Wednesday, April 24, 2024

நபியவர்கள் சிலருக்காய் சிலசட்டஙகளைத் தளர்த்தினார்களா!?

سنن أبي داود 3025 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ يَعْنِي ابْنَ عَقِيلِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبٍ، قَالَ: سَأَلْتُ جَابِرًا عَنْ شَأْنِ ثَقِيفٍ إِذْ بَايَعَتْ؟ قَالَ: اشْتَرَطَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ لَا صَدَقَةَ عَلَيْهَا، وَلَا جِهَادَ، وَأَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ يَقُولُ: «سَيَتَصَدَّقُونَ، وَيُجَاهِدُونَ إِذَا أَسْلَمُوا(

ஜாபிர் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்களிடத்தில் ஸகீப் கோத்திரத்தினர் நபியவர்களிடத்தில் பைஅத் செய்த போது நடந்த நிகழ்வைப் பற்றிக் கேட்டேன். அதற்கு ஜாபிர் அவர்கள் நாம் தர்மமோ ஜிஹாதோ செய்ய மாட்டோம் என்று கூறினார்கள்.அதற்கு பின் நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் அவர்கள் தர்மம் செய்வார்கள் இன்னும் ஜிஹாதும் செய்வார்கள்என்று சொல்வதைக் கேட்டேன் என்று ஜாபிர் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் கூறினார்கள். அபுதாவுத்:3025

இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் பதியப்பட்ட ஆதாரபூர்வமான செய்தி. ஆனால் இந்த செய்தில் நபியவர்கள் மாற்று மதத்தினரோடு விட்டுக் கொடுப்புக்கள் செய்தார்கள் என்பதற்கு எந்த வகையிலும் ஆதாரம் கிடையாது. மார்க்கத்தில் இஸ்லாத்தை ஏற்பவர் நான் இதனைச் செய்ய மாட்டேன் என்று நிபந்தனையிட்டால் அதை அங்கீகரிக்க நபியவர்களுக்கு எந்த வகையிலும் அதிகாரம் கிடையாது. ஆதனைப் பின்வரும் வசனம் தெளிவாகவே சொல்கிறது. யுனுஸ்:15, ஹாக்கா :44

அவ்வாறு நபியவர்கள் சிலரிட்ட நிபந்தனையை ஏற்றார்கள் என்றால் அது வஹியின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றே புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் 50 நேரத் தொழுகையை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘இந்த உம்மத் அவற்றை நிறைவேற்றாது’ என்ற சொன்ன போது ‘இயலுமானவர்கள் 50 ஐத் தொழட்டும் இயலாதவர்களைப் பார்த்து நீங்கள் சொன்னது போன்று சலுகை வழங்குகிறேன்’ என்று சொல்லியிருப்பார்கள். அவ்வாறு சொல்லாமல் இறைவனிடமே பல முறைத் திரும்பிச் சென்று 5வரையும் குறைத்து அதற்கு மேல் இறைவனிடம் குறைத்துக் கேட்க வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருக்கமாட்டார்கள். அதில் யாருக்கும் எவருக்காகவும் குறைக்க அதிகாரம் இல்லை என்பதனாலேயே நபியவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள். இந்த செய்தியெல்லாம் புறக்கணித்து விட்டு தமக்குத் தோதுவாக சில செய்தியை வலைக்க முயல்வது நல்ல கையாளுதல் அல்ல.

இவையனைத்தும் இந்த செய்தியில் இதை நபியவர்கள் வஹியின் அடிப்படையில்தான் செய்தார்கள் என்பதற்கான வார்த்தைப் பிரயோகம் இடம்பெறாதிருந்தாலே. மாறாக தெளிவாகவே இதனை நபியவர்கள் வஹியின் அடிப்படையில்தான் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் அந்த ஹதீஸிலேயே உள்ளது. ‘இஸ்லாத்தை ஏற்றால் அவர்கள் தர்மம் செய்வார்கள் இன்னும் ஜிஹாதும் செய்வார்கள்’ என்ற வசனம் எதிர்காலத்தைச் சொல்லும் வசனம். நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அப்படியானால் ஸகீப் கோத்திரத்தினரிடம் நபியவர்கள் இந்த நிபந்தனைகளை ஏற்றது இறைச் செய்தியான வஹியின் அடிப்படையிலேயே என்பது தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு இஸ்லாத்திற்கு வர மறுப்பவர்களுடனும் வழிகெட்ட கொள்கையுடையோருடனும் சமரசம் செய்ய ஆதாரம் தேடுவது மனோ இச்சையைப் பின்பற்றுவோரின் போக்காகும். அப்படியேதான் விளங்குவோம் என அடம்பிடித்தாலும் இந்த செய்தியில் சரியான கொள்கையை யார் ஏற்க வருகிறாரோ அவரை ஏற்றுக்கொள்ளச் செய்ய அவருக்கு சில விடயங்களில் தளர்ந்து கொடுக்கலாம் என்ற முடிவு வருமே தவிர சரியான கொள்கையை ஏற்காது எதிர்த்துக் கொண்டிருப்பவனோடு நாம் கைகோர்க்க மார்க்கத்தை விட்டுக்கலாம் என்ற முடிவு இதில் எங்கனமும் கிடைக்காது. இது போன்ற போக்கு இறை நிராகரிப்புக்கே இட்டுச் செல்லும்.

முடிவக இந்த நிகழ்வு வஹியின் அடிப்படையில் நிகழ்நத்தது. இது இறைவனுக்கு உரிய அதிகாரம். இந்த அதிகாரத்தைக் கையில் எடுப்பவர்கள் இறைவனின் அதிகாரத்தில் போட்டிபோடுகிறார்கள் என்பதுவே பொருள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts