Saturday, April 27, 2024

சூனியம்- வஹியின் தொகுப்பு

சூனியம் செய்யக் கூடாது. அது சிர்க் என்ற அடிப்படை நம்பிக்கையில் முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இல்லாத பொழுதும் அதன் உப பகுதிகளில் சில கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவைகளை ஒரே பார்வையில் தீர்த்துக் கொள்ள இந்த வஹியின் தொகுப்பு பயனளிக்கலாம் இன்சா அல்லாஹ்

1-உலகில் சூனியம் என்ற ஒன்று இருக்கிறதா?

وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ (7) الأنعام : 7

காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்துஇஅதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் ”இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை” என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள். 6:7

2-சூனியக்காரர்கள் இருந்தார்களா?

يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ (112) وَجَاءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا إِنْ كُنَّا نَحْنُ الْغَالِبِينَ (113)الأعراف : 112 ، 113

”அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்”” என்று கூறினார்கள். 7:112

3-சூனியம் கற்பிக்கப்பட்டதா?

وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ البقرة : 102

ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள் 2:102

4-சூனியத்தை கற்பவர்கள் இருந்தார்களா?

وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ    البقرة : 102

தங்களுக்குத் தீங்கிழைப்பதையும் எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். 2:102

5-சூனியத்தைக் கற்பித்தவர்கள் யார்?

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ البقرة : 102

அவர்கள் ஸ{லைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸ{லைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்;ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள் 2:102

6-எந்தவிதமான சூனியத்தைக் கற்றார்கள்?

فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ  البقرة : 102

கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். 2:102

7-அதனால் பாதிப்பை ஏற்படுத்தலாமா?

وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ البقرة : 102

அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது 2:102

8-மூஸா நபியவர்களுக் கெதிரான முயற்சியில் சூனியக்காரர்கள் தடிகளையும் கயிறுகளையும் போட்டதன் நோக்கம் என்ன?

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى (66) طه : 66

அதற்கவர்: ”அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்”” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய  தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது. 20:66

9-நோக்கம் நிறைவேறியதா?  ஆம்

وَاسْتَرْهَبُوهُمْ …………. (116) الأعراف : 116

“அவர்களை அச்சத்துக்குள்ளாக்கினார்கள் …..” 7:116

10-மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களது சூனியத்தால் பாதிக்கப்பட்டார்களா?

فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَى (67) طه : 67

அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார். 20:67

11-மூஸா நபியவர்களுக் கெதிரான முயற்சியில் சூனியக்காரர்கள் செய்த சூனியம் சாதாரணமானதா?

وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ (116)الأعراف : 116

அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.7:116

12-கண்களுக்கு சூனியம் வைக்கலாமா?

قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ (116) الأعراف : 116

அதற்கு (மூஸா) ”நீங்கள் (முதலில்) எறியுங்கள்”” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை சூனிய வயப்படுத்தினர் அவர்களை அச்சமுறுத்தினர் அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர். 7:116

13-வஹியிற்கு முன்னால் சூனியம் வெற்றி பெற முடிந்ததா?

وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117) فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ (118) فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ (119) وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ (120)  الأعراف : 117 – 120

அப்பொழுது நாம் ”மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்”” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கபொய்யாகச் செய்த  யாவற்றையும் விழுங்கி விட்டது. இவ்வாறு உண்மை உறுதியாயிற்றுஅவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன. அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள். 7:117..120

قَالَ مُوسَى أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَاءَكُمْ أَسِحْرٌ هَذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُونَ (77) يونس : 77

அதற்கு மூஸா:  ”உங்களிடம் சத்தியமே வந்த போது அதைப்பற்றியோ நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்”” என்று கூறினார். 10:77

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى (69) طه : 69

ஆகவே சூனியக்காரன் எவ்வாறு வந்தாலும் வெற்றி பெற மாட்டான் 20:69

14-சூனியத்தால் ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்ற முடியுமா?     முடியாது.இன்னொன்று போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம் அதுவே மிகப் பெரிய சூனியமாகும்.

وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117) الأعراف :  ، 117

அப்பொழுது நாம் ”மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்”” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) பொய்யாகச் செய்த  யாவற்றையும் விழுங்கி விட்டது. இவ்வாறு உண்மை உறுதியாயிற்று அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன. 7:117

15-சூனியம் பாதிக்காமல் இருக்க நபிகளார் காட்டிய வழியென்ன?

صحيح البخاري ـ 5445 – عن عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ

“ஒவ்வொரு நாள் காலையிலும் 7 அஜ்வா ஈத்தம் பழம் சாப்பிடுபவரை அன்றைய தினம் விசமோ சூனியமோ பாதிக்காது.” என்று நபியவர்கள் கூறினார்கள்.”

அறிவிப்பவர்: ஸஃத்

ஆதாரம்: புகாரி 5445

16-சூனியம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தால் அந்தப்பாதிப்பை நீக்க சூனியத்தை எடுக்க வேண்டுமா?

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلَا اسْتَخْرَجْتَهُ قَالَ قَدْ عَافَانِي اللَّهُ فَكَرِهْتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ فِيهِ شَرًّا فَأَمَرَ بِهَا فَدُفِنَتْ    صحيح البخاري ـ 5763

“அல்லாஹ்வின் தூதரே (தங்களுக்கு வைக்கப்பட்ட சூனியப் பொருளை  நீங்கள் வெளியே எடுக்கவில்லையா?” என்று நான் நபியவர்களிடம் கேட்டதற்கு “அல்லாஹ் எனக்கு குணமளித்து விட்டான் அதை வெளியே எடுப்பதன் மூலம் ஒரு தீமை மக்கள் மத்தியில் பரவுவதை நான் வெறுக்கிறேன் என பதில் சொன்னார்கள். பின்னர் சூனியம் வைக்கப்பட்ட பொருளை புதைக்குமாறு ஏவி அவ்வாறே புதைக்கப்பட்டது. அறிவிப்பவர்:ஆயிசா   ஆதாரம்: புகாரி 5673

17-சூனியம் செய்வது பற்றி படிப்பது சூனியம்; செய்வது போன்றவைகளைப் பற்றி மார்க்கத்தின் நிலை என்ன?

صحيح البخاري ـ 5764 –  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا الْمُوبِقَاتِ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ

“அழித்து விடக் கூடிய பெரும்பாவங்களான  சிர்க்கையும் சூனியத்தையும் தவிர்ந்துகொள்ளுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹ{ரைரா ஆதாரம்: புகாரி 5764

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts