தவ்ஹீத் பிரச்சாரமும் ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்களது தஃவாக்கள நிலையும்-3

Post by mujahidsrilanki 12 November 2011 கட்டுரைகள், விமரிசனங்கள்

ஆட்சி பேசும் இயக்கங்களது தஃவாக்கள நிலைகள்:

1-அரபு நாடுகளை விமரிசிப்பதையும் ஈரானைப் பாராட்டுவதையும்  கொள்கையாக்கிக் கொண்டமை.

 இவர்கள் சவூதியை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். தவ்ஹீதை தனது ஆட்சிக் கொள்கையாகக் கொண்டமைக்குத்தான் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் சர்வதேச அளவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இழப்புகளைச் சந்திக்கின்றார்களோ அங்கெல்லாம் சென்று அவர்களுக்கு உதவுவதெல்லாம் அதே சவூதிதான். இந்தோனேசியாவில் சுமார் ஐந்து இலட்சம் முஸ்லிமகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியபோது அங்கு சென்று தக்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் அந்த நாடுதான். சர்வதேச நிவாரண அமைப்பு என்ற நிருவனத்தின் தலைமை நிருவனமான ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமி சவூதியில்தான் உள்ளது.

ஏதோ சர்வதேச முஸ்லிம்கள் பற்றி தமக்குத்தான் கவலையுள்ளது என்று பிதற்றிக் கொள்ளும் இவர்கள் செய்வதெல்லாம் பலஸ்தீனையும், கஷ்மீரையும், செச்னியாவையும் வைத்து இசையுடன் கலந்த பாடல்கள் வெளியிடுவதும், கவிதை எழுதுவதும்தான். இதனால் இவர்களுக்கு நல்ல வருவாய்தான் ஏற்பட்டதே தவிர வேறொன்றும் விளைந்ததில்லை. இந்தப்பாடல்களாலும், கவிதைகளாலும் உணர்வு பெற்ற யாராவது பலஸ்தீனுக்குச் சென்று போராடியுள்ளாரா? ஆனால் இவர்கள் விமரிசிக்கும் சவூதியிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இது போன்ற நாடுகளுக்குச் சென்று போர் புரிந்து கொல்லப்படுகின்றார்கள். அது போல மற்றைய அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு போராடுகின்றார்கள். இப்போராட்டங்கள் பற்றிய ஆவணங்களைப் பார்;த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். இலங்கையிலிருந்து ஒருவர் கூட இவ்வாறு போராடுவதற்காக பலஸ்தீனுக்கோ, கஷ்மீருக்கோ அல்லது வேறெந்த முஸ்லிம் நாட்டுக்கோ செல்லவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈரானின் ‘கும் நகரம்’ வரை போகும் இவர்களுக்கு ஏன் பலஸ்தீனுக்குப் போகமுடியாது. எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள்தான். இவைகளைப் பார்ப்பதால், படிப்பதால் உணர்வுகள் தூண்டப்படலாமே தவிர வேறெதுவும் ஏற்படப் போவதில்லை. உணர்வுகளைத் தட்டியெழுப்பும் வகையில் நாமும் பேசுகிறோம். எழுதுகிறோம். அப்படியாயின் எங்களை  விட மேலதிகமாக இவர்கள் செய்துள்ளது சீடி வெளியிட்டதும், சஞ்சிகைகளில் சில பக்கங்களை ஒதுக்கியதும்தான். பலஸ்தீனுக்காகப் பேசும் இவர்கள் மீது அரசாங்கத்தின் சந்தேகப்பார்வை விழும் போது ‘நாமும் அரசுடன்தான் உள்ளோம்’ என்று அரசையும் சமாளித்துக் கொள்கிறார்கள்.

2-மேற்கத்தேய மோகம்

‘மேற்கத்தேயத்தை நாம் வண்மையாக எதிர்க்கின்றோம்’ என்று பரவலாக இவர்கள் பேசுவதையும், எழுதுவதையும் காணலாம். ஆனால் இதைச் சொல்லும் இவர்களின் இலட்சணத்தைப் பார்த்தால் முகத்தில் தாடியில்லை. சுத்தமாய் முகச்சவரம் செய்திருப்பார்கள். கோட்டும், டைய்யும் அணிந்து கரண்டைக்குக் கீழ் ஆடை அணிந்திருப்பார்கள், பெண்கள் ஆண்களோடு சகஜமாகப் பழகலாம் என்பார்கள், பெண்கள் பாட்டுப்படலாம், நடனமாடலாம் என்று சொல்வார்கள்…… இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். இதைத்தானே மேற்கத்தேயக் கலாசாரம் என்கிறோம். மேற்கத்தேயத்தை எதிர்ப்பவர்கள் இவற்றையெல்லாம் வெறுக்க வேண்டுமே?

3-சினிமாவை ஊக்குவித்தல்

சினிமாவைப் பற்றி இவர்களிடம் வித்தியாசமான கருத்துக்கள் காணப்படுகின்றன. ‘இஸ்லாமிய சினிமாவொன்று உருவாகல் வேண்டும். அதிலும் ஈரானிய சினிமா தற்போது நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றது. சர்வதேச கவனத்தைத் தன்பால் அது ஈர்க்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் ஈரானில் சினிமாவுக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. அவை நீக்கப்பட வேண்டும்……..’ என்று ஈரானிய சினிமாவைப் புகழ்ந்து கொண்டு போகிறார்கள். கடந்த 2007 மார்ச்சில் வெளிவந்த ‘எங்கள் தேசம்’ பத்திரிகையில் ‘தடைகளுக்கு மத்தியில் முன்னேறி வரும் ஈரானிய சினிமா’ என்று ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தது. அதில் கீழ்வரும் செய்திகள் கூறப்படுகின்றன. ‘ஈரானியப் புரட்சியின் பின் அங்கு பெண் இயக்குனர்களுக்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது’ என்று இரு பெண்களின் பெயர்கள் கூறி தொடர்ந்து செல்லும் அவ்வாக்கத்தில் ‘இவர்கள் போன்ற பெண் இயக்குனர்கள் பெண்களைக் கருப்பொருளாகக் கொண்ட படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றுள் ‘நர்கிஸ்’ என்ற படம் அனைவராலும் வரவேற்கப்பட்ட ஒரு திரைப்படமாகவிருந்தது. பலமான சட்டங்களுக்கு ஊடாக ஏற்படுகின்ற ஆண்,பெண் உறவு முறைகளில் ஏற்படுகின்ற உன்னத சந்தர்ப்பங்களை உளப்பூர்வமாக சமர்ப்பிக்க அவள் முன்வந்துள்ளாள். ஓர் அழகான பெண்ணையும் மற்றும் அவளுடன் இணைந்து கொள்கின்ற ஒரு கள்வனையும், அவனின் சட்டபூர்வ மனைவியையும் கருப்பொருளாகக் கொண்ட ‘நர்கீஸ்’ சர்வதேச விருது பெற்ற திரைப்படமாக மாறியது. காதல் எனும் மாயைக்காக வேண்டி சமுதாயக் கட்டுப்பாடுகளையும், விழுமியங்களையும் தகர்த்தெரிகின்ற இளைஞர்கள் தொடர்பாக இத்திரைப்படம் அலசி ஆராய்கின்றது. இம்முறை லண்டன் சர்வதேச திரைப்பட அரங்கில் பங்கு கொண்டிருந்த ‘டைம் போஸ்’ என்ற திரைப்படமானது அலி றிஸா ஆமினீ எனும் இளம் திரைப்பட இயக்குனரால் உருவாகியதாகும். அது மாத்திரமின்றி படர்ந்த பனியின் மீது பயணிக்கின்ற ஒரு கற்பினிப் பெண்ணும் அங்கே காட்சி தருகின்றாள் அவள் தனது காதலனைத் தேடியவாறு வருகின்றாள் அவள் தன்னைக் கைவிட்டுச் சென்ற காதலன், மற்றும் தான் வயிற்றில் சுமக்கின்ற குழந்தையோடும், இறைவனோடும், தன்னோடும் அவளது பயணம் நெடுகிலும் நீண்டதொரு சம்பாசனையோடு செல்கின்றாள்.’ என்று கட்டுரை தொடர்கின்றது இப்படி கேடு கெட்ட காட்சிகளை உன்னதப்படுத்தி ஜமாஅதே இஸ்லாமியின் எங்கள் தேசம் சஞ்சிகை எழுதுகிறது. . சினிமா என்றாலே குப்பைதான் என்பதில் யாரும் முரண்பட முடியாது. அதில் ஈரானிய சினிமாவும் விதிவிலக்காகாது. இதற்கு வேறு இஸ்லாமிய சினிமாவென்று முத்திரை குத்துவது எவ்வகையிலும் ஏற்கமுடியாதது. லண்டன் திரைப்பட விழாவில் விருது பெறுவது பெருமைக்குரியதொன்றல்ல மாறாக இஸ்லாத்துக்கு மிகப் பெரும்  இழுக்காகும்.

சினிமாவை ஆதரிப்பது மட்டுமல்லாது அதற்கு இஸ்லாத்தின் பேரால் ஒழுங்கு விதிகளையும் வகுத்திருப்பது நகைப்புக்குரியதும், வெட்கித் தலை குனிய வேண்டியதுமாகும். யூஸுப் கர்ளாவி அவர்களே இந்த விதிகளைக் கூறியுள்ளார். அது பற்றிய விவரங்கள் 98ம் ஆண்டு நவம்பர், டிசம்பர்களில் வெளியான அல்ஹஸனாத்தில் 15ம் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது. அதில் கூறப்பட்டுள்ள விடயமாவது:

‘முஸ்லிம் பெண்கள் நடிப்புத்துறையில் ஈடுபடலாம் என்ற தலைப்பில் ‘ஆதம் (அலை) முதல் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையுள்ள இறைத் தூதர்களைப் பற்றி அல்குர்ஆன் கூறும் போது எந்த இடத்திலும் பெண்களின் இருப்பை அலட்சியப்படுத்தவில்லை. ஆதம், ஹவ்வா, நூஹும் அவரின் மனைவியும், லூத்தும், மனைவியும், இப்றாஹீமுடைய இரண்டு மனைவியரும், ஆதத்தின் இரு மகன்களின் நிகழ்ச்சி, மூஸா நபியின் பிறப்பும் அவரின் அண்ணையும், சகோதரியும், பிர்அவ்னின் மனைவி, சுஐப் நபியின் இரு மகள் மூஸாவோடு நடத்திய உரையாடல், யூஸுப் நபியும் எகிப்து ஆட்சியாளரின் மனைவியும் முக்கிய பாத்திரங்களாய் இடம் பெற்ற ஒரு முழு அத்தியாயம். ஈஸா நபியும், அன்னை மரியமும், ஸைதும் ஸைனபும் என அல்குர்ஆன் விவரிக்கும் அத்தனை நிகழ்வுகளிலும் முக்கிய ரோலில்( சினிமாவில் பயன்படுத்தப்படும் வார்த்தையை தூய்மையானவர்களுக்கப் பயன்படுத்துகிறார்)பெண்ணிருக்கின்றாள். பின்னர் எப்படி நாம் பெண்களைப் புறக்கணிக்க முடியும்? பெண்கள் நடிப்புத் துறையில் ஈடுபடுவதி பற்றி மார்க்க அறிஞர்கள் கூடி இஜ்திஹாத் செய்து முடிவு எடுப்பது அடிப்டையில் தீர்மானிக்கலாம் என்று கூறிய அவர் (யூஸுப் கர்ளாவி) ‘இது கூடாது. ஹராம் என்று சொல்வது எளிது ஆனால் அது தீர்வாகாது. ஓவ்வொரு விடயத்திலும் ஹராம் ஹராம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது பிரச்சினையை  வளர்ப்பதுடன் மக்கள் அவர்களுக்குப் பிடித்த வழியில் சென்று கொண்டிருப்பார்கள். ஆகையால் தெளிவான நவீன தீர்வுகளை சொல்ல வேண்டும். பெண்களே இல்லாமல் கதைகளை உருவாக்குவதை யாரும் ஏற்கமாட்டர். ஆனால் பெண் நடிப்புத் துறையில் ஈடுபடும் போது ஒரு சில ஒழுக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவள் உடை அணியும் முறை இஸ்லாமிய முறைப்படி இருக்க வேண்டும். இயக்குனரும் படப்பிடிப்பாளரும் பெண்களின் வடிவழகை ஆபாசமாய் காட்டக் கூடாது. தரக்குறைவான வசனங்களைத் தவிர்க்க வேண்டும். இந்த வரம்புகளையெல்லாம் கடைபிடிக்கும் முஸ்லிம் பெண் கலைஞர்கள் இன்றுள்ளனர். நான் அவர்களைப் பார்த்துள்ளேன் எனது இக்கருத்துக்களை அவர்கள் பெரிதும் வரவேற்றனர். முஸ்லிம் உலகில் முதலாவது இஸ்லமிய செட் லைட் சனல் 99 ஜனவரியில் செயல்படத் தொடங்கும் பிரபல சவுதி தொழிலதிபர் ஷேஹ் ஸாலிஹ் அப்துல்லாஹ் காமிலுக்கு இது தொடர்பில் ஊக்கமளித்ததும் நான்தான்’ என்று அந்த ஆக்கம் செல்கின்றது. இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் அவதானிக்கும் போது சிரிப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்????????????? ஓட்டு மொத்த சினிமா வழிகேட்டிற்கும் இவர்கள்தான் காரணம் என்பதை இதில் ஏற்றுக்கொள்கிறார்கள்.

மீள்பார்வை 2010 நவம்பர் மாத இதழில் இஸ்லாமிய சினிமா ஹோலில் ஆண் ரசிகர்களுக்கும் பெண் ரசிகர்களுக்கும் மத்தியில் கருப்புத் திரையொன்று போடப்பட வேண்டும் என பரிதாபமான நிபந்தனையைச் சொல்லியுள்ளார்கள்.

பலஸ்தீனில் அக்கிரமம் நடந்தேறும் போது பேசும் பேச்சா இது? விரலாட்டுவதையே பேசக் கூடாது என்று கூறும் நீங்கள் அதை விடச் சின்ன விடயமான இந்த சினிமா விவகாரத்தையெல்லாம் பேசலாமா??

                                                                                                    வளரும்

7 Responses to “தவ்ஹீத் பிரச்சாரமும் ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்களது தஃவாக்கள நிலையும்-3”

 1. Abu Sayyaf says:

  அஸ்ஸலாமு அலைக்கும்…

  மேற்கத்தேய மோகமே இதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொன்டால் சரியெ…

  ஜஸாகல்லாஹு ஹைரன்…

 2. அபூ பௌஸீமா says:

  அஸ்ஸலாமு அலைக்கும்

  அறிஞர் பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. இஸ்லாமிய அகீதாவில் தெளிவு வேண்டும். பரீட்சைகளில் தேறி விட்டால் பட்டம் கிடைத்து விடும். தலைப்பாகை அணிந்து கால்நீளச் சட்டை (தோவ்ப்) போட்டுவிட்டால் இஸ்லாத்தில் சொந்தக் காரர்கள் இவர்கள் என்ற நினைப்பு. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தைச் சினிமாவாக எடுக்க செல்வந்தர்களோடு கைகோர்த்தவர்தான் யூஸுஃப் அல்கர்ளாவி. அப்படம் எடுக்கப்படும் போது சினிமாககாரிகளின் தயவு தேவைப்படும்தானே. அதற்கான முன் கூட்டிய மக்கள் கருத்தை விதைத்து வளர்ப்பதுதான் நோக்கம். இஸ்லாத்தைச் சொற்ப விலைக்கு விற்று வயிறு வளர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருப்பது மறுக்க முடியாததும் மறைக்க முடியாததுமாகும். பாவமென்று சொல்லி விட்டோம். அதற்கு வக்காலத்து வாங்காமல் இருப்பது அவர்களின் மீது கடமையாகி விட்டது. விதண்டாவாதங்களை முன்வைத்து அவர்தம் போக்கில் போவார்களேயானால் அவர்களின் முடிவு அல்லாஹ்வின் கையில் உள்ளது.

  நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக. அவர்களுக்கு அறிவுத் தெளிவை வழங்குவானாக.
  வஸ்ஸலாம்
  அபூ பௌஸீமா

 3. ரிப்ளான் says:

  அஸ்ஸலாமு அலைகும்
  மேலும் தொடருங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக!
  இவ்வளவு அசிங்கமான கருத்துக்களைச் சென்ன பிறகும் சிலர்கள் இயக்க வெறியின் காரணமாக அதைச் சரிப்படுத்த முயற்சிக்கி்ன்றார்களே என்பதை பார்க்க பரிதாபமாக இருக்கு

 4. M.K.M. Rasmy says:

  Jamath e Islami performs thahwa very effective and efficient manner. each youth should be a member of the Sri Lanka Islamic student movement( the student union of Jamath e Islami) to obtain the best guidenship.

  before criticise the Jamath e islami, please pay your attention on Thawheed jamath which has been devided in to many parts and they dont know how to perform thahwa. Earlier i was a member of the thawheed jamath. but i did not get any good guidenship. but when when i was at the university, Jam’iyya only served us from going behind jahiliyyath.
  So, pls you do thahwa your ways and try to reduce the weekneses of your movement. dont criticise other thahwa movement. remove jalaous from your heart. even if you try your best you cant stop the growth rate of jamath e islami

  • mujahidsrilanki says:

   வழமையான ஜமாஅதே இஸ்லாமி அங்கத்தவர்களின் வாய்பாட்டை எழுதியிருக்கிறீர்கள். கட்டுரையை விமரிசனங்களுக்கு அறிவுத் தெளிவோடு பதில் சொல்லும் நிலையின்றி ஓர் அறிவியல் விரக்தி அதிகமான அங்கத்தவர்களை மூடியிருப்பதை நினைத்து உங்களுக்காக எங்களுக்கு பிரார்த்திக்கவே முடியும்

 5. M.K.M. Rasmy says:

  salam, you dont need to dua for us. we always ask dua.

  you are suffering from jalous. youth girls and boys are willing to joing with our jamath.

  Ariviyal virakthi ungalaiththan moodiyiruppazai ittu ungalukkahap parizafap paduhiren. ungalukku Allah nervali kattattum.

  we wholehartedly ask you to joing with our jamath and get the good guidenship from our jamath.

  Naangal orupozum pahaimai parattuwazillai.

  Neengal evvalavu engalai vimarshiththalum Neengal engalazu muslim shahozaran. muslim ummaththil oruwarahawe ungalai naam mazippom. ungalukku azavazu pirachchinai enral ellorukkum munnal insha Allah nnam than kural koduppom.

  Rasmy

  • mujahidsrilanki says:

   you dont need to dua for us. we always ask dua.

   ஆனால் உங்கள் துஆக்கள் எப்பொழுதம் எனக்கும் எமக்கம் தேவை.

   youth girls and boys are willing to joing with our jamath.

   எல்லா இளைஞர்களுமல்ல தாடி வளர்க்க விரும்பாத இசை கேட்பதை விரும்புகின்ற சினிமாவிற்கு ஆர்வமூட்டுகின்ற ஒரு ஜமாஅத்தைத் தேடிய இளைஞர்கள் அல்லது இவைகளை ஜமாஅத் அனுமதிக்கிறது என்று தெரியாத இளைஞர்கள் இணைகிறார்கள். அதே போன்றே பெண்களும்

   Ariviyal virakthi ungalaiththan moodiyiruppazai ittu ungalukkahap parizafap paduhiren.

   விமரிசனங்களை வாசித்து விளக்கஞ் சொல்லாமல் வாய்ப்பாடு சொல்பவர்கள் அறிவியல் விரக்தி மூடியவர்களா? விமரிசனங்களால் என்றும் விழிப்போடிருப்பவர்கள் அறிவியல் விரக்தியால் மூடியவர்களா? மக்கள் புரிந்துகொள்வார்கள்

   we wholehartedly ask you to joing with our jamath and get the good guidenship from our jamath.

   ஜமாஅத்தில் சேர்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஜமாஅத் குர்ஆனில் உள்ளது ஹதீஸில் உள்ளது என்று நாம் ஆதாரபூர்வமாக ஒன்றைச் சொன்னால் தங்களை மாற்றத் தயார் என்ற ஒரு உறுதி மொழியை மற்றும் தந்தால் இந்த உம்மத் பிழவுபடுவதை விட ஒரே அணியில் ஜமாஅதே இஸ்லாமியின் தலைமையில் திரளுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். உறுதிமொழி தருவீர்களா?

   Naangal orupozum pahaimai parattuwazillai.

   அது எங்களுக்குத் தெரியும் இல்லை என்றால் சிர்க் நடக்கும் இடங்களில் மௌனமாக இருப்பீர்களா? நாங்கள் அவ்வாறல்ல பின்வரும் குர்ஆன் வசனத்தை உயிர் மூச்சாகக் கொண்டவர்கள்(இன்சா அல்லாஹ்):

   இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”(60:4)

   ungalukku azavazu pirachchinai enral ellorukkum munnal insha Allah nnam than kural koduppom.

   பேருவளைப் பிரச்சனையில் வந்து உதவியது போன்றா!!!!!!