Friday, March 29, 2024

இஸ்லாமிய உலகின் அறிவியல் பொக்கிசங்கள் எவ்வாறு மேற்குலகிற்குக் கடத்தப்பட்டன?

மஸ்ஊத் அப்துர்ரஊப்

அறிமுகம்

பேர்லின் நகரின் மேற்கில் அமைந்துள்ள ஜேர்மன் தேசிய நூலகத்தில் கிட்டத்தட்ட 9000 அரபுக்கையெழுத்துப்பிரதிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 2500 பாரசீகக் கையெழுத்துப்பிரதிகளும் 3500 துருக்கிய கையெழுத்துப்பிரதிளும் 60 உருதுக் கையெழுத்துப் பிரதிகளும் அடங்குகின்றன. இஸ்லாமிய நாகரிகத்தின் அறிவியல் எச்சங்களாகவுள்ள இப்பிரதிகளை வரலாற்று ரீதியாகவும் இஸ்லாமிய உம்மத்தில் மீண்டும் அறிவியல் மறுமலர்ச்சியைத் தருவிபப்தில் இவற்றின் வகிபங்கு தெடர்பாகவும் பல்வேறு கோனங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிது ஒரு புறமிருந்தாலும் இந்ந அறிவியல் சாதனங்கள் எப்படி அங்கே போனது? ஏன்ற கேள்விக்கு விடைகாண்பதே நாம் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

காலத்தால் அழியாது நவீன முறையில் பாதுகாத்து அவற்றை ஒப்பீட்டாய்வு செய்து உறுதிப்படுத்தி அட்டவணைபப்படுத்திய பின் எவ்வாறு குறிப்பிடத்தக்க பிரதிகள்      மாத்திரம் புத்தகமாக வெளியிடப்படுகின்றன? குறிப்பாக இஸ்லாத்துக்கு முறணான கருத்துக்களைக் கொண்ட ஏடுகள் மாத்திரம் ஏன் பிரசுரமாகின்றன? போன்ற கேள்விகள் இவை தொடர்பான நியாயமான பல யூகங்களைத் தோற்றுவிக்கின்றன.

அறிவுப்பரம்பலை புவியியல் எல்லைகளால் கட்டுப்படுத்த முடியாது. கையெழுத்துப் பிரதிகளைப் பொறுத்த மட்டிலே அச்சு இயந்திரங்களில்லாத ஆரம்ப காலத்தில் மனித கைகளால் எழுதப்பட்டவைகளாகும். நவீன அச்சு இயந்திரங்களால் எவ்வளவுதான் புத்தகங்கள் அச்சிடப்பட்டாலும் கையால் எழுதப்பட்ட அதன் மூலப்பிரதிக்கு தனி மௌசு இருப்பதைப் போன்று பண்டைய நூற்றாண்டுகளில் பல அறிஞர்களால் எழுதப்பட்ட கையேடுகள் ஆய்வுகளுக்கு சிறந்ததும் வலிமையுமான மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன. இதனாலேயே அவை மிகுந்த கவனத்துடன்  பாதுகாக்கப்படுகின்றன. உலக வரலாற்றில் பல அறிவியல் சாதனைகளுக்கு வித்திட்ட இஸ்லாமிய உம்மத்தானது இது போன்ற தொன்மையான பல ஆவனங்களைப் பாதுகாத்து வைத்துள்ளது. அல் இஹ்யா என்ற பதம் உயிர்ப்பித்தல் என்ற அர்த்தமுல்லதாகும்.  பழைய ஆவனங்களை தடயங்களை உயிர்ப்பித்தல் என்ற விரிந்த கருத்தைக் கொண்டுள்ள இச்சொல் அதிகமாக இஸ்லாமிய உம்மத்தின் வரலாற்றில் பாவிக்கப்படுவதற்கான காரணம் தனக்குக் சொந்தமான அதிகமதிகம் புராதன அவணங்களை இந்த உம்மத் வைத்திருப்பதேயாகும்.

முஸ்லிம் நாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற அன்பளிப்புக்கள் மூலமாகவும் முஸ்லிம் நாடுகளிலிருந்து விலைக்கு வாங்கியதன் மூலமாகவும் இக்கையேட்டுப்பிரதிகள் பேர்லின் நூலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டீருக்கின்றன. இதுவல்லாத வேறு வழிகளிலும் கையெழுத்துப்பிரதிகள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்நூலகத்தை உருவாக்குவதற்காக புரூஸியா(ஜேர்மனி) மன்னன் (பர்தரீக் வில்லியம் 1620-1688) அரேபிய இஸ்லாமியக் கையெழுத்துப்பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பெருமளவில் முயற்சித்ததாகவும் சிறந்த கீழைத்தேய ஆய்வாளர்களான ரிச்சட் ஹென்றிஸ் ஆகிய இருவரையும் கையெழுத்துப்பிரதிகளைத் திரட்டுவதற்காகவென மன்னன் நியதித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.

புரூஸியாவுக்கும் (ஜேர்மனி)  உத்மானிய சாம்பிராஜ்ஜியத்துக்கும் நெருக்கமான உறவுகள் பேணப்பட்டமையினால் இரு உலகப்போர்களிரும் ஒரே கூட்டணியாக ஜேர்மனியும் துருக்கியும் இணைந்திருந்தன. இரு நாடுகளுக்கிடையிலான இத்தொடர்பும் இஸ்லாமியக் கையெழுத்துப்பிரதிகள் ஜேர்மனிக்குச் செல்லக் காரணமாகவிருந்துள்ளன.

கீழைத்தேய மேலைத்தேய இஸ்லாமிய நாடுகளுடன் ஐரோப்பா மேற்கொண்டு வந்த வனிக நடவடிக்கைகளாலும் பெறுமதிமிக்க இந்த ஆவனங்கள் ஐரோப்பாவுக்குக் கடத்தப்பட பெரும்பங்காற்றியிருக்கின்றன. ஏனெனில் குறிப்பாக ஐரோப்பிய வர்த்தகர்கள் முஸ்லிம் நாடுகளில் காணப்படும் அறிவியல் வளங்கங்களையும் பெறுமதி வாய்ந்த பொக்கிஸங்களையுமே முடீயுமான அளவில் வாங்கியுள்ளார்கள். பிரித்தானியர் தமது காலணித்துவ நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்திய கிழக்கிந்தியக்கம்பனியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஐரோப்பிய உலகம் அதிகமான இஸ்லாமிய நாடுகளைத் தனது காலணித்துவத்திற்கு உற்படுத்துவதற்கான காரணமும் இஸ்லாமிய உலகின் அறிவியல் வளங்களை சுரண்டும் நோக்கம்தான். அதன் பலனை இன்று அவர்கள் நுகர்கின்றனர்.

பேர்லின் நூலகம்

மேற்குலகின் அறிவியல் எழுச்சிக்குப் பங்காற்றிய பிரதானமான நூலகங்களில் இதுவுமொன்றாகும். பல கீழைத்தேய ஆய்வாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த இந்நூலகம் உலக அளவில் ஜந்தாவது பெரும் நூலகமாகக் கருதப்படுகின்றது. டமஸ்கஸில் உள்ள லாஹிரிய்யா நூலம் துருக்கியிலுள்ள இஸ்தன்பூல் நூலகம் அமெரிக்காவிலுள்ள பிரிஸ்டன் பல்கலைக்கழக நூலகம் கெய்ரோ நூலகம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்நூலகமே கணிக்கப்படுகின்றது. 200 மில்லியன் ஜேர்மன் மார்க் செலவில் நிர்மானிக்கப்பட்ட இந்நூலகத்திலே சுமாராக மூன்றரை மில்லியன் புத்தகங்கள் காணப்படுகின்றன. 3000 கையெழுத்துப்பிரதிகள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 9000 அரேபியக் கையேட்டுப்பிரதிகளாகும். மீதமுள்ளவை பாரசீகம்இதுருக்கி இந்தியா சீனா போன்ற  நாடுகளின் கையெழுத்துப்பிரதிகளாகும். இவைகளனைத்தும் முறைப்படி வகைப்படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. ஏன்றாலும் இன்னும் அட்டவணைப்படுத்தப்படாத 14000 கையெழுத்துப்பிரதிகள் இந்நூலகத்திலிருக்கின்றன.

அரேபியக் கையேட்டுப்பிரதிகள்

பொதுவாக இங்கு காணப்படும் அரபுக் கையெழுத்துப்பிரதிகளனைத்தும் குர்ஆன் பிரதிகளாகவும் தப்ஸீர் கலை ஹதீஸ் கலை  தர்கக்கலை சூபித்துவம் கவிதை அரபு இலக்கண இலக்கியம் வரலாறு போன்ற துறைகளில் எழுதப்பட்டவைளாகும். இலக்கியத்துறைகளில் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகளே அதிகமாகக் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்னவென்று பார்க்கும் போது சென்ற நூற்றாண்டுகளில் இவ்வாவனங்களைச் சேகரித்தோருக்கு  இலக்கியம் சார்ந்த படைப்புக்களே இலகுவாகக் கிடைத்திருக்கின்றன. அல்லது வேறு துறை சார் ஆவனங்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று விளங்கலாம்.

பேர்லின் நூலகத்துக்கு எக்காலப்பகுதியில் இந்த ஆவனங்கள் வந்து சேர்ந்தன?

கி.பி 19ம் நூற்றாண்டளவிலேயே இப்பிரதிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. புரூஸியாவுக்கும் (ஜேர்மனி) உத்மானியப் பேரரசுக்குமிடையில் நிலவிய நெருக்கமான உறவுதான் அரேபிய துருக்கிய பாரசீக கையெழுத்துப்பிரதிகள் இந்நூலகத்துக்கு வருவதற்குப்பிரதான காரணமாகும். ஏனெனில் புரூஸிய(ஜேர்மனி)  நாட்டு மன்னன் கன்ஸல் அல் புரூஸி என்பவரை இப்பிரதிகளைச் சேகரிப்பதற்காகவென டமஸ்கஸில் நியமித்திருந்தான். இவருடைய முயற்சியினால் கிடைக்கப்பெற்ற 60 கையெழுத்துப்பிரதிகள் இந்நூலகத்திலுள்ளன. இவ்வாறு நபர்களை நியமிப்பது முக்கிய ராஜதந்திர நடவடிக்கையாகவுள்ளது. இதை மையமாக வைத்து பல நாடுகாண் பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை வரலாற்றில் காணமுடிகின்றது. இதனடியாகத்தான் எட்வர்ட் என்ற நாடுகாண் பயணி எமனுக்கு ஒரு குழுவை அனுப்பி அங்கிருந்த 250 கையெழுத்துப்பிரதிகளை விலைக்கு வாங்கி ஜேர்மன் மன்னனிடம் கொடுத்ததாகவும் அவை பேர்லின் நூலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகின்றது. அதேபோன்றுதான் கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றிய ஸப்ரன்ஜர் எனும் நாடுகாண் பயணி 2000 அளவுக்கும் கூடுதலான கையெழுத்துப்பிரதிகளைத்திரட்டினார். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அரேபியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் மொழியியல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட லான்ட் பிரிஜ் எனும் நிருவனமும் அதிகளவிலான கையெழுத்துப்பிரதிகளை திரட்டியது.

அரேபிய இஸ்லாமிய விடயங்களை அறிவதில்  ஜரோப்பாவிலும்  ஜேர்மனியிலும் பேர்லின் பல்கலைக்கழகத்தில் காணப்படும் இந்த ஆவனங்களின் பங்களிப்பு

அரேபியா பற்றிய விடயங்களை அறிவதில் பேர்லின் பல்கலைக்கழகத்தில் காணப்படும் கையெழுத்துப்பிரதிகள் பல நூற்றாண்டுகளாகப் பெரும்பங்காற்றியுள்ளன. அரேபியரின் பண்பாடு அறிவு பற்றிய வரலாறு எனும் தலைப்பில் ஐந்து பாகங்கள் கொண்ட நூலை எழுதிய பிரபல கீழைத்தேய ஆய்வாளர் கார்ல் புரூக்ல்மன் தனது இந்த ஆய்வை இந்த நூலகத்தில்தான் ஆரம்பித்தார் என்பது இதற்கு சிறந்த உதாரணமாகும். இவர் அரேபிய இலக்கிய வரலாறு என்ற நுலை எழுதுவதற்கும் இங்குள்ள கையெழுத்துப்பிரதிகள் பெரும் துணையாகவிருந்துள்ளன.

கையெழுத்துப்பிரதிகளிலிருந்து ஆய்வாளர்கள் எவ்வாறு பயன்பெறுகின்றனர்?

பேர்லின் பல்கலைக்கழகத்தில் மொழியியல் ஆய்வுகளுக்கான பீடம் அரபு இஸ்லாமியா ஆய்வுகளுக்கான பீடம் என இரண்டு பீடங்கள் காணப்படுகின்றன. பல கையெழுத்துப்பிரதிகளை நேரடியாகப்பார்க்கும் வாய்ப்பு ஆய்வாளர்களுக்கு இங்கு கிடைக்கின்றது. ஏன்றாலும் பேர்லின் நூலகத்துக்கு வரும் ஆய்வாளர்கள் தமக்குத் தேவையான கையெழுத்துப்பிரதிகளைப் பெறவேண்டுமானால் நூலக நிர்வாகத்திடம் வேண்டுமிடத்து இரண்டு மாதங்களில் அவர்களுக்குத் தேவையான கையெழுத்துப்பிரதிகளின் நகல்கள் பிரதிபன்னப்பட்டு வழங்கப்படுகின்றன. இது மிகப்பெரும் சேவையெனலாம்.

எவ்வாறான கையெழுத்துப்பிரதிகள் பிரசுரிப்பதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன?

இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் புத்தகங்களை வெளியிட ஆரம்பித்த ஜேர்மனிய கீழைத்தேயவாதிகள் இது வரைக்கும் 20 வீதமான கையெழுத்துப்பிரதிகளையே புத்தகங்களாகப் பிரசுரித்துள்ளனர். முஸ்லிம்களின் அறிவியல் மூலதனங்களாவுள்ள இவற்றுள் எவ்வகையினை அச்சிட்டுப் பல பதிப்புக்களாக வெளியிடுகின்றனர் என்பது பற்றி ஆராயும் போதுதான் இவர்களின் இந்த வெளியீடுகள் தொடர்பாக சில சந்தேகங்கள் நமை ஆட்கொள்கின்றன. இஸ்லாமிய நாகரிகம் வீழ்சியடைந்து முஸ்லிமகள் பலவீனமுற்றிருந்த காலத்திலிருந்த இஸ்லாத்துக்கு முற்றிலும் முறனான சிந்தனைகளை விதைக்கும் கருத்துக்களைக் கொண்ட கையெழுத்துப்பிரதிகள்தாம் இவர்களால் நூலுருப்படுத்தப்படுகின்றன என்ற செய்தியே நமை வியக்க வைக்கின்றது. இது தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பல விடயங்கள் உலகுக்கு அம்பலமாகும் அதே வேளை மேற்குலகில் இஸ்லாம் பற்றித்தவறாக விதைக்கப்பட்டுள்ள கருத்துக்களை  இனங்கண்டு அவற்றுக்குத் தக்க பதில்களையும் வழங்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts