தவ்ஹீத் பிரச்சாரமும் ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்களது தஃவாக்கள நிலையும்-4

Post by mujahidsrilanki 13 November 2011 கட்டுரைகள், விமரிசனங்கள்

4. சில்லறைப் பிரச்சனை பிரச்சனைகளென மார்க்க விடயங்களை அலட்சியப்படுத்தல்.

‘மார்க்கத்துக்காக நாம் சிலதை விட்டுக் கொடுக்கின்றோம்’ என்று இவர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் மக்கள் ஜுப்பா அணிதலை விரும்புகிறார்கள் இவர்கள் அதந்குத் தயாரா? தாடி வளாப்பதை மக்கள் விரும்புகிறார்கள் ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ அன்பர்கள் இதற்குத் தயாரா? இதற்கெல்லாம் அவர்கள் தயாரில்லை. மார்க்கத்தை விட்டுக் கொடுக்க அவர்கள் தயார். விட்டுக்கொடுப்பதற்கு நாம் மார்க்கத்தின் உரிமையாளர்களல்ல. அதற்குறியவன்தான் அதனை விட்டுக்கொடுக்க வேண்டும். அவன் விட்டுக்கொடுத்தவைகளைத்தான் சலுகைகள் என்றழைக்கிறோம். ஆயிரம் ரூபாய் சதங்கள் என்ற சில்லறைகளால் ஆனதுதான் 2 சதத்தைப் புறக்கணித்தான் அது ஆயிரமாக முடியாது. சுமூகத்தின் ஒற்றுமைக்காக தாடி மயிரை கொஞ்சம் நீளமாக வளர்க்கத் தயாராக இல்லை. சேட் ஆடையை களற்றி ஜுப்பா அணியத் தயாராக இல்லை. இசையை விடத் தயாராக இல்லை. ஜமாஅதே இஸ்லாமி சகோதரர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.

ஜமாஅத்தே இஸ்லாமிக்கு சில நல்ல பகுதிகள் இருந்தாலும் டீஏவுக்கு அப்படி எதுவுமில்லை. தவ்ஹீத் பிரசாரத்துக்கும், சில போது ஜமாஅத்தே இஸ்லாமிக்கு எதிராகவும் சதி தீட்டும் வேலைகளைக் கைக் கொண்டது டீஏதான் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு அவை வெடிக்கும் நேரம் பார்த்து சுற்றுலா செல்வது போன்ற தந்திரங்களையெல்லாம் கையாண்டு தமது கைங்கரியங்களை அவ்வியக்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது.

5. ஆட்சி பற்றிய சரியான விளக்கமின்மையால் போலி இஸ்லாமிய ஆட்சி நாடகமாடும் ஈரானிய சீயாக்களுக்கு சார்பாக நேரடியாகவே ஆதரவளித்தல்.

இஸ்லாமி ஆட்சி என்ற பேரில் இவர்கள் ஷீஅக்களோடு எந்தளவுக்கு ஒத்துப் போகின்றார்கள் என்பதைக் கீழ்வரும் செய்தியிலிருந்து விளங்கலாம்:

99ல் வெளியான அல்ஹஸனாத்தின் ஆசிரியர் கருத்தில் பின்வருமாறு தமது சீயா ஆதரவை வெளிப்படுத்தினார்கள்

‘நபிப் பேரர் ஹுஸைன் (ரழி) அவர்கள், இஸ்லாமிய ஆட்சி மன்னராட்சியாக மாறுவதை சகிக்க முடியாமல் உண்மையான கிலாபத்தை நிலை நிறுத்தும் நோக்கில் தமக்கு ஆதரவளிக்க முன் வந்த கூபாவை நோக்கி மதீனாவைத் துறந்து செல்கிறார்கள். கர்பலாவில் வைத்து அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள். எனவே மன்னராட்சி தொடர்ந்தது. ஹி 100ல் கலீபா உமரிப்னு அப்துல் அஸீஸ் மீண்டும் உண்மையான கிலாபத்தை நிறுவிய வேளை அவர்களும் ஷஹீதாக்கப்பட்டார்கள். எனவே மன்னராட்சி இன்னும் தொடர்கின்றது. இடையில் வலிமையற்ற மன்னர்கள் தோன்றும் போதெல்லாம் மன்னராட்சி புரட்சிகள் மூலம் கைமாற வேண்டியிருந்தது. ஆதனால் பல வெட்டுக் குத்துக்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் பதிவாகின. எனினும் 1924 வரை ஏதோ ஒரு வகையில் காணப்பட்ட முஸ்லிம்களின் கிலாபத் திட்டமிட்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இஸ்லாமிய சாம்ராஜியம் சிறு நாடுளாகக் கூறுபோடப்பட்டு மன்னர்கள், இராணுவ ஜெனரல்கள், சர்வாதிகாரிகள், கம்யூனிஸ்டுகள் போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கிலாபத் மறைந்து எழுபத்தைந்து முஹர்ரம்கள் வந்து சென்று விட்டன. நபிப் பேரர் உணர்வில் வாழ்ந்து வளர்ந்த சமுதாயம் இன்று இஸ்திரமான ஆயத்துல்லாக்களின் ஆட்சியொன்றை அடைந்து கொண்டது. மன்னர்களுக்குத் தலை சாய்த்துப் பழகிவிட்ட சமுதாயம் இன்னும் அடிமைத்துவத்தில் ஆழ்ந்து கிடக்கின்றது. புரட்சிக்குழுக்களெல்லாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் முடிவை நோக்கியே வருகின்றன…’ என்று அவ்வாக்கம் காணப்படுகின்றது.

இவ்வாக்கத்தில் காணப்படும் ஷீஆக்களுக்கு ஆதாரவனதும், இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாணதுமான கருத்துக்கள்:

1- முஹர்ரம் இதழில் (99 மார்ச்) இக்கருத்துக்கள் வெளியாவதிலிருந்து ஷீஆக்கள் கொண்டாடும் முஹர்ரம் விழாவை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

2- ‘நபிப் பேரர் ஹுஸைன் (ரழி) அவர்கள் இஸ்லாமி ஆட்சி மன்னராட்சியாக மாறுவதை சகிக்க முடியாமல் உண்மையான கிலாபத்தை நிலை நிறுத்தும் நோக்கில் தமக்கு ஆதரவளிக்க முன் வந்த கூபாவை நோக்கி மதீனாவைத் துறந்து செல்கிறார்கள்’ இக்கருத்து முற்றிலும் தவறானதாகும். முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் அரியணை ஏறினால் அது மன்னராட்சி என்றால் அலீ (ரழி) அவர்களின் மகன் ஹுஸைன் ஆட்சிக்கு வருவதும் மன்னராட்சியே. ஆனால் உண்மையில் ஹுஸைன் (ரழி) அவர்கள் போனது ஆட்சிக்காகவன்று. அவர் போனதெல்லாம் வேறொரு விடயத்துக்காகத்தான்.

3-‘ஹி 100ல் கலீபா உமரிப்னு அப்துல் அஸீஸ் மீண்டும் உண்மையான கிலாபத்தை நிறுவிய வேளை அவர்களும் ஷஹீதாக்கப்பட்டார்கள்’ என்ற வசனத்தின் மூலம் யஸீத் , உமரிப்னு அப்துல் அஸீஸ் இருவருக்கும் இடைப்பட்ட ஆட்சியாளர்களை இவர்கள் நல்லவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் நபியவர்கள் இவ்வாட்சியாளர்களை நல்லவர்கள் என்று கூறியுள்ளார்கள். அதைப்பின்வரும் ஹதீஸ் கூறுகின்றது.

صحيح مسلم 10 – (1822) عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: كَتَبْتُ إِلَى جَابِرِ بْنِ سَمُرَةَ مَعَ غُلَامِي نَافِعٍ، أَنْ أَخْبِرْنِي بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَكَتَبَ إِلَيَّ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ …..يَقُولُ: «لَا يَزَالُ الدِّينُ قَائِمًا حَتَّى تَقُومَ السَّاعَةُ، أَوْ يَكُونَ عَلَيْكُمُ اثْنَا عَشَرَ خَلِيفَةً، كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ»
‘மறுமை வரைக்கும் அல்லது குறைஷ் குலத்தைச் சேர்ந்த பனிரெண்டு கலீபாக்கள் உங்களில் இருக்கும் வரைக்கும் இந்த மார்க்கம் நிலையானதாய் இருக்கும்’ என நபியவர்கள் சொன்னார்கள்.
ஆறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 1822

ஆனால் இவர்கள் இதற்கு மாற்றமாக இடைப்பட்ட அனைத்து கலீபாக்களையும் தட்டி விட்டு உமரிப்னு அப்துல் அஸீஸ் அவர்களை மட்டும் நல்லவராகச் சொல்கிறார்கள்.

4-‘இஸ்லாமிய சாம்ராஜியம் சிறு நாடுளாகக் கூறுபோடப்பட்டு மன்னர்கள், இராணுவ ஜெனரல்கள், சர்வாதிகாரிகள், கம்யூனிஸ்டுகள் போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்ற வசனத்தின் மூலம் சவுதி, குவைட், ஐக்கிய அரபு இராச்சிய மன்னர்கள் அனைவரும் பேர்தாங்கிகள் ஈரானின் ஆட்சியாளர் மட்டுமே இஸ்லாமிய ஆட்சியாளர் என்று சொல்ல வருகிறார்கள். அதன் மூலம் ஜனநாயக ஆட்சி முறையை மிக்க சரிகாண்கின்றார்கள். ஜனநாயக ஆட்சி முறை இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானதாகும். அபூபக்கர் (ரழி) அவர்கள் தெரிவு செய்யப்பட்ட முறையும் அவருக்குப் பின்னால் வந்த ஆட்சியாளர் தெரிவு செய்யப்பட்ட முறையும் ஜனநாயக ஆட்சி முறையல்ல. இதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

4- ‘கிலாபத் மறைந்து எழுபத்தைந்து முஹர்ரம்கள் வந்து சென்று விட்டன. நபிப் பேரர் உணர்வில் வாழ்ந்து வளர்ந்த சமுதாயம் இன்று இஸ்திரமான ஆயத்துல்லாக்களின் ஆட்சியொன்றை அடைந்து கொண்டது’ என்ற வசனத்தின் மூலம் ஈரானிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள ஷீஆக்கள் மட்டுமே நபிப் பேரர் உணர்வில் வாழ்ந்தவர்களாகும். ஜமாஅத்தே இஸ்லாமி உட்பட அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த மற்றைய அனைத்து இயக்கங்களும்  நபிப்பேரார் உணர்வில் வாழவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்கிறார்கள். இந்த வரிகளில் இவர்கள் சீயாக்களை தெளிவாக ஆதரிப்பதையும் சீயாக்களைத் தவிர மற்ற யாரும் பேரர் ஹுஸைனை மதிக்கவில்லை என்றும் தெளிவாகச் சொல்வதை சிந்தனையுள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.

5- ‘மன்னர்களுக்குத் தலை சாய்த்துப் பழகிவிட்ட சமுதாயம் இன்னும் அடிமைத்துவத்தில் ஆழ்ந்து கிடக்கின்றது’ என்ற வசனத்தின் மூலம் நேரடியாகவே அரபுநாடுகளையும் சீயாக்கள் அல்லாதவர்களையும் தாக்குகின்றார்கள். விமரிசிக்கிறார்கள்.

6- ‘புரட்சிக்குழுக்களெல்லாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் முடிவை நோக்கியே வருகின்றன…’ என்ற வசனத்தின் மூலம் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்வதையும், முஸ்லிம் நாடுகளுக்குள் வன்முறைகளைத் தூண்டுவதையும் இவர்கள் சரிகாண்கின்றார்கள். சவூதியில் இருப்பது ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சியல்ல ஏதோ ஒரு வகையில் அங்கு தொழுகை நிலை நாட்டப்படுகின்றது. இஸ்லாமிய சட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுன்றன. ஷிர்க்கிற்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச மட்டத்தில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் பல்வேறு சேவைகள் செய்யப்படுகின்றன. சர்வதே அளவில் இடம் பெறும் போராட்டங்களுக்கு மறைமுகமாகப் பல உதவிகள் செய்யப்படுகின்றன. ஆப்கானில் பமியான் சிலை உடைக்கப்பட்ட போது ஜமாஅத்தே இஸ்லாமியும், டீஏயும் மறைமுகமாக அதைக் கண்டித்தபோது சவூதி அமைச்சர்களால் சிலை உடைப்பு சரியானதே என அரிக்கை கொடுக்கப்பட்டது. இத்தனையும் இருக்கும் போதுதான் அந்நாட்டுக்கு எதிராகக் கிளம்புவதை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

ஷீஆக்களை ஆதரிப்பதில் டீஏ இயக்கத்துக்கு அலாதிப்பிரியம் காணப்படுகின்றது. ஏனெனில் கொமைனீ ஈரானைக் கைப்பற்றிய போது அவரை ஆதரிக்க முதலில் அங்கு சென்றவர்கள் இஹ்வானியர்கள்தான். இவர்கள் எப்படியெல்லாம் ஷீஆக்களை ஆதரிக்கின்றார்கள் என்பதைக் கீழே பார்ப்போம்.

2007 மார்ச் மாதம் வெளியான மீள்பார்வையில் கருத்து வேறுபாடுகளில் பிளவை ஏற்படுத்தக் கூடாது என்ற தலைப்பில் கர்ளாவி அவர்களின் பத்வா வெளியாகியிருந்தது. அதில் கூறப்பட்டுள்ள செய்திகளாவன.

‘பிக்ஹு ரீதியான கருத்து வேறுபாடுகள் முஸ்லிம் உம்மத்தை பல கூறுகளாகப் பிரித்து விடக் கூடாது. என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் தெரிவித்துள்ளார். ஈராக்கில் தற்போது நிலவும் ஷீஆ, ஸுன்னி கருத்து முரண்பாடு பற்றிக் கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்…………ஈராக்கில் ஷீஆக்களும், ஸுன்னிகளும் தமக்குள்ளிருக்கும் எதிர்ப்புக்களைக் கைவிட வேண்டும். அடுத்தவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயலில் எத்தரப்பும் ஈடுபடக்கூடாது. ஷீஆக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஸுன்னிகள் பிரசாரம் செய்யக் கூடாது. ஸுன்னிகள் கூடுதலாக வாழும் பகுதியில் ஷீஆக்கள் தமது கொள்கையைப் பிரசாரம் செய்யக் கூடாது……’ என்று அவ்வாக்கம் சீயா ஆதரவை தெளிவாகவே சொல்கிறது

இதிலே கவனிக்க வேண்டிவைகள் எதுவெனில்,

ஷீஆக்களுக்கும், ஸுன்னிகளுக்கும் இடையில் காணப்படுவது  பிக்ஹு ரீதியான கருத்து வேறுபாடுகள்தான் அகீதா ரீதியானதல்ல என்று சொல்கிறார். அப்படியென்றால் ஷீஆக்கள் இன்று நம்மிடமுள்ள அல்குர்ஆனைப் பிழை காண்பது, ஆயிஷா நாயகியை விபச்சாரி என்பது, அபூபக்கர்,உமர் உத்மான் போன்ற பெரும் நபித்தோழர்களை முனாபிக்குகள் என்று ஷீஅக்கள் கூறுவது,………. போன்ற அனைத்தும்  பிக்ஹு ரீதியான கருத்து வேறுபாடுகள்தான் அகீதா ரீதியானதல்ல என்று கர்ளாவி சொல்கிறார். ஆனாலும் ஷீஆக்களுக்கும், ஸுன்னிகளுக்கும் இடையில் காணப்படுவது அகீதா ரீதியான  கருத்து வேறுபாடுகள்தான் என்பதை. ‘ஸுன்னிகள் கூடுதலாக வாழும் பகுதியில் ஷீஆக்கள் தமது கொள்கையைப் பிரசாரம் செய்யக் கூடாது……’ என்ற வார்த்தைகள் மூலம் தன்னை அறியமலேயே ஏற்றுக் கொள்கின்றார்.

ஷீஆக்களை ஆதரிப்பதில் டீஏ இயக்கத்துக்கு இருக்கும் பங்களிப்பை மென்மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கீழ்வரும் செய்தி காணப்படுகின்றது. ஷீஆக்களின் இலங்கைக்கான முகவர்களில் ஒன்றாக விளங்கும் வெலிகம மிலேனியம் கல்விஸ்தாபனம் எனும் அமைப்பால் வெளியிடப்பட்ட ‘இஸ்லாமிய உலகும் சவால்களும்’ என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள மீள்பார்வையின் ஆசிரியர் ரவூப் ஸெய்ன் தனது அணிந்துரையில் ‘இது போன்ற திறந்த கருத்தாடல்கள் வரவேற்கப்பட வேண்டும்…..’ எனப்பாராட்டியுள்ளார். ஆனால் அந்நூலின் 57ம் பக்கத்தில் வஹாபிஸம் ஒரு சமூக அரசியல் நோக்கு என்ற தலைப்பில் பீஜே அவர்களை ‘குறை ஆன்மீக வாதிகள், விரல் நுனியில் மார்க்கத்தைச் செய்பவர்கள். அறிவில்லாதவர்கள், தர்காவை உடைப்பவர்கள், ஈரானுக்கெதிராகப் பேசுபவர்கள்………. ‘ என்றெல்லாம் கண்டவாறு விமர்சிக்கப்பட்டிருந்தது. ரவூப் ஸெய்னுக்கு நெருக்கமான ஒருவரிடம் இது பற்றிக் கேட்ட போது ‘தனக்கு இப்புத்தகத்தை அனுப்பும் போது குறித்த வஹாபிஸம் ஒரு சமூக அரசியல் நோக்கு என்ற தலைப்பு இருக்கவில்லை என்று ரவூப் ஸெய்ன் கூறியதாக அறிந்தோம். ஒருவேளை அப்படி நடந்திருக்கலாம் என்று பார்த்தாலும் மறுபடியும் அவர் அதே நிருவனத்தின் ‘கருத்துக்கண்ணோட்டம்’ என்ற தொடர் நூலுக்கு இவ்வாறு அணிந்துரையளித்திருக்கின்றார். ‘வாதப்பிரதிவாதங்கள்’ என்ற அந்நூலின் பின்பக்கத்தில் சந்திர சேகர் என்ற ஒருவர் ‘யானைக்கு வடகலை நாமம் போடுவதா தென்கலை நாமம் போடுவதா? என்று இந்து மதத்தில் குழப்பம் இருப்பதாக ஏகடியம் பேசியவர்கள் தொழுகையில் விரலை ஆட்டுவதா வேண்டாமா என்பதிலிருந்து ஆரம்பித்து இஸ்லாத்தின் ஒவ்வொரு தலத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர்….’ என்று தவ்ஹீதை விமர்சித்தெழுதியதைப் பிரசுரித்துள்ளனர். அந்நூலில் தவ்ஹீதை எதிர்த்தும், ஆதரித்தும் விமரிசனம் என்ற பேரில் சில ஆக்கங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன அவற்றுள் இறுதியாக வரும் ஆக்கத்தில் தவ்ஹீதை மிகக் கடுமையாக விமரிசித்து, அதாவது, ‘சிந்திக்கச் சக்தியற்ற ஒரு சமுதாயத்தைத் திருப்புவது மிகவும் இலகுவானது. பீஜே அதைச் செய்கின்றார். ஆனால் ஈரான் இந்த அனைத்துத் தகுதிகளையும் பெற்று சுதந்திரத்துடன் தலை நிமிர்ந்து நிற்கின்றது…..’ என்று அவ்வாக்கம் தொடர்கின்றது.

இந்நூலுக்கு சகோதரார் ரவூப் ஸெய்ன் இலங்கை வானொலியில் நூல் விமரிசனம் செய்கின்றார் அதில் ‘இந்து மதத்தின் அடிப்படைகளைக் கலந்துதான் இஸ்லாம் வளர்ந்துள்ளது’ என்ற சந்திரசேகரனின் ஒரு கருத்துக்கு மட்டும் மறுப்புச் சொல்லி விட்டு மற்றையவற்றை விட்டுவிட்டார். இதை கருத்துக்கண்ணோட்டம் என்ற மறு தொடரில் ஹுஸைன் மவ்லான போட்டிருகின்றார். இது எதைப் போலுள்ளது என்றால் ஹஸனுல்பன்னா தாஹா ஹுஸைனின் நூலை விமரிசித்தாராம். பின்னர் தாஹா ஹுஸைன் ஹஸனுல்பன்னாவிடம் ‘இது போன்றொரு விமரிசனதத்தை உலகில் ‘யாராலும் செய்ய முடியாது’ என்றாராம். இதைப் போலத்தான் சகோதரர் ரவூப் ஸெயினின் விமரிசனமும் காணப்படுகின்றது.

‘கருத்துக்கண்ணோட்டம்’ என்ற 2வது நூலின் 6ம் பக்கத்தில் வஹாபிஸம் ஒரு சமூக அரசியல் பார்வை என்ற தலைப்பில் தொடர்ந்து இடம் பெறும் விடயங்களாவன, வானொலி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான விமரிசனத்தின் எழுத்து வடிவம் என்ற தலைப்பில் சந்திர சேகரனின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன அதில்

‘………….. இந்தியாவில் இதுவரை சூபிஸம்தான் வளர்ந்தது என்றும், வஹாபிஸத்தின் வருகை பல பாதாகமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் சகோதரர் ரவூப் ஸெய்ன் எந்த மறுப்பையும் கூறவில்லை. ஆனால் ‘சந்திர சேகரன் தனது கட்டுரையில் இந்து மதத்தின் தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டு இஸ்லாம் வளர்ந்ததாகக் கூறும் கருத்தில் நாம் சிறிதேனும் உடன்பட  முடியாது…..’ எனக் கூறுகின்றார். அப்படியென்றால் மற்றைய இரண்டிலும் தான் உடன்படுவதாக சகோதரர் ரவூப் ஸெய்ன் மறைமுகமாகக் கூறுகின்றார்.

சகோதரர் ரவூப் ஸெய்னின் இக்கட்டுரை இடம் பெற்றுள்ள அப்புத்தகத்தில் ஹுஸைன் மவ்லான பின்வருமாறு எழுதுகின்றார். ‘மேற்படி ஆராயப்பட்ட உணர்வுபூர்வமான வராலற்று நிகழ்வுகளின் அடிப்படையிலே இமாம்களினதும் நல்லடியார்களினதும் ஸியாரத்துக்குச் சென்று அவர்களை நினைவு கூறுகிறோம். அவர்களின் பொருட்டால் அந்த ஆன்மீக உள்ளுணர்வுடன் பிரார்த்தனை புரிகிறோம். இதே அடிப்டையில்தான் முஆவியாவையும், யஸீதையும், இப்னு ஸுஊதையும், முஹம்மதிப்னு அப்துல் வஹாபையும் சபிக்கின்றோம்…’ என்று வசைபாடியுள்ளார். இதற்குப் போய் சகோதரர் ரவூப் ஸெய்ன் ஆதரவளித்துள்ளார். ஸஹாபாக்களை இவ்வாறு பச்சை பச்சையாகத் திட்டுபவனுக்கெல்லாம் அணிந்துரையளிக்கும் உங்களைப் பார்த்து இனிமேலும் நாம் மௌனமாக இருக்கலாமா?????

இந்தக் குப்பைகளெல்லாம் டீஏ, ஜமாஅத்தே இஸ்லாமியிலிருக்கும் பொது மக்களுக்குத் தெரியாது. ஆகவே அவர்கள் இவற்றைப் பார்க்க வேண்டும் இவைகள் உண்மைதானா என்பதை ஆராய வேண்டும். இவ்வாக்கத்தில் காணப்படும் உணர்ச்சி வசமான வார்த்தைப்பிரயோகங்களை வைத்து இதை வாசிக்காமல் விடக் கூடாது. உங்கள் உலமாக்களிடம் சென்று இவற்றை விசாரிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இவை எழுதப்படுகின்றன என்பதை மனதில் கொண்டு சிந்திக்க முன்வாருங்கள். (முற்றும்)

23 Responses to “தவ்ஹீத் பிரச்சாரமும் ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்களது தஃவாக்கள நிலையும்-4”

 1. Abu Sayyaf says:

  அஸ்ஸலமு அலைக்கும்…

  ஷிய்யா கொள்கை தான் தமது அடிப்படை என்று சொல்கிறார்கள் போலிருக்கிற்து.

  ஜஸாகல்லாஹு கைரன்… அறிய வேண்டிய நிறைய உண்மைகளை அறிந்து கொண்டேன்…

  அல்லாஹ் உன்களது எழுத்தறிவை மேலும் விருத்தி செய்து, எப்போதும் அதை நல்லதாகவே பயன்படுத்த அருள் புரியட்டும்.

 2. அபூ பௌஸீமா says:

  அஸ்ஸலாமு அலைக்கும்

  அருமையான விமர்சனம். தெளிவான விளக்கங்கள். ஜமாஅத்தே இஸ்லாமி சகோதரர்களும் டீஏ சகோதரர்களும் திறந்த மனதோடு இவற்றை சிந்தித்து நேர்வழி பெற அல்லாஹ் அருள் புரிவானாக என்று உளப்பூர்வமாகப் பிரார்த்திக்கின்றேன்.

  மறுப்புகள் இருப்பின் அவற்றைப் பின்னூட்டத்திலேனும் பதிவார்களானால் விமர்சனத்தில் தவறுகள் இருந்தால் அவற்றை ஏற்றுக் கொண்டு கருத்தை மாற்றிக் கொள்வதற்கு ஆசிரியர் பின்வாங்க மாட்டார் என்பது அனைவருமறிந்த்தே.
  வஸ்ஸலாம்
  அபூ பௌஸீமா

 3. hassan says:

  மறுமையை முன்னிறுத்தி இஸ்லாத்தின் பால் அழைத்தால் தான் மக்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவார்கள். இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று பிரகடனம் செய்து விட்டு அழைத்தால் ஆட்சி அமைப்பது தான் இவர்களின் திட்டமா? நம்மீது ஆதிக்கம் செலுத்தி ஆள்வதற்குத் தான் இஸ்லாத்துக்கு அழைக்கிறார்களா என்று கருதி அனேகமானோர் இஸ்லாத்துக்கு வருவதற்கு இது தடையாகி விடும் என்ற சாதாரண விஷயம் கூட இவர்களுக்குப் புரியவில்லை.இஸ்லமிய ஆட்சியை பிடித்துத்தான் இஸ்லாத்தை நிறுவுவதா?

 4. hassan says:

  இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்று திருக்குர்ஆனிலோ,ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் இலக்கைக் கொண்டே நபித்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும். இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைப்பற்றி இறைவேதம் மிக தெளிவாகச் சொல்கிறது.

 5. hassan says:

  நபித்தோழர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றிக் கூறும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதே என் இலட்சியம். உடனே எதிரிகளை வீழ்த்தப் புறப்படுங்கள் என்று நபியவர்கள் கூறவில்லை. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் சோதனைகள் வரத் தான் செய்யும். பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஈடுபட்டார்கள்.ஆனாலும் அவர்கள் அனுப்பப்பட்ட நோக்கம் இஸ்லாமிய ஆட்சியைப்பிடிப்பதற்கோ,அதிகாரத்தை வைத்து ஆழ்வதற்கோ வரவில்லை. மாறாக, மூட நம்பிக்கைகளை மூழ்கடிப்பதற்காகவும், ஓரிறை கொள்கையை ஓங்கி உரைப்பதற்காகவும், அசத்திய வாதிகளை சத்தியத்தின் பால் அழைப்பதற்காகவும், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஒரே இஸ்லாத்தின் பால் ஒன்று சேர்ப்பதற்காக வேண்டியும் தான் வந்தார்களே தவிர இஸ்லாமிய ஆட்சிகளைப்பிடிப்பதற்காக அல்ல. தனக்குத் தானே முரண்படும் புதுமை அரசியல் வாதிகள்இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் வார்த்தைகள். இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அரசியல் சார்பற்ற நிலையில்தான் தொடர்ந்தும் இயங்குகின்றது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஓர் அரசியல் இயக்கமல்ல.

  • RIHAN says:

   Salam
   Pls read the book call The 100 infulencial people in the worl book you will understand why prophet Muhammad was given a first place.

   Jazk.

 6. M.K.M. Rasmy says:

  naveena muhamaiththuwaththil Vision, mission enra concepts undu. enda oru amaippo, vanihamo, thani nafaro kattayam thanazu waalvil oru vision kondirukka wendum. aze ponruzan jamathhin visionum ” Thooya desham mannikkum iratshahan” enbazahum. azatkaha enda neramum ella bayangalilum, ella programgalilum kilafath patry maathtiram peshi peshi iruppazillai. emazu vahuppukkalil aqeeda shambandamaha aalamana vilakkangal tharappaduhirana. shollap ponal thowheed jamaththai vida thwheed shambandamaha shariyana vilakkangal tharappaduhinrana. ungalukkuththan vision, mission ondrum illaiye. azo naam akeedavukku munnurimai koduppaze iillai enbazu poal peshuhindreerhal. ungalai vida akeedavukku munnurimai kuduppawarhal naam. shumma kokkarishshi thiriya waanam.

  • mujahidsrilanki says:

   நீங்கள் அகீதாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நாம் எங்கும் சொல்லவில்லையே ஒவ்வொரு இயக்கமும் அகீதாவிற்கத்தான் முக்கியத்துவம் கொடுக்கும் காதியானி உற்பட. இது தெரியவில்லையா உங்களுக்கு. ஆனால் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் அகீதா தவறானது என்றுதான் சொல்கிறோம்.

 7. hassan says:

  bro rasmy…i dont think that u r a intellectual member of islami…becoz our members never critizise any movements….thouheed iyakkam pathi tharakuraiva pesina ongluku iyakka verinu artham…anniyargaloda compare panni parunga…thouheed brothers aruma puriyum..avangluku innum oru kootamaipu da avasiyam puriyalla..adhuku nenga alah ta dua seinga… insha allah avanglum engloda inainthu shirk bidha iladha nabi da samoogam madhiri inraiya samoogatha uruvakka varuvanga…varanumnu aasa padunga…iyakka verila sanda pudikathinga….we r muslims …we r brother that rasool made…..ongda kovatha silaiya vanagravangatta katunga….thouheed brothers engaloda inaiya dua seinga RASMIN BRO….salam

 8. hassan says:

  ///// azatkaha enda neramum ella bayangalilum, ella programgalilum kilafath patry maathtiram peshi peshi iruppazillai. emazu vahuppukkalil aqeeda shambandamaha aalamana vilakkangal tharappaduhirana. shollap ponal thowheed jamaththai vida thwheed shambandamaha shariyana vilakkangal tharappaduhinrana./////

  sariya sonniga bro…nanum startingla jamadhe islami enda aatchi aatchinu jihad seira koottmonu nenachen…akbar moulavida muaiyyid course attend panina poravthan…velakkam kedachi…oru olunga padi murai seyat thittapadi islatha adhan thooya vadivil pinpatrum podhu autova oru thalaimaiku keela kattupadura oru samoogam uruvagum…athu thana nadakkum….intha unmaya alaga velangapaduthunga bro..atha vittuttu loosu madhiri potiya pesathinga….thouheed brothers kooda compare panni pesathinga…ipdiye nenga behave panina ameer ta solla vendi varum..orry for that…engluku thouheed brothers da talent venum…algana muraila avangluku velangra muraila eduththu solluvom..avanga kandipa purinchipanga…insha allah….thooya islamia valiyai pinpatrum thani manithan….kiraamam..oru alagiya samoogam….engada thouheed brothers illama nenga enna kaatla vaala poringala…avngalum engada samoogamthane..avangda manasa odaikra madhi behave panathinga RASMY BRO…..last warning stop all ur irritating manner behaviour for allah sake…

 9. M.K.M. Rasmy says:

  salam,hasan bro, i gratly appreciated your comment. ennidam iyakka very illai. naan emazu ooril thwheed ulamakkalai mihavum mazikkiren. enazu mootththa sisterai manardiruppawarum oru thwheed ulama ondruthan. peyar safarullah bahji, riyad thahwa centerla work pannurar.enazu waappavum innoru machchanum thableek jamathtil mulumaiyaha eedupadu udaiyawarhal. naan ismayil salafi, theenul hasan moulavi, lafar bahji ponrorin bayangalai virumbi ketpen. enakku thwheed membermaarudan irukkira veruppu ennawenral avarhal thangada neraththalayo, panaththalayo thahwavukkaha enda thiyahamum sheyya maattarhal. appadi sheyfarhaludaiya kuraihalai maaththiram peship peshi irupparhal. kurippaha enakku SLTJ membermarhalai pidikkawe pidikkazu. kadaishiyaha velivanda unmai udayam magazinaip parungal. azil moulavi peermuhammad avarhal thwheed amaippukkalin thawaruhalai thelivahave sholliyirukkirar. awar kkooda oru thwheed ulamazan.

  Rasmy
  Galle gintota

 10. M.K.M. Rasmy says:

  salam hasan bro. uzthaz hajjul akbar, Agar sir ponravarhal emazu shamoohaththin mihap periya puthtijeewihal. awarhaludaiya uraihalalum eluththukkalalum naan niraiya padippinai petrullen. awarhal emazu shamoohaththin intelectual properties. manizan enravahaiyil awarhalidamirundu thawaruhal warum. avatrai panbadana muraiyil shuttik kaatta wendum. usthaz awarhal al hasanath thahwa kalaththil izuwaraikkum yaarudaiya thanippatta peyarhalaiyum payanpaduththiyaze illai. aanaal ivarhal avarhaludaiya peyarhalaip pottu sheru pooshuhirarhal.

  mujahid moulavi meezu enakku enda weruppum illai. awaridam nalla thiramaihal ullana. anal awaridam aalnda waashippu illai. melottamana waashippu than undu. awar critism pannum tholilai vittu vittu konjam deeppaha read panninal nalla oru ulamawaha waralam.

  Rasmy

 11. masood says:

  பின்னூட்டங்களை இயன்றளவு தமிழில் பதிவு செய்தால் மிக நன்றாகவிருக்கும். நேரடியாகவே தமிழில் டைப் செய்வதற்கான முறைகள் பல தளங்களில் காணப்படுகின்றன அவ்வாறான வசதிகளை இத்தளத்திலும் ஏற்படுத்தினால் எல்லோருக்கும் வசதியாகவிருக்கும்.

 12. அபூ பௌஸீமா says:

  தமிழில் எழுத http://www.azhagi.com பதிவிறக்கம் செய்தால் எளிதாக யுனிகோடில் பதியலாம்.

 13. aswar says:

  anbulla mujahid movlavi awarhale anakku oru santheham ?
  sheea anbawarhal islathitku muran pattawarhala? awwarayin awarhal kafeerhala? awarhalay anna nilaykku thallap paduwarhal plz pathil tharawum

  • mujahidsrilanki says:

   இன்று ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு நடப்பது என்ன? என்று நாம் எழுதிய தொடர் கட்டுரையைப் பாருங்கள்

 14. அபூ பௌஸீமா says:

  அஸ்ஸலாமு அலைக்கும்

  ஷீஆக்கள் காஃபிர்களா என்ற கேள்விக்குப் பதில்….
  நீங்களே சொல்லுங்கள்… அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து விட்டு வரும்படி அனுப்பிய வஹீயை முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் என்ற மலக்கு தவறுதலாகக் கொடுத்து விட்டு வந்தார் என்றும் உலகில் நடக்கக் கூடிய சில விடயங்கள் அவை நடந்து முடிந்ததன் பின்னர்தான் அல்லாஹ்வுக்கே தெரியும் என்றும் சொல்லக் கூடியவர்கள் யார்? கேள்வி கேட்பவர் சொல்லட்டும்…
  வஸ்ஸலாம்
  அபூ பௌஸீமா

 15. hassan says:

  ஆனால் சவூதி அரசு ஷியாக்களை இன்னும் காபிர் என்று பாத்வா கொடுக்கவில்லை …அத்துடன் அவர்களை ஹஜ் கடமை நிறைவேற்ற அனுமதிக்கின்றனர்..இது ஏன் என்று அபூ பௌசீமா கூறக் கடமைப்பட்டுள்ளார் .??????

  • அபூ பௌஸீமா says:

   அஸ்ஸலாமு அலைக்கும்

   சவூதி அரசிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால்……

  • Farhan says:

   ஏன் முஜாஹித்தான் ஸொன்னாரெ அவன்கதான் முதலில் ஸஊதிக்கு ஸென்ட்ரதாகவும் னெருன்கிய தொடர்பு இருக்கிரது என்ரும் ஏன் அவருக்கு ஸொல்ல முடீயாது ஷீயாக்கள் காஃபிர்கள் அவர்கலை மக்கவுக்கு அனுமதிக்க வென்டாம் என்த்ரு.

 16. sharfudeen says:

  assalamu alaikkum pj marutha ajwa perichapalam sappittal visakkadikku marunthu hatheesai kuripidaum. Kiruthuvargaludan nadantha vivathathil intha hathees maruthullar.

 17. Sheza says:

  Alhamdulillah!
  Such a wonderful explanation!
  Jamaath e islaami sahothararhale? naanum oru jammath worker aaha irundhan….jamaath udan neenda naalaahe work pannan…muayyidh ayum mudithean….aanal jamaath oru walikeatil ulladhu endru muayyidh muditha pirahu thaan confirm aahittu..awanga thandha kalimaahwin wilakkam totally against aqeedha…naan adhai wimarsiththa podhu ennodu otrukondraarhal anal adhai moodi maraithu wittaarhal..naanum jamaathil theewiramaaha irundha oru member ippoludhu saththiyathai arindhu kondean
  Alhamdulillah naan oru thowheedhwaadhi endru sollikolle sandhosha paduhindrean.
  Jazakallahu khairan!

 18. Sheza says:

  Alhamdulillah!
  Such a wonderful explanation!
  Jamaath e islaami
  sahothararhale? naanum oru
  jammath worker aaha
  irundhan….jamaath udan
  neenda naalaahe work pannan…
  muayyidh ayum
  mudithean….aanal jamaath oru
  walikeatil ulladhu endru
  muayyidh muditha pirahu thaan
  confirm aahittu..awanga
  thandha kalimaahwin wilakkam
  totally against aqeedha…naan
  adhai wimarsiththa podhu
  ennodu otrukondraarhal anal
  adhai moodi maraithu
  wittaarhal..naanum jamaathil
  theewiramaaha irundha oru
  member ippoludhu
  saththiyathai arindhu kondean
  Alhamdulillah naan oru
  thowheedhwaadhi endru
  sollikolle sandhosha
  paduhindrean.
  Jazakallahu khairan!