Tuesday, April 16, 2024

கலிமாவிற்கு வழங்கப்படும் தவறான அர்த்தங்கள்

லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்துக்கு அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறுயாரும் இல்லை என்று தமிழில் கருத்துக் கூறலாம். மக்கத்து காபிர்கள் சூரியன், சந்திரன், கல், மனிதர்கள் போன்றவற்றையெல்லாம் கடவுளாக ஏற்றிருந்தனர். உண்மையில் இவைகள் கடவுளல்ல. கடவுள் தன்மைக்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.  அல்லாஹ்வின் படைப்புக்கள் கடவுள்களாக வணங்கப்பட்டாலும் அவை வணங்கத் தகுதியானவைகளல்ல. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்பதையே இக்கலிமா நமக்குணர்த்துகின்றது. எனவே வணங்கப்படுபவன் அல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லலை என்று கலிமாவுக்கு  நாம் விளக்கம் சொல்லக் கூடாது ‘வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றுதான் அதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டும். இது மொழி பெயர்ப்பு சம்பந்தமான ஒரு சிறு விளக்கம். முஸ்லிம் சமூகம் கலிமதுத் தவ்ஹீதை முழுமையாக ஏற்றிருந்தாலும் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு விதமாக விளக்கம் சொல்வதைப் பார்க்கிறோம். விளக்கமாகச் சொல்வதென்றால் அந்த விளக்கங்களிடப்படையில்தான் அந்த ஜமாஅத்துக்களே உருவாகியுள்ளன. அதில் பிரதானமான இரண்டு தவறான விளக்கங்களை தெளிவுபடுத்துவதே இவ்வெழுத்தின் நோக்கம் .

   தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் கலிமாவுக்கு தவறான விளக்கங்களை வழங்கி தமது பிரசாரத்தில் அடிப்படையாகவே அதைப் போதித்து வருவதைக் காண்கிறோம். அவர்களது பயான் நிகழ்ச்சிகளைப் கேட்கும்  போது அல்லாஹ்வால்தான் அனைத்தும் நடைபெறுகின்றது. நமது பார்வைக்கு சிலது சிலவற்றுக்குக் காரணமாக அமைவதாய் தெரிந்தாலும் அல்லாஹ்வால்தான் அதுவும் நடைபெறுகின்றது. அல்லாஹ்வால்தான் அனைத்தும் நடைபெறுகின்றது என்ற இக்கலிமாவைப் பிரசாரம் செய்யவே நபியவர்கள் இவ்வுலகுக்கு வந்தார்கள்…..’ என்று அவர்கள் பேசுவார்கள். தம்மோடு சேர்ந்து பணியாற்ற பிறரை அவர்கள் அழைக்கும் போது ‘உங்களது உழைப்பால்தான் உங்கள் குடும்பம் வாழ்கின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். அது தவறு. அனைத்தும் அல்லாஹ்வால்தான் நடைபெறுகின்றது ஆகவே வெளிக்கிளம்பிச் செல்லுங்கள்….’ என்று கூறுவார்கள். இந்த விளக்கத்தைத்தான் கலிமாவின் விளக்கமாகச் சொல்வார்கள். இதைத் தவிர வேறெதனையும் அவர்கள் பேசுவதில்லை. பக்கத்திலே ஷிர்க் அரங்கேறும் அதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்கள்.கலிமாவின் விளக்கம் அதைத் தடைசெய்யாதது போன்று இருந்துவிடுவார்கள்.அதாவது சுருங்கக் கூறினால் ‘எல்லாமே அல்லாஹ்வால்தான் ஆகிறது வஸ்துக்களுக்கு எந்த சக்தியுமில்லை என்பதுவே அவர்கள் கலிமாவிற்குத் தரும் விளக்கம்

ஆனால் கலிமாவின் சரியான விளக்கம் இதுவல்ல. நபியவர்கள் இந்தக் கலிமாவை மக்கத்து காபிர்களிடம் முன்வைத்த போது அதை எதிர்க்கத் தூண்டிய விளக்கம் இதுவல்ல. அல்லாஹ்வைப் பற்றி மக்கத்துக் காபிர்கள் இந்த அளவை விட சற்றுக் கூடுதலாகவே நம்பியிருந்தார்கள்.தப்லீக் ஜமாஅத்தினர் கூறும் இந்த விளக்கத்தை ஏற்கனவே மக்கத்துக் காபிர்களும் ஏற்றிருந்தனர். இதைக் கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவாகக் கூறுகிறது.

(وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ ( العنكبوت61

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். (அல்அன்கபூத் : 61)

மக்கத்துக் காபிர்கள் ஏற்கனவே ஏற்றிருந்த கொள்கையை நபியர்கள் பிரசாரம் செய்யவரவில்லை. அதற்கவசியமுமில்லை. அதற்காக இவ்விளக்கம் பிழையானது, இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணானது என விளங்கிடலாது. இவ்விளக்கம் சரியானதுவே ஆனாலும் எல்லாமே அல்லாஹ்வால்தான் ஆகிறது என்று நம்புவதால் மாத்திரம் ஒருவர் இஸ்லாத்துக்குள் நுழைய முடியாது.

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ

أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ. العنكبوت: 63

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவர்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை. (அல்அன்கபூத்: 63)

இன்னோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ     لقمان: 25

வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள் .(லுக்மான் : 25)

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِيَ اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ  الزمر: 38

‘வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!(அஸ்ஸுமர் : 38)

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ  الزخرف: 87

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? (அஸ்ஸுகுருப் : 87)

ஒரு காபிருடைய பிராத்தனையை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்

وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ  الأنفال: 32
”அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையாக இருந்தால் எங்கள் மீது வானத்திலிருந்து கல் மழையைப் பொழியச் செய்வாயாக! அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவாயாக!” என்று அவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள்  (அல் அன்பால் : 32)

நபியவர்களுக்கெதிராகவே அல்லாஹ்விடம் பிராத்திக்குமளவுக்கு மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வை ஏற்றிருந்தனர் என்பதற்கு இது சான்றாக அமைகின்றது. மக்கத்துக் காபிர்களைப் பார்த்து அல்லாஹ் பின்வருமாறு கேட்கின்றான்.

وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُونَ إِلَّا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الْإِنْسَانُ كَفُورًا  الإسراء: 67

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரைசேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.(இஸ்ரா : 67)

மற்றோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது

قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ (31) فَذَلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ فَأَنَّى تُصْرَفُونَ  يونس: 31، 32

‘வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும் பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும் உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!  அவனே உங்களின் உண்மை இறைவனாகிய அல்லாஹ். உண்மைக்குப் பின்னே வழி கேட்டைத் தவிர வேறு என்ன உள்ளது? எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?   (யூனுஸ் : 31,32)

மேலே நாம் பார்த்த இந்த வசனங்களனைத்தும் மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்தான் உலகைப் படைத்துப் பரிபாலிப்பவன் என்பதை ஏற்றிருந்தார்கள் என்பதை தெளிவாகச் சொல்கின்றன. ஆகவே இதைப் பிரசாரம் செய்வதற்காக நபிவயவர்கள் வந்திருக்க முடியாது என்பது உறுதியாகின்றது.

அவர்களின் வணக்க வழிபாடுகளிலும் ஏதோ ஓரடிப்படையில் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள் அதை கீழ்வரும் வசனத்திலிருந்து விளங்கலாம்.

{أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ} الزمر: 3

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அஸ்ஸுமர் : 03)

ஜாஹிலிய்ய மக்களிடத்தில் அல்லாஹ்வைப் பற்றி நம்பிக்கை காணப்பட்டாலும் அது சரியானதாக இருக்கவில்லை அல்லாஹ்வைப் பற்றிப் பிழையான நம்பிக்கையே அவர்களிடம் காணப்பட்டது அதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

 { أَفَأَصْفَاكُمْ رَبُّكُمْ بِالْبَنِينَ وَاتَّخَذَ مِنَ الْمَلَائِكَةِ إِنَاثًا إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا} الإسراء: 40

உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி விட்டு தனக்கு வானவர்களைப் புதல்வியராக ஆக்கிக் கொண்டானா? பயங்கரமான கூற்றையே கூறுகிறீர்கள்!            (அல்இஸ்ரா : 40)

எனவே அல்லாஹ்வால்தான் அனைத்தும் இடம்பெறுகின்றது என்று சொல்லிவிட்டால் அது அல்லாஹ்வைப் பற்றிய முழுமையான நம்பிக்கையாகிவிடாது. இந்த நம்பிக்கையை மட்டும் பிரசாரம் செய்ய நபிமார்கள் அனுப்பப்படவில்லை என்பதை மிக ஆழமாக விளங்க வேண்டும்.

காபிர்கள் அல்லாஹ்வை எப்படியெல்லாம் தவறாக எண்ணியிருந்தார்கள் என்பது பற்றி அல்லாஹ் மேலும் கூறும் போது

فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ (149) أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ (150) أَلَا إِنَّهُمْ مِنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ (151) وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ (152) أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ }     الصافات: 149 – 153

‘உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தை களா?’ என்று இவர்களிடம் கேட்பீராக!வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும் போது அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?கவனத்தில் கொள்க! அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள். ஆண் மக்களை விட அவன் பெண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா?   (அஸ்ஸாப்பாத் : 149- 153)

மற்றோரிடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ (19) وَقَالُوا لَوْ شَاءَ الرَّحْمَنُ مَا عَبَدْنَاهُمْ مَا لَهُمْ بِذَلِكَ مِنْ عِلْمٍ إِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ (20) أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا مِنْ قَبْلِهِ فَهُمْ بِهِ مُسْتَمْسِكُونَ (21) بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِمْ مُهْتَدُونَ} الزخرف: 19 – 22

அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்து விட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களது கூற்று பதிவு செய்யப்பட்டுஇ விசாரிக்கப்படுவார்கள். ‘அளவற்ற அருளாளன் நினைத்திருந்தால் அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்’ எனக் கூறுகின்றனர். இது பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அவர்கள் கற்பனை செய்வோராகவே தவிர இல்லை.இதற்கு முன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வேதத்தை நாம் கொடுத் தோமா? அதை அவர்கள் (இதற்கு ஆதார மாக) பற்றிப் பிடித்துக் கொண்டார்களா?அவ்வாறில்லை! ‘எங்கள் முன்னோர் களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளில் நடப்பவர்கள்’ என்றே கூறுகின்றனர்.   (அஸ்ஸுக்ருப் : 19-22)

மற்றோரிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு சொல்கின்றான்.

{وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَذَا لِشُرَكَائِنَا فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلَا يَصِلُ إِلَى اللَّهِ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَى شُرَكَائِهِمْ سَاءَ مَا يَحْكُمُونَ  الأنعام: 136
அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்களிலும் கால்நடைகளிலும் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர். ‘இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது’ என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங் களுக்கு உரியதுஇ அல்லாஹ்வைச் சேராதாம். அல்லாஹ்வுக்கு உரியதுஇ அவர்களின் தெய்வங்களைச் சேருமாம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது. (அல்அன்ஆம் : 136)

மற்றோரிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு சொல்கின்றான்.

وَقَالُوا هَذِهِ أَنْعَامٌ وَحَرْثٌ حِجْرٌ لَا يَطْعَمُهَا إِلَّا مَنْ نَشَاءُ بِزَعْمِهِمْ وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَامٌ لَا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاءً عَلَيْهِ سَيَجْزِيهِمْ بِمَا كَانُوا يَفْتَرُونَ (138) وَقَالُوا مَا فِي بُطُونِ هَذِهِ الْأَنْعَامِ خَالِصَةٌ لِذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَى أَزْوَاجِنَا وَإِنْ يَكُنْ مَيْتَةً فَهُمْ فِيهِ شُرَكَاءُ سَيَجْزِيهِمْ وَصْفَهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ } الأنعام: 138، 139

இவை தடை செய்யப்பட்ட கால்நடைகளும் பயிர்களுமாகும். நாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண முடியாது’ என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப் பட்டுள்ளது எனவும்இ சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக் கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.’இக்கால்நடைகளின் வயிற்றில் உள்ளவை எங்களில் ஆண்களுக்கு மட்டுமே உரியவை. எங்களில் பெண்களுக்குத் தடுக்கப்பட்டவை. அவை இறந்தே பிறந்தால் அதில் அனைவரும் பங்காளிகள்’ எனவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் இக்கூற்றுக்காக அவர்களை அவன் தண்டிப்பான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.  (அல்அன்ஆம் : 138 -139)

மற்றோரிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு சொல்கின்றான்.

يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ (73) مَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ} الحج: 73، 74

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனை வரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படு வோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்;   (அல் ஹஜ் : 73-74)

மற்றோரிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு சொல்கின்றான்.

{أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ (191) وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًا وَلَا أَنْفُسَهُمْ يَنْصُرُونَ الأعراف: 191، 192

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக் கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது.  (அல்அஃராப் : 191-192)

இந்த வசனங்களையெல்லாம் அவதனிக்கும் போது கீழ்வரும் அம்சங்களைக் கண்டு கொள்ளலாம்

1-    அல்லாஹ்வால் எல்லாம் நடைபெறுகின்றது என்பதை மக்கத்து காபிர்கள் நம்பியிருந்தார்கள்.
2-    அல்லாஹ்வுக்கென்று பிரத்யேகமான வணக்கங்கள் அவர்களிடம் காணப்பட்டன.
3-    கடலில் பயணம் செய்யும் போது சில வேளைகளில் அல்லாஹ்விடம் பிராத்திக்கும் வழமை அவர்களிடம் காணப்பட்டது.

மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வை இந்த முறையில் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என அல்லாஹ்வே சான்று சொல்லும் போது இதை அவர்களிடம் பிரசாரம் செய்வதாற்காக வந்திருக்க முடியாது என்பது மென்மேலும் உறுதியாகின்றது.

இன்னும் சொல்வதானால், உலகில் பிறந்த அனைவருமே இவ்வுலகைப் படைத்த ஒருவன் உள்ளான் என்பதை நம்பியிருக்கின்றார்கள். பிர்அவ்னும் இதை நம்பியிருந்தான். அதனால்தான் மூஸா நபியவர்களிடம் ரப்புல் ஆலமீன் என்றால் யார்? என்று அவன் கேட்ட போது ரப்பு என்றால் யார் என்பதை விளங்கப்படுத்தாமல் உன்னையும் என்னையும் படைத்தவன் என்று சுருக்கமாக மூஸா நபியவர்கள் விளக்கம் சொன்னார்கள். ஆகவே உலகைப்படைத்தவன் ஒருவன்தான் என்பதை பொதுவாக அனைவரும் நம்புகின்றனர். அந்த ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதில்தான் பலரும் முரண்படுகின்றனர். படைப்புக்களை வணங்கக் கூடாது உலகைப்படைத்த ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதைப் பிரசாரம் செய்யவே நபிமார்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்கள் என்பதை விளங்கவேண்டும்.

  படைத்தல், நிருவகித்தல் ஆகிய இரண்டும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும் என நம்புவது தவ்ஹீதுல் ருபூபிய்யா எனப்படுகின்றது. இதையே நாம் சற்று முன்னர் விரிவாகப் பார்த்தோம். இது கலிமாவின் ஒரு கிளையாகும். அதன் இன்னொரு கிளை காணப்படுகின்றது. அதுதான் தௌஹீதுல் உலூஹிய்யா எனப்படும் வணக்க, வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே மட்டுமே செய்யப்படவேண்டும் என்ற நம்பிக்கையாகும். பிரபஞ்சத்தையே  படைத்துப் பரிபாலிக்கும் ஒருவனான அல்லாஹ்வுக்கே வணக்கம் செலுத்தப்படவேண்டும். அவன் மட்டுமே அதற்குத் தகுதியானவன். என்ற கலிமாவின் இந்தப் பகுதியை பிரசாரம் செய்யவே நபியவர்கள் இவ்வுலகுக்கு வந்தார்கள். இதை நெஞ்சில் ஆழமாய் பதியவைத்த வண்ணம் அடுத்த பகுதிக்குள் நுழைவோம்.

நபிமார்கள் எதைப்பிரசாரம் செய்தார்கள்? இன்று எதைப் பிரசாரம் செய்கின்றார்கள்? என்பது பற்றி நாம் இப் பகுதியில் அலசுவோம்.நபிமார்கள் எதைப்பிரசாரம் செய்தார்கள் என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு மிகத்தெளிவாகக் கூறுகின்றது.

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ النحل: 36

அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!’ என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்  ( அநநஹ்ல் : 36)

நபியவர்கள் தமது பிரசாரத்தில் இதையே முற்படுத்தினார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் நமக்குணர்த்திக்கொண்டிருக்கின்றன. எனவே நம் கண்முன்னால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கப்படுவதை நாம் கண்டால் நமக்கு ஆற்றலிருந்தால் அதை நல்ல முறையில் பிரசாரம் செய்து தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கின்றது. இதுவே அவ்விடத்தில் நாம் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணியாகவுமுள்ளது. ஆனால் இன்று நடைபெறுவதோ தலை கீழாகவுள்ளது. இஸ்லாம் வலியுறுத்தும் ஏகத்துவத்தைப் பேசாமல் தொழுகைப் பற்றியும் நற்பண்பாடு பற்றியும் ஷிர்க் அரங்கேறும் இடங்களில் பேசுகன்றார்கள். இணை வைத்தலோடு நல்லமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுமாயிருந்தால் மக்கத்து முஷ்ரிகீன்கள் அல்லாஹ்வுக்காக விட்டிருந்த ஒட்டகங்கள் அல்லாஹ்வுக்கு  சேராது என்று ஏன் அல்லாஹ் கூறவேண்டும்? அவ்லியாக்கள் என்ற பேரால் தவாப், நேர்ச்சை, எண்ணெய் தேய்த்தல் என்று பித்தலாட்டங்கள் நடைபெறும் போது அவ்விடத்துக்குச் சென்று தொழுகை பற்றியும், நற்குணங்கள் பற்றியும் பேசுவதையா இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்தது?

எமன் தேசத்துக்கு இஸ்லாத்தின் தூதை எடுத்துச் செல்லவிருந்து முஆதிப்னு ஜபல் (ரழி) அவர்களைப் பார்த்து நபியவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்.

صحيح البخاري (2  104) 1395 – عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى اليَمَنِ، فَقَالَ: «ادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ»
நபி(ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழி)
ஆதாரம் : புஹாரி 1395

யமன் தேசத்தவர்கள் ஏற்கனவே வேதம் வழங்கப்பட்டவர்கள் அல்லாஹ்வைத் தெரிந்தவர்கள் அவர்களுக்கே அல்லாஹ்வைத்தான் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என நபியவர்கள் இங்கே பணித்துள்ளதிலிருந்து தொஹீத் தான் முதலில் பிரசாரம் செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாகின்றது.

  தப்லீக் ஜமாஅத்திலிருக்கும் பெரியவர்கள் தொட்டு கீழ் நிலையிலுள்ளவர்களிடமும் சென்று அல்லாஹ் எங்கேயிருக்கின்றான் என்று கேட்டால் மௌனமாகவிருப்பார்கள் அல்லது எங்கும் இருக்கின்றான் என்பார்கள். நான்கு மாதம் நான்கு வருடங்களாக தப்லீக்கிலீடுபடுவோருக்கு இந்த அடிப்டை தெரியவில்லை. கேட்டால் நமது உலமாக்கள் இது பற்றிப் பேசக் கூடாது என்று சொல்லியுள்ளார்கள் எனச்சொல்வார்கள். ஓர் அடிமைப் பெண்ணைப் பார்த்து அவள் முஃமினா? என்று சோதிப்பதற்கு நபியர்கள் இதே கேள்வியையே கேட்டார்கள் என ஹதீஸ்களில் பார்க்கின்றோம் ஆனால் இவர்களின் உலமாக்களோ இதைப் பற்றிப் பேசக் கூடாது எனப் பணித்துள்ளார்களாம்? இதுதானா நபிமார்களின் வழிமுறை?

நபியவர்களைப் பார்த்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்

لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ الزمر: 65

‘நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர் ( அஸ்ஸுமர் : 65)

நபியவர்களுக்கே இந்த எச்சரிக்கையென்றால் ஷிர்க் எந்தளவுக்குப் பாரதூரமான ஒருபாவமாகவுள்ளது என்பதை நாம் யோசிக்க வேண்டும். இத்தகைய பெரும் பாவம் பகிரஹ்மாகக் கண்முன்னால் நடைபெறும் போது அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா?இதுவா நபிமார்களின் தஃவா?தப்லீக் இயக்கத்தவர்கள் தமது பிரசாரத்தில் இவ்வாறு கூறுவார்கள் நபியவர்கள் தாயிபுக்குச் சென்றார்கள் எதற்காகத் தெரியுமா? ஆனைத்தும் அல்லாஹ்வால்தான் நடைபெறுகின்றது என்ற கலிமாவுக்கும், தொழுகைக்காகவும்தான் ஆகவே அல்லாஹ்வின் பாதையில் அழைப்பு விடுக்க வாருங்கள் என்பார்கள். உண்மையிலேயே கலிமாவை இவ்வாறு விளங்கித்தான் நபியவர்கள் மக்களை அழைத்தார்கள் என்றால் பத்ர், உஹத் போன்ற யுத்தங்கள் எதுவுமே நடைபெற்றிருக்காது. ஏனென்றால் காபிர்கள் இதை ஏலவே ஏற்றிருந்தார்கள். அதனால்தான் தப்லீக் அமைப்பினருக்கு பிரச்சாரங்களின்போது எதிர்ப்புக்கள் வருவதில்லை. ஏனென்றால் மக்கள் எதைச் செய்தாலும் அதற்கேட்ப இசைந்து போவது அவ்வியக்கத்தவர்களின் பிராதான பண்பாகும். ஆனால் நபிமார்களின் பிரசாரப்பாணியைப் பார்ப்போமானால் ஆட்சியாளர் முதல் சதாரண மக்கள் வரை அனைவராலும் எதிர்க்கப்பட்டதாக அவர்களின் அழைப்புப்பணி காணப்பட்டது. சத்தியத்தைச் சொன்னால்தான் எதிர்ப்புக்களும் எழும் என்பது நபிமார்களின் வரலாற்றிலிருந்து நாம் பெறும் பாடமாகவுள்ளது. அதனால்தான் வரகா பின் நவ்பல் அவர்கள் நபியவர்களைப் பார்த்து ‘இது போன்ற செய்தியை யார் கொண்டு வந்தாலும் அவர் கொடுமைப்படுத்தப்படுவார். உனது சமூகம் உன்னை இதற்காக வெளியேற்றும்’ என்று சொன்னார். எனவே அல்லாஹ்வைப் பற்றி சரியாகப் பேசிராத, பேசியவரை எதிர்க்கின்ற ஒரமைப்பில் நாம் எவ்வாறு அங்கம் வகிக்க  முடியும்? தங்களது தலைவர்கள் உலகில் சுற்றித் திரிவதாகவும், அல்லாஹ்வோடு பேசியதாகவும், நபியவர்கள் அவரைப் பார்த்து இஷாராச் செய்ததாகவும் பொய்யையும் புரட்டையும் அள்ளி வீசுகின்ற ஓரமைப்பு எவ்வாறு தூய இஸ்லாத்தைப் பிரதிபலிக்க முடியும்? அதைப் பிரசாரம் செய்ய முடியும்? எனவே அல்லாஹ்வைப் பற்றிய சரியான அடிப்படையில்லாமல் எதைத்தான் நீங்கள் பிரசாரம் செய்து மக்களைப் பண்படுத்த முனைந்தாலும் அது ஒருக்காலும் நிலைக்கப் போவதில்லை. மக்கத்துக் காபிர்களும் ஹஜ் செய்தார்கள். அரபாவுக்குப் போகவேண்டிய நாளில் அவர்கள் ஹரமில் இருப்பார்கள். எல்லோரும் முஸ்தலிபாவுக்குச் சென்றதும் அவர்கள் முஸ்தலிபாவுக்குச் சென்றார்கள்.  இஸ்லாம் வருவதற்கு முன்னால் நிலைமை இப்படித்தான் இருந்தது. பின்னர்தான் அல்லாஹ் பின்வருமாறு கட்டளையிட்டான்.

ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ  البقرة: 199

பின்னர் மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் ( அல்பகரா : 199)

இவ்வாறான சில நல்லமல்கள் அவர்களிடம் காணப்பட்டாலும் அவர்களின் அடிப்படை பிழையாகவிருந்த காரணத்தால் அல்லாஹ் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே நல்லமல்கள் எத்தனைதான் காணப்பட்டாலும் அகீதாவில் சரியான தெளிவும், அறிவும் அங்கு காணப்படவில்லையெனன்றால் நல்லமல்கள் ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை என்பதை தெளிவாக விளங்க வேண்டும்.

இந்த அடிப்டையைச் சரியாகத் தெரிந்து அதையே முதலில் மக்களிடம் நாம் முன்வைக்க வேண்டும்.  சத்தியத்தை நம்மால் முடிந்த வரை எடுத்துரைக்க வேண்டும். அழைப்புப்பணியில் இதுவே அடிப்படையானது.

கலிமாவுக்கு வழங்கப்படும் மற்றோரு தவறான விளக்கம்தான் ‘சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்குமில்லை’ ‘வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்பதைச் சொல்லவே நபியவர்கள் உலகுக்கு வந்தார்கள். ஆனால் அதைச் சொல்ல அல்லாஹ்வின் சட்டமும், அதிகாரமும் அவசியப்படுகின்றன. அதற்காகவே நபியர்கள் ஆரம்பத்தில் பாடுபட்டார்கள். இந்த நோக்கத்துக்காகவே மக்காவில் நபியவர்கள் நபித்தோழர்களுக்குப் பயிற்சி வழங்கினார்கள். முதலில் தாருல் அர்க்கத்தில் இரகசியமாகப் பயிற்று வித்து அவர்களுக்காக ஒரு நாட்டைத் தேடினார்கள். தாயிபுக்குப் போனார்கள் அது ஏதுவாக அமையவில்லை. பின்னர் மதீனாவுக்குப் போனார்கள் அது பொருத்தமாகக் காணப்பட்டது உடனே ஒப்பந்தம் செய்து ஆட்சியை அமைத்தார்கள். பின்னர்தான் யுத்தம் செய்தார்கள்………..’  என்று சிலர் பேசுவதைப் பார்க்கின்றோம்.

நபியவர்களை நாடு பிடிக்க வந்தவர்களைப் போல இவர்கள் பார்க்கின்றார்கள் போலும். ‘உனது சமுதாயம் என்னை வெளியேற்றிரா விட்டால் நான் உன்னை விட்டுப் போகமாட்டேன்’ என்று ஹிஜ்ரத் போக முன்பு கஃபாவின் திறைச் சீலையைப் பிடித்து நபிவர்கள் சொன்ன செய்தியைப் பார்க்கும் போது நபியவர்களிடம் நாடு தேடும் யோசனைகளெல்லாம் எதுவுமில்லை என்பது புலனாகின்றது. ஆனால் இவர்களோ நினைத்தவாறெல்லாம் வியாக்கியானம் கூறி, கலிமாமாவே ஆட்சிக்குத்தான் என்று புதிய சித்தாந்தத்தையே உருவாக்கி விட்டார்கள்.

அபூலஹப் பயந்ததும் தம்மிடமுள்ள ஆட்சி பறிபோகிவிடலாம் என்பதற்குத்தான் என்றெல்லாம் விளக்கம் சொல்கிறார்கள். ஆனால் வரலாற்றைப் பார்க்கும் போது ‘ஆட்சியைத் தருகிறோம் இஸ்லாமியப் பிரசாரத்தை விட்டு விடு’ என்று நபியர்களிடம் காபிர்கள் கூறியதாகவே காண்கிறோம்.

صحيح البخاري :3534 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ مَثَلِي، وَمَثَلُ الأَنْبِيَاءِ كَرَجُلٍ بَنَى دَارًا، فَأَكْمَلَهَا وَأَحْسَنَهَا إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ، فَجَعَلَ النَّاسُ يَدْخُلُونَهَا وَيَتَعَجَّبُونَ وَيَقُولُونَ: لَوْلاَ مَوْضِعُ اللَّبِنَةِ ‘

என்னுடைய நிலையும் (மற்ற) இறைத்தூதர்களது நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் அதனை, ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமையாகவும் அழகாகவும் கட்டி முடித்திருந்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டுவிட்டு) வியப்படைந்து, ‘இச்செங்கல்லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ என்று கூறலானார்கள்.

இந்த ஹதீஸில் கட்டம் பூர்த்தியாகிவிட்டதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அப்போது பைத்துல் முகத்தஸ் கையிலில்லை. அப்டியென்றால் ஆட்சி பூரணமாகவில்லை. எனவே கொள்கையைத்தான் நபியவர்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. அதாவது மார்க்கம் நபியவர்களோடு முழுமையாகிவிட்டது அதன் பின்னால் ஆட்சி வரலாம் வராமலும் போகலாம் அது வேறு விடயம்….. என்பதுவே நாம் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

1924ல் கிலாபத் வீழ்ந்ததன் பின்னர்தான் இந்த சிந்தனை மக்களிடையே பரவ ஆரம்பித்தது. சர்வதேச அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இஸ்லாமிய ஆட்சி என்ற பேரில் போராடி வருகின்றன. இவற்றுள் சில நல்ல கருத்துக்களைப் பிரதிபலிப்பவை என்றாலும் சில அமைப்புக்கள் தவறான போக்குடையன. இவற்றுக்குப் பின்னால் ஷீஆக்களின் பின்னணிகள் காணப்படுவதோடு ஷீஆக்களும் இதே கோஷத்தைக் கையிலேந்தியிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

صحيح البخاري :3534 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ مَثَلِي، وَمَثَلُ الأَنْبِيَاءِ كَرَجُلٍ بَنَى دَارًا، فَأَكْمَلَهَا وَأَحْسَنَهَا إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ، فَجَعَلَ النَّاسُ يَدْخُلُونَهَا وَيَتَعَجَّبُونَ وَيَقُولُونَ: لَوْلاَ مَوْضِعُ اللَّبِنَةِ

என்னுடைய நிலையும் (மற்ற) இறைத்தூதர்களது நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் அதனை, ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமையாகவும் அழகாகவும் கட்டி முடித்திருந்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டுவிட்டு) வியப்படைந்து, ‘இச்செங்கல்லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ என்று கூறலானார்கள்.

இந்த ஹதீஸில் கட்டம் பூர்த்தியாகிவிட்டதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அப்போது பைத்துல் முகத்தஸ் கையிலில்லை. அப்டியென்றால் ஆட்சி பூரணமாகவில்லை. எனவே கொள்கையைத்தான் நபியவர்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. அதாவது மார்க்கம் நபியவர்களோடு முழுமையாகிவிட்டது அதன் பின்னால் ஆட்சி வரலாம் வராமலும் போகலாம் அது வேறு விடயம்….. என்பதுவே நாம் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

1924ல் கிலாபத் வீழ்ந்ததன் பின்னர்தான் இந்த சிந்தனை மக்களிடையே பரவ ஆரம்பித்தது. சர்வதேச அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இஸ்லாமிய ஆட்சி என்ற பேரில் போராடி வருகின்றன. இவற்றுள் சில நல்ல கருத்துக்களைப் பிரதிபலிப்பவை என்றாலும் சில அமைப்புக்கள் தவறான போக்குடையன. இவற்றுக்குப் பின்னால் ஷீஆக்களின் பின்னணிகள் காணப்படுவதோடு ஷீஆக்களும் இதே கோஷத்தைக் கையிலேந்தியிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts