ஈத்தம் பழம் சாப்பிட்டுவிட்டு நஞ்சு அருந்தினால் பாதிக்காதா!!! விமரிசிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு

 
 
 

57 Comments

  1. Naswath says:

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    மாஷாஅல்லாஹ். நல்ல அருமையான விளக்கம்
    மேலும் மெளலவி அவர்களே,
    குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி அண்மைக்காலமாக சில இந்திய தமிழ் பேசும் அறிஞர்கள் மறுத்து வருகிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே.
    அப்படி முரண்படவில்லை என பல மார்க்க அறிஞர்களால் மறுப்பவர்களுக்கு எதிராக பலமுறை பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நோய் தற்போது நமது நாட்டிலும் பரவ ஆரம்பித்து விட்டது. இதற்கு ஆரம்பத்தில் மருந்து கொடுக்காவிட்டால் அதன் பாதிப்பு அதிகமாகிவிடும். இதுவரைக்கும் 52 மேற்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மறுக்கப்பட்டுள்ளன. ஆதனால் இவர்கள் மறுக்கும் அனைத்து ஹதீஸிக்கும் விளக்கங்கள் பயான் மூலமாக தருமாறு வேண்டிக் கொள்கிறேன்..

  2. Zaine says:

    மௌலவி முஜாஹித்! சில ஹதீஸ்கள் உண்மையிலேயே அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றன முரண்படவில்லை என்ற நிலைப்பாட்டில் நீங்கள் இருந்தால் அதை ஏன் மாற்றுக்கருத்திலுள்ளவர்களுடன் பேசித்தீர்க்க முடியாது. நீங்கள் முரண்படாது என்ற நிலைபாட்டில் இருந்தால் அது சம்பந்தமாக விவாதிப்பதற்கு தயாராகுங்கள் அதுதான் அறிவுபூர்வம்

    • fahim says:

      zaine….. ulaham aliyyirapo entha mari aaluhal kelambiduvanga athihamaha endu summava hathisla vanthu irukku

      • fahim says:

        பி.ஜெ ஆரம்பத்தில் சொன்ன கருத்துக்களில் பின்னர் மாற்றிக் கொண்ட சில கருத்துக்கள்……=பி.ஜெ இன்ரு சொல்ஹிர்ன்ர கருத்து நால்ய்கு மாற்றர பொஹின்ர சில கருத்துக..inshaallah அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடு இருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான்

        • hassan says:

          ////////அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த குரங்கு ஒன்றை , குரங்குகள் பல கல்லெறிந்து கொன்றதை நான் கண்டேன் , நானும் கல்லெறிந்தேன் .
          அறிவிப்பாளர் : இப்னு aamar
          ஆதாரம் : புகாரி 3849 //////.

          இந்த ஹதீசும் சஹீஹுள் புகாரியிலுள்ளதே.. ஆனால் தாங்கள் பார்த்த மாத்திரத்திலே இது மறுக்கப்பட வேண்டியதென அறிவீர்…

          மனித சட்டங்கள் மிருகங்களுக்கு பொருந்துமா?

          அறிவிப்பாளர் தான் கண்டதை ஹதீஸ் என கூறலாமா?

          அறியாமை காலத்தில் நடந்த தவறுகள் மன்னிக்கப்பட்டன என்ற கூற்றுக்கும் இந்த ஹதீஸுக்கும் முரண்பாடு உள்ளதே?

        • hassan says:

          இந்த உரையின் ஆரம்பத்தில் நீங்கள் கூர்ந்து கேட்டிருப்பீர்களானால் இவ் வாசகத்தை அவதானித்திருப்பீர்…

          குரானுக்கு அடுத்தபடியாக நக்ம்பகத்தன்மையான மூலாதாரம் என்றால் அது சஹீஹுள் புகாரி ….என்று மௌலவி குறிப்பிடுவார்…

          மாறாக குரானைப் போல நம்பத்தன்மை உடைய மூலாதாரம் சஹீஹுள் புகாரி என கூறவில்லை….

  3. Naswath says:

    @ Zaine,
    பி.ஜே. க்கு மாத்திரம்தான் ஆதாரமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாக தோன்றுகிறது. இதற்கு காரணம் அவரது அறிவில் உள்ள குறைபாடே, மக்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கப் படுத்தினால் விளங்கிக் கொள்வார்கள். எதற்காக விவாதம். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று சொல்லும் அறிவாளிகளுடன் விவாதம் செய்து வெல்ல முடியாது.
    இன்ஷாஅல்லாஹ் அசத்தியத்தை அழ்ழாஹ் அழித்தே தீருவான். சத்தியம் மாத்திரம் என்றும் நிலைத்து இருக்கும்.
    மேலதிக தகவல்களுக்கு
    ………………………….

  4. sharfudeen says:

    assalamu alaikkum
    very good speech
    hatheesai marukkum koottathirkku oru sattayadi.
    Ithe poal pj marutha ella hatheesayum patri uraiyatrauvum.
    Sathiyam vanthathu asathiyam aliyapogirathu.

  5. hassan says:

    சும்மா சொல்லக் கூடாது ..கலக்கிட்டீங்க பிரதர்…

    சிறந்த தேடல்.. பரந்த ஆய்வு…

    சாகிர் நாய்க் தோத்து…

    எனது வேண்டுகோள் ஒரு நூலாக இது தொடர்பான விடயங்களை சிறு நூலாக வெளியிட்டால் மக்கள் மத்தியில் சென்றடைய வாய்ப்பு அதிகம்…

    சிறியதொரு தர்க்க விடயம்..இதை ஏன்தான் மறுக்கிறார்களோ…

    அஜ்வா ஈத்தம் பழம் என்று குறித்து சொல்லப்பட்டுள்ளது.. அதுவும் காலை நேரம்..அதுவும் மதீனா மேட்டுப் பகுதி ஈத்தம் பழம்…எங்களுக்கு சாதகமாக எவ்வளவோ விடயங்கள்..இதுக்கு பயந்து ஹதீஸை மறுக்கிறார்களே…

    இன்னும் சொன்னால் இது நம்பிக்கை தொடர்பாக நபி சொல்லவில்லையே.. ஒரு மருத்துவராக மருத்துவ குறிப்பை சொல்லியுள்ளார்,..

    இதை எப்படி கிறிஸ்தவர்கள் எங்களுக்கு எதிராக பிரம்மாஸ்திரமாக குறிப்பிடலாம் என மறுத்துரைத்து அவர்கலியி கேளிக்குரியோராக மாற்றாமல் , இந்த ஹதீசையே மறுத்து தன்களியே கேலிக்குரியதாக மாற்றிக் கொள்கின்றனர்…

    இன்னும் சொன்னால் அவர்கள் நல்லெண்ணத்தில் தவறான முடிவுக்கு வந்தோர்….

  6. mohamed says:

    assalamu alaikkum brother naswath

    don’t be silly!

    get ready for the debate.

    • Naswath says:

      wa alaykum wasalam brother,

      debate with whom? Allah & Prophet(PBUH) or other people.have u listen above speech? again listen with open heart. this authentic hadith. Insha Allah i’m ready to debate not here, there. front of Allah, the day of judgment. don’t follow & don’t listen only one scholar before u take a decision. listen all & ask Ur question. also ask dua from Allah. he’ll clear Ur doubts. may Allah show us the right Path.

  7. naseer says:

    ஸாலிம் பால் குடித்த ஹதீத் எப்படி ஏன் அதற்கும் விளக்கம் சொல்லாமே ? விளக்கம் என்ற பெயரில் ஒவ்வொருவரும் அவர் அவர் விளக்கத்தை சொல்கிறார்கள் .

    • hassan says:

      மறுக்கப்பட வேண்டிய ஹதீசும் உள்ளது.. குரானை போல சஹீஹுள் புகாரியும் நம்பகத்தன்மை மிக்கது எனக் கருதி அனைத்துக்கும் வக்காலத்து வாங்க விரும்பினால் வலிந்துரை தான் செய்ய வேண்டியேற்படும்

      • mujahidsrilanki says:

        அறிவிப்பாளர் வரிசை சரியாகிவிட்டால் நபிகளார் சொன்னது உறுதியாகிவிடும். பின்னர் மறுக்கப்படவேண்டியவை என்று சொல்வது அறியாமை

        • hassan says:

          அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்தால் அந்த ஹதீஸ் சஹீஹானது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது… உண்மை…

          இருப்பினும் குறித்த அறிவிப்பாளர் நம்பகத்தன்மை மிக்கவர் மனனம் செய்வதில் வல்லவர் என்றெல்லாம் வஹி இறங்கவில்லையே…அது குறித்து செய்தி தெரிவிப்பதும் எல்லா பலவினமும் மிக்கதொரு மனிதரே….

          அறிவிப்பாளர் வரிசை சரியாகிவிட்டால் நபிகளார் சொன்னது உறுதியாகிவிடும் என்று சொல்வது அறியாமை…

          • mujahidsrilanki says:

            இருப்பினும் குறித்த அறிவிப்பாளர் நம்பகத்தன்மை மிக்கவர் மனனம் செய்வதில் வல்லவர் என்றெல்லாம் வஹி இறங்கவில்லையே…அது குறித்து செய்தி தெரிவிப்பதும் எல்லா பலவினமும் மிக்கதொரு மனிதரே….

            இப்படி நீங்கள் சிந்தித்ததை ஹதீஸ்கலை அறிஞர்கள் சிந்திக்கவில்லை என்று நினைப்பதும் இது பற்றி ஹதீஸ் ஆய்வு நூல்கள் கண்டுகொள்ளவில்லை என நினைப்பதும்தான் அறியாமை. சகோதரரே நீங்கள் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் என்ன சந்தேகங்களெல்லாம் உண்டாகும். நம்பகமானவர்களின் தவறுகளை எவ்வாறு அளப்பது அதைக் கண்டுபிடிக்கும் வழிகள் என்ன? என்றெல்லாம் ஒருவர் சிந்திப்பதை விட அதையெல்லாம் தாண்டி ஹதீஸ்கலை அறிஞர் அல்ல அறிஞர்கள் கேள்வி எழுப்பி பதில் அளித்துத்தான் இந்த ஹதீஸ்கலை விதி உருவாகியிருக்கிறது. நீங்கள் கேட்டது போன்று பல கேள்விகள் அள்ள வீசிவிட்டுப் போகலாம் அதை விதிப்படுத்துவதும் நடைமுறைப்படுத்துவதுமே உஸூலுல் ஹதீஸ். இதனால் கேள்வி எழுப்ப முன்னால் அந்தத் துறை பற்றிப்படிக்க வேண்டும். அல்லது தெரிந்துகொள்ளக் கேட்பது போன்று கேட்க வேண்டும்..ஹதீஸகலை விதிகளை படித்ததும் இல்லை. அதைத் தெரிந்துகொள்ள கேள்விகேட்டதும் இல்லை. புதிதாக நான் சிந்திக்கிறேன் என்பதுபோன்ற தோரணையில் விமரிசிப்பது அவரை அளக்கப் போதுமானது. புரிந்து கொள்ள இது உங்களுக்குப் போதும் என்று நினைக்கிறேன்.

          • hassan says:

            நாரதர் கலகம் நன்மையில் முடியும்…

            அனைத்தும் அறிந்தவன் போல் விமர்சித்தால்தான் அதற்க்கு தக்க பதிலடி விமர்சனம் தருவீர் என நினைத்தேன்..

            அல்ஹம்துலில்லாஹ்…அருமையான விளக்கம்..

            மூசா நபி தொடர்பாக மறுக்கப்படும் ஹதீசுக்கு தாங்கள் சிந்தித்த கோணம் என்னை மலைக்கச் செய்தது…

            மறுக்கப்படும் சஹீகாண ஹதீஸ் தொடர்பாக என்னை புதியதொரு கோணத்தில் சிந்திக்க வைத்துள்ளீர்கள்…

            அதிகப் பிரசங்கித்தனமாக பேசினால்தான் அதிகமாக விளக்கம் கிடைக்கும் என்ற எனது pshycology தங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்…

            நான் இன்னும் கத்துக்குட்டி …என்றுதான் நான் நினைத்திருந்தேன்,.. மூஸா நபி தொடர்பாக மறுக்கப்படும் ஹதீசுக்கு தங்கள் மறுப்பு ஒரு கணம் பீ ஜே கூட ஹதீஸ் கலையில் கத்துக் குட்டிதானோ என எண்ணத் தோன்றுகிறது…

            இன்ஷா அல்லா மறுக்கப்பட்டு வரும் இன்னும் பல ஹதீஸ் தொடர்பான மறுப்பு விளக்கத்தை எதிர்பார்த்தவனாக….

        • hassan says:

          அறிவிப்பாளர் வரிசை சரியாகவிருந்தும் குராநிட்கு அந்த ஹதீஸ் முரணாக இருந்தால் அந்த ஹதீஸை நபிகளார் சொன்னதல்ல , எங்கோ தவறு நேர்ந்துள்ளது என நம்புவதே அறிவுடைமை….

          • hassan says:

            உதாரணத்திற்கு புகாரி 1339 மூசா (அலை) மலைக்குள் மவுத்தை தாக்கியதாக வரும் ஹதீஸ்…

            அந்த ஹதீஸை தெளிவாக படித்தால் விடயம் தெளிவாகும்…இந்த ஹதீஸ் பல குரான் வசனங்களுக்கு முரண்படுவதால் நபி அவர்கள் இதை கூரியிருப்பார்கலேன நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது…

            மூஸா நபியின் உயிரைக் கைப்பற்றுவதற்குரிய நேரம் வந்த போதும் மூஸா (அலை) அவர்கள் ஒத்துக் கொள்ளாததால் அல்லாஹ் மூஸா நபிக்கு ஆயுளை நீட்டிக் கொடுத்தான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் அல்லாஹ் ஏற்படுத்திய காலக்கெடு வந்துவிட்டால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உடனே உயிர்கள் கைப்பற்றப்பட்டு விடும் என்று குர்ஆன் கூறுகிறது.

            அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்அல்குர்ஆன் (10 : 49)

            அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்அல்குர்ஆன் (63 : 11)

            அடுத்து…. அல்லாஹ் ஒன்றை தீர்ப்பளித்து விட்டால் அதை ஏற்றுக் கொள்வது ஒரு முஃமினின் மீது கடமை. இறைவன் அளித்த தீர்பபை நிராகரித்ததோடு அத்தீர்ப்பைக் கொண்டு வந்த தூதரையும் தாக்குவது இறைத் தூதரின் பண்பாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல் இறை நிராகரிப்பில் தள்ளிவிடும்….

          • mujahidsrilanki says:

            18:80 وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا
            18:80. “(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
            18:81 فَأَرَدْنَا أَن يُبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا
            18:81. “இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.

            2:259 أَوْ كَالَّذِي مَرَّ عَلَىٰ قَرْيَةٍ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْيِي هَٰذِهِ اللَّهُ بَعْدَ مَوْتِهَا ۖ فَأَمَاتَهُ اللَّهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُ ۖ قَالَ كَمْ لَبِثْتَ ۖ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۖ قَالَ بَل لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ ۖ وَانظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ آيَةً لِّلنَّاسِ ۖ وَانظُرْ إِلَى الْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُ قَالَ أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
            2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் – (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.

            இந்த வசனங்களை நீண்ட நேரம் சிந்தியுங்கள் உங்கள் இதயத்தை சில வேளை இறைவன் திறக்கலாம்

          • hassan says:

            மூஸா (அலை) அவர்கள் இந்த தாக்குதலை நிகழத்திய பிறகு அல்லாஹ் தனது முடிவை மாற்றிக் கொண்டு அவகாசம் அளித்தான் என்று முற்றிலும் இறைத் தன்மைக்கு மாற்றமான கருத்தை இந்த ஹதீஸ் சொல்கிறது. இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் பொருந்தாத தன்மைகள் இருப்பதாக இந்த ஹதீஸ் சொல்வதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது….

            மூஸா (அலை) அவர்கள் மரணத்தை விரும்பாதவராக இருந்தார் என வானவர் அல்லாஹ்விடம் கூறியுள்ளார். மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஆயுளை நீட்டித் தந்த போது அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்று மூஸா கேட்கிறார். இதற்குப் பிறகு மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் இப்பவே எனது உயிரை எடுத்துக் கொள் என்று மூஸா கூறுகிறார்.

            மரணமே இல்லாத வாழ்க்கையை எனக்குக் கொடுப்பதாக இருந்தால் கொடு. எப்படியும் நான் மரணித்தாக வேண்டும் என்று நினைத்தால் இந்த அவகாசம் எனக்கு வேண்டியதில்லை. இப்பவே உயிரை எடுத்துக்கொள் என்ற கருத்தில் மூஸா கூறியுள்ளார். இந்த வாக்கியங்கள் மூஸா (அலை) அவர்கள் கடுமையாக மரணத்தை வெறுத்தார்கள் என்று கூறுகிறது

            மரணிக்கவே கூடாது என்று பேராசைப்படுவது நிச்சயமாக இறைத் தூதரான மூஸா (அலை) அவர்களின் குணமாக இருக்க முடியாது. மாறாக யூதர்கள் இவ்வாறு விரும்பியதாகக் குர்ஆன் கூறுகிறது

          • mujahidsrilanki says:

            மரணிக்கவே கூடாது என்று பேராசைப்படுவது நிச்சயமாக இறைத் தூதரான மூஸா (அலை) அவர்களின் குணமாக இருக்க முடியாது. மாறாக யூதர்கள் இவ்வாறு விரும்பியதாகக் குர்ஆன் கூறுகிறது

            20:120 فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلَىٰ
            20:120. ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
            20:121 فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ ۚ وَعَصَىٰ آدَمُ رَبَّهُ فَغَوَىٰ
            20:121. பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.

            இந்த வசனங்களை நீண்ட நேரம் சிந்தியுங்கள் உங்கள் இதயத்தை சில வேளை இறைவன் திறக்கலாம்

          • hassan says:

            ஒரு வானவர் அலாஹ்வின் கட்டளையை கேள்வி கேட்காமல் தயங்காமல் எவரது ஆலோசனைக்கும் அடிபணியாமல் நிறைவேற்றுவார் என ஈமான் கொள்கிறோம்…

            இப்படியிருக்க அல்லாஹ் சொல்லியிருக்கிறான் மூசா நபியின் உயிரை கைப்பற்றி வா என கட்டளை இட்டிருக்க வானவர் மூஸா நபியின் மறுப்புக்கு ஏன் அடிபணிய வேண்டும்…

            நபி வானவரை தாக்கலாமா …

            உயிரை கைப்பற்றி வா என கட்டளைய்டப்பட்டதும் மறு பேச்சில்லாமல் கையிப்பற்றி வருவதுதானே வானவரின் பணி…

            இந்த ஹதீஸ் நபியின் கண்ணியத்திற்கும் வானவரை ஈமான் கொள்ள வேண்டிய விதத்திற்கும் முரணாக இருக்கிறதா?

          • mujahidsrilanki says:

            மலக்கு இறைவன் சொன்னதற்கு மாறு செய்ததாக இந்த ஹதீஸில் எங்காவது இருக்கிறதா?

            நபி வானவரை தாக்க முடியாது என்று எங்காவது இருக்கிறதா?

          • hassan says:

            மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப்படுவது வேதனையிலிருந்து அவரைத் தடுக்கக் கூடியதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்அல்குர்ஆன் (2 : 96)

          • fawzan says:

            ஏன் இல்லையா? முதல் தடவை உயிர் எடுக்கும் போது மூஸா (அலை) அவர்களுக்கு பயந்து போனது போலல்லவா இருக்கிறது? கட்டு கதையான இஸ்ராயில் மலைக்கும் அவ்வாறுதானே கட்ட பட்டது? ஜிப்ரீல் மாலிக் (அலை) ஆகியோர் எவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை நிறை வேற்றாமல் திரும்பினார்களோ அது போலல்லவா இந்த செய்தியும் அமைந்திருக்கிறது ?

          • hassan says:

            அற்பமான இந்த உலக வாழ்க்கையை விட மறுமையின் வாழ்வே உண்ணதமானது என்று நன்கு உணர்ந்தவர்கள் நபிமார்கள். அல்லாஹ்விடத்தில் மாபெரும் சிறப்பைப் பெற்றிருந்த மூஸா நபிக்காக பல இன்பங்களை அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கும் போது இதை அனுபவிப்பதை விட்டுவிட்டு அற்பமான இந்த உலகத்தில் வாழ்வதை மூஸா (அலை) அவர்கள் தேர்வு செய்திருக்க மாட்டார்கள்

          • hassan says:

            அல்லாஹ்வின் தூதர்களை இழிவுபடுத்துகின்ற வேலைகளை ஃபிர்அவ்ன் அபூ ஜஹ்ல் ஷைபா உத்பா போன்ற கொடியவர்கள் தான் செய்தார்கள். அத்தூதர்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் கொண்டு வந்த அல்லாஹ்வின் கட்டளைகளைத் தூக்கிவீசினார்கள். தூதர்களைக் கொடுமைப்படுத்தினார்கள்.

            உறுதி மிக்க தூதர் என்று இறைவனால் சிலாகித்துச் சொல்லப்படும் மூஸா (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதுவரான வானவரை இழிபடுத்தி அவர் கொண்டு வந்த கட்டளையைத் தூக்கி வீசினார் என்று சொன்னால் ஃபிர்அவ்னிற்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகிவிடும். பொறுமையின் சிகரமாய்த் திகழ்ந்த மூஸா (அலை) அவர்கள் ஒரு போதும் ஃபிர்அவ்ன் செய்த காரியத்தைச் செய்திருக்க மாட்டார்கள்

          • hassan says:

            ஈத்தம்பலம் தொடர்பாக மறுக்கப்படும் ஹதீசுக்கு thangal maruppu அருமையானது.. அல்ஹம்துலில்லாஹ்..

            அதற்காக குராணிற்கு muranpattaalum அறிவிப்ப்பாளர் வரிசை சரியாகவிருந்தால் போதும் வலிந்துரை செய்வோம் என்பதை நான் ஒரு போதும் ஏற்கமாட்டேன்

          • hassan says:

            ஆகா .. நான் என் இப்படி சிந்திக்கவில்லை.. …

            ஒரு படிப்பினைக்காக சில மாறுதல்கள் நடந்திருக்கலாம் …

            i accept your view..brother…

  8. JAABIR says:

    ASSALAMUALAIKUM THOUHEED YENDRA PEYARIL KADIYAANI KOLGAYAIYUM MUTHASILA KOLGAYAYUM PARAPPUM P.J. KUMBALUKKU SARIYANA PADIL

    • hassan says:

      காதியானி கொள்கையை பரப்புறாங்களா? …

      அறிந்துதான் பேசுகிறீர்களா…

      காதியானிகளுடன் விவாதம் செய்து மண் கவ்வச் செய்த இயக்கம் ….

      ………………………….(moderated by mujahidsrilanki)

  9. abdul azeez says:

    ஸலாம். முஜாஹித் மவ்லவி அவர்களே உங்கள் பயானை நானும் பார்த்தேன். அல்குர்ஆனுக்கு முரன்பட்டால் அந்த செய்தியை எடுக்கக் கூடாது என்ற ததஜ வின் நிலைபாட்டிற்கு மாற்றமாக நீங்கள் இருக்கிறீர்கள்.

    இந்தக் கருத்தை நீங்கள் ஆரம்பத்தில் வெளியிட்ட நேரத்திலேயே இலங்கையைச் சேர்ந்த ரஸ்மின் மவ்லவி உங்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் மூலம் சில கேள்விகளை முன் வைத்திருந்தார்.

    அதனை அவருடைய தளத்திலும் “சகோதரர் முஜாஹித் அவர்களுக்கு ஓர் மனந்திறந்த மடல்.“ என்ற தலைப்பில் ………………………. என்ற லிங்கில் பதிந்துள்ளார்.

    நான் அறிந்த வரை நீங்கள் இன்னும் அந்த கடிதத்திற்கு பதில் அனுப்ப வில்லை. உங்கள் கருத்தில் உறுதி இருந்தால் அந்தக் கடிதத்திற்கு பதில் தாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக!

    தயவு செய்து கருத்தை நீக்கி விடாதீர்கள்.

    • mujahidsrilanki says:

      salam

      குர்ஆனுக்கு முரண்படுவதுபோல் இருந்தால் அறிவிப்பாளர் வரிசையால் நிரூபிக்கப்பட்ட செய்திகளை நிராகரிக்க வேண்டும் என்ற செய்தியை தமிழுலகத் தவ்ஹீத்வாதிகளுக்கு மத்தியில் சொன்னவர் மௌலவி பீஜே. அடுத்து இந்த இந்த ஹதீஸ்கள் முரண்படுகின்றன என ஒவ்வொன்றாகச் சொல்லி வருபவரும் மௌலவி பீஜேதான். அவருக்கு முரண்படுவதாகத் தெரிந்ததன் பின்னால்தான் மற்றவர்களுக்கு முரண்படுவதாகத் தெரிகிறது. ஒரு ஹதீஸாவது அவரது சக உலமாக்களுக்கு முரண்படுவதாகத் தெரிந்த பின்னர் அவருக்குத் தெரிய வருவதில்லை. எனவே இதில் மௌலவி பீஜே அவர்களுடன்தான் முரண்படுகிறேன். உதாரணமாகச் சொல்வதென்றால்: நீங்கள் குறிப்பிட்ட கடிதத்தில் அஜ்வா ஈச்சம் பழ ஹதீஸை ஸஹீஹ் எனும் தோரணையில் பதில் எழுதியிருந்தார். ஆனால் இப்பொழுது அவர் அதைக் நிதர்சன உண்மைக்கு முரண்படும் ஹதீஸ்களில் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார் காரணம் மௌலவி பீஜே அவர்கள் அதை முரண்படுகிறது என்று சொல்லிவிட்டார். அன்று நான் பதில் எழுதிதியிருந்தால் அது நேரத்தை வீணடிப்பதாகவே இருந்திருக்கம். எனவே நாங்கள் மௌலவி பீஜே அவர்களடைய கருத்துக்குளுக்கும் அவர் பரிந்துரைத்தவர்களின் கருத்துக்களுக்கும் பதில் சொல்வதே வலுவாக இருக்கும். மற்றவர்களுக்கு பதில் சொல்வது அவருக்கம் எனக்கம் .டையில் ஒரு கருத்துப் பரிமாற்றமாக இருக்குமே தவிர வேறில்லை.

  10. Ansar says:

    அஜ்வா பழம் ஹதீஸ் சரியானதா?
    ……………………….

    • mujahidsrilanki says:

      நீங்கள் குறிப்பிட்ட லின்கை பார்த்துவிட்டேன். நீங்களே பாருங்கள். நமது வாதங்களில் ஒன்றுக்காவது அவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்களா!!!

  11. Thajudeen says:

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    மாஷா அல்லாஹ்.. மிக அருமையான தொளிவான விளக்கம்..

    நம்முடைய சுயலாபத்திற்காக ஆதாரப்பூர்வமான ஹதீஸைகளை ஒதுக்கும் மனோநிலையிலிருந்து அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றுவானாக.

    உங்கள் மார்க்க சேவை குர் ஆன் ஹதீஸ் வழியில் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்தனை செய்கிறோம்.

    அன்புடன்

    தாஜுதீன்

  12. hassan says:

    குரானுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கப்பட வேண்டும் என்பது ஹதீஸ் கலையில் இருந்த ஒரு இலக்கனம்தானே?

    சஹீகாண ஹதீஸ்கள் ஒருபோதும் குரானுக்கு முரன்படாதா?

    • முஹம்மது றாஃபிக் says:

      அஸ்ஸலாமு அலைக்கும்…… சகோ. hassan… குரானுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கப்பட வேண்டும் என்பது ஹதீஸ் கலையில் இருந்த ஒரு இலக்கனம் என்று யார் சொன்னது….? ஒரு ஹதீத் ஸஹீஹானதாக இருப்பதற்கான நிபந்தனைகளுக்கு உட்படுகின்ற போது, அது ஒருக்காலும் அல் குரானுக்கு முரண்படாது என்பதுதான் இமாம்களுடைய கூற்று…. இது ஸஹீஹான ஹதீதை தீர்மானிப்பதற்கான தனியான நிபந்தனை ஒன்று அல்ல….

  13. அபூ பௌஸீமா says:

    அஸ்ஸலாமு அலைக்கும்

    பயானும் கருத்துக்களும் அபாரம்! ஆனால், ஒன்று தெளிவாக மனிதனின் மனதில் பதிய வேண்டும். குர் ஆனில் அதன் ஆதாரபூர்வதன்மையில் கருத்து வேறுபாடில்லை. அது தெளிவாக முஸ்லிம்களுக்குக் கிடைத்தது போலவே முழு மனித சமூகத்திற்கும் பாதுகாக்கப்பட்ட வேதமாக இருக்கிறது. ஹதீஸ்களில் அவ்வாறான நம்பகத்தன்மை கிடையாது. அவற்றைத் தொகுத்தளித்த எந்த ஓர் அறிஞரும் அல்லாஹ்வோடு தொடர்பு கொண்டவர்களாக இருக்க வில்லை. ஹதீஸ்களின் தொகுப்புக்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் நடந்தவை, அவர்கள் கூறியவை, அவர்கள் அங்கீகரித்தைவை மட்டுமல்ல வரலாற்று நிகழ்வுகளைக் கூட தொகுத்திருக்கிறார்கள்.

    அறிவித்தவர்கள் நம்பகமானவர்கள் என்பதற்காக, அறிவித்த செய்திகளெல்லாம் மார்க்கம் என்று சொல்ல முடியாது. மார்க்கம் என்பது வஹீ மட்டுமே! இதைச் சரியாகச் சிந்தித்தி விளங்கிக் கொண்டால் குழப்பம் இல்லை.

    இன்று நம் மத்தியில் இருக்கக்கூடிய அறிஞர்கள் குர் ஆனுக்கு -அதில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய ஒரு வசனத்திற்கு – மாற்றுக் கருத்துக்களைக் கொடுப்பவர்களைப் பார்க்கிறோம். எல்லாவற்றுக்கும் விவாதம் விவாதம் என்று போனால் அதற்கு முடிவே இருக்காது.

    அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆளுமைக்கு (Character) பங்கம் விளைவிக்கக் கூடிய செய்திகள் எங்கிருந்து வந்தாலும் அதை அவர்களோடு தொடர்பு படுத்திப் பேசுவதிலிருந்து ஒவ்வொருவரும் தம்மைக் காத்துக் கொள்வதுதான் அவர்களை நேசிப்பதாகும்.
    வஸ்ஸலாம்

    • mujahidsrilanki says:

      walaikumussalam

      குர்ஆனைத் தொகுத்தவர்களும் இறைவனோடு தொடர்புகொண்டவர்களல்ல

      • hassan says:

        குரானை பொறுத்த வரை நபிகளார் உயிரோடிருக்கும் போதே ஓசை வடிவில் பல சஹாபிகளின் உள்ளங்களில் தொகுக்கப்பட்டிருந்தது…

        உமர் ரலி காலத்தில் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டது..உஸ்மான் ரலி காலத்தில் பல பிரதிகளாக பரிமாற்றப்பட்டது ..

        பல ஆண்டுகளுக்கு பின்னால் தொகுக்கப்பட்ட ஹதீஸ் கிரந்தம் குரான் தொகுப்புக்கும் பாரிய கால இடைவெளி உள்ளது…தொகுத்தோர் சஹாபிகளும் அல்ல ….இன்னும் குரானை பாதுகாப்பது போல் நபி வழியை பாதுகாப்போம் என இறைவன் எங்கும் வாக்களிக்கவில்லை

        ஓசை வடிவில் இருந்த குரானே புத்தகமாக தொகுக்கப்பட்டது ..ஓசை வடிவில் தொகுக்க சாட்சி நபிகளார்…ஆக புத்தகமா தொகுக்க மூலமாக இருந்த நபிகளார் இறைவனோடு தொடர்புள்ளவர்…

        ஹதீஸ் ஓசை வடிவில் பேணப்படவில்லை..அதற்க்கு நபிகளார் சாட்சியுமில்லை…

        • mujahidsrilanki says:

          குரானை பொறுத்த வரை நபிகளார் உயிரோடிருக்கும் போதே ஓசை வடிவில் பல சஹாபிகளின் உள்ளங்களில் தொகுக்கப்பட்டிருந்தது…உமர் ரலி காலத்தில் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டது..உஸ்மான் ரலி காலத்தில் பல பிரதிகளாக பரிமாற்றப்பட்டது ..

          இதற்கு என்ன ஆதாரம்?

          இன்னும் குரானை பாதுகாப்பது போல் நபி வழியை பாதுகாப்போம் என இறைவன் எங்கும் வாக்களிக்கவில்லை

          குர்ஆனை நாம் பாதுகாப்போம் என இறைவன் எங்கே கூறியிருக்கிறான்?

          நபிகளார் இறைவனோடு தொடர்புள்ளவர்…

          ஹதீஸ்களுக்கும் பொருந்தாதா?

          ஹதீஸ் ஓசை வடிவில் பேணப்படவில்லை

          ஹதீஸ்கள் தொகுக்ககப்பட்ட முறைமை பற்றிய அறியாமை

          • hassan says:

            ஓசை வடிவில் பேனப்பட்டாளும் atharkku நபிகளார் சாட்சியாகவில்லை , ஜிப்ரில் சரிபார்க்க்கவுமில்லை

          • mujahidsrilanki says:

            ஜிப்ரீல் குர்ஆனை சரிபார்த்ததற்கு ஆதாரம் குர்ஆனில் உண்டா?

        • hassan says:

          i got ur point… குற்றவாளியே சாட்சி சொல்ற கதையாகி போச்சி… ஹதீஸ்களின் நம்பகத்தன்மையை மறுக்கும் போது ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்ட முடியாதுதான்..

  14. zhran says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    இந்த லிங்குக்கு பதில் கிடைக்குமா?
    ………………………………………

    • mujahidsrilanki says:

      walaikumussalam

      சகோதரர் அவர்களே ஆன்லைன் ஸின்கீஸ்கானில் சகோதரர் அப்பாஸ் அலியின் வீடியோ பதிலிற்கான மறுப்பு வெளியாகியது. அதில் சொல்லப்பட்ட வாதங்களுக்கே இங்கே பதில் சொல்லப்பட்டுள்ளது. அப்பாஸ் அலீயின் வீடியோவிலோ அல்லது இந்த மறுப்பிலோ எனது எந்த வாதத்திற்கும் பதில் இல்லை. எனது நிலைப்பாட்டை நீங்கள் முழுமையாக வீடியோவில் பார்த்தால் உங்களுக்கு இது விளங்கலாம்

  15. Mohamed Abbas says:

    மேலும் அல்லாவும், அவனுடைய தூதரும் ஒரு காரியதை பற்றி கட்டளையிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமை இல்லை, ஆகவே அல்லாவுக்கும் அவனுடைய ரஸீலுக்கும் மாறு செய்தால் நிச்சியமாக அவர்கள் பகிரங்க வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்(33:36)

    அவர்(நபி(ஸல்)) தம் இச்சைபடி எதையும் பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட்தேயன்றி வேறில்லை.மிக்க வல்லமுடையவர் ஜிப்ரில்(அலை) அவர்களிக்கு கற்று கொடுத்தார்கள்(53:3,4,5)

    மேலும் (நபியுடைய) இதயம் கண்டதை பற்றி பொய்யுரைக்கவில்லை ஆயினும் அவர் கண்டவற்றின் மீது நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?(53:11,12).

  16. iqbal says:

    அஜ்வா பழ ஹதீஸை ஏற்றால் சூனியத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டி வருமே என நபி ஸல் அவர்கள் கூறிய ஒரு செய்தியை பீஜே மறுக்கிறார்.
    பீஜே அவர்கள் குர்ஆனாவது ஹதீஸாவது நாம சொல்றது தாம்மா சட்டம் என்கிறார். அவரின் ஈமான் பறிபோய்க்கொண்டிருக்கிறது என்பதை அவர் உணராமல் இருக்கிறார்.

  17. sameen illyas says:

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு இம்மின் அஞ்சல் தங்களை பூரண உடல் நலத்துடனும் மிகுந்த இஸ்லாமிய உற்சாகத்துடனும் சந்திக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன். நான் தங்களின் பயானை இணைய தளம் வழியாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். மன்ஹஜ் சலப் குறித்து தங்களின் கருத்து என்ன ? இது குறித்து ஒரு தலைப்பில் உரை நிகழ்த்தலாமே ?

    • jaabir says:

      1988 il kaadiyanigaludan vivada oppandam sambandamaaga nadantha kaditha parimaatrathil kadiyaanigal saheehana hadees quranukku muran pattal yerkka maattom yendru yeludi erundanar adarkku padil yeludiya p.j. awargai saheehana hadees oru podum quranodu muran padathu 100 wasanangalai kondu muran padavilli yenbadai nirubippen yendru yeludi erundar aadaram kaadiyaanigalin kallarai payanam. endru adey kaadiyaanikolgayai p.j. awargal yetru kondullar.

  18. jaabir says:

    quran hadees erandum paadugakkapttadu maarkathin moola aadarangal erandu yendral erandum padugakka pattuladu yendra nambikkai moomingalidam erukka weyndum ellai yendral oruwarukku muranpadum hadis ennoruwarukku muran padathu eppadiyana nilai maarkkathai keli koothakki vidum endru t.n.t.j. yil p.j.ku muranpaduwadu srilankawil ulla warukku muranpadavillai edu quran hadeesil ulla muran pada alladu ewargalin sindanayil muranpada makkaley sindithu t.n.t.j. in walikettilirundu emaanai paadugathu kollungal

  19. jaabir says:

    manzilathu sunna yendra shaik albani rahimhulla awargalin kithabai padithal hadeesai patriya adppadai theriyum saheehana hadis quranodu muranpadathu yenbadu vilangum owvoru hadeesukkum vilakkam kodukka awasiyam ellai wazhi ketta sindanai wandu vittal adai allah than neekka mudiyum yenna vilakkam koduthalum awargalin ullam yerkaadu

  20. மௌலவி முஜாஹித் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
    இஸ்லாமிய பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் முன்வைக்கும் ஒருவர், மார்க்கத்தில் ஒரு விடையம் தொடர்பாக ஒருவருடைய நிலைப்பாட்டை விமர்சித்து அவருடைய நிலைப்பாடு பிழையானது, இதுதான் சரியான நிலைப்பாடு என பிரச்சாரம் செய்யும் போது மாற்றுக் கருத்துள்ளவர்கள் வைக்கும் எல்லா ஆதாரங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். அது மட்டுமல்லாது மாற்றுக் கருத்துள்ளவரின் நிலைப்பாட்டை தெளிவாக அவருடைய ஆக்கங்கள் மூலமோ அல்லது பேச்சுக்கள் மூலமோ அறிந்து விமர்சிக்க வேண்டும். அது யாராக இருப்பினும் சரியே! இதுவே நாகரீகமான தஹ்வா அணுகுமுறையாகும்.

    தங்களுடைய விமர்சனத்தில் நான் மேற்குறிப்பிட்ட இரண்டு விடையங்களில் இரண்டாவதை பின்பற்றிநீர்களோ என்னவோ முதலாவதை நீங்கள் பின்பற்றவில்லை என்பதே கவலைக்குரிய விடையமாகும். அடுத்தது இந்த ஹதீஸை நீங்கள் ஒரு முஸ்லிமாக மட்டும் இருந்து கொண்டு பார்க்கக் கூடாது ஒரு முஸ்லிமல்லாதவனின் நிலையில் இருந்தும் கவனிக்க வேண்டும். அத்தோடு குர்ஆணுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என ஹதீஸ் கலையில் ஒரு விதி உள்ளது. சஹீகான ஹதீஸ்கள் குர்ஆணுக்கு முரண்படாது, புஹாரியில் தவறு இருக்காது என நீங்கள் கூறினால். ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதி தேவையில்லையே நம்பகத் தன்மையில் புஹாரி 2 ம் இடம் என்பதை மறவாதீர்கள். இன்னும் நீங்கள் சகோதரர் PJ அவர்கள் எந்த எந்த ஹதீஸ்கள் குர்ஆணுக்கு முரண்படுவதாக கூறுகிறாரோ அத்தனை ஹதீஸுக்கும் குர்ஆணுக்கு முரண்படாத வகையில் நீங்கள் விளக்கம் சொல்ல வேண்டும் , அதை எவ்வாறு நடைமிரைப் படுத்துவது எனவும் நீங்கள் கூற வேண்டும்.

    ஏற்கனவே குர்ஆணுக்கு முரண்படுவதாக PJ கூறும் ஹதீஸ்களுக்கு விளக்கம் கூற முனைந்தவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு விளக்கத்தை பரப்பி வருகின்றனர். சத்தியம் ஒன்றுதான் இருக்க முடியும் இப்படி ஆளுக்கொன்று இருக்காது . வேண்டுமென்றே ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுவதாக கூறி ஹதீஸ்களை மறுக்க வேண்டிய அவசியம் சகோதரர் PJ அவர்களுக்கு கிடையாது. குர்ஆணுக்கு முரண்படாத வகையில் விளக்கம் கொடுக்க முடியாத பொது தான் அவற்றை அவர் மறுக்கிறார்.

  21. முஹம்மது றாஃபிக் says:

    மாஸா அல்லாஹ்…. மிகச் சிறப்பான விளக்கம். அக்கரைபற்று அன்சார் மவ்லவியின் விளகத்தோடு தங்களின் விளக்கம் ஒத்துப் போகிறது…. அதே வேளை SLTJ அன்சார் மவ்லவியை அழைத்திருக்கும் விவாதத்தில் அன்சார் மவ்லவி சார்பாக தாங்களும் கலந்து கொள்ளும் எண்ணம் ஏதாவது உள்ளதா…. அல்லது அன்சார் மவ்லவிக்கும் உங்களுக்கும் இடையில் வேறு ஏதாவது முரண்பாடுகள் உள்ளனவா….?

    Muhammed Raafik

  22. mohammed rifan says:

    அஸ்ஸலாமு அழைக்கும். இந்த லிங்குக்கு உங்களின் பதில் என்ன?

    …………………………………..

 
 

Leave a Comment

 




 
 

 
 
 

L
i
k
e

u
s

O
n

F
a
c
e
b
o
o
k