இலுமுனாடி”(Illuminati) என்ற 13 நபர்கள்!!!

சகோதரர் பாஸ்காின் ”உலகளாவிய அரசியல்” என்ற தலைப்பில் 10 மணித்தியாலங்களைக் கொண்ட உரையை செவிமடுத்தேன். ஏற்கனவே யுதர்களின் மாஸ்யுனிய இயக்கம் பற்றிய வாசிப்பு என்னிடத்தில் இருந்தது இலுமுனாடி பற்றிய அறிமுகமும் இருந்தது.

ஆனால் இந்த உரை நிறைய அர்த்தமற்ற வீணான கற்பனைகள் உளறல்களைக் கொண்டிருந்தது. 1-உஸாமா ஒரு கிழட்டுப் பயல் நான் அறைந்தாலே விழுந்துவிடுவான். 2-இந்தியாவின் குதுப் மினார் இந்துக் கோவிலை இடித்துக்கட்டப்பட்டது. 3-ப்ரேமதாஸாவை கொலை செய்தது இலுமுனாடி என்ற ரகசியக் குழுதான். 4- இலுமுனாடி பற்றிய ஆழமாகப் பேசினாலே கொலை செய்துவிடுவார்கள்.  என்று இது போன்று அறிவு கெட்டதனமாகப் பேசியிருக்கிறார்.

உலகின் கல்வி முறை அரசியல் முறை ஒழுக்கம் பொருளாதாரம் இனங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் போன்றவற்றை தமது நலவுகளுக்கு சார்பாக இயங்கவைப்பது எப்படி என்று சிந்திக்கும் நாடுகள் ரகசிய இயக்கங்கள் பெரும்புள்ளிகள் இவ்வுலகில் இருக்கலாம் இருக்கிறார்கள். அவர்களிடம் பல ஆழமான பயங்கரமான திட்டங்கள் இருக்கலாம். அதில் ஒரு சில உலகளாவிய ரகசிய அமைப்புக்கள் John D. Rockefeller போன்ற பெரும் புள்ளிகள் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதற்காக…

இலுமுனாடி”(Illuminati)(المتنورون) என்ற 13 நபர்கள் மற்றும் அவர்களின் 6000 குடும்ப அங்கத்துவர்கள் கொண்ட அமைப்பின் மூலம்தான் இந்த உலகின் பொருளாதாரமும் அரசியல் நகர்வும் தீர்மானிக்கப்படுகிறது இயக்கப்படுகிறது அவர்களின் கையில்தான் உலகத்தின் ஒவ்வொரு நகர்வும் இருக்கிறது. இந்த உலகத்தில் ஏறபடுகின்ற சிறிய பொிய அரசியல் மாற்றம் ஒவ்வொன்றும் அவர்கள் திட்டம்தான் என்ற வாதத்தை ஏற்பது போன்றவொரு மடமை கிடையாது.

மாஸ்யுனியாவைப்  பற்றி மேலதிக தகவல்களுக்கு பலஸ்தீனமும் யுதர்களும் என்ற  தலைப்பைப் பார்வையிடவும்

One Response to “இலுமுனாடி”(Illuminati) என்ற 13 நபர்கள்!!!”

  1. Daoud Tharik says:

    இலுமுனாட்டியாக என்ன கம்முனாட்டியாயக இருந்து விட்டு போகட்டும் அல்லாஹ்வுடையை தக்தீர் கலாஹதிர் படிதான் எதுவாக இருந்தாலும் நடக்கும்.பாஸ்கருக்கு பொழைப்பு வேண்டுமே அதுதான் இறுதியில் வசூலில் கதையை முடிக்கிறார்.