Saturday, April 27, 2024

நோன்பு பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள் [UPDATED]

01- கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பை விட்டுவிடச் சலுகை உண்டா?

கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் மாத்திரமல்ல இவர்கள் நிலையில் எவர்கள் தங்களது உடல் நிலையையும் தாங்கும் சக்தியையும் அஞ்சுகிறார்களோ அவர்களுக்கும் நோன்பை விட இஸ்லாம் சலுகை வழங்குகின்றது. அந்த நோன்பை பின்வரும் நாட்களில் ‘களாச்’ செய்யவேண்டும்.
‘அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி கஷ்டப்படுத்துவதில்லை” (2:286)

02- ஸஹர் நேரம் தவறி சுபஹ் தொழுகையின் போது எழுந்தவர்களின் நோன்பின் நிலை என்ன?

ஸஹர் சாப்பிடல் ஒரு வலியுறுத்தப்பட்ட ஸ{ன்னா அந்த நேரமே நாம் நோன்பு பிடிக்க உறுதிகொண்டு விட வேண்டும். ஆனாலும் நேரந்தவறி எழுந்தவர்கள் சுபஹ{க்கு பின்னராயினும் நோன்பைத் தொடரவேண்டும். தவறியவர்கள் சுபஹ{க்குப் பின்னர் நோன்புக்கான எண்ணங்கொள்வது தவறு கிடையாது.

‘ஒரு நாள் நபியவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘உண்பதற்கு ஏதும் உள்ளதா?’ என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்று கூறினோம். அப்போது அவர்கள் ‘நான் நோன்பாளியாக இருந்துகொள்கின்றேன்’ என்று கூறினார்கள். மற்றொரு நாள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள்இ ‘ஹைஸ் எனும் நெய்இ மாவுஇ பேரீச்சம்பழம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவு அன்பளிப்பாக வந்துள்ளது’ என்று கூறினோம். அதற்கவர்கள்இ ‘நான் நோன்பு நோற்றுள்ளேன். இருந்தாலும் கொண்டு வா’ என்று கூறிவிட்டுச் சப்பிடலானார்கள். ‘கடமையல்லாத நோன்பு நோற்பவர் தர்மம் செய்பவர் போலாவார்இ விரும்பினால் செய்யாமலும் இருக்கலாம்.’ என்று கூறினார்கள்.”   (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷாஇ நூல்: முஸ்லிம்: 1951)
இந்தச் செய்தி ஸ{ன்னத்தான விடயத்தில் நடந்தாலும் இதில் இரண்டு சட்டங்கள் எமக்குக் கிடைக்கின்றன.
1- சுன்னத்தான நோன்பை இடையில் விடுவதற்கு அனுமதியுண்டு.
2- சாப்பிடாமலே இருந்த ஒருவர் சுபஹ{க்குப் பின்னரும் நோன்பு பிடிக்க எண்ணங்கொள்ளலாம்.
இந்த இரண்டாவது சட்டம் பர்ளான சுன்னத்தான இரண்டு நோன்பிற்கும் பொருந்தும். இதற்கு மாற்றமாக வரக்கூடிய ஹதீஸ்கள் பலஹீனமானதாகும்.

03- குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா?

குளிப்பு தொழுகைக்கு அவசியமே தவிர நோன்பு நோற்பதற்கு அவசியம் கிடையாது.
‘ரமளான் மாதத்தில் நபிகள் அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹ{நேரத்தை அடைவார்கள் அந்த நிலையில் நோன்பும் நோற்பார்கள்.”
(அறிவிப்பவர்: அன்னை ஆயிஷாஇ அன்னை உம்மு ஸலமாஇ நூல்: புகாரி 1926இ 1930இ 1932)

04- நறுமணம் பயன்படுத்தலாமா?

நோன்பாளி தாராளமாக நறுமணங்களைப் பயன்படுத்தலாம். குர்ஆனிலோஇ சுன்னாவிலோ இதற்கு எவ்விதத்தடையும் கிடையாது.

05- ஊசி வழியாய் மருந்து உட்கொள்ளல் நோன்பை முறிக்குமா?

நோய்க்கான மருந்துகளை ஊசி வழியாய் ஏற்றுவதில் தவறு கிடையாது. ஆனாலும் இவர் நோயாளி என்பதால் நோன்பை விட்டு விட சலுகையுண்டு. எனினும்; ஊசி வழியாய் இரத்தம்இ குளுக்கோஸ். இன்னும் உடற்சக்திக்கு சக்தியூட்டும் மருந்துகள் ஏற்றல் நோன்பை முறித்துவிடும்.

06- நோன்பாளி இரத்தம் வழங்கலாமா?

‘நபிகள் அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றவர் இரத்தம் குத்தி எடுப்பதை நீங்கள் வெறுத்ததுண்டா?’ என்று அனஸ் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘இதனால்  பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதை நாங்கள் வெறுத்தோம்’ என்று விடையளித்தார்கள்.
(அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானிஇ நூல்: புகாரி 1940)
பலஹீனமான உடல் நிலையுடையவர்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்படுவது கிடையாது என்பதனால் இரத்தம் வழங்குவதில் தவறு கிடையாது.

07- மூழ்கிக் குளித்தல் நோன்பை முறிக்குமா?

மார்க்கத்தில் இதற்கு எந்தவிதத்தடையுமில்லை.

08- நோன்பு திறக்கும் நேரம் கடந்துவிட்டால்?

ஞாபகம் வந்தவுடன் நோன்பைத்திறந்து விடவேண்டும். ஸஹர் வரைக்கும் தொடருவது தவறாகும்.

09 – இமாம் வித்ரில் குனூத்  ஓதும் போது ஆமீன் கூறலாமா ?

வித்ர் குனூத் சம்பந்தமாக வரக் கூடிய ஹதீஸ் இரண்டும் பலஹீனமானவைகள். வித்ரில் குனூத் கிடையாது என்பதே சரியான நிலைப்பாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts