Home » கட்டுரைகள் » பிக்ஹ் » நவீன பிரச்சினைகள் »
கூடுதல் விலை அடிப்படையில் தவணை முறைக் கடணத்திற்கு வாங்கலும் விற்றலும் (installment payment)
கூடுதல் விலைக்கு தவணை முறைக்கடணத்திற்கு பொருட் கொள்வனவு செய்வது இன்று பரவலாக இடம் பெறுகின்றது. இதுவும் வட்டிதான். அதிக வியாபார நிறுவனங்கள் இதைக் கடைபிடிக்கின்றன. மக்களெல்லாம் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.
கூடுதல் விலை தவணை முறைக்கட்டணம் எவ்வடிப்படையில் ஹராமாகின்றது என்றால், ஒருவர் வாகனமொன்றை வாங்க நினைக்கின்றார் ஆனால் அவரிடம் போதுமான பணமில்லை. தவணை முறையில் வாகனம் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்துக்கு செல்கின்றார். தன்னிடம் இருக்கும் தொகையைக் கொடுத்து விட்டு மீதியை ஒன்றரை வருடத்தில் கட்டி முடிப்பதாக ஒப்பந்தம் செய்வார் அதற்கேற்ப அந்நிறுவனம் தொகையைப் பிரிக்கும் போது வாகனத்தின் பெறுமதியை விட ஒரு இலட்சம் கூட வரும். இந்த ஒரு இலட்சம் ரூபாய் எதற்காக வந்தது என்பதற்கு இவர்களிடம் சரியான பதில் கிடையாது. இதை இன்னும் விளங்குவதென்றால், ஒருவரிடம் முப்பதாயிரம் நாம் கடனாகப் பெறுகிறோம். மூன்று மாதங்களில் அதைத்திருப்பித்தருவதாக சொல்கின்றோம். அப்படியாயின் மாதமென்றுக்கு ஆயிரம் ரூபா வீதம் 33000 ரூபாய்கள் தரவேண்டும் என்று அவர் சொல்கின்றார் என்றால் இதையே நாம் வட்டி என்போம். அப்படியாயின் இதே செயற்பாடுதான் தவணை முறைக் கட்டணத்திலும் இடம் பெறுகின்றது. இங்கு காலத்துக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் முறை நடைபெறுகின்றது. கூடுதல் விலை அடிப்படையில் தவணை முறைக்கடணத்திற்கு பொருட் கொள்வனவு வட்டிதான் என்பதைப் புரிந்துகொள்ள அந்த வியாபாரத்தில் என்ன நடக்கிறது என்பதை நன்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஒருவர் ஒரு வொஷிங் மெஷினை வாங்கச் செல்கிறார். அவரிடம் 3000 ரூபாய்தான் இருக்கிறது. அவர் ஆசைப்படுவது 20000 ரூபாயிற்கு இது முதல் தவறு. இதற்குக் காரணம் தவணை முறையில் அதிக விலை வைத்து விற்பனை செய்யும் முறை நடைமுறையில் இருப்பதே. வசதியற்றவனும் கட்டிவிடலாம் என அளவுக்கு மீறி ஆசைப்படுவதற்கு இதுதான் காரணமாகும். 20000 விலை கொண்ட வொஷிங் மெஷினை உடனடியாக செலுத்தினால் உறிய 20000 இத்திற்கே அவரால் அதை வாங்கிக் கொள்ள முடியும். தவணை முறையில் என்றால்.தாமதத்திற்கேற்ப காலத்திற்கேற்ப 1 மாதமாயின் 21000 இரண்டு மாதமாயின் 22000 ரூபாய் 3மாதமாயிள் 23000 என அதிகரிக்கப்படுகிறது. இதை ஞாயப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வட்டிதான் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். 23000 ரூபாய் தவணைக் கட்டண அடிப்படையில் கொடுத்து வொஷிங் மெஷனை வாங்கியவர் அதைத் தந்த நிறுவனத்திற்கே கேஷுக்கு விற்றால் 20000 கிடைக்கும். அவர் 3 மாதங்களில் அந்நிறுவனத்திற்கு 23000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். இந்த விளக்கம் எமக்கு எதனைச் சொல்கிறது. மேலதிக 3000 வட்டி என்பதை அழகாகக் காட்டுகிறது. இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். கீழ்வரும் ஹதீஸிலிருந்து இதை விளங்கலாம்.
سنن الترمذي 1231 – عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعَتَيْنِ فِي بَيْعَةٍ»
ஒரு வியாபாரத்தில் இரண்டு வியாபாரம் செய்வதை நபியவர்கள் தடை செய்தார்கள்.
ஆறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : திர்மிதி 1231
ஒரு வியாபாரத்தில் இரண்டு வியாபாரம் செய்தல் என்றால் ஒரே பொருளுக்கு இரு விலைகளை வைப்பதைக் குறிக்கின்றது. இதைத் தவிர வேறு விளக்கம் இதற்குச் சொல்ல முடியாது. இதை இஸ்லாம் வட்டி என்கின்றது. இதைக் கீழ்வரும் ஹதீஸ் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.
سنن أبي داود (3/ 274)
3461 – عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَاعَ بَيْعَتَيْنِ فِي بَيْعَةٍ، فَلَهُ أَوْكَسُهُمَا أَوِ الرِّبَا»
யார் ஒரு வியாபாரத்தில் இரண்டு வியாபாரம் செய்தானோ அதில் குறைந்த விலையை எடுத்துக் கொள்ளட்டும் கூடியது வட்டியாகும்.
ஆறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : அபூதாவூத்3461
ஒரு பொருளை காட்டி இதற்கு உடனடியாகப் பணம் செலுத்தினால் 100ரூபாய் மூன்று மாதங்கள் பிந்தித் தருவதென்றால் 130ரூபாய் போன்ற வடிவில்தான் இவ்வியாபாரம் நடைபெறுகின்றது. பிந்திப் பணம் கிடைப்பதால் தமக்கு நஷ்டம் ஏற்படுகின்றது என்பதால்தான் இவ்வாறு விலைகளில் வித்தியாசம் செய்கின்றோம் என்று இதற்கு நியாயம் சொல்லப்படுகின்றது. வட்டிக்குக் கொடுப்போரும் இதே நியாயத்தையே சொல்கிறார்கள். நஷ்டம் ஏற்படுகின்றது என்றால் ஏன் இவ்வாறு வியாபாரம் செய்ய வேண்டும். உனடியாகப் பணம் பெற்றுக் கொண்டு ஒரே விலைக்கு வியாபாரம் செய்யலாம்தானே? ஏன் இவ்வியாபாரத்தை விடக்கூடாது? என்னதான் காரணம் சொன்னாலும் தமக்கு இலபாம் கிடைக்கின்றது என்பதாலேயே இதை இவர்களால் விடமுடியாதிருக்கின்றது. இதையே சிலர், பொருளுக்கு ஒரு விலைதான் உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினால் விலைக் கழிவுண்டு என்று சொல்கின்றார்கள் இதுவும் தவணை முறைக்கட்டணமும் ஒன்றுதான். அதற்காக மொத்தமாக எடுத்தால் ஒரு விலை சில்லரையாக எடுத்தால் ஒரு விலை என்பதையும் கூடாது என்று சொல்ல முடியாது. உண்மையில் இந்த வியாபாரத்தில் அநியாயமில்லை. நியாயங்கள் பல காணப்படுகின்றன என்பதோடு தடையென்பதற்கான மார்க்க ரீதியான காரணங்கள் ஏதும் இதில் காணப்படவில்லை.
மேலே நாம் பார்த்த முறைகளைக் கவனத்திற்கொண்டு வியாபாரம் செய்வோமானால் அல்லாஹ் அதில் நமக்கு பரகத் செய்வான் எனும் நம்பிக்கை நம் மனதில் ஆழமாகப் பதியுமானால் நிச்சயம் அது நம்மில் பல மாற்றங்களையும், புதிய உத்வேகங்களையும் ஏற்படுத்தும் என்பதுடன் இஸ்லாம் வகுத்துள்ள சட்டங்கள் மனித குலத்துக்கு நன்மையானவையே தீங்கையும், இழப்பையும் ஏற்படுத்தும் சட்டங்களை இஸ்லாம் ஒரு போதும் சொல்லவில்லை என்பதுவே உண்மையாகும்.


22 Comments
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரா; அவா;கள் மொத்த சில்லரை வியாபாரத்தில் இருந்து தவணை முறையில் இருந்து வித்தியாசப்படும் இடத்தை விளக்கினால் நன்றாக இருக்கும்
மொத்தமாக 10 பொருட்களைக் கொண்ட ஒரு பெட்டியை ஒருவர் 1000 ரூபாயிற்கு விற்கிறார் என்றால். அவர் தவணையடிப்படையிலும் 1000 ரூபாயிற்கு விற்பார். சில்லறையாக விற்கும் போது அவர் அப்பெட்டியின் ஒரு பொருளுக்கு 110 ரூபாய் விகிதம் விற்றாலும் கேஷின் போதும் கடனின் போதும் அதே பெறுமானத்திற்கே விற்றால் தடை கிடையாது.
ஸலாம் ,
அல் அமானவில் இந்த ஹதீஸ் ஐ சுட்டிக்காட்டி ஒரு பொருளுக்கு இரண்டு விலை வைப்பது மார்கத்தில் தடை உள்ளதே என்று வினவிய போது ,இரு சாராரும் ஒப்பந்தம் செய்து கொண்டால் இப்படிப்பட்ட வியபார்த்திட்க்கு அனுமதி உள்ளது என்று சொன்னார்கள் .(அந்த ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட ஹதீஸ் ஐ இன் நிறுவனத்தில் எழுதி கண்ணாடியில் ஒட்டி வைத்துள்ளர்கலாம் என்று கேள்விப்பட்டேன், நான் கண்டதாக நினைவில்லை). நீங்கள் அறிந்த வகையில் அப்படி ஒரு ஹதீஸ் ஐ காண முடியவில்லையா ? அல்லது லஹிபானதா ?
ஜசக்கலாஹ் ஹைரன்
assalamu alaikum.
vilakkankalukku allah arul purivanaha .
(buhariyil ) kadanai thiruppik kudukkum pothu (ottahamththai) athihamaha innumoru ottahaththai kuduthhathaha varuhirathu (avvaru kodukkum pothu nam sammathaththudan athihamaha koduppathu parri thealivu paduththavum ? )
விளக்கங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவனஹா .
(புஹாரியில் ) கடனை திருப்பிக் குடுக்கும் பொது (ஓட்டஹத்தை ) அதிமாக இன்னுமொரு ஓட்டஹத்தை கொடுத்ததாக வருகிறது (அவ்வாறு கொடுக்கும் பொது நம் சம்மதத்துடன் அதிஹமஹா கொடுப்பது பற்றி தெளிவு படுத்தவும் ? ) சகோதரர் தில்மீதுக் அவர்களுக்கு நீங்கள் எழுதுவதை தமிழில் எழுதினால் மிக சிறப்பாக இருக்கும் ,உங்களுடைய english தமிழை வாசித்து விளங்கிக் கொள்ள கஷ்ட்டமாக உள்ளது ,இந்த link இல் ckick செய்து இலகுவாக தமிழில் type செய்து coppy பன்னி paste செய்யவும்.http://www.google.com/transliterate/indic/Tamil மற்றும் அந்த புஹாரி ஹதீஸ் இலக்கத்தை சொன்னீர்களேயானால் முஜ்ஹீத் மௌலவி reply பண்ணும் வரைக்கும் கொஞ்சம் தேடிப்பார்க்க உதவியாக இருக்கும் ,
ஜசக்கலாஹ் ஹைரன்
thanks for giving translate link
walaikumussalam
கடனை வாங்கியவர் திருப்பிச் செலுத்தும் போது வசதியிருந்து விருப்பத்துடன் வாங்கிய தொகையை விட கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தால் அதில் தவறு கிடையாது. ஆனால் அதிகமாகத் தரவேண்டும் என்று ஒப்பந்தமோ அல்லது எதிர்பார்ப்போ கடன் வழங்கும் போது இருக்கக் கூடாது. நீங்கள் மேற் குறிப்பிட்டு வினவிய ஹதீஸை அவ்வாறே புரிந்துகொள்ள வேண்டும். அதனை பின்வரும் செய்தி இன்னும் தெளிவுபடுத்துகிறது
صحيح البخاري (3/ 117):
2393 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِنٌّ مِنَ الإِبِلِ، فَجَاءَهُ يَتَقَاضَاهُ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوهُ» ، فَطَلَبُوا سِنَّهُ، فَلَمْ يَجِدُوا لَهُ إِلَّا سِنًّا فَوْقَهَا، فَقَالَ: «أَعْطُوهُ» ، فَقَالَ: أَوْفَيْتَنِي وَفَى اللَّهُ بِكَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً»
2393. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (தாம் கடனாக வாங்கிய) ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (ஒரு முறை) அம்மனிதர் தன் ஒட்டகத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்குக் கொடுங்கள்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். தோழர்கள் அந்த மனிதருக்குச் சேர வேண்டிய சிறு வயதுடைய ஒட்டகத்தைத் தேடினார்கள். ஆனால், அதிக வயதுடைய ஒட்டகம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள், ‘(அதையே) அவருக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘நீங்கள் எனக்கு நிறைவாக அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பானாக!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் சிறந்தவர், தான் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே” என்று கூறினார்கள்.
salam
அது என்ன ஹதீஸ் என்று தெரியவில்லை.
assalamu alaikum
jasakallahu khairan laka .
viyafarathai patri sollum pothu (MULARABA , MUSARAKA , ……………….. )ponravatrrai soullumaru kaetkinren
walaikumussalam
Insha allah
அஸ்ஸலாமு அலைகும்
கடனின் தவனை அதிகமாகவுதற்காக தொகையை அதிகரிப்பதைதான் வட்டி என்று கூறுகின்றோம்
ஆனால் ஒரு பொருளை வாங்கும் போதே அதற்கு அதிகமான விலை வைப்பது அதுவும் தவனை அடிப்படையில் அதை செலுத்தும் போது எவ்வாறு அது வட்டியாகும் காரணம் இவ்வெப்பந்தம் செய்த பின்னே அவர் கடன் பெற்றவராக மாறிவிடுகின்றார். எனவே ஒப்பந்தம் செய்த பின் அக்கடனை நிறைவு செய்யத் தவறினால் தொகையை அதிகரித்தால் அல்லது ஒப்பந்தம் செய்யும் போதே குறித்த தவனையை விட அதிகமானல் தொகையும் அதிகரிக்கும் என்று குறித்தால் அது வட்டி என்பதில் சந்தேகம் இல்லை
ஆனால் ஒருவரிடம் இருக்கும் பொருளை எவ்வளவுக்கும் விற்பதற்கு அவருக்கு அனுமதியிருக்கின்றது யாருக்கும் விலைக்கட்டுப்பாடு போட முடியாது
மற்றது ஒப்பந்தம் செய்து பொருளை வாங்கிய பின் தான் அவர் மீது அதன் பெருமதி (தவனை அடிப்படையில் கட்டும் போது) கடனாக மாறிவிடுகின்றது, எனவே கடனை செலுத்துவதற்கு கால தாமதமாகும் போது தொகையைக் கூட்டுவது தான் வட்டி
ஆனால் மேற்குறிப்பிட்ட முறையில் ஒப்பந்தம் செய்யும் போதோ கூடுதல் தொகை நிர்ணயிக்கப்படுகின்றது
மேலும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது بيعتين بيعة واحدة ஒரு ஒப்பந்தத்தில் இரு விதமான ஒப்பந்தம் செய்வது தான் அதற்கும் மேற்குறிப்பிடப்பட்ட விதமான ஒப்பந்தத்துக்கும் தொடர்பு இல்லை என்பதே என் கருத்து.
Walaikumussalam
வட்டியை ஒப்பந்தத்தின் போதே குறித்து விட்டால் தவறு இல்லை என்று சொல்ல வருகிறீர்கள். மேலே நீங்கள் எழுதிய வசனத்தை நன்கு அவதானித்துப் பாருங்கள்.
அஸ்ஸலாம் அலைகும்
மௌலவி நான் அப்படிச் செல்ல வில்லை
நான் செல்வது ஒப்பந்தம் செய்த பின் கால தாமதத்துக்காக வேண்டி தொகையைக் கூட்டினால் தான் அது வட்டி காரணம் இப்போது அந்தத் தொகை வாங்கியவர் மீது கடனாக மாறிவிட்டது
முதலிலே ஒரு தொகை நியமித்தால் அது அவர் வாங்கிய பின் தான் கடனாக மாறிவிடுகிறது
கடன் என்ற பெயரே அதன் பின் தான் ஏற்படும் போது கடனாக ஆகுவதற்கு முன் எவ்வாறு வட்டி ஏற்படலாம்?
நான் ஒப்பந்தம் செய்யும் போது வட்டியைக் குறித்தால் பரவாயில்லை என்று கூறவில்லை
சுருக்கமாக அது வட்டியே அல்ல கடன் வர முன் வட்டி வர முடியுமா?
அஸ்ஸலாமு அழைக்கும்
LOFC இல் வகனங்களை தவணை முறையில் வாங்குவது பற்றி சற்று விளக்கம் தர முடிமா?
ஜசகள்ளஹு ஹைரன்
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒப்பந்தம் செய்து தான் இன்று வட்டி வியாபாரம் நடக்கிறது. ஒப்பந்தமில்லாமல் கடன் கொடுத்தவர் கூடுதலாகக் கேட்டால் யார்தான் கொடுக்கப் போகிறார்கள்?
ஆகவே, இன்று இப்போதே கொடுத்தால் 20000, அடுத்த மாதம் கொடுத்தால் 21000, அதற்கடுத்த மாதம் கொடுத்தால் 22000 என்றால் இது வட்டியில்லாமல் வேறென்ன?
இன்று கொடுத்தாலும் 20000 தான், இன்னும் ஒரு மாதம், இரண்டு மாதம்….. கழித்துக் கொடுத்தாலு 20000 தான் என்றால் அது கடன். சரி கடனாகப் பெற்றுக் கொண்டவர் அதை அடைக்கும் போது சந்தோஷமாக கூடுதலாகக் கொடுப்பாரேயானால் அதைக் கடன் கொடுத்தவர் பெற்றுக் கொள்ளலாம். அது வட்டியல்ல! இதுதான் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துவதென்பது.
கடன் கொடுப்பவர் எப்போது தான் கொடுக்கும் தொகையை விடக் கூடுதலாகத் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்ய அழைக்கிறாரோ அந்த ஒப்பந்தத்தை கடன் பெறுபவர் ஏற்றுக் கொள்கிறாரோ அப்போது இருவரும் வட்டிக்குத்தான் ஒப்பந்தம் செய்கிறார்கள்.
இதில் முற்படுத்தி வாங்கி பிற்காலத்திற்கு விலை நிர்ணயம் செய்தல் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி சுரண்டும் வேலைதான் நடக்கிறது. சுரண்டலை எப்போதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதுவும் வட்டிக்கு இன்னுமொரு பெயரே!
வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
அஸ்ஸலாமு அழைக்கும்,
முஜஹிட் மௌலவி அவர்ஹளுக்கு
நான் நினைக்கிறன் மௌலவி முஜஹிட் அவர்ஹளுக்கு சஹோசரர் ரிப்லான் அவர்ஹல் சொன்ன பதில் விளங்கவில்லை என்று
ஏனென்றால் தவணை முறை அதிஹரிக்கும் பொது கட்டணம் அதிஹரிக்கவில்லை என்றால் எப்பெடி வட்டியாஹும்
தவணை அதிகரிக்கும்போது தொகை அதிகரிக்காதுவிட்டால் நிச்சயமாக வட்டியல். ஆனால் 1மாதத்திற் 100 2 இற்கு 200 3 மாதத்திற்கு 300 என்று ஏற்கனவே நிர்ணயம் செய்துவிட்டால் வட்டியை முன் கூட்டியே நிர்ணயம் செய்ததாகவே அமையும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
உங்களது அளப்பரிய சேவைகளுக்கு அல்லாஹ் நற்கூலியை தருவதோடு மேலும் அறிவு வளத்தையும் தருவானாக என பிரார்த்தித்து
ஒரு விடயத்தை அஸ் சேய்க் முஜாஹித் அவர்களுக்கு சொல்லவிரும்பு கின்றேன் அதாவது நன் குவைத் நாட்டில் இஸ்லாம் ப்றேசெண்டடின் committee யில் அழைபபாலனாக பணிபுரிகின்றேன் ….. விடயம் என்ன வென்றால் இங்கு உள்ள முஸ்லிம் வங்கிகள் அனைத்துமே இந்த கொடுக்கல் வாங்கல் முறையை சம்பூர்ணமாக அனுமதித்துள்ளது இந்த நாட்டவர்கள் நூறு வீதமானோர் முஸ்லிம்களாவர் அதிலும் என்பது வீதமானோர் இந்த முறைப்படியே பொருட்களை வாங்குவதில் ஈடுபட்டுள்ளனர் மேலும் அதிகளவான உலமாக்களிடம் அணுகி கேட்டால் கூட சாதரணமாக இதனை அனுமதிக்கின்றார்கள் …. ஆனால் இன்னும் தெளிவில்லாமலேயே உள்ளது ….
அஸ்ஸலாமு அழைக்கும்
முஜாஹித் மொவ்லவி அவர்ஹளுக்கு மென் மேலும் அல்லா உங்களுக்கு அறிவை மேம்படுதுவனஹா இன்றளவிலும்
வட்டிஇல்லா வந்கியமைப்பு ஒன்றினை இலங்கையல் நடைமுரயப்படுத்த வேண்டுமாயின் அது எவ்வாறு அமையவேண்டும்
இங்கு இஸ்லாமிய வங்கிகள் என்ற பெயரில் வட்டியமைப்பு முறையே காணப்படுகின்றது ஆகவே இஸ்லாமிய வங்கி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விளக்கமுடியுமா
ஜசக்கள்ளஹு ஹைரன்
wassalamu alaikum
சகோதரரே தாங்கள் கேட்பது காலமட எடுக்கும் ஓர் ஆய்வு. இன்ஷா அல்லா பல எண்ணங்களில் நீங்கள் சொன்னதும் ஒன்று
Good Explanation
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே சிரு குழந்தைகளுக்காக முன் கூட்டியே இஸ்லாமிய வங்கிகளிள் வட்டி இல்லாமல் பணம் சேர்ப்பதடற்கு மார்க்கதிள் அனுமதி உண்டா?