Saturday, April 20, 2024

நபியவர்கள் மைனர் பெண்ணை மணந்தார்களா?

 ‘நபியவர்கள் மைனர் பெண்ணை மணந்தார்களா? ஓர் ஆய்வு

என்ற தலைப்பைத் தாங்கிய ஒரு நூல் எனக்குக் கிடைத்தது.கப்டன் அமீருத்தீன் என்பவர் அதனை எழுதியிருந்தார்.அவரைப் பற்றிய சிறு அறிமுகமும் அந்நூலில் கொடுக்கப்பட்டிருந்தது.அதன் மூலம் அவர் இஸ்லாத்தை நோக்கியெழும் விமரிசனங்களுக்கு பதில் சொல்வதிலும் ஈடுபாடுள்ளவர் என்பதும் தெரியவந்தது.

அந்நூலில் நபியவர்கள் ஆயிசா ரழியல்லாஹ அன்ஹா அவர்களை மணமுடித்த வயது 6 என்றும் குடும்பவாழ்வில் 9 வயதில் இணைந்தார்கள் என்றும் 5 கிரந்தங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ள
ஹதீஸ் பலஹீனமானது என சகோதரர் கப்டன் அமீருத்தீன் விமரிசித்துள்ளார். அந்த ஹதீஸை பலஹீனமென்பதற்கு 2 பந்திகளை எழுதிவிட்டு சில தகவல்களை அடிப்படையாக வைத்து பத்துக் கேள்விகளையும் கேட்டுள்ளார்.ஒவ்வொரு கேள்வியும் நபியவர்கள் ஆயிசா ரழியல்லாஹ{ அன்ஹா அவர்களை மணமுடித்த வயது 6 என்ற ஹதீஸ் பலஹீனமானது என்பதை நிருவும் வகையில் உள்ளது.கெப்டன் அமீருத்தீன் அவர்கள் மிசனரிகளுக்கு பதில் சொல்லப்போய் அவர்களுடைய விமரிசனத்துக்கு பலியானார் சிலரைப் பலியாக தன்னை அறியாமலே அழைக்கிறார் என்றும் துணிந்து சொல்லமுடியும்.இந்தப்புத்தகத்தை எழுதியதற்கான காரணத்தை அவர் விவரிக்கும் போது பின்வருமாறு கூறுகிறார்.

‘இந்த ஆய்வு காலம்காலமாக சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வரும் வரலாற்றுத் தவறை திருத்துவதுடன் உண்மை என்னவென்று மறுக்க முடியாத ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கிறது”

ஒவ்வொருவருக்கும் ஒரு துறைத் தேர்ச்சி இருக்கும். தான் தேர்ச்சி பெறாத ஒரு துறை பற்றி எழுதும் முன் துறை சார் அறிஞர்களிடம் கேட்ட பின் எழுதுவதுதான் அந்த எழுத்துக்கு பலம் சேர்க்கும்.எனவே அவருக்கும் தெளிவாகும் வகையிலும் இந்த ஹீஸை பலஹீனம் என்று சொல்வது எவ்வளவு அறியாமை என்பதையும் தெளிவுபடுத்தத்தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.சில வாசகங்களை கடுமையாகவே எழுதியுள்ளேன்.அவர் இந்த வரலாற்று உண்மையை மறுக்கும் போது கடைபிடித்த அசமந்தப் போக்கே நான் அவ்வாறு எழுதக் காரணம்.அது ஞாயமானதுதான் என்பதை வாசகர்கள் உணர்வார்கள் இன்சா அல்லாஹ்.

அந்த நூலுக்கான பதிலை நான் 3 பகுதிகளாக வகுத்துள்ளேன்.

  1. நபியவர்கள் ஆயிசா ரழியல்லாஹ{ அன்ஹா அவர்களை மணமுடித்த வயது 6 என்று வரும் ஹதீஸின் தரம் பற்றிப் பேசும் பகுதி.
    2. ஏனைய வாதங்களுக்கான பதில்கள்.
    3. சிறுவயதுப் பெண்களைத் திருமணம் முடிப்பது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு பற்றிப் பேசும் பகுதி

நபியவர்கள் ஆயிசா ரழியல்லாஹ{ அன்ஹா அவர்களை மணமுடித்த வயது 6 என்று வரும் ஹதீஸின் தரம்.

‘நபியவர்கள் என்னை 6 வயதில் திருமணம் செய்தார்கள்.9வயதில் என்னோடு குடும்பவாழ்வில் இணைந்தார்கள். என்னுடன் 9வருடம் வாழ்ந்தார்கள்.”என ஆயிசா ரழியல்லாஹ{ அன்ஹா அவர்கள் கூறினார்கள்.இந்த ஹதீஸ் சற்று விரிவாகவும் சில அறிவிப்புகளில் இதைவிட சுருக்கமாகவும் புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேப்டன் அமீருதீன் அவர்கள் தனது நூலில் 18,19ம் பக்கங்களில் இந்த ஹதீஸை இவ்வாறு பலஹீனப்படுத்துகிறார்.

‘மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் ஹஸ்ஸாம் பின் உர்வா ஆவார்.அவர் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அறிவிப்பாளர் என்பதில் ஐயமில்லை மேலும் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரபூர்வமான 6 ஹதீஸ் தொகுப்புக் கிரந்தங்களிலும் இடம்பெற்றுள்ளது என்பது உண்மை.இருப்பினும் ஹஸ்ஸாம் தமது வயோதிக காலத்தில் ஈராக்கிற்கு இடம்பெயர்ந்து போனார்.அங்கிருந்த காலத்தில் மறதியால் பீடிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆனார்.மேற்கண்ட ஹதீஸ் அவர் ஈராக்கில் இருந்த காலத்திலே அறிவிக்கப்பட்டதேயாகும் அதனால் அந்த ஹதீஸ் ஏற்கத்தக்கது அல்ல என்று இமாம் மாலிக் ரஹிமஹ{ல்லாஹ் கூறுகிறார்.

ஹஸ்ஸாம் இமாம் மாலிகின் ஆசிரியர்.அவர் தமது ஆசான் அறிவிப்பு செய்த பல ஹதீஸ்களை முவத்தா என்ற தமது ஹதீஸ் தொகுப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் தமது ஆசிரியர் ஈராக்கிற்கு போனபின் அங்கு அவர் அடைந்த மன நிலை பாதிப்பால் அங்கிருந்து அவர் அறிவிப்பு செய்த ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையல்ல என்று கூறுகிறார்.ஆதாரப்பூர்வமான ஆறு ஹதீஸ்தொகுப்புக்களையும் தொகுத்தவர்கள் அனைவரும் அரேபியர் அல்லர் அதனால் இந்த உண்மையை அவர்கள் காணத் தவறிவிட்டார்கள்.”

உண்மையில் ‘ஓர் ஆய்வு” என்று வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் இவ்வளவு உளறலாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.ஹதீஸிற்கு அவர் வைத்த விமிசனத்திற்கு பதில் சொல்ல முன்னர் அவர் விட்டுள்ள தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன்.

  1. ஹஸ்ஸாம் பின் உர்வா என்றே 3 இடங்களிலும் எழுதியுள்ளார்.ஆய்வாளர் அறிவிப்பாளர்கள் விடயத்தில் பரீட்சியமே அற்றவர் என்பதை இது காட்டுகிறது.ஏனெனில் இந்த அறிவிப்பாளர் மிகப்பிரபல்யமானவர்.ஆனாலும் அவர் இவரது பெயரை எழுதுவதிலே முழு புத்தகத்திலும் தவறுவிட்டுள்ளார்.அறிவிப்பாளரது பெயர் ஹஸ்ஸாம் அல்ல ஹிசாம்.இவர் ஸ{பைர் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்களின் பேரர்.
  2. மேற்கண்ட ஹதீஸ் ஆதாரபூர்வமான 6 ஹதீஸ் தொகுப்புக் கிரந்தங்களிலும் இடம்பெற்றுள்ளது என்கிறார்.ஆனால் இந்த ஹதீஸ் திர்மிதியில் எந்த இலக்கத்திலும் இல்லை.
    3.ஹிசாம் தமது வயோதிப காலத்தில் ஈராக்கிற்கு இடம்பெயர்ந்துபோனதாகக் குறிப்பிட்டுவிட்டு ‘ மேற்கண்ட ஹதீஸ் அவர் ஈராக்கில் இருந்த காலத்திலே அறிவிக்கப்பட்டதேயாகும் அதனால் அந்த ஹதீஸ் ஏற்கத்தக்கது அல்ல என்று இமாம் மாலிக் ரஹிமஹ{ல்லாஹ் கூறுகிறார்.” என்றும் ஒரு தவறான தகவலைப் பதிவு செய்துள்ளார்.இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கது அல்ல என்று இமாம் மாலிக் எங்கும் குறிப்பிடவில்லை.
  3. அவர் அடைந்த மனநிலை பாதிப்பால் அங்கிருந்து அவர் அறிவிப்பு செய்த ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையல்ல என்று மாலிக் கூறுவதாக கூறியுள்ளார்.இதுவும் தவறான தகவலே. கனவிலே வந்து இமாம் மாலிக் அப்படிச் சொன்னதாக ஒரு கனவுத் தகவல் உள்ளதே தவிர ஹிசாமுடைய அறிவிப்பை அவர் எப்பொழுதும் பலஹீனப்படுத்தவில்லை.

5.மனநிலை பாதிப்பு,மறதியால் பீடிக்கப்படல், என கண்டபடியெல்லாம் எழுதியுள்ளார்.இதுவும் தவறான தகவலே.ஹிசாம் அவர்கள் எப்பொழுதும் மனநிலை பாதிக்கப்படவும் இல்லை,மறதியால் பீடிக்கப்படவும் இல்லை.

6.’ ஆதாரப்பூர்வமான ஆறு ஹதீஸ்தொகுப்புக்களையும் தொகுத்தவர்கள் அனைவரும் அரேபியர் அல்லர் அதனால் இந்த உண்மையை அவர்கள் காணத் தவறிவிட்டார்கள்” என்று எழுதுகிறார்.இது இவர் ஆர்வக் கோளாரில் என்ன எழுதுகிறேன் என்று தெரியாமல் எழுதியுள்ளார் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.அறிவிப்பாளர் விமரிசனங்களைத் தொகுத்த அதிகமான அறிஞர்கள் அரபிகளல்லர்.குறிப்பாக அறிவிப்பாளர் விமரிசனத் தொகுப்பாளர்களில் முதன்மையானவரான இமாம் புகாரி அரேபியரல்லர்.ஆனால் இமாம் மாலிக் தனியாக அறிவிப்பாளர் விமரிசனங்களைத் தொகுத்து எந்த நூலும் எழுதவில்லை.அவர் அறிவிப்பாளர்கள் பற்றி அதிகம் பேசவும் இல்லை.

இந்த இரண்டு பந்திக்குள்ளும் ஆய்வு என்ற பெயரில் இவ்வளவு தவறுகளை தொகுத்துள்ளார்.இது ஆய்வல்ல ஒரு அறியாதவரின் ஆய்வின் தழுவலே என்பது இதிலிருந்து புலனாகிறது.

இப்பொழுது இமாம் ஹிசாம் பற்றிய அறிஞர்களின் கூற்றையும் அவர் முன்வைத்துள்ள விமரிசனங்களின் பின்னணியையும் ஆராய்வோம்.

ஹிசாம் இப்னு உர்வா

இமாம்களான யஹ்யா இப்னு மஈன், வுஹைப், இஜ்லி, அபு ஹாதிம், இப்னு ஸஃத், யஃகூப் இப்னு சைபா,எனப் பல அறிஞர்கள் இவரை நம்பகமானவர் என்றும் இமாம் என்றும் இவரை வைத்தே இவரின் சகாக்களின் அறிவிப்பு ஒப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் மிக மிக உறுதியானவர் என்றும் கூறியுள்ளனர்.

பார்;க்க: தஹ்தீபுல் கமால் 6585

இவரின் அறிவிப்புகள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கலாம் என இமாம் தஹபீ கூறுகிறார்.

பார்;க்க:  ஸியரு அஃலாமின் நுபலா 11.36
இவர் இமாம் ஸ{ஹ்ரியை மிகைக்கும் அளவில் மனனமுள்ளவராக இருந்தார்.
பார்;க்க: தஹ்தீபுல் கமால் 6585

ஆனால் இந்த மனனத் தன்மை அவரது கடைசிக் காலத்தில் அந்தத் தரத்தில்; இருக்கவில்லை.இதனால் சில மாற்றங்கள் இவரில் தெரிய ஆரம்பித்தன.தவறே விடாத அளவில் மனனசக்தியில் இருந்த இவர் ஆரம்பத்தில் சரியாக அறிவித்த சில செய்திகளில் தவறு விட்டார் என இமாம் மாலிக், யஃகூப் இப்னு சைபா போன்றோர் இவரை விமரிசித்துள்ளனர்.

யஃகூப் இப்னு சைபா கூறுகிறார்:

سير أعلام النبلاء -11 ஃ 37
هِشَامٌ ثَبْتٌ، لَمْ يُنْكَرْ عَلَيْهِ إِلاَّ بَعْدَ مَا صَارَ إِلَى العِرَاقِ، فَإِنَّهُ انبَسَطَ فِي الرِّوَايَةِ، وَأَرْسَلَ عَنْ أَبِيْهِ أَشْيَاءَ، مِمَّا كَانَ قَدْ سَمِعَهُ مِنْ غَيْرِ أَبِيْهِ عَنْ أَبِيْهِ.

‘ஹிசாம் மனனத்தில் மிகத் திறமானவர் ஈராக்கிற்கு இடம் மாறிய பின்னரேயன்றி அவர் மீது விமரிசனங்கள் எழவில்லை.அங்கு சென்ற பின் அறிவிப்புக்களின் தாராளம் காட்ட ஆரம்பித்தார். இதனால் தன் தந்தை வழியாக இன்னொரு மாணவர் மூலம் கேட்டதாக ஆரம்பத்தில் அறிவித்த செய்திகளை அந்த நபரைக் குறிப்பிடாமல் தந்தை வழியாக (இர்ஸால் செய்து) அறிவிக்க ஆரம்பித்தார்.”

பார்க்க:  ஸியர்: 11.37

இதுதான் அவர்மீது செய்யப்பட்ட விமரிசனம்.கேட்காத ஹதீஸ்களையெல்லாம் அறிவித்தார் என்றோ அல்லது பிறரது ஹதீஸ்களை தனது ஹதீஸ்களென அறிவித்தார் என்றோ அல்லது குழப்ப நிலைக்கு ஆளானார் என்றோ அவரை எந்த அறிஞர்களும் விமரிசிக்கவில்லை.

கடைசிக்காலத்தில் ஏற்படுகின்ற மாற்றத்தை அறிஞர்கள் தகய்யுர் تغير என்றும் இக்திலாத்  اختلاط என்றும் இருவகையாக அழைப்பார்கள்.

1.தகய்யுர் تغير: சிறு மாறுதலுக்கு உள்ளாதல் என்பதே இதன் கருத்து.இந்நிலை மனனத்தில் மலையான சுஃபாவிற்கும் ஏற்பட்டது.இமாம் மஃமர் அவ்ஸாஈ போன்றோருக்கும் ஏற்பட்டது ஏன் இமாம் மாலிகிற்கும் ஏற்பட்டது.இதுவே இமாம் ஹிசாமிற்கும் ஏற்பட்டது.இது பலஹீனமான நிலை கிடையாது.இளமைக் கால மனன சக்தியில் ஏற்படும் முதுமைக் கால மாற்றத்தையே பெரும்பாலும் இச்சொல் குறிக்கும்.

  1. இக்திலாத் اختلاط:
    விபத்து, மரணம், திடீர் நிகழ்வுகள், மற்றும் சிந்தனைத்தடுமாற்றம் போன்றவைகளால் ஒருவர் மனனசக்தியில் மிக பலஹீனமாகுதலை குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துவார்கள்.இப்படிப்பட்டவர்களின் ஆரம்ப நிலை உறுதியானதாக இருந்து அக்காலகட்டத்தின் அறிவிப்புகளை அடையாளங்காண முடிந்தால் அவைகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு மற்றவைகள் நிராகரிக்கப்படும்.இந்நிலை ஒருபோதும் இமாம் ஹிசாமிற்கு ஏற்படவே இல்லை.

இமாம் தஹபீ இவ்வாறு கூறுகிறார்:

سير أعلام النبلاء – (11 ஃ 38
قُلْتُ: الرَّجُلُ حُجَّةٌ مُطْلَقاً، وَلاَ عِبرَةَ بِمَا قَالَهُ الحَافِظُ أَبُو الحَسَنِ بنُ القَطَّانِ مِنْ أَنَّهُ هُوَ وَسُهَيْلُ بنُ أَبِي صَالِحٍ اخْتَلَطَا وَتَغَيَّرَا، فَإِنَّ الحَافِظَ قَدْ يَتَغَيَّرُ حِفْظُه إِذَا كَبِرَ، وَتَنْقُصُ حِدَّةُ ذِهْنِهِ، فَلَيْسَ هُوَ فِي شَيْخُوْخَتِه كَهُوَ فِي شَبِيْبَتِه، وَمَا ثَمَّ أَحَدٌ بِمَعْصُوْمٍ مِنَ السَّهْوِ وَالنِّسْيَانِ، وَمَا هَذَا التَّغَيُّرُ بِضَارٍّ أَصْلاً، وَإِنَّمَا الَّذِي يَضُرُّ الاخْتِلاَطُ، وَهِشَامٌ فَلَمْ يَختَلِطْ قَطُّ، هَذَا أَمْرٌ مَقْطُوْعٌ بِهِ، وَحَدِيْثُه مُحْتَجٌّ بِهِ فِي (المُوَطَّأِ)، وَالصِّحَاحِ، وَالسُّنَنِ).
فَقَوْلُ ابْنِ القَطَّانِ: إِنَّهُ اخْتُلِطَ، قَوْلٌ مَرْدُوْدٌ مَرذُولٌ، فَأَرِنِي إِمَاماً مِنَ الكِبَارِ سَلِمَ مِنَ الخَطَأِ وَالوَهمِ.
فَهَذَا شُعْبَةُ، وَهُوَ فِي الذِّرْوَةِ، لَهُ أَوهَامٌ، وَكَذَلِكَ مَعْمَرٌ، وَالأَوْزَاعِيُّ، وَمَالِكٌ – رَحْمَةُ اللهِ عَلَيْهِم

‘இமாம் ஹிசாம் எல்லாக் கால கட்டத்திலும் ஆதாரமானவர். அபுல் ஹஸன் இப்னுல் கத்தான் இவரை இறுதிக்காலத்தில் இக்திலாத் என்ற மாற்றத்திற்கு உற்பட்டார் என விமரிசித்துள்ளார்;.இந்த விமரிசனத்தை கணக்கில் எடுக்கக் கூடாது. மனனத்தில் திறமையானவர்கள் வயதான காலத்தில் சிறு மாற்றத்திற்கு உற்படலாம் அவரது நுணுக்கம் குறையலாம்.அவரது இளமைக்கால நிலையில் முதுமைக் காலத்தில்; இருக்கமாட்டார். மறதி தவறுகளுக்கு அப்பாற்பட்ட எவரும் இல்லை.இந்த சிறு மாற்றம் تغير ُ எந்த விதத்திலும் பாதிக்கும் அம்சமே இல்லை.பாதிப்பு எல்லாம் இக்திலாத்  اختلاط எனும் மனனத்தில் மோசமான மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகள்தான்.ஹிசாம் எக்காலத்திலும் இந்த நிலைக்கு ஆளாகவில்லை.இது மிக உறுதியான சந்தேகமற்ற விடயம்.அவரது ஹதீஸ்கள் முவத்தா ஸிஹாஹ் மற்றும் ஸ{னன்களிலே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.எனவே இப்னுல் கத்தானின் விமரிசனம் மிகத்தவறானது மறுக்கப்படவேண்டியது. இல்லையெனில் இது போன்ற தவறுகளுக்கு ஆளாகாத ஒரு இமாமை எனக்குக் காட்டுங்கள்.இதோ மனனமலை சுஃபா அவரும் பல தவறுகள் விட்டுள்ளார்.அது போன்றே இமாம் மஃமர் இமாம் அவ்ஸாஈ இமாம் மாலிக். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் செய்வானாக.”

பார்க்க: ஸியரு அஃலாமின் நுபலா:11.38

இதுதான் தெளிவான உண்மையாக இருக்க 150இற்கும் மேற்பட்ட கோடி மக்கள் பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் வரலாற்றுண்மையொன்றை மறுக்க இந்த நுனிப்புல் மேய்தல் எங்கனம் உதவும்.

ஹிசாம் இப்னு உர்வா எக்காலத்தில் இச்செய்தியை அறிவித்தார்?

ஒரு வாதத்திற்காக ஹிசாமின் கடைசிக்கால அறிவிப்புகள் பலஹீனமெனக் கொண்டாலும் கெப்டனின் வாதம் அறியாமைதான்.ஏனெனில் இந்த ஹதீஸ் அவரது கடைசிக்கால அறிவிப்பல்ல. மாற்றமாக மிகப் பிரசித்திபெற்ற ஏராளமான அறிஞர்களும் இன்னும் பலரும் அவர் வழியாக இந்த ஹதீஸை அறிவிப்புச் செய்துள்ளனர்.

1.ஸ{ப்யான் இப்னு உயய்னா
2.அப்துர் ரஹ்மான் இப்னு அபிஸ்ஸ{ன்னாத்
3.ஹம்மாத் இப்னு ஸலமா
4.அலி இப்னு முஸ்ஹிர்
5.ஹம்மாத் இப்னு உஸாமா
6.ஸ{ப்யான் அஸ்ஸவ்ரி
7.வுஹைப்
8.அபூ முஆவியா
9.அப்தா இப்னு ஸ{லைமான்
10.ஹம்மாத் இப்னு ஸைத்
11.ஜஃபர் இப்னு ஸ{லைமான்
12.மஃமர்
13.அப்துல்லாஹ் இப்னு முஆவியா
14.வகீஃ
15.இஸ்மாஈல் இப்னு ஸகரீயா
16.யூனுஸ் இப்னு புகைர்
17.அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு யஹ்யா
18.ஸஈத் இப்னு அப்திர் ரஹ்மான்

இவர்கள் அனைவரது அறிவிப்புகளும் பின்வரும் நூல்களில் இடம்பெற்றுள்ளன.

புகாரி 3703,3705,4841,4842,4864 ,
முஸ்லிம் 2626 ,
அபூ அவானா 3460,3464 ,
இப்னு ஹிப்பான் 7225,
ஹாகிம் 6753 ,
தாரமீ 6265 ,
அபூ தாவூத் 1824,4306 ,
இப்னு மாஜஹ் 1872 ,
ஸ{னனுஸ் ஸ{க்ரா 3220,3342
ஸஈத் இப்னு மன்ஸ{ர் 497 ,
இப்னு அபீ சைபா 33263,33285 ,
ஆஹாத் வல் மஸானி 2659 ,
ஸ{னனுல் குப்ரா 5221,5410,5411 ,
முன்தகா 694 ,
அஹ்மத் 24312 ,

இதுபோல இன்னும் ஏராளமான கிரந்தங்களிலும் இந்த ஹதீஸ் இந்த 18 மாணவர்கள் வழியாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.அப்படியிருக்க இந்த ஹதீஸ் ஈராக்கில்தான் அறிவிப்பு செய்யப்பட்டது என்று சொல்வதுதான் ஆய்வா? ஏன் இவ்வாறு எந்தவொரு முன் யோசனையும் இல்லாமல் அந்நியர்களுக்குப் பதிலளிக்கப்போய் இஸ்லாத்தின் ஒரு பாரம்பரிய நம்பிக்கையையே சந்தேகிக்க ஆரம்பிக்கிறார்கள்!!

இந்த ஹதீஸ் ஹிசாம் வழியாக மட்டும்தான் அறிவிப்புச் செய்யப்படுகிறதா?

ஒருவாதத்திற்கு ஹிசாம் முழுமையாகவே பலஹீனமானவர் எனக் கொண்டாலும் இந்த ஹதீஸ் ஆதாரமற்றதாகிவிடாது.ஏனெனில் இந்த ஹதீஸை ஆயிசா ரழியல்லாஹ{ அன்ஹ{ வழியாக உர்வாவிடமிருந்து ஹிசாம் மாத்திரம் அறிவிக்கவில்லை இமாம் ஸ{ஹ்ரியும் அறிவிப்புச் செய்துள்ளார்.இது ஸஹீஹ் முஸ்லிமிலே 2627 இலக்கத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று ஆயிசா வழியாக அஸ்வத் இப்னு யஸீதும் இந்த ஹதீஸை அறிவிப்புச் செய்துள்ளார்.இந்த அறிவிப்பும் ஸஹீஹ் முஸ்லிமிலே 2628 பதிவுசெய்யப்பட்டுள்ளது.இன்னும் பல அறிவிப்புக்களம் உள்ளன.அவ்வாறாயின் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை இவ்வாறு அமையும்:

ஸஹாபி                   :   ஆயிசா ரழியல்லாஹ{ அன்ஹா

அவரிடமிருந்து அறிவிப்பவர்கள்   :   1.உர்வா இப்னு ஸ{பைர்
2.அஸ்வத் இப்னு யஸீத்

உர்வாவிடமிருந்து அறிவிப்பவர்கள்:    1.ஹிசாம் இப்னு உர்வா
2.ஸ{ஹ்ரி

ஹிசாமிடமிருந்து அறிவிப்பவர்கள் :     நாம் மேலே குறிப்பிட்டது போன்று                                                                              18 நபர்கள் அறிவிப்புச் செய்கின்றனர்.

நாம் இங்கு அஸ்வத் இப்னு யஸீதுடைய இஸ்னாதைப் பற்றியே பேசவில்லை.காரணம் அது முஸ்லிம் கிரந்தத்தில் வரும் ஹிசாம் இடம்பெறாத அறிவிப்பாளர் வரிசை.அதே போன்று உர்வாவிடமிருந்து ஸ{ஹ்ரியின் அறிவிப்பைப் பற்றியும் பேசவில்லை. அதிலும் ஹிசாம் இடம்பெறாததே காரணம்.நிலமை இவ்வாறிருக்க எவ்வாறு ஹிசாமை விமரிசப்பதோடு ஹதீஸ் பலஹீனமானது என ஆய்வாளர் முடிவெடுத்தார்.அவர் முஸ்லிமில் இடம்பெறும் ஸ{ஹ்ரியின் அறிவிப்புப் பற்றியோ அஸ்வத் இப்னு யஸீதின் அறிவிப்புப் பற்றியும் பேசவில்லை.ஹிசாமின் அறிவிப்பிலும் யாரோ ஆங்கிலத்தில் நவீன முறையில் கிறுக்கிவிட்டார்கள் என்று அதை அப்படியே கொப்பி செய்து ஆய்வு என்றும் ஆறு ஹதீஸ் கிரந்தங்களுக்குரிய இமாம்களுக்கும் தெரியாத ஒன்றைக் கண்டுபிடித்து விட்டதாகவும் சொல்வதும் அதை ஒரு அச்சகம் அச்சேற்றியிருப்பதுப் ஆய்வுக்குற்படுத்த வேண்டிய சில அறியாமைகளாகும்.

அவர் அவரது அறியாமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடைசிப் பந்தியில் இவ்வாறு எச்சரிக்கையும் விடுகிறார்.  ‘ஆனால் அந்தக் குற்றத்தை நபிகளார் செய்தார்கள் என்று கூறுவதுதான் எவ்வளவு அபாண்டம் அப்பழுக்கற்ற பொய்,என்பதை உலகம் அறியட்டும். அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் அப்படி நபிகளார் மீது குற்றம் சொல்பவர்களும் அதை நியாயப்படுத்த முனைபவர்களும் தங்களுக்குத் தாங்களே இழிவையும் பழியையும் தேடிக் கொள்கிறார்கள் என்பதே யதார்த்தம்.”

அல்லாஹ் மிகத் தூயவன்.அறியாமை இந்தளவுக்குப் போகும் அதுவும் இஸ்லாத்திற்காக எழுத்துக்கள் மூலம் பாடுபடுபவர் என்ற அடைமொழியுள்ள ஒருவர் இவ்வாறு இஸ்லாமிய சமூகத்தில் ஒரு பாரம்பரிய ஆதாரபூர்வமான நம்பிக்கையை யாரோ சில கிறிஸ்தவர்கள் விமரிசித்துவிட்டார்கள் என்பதற்காக இளகுவாக தகர்க்க நினைத்ததும் உண்மையில் கவலையாகவும் மறுபுறம் அவரை நோக்கிய எதிர்ப்பலைகளையும் தூண்டுகிறது.அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.

  1.  ஏனைய வாதங்களுக்கான பதில்கள்.

முதல் வாதம்:‘மிச்காத் என்று அறியப்படும் புகழ்மிக்க ஹதீஸ் தொகுப்பில் அதன் ஆசிரியர் ஆயிசா ரலியல்லாஹ{ அன்ஹாவின் மூத்த சகோதரி அஸ்மா ரலியல்லாஹ{ அன்ஹா பற்றிய வாழ்வுக் குறிப்பை கீழ்வருமாறு வரைகிறார்.அவர் அஸ்மா.அபூபக்கர் சித்தீகின் மகளார்…..அவர் அப்துல்லா பின் ஜுபைரின் தாய்….அவருடைய சகோதரி ஆயிசாவை விட அவர் பத்து வயது மூத்தவர்….அவர் ஹிஜ்ரி 73 இல் மக்காவில் தமது நூறாவது வயதில் மரணித்தார்.மேற்கண்ட செய்திகளை பல அறிஞர்களும்,வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.அவர்களிடையே அதுபற்றிக் கருத்து வேறுபாடு இல்லை. இப்போது இங்கு நாம் சிறு கணிதம் போடுவோம்.

அஸ்மா ரலியல்லாஹ{ அன்ஹா தமது 100 வது வயதில் ஹிஜ்ரி ஆண்டு 73இல் மரணித்தால் நபிகளாரின் ஹிஜ்ரத்தின்போது அவருக்கு வயது 27 (100-73) ஆகும்.அவர் ஹிஜ்ரி 73 துவக்கத்தில் இறந்திருந்தால் ஹிஜ்ரத்தின்போது அவருக்கு வயது 28(100-72)ஆகும். ஆயிசா ரலியல்லாஹ{ அன்ஹாவை விடவும் அவர் 10 ஆண்டுகள் மூத்தவர் என்பதால் ஹிஜ்ரத்தின்போது ஆயிசா ரலியல்லாஹ{ அன்ஹாவின் வயது 18 (28-10) ஆகும்.அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் அவர் திருமணம் நடந்ததால் அப்போது அவருக்கு வயது 17 ஆகும்.அதன் பின் 2 ஆண்டுகள் கழித்து மதீனாவில் நபிகளாருடன் சேர்ந்தபோது அவருக்கு வயது 19.”

என தனது மைனர் ஆய்விலே கெப்டன் அவர்கள் எழுது முதல் வாதமாக அதனை முன்வைக்கிறார்.இவ்வளவு அறிவீனமாக எழுதி விட்டு இதனை ஆய்வு என்று பெயரிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.அவர் எவ்வளவு தவறுகளை இங்கே தொகுத்துள்ளார்; என்பதை ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

1.அஸ்மா ரலியல்லாஹ{ அன்ஹாவை விட ஆயிசா ரலியல்லாஹ{ அன்ஹா பத்து வயது இளமையானவர் என்பதற்கு ஆதாரமாக அறிவிப்பாளர்கள் பற்றிய பிரமல்யமான நூற்றுக் கணக்கான நூல்களைக் குறிப்பிடாமல் உபயோகம் குறைந்த இமாம் தப்ரீஸியுடைய இக்மால் என்ற  நூலில் வருவதாக எழுதியுள்ளார்.ஏன் பிரபல்யமான எந்த நூலையும் அவர் குறிப்பிடவில்லை!குறிப்பாக நபித்தோழர்களுடைய வாழ்க்கை பற்றி தனியாக ஏராளமான நூல்கள் உள்ளன.உதாரணமாக இஸாபா, இஸ்திய்ஆப், மஃரிபதுஸ் ஸஹாபாஇதில் எதனையும் அவர் குறிப்பிடவில்லை. இதுவே அவர் குறிப்பிட்ட செய்தியில் ஏதோ சில ஐயப்பாடுகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளப்போதுமானது.

2.’மேற்கண்ட செய்திகளை பல அறிஞர்களும் வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.அவர்களிடையே அதுபற்றிக் கருத்து வேறுபாடு இல்லை” என குறிப்பிடும்போது இவர் நேர்மையற்றவர்.இருட்டடிப்புச் செய்பவர் என்பது பளிச் எனத் தெரிகிறது.அல்லது எங்கிருந்தோ சில செய்திகளை தான் ஆய்வு செய்தது போன்று முன்வைக்கப்போய் இத்தவறில் விழுந்துள்ளார் எனத் தெரிகிறது. ஆயிசா ரலியல்லாஹ{ அன்ஹாவை விட அஸ்மா ரலியல்லாஹ{ அன்ஹா மூத்தவர்என்பதை எந்த வரலாற்று ஆசிரியரும் ஏற்றுக் கொள்ளவேயில்லை.அப்படியிருக்க கருத்து முரண்பாடே இல்லையெனச் சொல்வது எவ்வளவு பெரிய தகவல் மோசடி.இப்னு அபிஸ்ஸின்னாத் என்ற அறிவிப்பாளர் ஒருவரின் தகவலைத் தவிர இதற்கு வேறு எந்தச் சான்றும் இல்லை.சில அறிஞர்கள் இப்படியும் ஒரு தகவல் உண்டு என்பதற்காக அந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளனர்.பலர் அதனைக் குறிப்பிடவே இல்லை.

  1. ‘ஆயிசா ரலியல்லாஹ{ அன்ஹாவை விட அஸ்மா ரலியல்லாஹ{ அன்ஹா மூத்தவர்” என்ற வரலாற்றுக் குறிப்பு நம்பகாமன ஒரு செய்தி என்று எடுத்துக் கொண்டாலும் அறிவிப்பாளர் வரிசையோடு ஆதாரப் பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட புகாரி முஸ்லிமின் ஒரு அறிவிப்பை இதனை வைத்து நிhகரிக்கலாமா!? ஹிசாம் பற்றி ஆழமாக ஆய்வு செய்தது போன்று காட்டிக்கொள்ளும் இவர் இப்னு அபிஸ்ஸின்னாத் என்பவரின் மனனத்தன்மையின் பலவீனம் பற்றியோ பக்தாதிற்கு வந்த பின்னர் உள்ள அவரது அறிவிப்புகள் பற்றியோ எதனையும் ஆய்வு செய்யாதது ஏன்? தவறான ஒரு வரலாற்றுத் தகவலை வைத்து ஆதாரப் பூர்;வமான செய்திகளை மறுப்பதுதான் இஸ்லாத்தைப் பாதுகாக்கும் முறையா!?

4.’ஆயிசா ரலியல்லாஹ{ அன்ஹாவை விட அஸ்மா ரலியல்லாஹ{ அன்ஹா மூத்தவர்” என்ற வரலாற்றுக் குறிப்பு நம்பகாமன ஒரு செய்தி என்று எடுத்துக் கொண்டால் அவர் நூறு வயதில் அஸ்மா ரலியல்லாஹ{ அன்ஹா மரணித்தார் என்றுவரும் இன்னொரு வரலாற்றுச் செய்தியைத்தான் மறுத்திறுக்க வேண்டும்.காரணம் இரண்டுமே அறிவிப்பாளர் வரிசையற்ற வரலாற்றுக் குறிப்புகள்தான்.அதை விடுத்து ஆதாரபூர்வமான ஒரு செய்தியை மறுத்திறுப்பது மிகப்பெறும் தவறு.

5.இமாம் தஹபீ அவர்கள் இப்னு அபிஸ்ஸின்னாதின் கூற்றைக் குறிப்பிட்டு பின்வருமாறு எழுதுகிறார்:

سير أعلام النبلاء 5 374
قَالَ ابْنُ أَبِي الزِّنَادِ: كَانَتْ أَكْبَرَ مِنْ عَائِشَةَ بِعَشْرِ سِنِيْنَ.
قُلْتُ: فَعَلَى هَذَا يَكُوْنُ عُمُرُهَا إِحْدَى وَتِسْعِيْنَ سَنَةً.
وَأَمَّا هِشَامُ بنُ عُرْوَةَ، فَقَالَ: عَاشَتْ مائَةَ سَنَةٍ، وَلَمْ يَسْقُطْ لَهَا سِنٌّ
.

‘ஆயிசா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை விட அஸ்மா ரலியல்லாஹ{ அன்ஹா அவர்கள் பத்து வயதால் மூத்தவர் என்று இப்னு அபிஸ்ஸின்னாத் கூறுகிறார்.அவ்வாறாயின் அஸ்மா ரலியல்லாஹ்வின் வயது 91 ஆக அமையும் ஆனாலும் ஹிசாம் அவர் நூறு வயது வாழ்ந்தும் பற்கள் விழவில்லை எனக் குறிப்பிடுகிறார்.”

ஸியர்:5.374

உண்மையில் ஒரு நடுநிலையான ஆய்வாளர் இப்னு அபிஸ்ஸின்னாதின் கூற்று சரியானதாயின் இந்த நிலைப்பாட்டிற்குத்தான் வர முடியும்.ஆனாலும் இப்னு அபிஸ்ஸின்னாதின் கூற்றை எந்த வரலாற்று ஆசிரியரும் ஏற்கவில்லை என்பதுதான் உண்மையானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts