2009 வரையில் SLTJ இயக்கத்துடனான எனது தொடர்பு

எனது அன்புக்கினிய சகோதரர்களுக்கு

ததஜ மற்றும் அதன் கிளையான எஸ் எல் டி ஜேயின் போலியான விவாத அழைப்புகள் பற்றி ஒரு சில செய்திகளை இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

2010 வரை sltj யினருக்கு என ஜமாஅத் கொள்கை என்று ஒன்று இருக்கவில்லை. 2005 இல் மௌலவி பீஜே அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட sltj ஏனைய தவ்ஹீத் பிரச்சார அமைப்புக்களில் இருந்து கொள்கையளவில் வேறுபட்டு இருக்கவில்லை. ஆனால் ஏனைய தவ்ஹீத் அமைப்புக்கள் கொள்கையில் சமரசம் செய்கிறார்கள். வெளியில் இருந்து வரும் நிதிதான் இதற்குக் காரணம் இதனால் வெளிநாட்டு நிதி பெறக் கூடாது என்ற எழுதப்படாத ஒரு விதியை உருவாக்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆரம்பித்து சில மாதங்களிலேயே அவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்து சில சகோதரர்கள் வெளியாகிவிட்டார்கள். உள்ளே இருந்தவர்களை விட மௌலவி பீஜேயிற்கு நம்பிக்கையானவர்களாகவும் மௌலவி பீஜே சார்ந்தவர்களாகவும் பிரச்சனையில் வெளியே சென்றவர்களே இருந்தார்கள்.

2004கடைசியில் கிண்ணியா ஸஃதியா அரபிக் கல்லூரியில் இருந்து  வந்து எஹலியகொட மஸ்ஜிதுல் பலாஹில் இமாமாகக் 1 வருடம் கடமையாற்றினேன். அந்தக் காலப்பகுதியிலேதான் மௌலவி பீஜே இலங்கைக்கு வருகிறார். எந்தத் தவ்ஹீத் அமைப்புப் பிரச்சாரத்துக்கழைத்தாலும் போக வேண்டும் இயக்க வேறுபாடு காட்டக் கூடாது என்ற முடிவில் நான் இருந்ததால் sltj யில் அப்பொழுது தலைவராக இருந்த  வஸ்னி நிஸார் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார். sltjயிற்கு என்னையும் ஓரிரண்டு உலமாக்களையும் தவிர அவர்கள் பிரச்சாரத்துக்குப் வேறு யாரையும் பயன்படுத்துவது இல்லை. மற்ற உலமாக்கள் வரவிரும்புவதும் இல்லை. 2006 இல் இருந்து 2009கள் வரை ஏறக்குறைய  மூன்றரை வருடங்கள் நான் அவர்களுடன் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறேன். நான் sltj யில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாலும் ஏனைய சில மனக் கசப்புக்களாலும் மற்றைய தவ்ஹீத் அமைப்புக்கள் என்னை பிரச்சாரத்திற்கு மிகவும் அரிதாகவே பயன்படுத்தினர். ஆனாலும் நான் ஒரு இயக்கத்திற்குள் என்னை சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதனால் தவ்ஹீத் அமைப்புக்கள் யார் அழைத்தாலும் மார்க்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டேன்.

இந்தக் காலப் பகுதியில் ததஜவின் நிர்வாகக் கொள்கைகளோ மாநிலத் தலைமையின் நேரடித் தொடர்புகளோ sltj யிற்கு இருக்கவில்லை. சொல்லப் போனால் ததஜவின் கிளையென்பதற்கு பெயரளவில் தவிர வேறெதுவும் இருக்கவில்லை.

அதே போன்று வெளிநாட்டு நிதி என்ற வாதத்தைத் தவிர சொல்லிக்கொள்கின்ற அளவில் வேறெந்த முரண்பாடும் இருக்கவில்லை. இதனால் ஏனைய தவ்ஹீத் அமைப்புக்களுடன் நற்புறவு இல்லாதுவிட்டாலும் இன்றைய பகைமை இருக்கவில்லை. அதற்கு என்னிடத்தில் பல ஆதாரங்களும் ஆவணங்களும் உண்டு.

நான் அங்கே முக்கியமான தாஇயாக இருந்ததனால் எனக்குப் பின்னால் sltj இருப்பது போன்ற ஒரு தோற்றமும் நான் அதில் அங்கத்தவர் போன்றும் ஒரு தோற்றம் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை எனது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. மௌலவி பீஜேயும் sltjயும்தான் தடம்புரண்டனர். அப்பொழுதும் பீஜேயிடத்தில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் சூனியம் பற்றிய மாற்று நிலைப்பாடு எல்லாம் இருந்தன. ஆனால் அவரது கருத்து என அது இருந்ததே தவிர அவரது நிலைப்பாட்டிற்கு வராதவர்கள் காபிர்கள் முஷ்ரிக்கள் என்ற வழிகெட்ட நிலை இருக்கவில்லை அது 2010இற்குப் பின்னரே ஏற்பட்டது.

நான் அன்று முதல் இன்று வரை கொள்கையில் மாறவில்லை என்பதற்கு நான் sltj யில் ஆற்றிய உரைகள் பீஜேயுடன் நடத்திய உரையாடல் அது போன்ற இ்ன்னும் பல அம்சங்கள் ஆதாரமாக உள்ளன.

மௌலவி பீஜே தனது கொள்கையை sltj யிற்குள் திணிக்க நினைத் பொழுதே sltj பிரச்சனை பெரிதானது. பீஜே சகோதரர் வஸ்னியை அழைத்து 2009ம் ஆண்டு ஆரம்பித்து ஒரு கட்டளை இடுகிறார். அந்த கட்டளை உரையாடல் ஓடியோவாக என்னிடத்தில் உள்ளது. அதன் சுருக்கம். நான் சொந்தமாக நடத்தும் இணையதளங்கள் நிறுத்தப்பட வேண்டும் நான் ததஜவுடன் முரண்படும் அனைத்து மஸாஇல்களும் இயக்க அங்கத்தவர்களுக்கு மத்தியில் விவாதிக்கப்பட வேண்டும். ததஜவை உடைக்க நான் நிறைய பித்னா பண்ணியிருக்கிறேனாம். அவைகள் இதற்குப் பிறகு செய்யக் கூடாது என்று உபதேசிக்கப்படவேண்டும். அவ்வாறு நான் செய்தால்தான் sltj யின் தாஇயாக தொடர்ந்து இருக்கலாம். இல்லையென்றால் sltj யை விட்டு வெளியேற வேண்டும். Sltj யை விட்டுப் பிரிந்துபோன சகோதரர்களுக்கும் sltj யிற்கும் மத்தியில் இணக்கபாடு ஏற்படுத்தப்பட வேண்டும். இதுவே அந்த உரையாடலின் சுருக்கம்.

மௌலவி பீஜேயின் இந்த வேண்டுகோள் sltjயின் அடுத்த மசூராவில் முன்வைக்கப்பட்ட போது. நான் sltj யின் தாஇயல்ல என்பதைத் தெளிவாகச் சொன்னேன். எந்த இயக்க நிர்வாகக் கொள்கையும் என்னை கட்டுப்படுத்தாது. அதனால் முரண்பாட்டின் பட்டியல் தந்து விவாதித்து sltj யின் தாஇயென என்னை நிலை நிறுத்திக் கொள்ள எந்த தேவையும் இல்லை. முரண்பாடுகளைப் பேச நான் தயார் முதலில் சூனியம் பற்றி பீஜேயுடன் பேச நான் தயார். ஆனால் அவருக்கு பட்டியல் கொடுக்க எந்த அவசியமும் இல்லை என்பதை சொன்னேன். அதை sltj நிர்வாகம் அங்கீகரித்தது. நீங்கள் உங்கள் நிலைப்பாட்டிலேயே இருந்து கொண்டு பிரச்சாரம் செய்வதில் sltjயிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என வாய் மொழிந்தார்கள். அந்த மசூராவின் ஓடியோ என்னிடத்தில் உள்ளது. இன்றைய sltjயின் தலைவர்கள் உற்பட பெரும்பான்மையான நிர்வாகிகள்தான் அங்கு நிர்வாகம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள்தான் இந்த முடிவைச் சொன்னவர்கள். இதைத்தான் 2009இல் sltj என்னை விவாதத்திற்கழைத்ததாகவும் நான் வரவில்லை எனவும் அறியாதவர்கள் கதையளப்பார்கள். sltjயே sltjயை விவாதத்திற்கு அழைத்ததா? என்ற பதிலைத் தவிர வேறென்ன அவர்களுக்கு பதிலாக சொல்ல முடியும்.

இந்த எனது நிலைப்பாடு பற்றி ஒரு கடிதத்தை வாங்கி sltj ததஜவிற்கு அனுப்பி வைத்தது. sltjயின் இந்த நிலைப்பாடு காரணமாக ததஜ sltjயை வழிகெட்ட கொள்கையை கொண்ட அமைப்பு என அறிவித்தது. பீஜேயும் தன் கைப்பட sltj வழிகெட்ட அமைப்பு என எழுதிக் கொடுத்தார்.

sltjயிற்கு வெளியே இருந்து உள்ளே நுழைந்து நிர்வாகத்தைக் கைப்பற்றுங்கள் என பிரச்சனைப்பட்டு sltjயிற்கு வெளியேயிருந்த சகோதரர்களுக்கு பீஜே சொல்லியிருந்தார். தருணம் பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்கு இது பெரிய தோல்வியாக ஆகியது. வெளியே சென்றிருந்த சகோதரர்களுக்கிடையிலும் ஒற்றுமை இருக்கவில்லை அவர்களும் 3 குழுக்களாக இருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை ஒன்றினைத்து ஜம்இயதுத் தவ்ஹீத் என்ற பெயரில் தனது உத்தியோகக் கிளையாக பீஜே அறிவித்தார். sltjயை வழிகேடு என அறிவித்தார். ஆனாலும் அந்தக் கிளை சோபிக்கவில்லை. இதனால் sltjயில் இருந்து என்னை அகற்றிவிட்டால் பீஜேயின் பார்வையில் sltj நேர்வழி ஆகிவிடும். நாமும் ஒன்று சேர்ந்து விடலாம். இதற்கு என்ன வழி என சிந்தித்த சிலர் கண்ட திட்டம்தான் எனது சொந்த வாழ்க்கையைக் கெடுப்பது எப்படி? எப்படி இவனைத் தீயவனாக அறிமுகப்படுத்தலாம். சிலரிடத்தில் பீஜே இதனை வெளிப்படையாக ஆலோசித்தார். நேரம் வரும்போது அந்த ஆதாரங்களைக் கொண்டு வருவேன் இன்ஷா அல்லாஹ்.

இறுதியில் என்னைத் திட்டமிட்டு மார்க்கத்தின் பெயரால் ஆரம்பித்து தீய பாதைக்கு இட்டுச் சென்று எனது வாயால் பொய்யாகப் பல விடயங்களைப் பேச வைப்பதற்கு சில கட்டங்களை உருவாக்கி பேச வைத்து ஓடியோப் பதிவு செய்து கொண்டார்கள். எனது ஓசை மட்டுமே அந்தப் பதிவில் இருப்பதும் அடுத்த தரப்பில் டைப் செய்வதைத் தவிர வேறெந்த சப்தமும் இல்லாதிருப்பதுமே அது திட்டமிடப்பட்டது என்பதற்கு ஆதாரம். சட்ட நடவடிக்கைக்கான தேவை வரும்போது அதன் பின்னணியை விரிவாக விளக்குவேன். நான் பேசியது தவறு பாவம் என்பதை நான் ஒரு போதும் மறுக்கமாட்டேன். இறைவனிடத்தில் அதற்காய் இன்றும் இரைஞ்சுகிறேன்.

அந்தப் பதிவு திட்டமிட்டபடி பீஜேயிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. Sltj நிர்வாகிகளிடத்தில் காட்டப்படுகிறது. ஆனாலும் இது திட்டமிடப்பட்டது என்பதைப் புரிந்துகொண்ட sltj நிர்வாகத்தினர் எனக்குறிய நடவடிக்கைகளை எடுத்துவிட்டு அவர்களுடன் இணைய  முன்வரவில்லை.

தொடர்ந்து என்னைப் பிரச்சாரத்திற்கு அழைத்தது sltj. ஆனாலும் இந்த இயக்கவெறியாட்டத்தில் பலியான நான் கடும் வேதனையில் இருந்தேன். இதனால் நான் sltj யிற்குப் பிரச்சாரத்திற்குப் போக விரும்பவில்லை. ஆனால் அந்த சகோதரர்கள் எனக்கு நடந்தது அநியாயம் என்பதைப் புரிந்திருந்ததனால் நிர்வாகமாக வீடு தேடி வந்தார்கள் கவலைகளைத் தெரிவித்தார்கள். ஆறுதல் கூறினார்கள். மீண்டும் நீங்கள் பிரச்சாரக் களத்திற்கு வரவேண்டும் என்றும் கூறினார்கள். ஆனாலும் என் மன ஆர்வம் குற்ற உணர்வு எனக்கு இடம் கொடுக்கவில்லை. நான் தவிர்த்தேன். இதிலிருந்து sltj யில் இருந்து முஜாஹித் ஏன் விலக்கப்பட்டார் என தங்களது காழ்ப்புணர்வுகளை கக்குபவர்கள் எவ்வளவு பொய்யர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஆனாலும் பீஜேயின் கிளையாக நாம் இல்லையே என்ற கவலையுடன் இருந்த sltj யின் நிர்வாகிகள் இருவர் வெளியில் உள்ளவர்களையும் இணைத்து sltjயை பீஜேயின் கிளையாக்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தார்கள். அதுவரை sltj இயங்கி வந்த நிஸார் குவ்வதியால் வக்பு செய்யப்பட்ட இடத்தை sltjயின் பெயரில் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்  பீஜேயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அதில் சகோதரர் வஸ்னியிடமிருந்து தந்தையின் வக்பு உரிமையயை எவ்வாறு பறிப்பது என்று பீஜே திட்டமிட்டுக் கொடுக்கிறார். அது வீடியோப் பதிவு செய்யப்படுகிறது. அந்த வீடியோவில் இடம்பெறும் சகோதரர் வஸ்னிக்கெதிரான பேச்சுக்களை எடிட் பண்ணி வெளியிடுமாறு மௌலவி பீஜே சொல்கிறார். ஆனால் எடிட் பண்ணப்படாமல் அவா்களில் ஒருவரே அதை வெளியிட்டுவிட்டார்.

இந்த சதியின் காரணமாக ஒரு சில நிர்வாகிகள் மல்லிகாரம கட்டிடத்தில் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு ஆளானார்கள். அவர்கள் வெளியேறும் போது நீங்கள் இனி sltj என்ற பெயரை இனி உபயோகிக்கக் கூடாது என நிபந்தனையிட்டு மல்லிகாராமயில் உள்ள அனைத்து தளபாடங்களும் sltjயிற்குறியது என்ற சொல்லி அவைகளை எடுத்துக் கொண்டு வெளியாகவிட்டார்கள். இப்பொழுது sltjயில் ஏற்கனவே பிரிந்த சகோதரர்களும் மல்லிகாராம பள்ளியவாயலான இன்றைய மஸ்ஜிதுத் தவ்ஹீதிலிருந்து பிரிந்து சென்ற சகோதரர்களும் சேர்ந்துதான் இன்று sltjயின் பெயரில் மாலிகாவத்தில் இயங்கி வருகிறார்கள். அவர்களுக்குள் பாரிய வெடிப்புக்கள் உள்ளன. 3விதமான குழுக்கள் அதில் உள்ளனர். இன்னும் 2 வருடங்களுக்கு மேலாக sltjயின் நிருவாகத்தின் போலி ஒற்றுமை நீடிக்காது என்று ஆணித்தரமாகச் சொல்கிறேன்.

இப்பொழுது அங்கே உலமாக்களாக இருப்பவர்களை விட சகோதரர் அப்துர் ராஸிக் ரஸ்மி ஸதாத் போன்றவர்கள் மிகத் திறமையானவர்கள். அங்கே உள்ள உலமாக்களின் அறிவின் தரத்தை அதன் தலைவர் மிக அறிந்தவர். என்னையும் அவர் மிகவும் அறிந்தவர். அப்துர் ராஸிகின் சில ஆலோசனைகள்தான் sltj யை ஓரளவு அறிமுக வட்டத்தில் வைத்திருக்கிறது. இந்த உண்மையைச் சொல்வதால் என்னை யாரும் கோபிக்கத் தேவையில்லை. அவர்களை அல்லாஹ்வின் அருளால் மிகச் சிறப்பாக அளந்து வைத்திருக்கிறேன். அல்லாஹ் போதுமானவன்.

அதனால் தப்பியோடிவிட்டார்கள் என்று சப்தம் இடுபவர்களுக்கு சொல்கிறேன். உங்களது தோல்விக் கடித அழைப்பு உங்களுக்குள்ளே ஏற்படுத்திய அதிருப்திகள் என்ன என்பதையும் நான் அறிந்து வைத்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் என்றும் மாற்றமில்லாமல் சொல்கிறேன். நீங்கள் உண்மையில் இருந்தால் அதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் உங்களில் விவாதத்திறமையுள்ள மௌலவி பீஜேயுடன் விவாதத்திற்கு வாருங்கள் அல்லது sltjயினரே நீங்கள் தனித்து வாரு்ங்கள். 10 நாட்களோ 15 நாட்களோ அவகாசம் அல்ல. நீங்கள் இந்தக் கொள்கையை விட்டுத் திருந்தும் வரை உங்களுக்கு அவகாசம் உண்டு. நானும் எதிர்பார்த்திருப்பேன். இ்ன்ஷா அல்லாஹ். இதில் நான் சொன்னவைகள் அனைத்தும் நான் உண்மையென நம்புபவைகளே என்று சான்று பகர்கிறேன். மிகச் சுருக்கமாகவே எழுதியுள்ளேன். தேவையேற்படின் இன்னும் விரிவாக எழுதுவேன் இன்ஷா அல்லாஹ்.

8 Responses to “2009 வரையில் SLTJ இயக்கத்துடனான எனது தொடர்பு”

 1. Abdul Dubai says:

  May Allah forgive you Bro, and i pray for SLTJ also to become true Towhid not (SLTJ or TNTJ)

 2. Mihlar salahudeen says:

  These are very interesting details, Just to trap Mujahid Moulavi and to record his voice they have planed a big drama it seems,I mean TNTJ & SLTJ. I wonder what kind of a Quran & Sunnah based Dawah this is. Quite disturbing.
  Mihlar -Jedddah

 3. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மார்க்க விசயங்களில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது அன்றைய காலம் முதல் இருந்துவந்துள்ளது. கருத்துமுரண்பாடுகளை எவ்வாறு நபித்தோழர்கள் அனுகினார்களோ அவ்வாறு நாம் அனுகினால் இவ்வளவு பினக்குகளும், பிளவுகளும் தவ்ஹீத் கொள்கை சகோதரர்களுக்குள் ஏற்பட்டிருக்காது, நான் முஃமின், நீ முஸ்ரிக், நீ முனாஃபிக் என்ற ஒருவருக்கு ஒருவர் காகிதமில்லா சான்றிதழ் வழங்கும் நிலைக்கூட வந்திருக்காது.

  குர்ஆன் சுன்னாவை பின் பற்றுகிறோம் என்று சொல்லுபவர்கள் முதலில் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த நகரீகமான பேச்சுக்கள் பேச வேண்டும். தவறு செய்தவன் திருந்தி வாழும்போது அவனின் தவறை சுட்டிக்காட்டி, குத்திக்காட்டி அந்த தவறு செய்தவனை மனநோகடிப்பதும் எவ்வகையான குர்ஆன் சுன்னா வழி என்பது தான் புரியாத புதிர்.

  மீடியா இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பொக்கிஸம். ஆனால் அது நம்முடைய பலகீனத்திற்காக மிக அற்புதமாக நம் சமுதாய சொந்தங்களால் பயன்படுத்துகிறது என்பது கசப்பான உண்மை. மீடியா ஆதிக்கம் நம் சமுதாயத்திடம் இல்லை என்பது எப்படி நமக்கு பலகீனமோ,அதைவிட நம்மவர்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்சம் மீடியாக்கள் நம் சமூதாயத்தை பல்லாயிரம் மடங்கு பலகீனப்படுத்துகிறது ( ஒருவரை ஒருவர் தாக்கிப் பிரச்சாரம் செய்வது போன்றவகளளால்) என்பதும் மற்றுமொரு கசப்பான உண்மை.

  மாற்றுக் கருத்துள்ள இருதரப்பு தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் தூய இஸ்லாத்தை வளர்க்க வேண்டும் என்று நல்லெண்ணம் கொண்டவர்கள் என்பதை மட்டும் மறுக்க முடியாத உண்மை,மேலும் இருதரப்பு இஸ்லாத்தை கேவலப்படுத்த வேண்டும் என்று எண்ணம் நிச்சயம் ஒரு துளிக் கூட இருக்க வாய்ப்பில்லை.

  நாம் இஹ்லாசுடன், நம்மை படைத்த அல்லாஹ்விடம் கையேந்துவோம்,. அவன் மட்டுமே நம்மை நேர்வழிபடுத்த போதுமானவன்.

  யா அல்லாஹ் யாரெல்லாம் குர்ஆன் சுன்னா வழியில் உள்ளார்களோ அவர்கள் அனைவருக்கும் நேரான வழியை காட்டுவாயாக. மார்க்க ஞானத்தை தந்தருள்வாயாக…ஷிர்க் பித்அத்துக்களை மிகுந்த வீரியத்துடன் ஒன்றிணைந்து ஒழித்துக்கட்ட துணை புரிவாயாக.

  (link removed by admin)

 4. Osman Yoonus says:

  கனம் மவ்லவி முஜாஹித் அவர்களே நீங்கள் எழுதிய கட்டுறையை வாசித்தேன். அது மிக கவலையை தந்தது. இவ்வலவு நடந்தும் உங்களுக்கு இந்த கட்டுரையை உலகத்துக்கு காட்ட வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாபுகளும். அலஹம்துலில்லாஹ்.

  நானும் இத‌ற்கு ஒரு சிரு வில‌க்க‌த்தை எழுத‌ ஆசைப்ப‌டுகிறேன். நான் க‌வ‌லைப்ப‌டுகிறேன் என்ன‌வென்றால் மவ்ல‌வி பிஜே எவ்வ‌லுவு தியாக‌ங்க‌ள் செய்து இந்த‌ ஏக‌த்து பிர‌ச்சார‌த்தை தமிழ் பேசும் உல‌க‌த்து அழ‌காக‌ கொண்டு வ‌ந்து இந்த‌ ஏக‌த்துவ‌ பிர‌ச்சார‌த்தை மிக‌ கேவ‌லாமான‌ பார்வையில் கொண்டுவ‌ந்து சேர்த்துல்லார் என்ப‌தை நினைக்கும்போது மிக‌ க‌வ‌லைக்குறிய‌ விட‌ய‌மாக‌ இருக்கின்ற‌து.

  ம‌வ்ல‌வி பிஜேயோ அல்ல‌து அவ‌ர்க‌ளின் இய‌க்க‌த்தில் உல்ல‌வ‌ர்க‌ள் சேர்ந்து செய்த‌ ச‌திதான் இவ்வ‌ல‌வும் நீங்க‌ள் எழுதிய கதை. இதை பார்க்கும் அல்ல‌து வாசிக்கும் அதாவது சதி செய்த நபர்களுக்கு என‌து அன்பான‌ வேண்டுகோள் அல்லாஹ் இர‌ண்டு பாவ‌ங்க‌ளை ம‌ண்ணிக்க‌மாட்டான். 1/ அல்லாஹ்வுக்கு இணைவைப்ப‌து
  2/ ஒரு ம‌னித‌னுக்கு அனியாய‌ம் செய்து இருந்தால் அந்த‌ ம‌னித‌ன் ம‌ண்னிக்கும் வரை அல்லாஹ் ம‌ண்னிக்க‌ மாட்டான் ஆக‌வே நீங்க‌ள் அனைவ‌ரும் க‌ஷ்ட‌ப்ப‌டுவ‌தின் நோக்க‌ம் சுவ‌ர்க்க‌ம் செல்ல‌ வேண்டும் என்ப‌தே ஆக‌வே நீங்க‌ள் இந்த‌ ம‌வ்ல‌வி முஜாதுக்கு எதிராக‌ செய்த‌ அனியாய‌ங்க‌ளை அவ‌ர் உயிரோடு இருக்கும்போதும் உங்க‌ள் உயிர் இருக்கும்போது ம‌ண்னிப்பு கேட்டு விடைப்ப‌ற்றுக்கொண்டு சுவர்க்கம் செல்ல தயாராகுங்கள்.

  வ‌ல்ல‌ ர‌ஹ்மான் நீங்க‌ள் ம‌வ்ல‌வி முஜாஹிதுக்கு செய்த‌ அனியாய‌த்திலுருந்து உங்க‌ளை பாதுக்காக்க‌வேண்டும். ஆமீன்!

 5. nowfer says:

  //இதற்கு என்ன வழி என சிந்தித்த சிலர் கண்ட திட்டம்தான் எனது சொந்த வாழ்க்கையைக் கெடுப்பது எப்படி? எப்படி இவனைத் தீயவனாக அறிமுகப்படுத்தலாம். சிலரிடத்தில் பீஜே இதனை வெளிப்படையாக ஆலோசித்தார்.//

  மௌலவி முஜாஹித் அவர்களே!! நீங்கள் சொல்வது உன்மையாக இருந்தால் பிஜே அவர்களது தஃவா இயக்கம் மிகக் கேடு கெட்டது என்பதில் சந்தேகமில்லை…ஆனால் அதைநாம் தீர்மாணிப்பதற்கு உங்கள் வசம் உள்ள ஆதாரங்களை நீங்கள் வெளியிட வேண்டும்…அதப் பார்த்து பரிசீலித்தே நாம் இவ்வாறு முடிவு செய்யலாம்.
  அல்லாஹ் போதுமானவன்

 6. Jahir Hussain says:

  what bro nowfer says sounds correct. HasbunAllah

 7. Mohamed says:

  Aadhaarattai veliyiduwadatku ye tayakkam moulavi pls veliyidunga Unmai edhu enru velangikanume

 8. Jeenath says:

  AssalamuAlaikum moulavi mujahid…allah subahaanahu thaalla will surely embrace you in shaa allah..Allah ungalai manippanaga…