இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கடந்த கால வரலாறு ஓர் அலசல்(போலி இயக்கத் தூய்மை பேசுவோர்களுக்கோர் மறுப்பு).2

Post by mujahidsrilanki 9 June 2011 கட்டுரைகள்

ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கையிலிருந்து தடம்புரண்டு ஜமாஅதே இஸ்லாமியை எதிர்த்த ஜமாஅதே இஸ்லாமி ஸ்தாபகர் ஜைலானி ஸாஹிப்

ஜெய்லானி ஸாஹிப் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராக இரு வருடங்கள் கடமை புரிந்தார். இந்த இடத்தில் முக்கிய குறிப்பொன்றைப் பதிய வேண்டும். உலகிலே இஸ்லாத்தில் தூய்மையான தோற்றத்தையே மாசுபடுத்திய சூபித்துவ அமைப்புக்ளான தரீக்காக்கள் செல்வாக்கே இலங்கையில் அதிகமாக இருந்தன. மார்க்கத்தை சரிவரப் புரிந்த சிறந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையிலேயே காணப்பட்டார்கள். இஸ்லாத்தின் உண்மையான தூய்மையான வடிவத்தை பிரச்சாரம் செய்ய இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் இயக்கம் ஜம்இய்யது அன்ஸாரிஸ்ஸுன்னா அல் முஹம்மதீயா என்ற பெயரில் 1940 ன் கடைசியில் பரகஹதெனியாவில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகும். ஜமாஅதே இஸ்லாமியின் இலங்கை ஸ்தாபகர் இந்தியாவைச்  சேர்ந்தவர். ஆனால் தவ்ஹீத் பிரச்சாரத்தை இயக்க ரீதியாக செயல்பாட்டினூடாக முன்வைக்க களமிறங்கியவர் இலங்கையையும் அந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஊரையும் சேர்ந்தவர் என்பது இலங்கையின் தவ்ஹீத் பிரச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.

அது மாத்திரமல்ல ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகர் அரபு மொழியை முறையாகக் கற்றவரோ மார்க்க அறிஞரோ மௌலவியோ அல்ல. ஆனால் ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸுன்னதுல் முஹம்மதீயாவினூடாக தவ்ஹீத் பிரச்சாரத்தை ஆரம்பித்த அப்துல் ஹமீத்பக்ரி(அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக) அறிவுத் தாகத்தாலும் கொள்கைத் தாகத்தாலும் அல்லலுற்றவர். ஆரம்பித்தில் 1920களில் காலிக்கோட்டை ஜிப்ரியா அரபுக்கலாசாலையிலும் பின்னர் பாடத்திட்டத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் இந்தியாவில் பொதக்குடி அந்நூறுல் முஹம்மதியா அரபுக் கலாசாலையிலும் அங்கும் பாடங்கள் சிர்க்கைப் போதிக்கும் வகையில் இருந்ததால் அதிலிருந்து விலகி டில்லியில் ஜாமிஆ தாரிஸ்லாமில் தன் கல்வியை கற்றுப் பூர்த்தி செய்து இலங்கை திரும்பினார். என்றாலும் அறிவுத் தாகம் காரணமாக மறுபடி இந்தியா பாகிஸ்தான் வழியாக ஸஊதி அரேபியா சென்று 1.அப்துல் அஸீஸ் பின் பாஸ் , 2.முஹம்மத் அலி ஹரகான், 3.இப்ராஹீம் பின் அப்துல் மலிக், 4.அப்துல் லதீப் ஆலுஷெய்க் போன்ற அறிஞர்களிடம் சுமார் 9 வருடங்களுக்கு மேலாக மார்க்க அறிவைத்  தேடிய பின் இலங்கை வந்து ஏகத்துவப் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். மரணிக்கும் வரை  அவரே தலைவராக இருந்தார். 1955 இல் உண்மை உதயம் என்ற சஞ்சிகையை ஆரம்பித்தார். இன்றுவரை அந்த இயக்கத்தின் சஞ்சிகை அதுதான். அவர் எழுதிய அரபு நூல்களில் ஒன்றுதான் ‘அஸ்ஸித்குல் ஹக் அலத் தஹ்ரீபாதில் காதியானியா’ தன் ஏகத்துவப் பிரச்சார இயக்கத்தை வழி நடத்த அறிஞர்களை உருவாக்கும் நோக்கில் பலரை ஸஊதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்று படிக்கவைத்தார். அப்படிக் கற்று மதீனாப் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வந்தவர்தான் அபூபக்ர் ஸித்தீக் மதனி ஜம்இய்யாவின் இரண்டாவது தலைவர்.இறுதியில் அப்துல் ஹமீத் பக்ரியவர்கள் 1976 இல் மக்கா மண்ணிலேயே மரணமானார். இஸ்லாத்தின் தாயகத்தோடும் நபிகளார் பிறந்த மண்ணோடும் இதயத்திற்கு ஈர்ப்பு இருப்பது இயல்பே.(இவரைப் பற்றி மேலதிக தகவல்களைக் காண الاخبار لما لسريلنكا من الأخبار என்ற எனது கட்டுரையைப் பார்வையிடவும்-முஜாஹித்).60 வருடங்களாக இரு தலைவர்களே. 60 வருடங்களாக ஒரு சஞ்சிகையே. சொல்லுங்கள் ஜமாஅதே இஸ்லாமி சகோதரர்களே இயக்க நிர்வாகம் பற்றிப் பேச நீங்கள் தகுதியானவர்களா நாம் தகுதியானவர்களா?. ஆனாலும் ஒரு காலமும் இயக்கத் தூய்மையை நாம் பேச மாட்டோம் அது ஜாஹிலிய்யத் இஸ்லாம் அழித்தொழித்த பண்பு.

விடயத்திற்கு வருகிறேன். அப்துல் ஹமீத் பக்ரியின் பிரச்சாரம் கொழும்பை குறைந்த அளவிலேயே எட்டியது. 1970களில் மௌலவி நிஸார் குவ்வதி(அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக) அவர்கள் மூலம் கொழும்பில் தவ்ஹீத் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு இன்றுவரைக்கும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரேயே சமூகத்தில் நுழைந்திருந்த மூட நம்பிக்கைகளையும் மத்ஹப் வெறியையும் பித்அத்களையும் தமது குர்ஆன் வகுப்புக்களிலே ஜெய்லானி ஸாஹிப் அவர்கள் கண்டித்தார். எதிர்த்தார். ஜெய்லானி ஸாஹிபின் எல்லாக் குர்ஆன் வகுப்புக்களிலும் பொதுவாக சிர்க் பித்அத் பற்றிய கேள்விகள்  காணப்படும். அனைத்திற்கும் முகம் சுலிக்காமல் பதில் அளிப்பார். அவரது குர்ஆன் பக்கத்தை நோக்கிய அழைப்பும் மார்க்கத்தின் கொள்கைகளுக்கு முரணான எதிர்ப்புமே கொழும்பில் பலரை தூய்மையான இஸ்லாத்தைப் படிக்கத் தூண்டியது.

லாஇலாஹ இல்லலாஹ் என்ற கலிமாவிற்கு ஸையித் குதுப் அவர்கள் அளித்தி விளக்கம் பற்றிய அறிவையோ ‘இலாஹ், தீன், ரப்பு, இபாதா’ என்ற நான்கு சொல்லாடல்களுக்கும் மௌலானா மௌதூதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கொடுத்த புதுவிளக்கங்கள் பற்றிய அடிப்படைகளையோ ஜெய்லானி ஸாஹிப் வலியுறுத்தவும் இல்லை பிரச்சாரம் செய்யவும் இல்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால் குர்ஆனை விளங்கும் ஒரு சமுதாயமாக இலங்கை முஸ்லிம்களை மாற்றுதல், ஷிர்க் மற்றும் பித் அத்கள் களிலிருந்து மக்களை மீட்டெடுத்தல் போன்றவைகளே கலாநிதி சுக்ரி, உஸ்தாத் அகார், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் போன்ற இக்வானுல் முஸ்லிமீனைச் சேர்ந்தவர்கள் இல்லாத அன்றைய ஜமாஅதே இஸ்லாமியை வழிநடாத்திய ஜெய்லானி ஸாஹிபின் பிரச்சாரமாக இருந்தது.

சிறிது காலத்திலேயே அமைப்பின் ஸ்தாபகரும் பிரச்சாரகருமான ஜெய்லானி ஸாஹிபுடன் சில நிர்வாக முரண்பாடுகள் ஏற்பட்டதனால் தலைமைப்பதவியிலிருந்தும் ஜமாஅத்திலிருந்தும் ஜெய்லானி ஸாஹிப் அவர்கள் வெளியேறி தனியாக வகுப்புக்களை நடத்திவந்தார். வெளியேறும் போது அருள் ஜோதி சஞ்சிகை வெளியீட்டுறிமையையும் தன்னகமாக்கிக் கொண்டார். புரிகிறதா ஜமாஅதே இஸ்லாமியின் நிர்வாகமும் திறமையும்!!!!. அன்புள்ள ஜமாஅதே இஸ்லாமி சகோதரர்களே. உண்மையில் இந்த நிகழ்வு ஒரு ஜமாஅத்தின் ஆரம்ப கட்டத்திற்கு ஒரு பிரச்சனையே கிடையாது. ஆனால் இயக்கத் தூய்மை பேசி தம்பட்டம் அடித்தால் இதுவே மிகப் பெரும் பிரச்சனையாகிவிடும்.

ஜெய்லானி ஸாஹிபின் தடம்புரலலின் பின் (எனது ஞாபகப்படி) மௌலவி தாஸிம் பஹ்ஜி நத்வி(அப்பொழுது அஸ்ஹரியல்ல) தலைவரானார். ஜமாஅத்தின் குரலாக ஒலிக்க ‘வழிகாட்டி’ என்ற சஞ்சிகையை துவங்கினார்.

ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கையிலிருந்து தடம்புரண்டு ஜமாஅதே இஸ்லாமியை எதிர்த்து ‘தீனுல் இஸ்லாம்’ என்ற புது இயக்கம் உருவாக்கிய ஜமாஅதே இஸ்லாமியின் 2வது தலைவர் தாஸிம் அஸ்ஹரி

(வளரும் இன்சா அல்லாஹ்)

7 Responses to “இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கடந்த கால வரலாறு ஓர் அலசல்(போலி இயக்கத் தூய்மை பேசுவோர்களுக்கோர் மறுப்பு).2”

 1. Jafran says:

  Masha Allah, அல்லா உங்களுக்கு அருள் புரியட்டும், மேலும் உங்களுக்கு தைரியத்தையும், பாதுகாப்பையும் தரட்டும் என பிரார்த்திக்கின்றேன்

  உங்களது இந்த தொடர் கட்டுரை பலரது வயிற்றில் புளியை கரைத்திருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது, அறியக் கிடைக்கின்றது. உங்களுக்கு இடையூறுகள் ஏற்படலாம், இதை நிறுத்த முயற்ச்சிகள் மேற்கொள்ளப் படலாம், தளர்ந்து விடாதீர்கள், அல்லாஹ் உதவி செய்வானாக.

  மௌலவி தாஸிம் (பஹ்ஜி, நத்வி, அஸ்ஹரி) பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள், இவர் உங்கள் ஊரான பலஹத்துரையை சேர்ந்தவர், டாக்டர் நுபார் பாருக் அவர்களின் சகோதரர், நலீமியாவின் ஸ்தாபக அதிபர்
  என அறிகின்றேன் , இவை சரியா?

  • mujahidsrilanki says:

   ஆம் தாஸிம் மௌலவி எனது ஊரைச் சேர்ந்தவர். பலஹத்துறையில் தவ்ஹீத் பிரச்சாரத்திற்காய் உழைத்தவர். இதற்காக இக்வதுல் இஸ்லாம் எனும் கொள்கைப் பிரச்சார இயக்கத்தில் தலைவராக பலகாலம் பணி புரிந்தவர். ஜமாஅதே இஸ்லாமியில் எப்படி இக்வானுல் முஸ்லிமீன்களின் தவறான கொள்கை மெதுவாக கச்சிதமாக நுழைந்ததோ அதே போன்று ஜாமிஆ நளீமியாவிற்குள்ளும் நுழைந்தது. அவ்வாறு நுழைய முன் அங்கு பணியாற்றியவர்களே தாஸிம் அஸ்ஹரீ மற்றும் மீரான் மௌலவி போன்றவர்கள் இன்சா அல்லாஹ் தொடர்ந்து இவைகளை விவராமாக எழுதுவேன்

 2. FURQAN says:

  you fear Allah and you are wasting your time and energy: Thaseem Moulavi may rest in Paradise but what you doing is earning sins by these your actions: it is shame on you to claim that you come from his village: what are difference between you and Him. His characters are excellent but yours are UNISLAMIC: I wonder where did you learn islam from: Is it from the Holy Quran or Sunnha Or from SHAYTAN: You have the quality of Shaytan which create hatred and enmity between people: You are doing same thing: Good people spread the message of peace and love you are spreading hatred in the name of Islam: It is dangerous because innocent people become victims of your wrong doing: It is your unethical and babaric teachers should be blamed for your training:

  • mujahidsrilanki says:

   தொடர்ந்தும் எழுதுவதற்கு ஆர்வத்தை தந்ததற்கு நன்றி. என்ன இப்படிச் சொல்கிறேன் என்று ஆச்சரியப்படுகிறீர்களா. போலிப் பெறுமையடிக்கும் ஜமாஅத்தை அடையாளங்கட்காட்டும் போது சிலர் துடிப்பார்கள். அதில் நீங்களும் ஒருவர். எனவே நீங்கள் இப்பொழுது குணமடைய ஆரம்பித்து இருக்கிறீர்கள். என்ன விருப்பமில்லையா. நீங்கள் பற்றுள்ளவர் போன்று தெரிகிறது. அதனால் அல்லாஹ் நிச்சயம் உங்களைத் தக்லீத் மாயையிலிருந்து விடுதலை பெறச் செய்வான்.இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டியதற்கு ஜஸாகல்லாஹு கைரா. நிச்சயம் உங்களை விட நான் அதன்பால் தேவையுடையவன்.

 3. sahrani says:

  a.alaikm mujahid movlavi…inru nam maththiil narahavaziyana “abuthalib’avanai tharikkavazihal abuthalib nayaham raliyallahu anhu enru pakthiil pirachcharam saihirazu tharikka pallihalil izai patri kalvippattu irukkum…izu shiyakkalin kolhai,ippoluzu tharikkavil udruvi varuhirazu.izai pilai enru suttikkatta sariyana pazilai taravum ezirparkirayn…vasalam

 4. nazir says:

  Masha allah

Derek MacKenzie Womens Jersey