Friday, March 29, 2024

புதிய ஸலபியா கோட்பாட்டை உருவாக்கி அந்த குழப்பத்திற்கு அடித்தளமிட்ட சகோதரர் யஹ்யா ஸில்மி அவர்களுக்கான மறுப்பு.1

நபித்தோழர்கள் மார்க்கத்தின் 3வது மூலாதாரம் என்ற புதிய ஸலபியா கோட்பாட்டை உருவாக்கி அந்த குழப்பத்திற்கு அடித்தளமிட்டவர் சகோதரர் யஹ்யா ஸில்மி அவர்கள்.அஹ்ஸலுஸ்ஸுன்னா ஸலபிய்யா , தவ்ஹீத் , அஹ்லுல் ஹதீஸ் போன்ற வார்த்தைகள் சரியான கொள்கையில் இருப்பவர்களைக் குறிக்கப் பயன்பட்ட அடையாள வார்த்தைப் பிரயோகங்கள். முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே வழிமுறையில் இருக்கும் ஆரம்ப காலப்பகுதியில் இந்த வார்த்தைப் பிரயோகங்களை அவர்கள் இந்த அர்த்தத்தில் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அறிந்திருந்ததெல்லாம் மார்க்கம் இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் என்பதே .

 பல தவறான கொள்கைகள் போக்குகள் தோன்ற ஆரம்பித்த காலத்தில்தான் அஹ்ஸலுஸ்ஸுன்னா என்ற வார்த்தை பிரபல்யம் ஆனது. ஆரம்பாலங்களில் ஸுன்னா என்ற தலைப்பில் பல நூல்கள் வெளியாகின. இது கொள்கை ரீதியான பித்அத்திற்கு எதிரான பிரயோகமே. இதில் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் மகன் அப்துல்லாஹ்வின் நூலும் ஷைபானியின் நூலும் பிரபல்யமானது. இவ்வகையில் அஹ்ஸலுஸ்ஸுன்னா  என்ற பிரயோகத்தின் சற்றுப் பின்னர் உருவானதே ஸலபிகள் என்ற சொல்லாடல். இரு வார்த்தையின் நோக்கமும் இஸ்லாமிய கொள்கையை சரியாகப் புரிந்தவர்களை அடையாளப்படுத்துவதுதான்.

  ஆனால் எப்படி பிற்காலத்தில் அஹ்ஸலுஸ்ஸுன்னா என்ற வார்த்தைப் பிரயோகத்தை தவறான கொள்கையில் உள்ளவர்கள் தமக்குப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்களோ அது போன்றுதான் யஹ்யா ஸில்மி அவர்களும் அவரை தக்லீத் செய்வோரும் ஸலபியா என்ற பிரயோகத்தை தமக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். தமது அகில இலங்கை ஸலப் கவ்ன்ஸிலில் சேராத அனைவரும் வழிதவறியவர்கள் என்றும் தீர்ப்பளிக்கின்றனர். இவர்கள்தான் அஹ்ஸலுஸ்ஸுன்னாவை விட்டும் தடம்புரண்டுள்ளனர் என்பதற்கு இவர்களது செயல்பாடுகளை ஒப்பிட்டால் நிலைப்பாடுகளை அவதானித்தால் போதுமானது. அதில் பிரதானமானது தன்னிடம் வருபவரைக் கட்டி வைத்துக்கொள்ள எல்லா வழிகேடான இயக்கங்களும் கையாளும் தக்லீதிற்கான ஏற்பாடு ஒன்றை இவர் செய்து வைத்துள்ளதுதான். ஏத்தாளையில் உமர் அலி பைஅத்தைக் கையில் எடுத்து தன்னோடு ஒரு கூட்டத்தைக் கட்டிப்போட்டார். அது போன்று பிரதானமாக இவர் கையில் எடுத்தது :

  1. மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யும் அறிஞருக்கும் நபியவர்களுக்கும் இடையில் அறிஞர்கள் ரீதியான ஒரு சங்கிலித் தொடர் இருக்க வேண்டும். அந்தத் தொடரில் வரும் தற்கால அறிஞர்கள் அவருக்கு தகுதியானவர் என்று நற்சான்றிதல் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவர்களிடம் கல்வி பயில முடியாது. அவர்களுக்கு மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யும் தகுதி கிடையாது.இது யஹ்யா ஸில்மி அவர்கள் உருவாக்கிய ஸலபியாவின் பிரதான கொள்கை.இவ்வடிப்படையில் இலங்கையில் மார்க்க அறிஞராக ஸில்மியும் அவரிடம் கல்வி பயின்ற அஷ்ரப் அலியும் உள்ளார்கள் என்பது அவர்களின் பிரதான கொள்கை.இதனை அவர்களது ப்ளொக்கில் பின்வருமாறு கொள்கைப் பிரகடனம் செய்கின்றனர்:

“எமது தளத்தில் உ‌ள்ள ஒலிப்பதிவுகள் ஆக்கங்கள் அனைத்தும் எமது ஷேக் அபுஅப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி அவர்களுடையதும் அவரிடம் கல்வியில் பயன்பெறும் சகோதரர் அபுஅப்துல்லாஹ் அஷ்ரப் அலி அவர்களுடையதும் ஆகும்.

ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் இமாம் நாஸிருத்தீன் அல்பானி, அஷ் ஷேக் அப்துல் அஸீஸ் ‌பி‌ன் பாஸ், அஷ் ஷேக் முஹம்மத் ஸாலிஹ் அல் ஹுசைமீன் போன்ற தற்கால அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களின் சபைகளில் கலந்து பயன் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் இவரை தற்காலதில் உயிருடன் வாழும் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களான அஷ் ஷேக் ரபி இப்னு ஹாதி அல் மத்களி, அஷ் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அல் அக்கீல் ஆகியோரும் இவரிடம் கல்வியில் பயன் பெற்றுக்கொள்ளும்படி சிபாரிசு (தஸ்கியா) செய்துள்ளனர்.

இமாம் அல் பானியின் மாணவர்களில் ஒருவரான அஷ் ஷேக் மஹ்மூத் இஸ்தன்பூலி அவர்கள் இவரைப் பற்றி விரிவாகவும் பாராட்டியும் சிபாரிசு ( தஸ்கியா ) கொடுத்துள்ளார்.

இன்னும் இவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்  அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரில் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் வரை உ‌ள்ள அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசையை அறிவிக்கும் அனுமதியை அஷ் ஷேக் அப்துல் மன்னான் குஜரன்வாலா அவர்கள் மூலம் அனுமதி பெற்றுள்ளார்.”(முற்றும்)

மேற் கூறுவதில் அவர்கள் தெளிவாகவே நான் எழுதியுள்ளதை உறுதிப்படுத்துவதைக் காணலாம். குறிப்பாக நான் அவரது ஊரைச் சேர்ந்தவன் அவர்களது நடவடிக்ககைகளைக் காண்பவன் என்பதால் அவர்களது தக்லித் சகோதரர்கள் எம்மைப் பார்த்துக் கேற்கும் கேள்வியும் இதுதான் என்பதின் மூலமும் இது உறுதியாகிறது. இந்த ஒரு காரணத்தினால்தான் இலங்கையில் மார்க்கப் பிரச்சாரத்திற்கு தகுதியானவர்கள் தம்மைத் தவிர்த்து யாரும் இல்லை என்கின்றனர். இந்த முதல் வழிகேட்டிற்கான மறுப்பை பின்வரும் கருப்பொருட்களில் இன்சா அல்லாஹ் சந்தர்ப்பம் கிடைக்குமபொழுது பதிவு செய்கிறேன்.

1.ஹதீஸ்களை இஸ்னாத் தொடருடன் பிறருக்கு அறிவிப்புச் செய்யும் போதன்றி  ஸில்ஸிலா எனும் சங்கிலித் தொடர் மரபுக்கு மார்க்கத்தில் ஆதாரம் உண்டா? மார்க்கப் பிரச்சாரம் செய்யத் தகுதியாக நபியவர்கள் அதைக் கூறினார்களா?

2.அஹ்ஸலுஸ்ஸுன்னா அறிஞர்கள் இவ்வாறு கூறியுள்ளார்களா?

3.யஹ்யா ஸில்மியிடம் இருக்கும் அரபி அறிஞர்களின் நற்சான்றிதலாகக் கருதப்படுபவற்றின் உண்மை நிலை என்ன?

4.நற்சான்றிதழ்களை அனைவரும் டவ்ன்லோட் செய்யும் அளவில் ப்லொக்களில் உலாவ விட்டிருப்பதில் உள்ள உச்ச கட்ட மடமை

5.தமது நற்சான்றிதழ்களை பள்ளிகட்டப் பயன்படுத்திய அற்புதம்.

6.யஹ்யா ஸில்மியும் அரபு மொழியும்

நான் எழுதும் மறுப்பை அரபுமொழியில் அரபு அறிஞர்களை மத்தியஸ்தம் வைத்தோ அல்லது அரபு அறிஞர்களின் போரம்களிலோ அல்லது அறிஞர்களின் நற்சான்றிதழ்களை விளம்பரப்படுத்தி உதவி தேடிய இணைய தளமான http://www.khass.com/vb/ என்ற இணைய தளத்திலோ அல்லது இலங்கையில் அவரது இடமல்லாத பொது இடங்களிலோ விவாதிக்கவோ கலந்துரையாடவோ ஒப்பந்தம் செய்ய நான் எந்நேரமும் தயாராக உள்ளேன் என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன். அவரது தலமையகம் பலகத்துறை என்பதால் இந்த நடவடிக்கையை அவர்கள் அவசரமாக மேற்கொள்ளலாம் இன்சா அல்லாஹ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts