Wednesday, April 24, 2024

தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸி

عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم  قال من قرأ آية الكرسي دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا أن يموتأخرجه النسائي في عمل اليوم والليلة ( رقم 100 ) والطبراني في الكبير ( 9134 برقم 7532 ) وأخرجه في الأوسط ( برقم 8069 ) وفي الدعاء ( برقم 675 وابن السني في عمل اليوم والليلة ( 124) والروياني في مسنده برقم ( 1268 ) والمقدسي في كتاب الدعاء (برقم 80 )

ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் எவர் ஆயதுல் குர்ஸியை ஓதிவருகிறாரோ அவர் சொர்க்கம் நுழைய அவரது மரணத்தை தவிர வேறு தடை கிடையாது. என்று நபியவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸை இப்னு அப்தில் ஹாதி,முனதிரீ,இப்னு ஹஜர்,ஹைஸமீ, தம்யாதீ,அல்பானி போன்றோர் ஏற்கத்தக்க ஹதீஸ் என்கின்றனர்.

தாரகுத்னீ,இப்னுல் ஜவ்ஸீ,இப்னு தைமியா, தஹபீ,யமானீ போன்ற அறிஞர்கள் ஏற்கத்தகாதது என்கின்றனர். இந்த ஹதீஸ பற்றிய இருகருத்துக்களில் எது சரியென்பதை ஆய்வுக்குற்படுத்தியே நாம் ஒரு முடிவிற்கு வரவேண்டியுள்ளது.

எமது ஆய்வுக்குறபட்ட வகையில் இந்தச் செய்தி பலஹீனமானது என்று நாம் பயான்களிலும் வகுப்புகளிலும் கூறிவருகிறோம்.ஆனாலும் அதனை தெளிவாக ஏன் என்ற காரணகாரியத்தோடு நாம் எழுதிவிட்டால் பலசந்தேகங்கள் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த ஹதீஸ் புகாரி,முஸ்லிம்,திர்மிதீ,அப+தாவூத்,நஸாஈ,இப்னுமாஜா
போன்ற எந்த பிரபல்யமான நூல்களிலும் இடம் பெறவில்லை.இந்தச் செய்தி மேற்சொல்லப்பட்டவாறு பின்வரும் நூல்களில் இடம்பெற்றுள்ளது.

அமலுல் யவ்ம் வல்லைலா-100,தபரானி கபீர்-7532, அவ்ஸத்-8069, துஆ-675 இப்னு ஸ்ஸ{ன்னி-124, ரூவ்யானி-1268, மக்திஸீ-80

இந்த ஹதீஸை நபியவர்களிடமிருந்து அபூ உமாமாவும் அவரிடமிருந்து அல்ஹானியும் அவர் வழியாக முஹம்மது இப்னு ஹிம்மீரும் அறிவுப்புச் செய்கின்றனர். முஹம்மது இப்னு ஹிம்மீரிடமிருந்து பலர் இதனை அறிவிப்புச் செய்துள்ளனர் அவர்கள் வழியாகவே இந்தச் செய்தியை இந்த நூலாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.அவர்கள் பின்வருமாறு:

1.ஹ{ஸைன் இப்னு பிஷ்ர்:
இவர் இந்தச் செய்தியில் மாத்திரமே இடம் பெறுகிறார்,இவரை இமாம் நஸாஈ பலமானவர் என்கிறார்.

2.யமான் இப்னு யஸீத் :
யாரென்று அறியப்படாதவர்(மஜ்ஹ{ல்)

3.அஹ்மத் இப்னு ஹாரூன்:
மிகவும் பலஹீனமானவர்

4.ஹாரூன் இப்னு தாவூத்;:
இவரைப் பற்றிய எத்தகவலும்கிடைக்கவில்லை

5.இப்னு ஸப்ரீக்

1.முஹம்மத் இப்னு இப்றாஹீம்:பொய்யர் என விமர்சிக்கப்படுபவர்
2.இப்றாஹீம் இப்னுல் அலா:அபூதாவூத் இவரை ஒரு பொருட்டே இல்லை என விமர்சிக்கிறார்.அபூ ஹாதிம் இவரை நம்பகமானவர் என்கிறார்.

6.அலீ இப்னு ஸதகா
இவரைப் பற்றிய எத்தகவலும்கிடைக்கவில்லை

இந்த  6 அறிவிப்பாளர்களும் புகாரி,முஸ்லிம்,திர்மிதீ,அப+தாவூத்,  நஸாஈ, இப்னுமாஜா போன்ற எந்த பிரபல்யமான நூல்களிலும் இடம் பெறாதவர்கள் மாத்திரமல்ல விமர்சிக்கப்படுபவர்களும் கூட.

ஒரு வார்த்தைக்காக இவர்கள் 6 பேறும் கேட்டதாகச் சொல்வதால் இவர்களது இந்த அறிவிப்பை பலப்படுத்த முடியுமா என நோக்கினாலும் இவர்கள் யாரிடம் இச்செய்தியைப் பெற்றதாகச் சொல்கிறார்களோ அவரும் பலஹீனமானவர் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.

முஹம்மது இப்னு ஹிம்மீர்: புகாரியில் இடம்பெறும் ஒரு அறிவிப்பாளராக இருந்தபோதும் இவரது 3அறிவிப்புக்களே புகாரியில் இடம் பெறுகின்றன.அதுவும் இவரல்லாதவர்களும் அந்த ஹதீஸ்களை அறிவுப்புச் செய்துள்ளனர்.அதே வேளை இந்த ஹதீஸில் அவரது ஆசிரியரான அல்ஹானி புகாரியில் இடம் பெறும் அறிவிப்பாளராக இருந்தும் அவர் வழியாக எந்த அறிவிப்பும் புகாரியில் இடம் பெறவில்லை.ஆகையால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் புகாரியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் என்று சொல்வதோ அல்லது புகாரியின் நிபந்தனைக்குட்பட்ட ஹதீஸ் என்று சொல்வதோ போதிய ஆய்வின்மையையே எடுத்துக் காட்டுகிறது.இவர் தனியாக அறிவிக்கும் எந்த ஹதீஸையும் இமாம் புகாரி தனது கிரந்தத்தில் பதிவு செய்யாமல் விட்டதும் இவரில் ஒரு பலஹீனம் இருப்பதையே எமக்கு உணர்த்துகிறது.இவரை இமாம் இப்னு மஈன் மற்றும் துஹைம்  பலமானவர் என்றும் நஸாஈ அவரில் பிரச்சினை இல்லை என்றும் சொல்லியுள்ள அதே வேளை இவர் பலமற்றவர் என இமாம் யஃகூப் அல் பஸவீயும் இவரை ஆதாரமாக எடுக்க முடியாது என அபூஹாதமும் விமரிசிக்கின்றனர்.இவர் யாருமறிவிக்காத செய்திகளை அறிவிப்பவர் எனவும் விமரிசிக்கப்படுபவர்.எனவே இவர் பலஹீனமானவர் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டியுள்ளது.

எனவே இந்தச் செய்தி மிகவும் பலஹீனமானதாகும்.இந்தச் செய்தி அபூ உமாமாவின் வழியாக மற்றுமின்றி இன்னும் பலநபித் தோழர்கள் வழியாக அறிவுப்புச் செய்யப்பட்டுள்ளது.ஆனால் அதன் அறிவிப்பாளர் வரிசைகளில் பொய்யர் என விமரிசிக்கப்படுபவர்களும் நிராகரிக்கப்பட்டவர்களுமே இடம் பெறுவதாலும் அதை எந்த அறிஞர்களும் பொருட்படுத்துவது கிடையாது.அதனாலேயே நாம் அவைககளில் பலமானது என கருதப்படும் இச்செய்தியை மாத்திரம் ஆய்வு செய்து முன்வைத்தோம். ஆயதுல் குர்ஸியை ஒவ்வொரு தொழுகையின் பின் ஓதிவரும் இந்த ஆதாரமற்ற செயலை நாம் தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts