Friday, March 29, 2024

ரமழான் சம்பந்தமான பலஹீனமான ஹதீஸ்கள்


01-           –الضعفاء الكبير للعقيلي – 750 – حدثناه أحمد بن داود قال : حدثنا هشام بن عمار قال : حدثنا سلام بن سوار قال : حدثنا مسلمة بن الصلت ، عن الزهري ، عن أبي سلمة ، عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : « أول شهر رمضان رحمة ، وأوسطه مغفرة ، وآخره عتق من النار

‘ரமழானின் முதற்பகுதி ரஹ்மத்துக்குரியதாகும். நடுப்பகுதி பாவமன்னிப்புக்குரியதாகும். இறுதிப்பகுதி நரகவிடுதலையாகும். (லுஅபாஉல்உகைலீ – 750)

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஸல்லாம் என்பவரும் மஸ்லமா என்பவரும் ஹதீஸ்களையில் நிராகரிக்கப்பட்டவர்கள்.

02- صحيح ابن خزيمة –  1887 – ثنا علي بن حجر السعدي ثنا يوسف بن زياد ثنا همام بن يحيى عن علي بن زيد بن جدعان عن سعيد بن المسيب عن سلمان قال : خطبنا رسول الله صلى الله عليه و سلم في آخر يوم من شعبان فقال : أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة و قيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه و من أدى فيه فريضة كان كمن أدى سبعين فريضة فيما سواه وهو شهر الصبر و الصبر ثوابه الجنة و شهر المواساة و شهر يزداد فيه رزق المؤمن من فطر فيه صائما كان مغفرة لذنوبه و عتق رقبته من النار و كان له مثل أجره منغير أن ينتقص من أجره شيء قالوا ليس كلنا نجد ما يفطر الصائم فقال : يعطي الله هذا الثواب من فطر صائما على تمرة أو شربة ماء أو مذقة لبن و هو شهر أوله رحمة و أوسطه مغفرة و آخره عتق من النار من خفف عن مملوكه غفر الله له و أعتقه من النار و استكثروا فيه من أربع خصال : خصلتين ترضون بهما ربكم و خصلتين لا غنى بكم عنهما فأما الخصلتان اللتان ترضون بهما ربكم فشهادة أن لا إله إلا الله و تستغفرونه و أما اللتان لا غنى بكم عنهما فتسألون الله الجنة و تعوذون به من النار و من أشبع فيه صائما سقاه الله من حوضي شربة لا يظمأ حتى يدخل الجنة

قال الأعظمي : إسناده ضعيف علي بن زيد بن جدعان ضعيف

(இப்னு ஹ{ஸைமா- 1887) 

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அலீ இப்னு யஸீத் இப்னு ஜுத்ஆன் இடம்பெறும் இவர் பலஹீனமானவர்.

03- المعجم الأوسط –  8312 – حدثنا موسى بن زكريا نا جعفر بن محمد بن فضيل الجزري نا محمد بن سليمان بن أبي داود نا زهير بن محمد عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه و سلم اغزوا تغنموا وصوموا تصحوا وسافروا تستغنوا لم يرو هذا الحديث عن سهيل بهذا اللفظ إلا زهير بن محمد

‘நோன்பு வையுங்கள் ஆரோக்கியமானவர்கள்’ (அல்-முஃஜமுல் அவ்ஸத்-8312)
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஸ{ஹைர் இப்னு முஹம்மத் வழியாக அறிவிக்கின்ற சிரியாவாசிகளின் அறிவுப்புக்கள் பலஹீனமானவர்கள்.

04- سنن أبي داود –  2396 – حدثنا سليمان بن حرب قال ثنا شعبة ح وثنا محمد بن كثير قال أخبرنا شعبة عن حبيب بن أبي ثابت عن عمارة بن عمير عن ابن مطوس عن أبيه قال ابن كثير عن أبي المطوس عن أبيه عن أبي هريرة قال  : قال رسول الله صلى الله عليه و سلم ” من أفطر يوما من رمضان في غير رخصة رخصها الله له لم يقض عنه صيام الدهر ” .

‘எவரொருவர் ரமழானில் அல்லாஹ் அனுமதியளித்த காரணங்கள் தவிர ஒரு நோன்பை விடுகிறானோ அவன் காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் அந்நோன்புக்கு ஈடாகாது.’
(அபூதாவூத் – 2396)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் முதவ்விஸ{ம் அவரது தந்தையும் யாரென்றே அறியப்படாதவர்கள்.

05- مسند أبي يعلى –  5273 – حدثنا محمد بن يحيى بن أبي سمينة حدثنا عبد الله بن رجاء حدثنا جرير بن أيوب عن الشعبي عن نافع بن بردة عن ابن مسعود : أنه سمع النبي صلى الله عليه و سلم وهو يقول – وقد أهل رمضان – : لو علم العباد ما في رمضان لتمنت أمتي أن يكون رمضان السنة كلها ……”

‘ரமழானில் என்ன சிறப்புக்கள் உள்ளன என்பதை அடியார்கள் அறிந்தால் வருடம் முழுவதும் ரமழானாக இருக்கவேண்டும் என ஆசைப்படுவார்கள்…’ (அபூ யஃலா – 5273)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஜரீர் இப்னு அய்யூப் ஹதீஸ்களை புனைந்துரைப்பவர். எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

06- مسند أحمد بن حنبل –  2346 – حدثنا عبد الله ثنا عبيد الله بن عمر عن زائدة بن أبي الرقاد عن زياد النميري عن أنس بن مالك قال : كان النبي صلى الله عليه و سلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان

‘யா அல்லாஹ் ரஜபிலும் ஷஃபானிலும் ரமழானிலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக என்று நபியவர்கள் பிரார்த்தியுங்கள். (இன்னும் சில அறிவிப்புக்களில் எங்களை ரமழானை அடையச்செய்வாயாக).  (அஹ்மத் – 2346)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸாஇதா இப்னு அபீர்ருக்காத் இடம்பெறுகிறார் அவர் ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்பட்டவர். 7 / سنن أبي داود

2358 – حدثنا مسدد ثنا هشيم عن حصين عن معاذ بن زهرة أنه بلغه: أن النبي صلى الله عليه و سلم كان إذا أفطر قال ” اللهم لك صمت وعلى رزقك أفطرت “
நபியவர்கள் நோன்பு திறக்கும் போது ‘அல்லாஹ{ம்ம லகஸ{ம்து வஅலாரிஸ்கிக அப்தர்து’ என்று ஓதுவார்கள். (அபூதாவூத் – 2358) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலே இடம்பெறும் முஆத் இப்னு ஸஹ்ரா யாரென்றே அறியப்படாதவர்.

08-   سنن أبي داود – 2357 – حدثنا عبد الله بن محمد بن يحيى أبو محمد ثنا علي بن الحسن أنا الحسين بن واقد ثنا مروان يعني ابن سالم المقفع قال  :” …….. وقال كان النبي صلى الله عليه و سلم إذا أفطر قال ” ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله “

நபியவர்கள் நோன்பு திறக்கும் போது ‘தஹப்பல்லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’ என்று கூறுவார்கள். (அபூதாவூத் – 2357) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலே மர்வான் இப்னு ஸாலிம் யாரென்றே அறியப்படாதவர்.

09-    شعب الإيمان للبيهقي – 3779 – أخبرنا أبو عبد الله الحافظ ، حدثنا أبو عبد الله الصفار ، إملاء ، حدثنا أحمد بن مهران بن خالد الأصبهاني ، حدثنا الفضل بن جبير ، حدثنا سليمان بن عمرو ، ح ، وأخبرنا علي بن أحمد بن عبدان ، أخبرنا أحمد بن عبيد الصفار ، حدثنا أحمد بن الهيثم الشعراني ، حدثنا سريج بن يونس ، حدثنا سليمان بن عمرو ، عن عبد الملك بن عمير ، عن عبد الله بن أبي أوفى ، عن النبي صلى الله عليه وسلم ، قال : « نوم الصائم عبادة ، وسكوته تسبيح ، ودعاؤه مستجاب ، وعمله متقبل » . لفظ حديث ابن عبدان ، وفي رواية أبي عبد الله ، قال : قال رسول الله صلى الله عليه وسلم ، وقال : « وعمله مضاعف ، ودعاؤه مستجاب حتى يمسي أو حتى يصبح »

‘நோன்பாளியின் தூக்கம் வணக்கமாகும் அவரது மௌனம் தஸ்பீஹ் செய்வதாகும். அவரது பிரார்த்தனை மாலையை அல்லது காலை வரை அங்கீகரிக்கப்படக் கூடியதாகும்.’ என்று நபிகளார் கூறினார்கள். (சுஅபுல் ஈமான் – 3779)
அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஸ{லைமான் இப்னு அம்ர் ஹதீஸ்களை புனைந்து சொல்பவர் என்பதால் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

10-  العلل المتناهية – 824 – وأما حديث جرير حدثنا ابو قاسم بن الحصين قال انا علي بن ابي علي البصري قال نا ابو بكر محمد بن ابراهيم بن حمدان الدير عاقولي قال نا ابو عبد الله محمد بن اسماعيل بن اسحاق الفقيه قال حدثني عبد الله بن علي بن عبيدة المؤدب قال نا محمد بن عبيد البصري قال نا معتمر قال نا اسماعيل بن ابي خالد عن قيس بن ابي حازم عن جرير بن عبد الله قال قال رسول الله إن شهر رمضان معلق بين السماء والأرض لا يرفع إلا بزكاة الفطر

‘ரமழான் மாதம் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் தொங்கு நிலையில் இருக்கும் பித்ரா தர்மம்தான் அதனை அல்லாஹ்வின் பக்கம் உயர்த்தும்.’ (அல் இலலுல் முதனாஹியா – 824)


இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் முஹம்மத் இப்னு உபைத் யாரென்றே அறியப்படாதவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts