மௌலவி பிஜே யுடைய குர்ஆன் தமிழாக்கத்தைப் படிக்கலாமா?

Post by mujahidsrilanki 15 February 2017 Q & A, விமரிசனங்கள்

(உரை வடிவம்):மௌலவி முஜாஹித் பின் ரஸீன்.

எழுத்து வடிவம் : -அபூ ஹமி

பொதுவாக எந்த நூலாக இருந்தாலும் கூட, நாங்கள் பரிந்துரைக்கக் கூடிய நூற்கள் என்று ஒரு பகுதி இருக்கும். ஒருசில தவறுகள் மனிதன் என்ற ரீதியில் அதில் இருந்தாலும், இது குர்ஆன் ஸுன்னாவை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகவும் நூறு சதவீதம் ஒத்துப் போகக் கூடியதாகவும் பரிந்துரைக்கக் கூடிய வகையிலும் இருக்கும்.  இது முதல்வகை ஆகும்.

நூறு சதவீதம் படிக்க வேண்டாம். எடுக்க வேண்டாம் என்று சொல்லப்படக் கூடிய குப்பையான நூற்களும் இருகின்றன. இது இரண்டாவது வகையைச் சார்ந்தவையாகும்.

இன்னும் சில நூற்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நிறைய பலன்களும் பெற்றுக் கொள்ளலாம்; வழி தவறிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

பிஜேயுடைய “தர்ஜுமா – குர்ஆன் மொழிபெயர்ப்பை” நாங்கள் அப்படித் தான் பார்க்கிறோம். அதாவது மூன்றாவதாகச் சொன்ன பிரிவை சார்ந்ததாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன் நிறைய பிரயோசனமடையக் கூடிய அமைப்பிலும், குர்ஆனுடைய தர்ஜுமாவை புரிந்து கொள்ளக் கூடிய எளிய வடிவிலும், அகீதா சார்ந்த நிறைய விடயங்களைப் படிக்கக் கூடிய விதத்திலும், வழிதவறிய அமைப்புக்களுக்கான மறுப்புக்களைப் படிக்கக் கூடிய அமைப்பிலும் அமைந்த தர்ஜுமா தான் பிஜெயுடைய குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். மேலும், மிகவுமே இலகு நடையில் அமைந்த தர்ஜுமா என்பதிலும் காரண காரியங்களை ஆய்வு செய்து சொல்லப்பட்ட தர்ஜுமா என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சில முக்கியமான இடங்களில் நேரடியாக குர்ஆன் ஸுன்னாவுடன் மோதக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. வழி தவறுவதற்கான அடிப்படைகளை உருவாக்கிய இடங்கள் இருக்கின்றன. அதனால் யாருக்கும் இதை வாசியுங்கள் என்று பரிந்துரை செய்ய இயலாது. ஒட்டுமொத்தமாக ஒரு நன்மையும் கிடையாது என்று விமர்சனம் செய்யவும் முடியாது.

சரி தவறுகளை என்னால் புரிந்து கொள்ள முடியும், அப்படிப்பட்ட மார்க்க அறிவு என்னிடம் இருக்கிறது, குர்ஆன் ஸுன்னா பற்றிய பின்னணி அறிவு என்னிடம் இருக்கிறது, தவறான கருத்துக்களால் ஈர்க்கப்பட மாட்டேன், எந்தக் கருத்துக்களை வாசித்தாலும் ஏனையோரிடமும் விசாரித்துவிட்டுத்தான் உறுதிப்படுத்திக் கொள்வேன். என்ற நம்பிக்கை யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் அதை வாசிக்கலாம். அதுவல்லாது தவறான கருத்துக்கள் என்னுள் நுழையலாம், அல்லது அதனால் நான் மாற்றப்படலாம் அல்லது தவறான சிந்தனைகளுள் ஆட்பட்டு தவறிப் போகலாம் என்று நினைக்கக் கூடியவர்கள் அந்த தர்ஜுமாவை தவிர்த்து விடவேண்டும்.

(உரை வடிவம்):மௌலவி முஜாஹித் பின் ரஸீன்.

எழுத்து வடிவம் : -அபூ ஹம

Comments are closed.

More News