்கொள்ள வேண்டும். பத்தாம் நாள் ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும் வரையில் தல்பியாவைக் கூறிக்கொண்டே இருக்கவேண்டும். இறுதிக் கல்லையும் எறிந்தவுடன்  தல்பியாவை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

(இப்ராத் மற்றும் கிரான் முறையில் ஹஜ் செய்கின்றவர்கள் வேறுபடுகின்றர்   )

2.எட்டாம் நாள் சுபஹ{க்குப் பின் ழுஹருக்கு முன்னதாக ஹாஜிகள் தல்பியா சொல்லியவாறு மினாவுக்கு சென்று அங்கே ழுஹர், அஸர், மஃரிப் இஷா ஆகிய தொழுகைகளை குறித்த நேரத்தில் நான்கு ரக்அத்களை இரண்டாகச் சுருக்கியும் மஃரிபை மூன்றாகவும் தொழுதுகொள்ள வேண்டும். ஒன்பதாம் நாள் சுபஹ் தொழுகையையும் மினாவிலேயே தொழவேண்டும்.  அத்துடன் இந்த இரவு மினாவிலே தங்கி இருக்கவேண்டும்.

Comments are closed.

Derek MacKenzie Womens Jersey