Credit Cards பயன்பாடு பற்றி இஸ்லாம்

நவீனமயமாகி வரும் சமகால வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்களவில் பல வகையிலும் செல்வாக்குச் செலுத்தி வரும் கடன் அட்டைகள் (Credit Cards) பற்றிய முக்கியமான சில செய்திகளை இங்கு பரிமாறிக் கொள்வோம். அடிப்டையில் இந்தக்கடன் அட்டைகள் வட்டியை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

‘குறிப்பிட்ட தவணையில் பணம் செலுத்தத் தவறினால் நான் அதற்காக வட்டி செலுத்துவேன் என்று கிரடிட் காட் பெறும் போது நாம் ஒப்பந்தம் செய்ய வேண்டியுள்ளதால் இது வட்டியாகும்.’ என்பதும் ஒரு வலுவான வாதம்தான். ஆனால் இந்த வாதம் அடிப்படையில் ஞாயமாக இருந்தாலும்; நடைமுறையில் பலவற்றுக்கு நாம் இதே ஒப்பந்தத்தைச் செய்துள்ளோம். மின்சாரம், தொலை பேசி ஆகியவற்றுக்கான கட்டணங்களை இவ்வொப்பந்த அடிப்படையில்தான் செலுத்துகிறோம். ஆம் இரண்டிற்கு ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. கடனுக்கு வட்டி என்ற ஒப்பந்தம் ஹராம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மின்சாரம், தொலை பேசி போன்றவைகள் சேவைகள். அவைகளுக்கான நுகர்வுக் கூலியை நாம் உரிய நேரத்தில் வழங்கத் தவறும் போது வட்டி அல்லது பெனல்டி இடப்படுகிறது. அதையும் வட்டி என்று சொல்வதே பொருத்தமானது. கிரடிட் காட் பாவனை மார்க்கத்திற்கு முரணானது வட்டியை அடிப்படையாகக் கொண்டது என்பதைத் தெரிந்துகொள்ள அதன் முறைமை பற்றி ஒரு சிறு விளக்கத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

Visa, Master  போன்ற நிறுவனங்கள் நிறுவனங்களின் வளர்ந்த உலகலாவிய ரீதியிலான இணையத் தொலை தொடர்பு தொழிநுற்பத்தின் விளைவுகளில் ஒன்றே கடனட்டைப் பயன்பாட்டின் இன்றைய வடிவம். உங்கள் கடனட்டையில் விஸா என்றும் மாஸ்டர் என்றும் இடப்பட்டிருப்பதன் அர்த்தம் நீங்கள் கடனட்டையைப் பயன்படுத்திய வங்கி குறிப்பிடப்பட்ட அந்நிறுவனங்களின் நெட்வேர்க்கைப் பயன்படுத்தியே உங்களுக்கு அந்த சேவையை வழங்குகிறது என்பதுவே. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட வங்கியின் மூலம் நீங்கள் பெற்றுள்ள கிரடிட் அட்டையை இன்னொரு வங்கியின் ATM இல் உபயோகப்படுத்த முடிகிறது. ஆக இந்த அட்டைகளை நீங்கள் வங்கிகள் மூலம் பெற்றுக் கொண்டாலும் அந்த அட்டைகள் உலகத்தில் எங்கும் செயல்படுத்தும் வண்ணம் அந்த சேவைகளை வழங்குவதும் நிர்வகிப்பதும் விஸா மாஸ்டர் போன்ற நிறுவனங்களே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வங்கிகளிலிருந்து நாம் இவற்றைப் பெறுகிறோம். நாம் பெறும் இந்தக் கடன் அட்டைகளுக்கான பணத்தை உரிய நேரத்தில் கிரடிட் காட் இணைப்பைப் பெற்ற நிறுவனங்களுக்கு விஸா மாஸ்டர் போன்ற நிருவனங்கள்  வழங்கி விடுகின்றன. அதாவது கணக்கில் வைப்புச் செய்து விடுகின்றன. எனவே வங்கிகளுக்கு இதில் பொறுப்பேதுமில்லை. கிரடிட் காட் வினியோகம் செய்யும் நிறுவனங்களே அவற்றுக்கான பொறுப்பை ஏற்றுள்ளதால் வங்கிகள் அச்சமின்றி அவற்றை வினியோகிக்கின்றன. இதனால் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிக்கின்றன. இந்த சேவைக்காக நூற்றுக்கு இரண்டரை முதல் ஏழரை வரையிலான தொகையை வட்டியாக தமக்கு வழங்க வேண்டும் என்று கிரடிட்காட் நிறுவனங்கள் வங்கிகளோடு உடன்படிக்கை செய்கின்றன. இவ்வுடன்படிக்கையின் அடிப்படையில்தான் கிரடிட் காட் வினியோகமே நடைபெறுகின்றன. ஆகவே வங்கிகள் செலுத்தும் இந்த வட்டியை வங்கிகள் குறிப்பிட்ட அட்டைகளைப் பயன்படுத்தும் தொழில் ஸ்தாபனங்களிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.

இந்த வட்டி முறைக் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறா விட்டால் நாம் கிரடிட் காட்டை உபயோகிக் முடியாது. நாம் பெறும் கிரடிட்காட்களே காரணம் என்பதால் வட்டிக்கு நாம் இங்கே துணை போகின்றோம். இவ்வடிப்படையில்தான் கிரடிட் காட் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக ஆகின்றது. அது மட்டுமல் இந்த அட்டைகளைப் பயன்படுத்தும் பொழுது மறை முகமாக நமது பணம் சிறுதுளி பெருவள்ளம் என்பதற்கு இணங்க பல காரணங்கள் காட்டி உருவப்படுவதைப் பார்க்கலாம். எமக்கும் வியாபரிக்கும் வங்கிக்கும் இடையிலான இந்த கடன் சேவைக்கு வட்டி பெறப்படுவதும் அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்த கடனட்டை சேவை Visa, Master, American Express  போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுவதும் இந்தக் கிரடிட் காட் பயன்பாடு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்ற உறுதியான மார்க்கத் தீர்ப்பை எமக்குச் சொல்கிறது. அல்லாஹ் நம்மனைவரையும் இந்த சுரண்டல் முறைப் பொருளாதராத்திலிருந்து காப்பானாக.

14 Responses to “Credit Cards பயன்பாடு பற்றி இஸ்லாம்”

 1. Ajmr. says:

  Salam.
  As far as I know the Fire, water,and minarals are assets of citizen of the land. It should be distribute eaquelly. And no any privat companies or government can take controlled. Now in Muslim and kuffr land all the wealth belongs to the co operative firm and they fix the price. Which Islam don’t have controll over it.
  But I agree what you have wrote about credit card was right. That is in my eye just a another innovation.
  Salam.

 2. xFactor says:

  ———————-quote 4rm mujahid movlavis article
  வங்கிகளிலிருந்து நாம் இவற்றைப் பெறுகிறோம்.

  நாம் பெறும் இந்தக் கடன் அட்டைகளுக்கான பணத்தை உரிய நேரத்தில் கிரடிட் காட் இணைப்பைப் பெற்ற நிறுவனங்களுக்கு விஸா மாஸ்டர் போன்ற நிருவனங்கள் வழங்கி விடுகின்றன.

  அதாவது கணக்கில் வைப்புச் செய்து விடுகின்றன.

  எனவே வங்கிகளுக்கு இதில் பொறுப்பேதுமில்லை.

  கிரடிட் காட் வினியோகம் செய்யும் நிறுவனங்களே அவற்றுக்கான பொறுப்பை ஏற்றுள்ளதால் வங்கிகள் அச்சமின்றி அவற்றை வினியோகிக்கின்றன.

  இதனால் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிக்கின்றன.

  இந்த சேவைக்காக நூற்றுக்கு இரண்டரை முதல் ஏழரை வரையிலான தொகையை வட்டியாக தமக்கு வழங்க வேண்டும் என்று கிரடிட்காட் நிறுவனங்கள் வங்கிகளோடு உடன்படிக்கை செய்கின்றன.

  இவ்வுடன்படிக்கையின் அடிப்படையில்தான் கிரடிட் காட் வினியோகமே நடைபெறுகின்றன.

  ஆகவே வங்கிகள் செலுத்தும் இந்த வட்டியை வங்கிகள் குறிப்பிட்ட அட்டைகளைப் பயன்படுத்தும் தொழில் ஸ்தாபனங்களிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.
  ———————-

  அதாவது வங்கிக்கும் வீசா மாஸ்டர் போனர நிர்வனங்களுக்குமிடையில் நடைபெரும் கொடுக்கல் வாங்களில் வட்டி முக்கியமான ஒரு விடயமாகும் என்பதைத்தானே தெளிவு படுத்தியுள்ளீர்கள் ?

  அப்படியாயின் debit card களும் கூட இந்த வீசா மாஸ்டர் போனர நிருவனங்களின் அனுசரனைய்டனேயே நடக்கிறது.

  ஏற்கனவே credit card பாவனை ஹாரமெனப்படுவது வங்கியும் வீசா மாஸ்டர் நிருவனங்களும் வட்டி அறவிடுவதால் தான் ..

  ஆனாலும் debit card கள் விடயத்தில்
  வங்கிக்கும் இந்த வீஸா மாஸ்டர் போன்ற நிருவனங்களுக்கு மிடையில் நடைபெரும் கொடுக்கல் வாங்கல்களில் வட்டி கலந்திருப்பதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு

  debit card களும் ஹாரம் தானெ ?

  அவையும் ஹராம் என்றால் இணையத்தில் செய்யும் கொடுக்கல் வாங்கள்களுக்கு பணம் செலுத்துவதற்கு வேறு என்ன தான் வழி ?

 3. Jafran says:

  சகோதரரே, நான் அறிந்த வகையில் debit card இல் செலுத்தப் படும் பணம், நீங்கள் ஏற்கனவே உங்கள் கணக்கில் வைப்பில் உள்ள பணமாகும்.
  உங்கள் பணத்தை transfer செய்கின்ற வேலை மட்டுமே இங்கு நடை பெறுகின்றது. இதற்காக ஒரு செயல் கூலி அறவிடப் பட்டால் அது
  பிழையாக இருக்க முடியாது.

  Credit Card ஐ நோக்கினால், வேறு யாரினதோ (நிறுவனத்தின் /வங்கியின் ) பணத்திற்கு பொருட்கள் வாங்கப் படுகின்றன , பின்னர் சில காலம் கழித்தே பணம் செலுத்தப் படுகின்றது. இங்கே வட்டியும், இடைத்தரகுக் கூலியும் இல்லை என்றால், அந்த நிறுவனங்கள் மக்கள் மீது இரக்கப் பட்டா இந்த வேலையை செய்கின்றன?

  அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

 4. R. Mohamed says:

  The below question is not directly related to the subject. but I need more clear on that.

  My question is regarding medical insurance.

  I am working in Saudi Arabia and my contract agreement is company has to provide 100% medical service. company is providing this medical facility as mandatory thru medical insurance only.

  My question or doubts are below:

  1. if I did not use this medical insurance card company is not responsible for that medical expenses.

  2. as per my contract I eligible for 100% medical claim from my company.

  3. there is no choice in my hand to ignore this medical insurance. or I have to take in my own expense.

  4. what will be the Islamic solution for my case. while I am third person I can use this insurance?

  5. while insurance is haram, in any way i should not use?

  Please clear this issue.

 5. Mohammed Naleef says:

  Jazakallh Hairan for your message

 6. Ajmr. says:

  Salam R. MOHAMMED

  I read you concern. May Allah bless you to get right disition. These so call wahabee state I mean Saudi Arabia is not 100% Muslim state. They can implement 100% Islamic economy in there land. But they want do. They are puppets of west. Even they have western banking system. This is what always struck. They call them self salafis and they made haram to halal. Halal to haram.
  They brought the monaki ruling to macca and madina that’s a BIDAA. Made the monaki for supream leader who make their own ruling, which is shirk.
  I think no body can make haram to halal. This is something you have to decide your self.
  Jazakl.

 7. […] செலுத்தி வரும் கடன் அட்டைகள் (Credit Cards) பற்றிய முக்கியமான சில செய்திகளை […]

 8. இஸ்லாமிய அழைப்பு says:

  Salam Alaikkum…. Here in Saudi Arabia, the banks offer facility using credit card…. i.e. if you purchase something this month, they will deduct the whole money from your account next month say 5th……. If you have enough money on the account next month during that 5th, there is no additional money charged….. What is the ruling about this when you are not actually paying anything extra but simply delaying the payment by next month? I need clarificaiton on this…. Jazakallah.

 9. H. M. Shahul hameed says:

  ஜஸாகல்லாஹ் ஹைர் மௌலவி

 10. Nowadays credit card is important for online purchase like domain registration, airline booking etc. But instead of going for Credit Card, we can have advance card. This service is available from many banks. It is like debit card. You can buy only from your money. Also many debit card can be used as credit card also.