Friday, March 29, 2024

உருவாக்கப்பட்ட புதிய உயிரி இறைவனின் படைப்பு வல்லமைக்குச் சவாலாக அமையுமா?

பீபீஸியில் விஞ்ஞானிகளால் செயற்கை 4 இரசாயன மூலங்களின் துணையோடு கனணியால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு உயிரி பற்றி செய்யதி வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் இதை கடவுள் நம்பிக்கையற்ற சிலர்  இறை வல்லமைக்கு சவாவலாக ஆக்கியுள்ளனர்.

விஞ்ஞானரீதியாக மனித சமூகத்திற்கு பயன்தரக் கூடிய ஒன்றை உருவாக்குவதை இஸ்லாம் தடைசெய்யவில்லை. ஆனால் அவைகள் ஒருநாளும் ஒருபொழுதும் இறை வல்லமைக்கு சவாலாக அமையாது. மனிதனால் இல்லாமையில் இருந்து ஒன்றை உருவாக்க முடியாது. இறைவன் இந்த உலகில் படைத்துள்ள ஒரு அணுவின்றி அல்லது அணுவின் பிரிவுகளின்றி எந்த விஞ்ஞானத்தாலும் எதனையும் உருவாக்க முடியாது. எந்த வொன்றையு மனிதன் உருவாக்கிவிட்டேன் என்று சொன்னாலும் அதற்கான மூலகம் இறைவனால் படைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இறைவனின் சவாலெல்லாம் மனிதன் இறைவனுக்கு வழங்கிய ஆற்றலுக்கு அப்பாற்பட்டதுதான். இன்னொரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும். மனிதன் இரண்டு மூலங்களைச் சேர்த்து ஒரு பொருள் வடிவத்தை அமைக்க எண்ணி தனது ஆய்வு கூடத்திலே வைக்கிறான் இரண்டு நாட்கள் வரை அதன் வடிவம் பெற தாமதிக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த இரண்டு நாட்கள் அவனுக்கு ஏன் தேவைப்படுகிறது. படைப்பாளனாக அவனிருந்தால் உடனேயே படைத்திருக்கலாமெ .மாற்றத்திற்குறிய காலத்தை அவன் வகுக்கவில்லை அளக்கிறான்.இவ்வளவு நாளில் உருவாகிவிடும் என்று சொல்லும்போது அது அவனால் உருவாக்கப்பட்ட கால எல்லை அல்ல மாறாக அவன் ஆய்வின் மூலம் அறிந்துகொள்ளும் கால எல்லை. இந்த இடைவெளி படைப்பவனுக்குத் தேவை இல்லை.21 நாள்களில் உருவாகும் ஒரு முட்டையை தாயின்றி வெப்பங்கொடுத்து குஞ்சை உருவாக்கலாம் ஆனால் பத்து நாளாக்க முடியாது. ஏனென்றால் மனிதன் படைப்பாளனல்ல படைப்பாளனல்ல நுகர்பவன்தான். க்ளோனிங் அல்ல எந்த முறையில் ஒரு குழந்தை உருவாகினாலும் உருவாக்கம் மாற்றம் அமைத்தல் உருவகித்தல் அனைத்தும் இறைவனால் நடப்பதே அதே போன்று கால அளவும் இறைவனால் வகுக்கப்பட்டதே. 6 மாதம் ஒரு குழந்தையின் ஆகக்குறைந்த கர்ப்பகாலம் என்ற அளவை எந்த மனிதப்படைப்பாளனாலும் மாற்ற முடியாது. இறைவன் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.

قَالَتْ رَبِّ أَنَّى يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ قَالَ كَذَلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ  آل عمران : 47

‘எனக்கு எப்படிக் குழந்தை உண்டாகும் என்னை எந்த மனிதரும் தீண்டியதில்லையே என அவள்(மர்யம் சொன்னால்  அதற்கு அவர் (ஜிப்ரீல் சொன்னார் ‘அவ்வாறுதான் இறைவன் நாடியதைப் படைக்கிறான் அவன் ஒன்றைத் தீர்மானித்து விட்டால் அவன் அதற்கு சொல்வதெல்லாம் ஆகு என்றே அது ஆகிவிடும்.” ஆலு இம்ரான் 47

எல்லாவற்றையும் விட மனித சமூகத்திற்கான மிகப் பெறும் சவால் படைப்பு மாத்திரமல்ல. இறந்து கொண்டிருக்கும் உயிர்களை இறக்காமல் நிரந்தரமாக மாற்ற ஒவ்வொறு விஞ்ஞானியும் ஆசைப்படுகிறான். அதைத் தடுத்தி நிறுத்தி உயிரிகளுக்கு ஓர் பிரியா வாழ்வமைப்பதுதான்.

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ (60) الواقعة

நாம்தான் உங்களுக்கு மத்தியில் மரணத்தை விதித்தோம். எம்மை எவறாலும் தோல்வியுறச் செய்ய முடியாது.

உயிரியை உருவாக்கியபின் படைத்துவிட்டோம் என்று சவால் விடுவீர்களாயின் எழுதுங்கள் உங்கள் உயிரிக்கோர் உயிர் பிரியாத வாழ்வை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts